மாசி மாத ராசி பலன்கள்

ப்லவ வருடம் மாசி மாத ராசி பலன்கள்

வருகிற 12.02.2022 நள்ளிரவு 12:23:6 மணிக்கு சூரியபகவான் மகர ராசியில் இருந்து  கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் கும்ப ராசியில் 13.03.2022 இரவு 08:49:01 மணி வரை சஞ்சரிக்கிறார். கீழே ப்லவ வருடம் மாசி மாத ராசி பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

இது புஷ்யபக்ஷ அயனாம்ஸத்தை ஒட்டி ஜகந்நாத் ஹோரா கணித பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டது. 

வாக்கியப்படி 13.0.2022 அதிகாலை 04.13 மணிக்கு (உதயாதி 55.37 நாழிகைக்கு) கும்ப ராசிக்கு பெயர்ச்சிஆகிறார்.

ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் புஷ்ய பக்ஷ அயனாம்ஸ பஞ்சாங்கப்படி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மாசி மாத ராசி பலன்கள்

கிரஹ பாத சாரங்கள் : மாசி மாத பிறப்பின் போது

லக்னம் – விருச்சிகம் – விசாகம் – 4

சூரியன் –  கும்பம் – அவிட்டம் – 3

சந்திரன் – மிதுனம் – மிருகசீரிடம் – 4

செவ்வாய் – தனூர் – பூராடம் – 3

புதன் –  மகரம் – உத்திராடம் – 3

வியாழன் – கும்பம் –  சதயம் – 4

சுக்ரன் –  தனூர் –  பூராடம் – 3   

சனி – மகரம் – அவிட்டம் – 1

ராகு – ரிஷபம் – கிருத்திகை – 3

கேது – விருச்சிகம் – அனுஷம் – 1

கிரஹ வலிமைகள் :

மிக வலுவான கிரஹம் சுக்ரன், வலுவான கிரகம் :    குரு, சனி

சூரியன், புதன், ராகு,கேது, செவ்வாய் இவை மத்ய பலனை கொடுக்கும்

இவை மாதம் பிறக்கும் போது உள்ள நிலை. ஒவ்வொரு கிரஹமும் அந்த மாதத்தில் சஞ்சார நிலை கொண்டு வலிமை மாறுபடும்

இவற்றை கணக்கில் கொண்டு பலன் சொல்லப்படுகிறது. மேலும் ஜாதகர் பிறப்பு லக்னத்தை ஒட்டி பலன் சொல்லப்படுகிறது உதாரணமாக மேஷ ராசி ஜாதகர் கடக லக்னத்தில் பிறந்தால் கடகராசி பலனும் அவருக்கு பொருந்தும். உங்களது பிறந்த லக்னம் தெரிந்தால் அந்த ராசிக்கான பலனையும் சேர்த்து பார்த்து அறியவும்.

பாரத தேசம் & தமிழகம் பொருத்தவரை:

சுக்ரன் வலு அதனால் கலைத்துறை, வங்கி பணம் புழங்கும் இடம், ஆடை ஆபரண உற்பத்தி & விற்பனை, போன்றவை நல்ல முன்னேற்றம் பெறும். அன்னியர்களிடம் தேசத்தின் மதிப்பு கூடும். அரசர்களுக்குள் உண்டாகும் சண்டை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும். பொதுவாக விவசாயம், கல்வி துறைகள் சிரமத்துக்குள்ளாகும். விரோதிகளின் கை ஓங்கியது போல தெரியும், செவ்வாய் மகரத்தில் சஞ்சரிக்கும் 26.02.2022 முதல் ஓரளவு நன்மை உண்டாகும். தமிழகத்தில் குழப்பங்கள் நீங்கி ஓரளவு நன்மை உண்டாகும். மத்தியில் ஆளும் ஆட்சி தங்களது நோக்கங்களை நிறைவேற்றும் போது உலக அரங்கில் வரவேற்பை பெற்றாலும் பொருளாதார தேக்கத்தினால் மக்கள் விரக்தி அடைவர் நாட்டில் சலசலப்பு இருந்து கொண்டிருக்கும். பொதுவில் பெரிய ஆபத்துகள் இல்லை எனினும் மக்களிடம் பயம் கலந்த ஒரு நிலை இருந்து கொண்டிருக்கும்.

மேஷம்(அஸ்வினி4 பாதம், பரணி4 பாதம், கார்த்திகை1பாதம்முடிய) :

மேஷராசிக்கதிபதி செவ்வாய் 2,7க்குடைய சுக்ரனும் 9 & 10ல் ஒன்றாக பயணிக்கின்றனர். பணப்புழக்கம் தாராளம், தொழில் உத்தியோகம் ஜீவனத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் செவ்வாய் தன் வீடு (மேஷம்) , 4,5 இடங்களையும் பார்ப்பது நிம்மதியான ஒரு நிலை, பெயர் புகழ் உயருதல் எண்ணியிருந்த திட்டங்கள் நிறைவேறும் காலம், மேலும் கடந்த காலங்களில் தாமதமாகி கொண்டிருந்த திருமணம் குழந்தை பாக்கியம் போன்றவை அமைய வாய்ப்பும் உண்டாகும். இல்லத்தில் குதூகலம், வெளியூர் யாத்திரை ஆடை ஆபரண சேர்க்கை, தாமதமாகி கொண்டிருந்த பதவி சம்பள உயர்வுகள் தொழில் விரிவாக்கம், மற்ற வழியில் ஜீவனம் முன்னேற்றம் என நன்றாகவே இருக்கும். இருக்கும் ஏரியாவில் தொழில் செய்யும் இடம் போன்ற எங்கும் நல்ல பெயர் இருக்கும். பொதுவில் நன்மை அதிகம் இருக்கும் அதேநேரம் ராசிக்குண்டான பலனை 2ல் இருக்கும் ராகு தருவது வாழ்க்கை துணைவர் வகையில் மருத்துவ செலவுகள், குடும்பத்தில் சலசலப்பு, சிறு சிறு சண்டைகள் என்றும் இருந்து கொண்டிருக்கும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. 9க்குடைய குரு லாபத்தில் பெற்றோர் வகையில் ஆதாயம் உண்டு. மனோ திடம் கூடும். விரோதங்கள் மறையும் 10க்குடைய சனி ஆட்சி தொழிலில் முன்னேற்றம் இருக்கும் விரும்பிய இடமாற்றம் வெளியூர் வேலை என்று சிலருக்கு அமையும். பெண்கள் மூலம் பலன் உண்டாகும். பொதுவில் இந்த மாதம் நன்றாக இருக்கும்.

