பங்குனி மாத ராசி பலன்கள்

ப்லவ வருடம் பங்குனி மாத ராசி பலன்கள் (13.03.2022 முதல்13.04.2022 வரை)

வருகிற 13.03.2022 இரவு 08:49:01 மணிக்கு சூரியபகவான் கும்ப ராசியில் இருந்து  மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் மீன ராசியில் 13.04.2022 அதிகாலை 04:45:24 மணி வரை சஞ்சரிக்கிறார். பங்குனி மாத ராசி பலன்கள் புஷ்யபக்ஷ அயனாம்ஸத்தை ஒட்டி ஜகந்நாத் ஹோரா கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. 

வாக்கியப்படி 14.03.2022 இரவு 11.34 மணிக்கு (உதயாதி 43.56 நாழிகைக்கு) மீன ராசிக்கு பெயர்ச்சிஆகிறார்.

ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் புஷ்ய பக்ஷ அயனாம்ஸ பஞ்சாங்கப்படி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கிரஹ பாத சாரங்கள் : பங்குனி மாத பிறப்பின் போது

லக்னம் – துலாம் – ஸ்வாதி – 1

சூரியன் –  மீனம் – பூரட்டாதி – 4

சந்திரன் – கடகம் – பூசம் – 1

செவ்வாய் – மகரம் – திருவோணம் – 1

புதன் –  கும்பம் – சதயம் – 2

வியாழன் – கும்பம் –  பூரட்டாதி – 2

சுக்ரன் –  மகரம் –  திருவோணம் – 2   

சனி – மகரம் – அவிட்டம் – 2

ராகு – ரிஷபம் – கிருத்திகை – 2

கேது – விருச்சிகம் – விசாகம் – 4

கிரஹ வலிமைகள் :

மிக வலுவான கிரஹம் சூரியன்,செவ்வாய், வலுவான கிரகம் : சந்திரன், குரு

சுக்ரன்,புதன், சனி, ராகு,கேது, இவை மத்ய பலனை கொடுக்கும்

இவை மாதம் பிறக்கும் போது உள்ள நிலை. ஒவ்வொரு கிரஹமும் அந்த மாதத்தில் சஞ்சார நிலை கொண்டு வலிமை மாறுபடும் மேலும் இந்த மாதத்தில் குரு & சனி (தற்காலிக) பெயர்ச்சியும், சித்திரை பிறந்தவுடன் ராகு கேது பெயர்ச்சிகளும் இருக்கிறது அவற்றையும் கணக்கில் எடுத்து கொண்டு பலன் சொல்லப்பட்டு இருக்கு

இவற்றை கணக்கில் கொண்டு பலன் சொல்லப்படுகிறது. மேலும் ஜாதகர் பிறப்பு லக்னத்தை ஒட்டி பலன் சொல்லப்படுகிறது உதாரணமாக மேஷ ராசி ஜாதகர் கடக லக்னத்தில் பிறந்தால் கடகராசி பலனும் அவருக்கு பொருந்தும். உங்களது பிறந்த லக்னம் தெரிந்தால் அந்த ராசிக்கான பலனையும் சேர்த்து பார்த்து அறியவும்.

பாரத தேசம் & தமிழகம் பொருத்தவரை:

பூகோள ஜாதகத்தையும் ஒட்டி ஆள்பவர்களின் ப்ரச்சன்னம் ஒட்டி இந்த மாத பலன்கள் அரிசி, கோதுமை காய்கறிகள், கரும்பு, சோளம், தானிய விளைச்சல் அதிகம், காற்று மற்றும் திடீர் மழை, பூச்சிகள் இவற்றால் சில பாதிப்புகள், விலைவாசிகள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆடை ஆபரண உற்பத்தி அதிகரிப்பு, ஏற்றுமதியால் லாபம், கலைத்துறை வளர்ச்சி, மருத்துவத்துறையில் முன்னேற்றம், அரசாங்கத்தில் சில திடீர் பாதிப்புகள் போரினால் ஏற்பட்டாலும் வட தேசத்தை விட தென் பகுதிகளில் அதிக பாதிப்பு, குழப்பங்களும், மக்கள் உஷ்ணம் நோய் பாதிப்புகளால் அவதி, ஆள்வோரின் மேல் அதிருப்தி என இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை ஆட்சியாளர்களுக்கு பாதிப்பில்லை எனினும் தவறுகளால் அவப்பெயர் மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.

மேஷம்(அஸ்வினி4 பாதம், பரணி4 பாதம், கார்த்திகை1பாதம்முடிய) :

