டிசம்பர் 27 ராசி பலன்

🕉️மேஷம்
டிசம்பர் 27, 2020
மார்கழி 12 – ஞாயிறு

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களின் மூலம் இலாபம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : இலாபம் உண்டாகும்.
கிருத்திகை : சிந்தனைகள் தோன்றும்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 27, 2020
மார்கழி 12 – ஞாயிறு

மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். முயற்சிக்கேற்ற ஆதரவு கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாசனை திரவியங்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வாகன வசதிகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
மிருகசீரிஷம் : வசதிகள் மேம்படும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 27, 2020
மார்கழி 12 – ஞாயிறு

திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் உடல் சோர்வு ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவாதிரை : மாற்றங்கள் உண்டாகும்.
புனர்பூசம் : தனவரவுகள் கிடைக்கும்.


🕉️கடகம்
டிசம்பர் 27, 2020
மார்கழி 12 – ஞாயிறு

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்கு உதவும்போது சற்று சிந்தித்து செயல்படுவது அவசியம். வாக்குவாதங்களை தவிர்த்து நிதானத்துடன் இருப்பது நன்மையளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : நிதானம் வேண்டும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 27, 2020
மார்கழி 12 – ஞாயிறு

பழைய நினைவுகளின் மூலம் மந்தத்தன்மையும், உடல் சோர்வும் ஏற்படும். வாழ்க்கை பற்றிய புதிய பரிணாமம் மற்றும் சிந்தனைகள் உண்டாகும். தொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். தற்பெருமை சிந்தனைகளை தவிர்த்து அனைவரிடமும் ஒற்றுமையுடன் இருப்பது நன்மையளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மகம் : மந்தமான நாள்.
பூரம் : சிந்தனைகள் உண்டாகும்.
உத்திரம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


🕉️கன்னி
டிசம்பர் 27, 2020
மார்கழி 12 – ஞாயிறு

உடனிருப்பவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திரம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
அஸ்தம் : நெருக்கம் அதிகரிக்கும்.
சித்திரை : பொறுப்புகள் குறையும்.


🕉️துலாம்
டிசம்பர் 27, 2020
மார்கழி 12 – ஞாயிறு

மனதில் நினைத்த எண்ணங்களுக்கு மாறாக சில செயல்கள் நடைபெறும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : புரிதல் உண்டாகும்.
சுவாதி : சேமிப்புகள் குறையும்.
விசாகம் : மாற்றமான நாள்.


🕉️விருச்சகம்
டிசம்பர் 27, 2020
மார்கழி 12 – ஞாயிறு

உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரின் வழியில் செல்வச்சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதரர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். மருந்துகள் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : ஆர்வம் ஏற்படும்.
அனுஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
கேட்டை : வாய்ப்புகள் உண்டாகும்.


🕉️தனுசு
டிசம்பர் 27, 2020
மார்கழி 12 – ஞாயிறு

எதிர்பாராத வழியில் பொருட்சேர்க்கை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் ஒருவிதமான கவலைகள் ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
பூராடம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.
உத்திராடம் : கவலைகள் மறையும்.


🕉️மகரம்
டிசம்பர் 27, 2020
மார்கழி 12 – ஞாயிறு

கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உடல் சோர்வுடன் காணப்படுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து முறியடிப்பீர்கள். நீண்ட நாள் நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான உதவிகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஒற்றுமை மேலோங்கும்.
திருவோணம் : எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள்.
அவிட்டம் : தனவரவுகள் கிடைக்கும்.


🕉️கும்பம்
டிசம்பர் 27, 2020
மார்கழி 12 – ஞாயிறு

சுபகாரியங்கள் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். நெருங்கிய உறவினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். அரசியல் பணியில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். தவறிய சில பொருட்களை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அவிட்டம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
சதயம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
பூரட்டாதி : ஆதரவான நாள்.


🕉️மீனம்
டிசம்பர் 27, 2020
மார்கழி 12 – ஞாயிறு

கால்நடைகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில காரியங்கள் நடைபெறாமல் காலதாமதத்தை ஏற்படுத்தும். உபரி வருமானம் தொடர்பான முயற்சிகள் மேலோங்கும். அறிவியல் சார்ந்த செயல்பாடுகளில் புதிய கண்ணோட்டமும், எண்ணங்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : முயற்சிகள் மேலோங்கும்.
ரேவதி : எண்ணங்கள் உண்டாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.