பிலவ வருடம் புரட்டாசி மாதம் ராசி பலன்கள்

வருகிற 17.09.2021 தேதி நள்ளிரவு 01.13.31 மணி முதல் சிம்ம ராசியிலிருந்து  கன்னி ராசிக்கு சூரியபகவான் பெயர்ச்சியாகிறார் கன்னிராசியில் 17.10.2021 பிற்பகல் 01.12.16 மணி வரை சஞ்சரிக்கிறார் இது லகரி அயனாம்ச படி கணிக்கப்பட்டது இதற்கான ஒவ்வொரு ராசிக்குமான  புரட்டாசி மாதம் ராசி பலன்கள் இப்போது பார்க்கலாம்.

கிரக சஞ்சார நிலைகள் சூரிய சஞ்சாரம் கன்னி ராசிக்குள் நுழையும் நேரத்தில்

லக்னம் – மிதுனம் – புனர்பூசம் – 1

சூரியன் – கன்னி – உத்திரம் –  2

சந்திரன் – மகரம் – உத்திராடம் – 4

செவ்வாய் – கன்னி – உத்திரம் – 4

புதன் – கன்னி – சித்திரை – 1

குரு (வக்கிரம்) – மகரம் – அவிட்டம் – 2

சுக்கிரன் – துலாம் – சுவாதி – 2

சனி (வக்கிரம்) –  மகரம் – திருவோணம் – 1

ராகு – ரிஷபம் – ரோகிணி – 1

கேது – விருச்சிகம் –  அனுஷம் – 3


கிரக சஞ்சார நிலைகள் சூரிய சஞ்சாரம் கன்னி ராசிக்குள் நுழையும் நேரத்தில்

லக்னம் – மிதுனம் – புனர்பூசம் – 1

சூரியன் – கன்னி – உத்திரம் –  2

சந்திரன் – மகரம் – உத்திராடம் – 4

செவ்வாய் – கன்னி – உத்திரம் – 4

புதன் – கன்னி – சித்திரை – 1

குரு (வக்கிரம்) – மகரம் – அவிட்டம் – 2

சுக்கிரன் – துலாம் – சுவாதி – 2

சனி (வக்கிரம்) –  மகரம் – திருவோணம் – 1

ராகு – ரிஷபம் – ரோகிணி – 1

கேது – விருச்சிகம் –  அனுஷம் – 3

நாட்டுக்கான பலன் :

பொதுவாக நாட்டில் மக்களிடம் அச்ச உணர்வும், பண பிரச்சனையும், இருந்து கொண்டிருந்தாலும், விவசாயம் , எண்ணை, பயிர் தொழில்கள், ஆடை, ஆபரண தொழில்கள், மருத்துவம், நிலம், கல்வி, சமையல், கலை தொழில்கள் நன்றாக இருக்கும். மழை கொஞ்சம், ஆட்சியாளர்களுக்கு சில தொந்தரவுகள் அந்நிய நாடுகள், மதம் மொழிகாரர்களால் பிரச்சனை என்று இருக்கும். பெரும்பாலும் கவனத்துடன் ஆட்சி நடத்தும் படி இருக்கும். கேடு ஓரளவு இருக்கும். வெகு சுமாரான மாதம். மகரத்தில் வக்ரம் அடையும் குரு சனி சேர்க்கை இறை துவேஷிகளால் கெடுதல்கள் அதிகமாகி மக்களிடம் ஒரு பயத்தை கொடுக்கும். தெய்வ வழிபாடு, கோயில்கள் பூசைகளை சரிவர செய்வது, மக்களுக்கு விரோதமில்லாத நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசுக்கு ஓரளவு நல்ல பலனை தரும்.


மேஷம்:  அஸ்வினி, பரணி, கார்த்திகை, 1ம் பாதம் முடிய :

உங்கள் ராசியின் அதிபதி செவ்வாய் மற்றும் சூரியன் ராசிக்கு ஆறில் சஞ்சரிப்பது மிக நல்ல பலனை தரும் மேலும் புதன் செப்டம்பர் 22 வரை நல்ல பலனைத் தரும் பொதுவாக பணப் பிரச்சினைகள் தீரும் உத்யோகத்தில் சொந்த தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும் அதேபோல் வேலை வாய்ப்புகள் நன்றாக இருக்கும் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும் திருமணத்தை எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு திருமணம் கைகூடும் சிலருக்கு குழந்தைப்பேறு உண்டாகும் மேலும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் அதேநேரம் மற்ற கிரகங்கள் அவ்வளவு நன்மை தரவில்லை எதிலும் ஒரு கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும் குரு மற்றும் சனி பெரிய கெடுதல்கள் தரவில்லை என்றாலும் சில உபத்திரவங்கள் உண்டாக்குவார் உத்யோகத்தில் ஜீவன வகையில் ஒரு மந்த நிலை இருந்து கொண்டிருக்கும் பொதுவில் கேது மற்றும் சுக்கிரன் புதன் இவர்கள் வழக்கு வியாதி மற்றும் எதிர்பாராத செலவினங்களை தருவர் அதேபோல் உற்ற நண்பர்கள் உறவுகள் இவர்களிடம் விரோதம் உண்டாகும் புதிய முயற்சிகள் ஓரளவு பலன் தரும் மற்றபடி கொஞ்சம் கவனமாக இருந்தாள் இந்த மாதத்தை சமாளித்து விடலாம் பெரிய தொந்தரவுகள் இல்லை என்றாலும் மனதில் ஒரு பயம் ஏற்படலாம் கவனம் தேவை

 அஸ்வினி:  உங்கள் நட்சத்திர நாதர் கேது பகவான் அவ்வளவு நன்மையை தருவதாக இல்லை எனினும் செவ்வாயும் சூரியனும் கலந்து நன்மைகளை தருவதால் இந்த மாதம் உங்களுக்கு கொஞ்சம் ஏற்றம் இருக்கும் பொதுவாக இந்த மாதம் சுமாரான பலனை தரும் எதிர்பார்ப்புகள் கடும் முயற்சிக்கு பின் நிறைவேறும் உணவு வகையில் கவனம் தேவை அதேபோல் குடும்பத்தில் சில சச்சரவுகள் இருந்து கொண்டிருக்கும் விட்டுக்கொடுத்து செல்வது சிக்கனமாக இருத்தல் இவை ஓரளவு நன்மை தரும் இந்த மாதம் உங்களுக்கு சுமாரான மாதம் எதிலும் யோசித்து பெரியோர்களை ஆலோசித்தும் செயல்படுவது நன்மை தரும்

சந்திராஷ்டமம்:  09.10.2021 இரவு 9.05 மணி முதல் 10.10. 2021 இரவு 7.26 மணி வரை

வணங்க வேண்டிய தெய்வம் :  பிள்ளையார் மற்றும் மகாலட்சுமி அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுவது அல்லது வீட்டிலேயே விளக்கேற்றி விநாயகர் அகவல் லட்சுமி சுலோகங்கள் சொல்வது நன்மை தரும் முடிந்த வரையில் தான தர்மங்களை அதிகமாக செய்யுங்கள்

பரணி உங்கள் நட்சத்திர அதிபதி சுக்கிரன் அவ்வளவு நன்மை தரவில்லை எனினும் கெடுதல் செய்யவில்லை பொருளாதார விஷயத்தில் ஓரளவு நன்மை உண்டாகும் பெரும்பாலும் செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும் சூரியன் மற்றும் செவ்வாய் உங்கள் ஜீவனத்தை நன்றாகும் வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் சொந்த தொழிலில் விஸ்தாரணம் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை கொஞ்சம் கவனம் தேவை பெரியோர்களிடம் ஆலோசனை பெற்று செயல்படுவது நன்மை தரும் இந்த மாதம் திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்வுகள் உண்டாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அதே நேரம்  விரயமும் இருக்கும் பொதுவில் பரவாயில்லை என்று சொல்லும்படியான மாதம்

 சந்திராஷ்டமம்: 10.10.2021 இரவு 07.26 மணி முதல் 11.10.2021 மாலை 05.48 மணி வரை

வணங்க வேண்டிய தெய்வம் சத்ய நாராயண பெருமாள் மற்றும் எல்லை தேவதைகள் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுவது மனதில் தெய்வ சிந்தனை இருத்தி செயல்படுவது நன்மை தரும் எல்லை தெய்வங்கள் அய்யனார் காளி துர்க்கை போன்ற கடவுள்களை வழிபடுவது மிகுந்த நல்ல பலனை தரும் முடிந்தவரையில் அன்னதானம் செய்யுங்கள்

கார்த்திகை :  உங்கள்  நட்சத்திர நாதன் ராசிநாதன் கன்னியில் பலமாக  இருப்பதால் மேலும் செவ்வாயுடன் சேர்ந்து நல்ல பலனை அள்ளித் தருகின்றனர் உங்கள் முயற்சிகள் மிகுந்த வெற்றியை தரும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வழக்குகள் முடிவுக்கு வரும் சாதகமாக இருக்கும் புதிய வேலை முயற்சிகள் நன்மை தரும் தொழில் விஸ்தாரணம்  நன்றாக இருக்கும் ஜீவன வகையில் தாராள பணப்புழக்கம் இருக்கும் அதேநேரம் எதிர்பாராத செலவுகளும் நண்பர்கள் உறவுகளால் தொல்லையும் இருக்கும் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும் இந்த மாதம் உங்களுக்கு நன்றாக இருக்கும்