மேஷராசிக்கதிபதி செவ்வாய் மாத ஆரம்பத்தில் 10 & 11ல் வலுவாய் சுக்ரன் சனியுடன், பின் குரு புதன் சுக்ரனுடன் சாதகமான நிலை, மேலும் ராசியின் பலனை தரும் ராகு சுபமாக 12க்கு வரும் குருபகவான் சுப விரயங்கள் திருமண புத்திர பாக்கியங்களை தருவார். புதன் லாபத்தை அதிகரிக்கும், சொந்த தொழில் உத்தியோகம் இவற்றில் வருமானம் பெருகும் நிலை, சிலருக்கு வெளியூர் வெளிதேச வேலை வாய்ப்புகள் அதனால் முன்னேற்றம் இருந்து கொண்டிருக்கும். சுக்ரனின் நிலை நன்றாக இருப்பதால் பணப்புழக்கம் தாராளம். மேலும் பண ரீதியான சொத்து ரீதியான பிரச்சனைகள் சாதகமான நிலை இருக்கும். பிறந்த ஜாதகத்தில் செவ்வாய், கேது சனி இவர்கள் பகை நிலை இல்லாதிருந்தால் மேலும் சாதகமாக தீர்ப்பு இருக்கும். கேது சனி இவர்கள் மன ரீதி உடல் ரீதியான சில சோதனைகளை தருவர் மனைவி/கணவர் குழந்தைகள் வழியில் மருத்துவ செலவுகள் இருக்கலாம் வேலை பளு அதிகரிக்கலாம், பெற்றோர், மேலதிகாரி என்று வயதில் பதவியில் இருப்போருடன் கருத்து வாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. பொதுவாக பெரும்பாலானா கிரஹங்கள் சாதகம் எனினும் கேது சனி, சந்திரன் இணைவு நாட்களில் கொஞ்சம் சிரமம் கொடுக்கும். கவனம் தேவை, புதிய முயற்சிகளை தொடங்கும் போது அமிர்த சித்த யோகமும் இருக்கும் நாளாகவும், சந்திராஷ்டம நாள் இல்லாமலும் இருந்தால் நல்லது முயற்சியில் வெற்றி உண்டாகும் பொதுவில் நல்ல மாதம்.

அஸ்வினி சந்திராஷ்டமம்: 22.03.2022 மாலை 06.17 மணி முதல் 23.03.2022 மாலை 04.56 மணி வரை

பரணி சந்திராஷ்டமம்: 23.03.22 மாலை 04.56 மணி முதல் 24.03.2022 பிற்பகல் 03.34 மணி வரை

கார்த்திகை 1ம் பாதம் சந்திராஷ்டமம்: 24.03.2022 பிற்பகல் 03.34 மணி முதல் 25.03.2022 பிற்பகல் 02.11 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : ஓம் நமசிவாய என சொல்லுங்கள் திங்கள் கிழமைகளில், திருவாதிரை நக்ஷத்திர நாளில் சிவன் கோயிலில் பால் அபிஷேகத்துக்கு கொடுங்கள், ப்ரதோஷ வேளையில் ந்தி தரிசனம் நல்லது. முடிந்த அளவு தான தர்மம் செய்தல் நன்மை தரும்.

ரிஷபம்(கார்த்திகை2,3,4 பாதங்கள், ரோஹிணி4 பாதம், மிருகசீர்டம்1,2 பாதங்கள்முடிய):

உங்கள் ராசி நாதன் சுக்கிரன் மாதமுழுவதும் 9,10 இடங்களில் இருந்து உங்கள் பண தேவைகள் விரும்பிய செயல்களை பூர்த்தி செய்வார் மேலும் உடன் பயணிக்கும் 12 & 7க்குடைய செவ்வாயும் உத்தியோகம் ஜீவனம் சொந்த தொழில் இவற்றில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை நிச்சயம் தருவார். மேலும் சூரியன் இரட்டை வருமானத்தை மீனத்திலிருந்து குருவுடன் சேர்ந்து தருகிறார். அதனால் பொருளாதாரம் மேம்படும் இல்லத்தேவைகள் பூர்த்தியாகும். சனி மற்றும் ராகு பெரிய நன்மைகளை தரவில்லை எனினும் கெடுதல் இல்லை. சனிபகவான் 11.04.22க்குப்பின் தேவையற்ற செலவுகளை தருவார். அதேநேரத்தில் அவர் சிலருக்கு குழந்தை பாக்கியத்தையும் தருவார். புதன் பரவாயில்லை புத்தி சரியாக செயல்படும் மாணவர்கள் கடும் முயற்சி செய்ய வேண்டும். 6ம் இட பலனை தரப்போகிறார் கேது வியாதிகளின் உக்ரம் தணியும் கடன் எதிரி தொல்லைகள் தீர வழி உண்டாகும். சுப செலவுகளும் இல்லத்தில் இருக்கும். இந்த மாதம் வருமானம் பெருக வழி உண்டாவதால் கடன் அடையும், வீடுவாகன யோகமும் இருக்கும். வைத்திய செலவுகள் குறைய வழி உண்டாகும். பொதுவில் நல்ல மாதம் நிம்மதி அதிகம். தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் நிச்சயம் மேலும் நன்மை இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம் சந்திராஷ்டமம்: 24.03.2022 பிற்பகல் 03.34 மணி முதல் 25.03.2022 பிற்பகல் 02.11 மணி வரை

ரோஹிணி சந்திராஷ்டமம்: 25.03.2022 பிற்பகல் 02.11 மணி முதல் 26.03.2022 பிற்பகல் 12.51 மணி வரை

மிருகசீரிடம் 1,2 பாதங்கள் சந்திராஷ்டமம்: 26.03.2022 பிற்பகல் 12.51 மணி முதல் 27.032022 காலை 11.35 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : மகாலக்ஷ்மி வழிபாடு, தாயார் சன்னதியில் விளக்கேற்றுதல், ஏழை பெண் குழந்தைகளுக்கு கல்வி அன்னம், விவாஹத்துக்கு போன்று முடிந்த உதவிகளை செய்யுங்கள் இது அடுத்துவரும் சுபகிருது வருடம் மிக நல்ல நிலையில் உங்களை வைத்திருக்க உதவும்.

