- பாசுரப்படி ராமாயணம் – 1
- பாசுரப்படி ராமாயணம் – 3
- பாசுரப்படி ராமாயணம் – 4
- பாசுரப்படி ராமாயணம் – 6
ராம லக்ஷ்மணர்கள் விஸ்வாமித்ர முனிவரின் வேள்வி காக்க அயோத்தி விட்டு தரு வனம் நோக்கி நடந்தார்கள். அங்கு,
மந்திரம் கொள் மறைமுனிவன் வேள்விகாக்க நடந்து,
வந்து எதிர்த்த தாடகை தன் உரத்தைக் கீறி வல் அரக்கர் உயிர் உண்டு
வேள்விக்கு இடையூராக நின்ற தாடகையையும் சுபாகுவையும் ஓர் வெங்கணையால் வீழ்த்தினர்.
இதை கம்பன்,
எண்ணுதற்கு ஆக்க அரிது; இரண்டு மூன்று நாள்விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர்.
விஸ்வாமித்ரர் தேவர்களுக்காக செய்த வேள்வியை, 6 நாட்கள், இரவும் பகலும், கண்ணை இமை காப்பது போல் இந்த மண்ணை ஆளும் தசரத சக்ரவர்த்தியின் புதல்வர்கள்,கற்பனைக்கு எட்டாத , நினைத்து பார்க்கவே முடியாத அளவுக்கு, நின்று காத்தார்கள்.