 சந்திராஷ்டமம்: 11.10.2021 மாலை 05.48 மணி முதல் 12.10.2021 மாலை 4.15 மணி வரை

 வணங்கவேண்டிய தெய்வம்:  சூரிய பகவான் மற்றும் சிவன் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு திங்கள்தோறும் அபிஷேகத்துக்கு பால் வாங்கி தாருங்கள் புராதன கோயில்கள் ஒருவேளை விளக்கு எரிய உதவி செய்யுங்கள் முடிந்தவரை தான தர்மங்கள் செய்யுங்கள்

ரிஷபம் கார்த்திகை 2,3, 4,,  ரோகிணி , மிருகசீரிடம் 1,2  பாதம் முடிய :

இந்த மாதம் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் அக்டோபர் 2 முதல் ஏழாம் வீட்டில் சஞ்சரித்து ஓரளவுக்கு நன்மை தருகிறார் அதேபோல் ஆரம்பம் முதல் புதன் நன்மை செய்கிறார் மற்ற குரு சனி கெடுதல் செய்யவில்லை மற்ற கிரகங்கள் கெடுதல் செய்கிறது. அதனால் ஒரு கலந்த பலனை பார்க்கலாம் பொருளாதாரம் வரவும் செலவும் சரியாக இருக்கும் உறவினர்கள் நண்பர்கள் மூலம் தொல்லைகள் இருக்கும். எப்பொழுதும் பெரியோர்கள் ஆலோசனை படி நடப்பது நன்மை தரும் யோசித்து செயல்படுவது நல்லது சிக்கனம் அவசியம் பணப்புழக்கம் ஓரளவு நன்றாக இருக்கும் வெளியூர் பயணங்கள் நன்மை தரலாம் பொதுவில் ஏழில் கேது ஜென்மத்தில் ராகு மற்றும் ஐந்தில் சூரியன் செவ்வாய் இவர்கள் மனைவி குழந்தைகள் பெற்றோர்கள் இவர்கள் மூலம் வைத்தியச் செலவை உண்டாக்கலாம் அல்லது எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம் பொறுமையும் நிதானமும் நன்மை அதிகரிக்கச் செய்யும் இந்த மாதம் சுமாரான மாதம் உங்கள் ஜாதகம் கிரக வலிமை நன்றாக இருந்தால் பெரிய கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை கவனம் தேவை

கார்த்திகை

 உங்கள் நட்சத்திர நாதர் சூரியன் ஐந்தில் இருந்தாலும் வலுவாக இல்லை என்பதால் பெரிய நன்மைகள் இல்லை இருந்தாலும் சுக்கிரன் மற்றும் புதன் அதிக நன்மைகள் தருகிறார்கள் அதேபோல் குருபகவான் & சனிபகவான் பார்வையால் லாபத்தை தருகிறார்கள், முயற்சிகளில் ஓரளவு நன்மை உண்டாகும் அடுத்தவருடன் மோதல் போக்கை கைவிடுவது நன்மைதரும் அதே போல் எதிலும் யோசித்தும் பெரியோர்கள் ஆலோசனைப் படியும் நடப்பதும் உத்தியோகம் சொந்த தொழில் செய்யுமிடத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துப் போவதும் குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நன்மை தரும் இந்த மாதம் பரவாயில்லை என்று சொல்லும் படியாக இருக்கிறது

சந்திராஷ்டமம்: 11.10.2021 மாலை 05.48 மணி முதல் 12.10.2021 மாலை 4.15 மணி வரை

 வணங்கவேண்டிய தெய்வம்:  சூரிய பகவான் மற்றும் சிவன் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு திங்கள்தோறும் அபிஷேகத்துக்கு பால் வாங்கி தாருங்கள் புராதன கோயில்கள் ஒருவேளை விளக்கு எரிய உதவி செய்யுங்கள் முடிந்தவரை தான தர்மங்கள் செய்யுங்கள்

ரோகினி

உங்கள் நட்சத்திர நாதன் சந்திரன் சஞ்சாரம் பெரிய அளவில் நன்மை செய்யவில்லை அதேபோல் சுக்கிரன் மற்றும் புதன் தவிர மற்ற கிரகங்கள் நன்மை செய்யவில்லை கெடுதல்களை செய்கிறது கவனத்துடன் செயல்பட வேண்டும் பொருளாதாரம் ஓரளவு நன்றாக இருக்கும் இருந்தாலும் விரயமும் கூடவே இருக்கும் புதிய முயற்சிகள் இழுபறிக்குப் பின் நிறைவேறலாம் கூடுமானவரை அடுத்தவருடன் வாதி பிரதிவாதம் வேண்டாம் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் அல்லது அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதை நிறுத்தினாலும் நன்மைகள் அதிகம் இருக்கும் பொதுவாக இந்த மாதம் பணவரவு நன்றாக இருந்தாலும் அல்லது எதிர்பாராத செலவுகளும் இருந்து உங்களுக்கு குடும்ப சுமை அதிகரிக்க செய்யும் கொஞ்சம் கவனமாக நடப்பது நல்லது

சந்திராஷ்டமம்: 12.10.2021 மாலை 4 15 மணி முதல் 13.10.2021 பிற்பகல் 2. 52 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  அம்பாள் காளி மனதில் அம்மனை தியானித்து கோயிலுக்கு அல்லது வீட்டிலோ விளக்கேற்றி அவள் நாமத்தை சொல்வது நன்மை தரும் அன்னதானம் வஸ்திர தானம் குழந்தைகளை படிக்க வைப்பது போன்ற தர்மங்களைச் செய்தால் கெடுதல்கள் மிகுந்த அளவில் குறைந்து விடும் தெய்வம் உங்களுக்கு துணை நிற்கிறது

மிருகசீரிடம்:  உங்கள் நட்சத்திர நாதர் செவ்வாய் ஐந்தில் இருக்கிறார் இது அவ்வளவு நல்ல பலனைத் தராது குழந்தைகள் மூலம் செலவுகளும் மன வருத்தங்களும் கொடுக்கும் அதேநேரம் செவ்வாயின் பார்வை ஓரளவு ஜீவன வகையில் நன்மை தரும் மற்றும் சூரியன், செவ்வாயின் லாப பார்வை புதிய முயற்சிகளை வெற்றி அடைய செய்யும் உங்களது ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால், குருவின் பார்வை நன்மை தரும் எதிர்பாராத செலவுகள் வந்து சேமிப்பை கரையச் செய்யும் எதிலும் கவனமும் நிதானமும் பெரியவர்கள் ஆலோசனைப்படி நடப்பதும் சிரமங்களை குறைக்கும் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வது நன்மை தரும் இந்த மாதம் சுமாரான மாதம்

சந்திராஷ்டமம்: 13.10.2021 பிற்பகல் 02.52 மணி முதல், 14.10.2021 பிற்பகல் 01.43 மணி வரை

 வணங்கவேண்டிய தெய்வம்:  பாலதண்டாயுதபாணி முருகக்கடவுள் சஷ்டி கவசம் படிப்பது செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு விரதம் இருப்பது வேல்மாறல் படிப்பது நல்லது அதேபோல் முடிந்தவரை தான தர்மங்களை செய்வது நன்மை தரும் முருக நாமம் நிதானத்தை தரும்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4,  திருவாதிரை,  புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய:

உங்கள் ராசிநாதன் புதன் ஓரளவுக்கு நல்ல பலனைத் தருகிறார் ராகு கேது மற்றும் சுக்கிரன் பெரும்பாலும் நன்மை அதிகம் செய்கிறார்கள். அதேநேரம் மற்ற கிரகங்கள் பெரிய நன்மை தரவில்லை சந்திரன் மீனம் மேஷம் மிதுணம் தனுர் ராசிகளில் சஞ்சரிக்கும் போது நன்மை உண்டாகும் பொருளாதாரம் கொஞ்சம் ஏற்றம் பெறும் பணப்புழக்கம் ஓரளவு நன்றாக இருக்கும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் நன்மை உண்டாகும் உங்கள் எழுத்தாற்றல் பேச்சாற்றல் நல்ல பலனை தரும் புதிய முயற்சிகள் ஓரளவு வெற்றி பெறும் பெரிய பொருளாதார சிக்கல்கள் இருக்காது என்றாலும் நிதானம் கவனம் கொண்டு செயல்படுவது நன்மை தரும் மேலும் புதிய உத்தியோகம் அல்லது தொழில் விரிவாக்கம் செய்ய முயற்சிப்பவர்கள் அடுத்த மாதம் தள்ளிப் போடலாம் அது நன்மையை உண்டாக்கும் இந்த மாதம் கடும் முயற்சிக்கு பின்னரே வெற்றிகள் உண்டாகும் இல்லத்தில் உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து அனுசரித்து போவது நல்லது. பொது இடங்களில் வாக்குவாதம் வேண்டாம். சுக்கிரனால்  குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும் இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடப்பதற்கு செய்யும் முயற்சிகள் வெற்றி தரும் வரும் மாதங்களில் நன்மை கிடைக்கும் படி ராகுவும் கேதுவும் இந்த மாதம் செயல்படுகின்றனர் வியாதிகள் குறைய ஆரம்பிக்கும் மன அழுத்தம் குறையும் பெரும்பாலும் நீங்கள் நகைச்சுவை உணர்வும் கற்பனையும் கொண்டிருப்பதால் கஷ்டங்களை எளிதாக எதிர்கொண்டு ஜெயித்து விடுவீர்கள் இந்த மாதம் சுமாரான மாதம்

