பாசுரப்படி ராமாயணம்

பாசுரப்படி ராமாயணம் – 2

பாலகாண்டத்தின் தொடர்ச்சி

மண் உலகத்தோர் உய்ய,
அயோத்தி எனும் அணி நகரத்து,
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்,
கௌசலை தன் குல மதலையாய்,
தயரதன் தன் மகனாய்த் தோன்றி

என்று மாந்தர் எல்லாம் உய்வு பெற, நிலமைகளின் நெற்றிப் பொட்டுப் போல் விளங்கும் அயோத்தி மாநகரில், சூரிய வம்சத்தில் தசரத சக்ரவர்த்தியின் மகனாக, மன்னு புகழ் கோசலையின் செல்வனாக ஸ்ரீ ராமன் ஒரு பகலில் அவதரித்தான்.

கம்பன் சொல்லும் போது

'வளையடு திகிரியும், வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்,
இளையர்கள் என அடி பரவ ஏகி, நாம்,
வளைமதில் அயோத்தியில் வருதும்' என்றனன்

என்று சொல்கிறார்.

நான், என்னுடைய சங்கு, சக்கரம், வடவை தீயை விட கொடிய விஷம் உடைய பாயல் ஆகிய ஆதிசேஷன் ஆகியோர் என் சகோதரர்களாகவும் பெரிய மதில் சுவர்களை உடைய அயோத்தி மாநகரில் தசரதன் மதலையாய் பூமிக்கு வருகிறேன் என்றார் எம்பெருமான்.

திருஅவதாரம் ஆயிற்று!

About Author

One Reply to “பாசுரப்படி ராமாயணம் – 2”

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.