ப்லவ வருஷம் ஐப்பசி மாதம் ராசி பலன் (துலாம் மாதம்)

ஜெய் ஸ்ரீமன் நாராயணா! வருகிற 17.10.2021 பிற்பகல் 01.12.17 மணிக்கு சூரியபகவான் கன்யா ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அவர் அந்த ராசியில் 16.11.2021 பிற்பகல் 01.02.53 மணி வரை சஞ்சரிக்கிறார். இந்த காலத்தில் மற்ற கிரஹங்களின் சஞ்சாரங்களையும் கணக்கில் கொண்டு ப்லவ வருஷம் ஐப்பசி மாதம் ராசி பலன் காணலாம். இது லஹரி அயனாம்ஸப்படி (-24:09:25) கணிக்கப்பட்ட பலன்கள்.

குறிப்பு : லஹரி அயனாம்ஸப்படி குருபகவான் 20.11.21 இரவு 11.30 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்கிறார். (வாக்கியப்படி 13.11.2021)

சூரியன் துலாம் ராசியில் பெயர்ச்சியாகும் தருணத்தில் கிரஹ சஞ்சார நிலைகள்:

லக்னம் – திருவோணம் 1 – மகரம்

சூரியன் – சித்திரை 3 – துலாம்

சந்திரன் – பூரட்டாதி 1 – கும்பம்

செவ்வாய் – சித்திரை 2 –  கன்னி

புதன் – ஹஸ்தம் 2 –  கன்னி  (வக்ரம்)

குரு – அவிட்டம் 2 – மகரம்  (வக்ரம்)

சுக்ரன் – அனுஷம் 4 – விருச்சிகம்

சனி – திருவோணம் 1 – மகரம்

ராகு – கிருத்திகை 4 – ரிஷபம்

கேது – அனுஷம் 2 –  விருச்சிகம்

12 ராசிகளுக்குண்டான பலனை பிடிஎப் வடிவில் டவுன்லோட் செய்ய

நாட்டுப் பலன்:

பொதுவாக இந்த மாதம் நாட்டில் மழை அதிகம். விலைவாசிகளில் எண்ணைய் பருப்பு வகைகளும் பழவகைகளும் கூடுதல் விலை இருக்கும். உணவு பொருள்கள் பால் போன்றவை உற்பத்தி குறைய வாய்ப்புண்டு. கலவரங்கள், தீவிரவாதம், குழப்பங்களும் ஆள்வோரை சங்கடப்படுத்தும். கல்வியில் குழப்பம் ஏற்படும். ஆபரணவகையில் பெரிய மாற்றம் இருக்காது. அரசர்களுக்கு தீமை என்பது போல் இருப்பதால் ஆட்சிக்கு ஊறுவிளைவிக்கும் சம்பவங்களும், காவல் துறையில் அழுத்தங்களும் இருக்கும். ஜனங்கள் பெரியதாக பாதிக்க படமாட்டார்கள் எனினும் ஒரு பயம் கலந்த நிலை இருந்து கொண்டிருக்கும். குரு கும்ப ராசிக்கு பெயர்ந்த உடன் நிலமை சீரடையும். இந்த மாதம் நாட்டிற்கு பரவாயில்லை என்றாலும் மத்திய மாநில அரசை ஆள்வோருக்கு சங்கடங்கள் இருந்து கொண்டு ஒரு குழப்ப நிலை தொடரும். பொதுவில் சுமார் மாதம்.

மேஷ ராசி (அஸ்வினி , பரணி, கிருத்திகை 1ம்பாதம் முடிய) :

ராசி நாதன் செவ்வாய் 6ல் பலமாய் 22.10.21 வரை பின் 7ல், புதனும் உச்ச வீட்டில் 6ல், நல்ல பலனை மாதம் முழுவதும் தருகிறார்கள், மாத பிற்பகுதியில் சுக்ரன் 9ல் வந்து பொருளாதாரத்தை உயர்த்துகிறார். மற்ற கிரஹங்கள் அவ்வளவு சாதகம் இல்லை, உத்தியோகம், சொந்த தொழில் போன்றவற்றில் சுமார் முன்னேற்றம், வருமானம் பெருகும் ஆனாலும் வைத்தியம் மற்றும் சில சுப செலவுகளையும் கொடுப்பதால் மாத முற்பகுதி இழுபறியாக இருக்கும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். தனக்கோ அல்லது குடும்ப உறுப்பினர் மூலம் ஆரோக்கிய செலவுகள் இருக்கும். கவனம் தேவை.  சுக்ரன் மற்றும் புதனின் மாத பிற்பகுதி சஞ்சாரம் ஓரளவு சேமிப்பை தரும். பொதுவில் சிலருக்கு உத்தியோகம் நிமித்தம், படிப்பு போன்றவற்றாலும், பிள்ளைகளாலும் இட மாற்றம் இருக்கும் அது ஓரளவு நன்மை தரும். வீடுவாங்கும் யோகம் பரணி நக்ஷத்திரக்காரர்களில் சிலருக்கு இருக்கும். அரசுவகையிலான முயற்சிகள் தொடர்புகள் பெரிய நன்மை இப்பொழுது தராது. இழுபறி இருக்கும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நன்மை தரும். கல்வியை பொருத்தவரை கொஞ்சம் முயற்சிகள் தாமதம் ஆகும். சினிமா, பத்திரிகை, மீடியா துறைகளிலும் ஓரளவே நன்மை அரசாங்கத்தின் உயர்பதவியில் இருப்போருக்கு அழுத்தம் அதிகம் இருக்கும் பொறுமை நிதானம் தேவை பெண்களுக்கு ஓரளவு பரவாயில்லை பொதுவில் இந்த மாதம் பரவாயில்லை என்று இருக்கும். பொறுமையும் சிக்கணமும் அவசியம்.

அஸ்வினி : நக்ஷத்திராதிபதி கேது 8ல் இருந்தாலும் 7ஐ நோக்கி செல்வது நன்மை தரும். பொதுவில் சனியின் நக்ஷத்திரகாலில் இருப்பது சனி தரும் பலனை கேது தரும். பொருளாதாரம் மேம்படும், 10ல் இருக்கும் சனிபகவான் இரட்டிப்பு வருவாயை தரும். இடமாற்றம் குருவால் உண்டாகும் மற்ற சுக்ரனும் புதனும் ராசிநாதன் செவ்வாயும் அதிக நன்மை தருவதால் நினைத்த செயல்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உத்தியோகவகையில் மாற்றம் இருக்கும் அது நன்மையும் தரும். சொந்த தொழிலில் ஓரளவு நல்ல வருவாய் இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும் புது முயற்சிகள் ராகுவால் தடை பட வாய்ப்பு இரண்டில் இருப்பதால் வார்த்தைகளை விடும்போது கவனம் தேவை. மற்றபடி இந்த மாதம் நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டமம்: 06.11.21 இரவு 02.22 மணி முதல் 06.11.21 இரவு 11.58 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : பிள்ளையார் ஞாயிறு தோறும் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவதும், பிள்ளையார் அகவல் படிப்பதும் நன்மை தரும். முடிந்த அளவு தான தர்மம் செய்வதும் நன்மை தரும்.

பரணி : நக்ஷத்திராதிபதி சுக்ரன் 8ல் தெய்வ அனுகூலம் உண்டு. 22ம் தேதி முதல் 9ல், கூட ராசியாதிபதி மற்றும் 3க்குடைய புதன் இருவரும் நன்மை தருகின்றனர். மேலும் சனிபகவான் ஒரு மாற்றம் தருவார் அது தொழில் / உத்தியோகம் ரீதியாக வெளியில் செல்வதாக இருக்கும் நன்மை தரும். உடல்ரீதியான படுத்தல்கள் இருக்கலாம் கவனம் தேவை, குடும்ப உறுப்பினர் மூலம் வைத்திய செலவு இருக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். இரண்டில் ராகு வார்த்தைகளில் கவனம் தேவை, சொந்தங்களாலும் நெருங்கிய நண்பர்களாலும் மன கசப்புகள் ஏற்படலாம். மற்றபடி அனைத்து பிரிவினருக்கும் நன்மை தரும் மாதமாக அமைகிறது.

சந்திராஷ்டமம் : 06.11.21 இரவு 11.58 மணி முதல் 7ம் தேதி இரவு 09.04 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : மஹாலக்ஷ்மி, குபேரன், அருகில் உள்ள கோயிலில் தாயார் சன்னதியில் விளக்கேற்றி வழிபடுதல், வெள்ளிக்கிழமைகளில் மஹாலக்ஷ்மி பூஜை செய்வது பலன் தரும். அன்னதானம் வஸ்திர தானம் செய்வதும் நன்மை தரும்.

கிருத்திகை 1ம் பாதம் : உங்கள் நக்ஷத்திர நாதன் சூரியன் 7ல் நன்றாக இருந்தாலும் பலன் ஓரளவே அதே நேரம் சுக்ரன், செவ்வாய் மற்றும் புதன் சனி ஓரளவு நன்மை செய்வதால் சமாளித்து விடுவீர்கள், எதையும் யோசித்து பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து செய்வது நலம் தரும் பணம் தாராளம் எனினும் விரயமும் தாராளம். 2ல் ராகு வாக்கில் பொறுமை தேவை, வாக்கு வாதம் செய்வது அல்லது வாக்கு கொடுப்பது இவற்றில் நிதானம் கவனம் தேவை . நண்பர்களால் உடன் வேலை செய்வோரால், உறவுகளால் மன கசப்பு, வீண் சச்சரவு ஏற்பட்டு மன அழுத்தம் உண்டாகலாம். பொதுவாக தொழிற்ச்சாலைகளில் வேலை செய்வோர் மற்றும் மீடியா தொழிலில் உள்ளோர் கவனம் தேவை. மற்றபடி இந்த மாதம் பரவாயில்லை, சுப நிகழ்வுகளும் முயற்சிகளில் ஓரளவு வெற்றியும் உண்டாகும் சேமிப்பை அதிகரிப்பது நன்மை தரும்.