மிருகசீரிடம் உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாய் பார்வையால் நன்மை தருகிறார் நாலாம் வீட்டில் இருப்பதால் வாகன சுகம் தாயார் உடல்நிலை முன்னேற்றம் என்று நன்மைகள் அதிகம் இருக்கும் வீடு நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் சிலருக்கு புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும் இடமாற்றமும் உண்டாகும் பெரும்பாலும் ராகு கேது சுக்கிரன் இவர்கள் அதிக நன்மை தருகிறார்கள் மற்ற கிரகங்கள் அவ்வளவு நன்மை செய்யவில்லை எதிலும் நிதானம் கவனம் பெரியோர் ஆலோசனை இவற்றைக்கொண்டு நடப்பது நன்மை தரும் இந்த மாதம் சிக்கனமாக இருந்தால் சேமிப்பு கூட வழி உண்டாகும் அதே நேரம் சில எதிர்பாராத செலவினங்கள் மற்றும் ஜீவன வகையில் குறைபாடுகள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது பொதுவில் சுமாரான மாதம்

சந்திராஷ்டமம்: 13.10.2021 பிற்பகல் 02.52 மணி முதல், 14.10.2021 பிற்பகல் 01.43 மணி வரை

 வணங்கவேண்டிய தெய்வம்:  பாலதண்டாயுதபாணி முருகக்கடவுள் சஷ்டி கவசம் படிப்பது செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு விரதம் இருப்பது வேல்மாறல் படிப்பது நல்லது அதேபோல் முடிந்தவரை தான தர்மங்களை செய்வது நன்மை தரும் முருக நாமம் நிதானத்தை தரும்

திருவாதிரை:  உங்கள் நட்சத்திர நாதன் ராகு பகவான் மற்றும் கேது சுக்கிரன் இவர்கள் அதிக அளவில் நன்மையை செய்கின்றனர் அதனால் பொருளாதார ஏற்றம் நன்றாக இருக்கும் புதிய வேலை முயற்சிகள் வெளிநாட்டு வாசம் இவை வெற்றி தரும் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் கல்வியில் வளர்ச்சி இருக்கும் பொதுவாக இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் மற்ற கிரகங்கள் நன்மை தரவில்லை என்றாலும் பெரிய கெடுதல்கள் எதுவும் இல்லை இந்த மாதம் உங்களுக்கு நன்மை அதிகம் தருவதால் கவலை வேண்டாம் அதேநேரம் பொறுமையும் நிதானமும் சிக்கனமும் வரும் மாதங்களில் தொல்லையை குறைக்கும்

சந்திராஷ்டமம்:  மாதம் துவக்கம் முதல் 18.09.2021 அதிகாலை 05.044 மணி வரை மற்றும் 14.10.2021 பிற்பகல் 01.43 மணி முதல் 15.10.2021 பிற்பகல் 12 52 மணி வரை

வணங்க வேண்டிய தெய்வம்:  துர்க்கை சாஸ்தா எல்லை தெய்வங்கள் அருகிலுள்ள கோயில்களில் ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும் அல்லது வீட்டிலேயே துர்க்கை சாதா போன்ற படங்களுக்கு விளக்கேற்றி ஸ்லோகங்கள் சொல்வது நன்மை தரும் மேலும் முடிந்தவரை தான தர்மங்கள் செய்வது நல்லது

புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய:  உங்கள் நட்சத்திராதிபதி குரு பகவான் பக்ரீத் எட்டில் இருக்கிறார் ஆனால் ஐந்தாம் பார்வையாக ராசியைப் பார்க்கிறார் இது ஓரளவுக்கு நன்மைதரும் அதேபோல் ராகு கேது சுக்கிரன் அதிக நன்மை தருவதால் பணப்புழக்கம் தாராளம் சுபச் செலவுகளும் இருக்கும் மற்றும் ஜீவன வகையில் உத்யோகத்தில் சொந்த தொழிலில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும் புதிய முயற்சிகள் ஓரளவு சாதகமாக இருக்கும் அதேநேரம் வார்த்தை விடுவதில் கவனம் தேவை எவருடனும் வாக்குவாதம் செய்வது மன சங்கடத்தை தரும் நிதானம் பொறுமை மௌனம் இவை இந்த மாதத்தை உங்களுக்கு நன்மை தருவதாக மாற்றும் கவனம் தேவை

சந்திராஷ்டமம்: 18.09.2021 அதிகாலை 05.04 மணி முதல், 19.09.2021 அதிகாலை 04.42 மணி வரை மற்றும் 15.10.2021 பிற்பகல் 12.52 மணி முதல், 16.10.2021 பிற்பகல் 12.24 மணி வரை

வணங்க வேண்டிய தெய்வம்:  தக்ஷிணாமூர்த்தி மற்றும் வெங்கடாஜலபதி அருகில் உள்ள கோயில்களில் விளக்கேற்றி ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுவது நன்மை தரும் வீட்டிலேயே காலையிலும் இரவிலும் நாம ஜபம் செய்தால் மன வலிமை பெறும் முடிந்த வரையில் தான தர்மங்களை செய்வது நன்மையை உண்டாக்கும்.

கடகம்: புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் 7ல் வலுவாய். சூரியன் செவ்வாய், புதன் சுக்ரன் ராகு இவர்கள் மிகுந்த நன்மைகளை செய்கின்றனர். குருவும் 7ல் வக்ரியாக பார்வையான் நன்மையும் கெடுதல்களை தடுப்பவராயும் இருக்கிறார். பெரும்பாலான கிரஹ நிலைகள் சாதமாய் இருப்பதால் நினைத்த காரியங்களில் வெற்றியும் முன்னேற்றமும் இருக்கும். பணவரவு தாராளம், வீடு வாகன யோகங்கள் உண்டாகும், இல்லத்தில் திருமணம் குழந்தை பாக்கியம் போன்று சுப நிகழ்வுகள் நடக்கும். மனதில் குதூகலம் நிறைந்து இருக்கும். உத்தியோகத்தில் உயர்வு அதனுடன் கூடிய மாற்றம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்கள், வெளிநாட்டு வேலை படிப்புக்கு முயற்சிப்பவர்கள் எண்ணம் ஈடேறும். நண்பர்கள் உறவுகள் உதவுவார்கள். அரசாங்க அனுகூலம் உண்டு. சொந்த தொழில் விஸ்தாரண முயற்சியும் நன்மை தரும். பொதுவில் பெரிய கஷ்டங்கள் ஏதுமில்லை என்றாலும் கேது 5ல் இருப்பதும், மாத பிற்பகுதியில் சுக்ரன் 5ல் வருவதும் குழந்தை ஆரோக்கியம், கல்வி, உத்தியோகம், உடல் ஆரோக்கியம் இவற்றில் செலவும் மன அழுத்தமும் இருக்கும். ஆனாலும் நல்லதாய் முடியும். தீர்த்த யாத்திரைகள் கேளிக்கைகள் என்று இந்த மாதம் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

புனர்பூசம் 4ம் பாதம் : நக்ஷத்திர அதிபதி குருபகவான் வக்ரியாக 7ல் இருப்பது வாழ்க்கை துணைவர், கூட்டாளிகளால் சிறு சிறு சலசலப்புகள் இருந்து கொண்டிருந்தாலும் 5,9 பார்வைகளால் நன்மை செய்வதால் பாதிப்பு குறைகிறது. மேலும் ராகு + மற்ற கிரஹ நிலைகள் சாதகம் என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், படிப்பில் உத்வேகம் ஏற்படும், சொந்த தொழில் வளம் பெறும் திருமணம் கைகூடும், சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். நல்ல மாதம் இது.

 சந்திராஷ்டமம்: 18.09.2021 அதிகாலை 05.04 மணி முதல், 19.09.2021 அதிகாலை 04.42 மணி வரை மற்றும் 15.10.2021 பிற்பகல் 12.52 மணி முதல், 16.10.2021 பிற்பகல் 12.24 மணி வரை

வணங்க வேண்டிய தெய்வம்:  தக்ஷிணாமூர்த்தி மற்றும் வெங்கடாஜலபதி அருகில் உள்ள கோயில்களில் விளக்கேற்றி ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுவது நன்மை தரும் வீட்டிலேயே காலையிலும் இரவிலும் நாம ஜபம் செய்தால் மன வலிமை பெறும் முடிந்த வரையில் தான தர்மங்களை செய்வது நன்மையை உண்டாக்கும்.

பூசம்: உங்கள் நக்ஷத்திரநாதர் சனிபகவான் வக்ரியாக 7ல் இருக்கிறார். இது ஒருவித நன்மையை தரும் கெடுதலை குறைக்கும் வலுவாக இருப்பதால் வாழ்க்கை துணைவரால் ஆதாயம் உண்டாகும். மேலும் பெரும்பாலான கிரஹங்கள் நன்மையே அதிகம் செய்வதால் உங்கள் செயல்களில் வெற்றி கிட்டும். மகிழ்ச்சி அதிகரிக்கும் பணவரவு தாராளம், கேது மட்டும் உடல் ஆரோக்கியம், குழந்தையால் செலவு, உத்தியோகத்தில்/சொந்த தொழிலில் மன அழுத்தம் ஏற்படுதல் என இருக்கும். வீடு வாகன யோகம், இடமாற்றம் வருமானம் பெருகுதல், இல்லத்தில் சுப நிகழ்வுகள் திருமணம் கைகூடுதல் என்று நன்மைகள் அதிகம் நடப்பதால் கவலை வேண்டாம். நல்ல மாதம்

சந்திராஷ்டமம்: 19.09.2021 அதிகாலை 04.42மணி முதல் 20.09.2021 அதிகாலை 04.46 மணி வரை, மற்றும் 16.10.2021 பிற்பகல் 12.24 மணி முதல் 17.10.2021 பிற்பகல் 12.22 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர், ராமர். ராம நாமம் சொல்வது கோயிலில் விளக்கேற்றுவது, மாற்று திறனாளிகள், வயோதிகர்களுக்கு சரீர உதவி, அன்னதானம் போன்றவை நன்மை தரும்.