அஸ்வினி சந்திராஷ்டமம்: 23.02.2022 பிற்பகல் 12.43 மணி முதல் 24.02.2022 காலை 11.34 மணி வரை

பரணி சந்திராஷ்டமம்: 24.02.22 காலை 11.34 மணி முதல் 25.02.2022 காலை 10.12 மணி வரை

கார்த்திகை 1ம் பாதம் சந்திராஷ்டமம்: 25.02.2022 காலை 10.12 மணி முதல் 26.02.2022 காலை 08.17 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : அம்பாள், வடிவுடையம்மன், லக்ஷ்மி தாயார் வழிபாடு , கோயில் தாயார் சன்னதியில் விளக்கேற்றுதல, நாம ஸ்மரணை செய்தல், முடிந்த அளவு தான தர்மம் செய்தல் நன்மை தரும்.

ரிஷபம்(கார்த்திகை2,3,4 பாதங்கள், ரோஹிணி4 பாதம், மிருகசீர்டம்1,2 பாதங்கள்முடிய):

உங்கள் ராசி நாதன் சுக்கிரனும் 7 12க்கு உடைய செவ்வாயும் 25ம் தேதி வரை  8ம் வீட்டிலும் பின் 9ம் வீட்டிலும் இந்த மாதம் பயணிக்கிறார் மேலும் சூரியன் 10ல் இருந்து உங்கள் 4ம் வீட்டை பார்ப்பது, வீடு வாகன சுகம் தாயார் வழியில் நன்மை என்று செய்கிறார் ஜீவன ஸ்தானத்தில் நல்ல நிலையை தருகிறார் பொதுவாக இந்த மாதம் பொருளாதாரம் நன்றாக இருக்கும் எதிர்பார்த்த தேவைகள் பூர்த்தியாகும் பெரும்பாலான கிரகங்கள் நன்மை செய்வதாக அமைகிறது ராகு மன சஞ்சலத்தை தரும் மற்ற புதன் ஓரளவு நன்மை செய்தாலும் வாக்கினால் சில சங்கடங்கள் உண்டாக்குகிறார் குடும்பத்திலும் பொது வெளியிலும் அலுவலகத்திலும் வார்த்தைகளை விடும்போது கவனம் தேவை மேலும் ராசியில் இருக்கும் ராகுவும் ஏழில் இருக்கும் கேதுவும் அடுத்த ராசி பலனை அதாவது ராகு பன்னிரண்டா இட பலனையும் கேட்கும் ஆறாம் வீட்டின் பலனையும் முன்பே தருவதால் சுப விரயங்கள் கடன்கள் தீர வைத்திய செலவு வைத்திய செலவு குறைதல் மற்றும் ஓரளவுக்கு எண்ணங்கள் நிறைவேறுதல் என்ற நிலையை கொடுக்கிறார்கள் இந்த மாதம் புதிய வேலைவாய்ப்பு புதிய மேற்படிப்பு வேண்டி வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகலாம் பதவியில் உயர்வு சம்பளம் கூடுதல் சொந்த தொழிலில் முன்னேற்றம் என்று நன்றாக இருக்கும் தந்தைவழி மருத்துவச் செலவுகள் அல்லது குடும்ப அங்கத்தினர் வகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாக வாய்ப்பு உள்ளது கவனம் தேவை மேலும் சனி செவ்வாய் சுக்கிரன்  கூட்டு நன்மை தருவதாக இருக்கிறது வழக்குகள் கோர்ட் என்று இருப்பவர்களுக்கு சாதகமான நிலை இந்த வாதம் உள்ளது வெற்றி உண்டாகும் விவசாயிகள் மற்ற அனைத்துப் பிரிவினரும் இந்த மாதம் தங்கள் தேவைகள் பூர்த்தியாகி ஒரு மகிழ்ச்சியான நிலை இருப்பதை பார்ப்பீர்கள் கெடுதல் செய்யும் கிரகங்கள் இல்லை என்று சொல்லலாம் வரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் வார்த்தையில் மட்டும் கவனம் தேவை

கார்த்திகை 2,3,4 பாதங்கள் சந்திராஷ்டமம்: 25.02.2022 காலை 10.12 மணி முதல் 26.02.2022 காலை 08.17 மணி வரை

ரோஹிணி சந்திராஷ்டமம்: 26.02.2022 காலை 08.17 மணி முதல் 27.02.2022 காலை 06.57 மணி வரை

மிருகசீரிடம் 1,2 பாதங்கள் சந்திராஷ்டமம்: 27.02.2022 காலை 06.57 மணி முதல் 28.02.2022 அதிகாலை 05.08 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : சூரிய நமஸ்காரம், சிவ வழிபாடு கோயிலில் விளக்கேற்றுதல் ப்ரதோஷம் நந்தி வழிபாடு நன்மை தரும். அன்ன தானம் செய்யுங்கள்