சந்திராஷ்டமம் ; 07.11.21 இரவு 09.04 மணி முதல் 08.11.21 மாலை 06.48 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : பகவதி அம்மன், துர்க்கை அம்மன். அருகில் உள்ள கோயில்களில் விளக்கேற்றி வழிபட்டு, அன்னதானம், கல்வி தானம் செய்வது மிகுந்த நன்மை தரும்.

ரிஷபம் (கிருத்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய)

ராசிநாதன் சுக்ரன் 30.10.21 வரை 7ல் பின் 8ல் இரண்டுமே நன்மை தருவதாக அமைகிறது செவ்வாய் ஓரளவு பரவாயில்லை, 6ல் சூரியன் வியாதி கடன், எதிரியை இல்லாமல் செய்துவிடும். புதன் திருமண வாய்ப்புகளை கொண்டு வரும். மேலும் சனிபகவான் லாபத்தை செய்கிறார் அதனால் எல்லா பாக்கியமும் உண்டாகும் முயற்சியில் வெற்றிகளும். தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் நீங்கிவிடும். சிலருக்கு உத்தியோக மாற்றம் திருமணம், புத்திரம், வீடுவாகன யோகம் என நன்றாகவே இருக்கும். கேது மனைவி குழந்தைகள் வழியில் வைத்திய செலவு அல்லது சில மன அழுத்தங்களை கொடுப்பது போல் இருந்தாலும் குருவின் அனுகூலம் இருப்பது அதை குறைக்கும். சேமிப்பு கூடும் சிலருக்கு புதிய உத்தியோகம், தொழில் விஸ்தரிப்பு, என்று இருக்கும், அரசாங்கம், வங்கி தொடர்பான செயல்கள் வெற்றி தரும். பெண்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் வண்ணம் கிரஹங்கள் நன்மை செய்யும். பொதுவில் இந்த மாதம் மிக நன்றாக இருக்கும். வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றி பெறுங்கள்.

கிருத்திகை 2,3,4  பாதங்கள் முடிய:  உங்கள் நட்சத்திர அதிபதி சூரியன்  வலுவாக இருக்கிறார் மேலும் ராசி நாதர் சுக்கிரன் அவரும் மிக பலமாக இருக்கிறார் இந்த மாதம் உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் ஜீவனம் உத்தியோகம் இந்த வகையில் தொழில் மாற்றம் அல்லது இடமாற்றம் இருக்கும் சனி பகவான் நிறைந்த நன்மைகளை ஒன்பதாம் இடத்தில் இருந்து செய்வதால் மற்றும் பார்வையால் பலன் தருவதால் உங்களுடைய தொழிலில் முன்னேற்றம் இருக்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் சொந்த தொழிலில் நல்ல நிலை ஏற்றம் புதிய விரிவாக்கம் எல்லாம் நன்றாக இருக்கும் அதே போல் மற்ற கிரகங்களும் ஓரளவு சாதகமாக இருக்கும் அதே நேரம் ராசியில் இருக்கும் ராகு உடல் ஆரோக்கியம் பாதிக்கும் படி செய்வார் அல்லது குடும்ப அங்கத்தினர்கள் வைத்திய செலவு அதிகரிக்கும் மற்றபடி இந்த மாதம் மிக நன்றாக இருக்கிறது உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் கவலை வேண்டாம்

சந்திராஷ்டமம் ; 07.11.21 இரவு 09.04 மணி முதல் 08.11.21 மாலை 06.48 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : பகவதி அம்மன், துர்க்கை அம்மன். அருகில் உள்ள கோயில்களில் விளக்கேற்றி வழிபட்டு, அன்னதானம், கல்வி தானம் செய்வது மிகுந்த நன்மை தரும்.

ரோகிணி 4 பாதங்கள் முடிய:  உங்கள் நட்சத்திர அதிபதி சந்திரன் &  ராசி அதிபதி சுக்ரன் கூட அவர் மிக வலுவாக இருப்பதால் மேலும் சூரியன் நன்றாக இருப்பதால் முயற்சிகளில் வெற்றி கிட்டும் எடுத்த செயல்கள் சாதகமான பலனை தரும் இந்த மாதம் வீடு வாகன யோகங்கள் சிலருக்கு உண்டாகும் புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு வெளிநாடு வேலைவாய்ப்பு எதிர்பார்த்தது கிடைக்கும் மேலும் சொந்த தொழில் செய்வோர் தொழில் விரிவாக்கம் அல்லது தொழிலில் நல்ல முன்னேற்றம் புதிய தொழில் ஆரம்பித்தாள் வெற்றி உண்டாகும் மேலும் ஜீவன வகையில் நல்ல நிலை இருக்கிறது அதேநேரம் ஏழில் கேது வாழ்க்கை துணைவர் வகையில் வைத்திய செலவுகள் இருக்கும் மேலும் குரு குறியாக இருப்பது குழந்தைகள் மற்றும் உறவுகள் வகையில் வைத்தியச் செலவுகள் அல்லது மன அழுத்தம் உண்டாக வாய்ப்புகள் உள்ளது பொதுவாக இந்த மாதம் பரவாயில்லை நன்றாகவே இருக்கும் சேமிக்கும் பழக்கம் இருந்தால் செலவுகள் கட்டுப்படும்

 சந்திராஷ்டமம்: 08.11.2021 மாலை 06.48 மணி முதல் 09.11.2021 மாலை 04.59 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  உறையூர்  கமலவல்லி  தாயார் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று மகாலட்சுமியை விளக்கேற்றி  வழிபடுவது நன்மை தரும் மேலும் அன்னதானம் வர வஸ்திர தானம் செய்வதும் நல்ல பலனை தரும்

 மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய:  உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாய் குறைந்த வலுவுடன் இருப்பது கொஞ்சம் பொருளாதார ரீதியாக சிரமத்தை கொடுக்கும் ஆனாலும் சூரியன் சுக்கிரன் புதன் சனி இவர்கள் அதிகப்படி நன்மை தருவது பொருளாதார நிலையை மேம்படுத்தும் மற்றும் எடுத்த செயல்கள் சில தடைகளால் தாமதமாகும் ஆனால் நவம்பர் 2ஆம் தேதி பின் நல்ல முன்னேற்றம் உண்டாகும் பொதுவாக உத்யோகத்தில் இடமாற்றம் அல்லது வேலை மாற்றம் சிலருக்கு உண்டாகும் சொந்தத் தொழிலிலும் முன்னேற்றம் இருக்கும் ஆனால் செலவுகளும் இருப்பதால் சேமிப்பு என்பது குறைவாக இருக்கும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும் பெண்களுக்கு நன்மைகள் அதிகம் உண்டாகும் மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் மற்றபடி இந்த மாதம் பரவாயில்லை கடந்து விடலாம் என்ற நிலை இருக்கும்

 சந்திராஷ்டமம்: 09.11.2021 மாலை 04.59  மணி முதல் 10.11.2021 பிற்பகல் 03.41 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  லக்ஷ்மி நரசிம்மர் அருகிலுள்ள நரசிம்மர் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது ஸ்லோகங்கள் சொல்லுவது பலன் தரும் மேலும் சரீர உதவி பண உதவி அன்னதானம் இவற்றைச் செய்வது நல்ல பலனை தரும்

மிதுனம் (மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை , புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய) :

உங்கள் ராசிநாதன் புதன் நாலாம் இடத்தில் வலுவாக இருக்கிறார் மற்றும் சூரியன் ராகு கேது மாதப் பிற்பகுதியில் சுக்கிரன் மற்றும் சந்திரன் இவர்கள் மிகுந்த நற்பலன்களைத் தருகிறார் அதனால் இந்த மாதம் நன்றாகவே இருக்கும் பொருளாதாரம் வலுவாக இருக்கும் தேவைகள் பூர்த்தி ஆகும் சிலருக்கு வீடு வாகன யோகம் உண்டாகும், உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும், சொந்த தொழிலில் விரிவாக்கம் நிறைவேறும் வங்கி கடன்கள் அரசு உதவிகள் போன்றவை எளிதில் கிடைக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் புதிய பாடங்களை தேர்வு செய்ய இந்த மாதம் ஏற்றதாகும் அதேபோல் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும் மேலும் வெளிநாட்டு வேலைகள் தேடி வரலாம் பொதுவாக குரு மற்றும் செவ்வாய் அவ்வளவு நன்மை தரவில்லை குழந்தைகள் வழியில் வைத்திய செலவுகள் பெற்றோர் வழியில் சங்கடங்கள் சில சமயம் கடன் வாங்கவேண்டிய நிலை இதுவும் இருக்கும் வருமானத்தை சேமிக்க முயற்சித்தால் அது கடன் வாங்குவதை குறைக்கும் மேலும் புதிய வீடு குடி போகும் எண்ணம் இந்த மாதம் நிறைவேறும் மற்றும் குடும்ப அங்கத்தினர்கள் இடையே நல்லுறவு ஏற்படும் கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை நிலவும் பொதுவில் இந்த மாதம் நன்மைகள் மிகுந்த மாதம் சிரமங்கள் குறையும் என்பது உறுதி

மிருகசீரிடம் 3,4 பாதங்கள் :  உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாய் வலு குறைந்து இருப்பது நன்மைகளை குறைக்கும் எடுத்த முயற்சிகள் தடைகள் உண்டாகும் எதிலும் நிதானித்து யோசித்து செயல்படுவது நன்மை தரும் உங்கள் நலம் விரும்பிகள் ஆலோசனையை பெறுவது நல்லது, இருந்தாலும் புதன் சுக்கிரன் சூரியன் ராகு கேது இவர்கள் நன்மை தருவதால் கொஞ்சம் தாமதத்துக்கு பின் முயற்சிகள் வெற்றியடையும் பொருளாதார ரீதியாக நலமாக இருக்கும் பணப்புழக்கம் தாராளம் அதே நேரம் குரு மற்றும் செவ்வாய் இவர்களால் வைத்திய செலவு வீண் விரையம் எதிர்பாராத சங்கடங்கள் என்று இருக்கும் வேலையில் முன்னேற்றம் இருந்தாலும் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதமாகும் சொந்தத் தொழிலும் கூட்டாளி வகையில் சங்கடங்கள் இருக்கும் அல்லது தொழிலாளர்கள் வகையில் பிரச்சனைகள் வரும் பொதுவாக பணம் வந்தாலும் செலவும் இருக்கும் அதனால் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும்