ஆயில்யம்: உங்கள் நக்ஷத்திர நாதர் புதன் 22.09.2021 முதல் 02.10.21 வரை துலாத்தில் சுக்ரனுடன் சஞ்சாரம் வாகனம், வீடு பணவரவு என தருகிறார். மற்ற கிரஹங்கள் உங்கள் முயற்சிக்கு வெற்றியை தரும் வகையில் செயல்படுகின்றனர். கேது மட்டும் உடல் ஆரோக்கியம் புகழ் கெடுதல் மன அழுத்தம் என கொடுப்பார் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். விருந்து கேளிக்கைகள் உல்லாச பயணம் என மகிழ்ச்சியை தரும் வகையில் இந்த மாதம் அமைகிறது. வாக்குவாதம் வேண்டாம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும்.

சந்திராஷ்டமம்: 20.09.21 அதிகாலை 04.46 மணி முதல் 21.09.21 அதிகாலை 05.20 மணி வரை, மற்றும் 17.10.21 பிற்பகல் 12.22 மணி முதல் 18.10.2021 பிற்பகல் 12.50 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன் மற்றும் குல தெய்வம் அருகில் கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள். ஏழைகளுக்கு அன்னதானம் ஏழைகுழந்தைகள் படிக்க உதவி என செய்யுங்கள் நன்மை அதிகரிக்கும்.

சிம்மம்: மஹம், பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய:

 ராசிநாதர் சூரியன் ராசிக்கு 2ல் செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார். பெரிய நன்மை செய்யவில்லை என்றாலும் கெடுதலை செய்யவில்லை. புதன் சுக்ரன் ராகு நன்மை தருகின்றனர் அது போல 6ல் இருக்கும் சனிபகவானும் கடன் வியாதி எதிரி தொல்லைகளை நீக்குகிறார். 6ல் வக்ரியாக இருக்கும் குரு பார்வையால் பணவரவு, சில திட்டங்கள் நிறைவேறுதல் என செய்கிறார். பொதுவில் பணப்புழக்கம் ஓரளவே கடும் முயற்சிக்கு பின்னரே வெற்றி என்ற நிலையில் மாதம் இருக்கிறது உத்தியோகம், சொந்த தொழில் போன்றவர்கள் கடும் உழைப்பை தரவேண்டும் இருந்தாலும் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் பணவரவு தாராளமாக இருக்கும். ராகு 10ல் இரட்டை வருவாய் தரும் செயலை செய்தாலும் 4ல் கேது அதற்கு செலவை ரெடியாக வைத்திருப்பார் தாயார் வழியில் வைத்திய செலவு, வீடு வாகன வகையில் பழுது செலவு என இருக்கும். சேமிக்கும் பழக்கம் இருந்தால் அது உதவியை செய்யும். சுக்ரன் ஆடம்பர உடைகள் ஆபரணங்கள், விருந்து கேளிக்கைகள் என்று ஒருபுறம் சுகத்தை தரும். வீட்டில் திருமணம், குழந்தை பாக்கியம் என செலவுகளும் இருக்கும். பொதுவில் வரவும் செலவும் சம அளவில் இருக்கும். அதே நேரம் புதன் மறதியினால் மன அழுத்தம் உண்டாதலும் 2ல் செவ்வாய் மன உளைச்சல் தரும் செயல்கள் குடும்பத்தில் சில சச்சரவுகளை கொடுக்கும் வாக்குவாதங்களை தவிர்ப்பது அமைதி காப்பது நன்மை தரும் பரவாயில்லை என சொல்லும் மாதம்.

மகம்: உங்கள் நக்ஷத்திராதிபதி கேது விரயங்களையும் செலவுகளையும் தருகிறது தாய்வழி உறவுகள் மூலம் வருத்தங்கள், தாயார் ஆரோக்கிய செலவு என தரும். இருந்தாலும் ராகு சுக்ரன், சனி பலவித நன்மைகள் செய்வதால் உத்தியோகத்தில் முன்னேற்றம், சொந்த தொழிலில் வளர்ச்சி என இருக்கும். செலவும் அதே அளவு இருக்கும். கலவையாக நன்மை தீமை என இருக்கும். சேமிக்கும் பழக்கத்தை கொள்ளவும்.

சந்திராஷ்டமம்: 20.09.21 அதிகாலை 05.20 மணி முதல் 22.09.2021 காலை 06.25 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: பரமேஸ்வரன், ஓம் நமசிவாய சொல்லி கொண்டிருக்க வேண்டும் திங்கள் கிழமைகளில் சிவன் கோயிலுக்கு அபிஷேகத்துக்கு பால் கொடுக்கலாம் ப்ரதோஷ காலங்களில் நந்தி தரிசனம் செய்வது நல்லது முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள்.

பூரம்: உங்கள் நக்ஷத்திராதிபதி முற்பகுதியில் 3ம் இடம் பிற்பகுதி 4ம் இடம் என சஞ்சரித்தாலும் பணவரவை தாராளம், விருந்து கேளிக்கைகள், திருமணம் என்று சுப செலவுகளும் இருக்கும். உத்தியோகத்தில் கடும் உழைப்பு குறைந்த வருமானம் என இருக்கும். சொந்த தொழிலும் சுமாராக இருக்கும் அரசு உதவிகள் பெறுவது தாமதம் ஆகும். குடும்பத்தில் குதூகலம் இருக்கும். இருந்தாலும் தாயார் அல்லது குடும்ப அங்கத்தினர்கள் ஆரோக்கிய பாதிப்பு வைத்திய செலவுகளும் இருக்கும். பொதுவில் நன்மைகள் அதிகம் பாதிப்புகள் குறைவு என்ற அளவில் இந்த மாதம் இருக்கும் புது முயற்சிகளை யோசித்து ஆலோசனை பெற்று செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 22.09.21 காலை 06.25 மணி முதல் 23.09.21 காலை 8.00 மணி வரை

வணங்கவேண்டியதெய்வம்: காஞ்சி காமாட்சி, அம்பாள் அருகில் கோயிலுக்கு சென்று விளக்கேற்றுவது, தான தர்மங்களை முடிந்த அளவு செய்வது நன்மை தரும். ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்யவும்

உத்திரம் 1ம் பாதம்: உங்கள் நக்ஷத்திர+ராசியதிபதி 2ம் வீட்டில் சுமாரான பலனை தருகிறார். ராகு,சுக்ரன்,புதன் மற்றும் சனி உங்களுக்கு உதவுகிறார்கள் முயற்சிகள் வெற்றி அடையும், பணவரவு தாராளம், உத்தியோகத்தில் உயர்வு இடமாற்றம் ஓரளவு நன்மை தரும் சொந்த தொழிலில் லாபம் வரும் அதே நேரம் செலவுகளும் கையை கடிக்கும் கவனம் தேவை, கோபத்தை குறைப்பது வாக்குவாதம் தவிர்ப்பது நன்மை தரும். பெரியோர்களின் ஆலோசனை நன்மை தரும். தாய் வழியில் சில செலவுகள் இருக்கும். பரவாயில்லை என சொல்லும் மாதம்

சந்திராஷ்டமம்: 23.09.2021 காலை 08.00 மணி முதல் 24.09.2021 காலை 09.58 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: சூரிய நாராயணர் காலையில் சூரிய வழிபாடும். ஞாயிறுகளில் நவக்ரஹத்தில் சூரியனுக்கு அர்ச்சனை செய்வது விளக்கேற்றுவது முடிந்தவரையில் தான தர்மங்கள் செய்வது நன்மை தரும்.

கன்னி: உத்திரம் 2,3,4 ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய

ராசிநாதர் புதன் செப்டம்பர் 22க்கு பின் துலாம் ராசி செல்கிறார். ராசியில் சூரியன் செவ்வாய், இருவரும் உடல் உபாதைகள், உஷ்ண கோளாறு மனதில் ஒரு அச்சம் என்று தருகின்றனர். அக்டோபர் 2ல் புதன்,சுக்ரன் விருச்சிகராசி சஞ்சாரம் ஓரளவு பரவாயில்லை ஆடை ஆபரண சேர்க்கை, பொருள்வரவு, விருந்து கேளிக்கைகள், பண வரவு என்று இருக்கும். அதே நேரம் மற்ற கிரஹங்கள் அவ்வளவு நன்மை தரவில்லை. எதிலும் ஒரு முன்யோசனை கொண்டு செயல்படுவது நல்லது. 3ல் கேது மகிழ்ச்சி தருகிறார். உத்தியோகத்தில் மாற்றம், பதவி, சம்பள உயர்வு என்று இருக்கும் புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் சொந்த தொழில் செய்வோர் லாபத்தை பார்ப்பார்கள். அதேநேரம் 9ல் ராகு குடும்பத்தில் வைத்திய செலவுகள் போல் தருவார். கவனம் தேவை, விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது இந்த மாதம் 50-50 என்ற அளவில் இருக்கும்.

உத்திரம் 2,3,4 பாதங்கள் : நக்ஷத்திர நாதர் சூரியன் ராசியில் உஷ்ண சம்பந்த வியாதிகள் தருவார், செவ்வாயும் மன அழுத்தம் தருகிறார். கேது, சுக்ரன், புதன் நன்மைகளை செய்கிறார்கள் பணவரவு தாராளம், உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சனி 5ல் இருந்து அதிகார பாதிப்பும் தருவார் இடமாற்றம் நல்ல வேலை என்றும் தருகிறார். குரு பார்வையும் நன்று. சொந்த தொழில் செய்வோர் அரசாங்க வங்கி உதவிகள் கிடைப்பது இழுபறியாகும் பொதுவில் கவனமுடன் செயல்படுவதும், விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வதும் நலம் தரும். சுமார் மாதம்.