மிதுனம்(மிருகசீரிடம்3,4 பாதங்கள், திருவாதிரை4 பாதம், புனர்பூசம்1,2,3 பாதங்கள்முடிய):

உங்கள் ராசிநாதன் புதன் எட்டாம் வீட்டில் சனிபகவானோடு சேர்த்திருக்கிறது நன்மை தருவதாகும் தெய்வ அனுபவம் உண்டாகும் பொதுவாக அஷ்டமத்தில் இருக்கும் கிரகம் கெடுதலை செய்யும் என்பதாக ஒரு அபிப்ராயம் உண்டு ஆனால் அது எல்லோருக்கும் அப்படி இருப்பதில்லை அஷ்டம சனி அஷ்டம குரு சந்திராஷ்டமம் என்றெல்லாம் சொன்னால் கூட அப்படி அந்த கிரகங்கள் தீமை தரனும் என்பதாக பொருள் கொள்ளக்கூடாது இந்த மாதம் புதனும் சனியும் எட்டில் இருந்து இதுவரை இருந்துவந்த மனக் கஷ்டங்களை செலவுகளை குழப்பங்களை போக்குகிறார் மேலும் சனி பகவான் இதுவரை வழக்குகள் இருந்து வந்தால் அதில் ஒரு வெற்றியைத் தருகிறார் ஒன்பதில் சூரியன் வலுவாக இருந்து உங்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறார் ராகு கேது இவர்கள் 11ம், 5ம் இடத்திற்க்கு உண்டான சுப பலனை முன்பே  தருகிறார்கள் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் காணப்படும் விரும்பிய இடமாற்றம் இருக்கும் சொந்த தொழிலில் லாபம் அதிகரிக்கும் குரு பகவான் ஒன்பதில் இருந்துகொண்டு ராசியை மிதுன லக்னத்தை பார்ப்பது சங்கடங்கள் அனைத்தும் தீர வழி செய்கிறது பெரும்பாலான கிரக நிலைகள் சாதகம் எழில் இருக்கும் செவ்வாய் சுக்கிரன் வாழ்க்கை துணைவர் முன்னேற அவர்கள் மூலம் நன்மை உண்டாகும்படி செய்கிறது  மேலும் செவ்வாய் சுக்கிரன் 25 தேதிக்குப் பின் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதும் ஓரளவு நன்மை தரும் இருந்தாலும் ஆரோக்கியம் வீடு திருமணம் குழந்தை பாக்கியம் இந்த வகையில் கொஞ்சம் தாமதமாக நன்மை இருக்கும் சந்திரன் மற்ற அனைத்து கிரகங்களும் அதிக அளவில் நன்மை தருவது இந்த மாதம் சிறப்பாக இருக்கும்  மிதுன ராசிக்காரர்கள் மற்றும் மிதுன லக்னமாக உள்ளவர்களும் சிறந்த பலனை அடைவார்கள் குறிப்பாக பெண்கள் நல்ல பலனை பெறுவார்கள்

மிருகசீரிடம் 3,4 பாதங்கள் சந்திராஷ்டமம்: 27.02.2022 காலை 06.57 மணி முதல் 28.02.2022 அதிகாலை 05.08 மணி வரை

திருவாதிரை சந்திராஷ்டமம்: 28.02.2022 அதிகாலை 05.08 மணி முதல் 01.03.2022 அதிகாலை 03.24 மணி வரை

புனர்பூசம் 1,2,3 பாதங்கள் சந்திராஷ்டமம்: 01.03.2022 அதிகாலை 03.24 மணி முதல் 02.03.2022 இரவு 01.52 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :. சக்ரத்தாழ்வார், சுதர்ஸன பெருமாளை வணங்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் சக்ரத்தாழ்வாரை 12 தடவை வலம் வருவதும். ஏழை எளியோர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதும், அன்னதானம் செய்வதும் நன்மை உண்டாக்கும்.

கடகம்(புனர்பூசம்4ம்பாதம், பூசம்4பாதங்கள், ஆயில்யம்4 பாதங்கள்):

உங்கள் ராசிநாதர் சந்திரன் மாதம் பிறக்கும் போது விரயத்தில் இருந்தாலும் சுப விரயம் என இருக்கும். 25ம் தேதிக்கு பின் செவ்வாய் சுக்ரன் சனி புதன் ராசிக்கு 7ல் கூட்டாக இருப்பது ஓரளவு நன்மை தந்தாலும் 8ல் சூரியன் குரு சில சிக்கல்கள் தடைகள் கொடுத்து கொண்டிருக்கும் ஒரு ஆறுதல் குரு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பது ஓரளவு தேவைகள் பூர்த்தியாகும், உழைப்பில் முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கொஞ்சம் இழுபறியாகும். சொந்த தொழிலில் போட்டிகளால் மனதில் ஒரு அதைரியம் ஏற்பட்டாலும் ஜீவன ஸ்தானத்துக்கு உண்டான பலனை ராகு முன்கூட்டியே தருவது ஆறுதல் ஆகும். எதையும் தக்க ஆலோசனை பெற்று யோசித்து செய்வது நலம் பயக்கும். கடந்த மாதம் போல் இந்த மாதமும் கொஞ்சம் இல்லத்தில் விட்டு கொடுத்து செல்வது, உத்தியோகத்தில் சொந்த தொழிலில் அனுசரித்து செல்வது அதிக நன்மை தரும். குரு 12ம், 2ம் & 4ம் இட பார்வை குடும்பத்தில் புது வரவு, வீடு பராமரிப்பு வேலைகளில் முன்னேற்றம், தாயார் வாகன, வீடு வகையில் யோகத்தை தரும். ராகுவால் உத்தியோகத்தில் சொந்த தொழிலில் இரட்டை வருமானம் உண்டாகும். கேதுவும் கெடுதல் செய்யாமல் இருப்பது ஓரளவு இந்த மாதம் சமாளிக்கும் படியாக இருக்கும். இருந்தாலும் மன சஞ்சலமும் இருப்பது ஒருவித பயத்தை கொடுத்து கொண்டிருக்கும். எதையும் யோசித்து செய்வது நல்லது. அவசரப்படாமல் இருப்பது நன்மை தரும். பெரிய மாற்றங்கள் இருக்காது என்பது ஒரு ஆறுதல்.

