ராகு காலம்

தெரிந்து கொள்ளுங்கள் ராகு காலம் பற்றி

ராகுகாலம் என்றால் என்ன?

நம் முன்னோர் ஜோதிட மேதைகள் நவக்கிரஹங்கள் ராகு கேது தவிர மற்ற கிரஹங்களுக்க் நாள் கிழமை, நேரம் ஒதுக்கினார்கள் அதே போல வானத்தில் கிரஹங்களின் வெளியேறும் துகள்களால் (தூசுகள்) உண்டான ராகு மற்றும் கேது (180டிகிரி) இவற்றின் கதிர்வீச்சுகளை கண்டறிந்து ஒவ்வொரு நாளிலும் அவை ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து அதற்கான ஒரு நாளில் நேரத்தை ஒதுக்கினார்கள். சூரிய உதயம் 6மணி முதல் சூரிய அஸ்தமனம் 6மணி வரையிலான 12மணி நேரத்தை 8ஆல் வகுத்து ஒரு நாளைக்கு 1.5 மணி நேரம் ராகு காலம் என்று கொடுத்தனர்.

ஏன் ராகு காலத்தில் செயல்கள் செய்ய கூடாது?

ஓவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட 1.5 மணி நேரம் இந்த ராகுவின் கதிர்வீச்சால் மனிதர்கள் மேல் உண்டாகும் மன அழுத்தம் குழப்பம் இவை மனிதனை சிந்திக்க விடாது. பயம் ஏற்படும் செயல்களில் மந்தம் அல்லது எதிர்வினை உண்டாகும். இதற்காக தான் ராகு காலத்தில் சுப காரியங்களை செய்ய கூடாது என்றனர்.

ராகு காலம் எப்படி வந்தது?

சில ஆயிரம் வருடங்களுக்கு முன் ஜோதிடத்தில் மொத்தம் 7 கிரஹம் தான் ஜோதிட சாத்திரங்களை தொகுத்த வராஹமிகிரர் தொடங்கி பராசரர் எல்லோரும் ஒரு நாளில் நடக்கும் சில அசுபங்கள் எதனால் உண்டாகிறது என்று வானத்தை உற்று நோக்கும் போது கண்டு பிடிக்கப்பட்டது கிரஹங்களிலிருந்து வெளிவரும் துகள்கள் (தூசுகள்) ஒன்றுடன் ஒன்று ஈர்த்து ஒரு கிரஹம் போல் (நிழல் போல்) உண்டாகி அதன் தன்மை பூமியில் ஏற்படுத்திய மாற்றங்களை கொண்டு பல மனிதர்களிடையே ஏற்பட்ட தாக்கத்தை கணக்கெடுத்து ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட காலம் ராகுவாலும் பின் கேது மற்றும் குளிகையாலும் ஏற்ப்பட்டதை கணக்கிட்டு ராகு காலம் எமகண்டம் என்ற வேளையை கொடுத்தனர்.

ராகு காலம் ஒருநாளில் எப்பொழுது தொடங்கும்?

பொதுவா சூரிய உதயம் காலை 6மணி, சூரிய அஸ்தமனம் 6மணி என்ற கணக்கில் இந்த 12 மணி நேரத்தை 8ல் வகுத்தால் 1மணி 30 நிமிடம் வரும் இதை ராகு காலம் என்பர் ஒவ்வொரு கிழமைக்கும் பகுத்து கொடுப்பது ஞாயிறு 8வது பாகம் திங்கள் இரண்டாவது பாகம், சனி மூன்றாவது பாகம், வெள்ளி நான்காவது பாகம், புதன் ஐந்தாவது பாகம், வியாழன் ஆறாவது பாகம், செவ்வாய் 7வது பாகம்.

ஒவ்வொரு ஊரிலும் சூரிய உதயம் சரியாக 6மணிக்கு இருக்காது அஸ்தமனமும் 6மணிக்கு இருக்காது மாறுபடும். உதாரணமாக சென்னையில் திங்கள் கிழமை சூரிய உதயம் 6.32 மணிக்கு காலெண்டரில் திங்கள் ராகு காலம் 7.30 – 09.00 என்று கொடுத்து இருக்கு சூரியோதயம் 06.32 என்பதால் ராகுகாலம் 08.02 மணிக்கு தொடங்கி 09.32 மணிக்கு முடியும். இப்படி ஒவ்வொரு நாளும் கணக்கிட வேண்டும்.

ராகு காலத்தில் செய்யும் செயல் யாருக்கு நன்மை அளிக்கும் ?

சிலர் சொல்லுவர் ராகு காலத்தில் தொடங்கினேன் எனக்கு சக்ஸஸ் ஆயிற்று என்பர். இதில் இரண்டு வகை

  1. பகுத்தறிவுவாதிகள் என்போர். பொதுவா வெள்ளிக்கிழமை 10.30 – 12.00 மணிக்கு என்று காலெண்டரில் போட்டிருக்கு இவர் சரியாக 10.30க்கு ஆரம்பித்தார். இங்கு கவனிக்க வேண்டியது அவர் ஆரம்பித்த ஊரில் சூரியோதயம் அன்று 06.35மணிக்கு அதனால் அன்றைய அந்த ஊர் ராகு காலம் 11.05மணிக்கு அவர் ஆரம்பித்த வேளை நல்ல நேரம்.
  2. இன்னொருவர் நிஜமாகவே 11.05க்கு ஆரம்பிப்பார் சக்ஸஸ் ஆகி இருக்கும். காரணம் ஒவ்வொருவருக்கும் அவர் பிறந்த நக்ஷத்திரம் கிரஹ பலம் இவற்றை கொண்டு ராகு நன்மை செய்வதாய் இருக்கும் ஜாதகப்படி அதனால் அவருக்கு ராகு கால வேளை பாதிப்பை தராது.

பொதுவாக இந்த ராகு காலம் எமகண்டம், குளிகை மற்றும் சில தியாஜ்யம் விஷ கடிகை என்று 24மணி நேரத்தில் குறிப்பிட்ட காலங்கள் இவைகள் இருக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் 02.15 மணி நேரம் பகலிலும், இரவில் 02.15மணி நேரமும் மட்டுமே நல்ல நேரம். அதை அறிந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.