சுய ஒழுங்கு /சுய கட்டுப்பாடு அப்படியென்றால் என்ன?
நாம் தெருவில் தனியாக நடந்து போய் கொண்டிருக்கும் போது, தெருவில் மக்கள் நடமாட்டமே இல்லை என்றாலும் குப்பையை போடவோ, எச்சில் துப்பவோ கூடாது. ஒரு கட்டு ரூபாய் நோட்டுக்கள் தெருவில் கிடந்தாலும், யாரும் பார்க்கவில்லையே என எடுத்துவிட முடியுமா? பார்க்காத விஷயத்தை பார்த்தது போல சொல்ல முடியுமா?
தனி மனிதனுக்கே இப்படி சுய கட்டுப்பாடுகள் தேவை என்றால் ஓர் நிறுவனத்தில் வேலை செய்பவருக்கு எத்தனை பொறுப்புகள் தேவை?
நமக்கு மனதினுள் ஆயிரம் கோபங்கள் வருத்தங்கள் ஏமாற்றங்கள் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஏன் வருகின்றது என்று எப்பொழுதாவது யோசிக்கிறீர்களா? அதை சரி செய்ய யாருடன் பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என நினைத்திருக்கிறீர்களா?
உங்கள் கோபம் ஏமாற்றம் எல்லாவற்றையும் சாப்பாடு மேல் காட்டினால், பட்டினி கிடந்தால் பாதிப்படைவது உங்கள் உடல் மட்டுமல்ல, உங்களுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழித்து கம்பெனி நடத்துபவர்களின் உற்பத்தி திறனும் தான்.
உங்கள் சுய ஒழுங்கு என்பது ஓர் நல்ல சங்கீதத்தை தொடர்ந்து பாடுவதைப்போல. நீங்கள் பாடப்பாட உங்கள் குரல் வளமாகும். அது போல் உங்களுக்கு உங்கள் விஷயங்களில் ஓர் கட்டுப்பாடும் தெளிவும் இருந்தால் உங்கள் மனம் லேசாகும், நீங்கள் செய்யும் வேலைகளில் ஈடுபாடு அதிகமாகும்.
சுய கட்டுப்பாட்டை நாம் தொடர்ந்து பயிற்சி செய்தால், நம்மிடம் உள்ள தேவையில்லாத பழக்கங்கள் நம்மைவிட்டு விலகும்.
எந்த ஒரு விஷயத்திற்க்கும் பயப்படுவதை நிறுத்துங்கள். ஏதாவது தவறு செய்து விடுவோமோ என்ற நினைப்பை தவிர்த்து வேலையில் சந்தேகம் ஏற்பட்டால் மேலதிகாரியிடம் கேளுங்கள்.
உங்கள் தினசரி வாழ்வில் என்னென்ன ஒழுங்கு கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டும் என்பதை ஒரு டைரியில் எழுதுங்கள்.
வாரம் ஒரு முறை அதை புரட்டிப் பார்த்து என்னென்ன மாற்றம் கொண்டு வந்தீர்கள் என தெரிந்து கொண்டு உங்கள் தோளில் நீங்களே தட்டி உங்களை பாராட்டுக்கள்.
உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்துவது போல மனதிற்க்கு பயிற்சி கொடுங்கள்.
ஜெயா ரங்கராஜன்
வாழ்வியல் பயிற்சியாளர்
(Life Coach)
9790782830