புனர்பூசம் 4ம் பாதம் சந்திராஷ்டமம்: 01.03.2022 அதிகாலை 03.24 மணி முதல் 02.03.2022 இரவு 01.52 மணி வரை

பூசம் சந்திராஷ்டமம்: 02.03.2022 இரவு 01.52 மணி முதல் 03.03.2022 இரவு 00.39 மணி வரை

ஆயில்யம் சந்திராஷ்டமம்: 03.03.2022 இரவு 00.39 மணி முதல் 03.03.2022 இரவு 11.55 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : காசி விஸ்வநாதர், சிவாலயம் சென்று வழிபடுவது, குலதெய்வ வழிபாடு, குருமார்களை வணங்குவது போன்றவையும் அன்னதானம் செய்வதும் அதிக நன்மை தரும்.

சிம்மம்(மகம்4பாதம், பூரம்4பாதம், உத்திரம்1ம்பாதம்முடிய):

ராசிநாதன் சூரியன் 7வீட்டில். இந்த மாதம் சூரியன் உங்களுக்கு குரு பகவானுடன் சேர்ந்து நன்மை செய்கிறார். குரு ராசியை லாபத்தை தைரிய ஸ்தானத்தை பார்ப்பது முயற்சிகளில் ஒரு முன்னேற்றத்தை தரும். கடந்த மாதம் போல சனி பகவான் எலும்பு, கால் வலி, இருதயம், சிறுநீரக பாதிப்பு என்று கொஞ்சம் மருத்துவ செலவை வைப்பார். கேது பகவான் 3ம் இட பலனை தருவார் அதனால் குடும்பத்தில் ஒற்றுமை பிரிந்தவர் சேருதல், சகோதரவகையால் நன்மை, பெண்களால் மகிழ்ச்சி குழந்தை, கல்வி, பெயர் புகழ் என நன்றாகவே இருக்கும். 9ம் இட பலனை தரும் ராகு 6ல் வரும் சுக்ரன், செவ்வாய் மருத்துவ செலவு பெற்றோர்கள் வகையிலும், தனது உடல் ஆரோக்கியத்துக்கான செலவையும், மன வருத்தமும் அதிகரிக்க செய்வார்.. கொஞ்சம் குழப்பம் இருந்து கொண்டிருக்கும் 10க்குடைய சுக்ரன் 6ல் மறைந்தாலும் நட்பு வீடு என்பதால் ஜீவன வகையில், உத்தியோகம் சொந்த தொழில் இவற்றில் ஓரளவு நன்மை, கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது, வீடு வாகன பராமரிப்பு கடந்த கால வழக்குகள் என்றவகையில் செலவுகள் வந்தாலும் முடிந்த வரையில் தள்ளிப்போடுவது நன்மை தரும் அனைத்து பிரிவினரும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறும் நிலை இருக்கும் இருந்தாலும் நிதானம் முன் யோசனை தேவை. பரவாயில்லை மாதம்.

மகம் சந்திராஷ்டமம் : 03.03.2022 இரவு 11.55 மணி முதல் 04.03.2022 இரவு 11.47 மணி வரை

பூரம் சந்திராஷ்டமம் : 04.03.2022 இரவு 11.47 மணி முதல் 06.03.2022 இரவு 12.21 மணி வரை

உத்திரம் 1ம் பாதம் சந்திராஷ்டமம் : 06.03.2022 இரவு 12.21 மணி 07.03.2022 இரவு 01.39 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : பைரவர் வழிபாடு, பழனிமலை முருகன் வழிபாடு, புராதன கோயில் கைங்கர்யங்கள் செய்வது, ஏழை எளியோருக்கு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வது தான தர்மங்களை செய்வதும் நன்மை தரும்

கன்னி🙁உத்திரம்2,3,4 பாதங்கள், ஹஸ்தம்4 பாதம், சித்திரை1,2 பாதங்கள்முடிய):

உங்கள் ராசிநாதர் 5ல் மாதம் முழுவதும், சனி பகவானுடன் சேர்ந்து ஓரளவு நன்மை தருகிறார். 25,26 தேதிகளுக்கு பின் செவ்வாய் சுக்ரனும் வருமானத்தை அதிகரித்து செலவை குறைக்கிறார். 6ல் சூரியன் குருவுடன் சேர்ந்து மன சோர்வு, கடன் வாங்கும் நிலை பொதுவெளியில் சங்கடங்கள் என தந்தாலும், குரு பார்வை 10ம், 2ம் இடம் இவற்றுக்கு இருப்பது ஆறுதல் ஜீவன வகையில் நன்மையும், குடும்பம் சுப செலவுகள் ஒற்றுமை கூடுதல் புனித யாத்திரை என்ற அளவில் நன்மை இருக்கும். கேது 2க்குண்டான பலனை செய்வது ஓரளவு நன்மை என்று இருந்தாலும் ராகு 8க்குண்டான பலனாக. வீண் மருத்துவ செலவுகள் அடிபடுதல், பயணங்களால் செலவு, மன வருத்தங்கள், உறவுகளில் விரிசல் என கொடுக்கும். அவரவர் பிறந்த ஜாதகத்தை கொண்டு நல்ல பலனும் உண்டாகும். ராகுவால், உடல் நல பாதிப்புகள் உண்டாக வாய்ப்பு. சனி பகவான் லாபத்தை பார்ப்பது வருமானத்தை அதிகரிக்க செய்யும். கடந்த கால உழைப்பு இப்பொழுது பலனை தரும். திருமணம் விடு வாகன யோகம், புதிய செயல்களில் வெற்றியையும், உத்தியோக மாற்றம், வெளியூர் வெளிநாடு செல்லும் நிலை சிலருக்கு மகிழ்ச்சியையும் இனி சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையும் தரும். எத்தனையோ இடர்களை சமாளித்தவர்கள் என்பதால் வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டு முன்னேறுவீர்கள் . பொதுவில் இந்த மாதம் நன்மைகள் அதிகம் உண்டு.