சந்திராஷ்டமம்: 23.09.2021 காலை 08.00 மணி முதல் 24.09.2021 காலை 09.58 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: சூரிய நாராயணர் காலையில் சூரிய வழிபாடும். ஞாயிறுகளில் நவக்ரஹத்தில் சூரியனுக்கு அர்ச்சனை செய்வது விளக்கேற்றுவது முடிந்தவரையில் தான தர்மங்கள் செய்வது நன்மை தரும்.

ஹஸ்தம் : கேது,சுக்ரன், புதன் உற்சாகத்தையும் பணவரவையும் உத்தியோகம் சொந்த தொழிலில் முன்னேற்றத்தையும் தருவதும், வீடுவாகன யோகம், விருந்து கேளிக்கைகள் என்று மகிழ்ச்சியும் தருவது பெரும்பாலும் நன்மை என்றே இருக்கும் அதேநேரம் நக்ஷத்திராதிபதி மாத ஆரம்பம் அன்று 5ல் சனி, குருவுடன் ஒருவித சஞ்சலம் தருவார், சூரியன் செவ்வாய் உஷ்ணம், கண், தலைவலி போன்ற பாதிப்புகளையும் ராகு பெற்றோர் வைத்திய செலவுகளையும் தரும். குடும்பத்தில் சலசலப்பு இருக்கும். கவனம் தேவை பொதுவில் நன்மை அதிகம்.

சந்திராஷ்டமம்: 24.09.21 காலை 09.58 மணி முதல் 25.09.21 பிற்பகல் 12.16 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: நின்ற திருக்கோல பெருமாள், உப்பிலியப்பன் கோயிலுக்கு சென்று வழிபடுவது விளக்கேற்றுவது விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது, ஏழை எளியோருடைய தேவைகளை பூர்த்தி செய்வது நன்மைகள் தரும்.

சித்திரை 1,2 பாதங்கள்: நக்ஷத்திர அதிபதி செவ்வாய் ராசியில் பரவாயில்லை என்பதாக பலனை தந்தாலும், கேது, சுக்ரன், புதன் தரும் நன்மைகள் அதிகம், எதிர்பாரா பணவரவு, கடன், வியாதி தொல்லைகள் நீங்குதல், உழைப்பவரான உங்களுக்கு உத்தியோகத்தில் நல்ல நிலை, புதிய வேலை கிடைத்தல், பணப்புழக்கம் தாராளம், விருந்து கேளிக்கைகள் மகிழ்ச்சி பயணங்கள் என்றபடி இருக்கும். சனி குரு பார்வையில் நற்பலன்கள் தருகின்றனர். பெரிய கெடுதல் இல்லை எனினும் சூரியன் வியாதி மன கலக்கம், ராகு உறவுகளால் வைத்திய செலவு, வழக்குகள் என்று கொடுப்பதால் கவனம் தேவை. நன்மை அதிகம் இருக்கும் மாதம்.

சந்திராஷ்டமம்: 25.09.21 பிற்பகல் 12.16 மணி முதல் 26.09.2021 பிற்பகல் 02.46 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: திருத்தணி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோயில் சென்று விளக்கேற்றுவது சிறந்த பலனை தரும். சஷ்டிகவசம்,வேல்மாறல் படிப்பதும், முடிந்த அளவு தான தர்மங்களை செய்வதும் நன்மைகளை அதிகரிக்க செய்யும்.

துலாம்: சித்திரை 3,4 ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய

உங்கள் ராசியதிபர் சுக்ரன் மட்டும் மாதம் முழுவதும் பலனை தருகிறார் முயற்சிகளில் வெற்றி, பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை, விருந்து கேளிக்கை, உல்லாச பயணம் என்பதாக நன்றாக இருக்கும். 4ல் சந்திரன் மாத ஆரம்பம் வீடு வாகன யோகத்தை தருகிறார். புதன் சனி, குரு மூவருமே கெடுதல் செய்யாமல் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவதால் ஜீவன வகையில் முன்னேற்றம் உண்டு. புதிய வேலை அல்லது வேலையில் இட மாற்றம் அதன் மூலம் முன்னேற்றம் என்ற நிலை இருக்கும். சொந்த தொழிலில் அந்நியர் உதவியும் வங்கி அரசு போன்றவைகளால் உதவி கிடைக்கும். அதே நேரம் 8ல் ராகு பயணத்தால் தொல்லை அடிபடுதல், 12ல் சூரியன் வியாதி வைத்திய விரயம், செவ்வாய் மன அழுத்தம் என கொடுத்து கொண்டிருக்கும் இருந்தாலும் அவர்கள் ஏறி இருக்கிற நக்ஷத்திராதிபதி சூரியன் என்பதால் அவர் பெரிய அளவில் தொந்தரவு தரவில்லை அதனால் சமாளித்து விடுவீர்கள். உழைப்பில் நல்ல பலன் உண்டு. சேமிப்பு நல்லது. பொதுவில் இந்த மாதம் உங்கள் முயற்சிகள் வெற்றிபெறும் நன்மை அதிகம்.

சித்திரை 3,4 பாதங்கள்: நக்ஷத்திராதிபதி செவ்வாய் 12ல் இருந்தாலும் பார்வையால் நன்மை 3,6,7 இடங்களை பார்ப்பது தைரியம், முன்னேற்றம், மறைமுக வருவாய், வாழ்க்கை துணைவர் மூலம் நன்மை தரும். சுக்ரனும் குரு பார்வையாலும் பண வரவை தர உத்தியோகம் சொந்த தொழில் என்று ஜீவன வகையில் ஆதாயம் இருக்கும். முயற்சிகள் வெற்றி அடையும். பயணம், ஆரோக்கியம் வகையில் கவனம் தேவை. பொதுவில் நன்மை

 சந்திராஷ்டமம்: 25.09.21 பிற்பகல் 12.16 மணி முதல் 26.09.2021 பிற்பகல் 02.46 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: திருத்தணி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோயில் சென்று விளக்கேற்றுவது சிறந்த பலனை தரும். சஷ்டிகவசம்,வேல்மாறல் படிப்பதும், முடிந்த அளவு தான தர்மங்களை செய்வதும் நன்மைகளை அதிகரிக்க செய்யும்.

ஸ்வாதி : நக்ஷத்திராதிபதி ராகு 8ல் இருந்தாலும் 7ம் இடம் நோக்கி நகர்வது மேலும் ராசியதிபதி சுக்ரன், சனி, புதன் சாதகமாக இருப்பது, குரு பார்வை ராகுமேல் அதனால் உங்கள் முயற்சிகள் வெற்றி கொஞ்சம் இழுபறிக்கு பின் என்ற நிலை. பணவரவு தாராளம், தொடர் பயணங்களால் நன்மை, குடும்பத்தில் குதூகலம், ஆடை ஆபரண சேர்க்கை விருந்து கேளிக்கைகள், எதிர்பார்த்த கடன்கள் கிடைத்தல், சிலருக்கு வீடு வாகனம் வாங்க யோகம் என்று நன்றாகவே இருக்கும் அதேநேரம் உடல் ஆரோக்கியம், குடும்ப அங்கத்தினர் ஆரோக்கியம் இவற்றில் கவனம் செலுத்துவது அவசியம். பொதுவில் நன்மை அதிகம் தரும் மாதம்.

சந்திராஷ்டமம்: 26.09.21 பிற்பகல் 02.46 மணி முதல் 27.09.21 மாலை 05.21 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: ந்ருஸிம்ஹர். விளக்கேற்றி ஸ்லோகங்கள் சொல்வது, முடிந்த அளவு அன்னதானம், வஸ்திரதானம் படிக்க உதவி போன்றவை செய்வது நன்மை தரும்.

விசாகம் 1,2,3 பாதங்கள் : நக்ஷத்திராதிபதி குரு வக்ரியாக 4ல் வக்ர சனி சந்திரனுடன், பார்வையால் பாக்கியங்களை தருகிறார். தெய்வ அனுகூலம் உண்டாகிறது, கேது சுக்ரன், புதன் சனி நன்மைகள் செய்வதால் ஜீவன வகையில் முன்னேற்றம் பணவரவு தாராளம், உத்தியோகத்தில் முன்னேற்றம், புதிய வேலை கிடைத்தல் சொந்த தொழிலில் வளர்ச்சி, விருந்து கேளிக்கைகள் பொருள் சேர்க்கை, மனதில் மகிழ்வு இல்லத்தில் சுப நிகழ்வுகள் என்று நன்றாக இருக்கும். சூரியன் செவ்வாய் ராகு வியாதி, விபத்து, எதிரி தொல்லைகள் என தருவது கொஞ்சம் மன அழுத்தம் கொடுக்கும். கவனம் தேவை வீண் வாக்குவாதம் வேண்டாம். நல்ல மாதம்.

சந்திராஷ்டமம்: 27.09.2021 மாலை 05.21 மணி முதல் 28.09.21 இரவு 07.48 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: சக்ரபாணி, சக்ரத்தாழ்வார், விளக்கேற்றி காயத்ரி 108 தடவை சொல்வது நல்லது. ஏழை எளியோருக்கு அன்னதான்ம், குழந்தைகள் படிக்க உதவி, சரிர ஒத்தாசை இயலாதோர்க்கு என செய்தால் கஷ்டங்கள் விலகும்.