மிதுனம்(மிருகசீரிடம்3,4 பாதங்கள், திருவாதிரை4 பாதம், புனர்பூசம்1,2,3 பாதங்கள்முடிய):

உங்கள் ராசிநாதன் புதன் 9,10,11 வீடுகளில் மாதம் முழுவதும் பயணிப்பது நன்மை தருவதாகும் மேலும் பத்தில் சூரியன் வலுவாக இருந்து உங்கள் ஜீவன வகையில் உத்தியோகத்தில் பதவி சம்பள உயர்வு சொந்த தொழிலில் லாபம் என நன்றாக இருக்கும்படி பார்த்து கொள்கிறார். குருபகவானும் 10ல் பலமாய் ஜீவன வகையில் பல நன்மைகள் உண்டாகும். அவர் 2ம் இடம் நோக்குவது குடும்பத்தில் சுப நிகழ்வு திருமணம் கைகூடுதல் என இருக்கும். 5ம் இடம் பார்வை அதிகாரம் அந்தஸ்து புகழ் செல்வாக்கு கூடுதல், மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் என்று இருக்கும்படி செய்கிறார். ராகு கேது இவர்கள் 11ம், 5ம் இடத்திற்க்கு உண்டான சுப பலனை முன்பே  தருகிறார்கள் இரட்டை வருமானம் எதிர்பாராத நன்மைகள் நீண்ட நாள் தடைபட்டு இருந்த திருமண புத்திர பாக்கியங்களும் வீடு வாகன யோகங்களும் கிடைக்கும் மேலும் வழக்குகள் போன்றவற்றில் சாதகமான நிலை இருக்கும். பொதுவில் சிறப்பான மாதம் வரும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்

மிருகசீரிடம் 1,2 பாதங்கள் சந்திராஷ்டமம்: 26.03.2022 பிற்பகல் 12.51 மணி முதல் 27.032022 காலை 11.35 மணி வரை

திருவாதிரை சந்திராஷ்டமம்: 27.03.2022 காலை 11.35 மணி முதல் 28.03.2022 காலை 10.27 மணி வரை

புனர்பூசம் 1,2,3 பாதங்கள் சந்திராஷ்டமம்: 28.03.2022 காலை 10.27 மணி முதல் 29.03.2022 காலை 09.29 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :. அனந்தசயன பெருமாள் வழிபாடு விஷ்னு சகஸ்ரநாமம் படிப்பது இல்லாவிடில் நாராயணா என சொல்வது, முடிந்த வரை தான தர்மங்கள் செய்வது நன்மையை தரும்.

கடகம்(புனர்பூசம்4ம்பாதம், பூசம்4பாதங்கள், ஆயில்யம்4 பாதங்கள்):

உங்கள் ராசிநாதர் சந்திரன் மாதம் பிறக்கும் போது உங்கள் ராசியில் வலுவாய் உங்கள் செயல்பாடுகளில் தெளிவு உண்டாகும் 9ல் சூரியன், குரு,புதன் அரசாங்கத்தின் மூலம் நன்மை பெரியோர்கள் ஆசீர்வாதம் எதிர்பார்த்த திருமணம் குழந்தை பாக்கியங்கள் உண்டாகுதல், ஜீவன வகையில் நல்ல முன்னேற்றம், காரணம் ராகு 10ம் இடத்துக்கு உண்டான பலனை தருவதால் உத்தியோகத்தில் இரட்டை வருமானம் வரும் எதிர்பார்த்த பதவி சம்பள உயர்வு உண்டாகும் தொழிலில் விருத்தி உண்டாகி வங்கி கடன் கிடைத்து தொழிலில் விரிவாக்கம் என இருக்கும். செவ்வாய் சுக்ரன் சனி 7ல் கூட்டாக இருந்து நன்மை மாதம் ஆரம்பம் மட்டும் தந்தாலும் 8ல் மூவரும் பயணித்து செயல்பாடுகளில் தடைகள் கொடுத்து கொண்டிருப்பர் இருந்தாலும் சூரியன் புதன், குரு,ராகு இவர்கள் வலுவாக இருப்பது மன உறுதியை தந்து தடைகளை எதிர்கொள்ளச்செய்யும். ராசியை குரு பார்ப்பது இவற்றை நீக்கிவிடும். எதிலும் ஒரு கவனம் தேவை.4ல் கேது சுகம் வாகனம், தாயார் வகையில் சில மன வருத்தங்களை தருவார் ஆனாலும் பெரிய பாதிப்பை தரமாட்டார். சிக்கணம், எதையும் யோசித்து செயல்படுத்துவது. ஆடம்பரத்தை குறைத்து கொள்வதும் நல்லது. பொதுவில் குடும்பத்தில் குதூகலம், செயல்களில் வெற்றி, பிள்ளைகள் மூலம் பெருமை என இந்த மாதம் நன்றாக இருக்கும். பெரிய பாதிப்புகள் இல்லை

புனர்பூசம் 1,2,3 பாதங்கள் சந்திராஷ்டமம்: 28.03.2022 காலை 10.27 மணி முதல் 29.03.2022 காலை 09.29 மணி வரை

பூசம் சந்திராஷ்டமம்: 29.03.2022 காலை 09.29 மணி முதல் 30.03.2022 காலை 08.48 மணி வரை

ஆயில்யம் சந்திராஷ்டமம்: 30.03.2022 காலை 08.48 மணி முதல் 31.03.2022 காலை 08.28 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : அறுபடை வீடுகளுக்கு முடிந்தால் செல்லவும். முருகனை வழிபடுவது சஷ்டி கவசம் படிப்பது நன்மை தரும். செவ்வாய்கிழமைகளில் விளக்கேற்றி முருகனின் நாமத்தை சொல்வதும் அன்னதானம் செய்வதும் நன்மை தரும்.