உத்திரம் 2,3,4 பாதங்கள் : சந்திராஷ்டமம் 06.03.2022 இரவு 12.21 மணி 07.03.2022 இரவு 01.39 மணி வரை

ஹஸ்தம்: சந்திராஷ்டமம் : 07.03.2022 இரவு 01.39 மணி முதல் 08.08.2022 இரவு 03.39 மணி வரை

சித்திரை 1,2 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 08.03.2022 இரவு 03.39 மணி முதல், 09.03.2022 காலை 06.14 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : நின்ற திருக்கோல பெருமாள் தாயார் சேவித்தல், தசாவதாரங்களில் கிருஷ்ணரை வணங்குதல், அருகில் உள்ள கோயிலில் விளக்கேற்றுதல், அன்னதானம், கல்வி தானம் போன்றவை செய்தல் மிகுந்த நன்மை தரும்.

துலாம்🙁 சித்திரை3,4 பாதங்கள், ஸ்வாதி4 பாதம், விசாகம்1,2,3 பாதங்கள்முடிய):

உங்கள் ராசிநாதர் சுக்ரன் செவ்வாயுடன் மாதம் முழுவதும் 3,4 இடங்களில் சஞ்சரிப்பது, சுக ஸ்தானத்தில் சனி ஆட்சி, புதனுடன் தைரியம், நிம்மதி இவை உண்டாகுதல் தொழிலில் சமாளிக்கும் அளவுக்கு வருமானம், 5ல் சூரியன் குரு சேர்க்கை குழந்தை பாக்கியம், பிள்ளைகளால் பெருமை, வருமானம் பெருகுதல் நாள்பட்ட வரவுகள் இப்பொழுது கிடைத்தல் மேலும் குருபகவான் ராசியை பார்ப்பது மனதில் உற்சாகத்தை தரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஜீவன வகையில் நல்ல ஏற்றத்தை தரும். பொருளாதாரம் மிக நன்றாக இருக்கும்.. புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் சொந்த தொழில் விரிவாக்கம் அல்லது புதிதாக தொடங்கும் எண்ணம் இந்த மாதம் ஈடேற அதிக வாய்ப்பு, அனைவருக்கும் ஜீவன வகையில் அதிக நன்மை உண்டாகும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். லாபாதிபதி சூரியன் 5ல் குருவுடன் இருப்பது தாமதமாகி கொண்டிருந்த குழந்தை பாக்கியம் கிடைத்தல் கல்வியில் முன்னேற்றம், உத்தியோகத்தில் அதிகாரம் அந்தஸ்து புகழ் கிடைத்தல் கடந்த காலங்களில் போட்ட விதை இன்று மரமாகி பலன் தர ஆரம்பிக்கும். அதே நேரம் ராசியின் பலனை கேதுவும் 7ம் இட பலனை ராகுவும் தருவது சிறு பாதிப்புகள், வாழ்க்கை துணைவர் வகையில் செலவுகள், குடும்பத்தில் சிறு சஞ்சலம் என இருக்கும். வார்த்தைகளை விடும்போது கவனம் தேவை. பொதுவில் நன்மை அதிகம் என இருந்தாலும், கொஞ்சம் கவனமுடன் செயல்படுவது கெடுதலை குறைக்கும். முயற்சிகளை விடாமல் சோர்ந்து விடாமல் செய்வது வரும் காலங்களுக்கான விதையாகும்.

சித்திரை 3,4 பாதங்கள்: சந்திராஷ்டமம் : 08.03.2022 இரவு 03.39 மணி முதல், 09.03.2022 காலை 06.14 மணி வரை

ஸ்வாதி 4 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 09.03.2022 காலை 06.14 மணி முதல் 10.03.2022 காலை 09.17 மணி வரை

விசாகம் 1,2,3 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 10.03.2022 காலை 09.17 மணி முதல், 11.03.2022 பிற்பகல் 12.17 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : நரசிம்மர் வழிபாடு, அல்லது துர்கை வழிபாடு நலிவடைந்த கோயில்களில் உழவாரப்பணி, ஒருகால பூஜைக்கு உதவுதல். முடிந்த அளவு தானம் செய்யுங்கள் பெரியோர்களுக்கு மரியாதை கொடுத்து அவர்கள் சொல்படி நடப்பதும் நன்மை உண்டாக்கும்.