விருச்சிகம்: விசாகம் 4ம்பாதம், அனுஷம், கேட்டை முடிய

 ராசிநாதர் செவ்வாய் 11ல் சூரியனுடன், 3ல் சனி, 12ல் சுக்ரன் என்று நல்ல பலனை வாரி வழங்குகிறார்கள். பொருளாதார முன்னேற்றம், தாராள பண புழக்கம், கடன் வியாதிகள் முற்றிலும் நீங்குதல், குழந்தைகளால் நன்மை, செயல்களில் வெற்றி, புதிய வேலை, வெளிநாட்டு படிப்பு தொழில் விஸ்தரிப்பு, கேட்டிருந்த வங்கி கடன், அரசு உதவிகள் தாராளமாக கிடைத்தல் என்று மகிழ்ச்சி அதிகரிக்கும். இல்லத்தில் திருமணம், சுப செலவுகள் இருக்கும். குழந்தை எதிர்பார்த்தோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு மாற்றம், வீடுவாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். ஜென்ம கேது, 7ல் ராகு, 12ல் வரும் புதன் என்று உடல் அசதி, குடும்பத்தில் சலசலப்பு உண்டாகும், வாழ்க்கை துணைவர் பெற்றோர் வகையில் வைத்திய செலவு, சிறு மன உளைச்சல் உறவுகளால் தொல்லை என்று கொஞ்சம் இருக்கும் இருந்தாலும் 3ல் சனி மனோ திடம் அதிகம் இருக்கும் சமாளித்துவிடுவீர்கள், இந்த மாதம் நன்மை அதிகம் இருப்பதால் பெரிய கஷ்டம் இல்லை

விசாகம் 4ம்பாதம் : நக்ஷ்த்திர நாதர் 3ல் இருந்து நன்மை தரவில்லை எனினும் பார்வையால் பாக்கியத்தை தருகிறார். சனி சூரியன், செவ்வாய், சுக்ரன் அதிக நன்மை செய்கிறார்கள். முயற்சிகளில் வெற்றியும் ஜீவனம் நன்றாக இருக்கும். அதே நேரம் கேது ராகு புதன் குழப்பம், வியாதி செலவு என தருவதால் கொஞ்சம் கவனம் தேவை, வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். விட்டுக்கொடுத்து அனுசரித்து போவது நல்லது. பெரும் கெடுதல்கள் இல்லை என்றாலும் யோசித்து செயல்படுவது நல்லது

சந்திராஷ்டமம்: 27.09.2021 மாலை 05.21 மணி முதல் 28.09.21 இரவு 07.48 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: சக்ரபாணி, சக்ரத்தாழ்வார், விளக்கேற்றி காயத்ரி 108 தடவை சொல்வது நல்லது. ஏழை எளியோருக்கு அன்னதான்ம், குழந்தைகள் படிக்க உதவி, சரிர ஒத்தாசை இயலாதோர்க்கு என செய்தால் கஷ்டங்கள் விலகும்.

அனுஷம்: நக்ஷத்திராதிபதி 3ல் வலுவாய் ஆட்சி, 11ல் சூரியன், செவ்வாய், 12ல் சுக்ரன் பலமாய். மிகுந்த நன்மைகள் எடுத்த செயல்கள் யாவும் வெற்றி பணவரவு தாராளம், எதிர்பார்த்திருந்த விஷயங்கள் கைகூடும், இல்லத்தில் திருமனம் போன்ற சுப செலவுகள், குழந்தை பாக்கியம், உத்தியோகத்தில் உயர்வு என நன்றாக இருக்கும், சொந்த தொழிலில் லாபம் வரும். ஆடை ஆபரண சேர்க்கை கேளிக்கை விருந்து புனித யாத்திரை என இல்லத்தில் மகிழ்ச்சி பெருகி இருக்கும். உறவுகளாலும் மகிழ்வு உண்டாகும். ஜென்ம கேது, 7ல் ராகு மற்றும் புதன் குரு அவ்வளவு நன்மை இல்லை வைத்திய செலவுகள், மன வருத்தம் பயணத்தால் காயம்படுதல் என தருவர் கவனம் தேவை வார்த்தைகளை விடுவதில் மிகுந்த கவனம் தேவை, வழக்குகள் வரலாம். பொதுவில் நல்ல மாதம் இருந்தாலும் யோசித்து செயல்படவும்

சந்திராஷ்டமம்: 28.09.21 இரவு 07.48 மணி முதல் 29.09.21 இரவு 10.02 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: ஐயப்பன் கோயிலில் விளக்கேற்றி வழிபடுவது ஸ்லோகங்கள் சொல்வது, ஏழை எளியோருக்கு அன்னதானம், படிக்க உதவுவது சரீர ஒத்தாசை என்று செய்வது நலம் தரும்.

கேட்டை: சனி, செவ்வாய்,சூரியன் சுக்ரன் நன்மைதருகிறார்கள், வளர்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் சொந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். குரு பகவான் பாக்கியத்தையும் லாபத்தையும் பார்ப்பதும் பணவரவை தாராளமாக்கும் எடுத்த செயல்கள் வெற்றி அடையும் விரும்பிய இடமாற்றம் சிலருக்கு கிடைக்கும் இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் அதே நேரம் நக்ஷத்திராதிபதி புதன் அலைச்சல் பயணக்களைப்பு எதிர்பாராசெலவுகள் என்று தருகிறார் கூடவே ஜென்ம கேது 7ல் ராகு உடல் ரீதியான படுத்தல்கள் இல்லத்தில் வியாதி வைத்திய செலவு என்று தருவதால் கவனம் தேவை பொதுவில் நன்மை அதிகம்.

சந்திராஷ்டமம்: 29.09.21 இரவு 10.02 மணி முதல் 30.09.21 இரவு 11.52 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: சத்யநாராயண பெருமாள், பௌர்னமி விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்வது பலன் தரும். முடிந்த அளவு தான தர்மம் செய்வதும் மிகுந்த நன்மை தரும்.

தனூர் : மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய

ராசிநாதர் குருபகவான் 2ல் குடும்ப ஸ்தானத்தில் சனிபகவானுடன் இழந்தவை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள், பொருளாதார வளர்ச்சி அதிகம் இருக்கும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை இருக்கும். 10ல் சூரியனும் செவ்வாயும் ஜீவன வகையில் நல்ல நிலையை கொடுக்கிறார்கள் பதவி சம்பள உயர்வு சொந்த தொழிலில் லாபம், எடுத்த செயல்களில் வெற்றி, புதுவீடு குடிபோகுதல், சிலருக்கு வாகன யோகம் கடந்த கால வழக்குகளில் சாதகம், இழந்த புகழை மீண்டும் பெறுதல், சுக்ரனால் ஆடை ஆபரண சேர்க்கை கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தல் பணப்புழக்கம் தாராளம், இல்லத்தில் சுப நிகழ்வுகளால் மகிழ்ச்சி கணவன் மனைவி ஒற்றுமை, பிள்ளைகளால் பெருமை என்று நன்றாகவே இருக்கும். ராகுவும் கடன் வியாதி எதிரி தொல்லைகளை முற்றிலுமாக நீக்குவார். இருந்தாலும் புதனும் சந்திரன் சனி இவர்கள் சிறு சிறு பிரச்சனையை தருவர் மன உளைச்சல் ப்ரயாண களைப்பு உடல் ஆரோக்கிய பாதிப்பு என இருக்கும். ஆனாலும் பெரும்பாலான கிரஹ அமைப்புகள் சாதக நிலை என்பதால் நன்மை அதிகம் இந்த மாதம்

மூலம்: நக்ஷத்திராதிபதி கேது 12ல் சுப செலவுகள், அதுபோக பெரும்பாலான கிரஹ சஞ்சாரங்கள் சாதகம் பொருளாதார உயர்வு வீடு வாகன யோகம், உத்தியோகம் சொந்த தொழிலில் முன்னேற்றம் புதிய வேலை வெளிநாடு யோகம் என்று நன்றாகவே இருக்கும். சனி புதன் கொஞ்சம் மன அழுத்தம் சஞ்சலம் தருவார் இருந்தாலும் ப்ரமாதமாக இருக்கும் இந்த மாதம்

சந்திராஷ்டமம்: 30.09.21 இரவு 11.52 மணி முதல், 01.10.21 இரவு 01.18 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: பிள்ளையார், ஞாயிற்றுக்கிழமையில் விளக்கேற்றி அகவல் படிப்பது, சூரிய நமஸ்காரம் செய்வது, ஏழை எளியோருக்கு அன்னதானம் வஸ்திரதானம், படிக்க உதவி என செய்வது நன்மை தரும்.

பூராடம்: உங்கள் நக்ஷத்திராதிபதி சுக்ரன் அக்டோபர் 2 வரை 11ல் பலமாய் எல்லாம் கிடைக்கும் இல்லத்தில் சுப நிகழ்வுகள் திருமணம் கைகூடுதல், ராசிநாதர் 2ல் குடும்பத்தில் குதூகலம், வருமானம் பெருகுதல், 10ல் சூரியன் செவ்வாய் ஜீவனம் உத்தியோகம் சொந்த தொழில் இவற்றில் கூடுதல் லாபம் எதிர்பார்ப்புகள் தேவைகள் பூர்த்தியாகுதல், வீடு வாகன யோகம் என்று நன்றாகவே இருக்கும். கேது சனி புதன் இவர்களால் பயணத்தில் விரயம், மன உளைச்சல் உறவுகளால் தொல்லை என்று இருக்கும் ஆனாலும் சமாளித்து முன்னேறுவீர்கள் நல்ல மாதம்

சந்திராஷ்டமம்: 01.10.21 இரவு 01.18 மணி முதல் 02.10.21 இரவு 02.13 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: நாச்சியார்கோயில் வஞ்சுளவல்லி தாயார், விளக்கேற்றி லக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்வது நன்மை தரும். இல்லாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம், குழந்தைகள் படிக்க உதவி இவற்றை செய்வது நன்மை தரும்.

