பிப்ரவரி 03 ராசி பலன்

🕉️மேஷம்
பிப்ரவரி 03, 2021
தை 21 – புதன்

போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். உறவினர்களால் சுபவிரயங்கள் ஏற்படும். பணி தொடர்பான புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அஸ்வினி : வெற்றி உண்டாகும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.


🕉️ரிஷபம்
பிப்ரவரி 03, 2021
தை 21 – புதன்

எதிர்பார்த்த தனவரவுகளில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும்போது நிதானம் வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வை காண முயற்சிப்பீர்கள். மனதிற்கு விருப்பமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். புண்ணிய யாத்திரை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.
ரோகிணி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
மிருகசீரிஷம் : மனமகிழ்ச்சியான நாள்.


🕉️மிதுனம்
பிப்ரவரி 03, 2021
தை 21 – புதன்

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆலோசனைகளில் பொறுமை வேண்டும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை : பொறுமை வேண்டும்.
புனர்பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.


🕉️கடகம்
பிப்ரவரி 03, 2021
தை 21 – புதன்

மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய நட்புகள் உண்டாகும். வர்த்தகங்களில் மத்திமமான தனலாபம் கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். தொழில் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : நினைவாற்றல் அதிகரிக்கும்.
பூசம் : தனலாபம் கிடைக்கும்.
ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.


🕉️சிம்மம்
பிப்ரவரி 03, 2021
தை 21 – புதன்

வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு மேன்மை அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். ஆகாய மார்க்க பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்கள் புகழப்படுவீர்கள். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : இலாபகரமான நாள்.
பூரம் : புகழப்படுவீர்கள்.
உத்திரம் : ஈடுபாடு உண்டாகும்.


🕉️கன்னி
பிப்ரவரி 03, 2021
தை 21 – புதன்

எதிர்காலம் தொடர்பான பணிகளில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட தடைகள் நீங்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்க வேண்டும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : எண்ணங்கள் உண்டாகும்.


🕉️துலாம்
பிப்ரவரி 03, 2021
தை 21 – புதன்

நண்பர்களுடனான நட்பு நிலை மேலோங்கும். தந்தையின் ஆதரவால் சுபவிரயங்கள் ஏற்பட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். தொழில் முனைபவர்கள் வேலையாட்களிடம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : நிதானம் வேண்டும்.
விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.


🕉️விருச்சிகம்
பிப்ரவரி 03, 2021
தை 21 – புதன்

மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். வெளியூர் தொழில் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உடைமைகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். மனதில் புதிய எண்ணங்கள் தோன்றும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : விவாதங்களை தவிர்க்கவும்.


🕉️தனுசு
பிப்ரவரி 03, 2021
தை 21 – புதன்

அறச்செயல்களால் கீர்த்தி உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். தொழில் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : கீர்த்தி உண்டாகும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.


🕉️மகரம்
பிப்ரவரி 03, 2021
தை 21 – புதன்

விவசாயிகளுக்கும், தானியங்களை விற்பவர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களால் சேமிப்புகள் அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் சாதகமான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். வெளிநாட்டு பணிகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் : சாதகமான நாள்.


🕉️கும்பம்
பிப்ரவரி 03, 2021
தை 21 – புதன்

அஞ்ஞான சிந்தனைகள் மேலோங்கும். எதிர்காலத்திற்கு தேவையான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சாதகமற்ற நட்பு நிலை உண்டாகும். வாகனப் பயணங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : சிந்தனைகள் மேலோங்கும்.
சதயம் : கவனம் தேவை.
பூரட்டாதி : எச்சரிக்கை வேண்டும்.


🕉️மீனம்
பிப்ரவரி 03, 2021
தை 21 – புதன்

நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : கவலைகள் குறையும்.
ரேவதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.