நவம்பர் 09 ராசி பலன்

🕉️மேஷம்
நவம்பர் 09, 2020
ஐப்பசி 24 – திங்கள்

பொதுநல பணியில் ஈடுபடுபவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. எந்தவொரு வேலையையும் அலைந்து செய்து முடிக்க வேண்டியிருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் படிப்படியான மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.


🕉️ரிஷபம்
நவம்பர் 09, 2020
ஐப்பசி 24 – திங்கள்

தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சர்வதேச தொழில் பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும். நீர்நிலை சம்பந்தமான தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.
மிருகசீரிஷம் : கலகலப்பான நாள்.


🕉️மிதுனம்
நவம்பர் 09, 2020
ஐப்பசி 24 – திங்கள்

தீர்ப்புகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். போட்டியில் எண்ணிய வெற்றி உண்டாகும். உடனிருப்பவர்களின் தன்மை அறிந்து செயல்படுவது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மையளிக்கும். பங்குதாரர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.
புனர்பூசம் : அமைதி வேண்டும்.


🕉️கடகம்
நவம்பர் 09, 2020
ஐப்பசி 24 – திங்கள்

புத்திரர்களின் செயல்பாடுகளால் பெருமை உண்டாகும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். அந்நியர்களால் வருமானம் மேம்படும். சுயதொழில் புரிபவர்களுக்கு இருந்துவந்த பணச்சிக்கல்கள் நீங்கும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : பெருமை உண்டாகும்.
பூசம் : வருமானம் மேம்படும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️சிம்மம்
நவம்பர் 09, 2020
ஐப்பசி 24 – திங்கள்

கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். பயணங்களில் நிதானம் வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் கீர்த்தி உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் தோன்றும். எந்தவொரு முடிவுகளையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திரம் : சிந்தனைகள் தோன்றும்.


🕉️கன்னி
நவம்பர் 09, 2020
ஐப்பசி 24 – திங்கள்

விளையாட்டுத்துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சுற்றுலா செல்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். தொழில் அலைச்சல்களால் சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
அஸ்தம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.


🕉️துலாம்
நவம்பர் 09, 2020
ஐப்பசி 24 – திங்கள்

நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
சுவாதி : முன்னேற்றமான நாள்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.


🕉️விருச்சகம்
நவம்பர் 09, 2020
ஐப்பசி 24 – திங்கள்

புதிய ஆடைச்சேர்க்கை உண்டாகும். வியாபாரிகளிடம் பேசும்போது கவனமாக பேச வேண்டும். அறச்செயல்களால் புகழ் பெறுவீர்கள். தந்தைவழி உறவுகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : அனுகூலம் உண்டாகும்.
கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


🕉️தனுசு
நவம்பர் 09, 2020
ஐப்பசி 24 – திங்கள்

வெளியூர் தொடர்பான தொழில் முயற்சிகளால் இலாபம் அதிகரிக்கும். தலைமை பதவியில் உள்ளவர்கள் கவனத்துடன் செயல்படவும். இறைப்பணிகளால் கீர்த்தி உண்டாகும். கூட்டாளிகளுடன் இணைந்து புதிய செயல்களில் ஈடுபடுவதன் மூலம் தனலாபம் கிடைக்கும். நிர்வாகத்தில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
மூலம் : இலாபம் அதிகரிக்கும்.
பூராடம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.


🕉️மகரம்
நவம்பர் 09, 2020
ஐப்பசி 24 – திங்கள்

பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். அஞ்ஞான எண்ணங்கள் தோன்றும். மந்தத்தன்மையால் பணியில் காலதாமதம் நேரிடலாம். உயர் அதிகாரிகளினால் பணியில் சாதகமற்ற சூழல் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : காலதாமதம் உண்டாகும்.
திருவோணம் : மந்தத்தன்மை ஏற்படும்.
அவிட்டம் : சாதகமற்ற நாள்.


🕉️கும்பம்
நவம்பர் 09, 2020
ஐப்பசி 24 – திங்கள்

மனைவியின் மூலம் சேமிப்புகள் உயரும். பிரபலமானவர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எண்ணிய இலாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களை பற்றிய நம்பிக்கை மேம்படும். வாதத்திறமையால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அவிட்டம் : சேமிப்புகள் உயரும்.
சதயம் : இலாபம் கிடைக்கும்.
பூரட்டாதி : நம்பிக்கை மேம்படும்.


🕉️மீனம்
நவம்பர் 09, 2020
ஐப்பசி 24 – திங்கள்

மூத்த சகோதரர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதன் மூலம் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எண்ணிய கடன் உதவிகள் கிடைக்கும். தாய்மாமன்வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.