 சந்திராஷ்டமம்: 09.11.2021 மாலை 04.59  மணி முதல் 10.11.2021 பிற்பகல் 03.41 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  லக்ஷ்மி நரசிம்மர் அருகிலுள்ள நரசிம்மர் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது ஸ்லோகங்கள் சொல்லுவது பலன் தரும் மேலும் சரீர உதவி பண உதவி அன்னதானம் இவற்றைச் செய்வது நல்ல பலனை தரும்

திருவாதிரை:  உங்கள் நட்சத்திர அதிபதி ராகு பகவான் பன்னிரண்டில் இருப்பது சுபச் செலவுகளை கொடுக்கும் அதேபோல் கேது கடன்கள் வியாதிகள் எதிரிகள் இவர்களை இல்லாமல் செய்து விடுகிறார் அதனால் மருத்துவச் செலவுகள் பெருமளவு குறைந்து விடும் அதேபோல் புதன் சூரியன் சுக்கிரன் ராகு கேது இவர்கள் மாதம் முழுவதும் பொருளாதாரத்தை மேம் படுத்துகிறார்கள் அதனால் பணக்கஷ்டம் இருக்காது மேலும் புதிய முயற்சிகள் வெற்றியடைவதற்கு சனிபகவான் பார்வையால் உதவுகிறார் சந்திரன் மற்றும் சூரியன் முயற்சிகளில் ஊக்கத்தைக் கொடுத்து அது வெற்றி அடையும்படி செய்கிறார்கள் அதனால் இந்த மாதம் உங்களுக்கு நன்மைகள் அதிகமா இருக்கும் மனைவி குழந்தைகள் பெற்றோர் வகையில் மருத்துவச் செலவு அல்லது மன சங்கடம் கொஞ்சம் இருக்கும் நிதானமாக இருந்தால் அவற்றை தீர்த்து விடலாம் மற்றபடி நல்ல மாதம்

 சந்திராஷ்டமம்: 10.11.2021 பிற்பகல் 03.41 மணி முதல், 11.111.2021 பிற்பகல் 02.58 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  காலபைரவர் மற்றும் துர்க்கை நரசிம்மர் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும் முடிந்தவரையில் தான தர்மங்களை செய்வதும் நல்லது

 புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய:  உங்கள் நட்சத்திர அதிபதி குரு பகவான் எட்டில் வழியாக இருக்கிறார் அது நன்மை தரும் வகை அல்ல ஆனால் விடுதலை செய்யவில்லை புதன் சூரியன் சுக்கிரன் ராகு கேது இவர்கள் அளப்பரிய நன்மைகளை செய்வதால் உங்கள் முன்னேற்றம் நன்றாக இருக்கும் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் உத்யோகத்தில் சொந்த தொழிலில் விரும்பியபடி முன்னேற்றம் காணலாம் மருத்துவச் செலவுகள் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும் இந்த மாதம் உங்களுக்கு நன்மை அதிகம் இருக்கும் மாதம்

 சந்திராஷ்டமம்: 11.11.2021 பிற்பகல் 02.58  மணி முதல், 12.11.2021 பிற்பகல் 02.53 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி, திருவண்னாமலை அருணாச்சலேஸ்வரர் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது நன்மை தரும் முடிந்தால் பவுர்ணமி தினத்தில் திருவண்ணாமலை கிரிவலம் வருவதும் நன்மை பயக்கும் முடிந்தவரையில் அன்னதானம் செய்யுங்கள்

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம் , பூசம், ஆயில்யம் முடிய) :

உங்கள் ராசிநாதன் சந்திரன் மாதம் பிறக்கும் போது எட்டில் இருக்கிறார் இந்த மாதம் உங்களுக்கு ராகு முழு பலன் தருகிறார் குரு சுக்கிரன் சனி இவர்கள் மத்திம பலனை தருகிறார்கள் மற்ற கிரகங்கள் சந்திரன் உட்பட சாதகம் இல்லை அதனால் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும் பணவரவு தாராளமாக இருக்கும் உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும் சொந்த தொழிலில் லாபம் அதிகரிக்கும் அதே நேரம் சிலருக்கு குழந்தைகள் மூலமாக அல்லது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட செலவுகள் இருக்கும் சமாளிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும் நிதானமாக செயல்பட்டால் சமாளித்து விடலாம் மாதக்கடைசியில் மிகுந்த நன்மைகளை தருகிறார் அதேபோல் சுக்கிரன் மாத பிற்பகுதியில் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்கிறார் சூரியன் மற்றும் செவ்வாய் சந்திரன் இவர்கள் உடல் ரீதியான பாதிப்புகளை தருகிறார்கள் சிந்தனைத் திறனை குறைக்கிறார்கள் அதனால் மன அழுத்தம் அதிகமாகும் பொதுவாக நல்ல ஆலோசனை பெற்று எந்த செயலையும் செய்தால் நன்மை உண்டாகும் புதிய முயற்சிகளை கவனத்துடனும் தக்க ஆலோசனை செய்வது நன்மை தரும். கலைத்துறை எழுத்து துறை கல்வி இவற்றில் வேலை பார்ப்பவர்களுக்கு அல்லது இதை சொந்தமாக செய்பவர்களுக்கு இந்த மாதம் அதிக நற்பலன்கள் மற்றவர்களுக்கு ஓரளவு நன்மை உண்டாகும் வரவும் செலவும் சரியாகவே இருக்கும் திட்டமிடலை சரியாக செய்தால் சமாளித்துவிடலாம் இந்த மாதம் சுமார் மாதம்

 புனர்பூசம் 4 பாதம்:  உங்கள் நட்சத்திர அதிபதி குரு எழில் இருப்பது வாழ்க்கை துணைவர் மூலமாக மகிழ்ச்சிகள் அதிகரிக்க செய்யும் அங்கு சனி இருப்பதால் வாக்குவாதங்களும் இருந்துகொண்டிருக்கும் மற்றும் சுக்கிரன் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்வார் ராகு உத்யோகத்தில் சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றத்தை தருவார் எதிர்பார்ப்புகள் ஈடேறும் செயல்களில் வேகம் இருக்கும் இருந்தாலும் மன அழுத்தம் குடும்ப உறுப்பினர்கள் வைத்திய செலவு போன்றவை சங்கடங்களை தரும் கவனம் தேவை நிதானித்து செயல்படுவது நல்லது

சந்திராஷ்டமம்: 11.11.2021 பிற்பகல் 02.58  மணி முதல், 12.11.2021 பிற்பகல் 02.53 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி, திருவண்னாமலை அருணாச்சலேஸ்வரர் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது நன்மை தரும் முடிந்தால் பவுர்ணமி தினத்தில் திருவண்ணாமலை கிரிவலம் வருவதும் நன்மை பயக்கும் முடிந்தவரையில் அன்னதானம் செய்யுங்கள்

பூசம்:  உங்கள் நட்சத்திர அதிபதி சனி பகவான் ஏழில் இருப்பது ஓரளவுக்கு நன்மை என்றாலும் கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டு இருக்கும் குருவால் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் இருந்து கொண்டிருக்கும் சுக்கிரன் மற்றும் ராகு உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை தருகிறார்கள் எதிலும் வெற்றி வாய்ப்புகளும் இருந்து கொண்டிருக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம் புதிய தொழில் முயற்சிகள் நன்மை தரும் பணவரவு அதிகம் இருக்கும் செலவுகளும் அதே போல் இருக்கும் குழந்தைகள் மூலம் அல்லது பெற்றோர்கள் மூலம் வைத்தியச் செலவும் இருக்கும் சுபச் செலவுகளும் இருக்கும் அதனால் வருமானம் செலவாகும். சேமிக்கும் பழக்கம் இருந்தால் நன்மை உண்டாகும் பொதுவில் இந்த மாதம் நல்ல மாதம்

 சந்திராஷ்டமம்: 12.11.2021 பிற்பகல் 02.53 மணி முதல் 13.11.2021 பிற்பகல் 03.24 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  அனுமான் ராமர் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றுவது ராமநாமம் ஹனுமான் சாலிசா சொல்வது நன்மை தரும் அன்னதானம் கல்வி தானம் செய்வது நலம் பயக்கும்

 ஆயில்யம்:  உங்கள் நட்சத்திர அதிபதி 3ல் உச்சமாக இருக்கிறார் ஒரு அளவுக்கு நன்மை அவர் நாலாம் இடம் மாதக்கடைசியில் செல்கிறார் அது வாகன யோகத்தை தரும்,  மற்ற ராகு சுக்கிரன் சனி இவர்கள் உத்யோகத்தில் / சொந்த தொழிலில்  நல்ல முன்னேற்றத்தை தருகிறார்கள் இடமாற்றம் தேடி வரும் அது நன்மையும் தரும் குருபகவான் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி ஏற்படும் படி செய்கிறார் மனைவி மூலம் வருமானம் வரும் அதேநேரம் செவ்வாய் கேது சூரியன் இவர்கள் உங்கள் உடல் ஆரோக்கிய பாதிப்பை செய்வார்கள் அல்லது குடும்ப அங்கத்தினர்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அதனால் வைத்திய செலவு உண்டாகும் கவனம் தேவை பொதுவில் நன்மை மற்றும் தீமை சரி அளவில் இந்த மாதம் இருப்பதால் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும்

