- பாசுரப்படி ராமாயணம் – 1
- பாசுரப்படி ராமாயணம் – 3
- பாசுரப்படி ராமாயணம் – 4
- பாசுரப்படி ராமாயணம் – 6
அகலிகைக்கு சாப விமோச்சனம் வழங்கிய பின் முனிவனும் அரச குமாரர்களும் மிதிலை வந்தடைந்தனர்.
கல்லைப் பெண்ணாக்கிக்
காரார் திண் சிலை இறுத்து
அங்கு ஜனக மஹாராஜா ஏற்பாடு செய்திருந்த வெளிவியில் சிவ தனுசு என்ற வில்லை நாண் ஏற்ற எடுத்து அதனை முறித்தான்.
கம்பன் இதை,
தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில் மடுத்ததும், நாண் நுதி வைத்ததும், நோக்கார்; கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால் எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்
வலிமையான சேவகர்கள் பலரும் கொண்டு வந்து வைத்த சிவ தனுஷை எந்த ராஜகுமாரனும் அசைக்கவில்லை.
சபையோர் அனைவரும் கண் கொட்டாமல் பார்த்து இருக்க, இளம் களிறு நடை பயின்று ராமன் சிவதனுசை எடுத்து, ஒரு முனையை காலால் பற்றி மறு நாணேற்ற வில் முறிந்தது.
அது எவ்வளவு விரைவாக நடந்தது என்றால் ராமன் சிவ தனுசை எடுத்ததை பார்த்தவர்கள் அது இற்று விழுந்த ஒலியைத் தான் கேட்டனர்.
இனி கல்யாண வைபோகம்.