உத்திராடம் 1ம்பாதம் : நக்ஷ்த்திராதிபதி சூரியன் 10ல் இரட்டிப்பு வருவாய், பொருளாதார ஏற்றம்.ராசி நாதர் 2ல், மேலும் சுக்ரன் செவ்வாய் 6ல் ராகு இவர்களும் அதிக நன்மை தருவதால் பணப்புழக்கம் தாராளம் உத்தியோகத்தில் உயர்வு இடமாற்றம், வீடுவாகன யோகங்கள், சொந்த தொழிலில் லாபம் என நன்றாகவே இருக்கும். வாழ்க்கை துணைவர் உடல் நிலையில் அக்கறை தேவை மற்றபடி லாப மாதம்.

சந்திராஷ்டமம்: 02.10.21 இரவு 02.13 மணி முதல் 03.12.21 இரவு 02.38 மணி வரை

வணங்கவேண்டியதெய்வம் : திருவண்ணாமலை உண்ணமுலை அம்பிகை சமேத திருஅண்ணாமலையார், கிரிவலம் வருவது நன்மை தரும் சிவ நாமம் சொல்வது நல்லபலனை தரும். முடிந்த அளவு தானதர்மங்களை செய்யவும்.

மகரம்: உத்திராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய

ராசிநாதன் ஆட்சியாக குருவுடன் சேர்ந்து வக்ரியாக 7க்குடைய சந்திரனும் மாதம் பிறக்கும் போது உடன், 9ல் செவ்வாய்,சூரியன், 10ல் சுக்ரன் புதன் என்று அதிக நன்மை 11ல் கேதுவும் பலமான நன்மையை தருகிறார். உத்தியோகத்தில் தொழிலில் ஏற்றம், பணவரவு அதிகம், எதிர்பார்த்த தேவைகள் பூர்த்தியாகுதல் கடந்தகால வழக்குகள் கடன்கள் திருதல் என்று நன்மை அதிகம். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டால் பெரிய அளவில் பிரச்சனைகள் இருக்காது. கிரஹங்களால் பெரிய கெடுதல்கள் இல்லை. இருந்தாலும் கொஞ்சம் கவனத்துடன் செயல்படுவது விட்டுக்கொடுத்து செல்வது நல்லது சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும் ஆடைஆபரண சேர்க்கை, தெய்வ தரிசனம், முயற்சிகளில் வெற்றி என்று நன்றாகவே இருக்கும். பயணத்தில் கவனமும், மறதியால் அவஸ்தை படுவதும் இருக்கும். நிதானம் பொறுமை அவசியம்.

உத்திராடம் 2,3,4 பாதங்கள்: உங்கள் நக்ஷத்திரநாதர் சூரியன் 9ல் செவ்வாயுடன் உத்தியோகம் ஜீவன வகையில் முன்னேற்றம். பொறுப்புகள் கூடுதல், தேவைகள் பூர்த்தியாகுதல், திருமணம் போன்ற சுப செலவுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி என்று இருக்கும். சொந்த தொழில் செய்வோருக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். 11ல் கேது அளப்பரிய நன்மை தருகிறார். சந்திரன் சனி இவர்கள் சிறு சிறு குழப்பத்தை கொடுத்து மன அமைதியை கெடுப்பர் கவனம் நிதானம் தேவை நல்ல மாதம் இது.

 சந்திராஷ்டமம்: 02.10.21 இரவு 02.13 மணி முதல் 03.12.21 இரவு 02.38 மணி வரை

வணங்கவேண்டியதெய்வம் : திருவண்ணாமலை உண்ணமுலை அம்பிகை சமேத திருஅண்ணாமலையார், கிரிவலம் வருவது நன்மை தரும் சிவ நாமம் சொல்வது நல்லபலனை தரும். முடிந்த அளவு தானதர்மங்களை செய்யவும்.

திருவோணம்: நக்ஷத்திராதிபதி மாதம் பிறந்த அன்று ராசியில் மேலும் சனி குரு சூரியன், செவ்வாய் சுக்ரன், கேது என்று பல கிரஹங்கள் அதிக நன்மை செய்கின்றனர். கடந்தகால திட்டங்கள் நிறைவேறும் காலம் முயற்சியில் வெற்றி உண்டாகும். தடங்கள்கள் நீங்கும். பெரிய மனிதர்கள் சந்திப்பின் மூலம் தேவைகள் பூர்த்தியாகும் பண வரவு தாராளம், வேலைக்கு, படிப்புக்கு முயற்சிப்பவர்கள் வெளிநாடு முயற்ச்சிப்பவர்களுக்கு ஏற்ற காலம் அது நிறைவேறும். உடல் நலத்தில் அக்கறை, குழந்தைகள் வாழ்க்கை துணைவர் உடல் நலத்தில் கவனம் என்று இருப்பது நலம் தரும் பயணத்தில் எச்சரிக்கை தேவை. மற்றபடி மிக சிறந்த பலன்களை தரும் மாதம் இது.

சந்திராஷ்டமம்: 03.10.21 இரவு 02.38 மணி முதல் 04.10.21 இரவு 02.36 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர் மற்றும் சுதர்ஸன சக்ரத்தாழ்வார் சனிக்கிழமைகளில் விளக்கேற்றி ஸ்லோகங்கள் சொல்லிவர, முடிந்த அளவு தர்மங்களை செய்வது வயோதிகர்கள், இயலாதவர்களுக்கு சரீர ஒத்தாசை போன்றவை நன்மை தரும்.

அவிட்டம் 1,2 பாதங்கள் : நக்ஷத்திராதிபதி செவ்வாய் 9ல் சூரியனுடன், மேலும் ராசியில் சனி, 11ல் கேது, 10ல் சுக்ரன் புதன் என்று நன்மை அதிகம் இந்த மாதம் முயற்சிகள் வெற்றி அடையும் பொருளாதார முன்னேற்றம் பணவரவு தாராளம், உத்தியோகம், சொந்த தொழில் என்று உயர்வு ஏற்படும் விரும்பிய வேலை, இடமாற்றம், வெளிநாடு யோகம் என்று நன்றாக இருக்கும். இல்லத்தில் திருமணம் சுப நிகழ்வுகளால் மகிழ்ச்சி பெருகும் வழக்குகள் சாதகம் கடன் நீங்கும். வியாதிகள் தாக்கம் இருந்தாலும் வைத்தியசெலவுகளை செவ்வாய் குறைக்கும். கடவுள் அனுகூலம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 04.10.21 இரவு 02.36 மணி முதல் 05.10.21 இரவு 02.05 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : ஸ்வாமிமலை பாலதண்டாயுதபாணி முருகன், கிரிவலம், ஸ்லோகங்கள் படிப்பது, வைத்யநாதாஷ்டகம் படிப்பது நன்மை தரும். முடிந்த அளவு அன்னதானம் வஸ்திரதானம் செய்வது நல்லது.

கும்பம் : அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய

சுக்ரனும் புதனும், கேது தவிர மற்ற கிரஹங்கள் ராசிநாதர் சனி உட்பட பெரிய நன்மைகளை தரவில்லை, சுக்ரனால் பண வரவு அதிகரிக்கும். குருவால் சுபம் கருதி செலவாகும். உழைப்புக்கேற்ற வருவாய் இருக்கும். உத்தியோகத்தில் ஜீவன வகையில் பெரிய முன்னேற்றம் இல்லை சொந்த தொழிலில் ஓரளவே அனுகூலம் வங்கி கடன், அரசாங்க உதவி கிடைப்பதில் இழுபறி இருக்கும். வாக்கு கொடுப்பதை தவிர்க்கவும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் இருந்தாலும் பணத்தேவை கடன் வாங்க தூண்டும். சூரியன் பயணத்தில் விபத்து காயம் உருவாக்கி வைத்திய செலவை கொடுப்பார். செவ்வாயும் அடிபடுதல் துயர சம்பவங்கள் என தருவார். 10ல் கேது இரட்டை வருவாய் தருகிறார்.அதனால் பொருளாதார ஏற்றம் ஏற்படும். அதேநேரம் வைத்திய செல்வுகள் இருந்து கொண்டே இருக்கும். பொதுவில் நன்மைகள் குறைவாகவும் கெடுதல்கள் அதிகமாகவும் இருப்பதால் கொஞ்சம் கவனத்துடனும் முன் யோசனையுடனும் செயல்படுவதும் வருமானம் சேமிப்பாக மாறினால் நன்மையாக இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் உடன் வேலை செய்வோர் தொழில் கூட்டாளிகள் வேலைக்காரர்கள் என்று தொல்லை கொஞ்சம் இருக்கும். பொதுவில் சுமார் மாதம்.

அவிட்டம் 3,4 பாதங்கள்: நக்ஷத்திராதிபதி 8ல் சூரியனுடன் மன உளைச்சல் மறதி, கோபம் என கசப்பான அனுபவங்கள் நிறைந்திருக்கும் புதன் சுக்ரன் கேது பொருளாதார ஏற்றம் சுப நிகழ்வுகள் தெய்வ அனுகூலம் என தருவார்கள் கலந்து கட்டினால் போல் இருக்கும் நிதானம் கவனம் பெரியோர்கள் ஆலோசனை என்று நடந்தால் பிரச்சனைகள் தீரும். வைத்திய செலவுகள் இருக்கும். பொதுவில் சுமார் மாதம் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 04.10.21 இரவு 02.36 மணி முதல் 05.10.21 இரவு 02.05 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : ஸ்வாமிமலை பாலதண்டாயுதபாணி முருகன், கிரிவலம், ஸ்லோகங்கள் படிப்பது, வைத்யநாதாஷ்டகம் படிப்பது நன்மை தரும். முடிந்த அளவு அன்னதானம் வஸ்திரதானம் செய்வது நல்லது.