சிம்மம்(மகம்4பாதம், பூரம்4பாதம், உத்திரம்1ம்பாதம்முடிய):

கடந்த மாதம் போல இந்த மாதமும் கவனமும் நிதானமும் முன் யோசனையும் தேவைப்படும் மாதம் செவ்வாய் , சுக்ரன், புதன் தவிர ராசிநாதன் உட்பட அனைத்து கிரஹங்களும் நன்மை செய்யவில்லை, குரு பார்வையால் 12,2,4 இடங்களை பார்த்து நன்மை செய்கிறார். புதன் 8ல் தெய்வ அனுகூலத்தை தருவது ஓரளவு சிரமங்களை குறைக்கும். ஜீவன வகையில் ஓரளவு நன்மை பொருளாதாரம் தேவைக்கு ஏற்ப என்று இருக்கும். வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் வார்த்தைகளை விடும்போது அதிக கவனம் தேவை உடல் நலத்திலும், வாழ்க்கை துணைவர் உடல் நலத்திலும் அக்கறை தேவை, பிள்ளைகளால் ஓரளவு நன்மை இருக்கும். பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இந்த நாளில் இல்லாமல் மற்ற நாட்களில் சித்த, அம்ருத யோகங்கள் கூடிய நாளில் உங்கள் முயற்சிகளை செய்யுங்கள், உத்தியோக மாற்றம் அல்லது பதவி உயர்வு எதிர்பார்ப்பு, இட மாற்றம், வெளிநாடு முயற்சி இவற்றை தள்ளி போடுவது அல்லது மேற்படி யோக நாளில் செய்வது நன்மை தரும். கூடும் மட்டும் கடன் வாங்குவதை தவிர்க்கவும் சொந்த தொழில் செய்பவர்கள் கூட கடன் வாங்காமல் இருப்பதும் சிக்கனமாக செலவு செய்வதும் நல்லது. பெரிய பிரச்சனைகள் வாராமல் இது தடுக்கும். ஏற்கனவே வழக்குகள் இருப்பவர்கள் கவனமாகவும் சரியான ஆலோசனை பெற்றும் செயல்படுவது நன்மை தரும். பொதுவில் இந்த மாதம் சுமார் கவனம் தேவை

மகம் சந்திராஷ்டமம் : 31.03.2022 காலை 08.28 மணி முதல் 01.04.2022 காலை 08.35 மணி வரை

பூரம் சந்திராஷ்டமம் : 01.04.2022 காலை 08.35 மணி முதல் 02.04.2022 காலை 09.13 மணி வரை

உத்திரம் 1ம் பாதம் சந்திராஷ்டமம் : 02.04.2022 காலை 09.13 மணி 03.04.2022 காலை 10.26 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : எல்லை தேவதைகள், துர்கை வழிபாடும், ஊர் காவல் தெய்வங்களை வழிபடுவதும் நன்மை தரும். முடிந்த வரை அன்ன தானம், வஸ்திர தானம் செய்வதும் நலம் பயக்கும்.

கன்னி🙁உத்திரம்2,3,4 பாதங்கள், ஹஸ்தம்4 பாதம், சித்திரை1,2 பாதங்கள்முடிய):

உங்கள் ராசிநாதர் 6,7,8 என்று மாதம் முழுவதும் சஞ்சரிக்கிறார் 23.03.22 முதல் 07.04.2022 வரையிலான காலங்கள் ஓரளவு நன்மையை தருகிறார்., சூரியன் மற்றும் குருவும் மிக பெரிய நன்மைகளை தருகின்றனர். தாமதப்பட்டு வந்த திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு திருமணம் உறுதியாகும். குருபகவான் லாபத்தையும் ராசியையும் 3ம் இடமும் பார்ப்பதால் மனதில் உறுதி செயல்களில் வெற்றி என்று நன்றாகவே இருக்கும் மாதக்கடைசியில் 5லிருந்து 6க்கு வரும் சனி பகவான் வியாதிகளின் உக்ரத்தை குறைத்து மருத்துவ செலவுகளை கட்டுப்படுத்துகிறார் எதிரிகளை வீழ செய்கிறார். கடந்த காலங்களில் மந்தமாக ஓடிக்கொண்டிருந்த பொருளாதார நிலை முன்னேற்றம் அடைந்து சுப கிருது வருடம் நல்ல நிலை இருக்கும்படி செய்கிறார். மேலும் செவ்வாய் சுக்ரனின் சஞ்சாரமும் பதவி உயர்வு வருமான உயர்வு சொந்த தொழில் விருத்தி, பணப்புழக்கம் தாராளம், விவசாயம், உணவகம், கட்டுமான தொழில், வாகன உற்பத்தி விற்பனை நிலையங்கள், அழகு சாதன பொருட்கள் ஆடை வடிவமைப்பு போன்ற தொழில்கள் ஏற்றம் பெறும். ராசியாதிபதி புதனை விட சூரியன், குரு,சுக்ரன்,சனி செவ்வாய் என்று இவர்கள் ஒருபக்கம் நன்மை தந்தாலும் 2,8ம் இட பலனை முன்பே தரப்போகும் ராகு-கேதுக்கள் வார்த்தையில் தெளிவின்மை பயம், அவசரப்படுதல், சிறு விபத்துகள் காயங்கள், மன உறுதியை குலைக்கும் வகையில் செயல்கள் என கொடுத்து கொண்டு இருப்பர் மேலும் விரயங்கள் அதிகம் இருக்கும் கவனமும் நிதானமும் அவசியம்,ராகு எதிர்பாராத வழக்குகளில் சிக்க வைக்கலாம் பெருமளவில் நன்மை இருந்தாலும் மனதை கட்டுப்பாடாக எதையும் யோசித்து செயல்படுவது பெரியோர் நலம் விரும்பிகளின் ஆலோசனை பெற்று செய்வது என்பது கெடுதல்களை குறைக்கும். அலுவலகங்கள், பொது இடங்கள், சொந்த தொழில் ஸ்தாபனங்களில் வார்த்தைகளில் கவனம் தேவை. மற்றபடி நல்ல மாதம்.