விருச்சிகம்🙁 விசாகம்4ம்பாதம், அனுஷம்4பாதம், கேட்டை4 பாதங்கள்முடிய):

ராசிநாதர் செவ்வாய் சுக்ரனுடன், குடும்பஸ்தானத்தில் 25 தேதி வரையிலும் பின் மூன்றில் மன தைரியஸ்தானத்தில் சனி, புதன் என்று கூட்டாக நன்மைகளை தருவதால் மன திடமும் உழைப்பில் உறுதியும் பொருளாதாரம் வகையில் ஏற்றமும் தரும், சூரியன் குருவுடன் சுக ஸ்தானத்தில் மனதில் சோர்வையும் அவ நம்பிக்கையும் தரும்படி இருந்தாலும் குருபார்வையும், 12ம் இடம் பலனை தரும் கேதும் சேர்ந்து கவலைபடாதே கடந்த கால நிகழ்வுகள் மீண்டும் வராமல் பார்த்து கொள்கின்றனர். உத்தியோகத்தில் சொந்த தொழிலில் ஜீவன வகையில் அதிக நன்மை நிச்சயம் இருக்கு 6க்குடைய பலனை முன்பே தரும் ராகுவால் , நீண்ட நாளுக்கு பின் முயற்சிகளில் வெற்றி, தாமதமாகி கொண்டிருந்த திருமணம், குழந்தை பாக்கியம் வீடுவாகன யோகங்கள் கைகூடுதல் மனதில் உற்சாகம், இல்லத்தேவைகள் பூர்த்தி ஆகுதல் போன்றவை கடந்த மாதத்தின் நீட்சியாக இருப்பதும் பெரும்பாலான கிரஹ நிலை இந்த மாதமும் சாதகமாகவே இருப்பதும் கெடுதல் அதிகம் இல்லை என்ற ஆறுதல் இந்த மாதம் நல்ல மாதம் என்பதாக செய்யும். ஜன்ன ஜாதகம் நன்றாக இருந்தால் இவை மேலும் அதிகரித்து நம்பிக்கையை அதிகரிக்க செய்யும் வரும் வருடங்கள் துன்பத்திலிருந்து விடுதலை பெற்ற நிலையை கொடுக்கும் என்பது உறுதி அதே போல செவ்வாய் உச்சத்தில் மாத மத்திக்கு மேல் இருப்பது அதிக நன்மையை தரும். நல்ல மாதம் இது.

விசாகம் 4ம் பாதம் : சந்திராஷ்டமம் : 10.03.2022 காலை 09.17 மணி முதல், 11.03.2022 பிற்பகல் 12.17 மணி வரை

அனுஷம் 4பாதங்கள் : சந்திராஷ்டமம் : 12.02.2022 காலை 06.38 மணி முதல் 13.02.2022 காலை 07.11 மணி வரை & 11.03.2022 பிற்பகல் 12.17 மணி முதல் 12.03.22 பிற்பகல் 03.14 மணி வரை

கேட்டை 4 பாதங்கள் : சந்திராஷ்டமம் : 13.02..2022 காலை 07.11 மணி முதல் 14.02.2022 காலை 09.38 மணி வரை & 12.03.2022 பிற்பகல் 03.14 மணி முதல் 13.03.2022 மாலை 05.17 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : குல தெய்வ வழிபாடு நன்மை தரும் தான தர்மங்கள் கோயில் கைங்கர்யங்கள் போன்றவை நன்மை தரும். கஷ்டங்கள் விலகுவதால் அதிக அளவில் அன்னதானம் செய்யுங்கள்.

தனூர்(மூலம்4 பாதம், பூராடம்4 பாதம், உத்திராடம்1ம்பாதம்முடிய):

ராசிநாதர் குரு, சூரியனுடன் 3ல் தைரிய ஸ்தானம் இருந்தாலும் சூரியன் மட்டுமே அதிக நன்மை குருபகவான் பார்வையால் நன்மை என்ற அளவில் இருக்கும். சுக்ரனும்,புதனும் மற்றும், செவ்வாய் சனி 2ம் இடத்தில் மாத பிற்பகுதில் கூட்டு சேர்வது ஓரளவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். இருந்தாலும் ராகு, 5ன் இடப்பலன், மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைதல், தடைகள் ஏற்படுதல், குழந்தைகளால் மன வருத்தம், குழந்தை பேறு தாமதம் ஆகுதல் என்று இருக்கும். இந்த மாதமும் கேதுவால் அதிக நன்மை, ஜீவன வகையில் வருமானம் பெருகுதல், பொருளாதார ஏற்றம், நல்ல வேலை சம்பளம், விரும்பிய இடமாற்றம், சொந்த தொழில் விருத்தி அடைதல் என நன்றாக இருக்கும் மாத ஆரம்பம் சலிப்பை தரும் விதமாக இருக்கும். இரண்டில் புதன் மன கிலேசம் அவ நம்பிக்கை தருவதால் குடும்பத்தில் சிறு மோதல்கள், பொது இடங்கள், உழைக்கும் இடம் இவற்றில் வீண் வாதங்கள் என்று இருக்கும் வார்த்தை பிரயோகத்தை கவனமாக செய்வது பெரியோர்களின் ஆலோசனைப்படி நடப்பது என்று இருந்தால் நன்மை உண்டு.. ராசிநாதர் குரு பார்வையால் நன்மை செய்கிறார். சனி லாபத்தை பார்ப்பதால் உழைப்புக்கேற்ற ஊதியம் நிச்சயம் கிடைக்கும் பிறப்பு ஜாதகம் நன்றாக இருந்தால் நன்மை அதிகம் இருக்கும் பரவாயில்லை என சொல்லும் மாதமாக இருக்கும். எதையும் யோசித்து தகுந்த ஆலோசனை பெற்று செய்வதும் கடுமையான வார்த்தை பிரயோகத்தை தவிர்ப்பதும் மேலும் நன்மை தரும்.