சதயம் : நக்ஷத்திராதிபதி ராகு 4ல் சுகம் குறையும், குருபார்வை பெறுவதால் ஓரளவு துயரம் குறையும் மற்ற கேது சுக்ரன், புதன் நன்மைகளை அதிகம் தருகிறார்கள் ஜீவன வகையில் ஏற்றம் இறக்கம் இருக்கும். சிக்கணம் சேமிப்பு அவசியம் அது பின்னர் தேவை படும் செலவுகளை சமாளிக்க உதவும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகம். கவனம் தேவை பொதுவில் சுமார் மாதம்.

சந்திராஷ்டமம்: 05.10.21 இரவு 02.05 மணி முதல் 06.10.21 இரவு 01.14 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : துர்க்கை, அய்யனார் கோயிலில் விளக்கேற்றி வழிபடுதல், வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்தல், ஏழை எளியோருக்கு அன்னதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி என செய்தால் நன்மை உண்டாகும்.

பூரட்டாதி 1,2,3 பாதங்கள் : உங்கள் நக்ஷத்திர அதிபதி குரு வக்ரியாக 12ல் சனியுடன் சுபம் கருதி செலவுகள் உண்டாகும். புதன்,கேது மற்றும் சுக்ரனால் அதிக நன்மை பொருள்வரவு, பணவரவு தாராளம், எடுத்த காரியங்களில் ஓரளவு வெற்றி, உத்தியோகம் சொந்த தொழில் போன்றவற்றில் கடும் உழைப்புக்கு பின் லாபம், கேதுவால் வருவாய் பெருகுதல் என நன்றாகவே இருக்கும். சூரியன் செவ்வாய் ராகு வைத்திய செலவுகள் பயணத்தில் அடிபடுதல், உறவுகளின் துக்க செய்திகள் என தருவார்கள். இருந்தாலும் குருவின் அனுகூலம் இருப்பதால் இவை குறையும். பரவாயில்லை என்று சொல்லும் மாதம் இது.

சந்திராஷ்டமம்: 06.10.21 இரவு 01.14 மணி முதல் 07.10.21 இரவு 12.12 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வர், திருவாணைக்காவல். கோயிலில் விளக்கேற்றுவது அம்பாள் ஸ்லோகம் சொல்வது, ஏழை எளியோர் பசி தீர்ப்பது ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்தல், வயோதிகர்கள், இயலாதோர்க்கு உடலால் ஒத்துழைப்பு தருதல் என செய்தால் நன்மை உண்டாகும்.

மீனம்: பூரட்டாதி 4ம்பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய

ராசிநாதர் குருபகவான் 11ல் வக்ரியாக சனி பகவானுடன் பொதுவாக குரு சனி சேர்க்கை நன்மை தராது எனினும் கெடுதல்களை செய்யவில்லை பார்வையால் பலன் தருகிறார். புதன் தெய்வ அனுகூலத்தையும் சுக்ரன் பொருள் ஆடை ஆபரணம், கேளிக்கை விருந்து பணவரவு என்றும், 3ல் ராகு கடன் தொல்லை நீங்குதல் வழக்குகளில் வெற்றி, முயற்சிகளில் முன்னேற்றம் என்று தருகிறார். 7ல் சூரியன் செவ்வாய் வாழ்க்கை துணைவர் உடல் நலத்தில் பாதிப்பு கணவன் மனைவி அனுகூலமற்ற நிலை தொழில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு என செய்கிறார். உத்தியோகம் சொந்த தொழில் ஜீவன வகையில் நன்றாகவே இருக்கிறது. முயற்சிகள் இழுபறிக்கு பின் சாதகம் ஆகும். எதிலும் ஒரு கவனம் தேவை கேது பெற்றோர் வகையில் செலவுகளை கொடுப்பார். வெளிநாடு முயற்சிகள் தாமதம் ஆகும் கல்வியில் தடைகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் பலன் குறைவு. இருந்தாலும் புனித யாத்திரைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளிடம் கோபம் சண்டை என்று வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது மௌனம் நன்மை தரும். பொருத்து இருந்தால் அடுத்த மாதம் நன்மை உண்டு. கலந்து கட்டி இருக்கும் இந்த மாதம் எதிலும் ஒரு கவனத்துடன் செயல்படுவது நல்லது.

பூரட்டாதி 4ம் பாதம் : உங்கள் நக்ஷத்திர அதிபர் +ராசி நாதர் குருபகவான் 11ல் இருந்தாலும் வக்ரியாக இருப்பது சனியுடன் சேர்ந்து இருப்பது கடும் முயற்சிக்கு பின்னே வெற்றி என்பதாக இருக்கு. புதன்,ராகு சுக்ரன், சூரியன் நன்மை செய்கிறார்கள். செவ்வாய் வைத்திய செலவும், கேது பெற்றோர் வழியில் சில மனஸ்தாபங்களையும் தருவது ஓரளவு இருந்தாலும் மனோ திடம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள் இந்த மாதம் பரவாயில்லை மாதம்.

சந்திராஷ்டமம்: 06.10.21 இரவு 01.14 மணி முதல் 07.10.21 இரவு 12.12 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வர், திருவாணைக்காவல். கோயிலில் விளக்கேற்றுவது அம்பாள் ஸ்லோகம் சொல்வது, ஏழை எளியோர் பசி தீர்ப்பது ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்தல், வயோதிகர்கள், இயலாதோர்க்கு உடலால் ஒத்துழைப்பு தருதல் என செய்தால் நன்மை உண்டாகும்.

உத்திரட்டாதி: உங்கள் நக்ஷத்திர நாதர் சனி பகவானும், ராசிநாதர் குரு பகவானும் சேர்ந்து 11ல் இருக்கிறார்கள் இருவரும் வக்ரம் இது நன்மை தருவதாக இல்லை எனினும் இருவரும் கெடுதலும் செய்யாமல் இருக்கிறார்கள் பார்வையால் நல்ல பலன் தருகிறார்கள். 3ல் ராகு அதிக நன்மை + சுக்ரன் புதன் இவர்கள் இனைந்தும் 7ல் இருக்கும் சூரியன் ஓரளவும் என்று பலன் தருவதால் ஜீவன வகையில் நன்றாக இருக்கும் உத்தியோகத்தில் ப்ரஷர் இருக்கும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும் அதன் பலன் அடுத்த வரும் மாதங்களில் கிடைக்கும். சொந்த தொழிலில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு வரும் வார்த்தையில் கவனம் தேவை. இல்லத்தில் சுப நிகழ்வுகளும் வைத்திய செலவுகளும் கணவர் மனைவி கருத்து மோதல்களுமாய் கலந்து இருக்கும். பெற்றோர் வழியிலும் செலவு உண்டாகும். பரவாயில்லை சமாளித்து விடுவீர்கள் என்பதாக இந்த மாதம் இருக்கும்.

சந்திராஷ்டமம்: 07.10.21 இரவு 12.02 மணி முதல் 08.10.21 இரவு 10.38 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்: சனீஸ்வரர், வைத்யநாதன் அல்லது வைத்ய வீர்ராகவன்(திருவள்ளூர்) கோயிலுக்கு சென்று விளக்கேற்றுவது, உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவி, ஏழை எளியோருக்கு அன்னதானம், குழந்தைகள் படிக்க உதவி என செய்வது நன்மை தரும்.

ரேவதி: நக்ஷத்திராதிபதி 7,8,9ம் இடங்களில் இந்தமாத சஞ்சாரம். இதில் 22.09.21 முதல் 02.10.21 வரை துலாமில் இருந்து தெய்வ அனுகூலத்தை தந்து பல தொல்லைகளில் இருந்து காப்பாற்றுகிறார். குரு,சனி ஓரளவு நன்மை ராகு தொழிலில் உத்தியோகத்தில் பணவரவை அதிகரிக்க செய்கிறார். பொருளாதாரம் மேம்படும். விரும்பிய இடமாற்றம், இல்லத்தில் மகிழ்ச்சி சுப நிகழ்ச்சி, திருமணம் கைகூடுதல், விருந்து கேளிக்கைகள் யாத்திரைகள் என சுக்ரன் செய்கிறார். அதே நேரம் கேதுவும் செவ்வாயும் வைத்திய செலவுகளை கொடுக்கிறார் சூரியன் வாழ்க்கை துணைவர், தொழில் கூட்டாளிகள் உத்தியோகத்தில் உடன் வேலை செய்வோர் என்று ஒரு கருத்து வேறுபாடுகளை தருகிறார். இருந்தாலும் 3ல் ராகு மனோ திடம் தருவதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள், இருந்தாலும் நிதானம் யோசனை, பெரியோர் ஆலோசனை படி எதையும் செய்வது உத்தமம் இந்த மாதம் பரவாயில்லை மாதம்.

சந்திராஷ்டமம்: 08.10.21 இரவு 10.38 மணி முதல் 09.10.21 இரவு 09.05 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : திருக்குடந்தை சாரங்கபாணி, திருவரங்கம் ரங்கநாதர். கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது, விஷ்ணு ஸ்லோகங்கள் சொல்வது நன்மை தரும், முடிந்த அளவு தான தர்மங்களை செய்வது நன்மை தரும்.

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி(ரவி சாரங்கன்)

ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்

D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு

ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்

குரோம்பேட்டை, சென்னை – 600 044

ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)

Email ID : mannargudirs1960@gmail.com

!! ஸுபம் !!

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.