உத்திரம் 1ம் பாதம் சந்திராஷ்டமம் : 02.04.2022 காலை 09.13 மணி 03.04.2022 காலை 10.26 மணி வரை

ஹஸ்தம்: சந்திராஷ்டமம் : 03.04.2022 காலை 10.26 மணி முதல் 04.04.2022 பிற்பகல் 12.14 மணி வரை

சித்திரை 1,2 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 04.04.2022 பிற்பகல் 12.14 மணி முதல், 05.04.2022 பிற்பகல் 02.35 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : கால பைரவர், நாகர் தலையில் தரித்த சிவலிங்கம், துர்கை, பாம்பு படுக்கையில் இருக்கும் அரங்க நாதன் போன்ற தெய்வங்களை வழிபடுவது, அஷ்டமி நாட்களில் பைரவருக்கு தீபம் ஏற்றுவது, முடிந்தவரை அன்னதானம் செய்வது என்று இருந்தால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

துலாம்🙁 சித்திரை3,4 பாதங்கள், ஸ்வாதி4 பாதம், விசாகம்1,2,3 பாதங்கள்முடிய):

உங்கள் ராசிநாதர் சுக்ரன் 30.03.22 முதல் பூர்வ புண்ய ஸ்தானத்தில், செவ்வாயும் பின்னாலேயே 06.04 முதல் மாத கடைசியில் சனியும் சேர்கிறார். குரு,சூரியன், புதன் 6ல், ராகு கேது 7,ராசி பலன்களை முன் கூட்டி தருவார்கள் இந்த நிலையில் குரு பார்வை, சூரியன், மற்றும் சுக்ரன் செவ்வாய் இவர்கள் மிக அதிகமான பலனை தருகிறார் செவ்வாய் வலிமை அதனால் உங்கள் வாக்கு சாதூர்யம் உங்களின் முன்னேற்றத்துக்கு உதவும், சுக்ரனும் சூரியனும் பொருளாதார நிலையை மேம்படுத்துகின்றனர் வரும் வருடங்கள் மிக சிறப்பாக இருக்கும் என்பதை சொல்வது போல இவர்கள் செயல்பாடுகள் இருக்கும், அதே போல் குரு 10,12 மற்றும் 2ம் இடங்களை பார்ப்பது விசேஷம், இல்லத்தில் சுப நிகழ்வுகள், உத்தியோகத்தில், சொந்த தொழிலில் முன்னேற்றம், பெற்றோர்களை காப்பாற்றுதல், திருமணம் குழந்தை பாக்கியம், வீடு வாகன யோகங்கள் என்று கடந்த கால திட்டங்கள் நிறைவேறும் மாதம் இது வெளிநாடு வேலை,படிப்பு மற்றும் மற்ற செயல்களுக்காக வேறு ஊர் அல்லது வேறு நாடு செல்ல திட்டமிட்டு இருந்தவர்களின் நோக்கம் இந்த மாதத்தில் நிறைவேறும். அதே போல புதிய தொழில் தொடங்க யோசனை உள்ளவர்களுக்கு அதற்கான முன்னேற்பாடுகள் வெகு வேகமாக நடக்கும். பெருமளவில் கஷ்டம் கிடையாது மகிழ்ச்சி, சுற்றுலா, விருந்து கேளிக்கைகள், புனித யாத்திரை போன்றவை இந்த மாதம் உங்களுக்கு மிக சிறப்பு என்பதை சொல்லும். அதே நேரம் வாழ்க்கை துணைவர் வகையில் வைத்திய செலவுகளும், அதே போல புதன் ஞாபக சக்தி குறைவும் சிறு குழப்பங்கள் அதனால் சில வீண் விரயங்கள் என்று தரும் பெரிய அளவில் இல்லை என்பது ஆறுதல் பொதுவில் மிக நல்ல மாதம்.

சித்திரை 1,2 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 04.04.2022 பிற்பகல் 12.14 மணி முதல், 05.04.2022 பிற்பகல் 02.35 மணி வரை

ஸ்வாதி 4 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 05.04.2022 பிற்பகல் 02.35 மணி முதல் 06.04.2022 மாலை 05.22 மணி வரை

விசாகம் 1,2,3 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 06.04.2022 மாலை 05.22 மணி முதல், 07.04.2022 இரவு 08.23 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : நின்ற திருக்கோல பெருமாள், தாயாருடன் சேர்ந்து இருக்கும் கோயில்களில் விளக்கேற்றி வழிபடுவது, அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சரீர ஒத்தாசை இயலாதோர் வயதானோர்க்கு செய்வது நன்மை தரும்.