 சந்திராஷ்டமம் : 17.10.2021 காலை 09.52 மணி முதல் 18.10.21 காலை 10.49 மணி வரை &  13.11.2021 பிற்பகல் 03.24  மணி முதல் 14.11.2021 மாலை 04.30 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  வேங்கடாசலபதி அருகிலுள்ள பெருமாள் கோயில் சென்று வழிபடுவது அல்லது திருப்பதி செல்வது நன்மை தரும் கோயிலில் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நன்மை தரும் மேலும் உங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகள் அதேபோல் வயோதிகர்கள் இவர்களுக்கு இயன்ற சரீர ஒத்தாசை செய்வதும் அன்னதானம் செய்வதும் மற்ற வாயில்லா ஜீவன்கள் இவைகளுக்கு உணவளிப்பது நன்மை தரும்

சிம்மம் : (மஹம், பூரம் உத்திரம் 1ம் பாதம் முடிய) :

உங்கள் ராசிநாதன் சூரியன் வலுவான நிலையில் மூன்றாமிடத்தில் இந்த மாதம் மிகுந்த நன்மை பயக்கும் மாதமாக இருக்கும் காரணம் செவ்வாய் இந்த மாதம் 22 தேதி முதல் மூன்றாமிடம் சஞ்சாரம் அதேபோல் பத்தில் ராகு ,இரண்டில் புதன் அதிக நன்மை அதேபோல் ஆறில் சனி பகவான் என்று பெரும்பாலான கிரக நிலைகள் மிகுந்த சாதகத்தை தருவதால் எடுத்த செயல்களில் வெற்றி நிச்சயம் பணவரவு தாராளம் பெயர் புகழ் அதிகாரம் செல்வாக்கு எல்லாம் உயரும் நன்மைகள் அதிகம் இருக்கும் அதேநேரம் கேது மற்றும் குரு இவர்கள் மன அழுத்தம் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் அல்லது துயர சம்பவங்கள் அல்லது உறவுகளின் வைத்தியச் செலவுகள் என்று தருகிறார்கள் இது குறைந்த அளவே என்றாலும் இதுவும் இருக்கும் பொதுவில் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அனைத்து துறையிலும் எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் சம்பள உயர்வு நிச்சயம் கிடைக்கும் புதிய வேலை தேடுபவர்களுக்கு அது கிடைக்கும் சொந்தத் தொழில் செய்வோர் லாபம் அதிகம் பார்ப்பார்கள் தொழில் கூட்டாளிகள் நன்மை செய்வார்கள் வேலை செய்பவர்களால் நன்மையும் லாபமும் உண்டாகும் புதிய தொழில் தொடங்க விருப்பம் இருப்பவர்கள் இந்த மாதத்தை பயன்படுத்தி கொள்ளலாம் தொழில் விரிவாக்கம் செய்ய உகந்த மாதம் இது இல்லத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்வுகளும் திருமணங்கள் போன்றவையும் நடக்கும். அதிகம் நன்மை தரும் மாதமாக இது இருப்பதால் வாய்ப்புகளை பயன்படுத்தி வெற்றியை பெறுங்கள்

மகம் : உங்கள் நட்சத்திர அதிபதி கேது 4ல் வலுவற்று இருப்பதால் கெடுதல்கள் மிகக்குறைவாக இருக்கும் மேலும் ராசி அதிபதி சூரியன் மற்றும் ராகு புதன் சுக்கிரன் இவர்கள் அதிக நன்மைகள் தருவதால் உங்கள் செயல்கள் வெற்றி அடையும் வருமானம் அதிகரிக்கும் பணப்புழக்கம் தாராளம் ஜீவன வகையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மேலும் சிலருக்கு வீடு வாகன யோகங்கள் ஏற்படும் சிலர் உத்தியோகம் காரணமாக வீடு மாறலாம் புதிய உத்தியோகம் சிலருக்கு கிடைக்கலாம் சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் வருமானம் அதிகரிக்கும் அதேநேரம் உடல்ரீதியான குறிப்பாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம் அதற்கான செலவுகள் ஏற்படும் குழந்தைகள் வாழ்க்கை துணைவர் வகையிலும் ஆரோக்கிய பாதிப்புகள் இருக்கும் வைத்திய செலவு இருக்கும் மற்றபடி நன்மைகள் அதிகம் அதனால் இந்த மாத வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்

 சந்திராஷ்டமம்: 18.10.2021 காலை 10.49 மணி முதல், 19.10.2021 பிற்பகல் 12.12 மணி வரை & 14.11.2021 மாலை 04.30 மணி முதல் 15.11.2021 மாலை 06.08 மணி வரை.

 வணங்க வேண்டிய தெய்வம்:  பகவதி அம்மன் அய்யனார் போன்ற எல்லை தேவதைகள் அந்தக் கோயில்களுக்கு சென்று விளக்கேற்றி தெய்வங்களின் பெயர்களை உச்சரித்து கோயிலை வலம் வந்தால் நன்மை உண்டாகும் ஏழை எளியோருக்கு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அன்னம் இருவரும் மிகுந்த நன்மை தரும்

பூரம்:  உங்கள் நட்சத்திர அதிபதி சுக்ரன்  4-ஆம் இடத்தில் இருப்பது வாகனம் வீடு நிலம் இவை கிடைக்கவும் நல்ல சுகமான நிலை உண்டாகும் காரணமாக இருக்கிறது அதேபோல் மற்ற கிரகங்கள் உங்களுக்கு பணம் வரவு அதிகரிக்க காரணமாக இருக்கு இதன் மூலம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் அதேபோல் ஜீவன வகையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் உத்தியோகம் தேடுவோர் இந்த மாதம் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு வேறு இடங்கள் செல்ல விருப்பம் உள்ளவர்கள் அந்த ஆசை இந்த மாதம் நிறைவேறும் சொந்த தொழிலில் நல்ல லாபம் வரும் இல்லத்தில் மகிழ்ச்சி திருமண சுப நிகழ்வுகள் கைகூடும் அதேநேரம் சிறுசிறு வைத்தியச் செலவுகள் மன அழுத்தங்கள் இருக்கும் நிதானித்து செயல்படுவது நன்மை தரும்

 சந்திராஷ்டமம்: 19.10.2021 பிற்பகல் 12.12 மணி முதல் 20.10.2021 பிற்பகல் 02.01 மணி வரை & 15.11.2021 மாலை 06.08  மணி முதல், 16.11.2021 இரவு 08.14 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  வைத்திய வீரராகவன் கனகவல்லி தாயார் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவதும் சொல்வதும் நன்மை உண்டாகும் முடிந்தவரை தான தர்மங்களை செய்யுங்கள்

 உத்திரம் 1 பாதம் :  உங்கள் நட்சத்திர அதிபதி சூரியன் வலுவாக மூன்றில் இருப்பது மிகுந்த நன்மைகளை தரும் மேலும் செவ்வாய் ராகு சுக்கிரன் புதன் சனி என்று பெரும்பாலான கிரகங்கள் நன்மைகளை செய்வதால் உங்கள் முயற்சிகள் எளிதாக வெற்றி பெறும் புதிய வேலை உங்களுக்கு கிடைக்கலாம் வருமானம் அதிகரிக்கும் சொந்தத் தொழிலில் லாபம் வரும் புதிய மூலகம் முதலீடுகள் செய்வீர்கள் அது பிற்கால பயன்களை தரும் இந்த மாதம் நன்மை அதிகம் வைத்திய செலவுகள் ஓரளவுக்கு இருக்கும் மற்றபடி மகிழ்ச்சியான மாதம்

 சந்திராஷ்டமம்:  20.10.2021 பிற்பகல் 02.01 மணி முதல், 21.10.2021 மாலை 04.16 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  திருச்செந்தூர் செந்திலாண்டவர் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சஷ்டி கவசம் வேல்மாறல் படிப்பது நன்மை தரும் பிறருக்கு சரீர ஒத்தாசைகள் செய்வதும் அன்னதானம் செய்வதும் நன்மை தரும்

கன்னி: (உத்திரம் 2,3,4 பாதங்கள் முடிய, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் வரை):

ப்லவ வருஷம்  ஐப்பசி மாதம் ராசி பலன்

இந்த மாதம் சுக்கிரன் ராகு கேது இவர்கள் மட்டுமே பூரண பலனை தருகிறார்கள் ஜீவன வகையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் உத்தியோகத்தில் உயர்ந்த நிலை இருக்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் தெளிவான சிந்தனை பேர் புகழ் செல்வம் அதிகாரம் எல்லாம் ஏற்படும் கடந்த காலங்களில் ஏற்பட்ட துன்பங்கள் தீர்வதற்கான வழி உண்டாகும் வெற்றி பெறும் செயல்கள் செய்வீர்கள் இந்த மாதம் இந்த மூன்று கிரகங்கள் மட்டுமே முழுதாக பலனைத் தருகிறது ராசிநாதன் புதன் உட்பட பெரும்பாலான கிரகங்கள் நன்மை செய்யவில்லை உடல் ரீதியான மனரீதியான பாதிப்புகள் கடன் தொல்லை மற்றும் குழந்தைகள் வாழ்க்கை துணைவர் பெற்றோர்கள் என்று அனைத்து வகையிலும் செலவுகள் ஏற்படும் மன உளைச்சலும் இருக்கும் கொஞ்சம் நிதானித்து செயல்பட்டால் நன்மை உண்டாகும் தொல்லை வராது விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் சிலருக்கு வாகன யோகம் இருக்கிறது அதேபோல் இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும் சிலருக்கு திருமணம் கைகூடும் அனைத்து பிரிவினருக்கும் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும் அதேநேரம் சங்கடங்களும் இருப்பதால் எதையும் யோசித்து செய்வது நல்லது 60 சதவிகிதம் நன்மைகளும் பாக்கி துன்பங்களும் இருப்பதால் ஒரு அளவுக்கு நல்ல மாதம் என்று சொல்லலாம் வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

