நவம்பர் 08 ஐப்பசி 22 ராசி பலன்

நவம்பர் 08 ஐப்பசி 22 ராசி பலன்

இன்றைய பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய

🕉️மேஷம்
நவம்பர் 08, 2021

வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். இயந்திரம் தொடர்பான கலை பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் காணப்படும். அதிர்ஷ்டகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : புரிதல் உண்டாகும்.
கிருத்திகை : லாபகரமான நாள்.


🕉️ரிஷபம்
நவம்பர் 08, 2021

உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், சிறு சஞ்சலங்களும் உண்டாகும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்த சில உதவிகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது தேவையற்ற மனக்கசப்பை தவிர்க்கும். விரயங்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : சஞ்சலமான நாள்.
ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.


🕉️மிதுனம்
நவம்பர் 08, 2021

எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள்
உண்டாகும். உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். ஆதரவு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : சுறுசுறுப்பான நாள்.
திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.


🕉️கடகம்
நவம்பர் 08, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். சிற்றின்ப செயல்பாடுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளின் மூலம் தூக்கமின்மை சிலருக்கு ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வும், வெற்றியும் கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் மேம்படும்.
பூசம் : விரயங்கள் உண்டாகும்.
ஆயில்யம் : தீர்வு கிடைக்கும்.


🕉️சிம்மம்
நவம்பர் 08, 2021

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். தந்திரமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திறமைகள்
வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : இலக்குகள் பிறக்கும்.
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.


🕉️கன்னி
நவம்பர் 08, 2021

எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வியாபார ரீதியாக இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்துகொள்வீர்கள். உத்தியோகம்
தொடர்பான பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். கீர்த்தி உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : ஒற்றுமை மேம்படும்.
அஸ்தம் : நெருக்கடிகள் குறையும்.
சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.


🕉️துலாம்
நவம்பர் 08, 2021

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் திறமைக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் உயர்வு ஏற்படும். சிறுதொழில் நிமிர்த்தமான உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். அமைதியான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : ஆதரவான நாள்.
சுவாதி : உதவிகள் கிடைக்கும்.
விசாகம் : திட்டங்கள் நிறைவேறும்.


🕉️விருச்சிகம்
நவம்பர் 08, 2021

மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை அறிந்துகொள்வீர்கள். முகத்தில் புதுவிதமான பொலிவும், புத்துணர்ச்சியும் காணப்படும். வரவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : தெளிவு பிறக்கும்.
அனுஷம் : முயற்சிகள் ஈடேறும்.
கேட்டை : புத்துணர்ச்சியான நாள்.


🕉️தனுசு
நவம்பர் 08, 2021

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : ஆரோக்கியம் மேம்படும்.
பூராடம் : போட்டிகள் குறையும்.
உத்திராடம் : மேன்மை உண்டாகும்.


🕉️மகரம்
நவம்பர் 08, 2021

பணி நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். நண்பர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பகைமையை தவிர்க்க முடியும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

உத்திராடம் : பயணங்கள் அதிகரிக்கும்.
திருவோணம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.


🕉️கும்பம்
நவம்பர் 08, 2021

வியாபாரம் சம்பந்தமான முயற்சிகள் ஈடேறும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நண்பர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஏற்பட்ட தடைகளால் புதிய மாற்றம் பிறக்கும். நிம்மதியான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

அவிட்டம் : தன்னம்பிக்கையான நாள்.
சதயம் : சந்திப்புகள் ஏற்படும்.
பூரட்டாதி : மாற்றம் பிறக்கும்.


🕉️மீனம்
நவம்பர் 08, 2021

தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
ரேவதி : செல்வாக்கு அதிகரிக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.