விருச்சிகம்🙁 விசாகம்4ம்பாதம், அனுஷம்4பாதம், கேட்டை4 பாதங்கள்முடிய):

ராசிநாதர் செவ்வாய் மிக வலுவாக 3,4 ல் இந்த மாதம், மேலும் 5ல் குரு, சூரியன் புதன், சுக்ரனும் சனியும் கூட 4ல் ராகு-கேதுக்களும் கூட சாதகமான சூழல் கடந்த பலவருடங்களாக வாட்டி வதைத்து கொண்டிருந்த துன்பம் நீங்கும் என்பது உறுதி தெய்வ நம்பிக்கை போய்விட்ட நிலையில் இருக்கும் உங்களுக்கு இனி வரப்போகும் குரு,சனி,ராகு கேது பெயர்ச்சிகள் ஒரு பெரிய மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுக்க போகிறது அச்சாரமாக இந்த மாதம் முதல் உத்தியோகம் சொந்த தொழில் ஜீவன வகையில் நல்ல ஏற்றம் புதிய வேலை கிடைத்தல் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேருதல், கணவன் மனைவி மகிழ்ச்சி உறவுகளும் பாசமுடன் ஒட்டிக்கொள்ளுதல் விருந்து கேளிக்கை, வழக்குகளில் சாதகம், திருமண முயற்சிகள் கைகூடும், சிலருக்கு குழந்தை பாக்கியம் 5ல் குரு நிச்சயம் தருவார். இல்லத்தில் குதூகலம், வீடு வாகன யோகங்கள், வருமானம் பெருகுதல், வியாதிகளின் தாக்கம் குறைதல், எதிர்பார்த்த தேவைகள் பூர்த்தி ஆகுதல், மனதில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து ஆரோக்கியமான சூழல் உண்டாகும், எதிரிகள் கூட நண்பர்களாகும் நிலை, நினைத்தது நடக்க ஆரம்பிக்கும் பெரும்பாலும் நன்மைகள் கெடுதல்களே இல்லை எனலாம் சுபக்ருது வருடம் மிக நன்றாக இருக்கும். தெய்வ நம்பிக்கை விடாதீர்கள் இந்த மாதம் உங்கள் மகிழ்ச்சிக்கு விதை போடும் மாதம் கவலையில்லாமல் முயற்சிகளை தொடருங்கள்.

விசாகம் 1,2,3 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 06.04.2022 மாலை 05.22 மணி முதல், 07.04.2022 இரவு 08.23 மணி வரை

அனுஷம் 4பாதங்கள் : சந்திராஷ்டமம் : 07.04.2022 இரவு 08.23 மணி முதல் 08.04.2022 இரவு 11.25 மணி வரை

கேட்டை 4 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 08.04..2022 இரவு 11.25 மணி முதல் 10.04.2022 நள்ளிரவு 02.14 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : குல தெய்வ வழிபாடு நன்மை தரும் மதுரகாளி அம்மனை வழிபடுங்கள், பெண் குழந்தைகளுக்கு படிக்க உதவுங்கள் பசி தீருங்கள் முடிந்த வரை அன்னதானம் செய்யுங்கள்.

தனூர்(மூலம்4 பாதம், பூராடம்4 பாதம், உத்திராடம்1ம்பாதம்முடிய):

ராசிநாதர் 4ல் சூரியன் புதனுடன், பார்வையால் நன்மை செய்கிறார். சூரியனும் 10ம் இடம் பார்ப்பது ஜீவன வகையில் திருப்திகரம் இருக்கும். புதன் தன் வீட்டை பார்ப்பது பொருளாதாரத்தை நல்ல நிலையில் வைத்திருக்க உதவும். அதே போல் லாபாதி பலனை கேது முன்கூட்டியே தருவதும் ஒருவகையில் நன்மை பயக்கும். செவ்வாய் 3ல் மன உறுதி, எடுத்த செயல்களை முடிக்கும் வேகம், சனி தேவைகளை பூர்த்தி செய்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி சுப செலவுகள் போட்ட திட்டங்கள் நிறைவேறுதல், வீடு பராமரிப்பு பணி பூர்த்தியாகுதல் சிலருக்கு வீடு வாகன யோகங்கள். மேலும் சுக்ரன் ஓரளவு ஆடை ஆபரண சேர்க்கை பண புழக்கம் என்று செய்வதால் பெரிய பாதிப்புகள் இருக்காது. தெளிவான சிந்தனை இருக்கும். கருத்து மோதல்கள் இருக்காது எல்லோரிடமும் விட்டுக்கொடுத்து செல்லுதல் பொறுமை நிதானம் இருக்கும். உத்தியோகத்தில் பதவி சம்பள உயர்வுக்கான வாய்ப்பு ஏற்படும் அதனால் திருமணம் குழந்தை பாக்கியம் சிலருக்கு உறுதியாகும். கணவன் மனைவி ஒற்றுமை பெற்றோர் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான விஷயங்கள் இருத்தல் என்று இந்த மாதம் நன்றாகவே இருக்கும். சேமிப்பை அதிகப்படுத்தவும். பெரும்பாதிப்புகள் இல்லை அமைதியான மாதம்.