மூலம் 4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 14.02.2022 காலை 09.38 மணி முதல் 15.02.2022 காலை 11.38 மணி வரை

பூராடம் 4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 15.02.2022 காலை 11.38 மணி முதல் 16.02.2022 பிற்பகல் 01.35 மணி வரை

உத்திராடம் 1ம் பாதம் சந்திராஷ்டமம் : 16.02.2022 பிற்பகல் 01.35 மணி முதல் 17.02.2022 பிற்பகல் 02.04 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : பாம்பு தலையில் இருக்கும் சிவன் கோயில்கள் துர்கை கோயில்கள் மற்றும் பாம்பு படுக்கையில் அந்த சயனமாக இருக்கும் பெருமாள் கோயில் சென்று வழிபடுவதுவும், அன்னதானம், ஏழை குழந்தை படிக்க உதவிகள், சரீர ஒத்தாசைகள் இவற்றை செய்ய நலம் உண்டாகும்.

மகரம்🙁உத்திராடம்2,3,4 பாதங்கள், திருவோணம்4 பாதம், அவிட்டம்1,2 பாதங்கள்முடிய) :

பல கிரஹங்கள் சாதகம், ராசிநாதர் பலம், ஜீவன ஸ்தானத்தை பார்ப்பது, குரு பகவானின் 6,8,10ம் இட பார்வை இதுவரை இருந்துவந்த கடன்,வியாதி எதிரி, பயம், ஜீவன வகையில் தடைகள் இவற்றை நீக்கி புதிய உற்ச்சாகம் முயற்சிகளில் வெற்றி என்று தருகிறார். மேலும் ராசியில் 25ம் தேதிக்கு மேல் வரும் செவ்வாய் சுக்ரனும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை உண்டாக்குகிறார்கள். மேலும் 10ம் இடத்துக்கு உண்டான பலனை முன் கூட்டியே தரும் கேதுவால் இரட்டை வருமானம் மொத்த தேவைகளையும் பூர்த்தி செய்யும் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தோருக்கு கரு இந்த மாதம் உண்டாக மிக அதிக வாய்ப்பு உள்ளது தாமதமாகி கொண்டிருந்த திருமண நிலையில் வரன் அதிகம் வரும் ஓரளவு திருமண தேதியை நிச்சயமாக்கும் என்பது உறுதி. பொதுவில் இந்த மாதம் பல கிரஹ நிலைகள் சாதகம் என்பதால் கடந்த காலங்களில் தடைபட்டு வந்த அனைத்தும் மெல்ல சீர்பட துவங்கும். கடன் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபட ஏற்பாடு நடக்கும். பெண்களால் உதவி, குடும்ப உறவுகளின் மூலம் மகிழ்ச்சி அக்கம்பக்கத்தாரால் எதிர்பாராத உதவி, வாழ்க்கை துணைவரால் அதிக நன்மை அன்பு கிடைத்தல், சமூதாயத்தில் அந்தஸ்து கூடுதல், பெரிய பொறுப்புகள் கிடைத்தல் அரசியல்வாதிகள், அரசாங்கத்தில் உயர்பதவி தனியார் துறைகளில் பெரியபதவியில் இருப்போர் சொந்த தொழில் செய்வோர் இவர்களுக்கு மிக நல்ல நிலை ஏற்படும். அனைத்து பிரிவினருக்கும் மிக சிறந்த மாதமாக அமையும் பிறப்பு ஜாதகம் நன்றாக இருந்தால் இது இன்னும் அதிகரிக்கும்.

உத்திராடம் 2,3,4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 16.02.2022 பிற்பகல் 01.35 மணி முதல் 17.02.2022 பிற்பகல் 02.04 மணி வரை

திருவோணம் 4 பாதம் சந்திராஷ்டமம் : 17.02.2022 பிற்பகல் 02.04 மணி முதல் 18.02.2022 பிற்பகல் 02.37 மணி வரை

அவிட்டம் 1,2 பாதங்கள் சந்திராஷ்டமம் : 18.02.2022 பிற்பகல் 02.37 மணி முதல் 19.02.2022 பிற்பகல் 02.48 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள்: செஞ்சுலக்ஷ்மி தாயார் வழிபாடு, தாயார் சன்னதியில் விளக்கேற்றுதல், குலதெய்வம் பூஜை வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் செய்வது, முடிந்த அ:ளவு அன்னதானம், பறவை பசு போன்ற உயிரினங்களுக்கும் உணவிடுதல் மிக நன்மையை தரும்.

கும்பம்🙁 அவிட்டம்3,4 பாதங்கள், சதயம்4 பாதம், பூரட்டாதி1,2,3 பாதங்கள்முடிய):

ஜென்ம குரு சிறைவாசம் என்பர் சூரியனும் ராசியில் இருந்தால் நன்மை தராது என சொல்வர் ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. இந்த மாதம் ராசியில் இருக்கும் குருவும், சூரியனும் கெடுதலை குறைக்கின்றனர் என சொல்லலாம் இவர்களின் வலிமை நன்றாக இருக்கு அதே போல் மாதம் ஆரம்பம் லாபத்தில் இருக்கும் சுக்ரன், செவ்வாயும் வருமானத்தை பெருக்கி பொருளாதாரம் நன்றாக இருக்கும்படி பார்த்து கொள்கின்றனர். இந்த மாதம் அதிக பலனை தரும் ஒரே கிரஹம் ராகு இவர் 3ம் இடத்துக்கு உண்டான பலனை முன்கூட்டியே தருவது பல துன்பங்களை குறைக்க உதவும். ஜீவன வகையில் உத்தியோகம் சொந்த தொழில் இவற்றில் பெரிய முன்னேற்றம் இல்லை என்றாலும் சிரமங்களும் இல்லை என சொல்லலாம். இந்த மாதம் சுமாராக த்தான் இருக்கும். முயற்சிகள் இழுபறிக்கு பின் நிறைவேறும். பிறப்பு ஜாதகம் நன்றாக இருந்தால் இது ஓரளவுக்கு நன்றாக இருக்கும். அவசரப்படாமலும் பெரியோர்கள் தகுந்தவர்களின் யோசனையை கேட்டு நடப்பது நன்மை தரும். எதிலும் ஒரு மந்த நிலை இருக்கும் அதே நேரம் இறை நம்பிக்கை மனோதிடம் அதிகரிக்க செய்யும். பொறுமை நிதானம் கொண்டு நடப்பது குடும்பத்தில், அலுவலகத்தில் பொது வெளியில் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வது இந்த மாதம் பரவாயில்லை என சொல்ல வைத்துவிடும். வெகு சுமார் மாதம்