 உத்திரம் 2,3,4 பாதங்கள் முடிய:  உங்கள் நட்சத்திர அதிபதி இரண்டில் இருப்பது கண் மற்றும் தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதேபோல் சிந்திக்கும் திறன் குறைவு இவற்றால் பாதிப்புகள் இருக்கும் அதேநேரம் ராகு கேது சுக்கிரன் இவர்கள் உங்கள் பொருளாதாரத்தையும் வாழ்க்கை ஆதாரத்தையும் மேம்படுத்துவது இந்த பிரச்சனைகளை சமாளிக்கும் மற்ற கிரகங்களும் பெரும்பாலும் சாதகம் இல்லை என்றாலும் இந்த மாதம் சமாளித்து ஓடி விடுவீர்கள் பெரிய தொல்லைகள் இருக்காது எதிலும் நிதானித்துச் செயல்படுவது நன்மை தரும் தக்க ஆலோசனை பெற்றபின் உங்கள் முயற்சிகளை தொடரவும் இந்த மாதம் பரவாயில்லை என்ற மாதம்

 சந்திராஷ்டமம்:  20.10.2021 பிற்பகல் 02.01 மணி முதல், 21.10.2021 மாலை 04.16 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  திருச்செந்தூர் செந்திலாண்டவர் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது சஷ்டி கவசம் வேல்மாறல் படிப்பது நன்மை தரும் பிறருக்கு சரீர ஒத்தாசைகள் செய்வதும் அன்னதானம் செய்வதும் நன்மை தரும்

ஹஸ்தம் : உங்கள் நட்சத்திர அதிபதி சந்திரன் வலுவான நிலையில் ஆரம்பத்தில் மேலும் ராகு கேது சுக்கிரன் பூரண பலனைத் தருவதோடு குருபகவான் பார்வையால் முயற்சிகளில் வெற்றியைத் தருகிறார் பலவிதங்களிலும் உங்களுக்கு ஆதாயங்கள் தேடிவரும் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் சுப செலவுகளாக நிறைந்திருக்கும் இல்லத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும் வருமானம் பெருகும் உத்தியோகத்தில் சொந்த தொழிலில் நல்ல நிலை அதனால் இந்த மாதம் சமாளித்துவிடுவீர்கள் அதேநேரம் வைத்தியச் செலவுகளும் இருப்பதாலும் உறவுகளால் சங்கடங்கள் இருப்பதாலும் ஓரளவு நிதானத்துடன் நடந்து கொண்டால் அவற்றை சமாளித்துவிடலாம் பொதுவாக பரவாயில்லை என்று சொல்லும்படியான மாதம்

 சந்திராஷ்டமம்: 21.10.2021 மாலை 04.16 மணி முதல், 22.10.2021 மாலை 06.55 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் அருகில் உள்ள சிவன் கோயிலில் விளக்கேற்றி வழிபடுவது சிவநாமத்தை சொல்லுவது அம்பாறை வணங்குவது போன்றவை நன்மை தரும் முடிந்த அளவு அன்னதானம் வஸ்திர தானம் கல்வி தானம் இவற்றைச் செய்வது நன்மை தரும்

 சித்திரை 1,2 பாதங்கள் முடிய : உங்கள் நட்சத்திர அதிபதி ராசியில் இருக்கும்போது அவ்வளவு நன்மை இல்லை இந்த மாதம் 22 தேதி இரண்டாமிடம் செல்வதால் அதிக நன்மை உண்டாகிறது மேலும் ராகு சுக்கிரன் கேது மிகுந்த நன்மை செய்வதால் பொருளாதாரம் நன்றாக இருக்கும் உத்தியோகம் சொந்தத் தொழில் இவற்றில் நல்ல முன்னேற்றம் காணும் பொதுவாக அரசும் உத்தியோகங்களில் இருப்பவர்களுக்கு மருத்துவத்துறை போன்றவ துறைகளில் இருப்பவர்க்கு இந்த மாதம் நன்மை தரும் மாதமாக அமையும் எதிர்பார்ப்புகள் ஈடேறும் முடிந்தவரை நிதானித்து செயல்படுவது நல்லது காரணம் மற்ற கிரகங்களால் உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் பாதிக்கப்படும் இல்லத்தில் வைத்திய செலவுகள் இருந்து கொண்டிருக்கும் இந்த மாதம் பரவாயில்லை என்று சொல்லும் படியாக இருக்கும்

 சந்திராஷ்டமம்: 22.10.21 மாலை 06.55 மணி முதல், 23.10.21 இரவு 09.52 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்:  திருநீர்மலை அரங்கநாதர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விளக்கேற்றி மாமியை வழிபடுவதும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நல்லது

துலாம் : (சித்திரை 3,4 பாதங்கள், ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய):

ப்லவ வருஷம்  ஐப்பசி மாதம் ராசி பலன்

உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 2ல் மற்றும் 3ல் இந்த மாதம் சஞ்சரிக்கிறார் வலுவான நிலையில், அதோடு சூரியன் ராசியில் மிக வலுவாக இருக்கிறார் அதனால் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் செயல்கள் வெற்றி பெறும் பொதுவாக கிரக நிலைகள் பார்த்தால் சாதகமாக இல்லை 2ல் கேது 8ல் ராகு 4ல் குரு சனி 12ல் செவ்வாய் புதன் இப்படி இருந்தாலும் இந்த மாதம் இந்த எல்லா கிரகங்களும் உங்களுக்கு நன்மை தருவதாக இருக்கிறது, பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும் அதேநேரம் பயணங்களால் கலைப்பு உத்தியோகம் அல்லது சொந்த தொழில் நிமித்தம் ஏற்படும் வெளியூர் பயணங்கள் லாபத்தை தரும் அதேநேரம் களைப்பையும் உஷ்ணத்தினால் உடல் பாதிப்புகள் ஏற்படும் மேலும் குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் உண்டாகி மறையும் கிரகங்களின் பார்வைகள் நன்மை தருவதாக இருப்பதால் பெரும்பாலும் நல்லவைகளை நடக்கும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் உத்யோகத்தில் சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் பண வரவு தாராளமாக இருக்கும் எதிர்பார்த்த நேரத்தில் பணம் கிடைக்கும் நண்பர்கள் உறவுகள் எல்லோருமே உதவி செய்வார்கள் அதேநேரம் வீடு நிலம் மற்றும் உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பேசும்போதும் அரசுடன் வாதம் செய்யும் போதும் கவனம் தேவை இவற்றால் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு சிந்தனைத் திறன் குறையும் அதனால் வருகின்ற வருமானம் செலவாக மாறும் இந்த மாதம் மிக நல்ல மாதம் வரும் வாய்ப்புகளை பயன்படுத்துங்கள் அதேநேரம் வாக்கில் தெளிவாக இருங்கள் வார்த்தைகளை விடும்போதும் வாக்குவாதம் செய்யும் போதும் கவனம் தேவை மற்றபடி பெரிய கெடுதல்கள் ஏதும் இல்லை

  சித்திரை 3,4 பாதங்கள் முடிய:  உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் இருக்கிறார் இந்த மாதம் ராசியில் வருகிறார் இரண்டுமே பெரிய நன்மைகளை தரவில்லை ஆனால் பார்வையால் நன்மை உண்டாவதால் பாதிப்புகள் குறைகிறது உங்கள் முயற்சிகளை வெற்றியடையச் செய்வதில் சுக்கிரன் மற்றும் ராகு பெரும்பங்கு வகிக்கிறார்கள் அதேபோல் சூரியனும் உதவி செய்வதால் பெற்றோர் அல்லது பெரியவர்கள் மூலம் உங்களுக்கு நன்மை உண்டாகிறது வாழ்க்கையில் முன்னேற்றப்பாதையில் அடியெடுத்து வைக்கும் காலமாக இந்த மாதம் அமைகிறது பெரும்பாலும் நன்மைகளை கவனத்துடன் செயல்பட்டால் தீமைகள் குறைவாக இருக்கும்

சந்திராஷ்டமம்: 22.10.21 மாலை 06.55 மணி முதல், 23.10.21 இரவு 09.52 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம்:  திருநீர்மலை அரங்கநாதர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விளக்கேற்றி மாமியை வழிபடுவதும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் சொல்வது நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நல்லது

சுவாதி: உங்கள் நட்சத்திர அதிபதி ராகு வலுவாக இருக்கிறார் அவர் நன்மைகளை அதிகம் செய்கிறார் அதேபோல் சூரியன் இராசியிலிருந்து பலத்தை கூட்டுகிறார் மனோதிடம் அதிகமாகும் முயற்சிகள் வெற்றி தரும் பணத்தைக் கொண்டுவந்து தருவதில் சுக்கிரன் முக்கிய பங்கு வகிக்கிறார் அதேபோல் மாத இறுதியில் புதன் மூலம் நன்மை உண்டாகும் மேலும் சனியின் பார்வை உங்கள் ராசிக்கு இருப்பது வலுவைச் சேர்க்கும் எதிரிகளை ஒழித்து விடும் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும் பணவரவு தாராளம் விருப்பம் போல் இந்த மாதம் அமையும் என்பதால் பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் சொந்தத் தொழிலில் லாபம் கூட்டாளிகளால் நன்மை என்றபடி நன்றாகவே இருக்கும் இருந்தாலும் கவனம் தேவை உடல்ரீதியாக அல்லது மனரீதியாக பாதிப்புகள் இருக்கும் உறவுகளால் வைத்திய செலவுகள் இருக்கும் கவனம் தேவை நிதானித்து செயல்படுவது நல்லது

 சந்திராஷ்டமம்: 23.10.2021 இரவு 09.52 மணி முதல், 24.10.2021 இரவு 01.01 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  சக்கரத்தாழ்வார் சுதர்சன சக்கரத்தை வழிபட்டால் நன்மை உண்டாகும் அருகில் உள்ள கோயில்களில் சக்கரத்தாழ்வாரை வழிபடுவது நன்மை தரும் முடிந்தவரையில் அன்னதானம் செய்யுங்கள் இது உங்கள் கஷ்டங்களை போக்கும்

 விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய:  உங்கள் நட்சத்திர அதிபதி குரு பகவான் வலுவற்ற நிலையில் இருக்கிறார் அதனால் சிறு சிறு சங்கடங்கள் வாகனத்தின் மூலமாக தொல்லைகள் குடும்ப உறுப்பினர்கள் மூலமாக வைத்திய செலவுகள் உத்யோகத்தில் சொந்த தொழிலில் மனநிலை அல்லது மன அழுத்தம் ஏற்படுதல் போன்றவை இருக்கும் அதே நேரம் சுக்கிரன் உங்களுக்கு மிகுந்த நன்மை தருவதால் பொருளாதாரம் பாதிக்கப்படாது புதிய முயற்சிகள் சிறிது தாமதம் ஏற்பட்டு பின் நிறைவேறும் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும் கொஞ்சம் கருத்து வேற்றுமை ஏற்படும் அனுசரித்துப் போவது நன்மை தரும் மிகுந்த யோசனைக்குப் பின் முயற்சிகளை தொடர்வது நல்லது இந்த மாதம் சுமார் மாதம்

 சந்திராஷ்டமம்: 24.10.2021 இரவு 01.01 மணி முதல், 25.10.2021 அதிகாலை 04.10 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  சொக்கநாதர், மதுரை மீனாட்சி அம்மன் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும் முடிந்தவரையில் ஆடை தானம் மற்றும் கல்வி தானம் இவற்றையும் வறியோர்க்கு உணவு தருவ்து போன்றவை  நன்மைகள் அதிகரிக்கும்

விருச்சிகம் : (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய):

உங்கள் ராசிநாதன் மாத ஆரம்பத்தில் லாபத்தில், இந்த மாதம் 22 தேதிக்கு பின் பன்னிரண்டில் இந்த மாத கிரஹ நிலைகளை மேலோட்டமாக பார்த்தால நன்மை இல்லை என்பது போல் தோன்றும் ஆனால் சுக்கிரன் மிகுந்த நன்மையை செய்கிறார் அதேபோல் சூரியன் 12ஆம் இடம் சுபமான செலவுகளையும் மனவலிமையும் தருகிறார் சனிபகவான் தன் பங்குக்கு பலவிதமான நன்மைகளை செய்வதோடு எதிலும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வைக்கிறார் பொதுவாக பல கிரகங்கள் ராசியில் இருக்கும் கேது உட்பட நன்மையையே செய்கின்றன எதிர்பார்த்த தேவைகள் பூர்த்தியாகும் பெரும்பாலும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் கடந்தகால தேக்கங்கள் சரியாகும் அதேநேரம் உடல் உபாதைகள் வைத்திய செலவுகள் மன அழுத்தங்கள் இருந்து கொண்டிருக்கும் காரணம் வார்த்தையில் கடுமை இருப்பது அவநம்பிக்கை இருப்பது தீமையைத் தருகிறது கடந்தகால துன்ப வாழ்க்கை நம்பிக்கையை குறைத்து விடுவதால் நம்மை நடக்கும்போது அந்த சந்தோஷத்தை அனுபவிப்பது கடினமாக இருக்கிறது வரும் குரு பெயர்ச்சி முதல் விருச்சிக ராசி அனைவருக்குமே நல்ல காலம் ஆரம்பம் காரணம் குரு பெயர்ச்சி மட்டும் அல்லாது ராகு கேது பெயர்ச்சிகள் நன்மையைத் தருவதால் கடந்தகால துன்பங்கள் அனைத்துமே டிசம்பர் இறுதியில் பூரணமாக விலகி நன்மைகளை அதிகம் செய்யும் அதற்கு அஸ்திவாரம் போடுவதுபோல் இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பாராத வகையில் உங்களுக்கு தனலாபம் ஜீவன வகையில் முன்னேற்றம் இல்லத்தில் சுப நிகழ்வுகள் என்று மிகுந்த நன்மை உண்டாகும் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் இறைவன் கருணை உங்கள் மேல் பட்டு விட்டது இந்த மாதத்தில் மனோதிடத்துடன் உங்கள் முயற்சிகளைத் தொடங்கலாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள் கவலையை விட்டுவிடுங்கள் இந்த மாதம் சிறப்பான மாதம்

 விசாகம் 4-ஆம் பாதம்: உங்கள் நட்சத்திர அதிபதி குருபகவான் பார்வையால் நன்மை செய்கிறார் அதோடு இல்லாமல் அடுத்த ராசிக்கு உண்டான பலனையும் தருகிறார் மற்ற கிரகங்களில் சுக்கிரன் ராகு செவ்வாய் சனி என்று பெரும்பாலான கிரகங்கள் நன்மை செய்வதால் இதுவரை எடுத்த முயற்சிகளில் வெற்றியும் புதிய புதிய திட்டங்களில் வெற்றி வாய்ப்புகளும் உண்டாகும் இல்லத்தில் சுப நிகழ்வுகள் குழந்தைகள் மூலம் நன்மைகள் என்று நன்றாகவே இருக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை மனச்சோர்வை நீக்க இறை தியானம் நல்லதாக அமையும் பொதுவில் இந்த மாதம் பரவாயில்லை என்று சொல்லும் படியாக அமையும்

சந்திராஷ்டமம்: 24.10.2021 இரவு 01.01 மணி முதல், 25.10.2021 அதிகாலை 04.10 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  சொக்கநாதர், மதுரை மீனாட்சி அம்மன் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும் முடிந்தவரையில் ஆடை தானம் மற்றும் கல்வி தானம் இவற்றையும் வறியோர்க்கு உணவு தருவ்து போன்றவை  நன்மைகள் அதிகரிக்கும்

அனுஷம்:  உங்கள் நட்சத்திர அதிபதி மூங்கில் இருப்பதால் மனோதிடம் கூடும் செயல்களில் உற்சாகம் உண்டாகும் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும் புதிய முயற்சிகள் உத்தியோகத்தில் நல்ல நிலை எதிர்பார்த்த வேலை சொந்த தொழிலில் முன்னேற்றம் புதிய தொழில் விஸ்தரிப்பு வீடு வாகன யோகங்கள் என்று நன்மையாகவே அமையும் உடல் ஆரோக்கியம் மற்றும் மனைவி குழந்தைகள் பெற்றோர்கள் அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை வைத்திய செலவுகள் இருந்துகொண்டிருக்கும் அதேநேரம் இந்த மாதம் நன்மைகள் அதிகம் நடக்கும் மாதம் என்பதால் கவலை வேண்டாம்

 சந்திராஷ்டமம்: 25.10.2021 அதிகாலை 04.10  மணி முதல் 27.10.2021 காலை 07.07 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  அங்காள பரமேஸ்வரி மற்றும் வெக்காளியம்மன், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுவது நன்மைதரும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்யுங்கள்

 கேட்டை:  நட்சத்திர அதிபதி லாபத்தில் இருக்கிறார் ராசி அதிபதி உடன் சேர்ந்து மாத ஆரம்பம் உங்கள் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் வெற்றியைக் கொண்டுவரும் புதிய முயற்சிகள் வேலை வாய்ப்புகள் தேடி வரலாம் இல்லத்தில் சுப நிகழ்வுகள் அதிகரிக்கும் திருமண முயற்சிகள் வெற்றி தரும் புதிய தொழில் விஸ்தரிப்பு அல்லது தொழில் தொடங்குதல் இந்த மாதத்தில் நடக்க வாய்ப்புகள் உள்ளது அனைத்து பிரிவினருக்கும் நன்மை அதிகம் இருக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை இல்லத்தில் அனைவருக்கும் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் வருவதற்கு சாத்தியம் உள்ளது வைத்தியச் செலவுகள் இருந்து கொண்டு இருக்கும் நிதானமும் கவனமும் தேவை மற்றபடி இந்த மாதம் நன்மை தரும் மாதமாக அமையும்

 சந்திராஷ்டமம்:  27.10.2021 காலை 07.07 மணி முதல் 28.10.2021 காலை 09.41 மணி வரை

வணங்க வேண்டிய தெய்வம்:  காஞ்சி வரதராஜர் , சொன்ன வண்ணம் செய்த பெருமாள், அருகில் பெருமாள் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவது பெருமாள் ஸ்லோகங்கள் சொல்வது நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நல்ல பலனை தரும்

தனூர் : (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய) :

உங்கள் ராசி அதிபதி குரு பகவான் இரண்டில் வக்ரியாக இருந்தாலும் நன்மையே செய்கிறார் அதேபோல் லாபத்தில் இருக்கும் சூரியன் அளப்பரிய வெற்றியைத் தருகிறார் உங்களுடைய எதிரிகள் மறைந்து விடுவர் நோய்கள் அகன்று விடும் பண வரவு அதிகமாகும் மேலும் அக்டோபர் 22ம் தேதி முதல் செவ்வாய் லாபத்தில் வருகிறார் அவரும் தன் பங்குக்கு நன்மைகளை செய்கிறார் மாதக்கடைசியில் புதன் லாபத்தில் வருகிறார் இது போக சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருகிறார் ராகு ஆறில் மாதம் முழுவதும் நன்மை தருகிறார் பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இருக்கு அதனால் உங்கள் எண்ணங்கள் ஈடேறும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும் அதே நேரம் செவ்வாய் வலுவாக இருப்பதாலும் சந்திரனுடைய சஞ்சாரமும் கேதுவின் தன்மையும் சில உபாதைகளை கொடுக்கும் இல்லத்தில் சிறுசிறு சலசலப்புகள் இருக்கும் கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை குறையலாம் மன ரீதியான பிரச்சனைகள் , உடல் ரீதியான அல்லது வைத்தியத்தின் மூலம் செலவுகள் ஏற்படும் பொதுவில் நல்ல நிலையில் இருக்கும் எதிர்பார்த்த இடமாற்றம் தொழில் மாற்றம் வேலை மாற்றம் சம்பள உயர்வு பதவி உயர்வு என்று எல்லாமே நன்றாக இருக்கும் அதே நேரம் அலைச்சலும் இருந்து கொண்டிருக்கும் மனதில் தெளிவில்லாத நிலையும் இருக்கும் காரணம் குரு பகவான் வக்ரியாக இருப்பது கேது 12ல் இருப்பது இதனால் மனதில் சஞ்சலம் இருந்துகொண்டே இருக்கும் விட்டுக் கொடுத்துப் போவது அனுசரித்துப் போவது அது குடும்பத்திலும் சரி வேலை பார்க்கும் இடத்திலும் சரி சொந்தத் தொழில் இடத்திலும் சரி அனைவரிடமும் அனுசரித்துப் போனால் சிறுசிறு சங்கடங்கள் கூட விலகிவிடும் பூரணமான நன்மை உண்டாகும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் இந்த மாதம் நன்மைகள் அதிகம் உண்டாகும் மாதம் கவனத்துடன் செயல்பட்டால் கெடுதல்கள் குறையும்