மூலம் 4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 13.03.2022 இரவு 07.51 மணி முதல் 14.03.2022 இரவு 07.56 மணி வரை & 10.04.2022 இரவு 02.14 மணி முதல் 11.04.2022 அதிகாலை 04.37 மணி வரை

பூராடம் 4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 14.03.2022 இரவு 07.56 மணி முதல் 15.03.2022 இரவு 07.56 மணி வரை & 11.04.2022 அதிகாலை 04.37 மணி முதல் 12.04.2022 காலை 06.24 மணி வரை

உத்திராடம் 1ம் பாதம் சந்திராஷ்டமம் : 15.03.2022 இரவு 07.56 மணி முதல் 16.03.2022 இரவு 10.15 மணி வரை    & 12.04.2022 காலை 06.24 மணி முதல் 13.04.2022 காலை 07.30 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : ஒப்பிலியப்பன், நின்ற திருக்கோல பெருமாள், தாயார் விளக்கேற்றி வழிபாடு முடிந்த அளவு தான தர்மங்களை செய்தல், வயோதிகர் இயலாதவர்களுக்கு சரீர ஒத்தாசை செய்வது நலம் தரும்.

மகரம்🙁உத்திராடம்2,3,4 பாதங்கள், திருவோணம்4 பாதம், அவிட்டம்1,2 பாதங்கள்முடிய) :

ராசிநாதர் சனிபகவான் 11.04.22 வரை ராசியில் பத்தாம் பார்வையில் ஜீவன வகையில் நன்மை செய்கிறார் பின் 2ம் இடம் பெயர்ந்தும் லாபம் தருகிறார், உடன் செவ்வாய் சுக்ரன் வலுவாக பணம் பலவகையிலும் வரும், கடன்கள் அடையும், உத்தியோகத்தில் இரட்டிப்பு வருமானம், பதவி உயர்வு சம்பள உயர்வு மற்றும் சொந்த தொழில் செய்வோருக்கு வருவாய் பெருகுதல் தொழில் விஸ்தரிப்பு இவற்றை 10ம் இடத்துக்கு ஏப்ரலில் செல்லும் முன் அதன் பலனை முன்கூட்டியே தரும் கேது. சூரியன் 3ல் குருவுடன் மன உறுதி கூடுதல் தேங்கி இருந்த செயல்களில் வெற்றி உண்டாகுதல் கடந்த கால திட்டங்கள் நிறைவேறுதல் என்று இருக்கும் புதிய முயற்சிகள் வெற்றிபெறும். புதிய வீடு வாங்குதல் சிலருக்கு திருமணம் அமையும் யோகம், குழந்தை பாக்கியம், என பல நன்மைகள் கிடைக்கும், பெயர் புகழ் கூடும் சமூக அந்தஸ்து உண்டாகும், எங்கும் நல்ல பெயர் நண்பர்கள் உறவினர் மகிழ்வர் நன்மையும் செய்வர், அதே நேரம் 7ல் மாத ஆரம்பத்தில் சந்திரன், பின் ராகு இவர்களின் சஞ்சாரம் கொஞ்சம் மன துயரை கொடுக்கும். அது பயணத்தினால் தந்தை அல்லது வாழ்க்கை துணைவரின் தந்தை பாதிப்படைதல் துக்கம் என இருக்கும். இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் இது பாதிப்பை தராது. கொஞ்சம் கவனம் தேவை பொதுவில் மிக நன்றாக இருக்கும்

உத்திராடம் 1ம் பாதம் சந்திராஷ்டமம் : 15.03.2022 இரவு 07.56 மணி முதல் 16.03.2022 இரவு 10.15 மணி வரை    & 12.04.2022 காலை 06.24 மணி முதல் 13.04.2022 காலை 07.30 மணி வரை

திருவோணம் 4 பாதம் சந்திராஷ்டமம் : 16.03.2022 இரவு 10.15 மணி முதல் 17.03.2022 இரவு 10.31 மணி வரை

அவிட்டம் 1,2 பாதங்கள் சந்திராஷ்டமம் : 17.03.2022 இரவு 10.31 மணி முதல் 18.03.2022 இரவு 10.17 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள்: குலதெய்வ வழிபாடு, லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ வழிபாடு. செவ்வாய்கிழமைகளில் அதிகாலை நரசிம்மரை பூஜித்தல் முடிந்த அளவு அன்னதானம் இவற்றை செய்வதால் நன்மை உண்டாகும்.

கும்பம்🙁 அவிட்டம்3,4 பாதங்கள், சதயம்4 பாதம், பூரட்டாதி1,2,3 பாதங்கள்முடிய):