அவிட்டம் 3,4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 18.02.2022 பிற்பகல் 02.37 மணி முதல் 19.02.2022 பிற்பகல் 02.48 மணி வரை

சதயம் 4 பாதங்கள் சந்திராஷ்டமம் : 19.02.22 பிற்பகல் 02.48 மணி முதல் 20.02.2022 பிற்பகல் 02.40 மணி வரை

பூரட்டாதி 1,2,3 பாதங்கள் சந்திராஷ்டமம் : 20.02.2022 பிற்பகல் 02.40 மணி முதல் 21.02.2022 பிற்பகல் 02.16 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் வடுவூர் கோதண்டராமர் வழிபாடும் எங்கு ஆஞ்சநேயர் கோயில் இருந்தாலும் சனிக்கிழமைகளில் அவருக்கு விளக்கேற்றி அனுமன் சாலீசா படிப்பது ராமநாம ஜெபம் செய்வதும், முடிந்த அளவு ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்வதும் நன்மை தரும்.

மீனம்🙁 பூரட்டாதி4ம்பாதம், உத்திரட்டாதி4 பாதம், ரேவதி4 பாதம்முடிய):

ராசிநாதர் குரு சூரியனுடன் விரயத்தில் இது நன்மை தருவதாக அமைகிறது சுப யாத்திரைகள், ஆடை ஆபரண செலவு, திருமணம் குடும்ப விசேஷ செலவுகள் என இருக்கும். அதே போல லாபத்தில் சனி புதன், பொருளாதார ஏற்றம், ஜீவன வகையில் முன்னேற்றம். உத்தியோகத்தில் கடந்த கால உழைப்பிற்கான பதவி சம்பள உயர்வு, விரும்பிய இடமாற்றம், சொந்த தொழிலில் தேங்கி இருந்த விற்பனை சூடுபிடித்து வியாபாரம் பெருகுதல், புதிய விரிவாக்க முயற்சிகளில் வெற்றி உண்டாகுதல், போன்றவையும், 25ம் தேதிக்கு மேல் லாபத்தில் வரும் செவ்வாய், சுக்ரன் மேலும் இவற்றை அதிகரித்து உங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறார், குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி பெருகும் தாமதம் ஆகி கொண்டிருந்த திருமணம் குழந்தைபாக்கியம் சிலருக்கு உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். அனைத்து பிரிவினருக்கும் இந்த மாதம் நன்மை அதிகம். அதே நேரம் சந்திரனின் சஞ்சாரமும் 2ம் இட, 8ம் இட பலன்களை முன்கூட்டியே தரும் ராகு கேதுவால் அடிபடுதல், முயற்சிகளில் தடை, விபத்து, பயம், விரோதிகள் மூலம் கெடுதல் என இருக்கும். முக்கியமாக அலுவலகத்தில் உடன் பணி புரிவோருடன் வாக்குவாதம் ரகசியங்களை பகிர்தல் நிறுவனத்தை பற்றி குறை சொல்வது இவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சொந்த தொழில் செய்வோர் தொழிலாளர் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எங்கும் உணர்ச்சிவசப்படுவது கோபப்படுவது அவசரப்படுவது இவற்றை சுத்தமாக கைவிட்டால் நன்மை மிக அதிக அளவில் இருக்கும் பொதுவாக குடும்ப அங்கத்தினர் வகையில் மருத்துவ செலவு கூடும். நன்மை அதிகம் தரும் மாதம்.

பூரட்டாதி 4ம் பாதம் சந்திராஷ்டமம் : 20.02.2022 பிற்பகல் 02.40 மணி முதல் 21.02.2022 பிற்பகல் 02.16 மணி வரை

உத்திரட்டாதி 4 பாதம் சந்திராஷ்டமம் : 21.02.2022 பிற்பகல் 02.16 மணி முதல் 22.02.2022 பிற்பகல் 01.37 மணி வரை

ரேவதி 4 பாதம் சந்திராஷ்டமம் : 22.02..2022 பிற்பகல் 01.37 மணி முதல் 23.02.2022 பிற்பகல் 12.43 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள்: இஷ்ட தெய்வம் குல தெய்வ வழிபாடும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வென்னை வெற்றிலை மாலை சாற்றல், ஸ்லோகம் ராம நாம ஜெபம் செய்தல் & முடிந்த அளவு தான தர்மங்களை செய்வதும் பசித்தோருக்கு உணவிடுவதும் துன்பங்களை குறைக்கும்.

அன்புடன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி(ரவி சாரங்கன்)

ஜோதிடர்,

D1-304, Block D1, Dhakshin Appartment

Siddharth Foundation, Iyyencheri Main Road,

Urappakkam – 603210, Kancheepuram Dist

Land Line : 044-35584922

ஃபோன் நம்பர் : 8056207965 (வாட்ஸப்)

Email ID : mannargudirs1960@hotmail.com

!!ஸுபம்!!

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.