பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 1

This entry is part 1 of 4 in the series பாசுரப்படி ராமாயணம்

ராமாயணத்தை வேதத்தின் சாரம் என்பார்கள்.

கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பாரோ என்ற நம்மாழவார் வாக்கு தொட்டு அனைத்து ஆழ்வார்களும் ராமனின் கல்யாண குணங்களில் ஈடுபட்டு பல பாசுரங்களை பாடியுள்ளனர்.

வால்மீகி ராமாயணமோ, திவ்யப் ப்ரபந்தமோ நம்மால் தினமும் சேவிக்க முடியாது என்று நமக்காக ஆழ்வார்களின் அமுத மொழியிலிருந்து எடுத்து தொடுத்து திவ்யப் பிரபந்த பாசுர ராமாயணம் அதாவது பாசுரப்படி ராமாயணம் என்று தொகுத்து வழங்கியுள்ளார் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை.

இந்த ராமாயண மாதத்தில் பாசுரப்படி ராமாயணத்தை அனுபவிக்கலாம்.

பாலகாண்டம்

"திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லது ஓர் நாட்டில்
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு
ஏழ் உலகும் தனிக் கோல் செல்ல வீற்றிருக்கும்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதியான
அணி ஆர் பொழில்சூழ் அரங்க நகர் அப்பன்
அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய்போல்
ஆவார் ஆர் துணை என்று துளங்கும்நல் அமரர் துயர் தீர
வல் அரக்கர் வாழ் இலங்கை பாழ்படுக்க எண்ணி
மண் உலகத்தோர் உய்ய
அயோத்தி என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்கு ஆக 
பாசுரப்படி ராமாயணம்

விண்ணும் மண்ணும் துலங்க, எல்லா இடத்திலும் நலம் திகழ, திருப்பாற்கடலில் தேவாதி தேவர்கள் சூழ இருந்த எம்பெருமான், என் திருவரங்கத்து அப்பன், வன்மையை மட்டுமே செயலாகக் கொண்ட இலங்கை நகர் வாழ் அரக்கர் தம்மை வீழ்த்த, சூரிய குலத்தின் கொழுந்தாய் , அயோத்தி நகரில் வந்துதித்தான்.

Series Navigationபாசுரப்படி ராமாயணம் – 3 >>

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.