குரு வாக்கில் சஞ்சாரம் ராசிநாதர் மாதக்கடைசியில் ராசிக்கு வருகிறார் புதன் 2ல் சுக்ரன், செவ்வாய் மற்றும் ராகு, சந்திரன் என்று அனைவரும் நன்மை செய்கின்றனர். பொருளாதாரம் மிக நன்று, உத்தியோகம், சொந்த தொழில் ஜீவன வகையில் ஏற்றம். உங்கள் பேச்சுக்கு சமூக மதிப்பு நன்றாகவே இருக்கும் மனதில் இருந்துவந்த கவலைகள் பறந்து போகும் போட்ட திட்டங்கள் கைகூடும்.தாமதமாகிக்கொண்டிருந்த திருமணம் புத்திரபாக்கியம், வீடுவாகன யோகங்கள் கடந்தகால வழக்குகள், வீடு நிலம் விற்பனை சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் புதிய வேலை கிடைத்தல் என அனைத்தும் ஈடேறும் காலம், செயல்களில் ஒரு உற்சாகம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் கணவன் மனைவி பெற்றோர், குழந்தைகள் சுற்றம் என அனைவரும் அன்பு காட்டுவார்கள் புனித யாத்திரை விருந்து கேளிக்கைகள் என கலகலப்பாக இருக்கும். சேமிப்பு கூடும். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவர் விரும்பிய பாடம் கிடைக்கும். 9ல் கேது கொஞ்சம் பொருளாதார தடைகள், செயல்களில் இழுபறி தந்தை வழியில் வைத்திய செலவுகள் என கொடுத்தாலும் அது பெரும் பாதிப்பை தராது பணப்புழக்கம் தாராளம் என்பதால் செலவுகளும் அதற்கு ஈடாக இருக்கும். ஆனாலும் கஷ்டம் இருக்காது. எண்ணங்கள் ஈடேறும் நல்ல மாதம் இது.

அவிட்டம் 1,2 பாதங்கள் சந்திராஷ்டமம் : 17.03.2022 இரவு 10.31 மணி முதல் 18.03.2022 இரவு 10.17 மணி வரை

சதயம் 4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 18.03.2022 இரவு 10.17 மணி முதல் 19.03.2022 இரவு 09.39 மணி வரை

பூரட்டாதி 1,2,3 பாதங்கள் சந்திராஷ்டமம் : 19.03.2022 இரவு 09.39 மணி முதல் 20.03.2022 இரவு 08.42 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் மதுரை மீனாக்ஷி சொக்கநாதர் வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு போன்றவையும் அம்மன் ஸ்லோகங்களை படிப்பதும், ஏழை எளியோருக்கு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்தலும், முடிந்த அளவு தான தர்மங்களை செய்வதும் நன்மை தரும்.

மீனம்🙁 பூரட்டாதி4ம்பாதம், உத்திரட்டாதி4 பாதம், ரேவதி4 பாதம்முடிய):

ராசியில் ராசிநாதருடன்,சூரியன், புதன், 12ல் செவ்வாய் சுக்ரன் சனி, 2ல் ராகு, 8ல் கேது மேலோட்டமாக சரியில்லை என்பது போல தோன்றும் பொதுவில் இந்த இடங்களில் இவர்கள் நன்மை செய்ய மாட்டார்கள் தான் ஆனால் இங்கு இவர்கள் சஞ்சார நிலை தத்காலிக நட்பு கொள்கைப்படி நன்மைகள் அதிகம் அதே நேரம் பொறுமையாக அடிஎடுத்து வைக்கவேண்டும், குரு,சனி,செவ்வாய், ராகு பார்வையால் நன்மையை தருவார் பொருளாதாரத்தில் நல்ல நிலை இருக்கும் தேவைகருதி பணம் வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடக்கலாம் ஆனால் அது அடுத்துவரும் மாதங்களில் தான் பலன் தரும். புதிய தொழில் விஸ்தாரணத்துக்கான ஏற்பாடுகள் நடந்தாலும் பலன் தாமதம் ஆகும். திருமணம்,, குழந்தை பேறு புதுவீடு யோகம் கொஞ்சம் தாமதம் ஆகும். இருந்தாலும் தனிப்பட்ட ஜாதகம் கிரஹ நிலைகள் நன்றாக இருந்தால் இவை இருக்காது. 8ல் கேது மன சஞ்சலம், தொழிலில் உத்தியோகத்தில் பிரச்சனைகள், பயணத்தில் சிறு விபத்துகள் என கொடுப்பார் இருந்தாலும் சனி குரு அதை நீக்குவார்கள் அல்லது குறைப்பார்கள் இருந்தாலும் எதிலும் கவனத்துடன் யோசித்து நலம் விரும்பிகள் பெரியோர்கள் ஆலோசனை பெற்று செய்வதும் வார்த்தைகளை விடுவதில் கவனமும். அடுத்தவர்களை குறை சொல்வதை கூட யாரிடமும் சொல்லாமல் இருப்பது நலம் தரும். ஓரளவு நன்மை நடக்கும் என்பது உறுதி சேமிப்பை அதிகப்படுத்த முயற்சி செய்யுங்கள், இந்த மாதம் சுமார் மாதம்.

பூரட்டாதி 1,2,3 பாதங்கள் சந்திராஷ்டமம் : 19.03.2022 இரவு 09.39 மணி முதல் 20.03.2022 இரவு 08.42 மணி வரை

உத்திரட்டாதி 4 பாதம் சந்திராஷ்டமம் : 20.03.2022 இரவு 08.42 மணி முதல் 21.03.2022 மாலை 07.34 மணி வரை

ரேவதி 4 பாதம் சந்திராஷ்டமம் : 21.03..2022 இரவு 07.34 மணி முதல் 22.03.2022 மாலை 06.17 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள்: ஆஞ்சநேயர் வழிபாடு & ராம நாமம் ஜெபம் நன்மை தரும். மனதை உறுதியாக வைத்திருக்கும். ஏழைகளுக்கு உணவளியுங்கள், வாயில்லா ஜீவன்களுக்கு உணவளியுங்கள்.

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி(ரவி சாரங்கன்)

ஜோதிடர்,

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Land Line : 044-35584922

ஃபோன் நம்பர் : 8056207965 (வாட்ஸப்)

Email ID : mannargudirs1960@hotmail.com

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.