நவம்பர் 29 கார்த்திகை 13 ராசி பலன்

நவம்பர் 29 கார்த்திகை 13 ராசி பலன்

பஞ்சாங்கம் வாட்ஸ் அப் குழுவில் இணைய

டெலிகிராம் குழுவில் இணைய

இன்றைய பஞ்சாங்கம்

🌼திங்கட்கிழமை🌼

🕉️மேஷம்
நவம்பர் 29, 2021

உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். தடைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.
பரணி : தெளிவு கிடைக்கும்.
கிருத்திகை : நிதானம் வேண்டும்.


🕉️ரிஷபம்
நவம்பர் 29, 2021

புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவு பெறும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத் திறன் மேம்படும். உத்தியோக பணிகளில் நுட்பமாக செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : கற்பனைத் திறன் மேம்படும்.


🕉️மிதுனம்
நவம்பர் 29, 2021

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதமும், அனுபவமும் ஏற்படும். எதிர்பாராத சிலரின் உதவியால் மாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிறு சிறு பாதிப்புகளின் மூலம் செலவுகள் நேரிடலாம். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறியாக இருந்துவந்த சூழ்நிலைகள் மறையும். வெற்றிகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும்.
திருவாதிரை : செலவுகள் நேரிடலாம்.
புனர்பூசம் : இழுபறியான நாள்.


🕉️கடகம்
நவம்பர் 29, 2021

எந்தவொரு செயலிலும் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய துறை சார்ந்த கலந்தாய்வில் சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பத்திரிக்கை துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். ஆர்வம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்.
பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
ஆயில்யம் : ஆதாயகரமான நாள்.


🕉️சிம்மம்
நவம்பர் 29, 2021

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தருணங்கள் சாதகமாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். மற்றவர்களுக்கு தேவையான பணிகளை செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரம் : இன்னல்கள் குறையும்.


🕉️கன்னி
நவம்பர் 29, 2021

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் மீதான அவப்பெயர் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் நிலுவையில் இருந்துவந்த செயல்களை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் பதற்றமின்றி செயல்படவும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : விவாதங்களை தவிர்க்கவும்.
சித்திரை : தன்னம்பிக்கை மேம்படும்.


🕉️துலாம்
நவம்பர் 29, 2021

பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்களும், போராட்டங்களும் குறையும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது நபர்களின் தன்மை அறிந்து செயல்படவும். விவாதங்களின் மூலம்
எதிர்பார்த்த பலன்களை அடைவீர்கள். விடாமுயற்சி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : குழப்பங்கள் குறையும்.
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.


🕉️விருச்சிகம்
நவம்பர் 29, 2021

பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். சிலருக்கு கௌரவ பொறுப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான வியாபார சிந்தனைகள் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் தோன்றும். முன் கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்க இயலும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

விசாகம் : மதிப்பு அதிகரிக்கும்.
அனுஷம் : சிந்தனைகள் மேம்படும்.
கேட்டை : சாதகமான நாள்.


🕉️தனுசு
நவம்பர் 29, 2021

மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மனம் மகிழ்வீர்கள். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். வைத்தியம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். புதுவிதமான கலைகளில் ஆர்வம் உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் மேம்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். லாபம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

மூலம் : இழுபறிகள் மறையும்.
பூராடம் : மேன்மை ஏற்படும்.
உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.


🕉️மகரம்
நவம்பர் 29, 2021

நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த பதற்ற நிலை குறையும். நுட்பமான செயல்பாடுகளின் மூலம் ஆதரவு மேம்படும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கிடைக்கும். சந்தோஷம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : தெளிவு கிடைக்கும்.
திருவோணம் : ஆதரவு மேம்படும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️கும்பம்
நவம்பர் 29, 2021

மாணவர்களுக்கு ஞாபகமறதி அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். மறைமுகமான தடைகளால் எண்ணிய செயல்பாடுகள் காலதாமதமாக நிறைவு பெறும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வரவுகளில் கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சதயம் : காலதாமதம் ஏற்படும்.
பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.


🕉️மீனம்
நவம்பர் 29, 2021

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும். விலகி இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். காரியம் சித்தமாகும்
நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : தெளிவு பிறக்கும்.
ரேவதி : முடிவு கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.