 மூலம்:  உங்கள் நட்சத்திர அதிபதி கேது வலுவற்று இருக்கிறார் சில வீண் விரயங்கள் செய்கிறார் அதேபோல் 10 இருக்கும் செவ்வாய் மாத ஆரம்பத்தில் தொழில் ரீதியான பாதிப்புகளை செய்கிறார் வேலையில் கவனம் தேவை போகும் அபாயமும் இருக்கிறது அதேபோல் சொந்த தொழில் செய்வோர் தொழிலாளர்களிடம் அனுசரித்துப் போவது நல்லது பணவிரயம் நேர விரயம் ஆகும் கவனம் தேவை பொதுவாக நன்மைகள் மிக அதிகமாக இருப்பதால் யோசித்து செயல்படும் போது சின்னச் சின்ன சங்கடங்கள் விலகிவிடும்

 சந்திராஷ்டமம்: 28.10.2021 காலை 09.41 மணி முதல் 29.10.2021 காலை 11.38 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  பிள்ளையார் அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு சென்று வழிபடுவது அபிஷேகத்திற்கு பால் கொடுப்பது விநாயகர் அகவல் படிப்பது நன்மை பயக்கும் அன்னதானம் மிகச்சிறந்த ஒன்று இதை செய்வதால் சங்கடங்கள் தீரும் கெடுதல்கள் குறையும்

 பூராடம்:  உங்கள் நட்சத்திர அதிபதி சுக்ரன் வலுவாக இருப்பதால் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் எதிர்பார்த்த தேவைகள் பூர்த்தியாகும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். சனி பகவான் வாக்கில் (2ல்)  இருப்பதால் நிதானித்து செயல்படுவது வார்த்தைகளை விடுவதில் கவனம் தேவை அப்படி இருந்தால் துன்பங்கள் குறைய ஆரம்பிக்கும் இல்லத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது பணத்தேவை உடனுக்குடன் சரியாகும் உத்தியோகம் சொந்தத் தொழில் இவற்றில் நல்ல முன்னேற்றம் இருக்கும் அதேநேரம் வைத்திய செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும் கவனம் தேவை பரவாயில்லை என்று சொல்லும்படியான மாதம் இது

 சந்திராஷ்டமம்: 29.10.2021 காலை 11.38 மணிமுதல் 30.10.2021 பிற்பகல் 12.51 மணி வரை

 வணங்கவேண்டிய தெய்வம்:  கொல்லூர் மூகாம்பிகை கற்ப ர்க்ஷகாம்பாள் , அருகிலுள்ள கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது அம்மன் ஸ்லோகங்கள் சொல்வது நன்மை தரும் முடிந்த வரை அன்னதானம் கல்விதானம் இவற்றை செய்வது வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது நன்மை தரும்

 உத்திராடம் 1 பாதம்:  உங்கள் நட்சத்திர நாதன் சூரிய பகவான் லாபத்தில் இருப்பது மிகுந்த நன்மையை தருகிறது முயற்சிகளில் வெற்றி உண்டாகிறது மேலும் நல்ல ஒரு சூழலை  சுக்கிரன் ராகு மற்றும் புதன் இவர்கள் தருகிறார்கள்  அதனால் உங்கள் முயற்சிகள் வெற்றியைத் தரும் உத்தியோகத்தில் உயர்ந்த நிலை ஏற்படும் சொந்தத் தொழிலில் லாபம் வரும் அதேநேரம் வைத்தியச் செலவுகளும் இருப்பதால் கவனம் தேவை பொதுவில் நன்மை பயக்கும் மாதம் கவலை வேண்டாம்

 சந்திராஷ்டமம்: 30.10.2021 பிற்பகல் 12.51  மணி முதல், 31.10.2021 பிற்பகல் 01.16 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் :  ஐயப்பன் சாஸ்தா உங்கள் அருகில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று தியானம் செய்து விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும் சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு விளக்கு ஏற்றுவதும் நன்மைதரும் மேலும் மாற்றுத்திறனாளிகள் வயோதிகர்கள் இவர்களுக்கு உதவி செய்வது அவர்கள் தேவைகளை நிறைவேற்றி வைப்பது மிகுந்த நன்மை உண்டாகும்

மகரம் : (உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய) :

உங்கள் ராசிநாதன் சனி பகவான் ராசியிலேயே இருப்பது ஒரு அளவுக்கு நன்மை தரும் பொதுவாக கிரக நிலைகள் மேலோட்டமாக சாதகமாக இல்லை ஆனால் சூரியன் சுக்கிரன் கேது இவர்கள் மிகுந்த நன்மை தருகிறார்கள் மாத பிற்பகுதியில் செவ்வாய் மற்றும் புதன் நன்மை செய்கிறார் பொதுவாக பொருளாதார நிலை நன்றாக இருக்கும் பணவரவு தேவைகள் பூர்த்தியாகும் இல்லத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும், ஆடை ஆபரணச் சேர்க்கை மேலும் வெளியூர் பயணங்கள் புனித யாத்திரைகள் இவை நன்மை தரும் கேதுவால் ஜீவன ஸ்தானத்தில் முன்னேற்றம் ஏற்படும் சொந்த தொழிலில் வெற்றிகள் அதிகரிக்கும் உபயோகத்தில் வேலைபளு அதிகரிக்கும் நல்ல பெயர் இருக்கும் முன்னேற்றம் என்பது கொஞ்சம் தாமதமாகி கிடைக்கும் செயல்பாடுகள் நன்றாக இருக்கும் இருந்தாலும் மனச் சோர்வும் அதிகமாக இருக்கும் ராகு 5ல் இருப்பது புகழ் அதிகாரம் இவற்றை குறைக்கும் கல்வியில் மந்தநிலை இருக்கும் சிந்தனை திறன் குறையும் வீண் பழியும் வரும் எதிலும் நிதானித்துச் செல்வது நன்மை தரும் குரு பகவான் வக்கிர நிலை எடுப்பதால் பெரிய நன்மைகள் ஏதும் இல்லை ஆனால் பார்வையால் நன்மை தருகிறார் பொருளாதாரம் நன்றாக இருப்பதால் ஓரளவுக்கு எல்லாவற்றையும் சமாளித்து விடுவீர்கள் பெரும்பாலும் கஷ்டங்கள் என்று ஒன்று இல்லை ஆனால் பயணத்தினால் கலைப்போம் சிறுசிறு மனக்குழப்பங்கள் இல்லத்தில் அல்லது உபயோக இடத்தில் சிறு பிரச்சினைகள் இருக்கும் அனுசரித்துப் போவது விட்டுக்கொடுத்துப் போவது நன்மை தரும் பொதுவில் இந்த மாதம் நல்ல பலன் அதிகம் இருக்கும் அதேநேரம் சங்கடங்களும் இருக்கும் நிதானம் பொறுமை விட்டுக் கொடுத்துப் போவது என்று இருந்தால் மகிழ்ச்சியாக மாதத்தை கடந்துவிடலாம்

 உத்திராடம் 2,3,4 பாதங்கள்:  உங்கள் நட்சத்திர அதிபதி சூரியன் வலுவாக இருக்கிறார் உத்யோகத்தில் ஜீவன வகையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் செவ்வாய் 10-ஆம் இடத்துக்கு மாத மத்தியில் வரும்போது வேலை பளு அதிக சிரமம் ஏற்படும் பொறுமை இழக்கும் நிலை உண்டாகும் ஆனாலும் சனிபகவான் தைரியத்தை கொடுக்கிறார் அதனால் சமாளித்துவிடுவீர்கள் மற்ற சுக்கிரன் ராகு கேது இவர்கள் அதிக நன்மை செய்வதால் பொருளாதார பாதிப்புகள் ஏற்படாது வீண் விரயங்கள் இருக்கும் அது கவனக்குறைவாலும் அவசரத்தால் உண்டாகும் எதிரிகளை கவனமாக கையாளாவிட்டால் சில வருத்தங்களும் விரயங்களும் ஆகும் பொறுப்பும் பொறுமையும் நிதானமும் இருந்தால் இந்த மாதம் மகிழ்ச்சியாக மாறும்

சந்திராஷ்டமம்: 30.10.2021 பிற்பகல் 12.51  மணி முதல், 31.10.2021 பிற்பகல் 01.16 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் :  ஐயப்பன் சாஸ்தா உங்கள் அருகில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று தியானம் செய்து விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும் சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு விளக்கு ஏற்றுவதும் நன்மைதரும் மேலும் மாற்றுத்திறனாளிகள் வயோதிகர்கள் இவர்களுக்கு உதவி செய்வது அவர்கள் தேவைகளை நிறைவேற்றி வைப்பது மிகுந்த நன்மை உண்டாகும்

திருவோணம்:  உங்கள் நட்சத்திர அதிபதி சந்திரன் இரண்டில் இருப்பது அவ்வளவு நன்மை தரவில்லை மற்ற கிரகங்களில் சூரியன் கேது சுக்கிரன் மிகுந்த நன்மை செய்வதால் பொருளாதாரத்தில் எந்தவித பிரச்சனைகளும் பற்றாக்குறையும் வரவே வராது. உத்தியோகத்தில் நல்ல நிலை இருக்கும் ஆனால் அவர் பிரஷர் வேலை பளு இருந்து கொண்டே இருக்கும் மேல் அதிகாரிகளுடன் உடன் வேலை செய்பவருடன் விட்டுக்கொடுத்து செல்வது அனுசரித்துச் செல்வது நன்மை தரும் பெரும்பாலும் நன்மைகளே இருப்பதால் கவலை வேண்டாம் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் விரயங்களை தவிர்க்கலாம் உடல் ரீதியான பாதிப்புகளை தக்க மருத்துவ சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம் மன அழுத்தம் குறையும் இந்த மாதம் நன்மை தரும் மாதம்

 சந்திராஷ்டமம்: 31.10.2021 பிற்பகல் 01.16  மணி முதல், 01.11.2021 பிற்பகல் 12..52 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்: மேல்மலையனூர் அங்காளம்மன் அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது நன்மை தரும் அம்மன் சுலோகங்கள் சொல்லுவது நல்லது முடிந்த அளவு அன்னதானம் வாரம் இருமுறையாவது செய்வது அவசியம் இது மிகுந்த நன்மைகளை தரும் துன்பங்களை போக்கும்.

 அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய:   உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாய் வலுவற்று இருக்கிறார் மேலும் சந்திரன் குரு ராகு இவர்களும் உங்களுக்கு நன்மை செய்யவில்லை ஆனால் சுக்கிரன் சூரியன் கேது மற்றும் சனி இவர்கள் மிகுந்த நன்மை செய்வதால் பொருளாதாரம் மேம்படும் பணவரவு தாராளம் எடுத்த முயற்சிகள் வெற்றி தரும் இருந்தாலும் உத்தியோகத்தில் அல்லது சொந்தத் தொழிலில் முன்னேற்றம் என்பது ரொம்ப மெதுவாக இருக்கும் நல்ல பெயர் இருக்குமே தவிர அதற்கான ஊதியம் குறைவாகும் இருந்தாலும் இந்த மாதம் பெரிய சங்கடங்கள் ஏதுமில்லை கொஞ்சம் நிதானமாகவும் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டுக்கொடுத்துச் செல்வதால் ஏற்படும் சிறுசிறு பாதிப்புகள் மறையும் இந்த மாதம் ஓரளவுக்கு சுமாரான மாதம் சேமிப்பை அதிகரிப்பது நன்மை தரும்

 சந்திராஷ்டமம்: 01.11.2021 பிற்பகல் 12.52 மணி முதல் 02.11.2021 காலை 11.44 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  சுவாமிமலை சுவாமிநாதன் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது செவ்வாய்க்கிழமைகளில் கந்தர் சஷ்டி கவசம் படிப்பது நன்மை தரும் தானதர்மங்கள் செய்வது அன்னதானம் செய்வது மிகுந்த நல்ல பலனை தரும்

கும்பம் : (அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய):

உங்கள் ராசியில் மாதம் பிறக்கும் போது சந்திரன் இருக்கிறார் ஒன்பதில் சூரியன் வலுவாக பாக்கியத்தில் இருக்கிறார் மேலும் புதன் 8ல் உச்சமாக இருப்பதால் தெய்வ அனுகூலம் அதிகமாக இருக்கிறது பொதுவாக சனி மற்றும் குரு 12ல் இருப்பது சுப விரயங்களை தருகிறது மற்றபடி செவ்வாய் ஒன்பதாம் இடம் வரும்போது தாய் தந்தை வழியில் உடலாரோக்கிய மருத்துவ செலவுகள் இருந்து கொண்டிருக்கும் இந்த மாதம் துவக்கம் நன்றாக இருக்கிறது பணவரவு அதிகம் இருக்கும் உத்தியோகத்தில் நல்ல நிலையிருக்கும் இடமாற்றம் கட்டாயமாக இருக்கும் சிலர் புது வீடு குடி போக லாம் வீடு வாகன யோகங்கள் சிலருக்கு இருக்கும் அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் மேலும் இந்த மாதம் கேது பகவான் 10ல இருந்து வருவாயை இரட்டிப்பு ஆக செய்கிறார் அதனால் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் 4ல் இருக்கும் ராகு  மன உளைச்சல் கொடுக்கும் அது உடன் வேலை செய்பவர்கள் அல்லது மேலதிகாரிகளால் அல்லது நண்பர்கள், உறவுகளால் ஏற்படலாம் மேலும் இந்த மாதம் பெரும்பாலான கிரகங்கள் ஓரளவு நன்மைகளை மட்டுமே தருகிறது அதனால் இந்த மாதத்தில் சங்கடங்களை சமாளித்துவிடுவீர்கள் அனைத்துத் துறையினருக்கும் வேலை பளு அதிகரிக்கும் கடுமையான உழைப்பு இருந்தாலும் அதன் பலன் தாமதமாக கிடைப்பதால் மன உளைச்சல் ஏற்படுகிறது ஆனால் சூரியன் நன்மையை அதிகம் தருவதால் அது உடனே தீர்ந்து விடுகிறது புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம் புனித யாத்திரைகள் விருந்து கேளிக்கைகள் என்று இந்த மாதம் மகிழ்ச்சியை தரும்படி அமையும் அதேநேரம் சில மருத்துவ செலவுகள் வீண் விரயங்களும் உண்டாகும் கொஞ்சம் கவனமாக செயல்பட்டால் அதை சரி செய்து விடலாம் பொதுவில் ஓரளவுக்கு நன்றாக இருக்கக்கூடிய மாதமாக அமைகிறது

அவிட்டம் 3,4 பாதங்கள் : உங்கள் நட்சத்திர அதிபதி செவ்வாய் எட்டில் இருக்கிறார் சில விபத்துக்கள் அடிபடுதல் போன்ற நிகழ்வுகளையும் வழக்கு போன்றவற்றையும் செய்கிறார் இந்த மாதம் அக்டோபர் 22 தேதியில் 9 வது இடம் வரும்போது பெற்றோர்கள் மூலம் மருத்துவ செலவை கொடுக்கிறார் இருந்தாலும் சூரியன் சுக்கிரன் புதன் இவர்கள் வருமானத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்க செய்கிறார்கள் அதனால் பொருளாதாரம் நன்றாக இருக்கும் ஜீவன வகையில் வருமானம் நன்றாக இருக்கும் அதேநேரம் உத்தியோகத்தில் உழைப்பு அதிகம் அதற்குண்டான பலன் குறைவு அல்லது தாமதம் ஆகும் சொந்தத் தொழிலும் சில சங்கடங்கள் இருக்கும் புதிய முயற்சிகள் சற்று தாமதம் ஆகும் பெரும்பாலும் கிரகங்கள் ஒரளவுக்கு நன்மை தருவதால் இந்த மாதம் கொஞ்சம் கடுமையாக இருந்தாலும் சமாளிக்கும் படி இருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை பொறுமையும் நிதானமும் தேவை

சந்திராஷ்டமம்: 01.11.2021 பிற்பகல் 12.52 மணி முதல் 02.11.2021 காலை 11.44 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம்:  சுவாமிமலை சுவாமிநாதன் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவது செவ்வாய்க்கிழமைகளில் கந்தர் சஷ்டி கவசம் படிப்பது நன்மை தரும் தானதர்மங்கள் செய்வது அன்னதானம் செய்வது மிகுந்த நல்ல பலனை தரும்

சதயம் : உங்கள் நட்சத்திர அதிபதி ராகு 4ல் இருப்பது சில சங்கடங்களை தரும் தாய் மூலமும், மற்றும் வாகனம் வீடு இவற்றாலும் விரயம் மன சங்கடம் ஏற்பட வாய்ப்புள்ளது அதே நேரம் மற்ற கிரகங்களும் நன்மைகள் அதிகம் செய்வதால் பொருளாதார பாதிப்புகள் இல்லை கேதுவால் இருவித வருவாய் இருக்கும் சுக்கிரன் மகிழ்ச்சியையும் இல்லத்தில் சுப நிகழ்வுகளையும் புனித யாத்திரை ஆடை ஆபரணச் சேர்க்கை கேளிக்கைகள் என்று கொடுக்கும் சூரியன் வலுவாக இருப்பதால் உத்யோகத்தில் சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் செவ்வாய் கொஞ்சம் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் இல்லத்தில் ஒற்றுமை இருக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் ஏற்பட குருபகவானும் ஒரு காரணமாக இருக்கிறார் இந்த மாதம் நல்ல நிலைகள் இருப்பதால் கவலை வேண்டாம் பொறுமை நிதானம் யோசித்து செயல்படுதல் இவற்றால் சங்கடங்கள் குறையும்

சந்திராஷ்டமம் : 02.11.2021 காலை 11.44 மணி முதல்  03.11.2021 காலை 09.57  மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் :  காலபைரவர் மற்றும் நந்தி பகவான் பிரதோஷ காலங்களில் நந்தி தரிசனம் சிவனுக்கு அபிஷேகம் போன்றவற்றை பார்ப்பதும் அருகில் உள்ள நரசிம்மர் கோயிலுக்கு பிரதோஷ வேளையில் செல்வதும் நன்மை தரும் முடிந்த அளவு அன்னதானம் செய்வது கல்வி தானம் செய்வது நன்மை பயக்கும்

பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய : உங்கள் நட்சத்திர அதிபதி குரு பகவான் 12ல் இருந்து சுபச் செலவுகளை செய்கிறார் மேலும் சூரியன் சுக்கிரன் கேது புதன் இவர்கள் நன்மையை செய்கிறார்கள் வருமானம் அதிகரிக்கும் பொருளாதாரம் நன்றாக இருக்கும் பணப்புழக்கம் தாராளமாக காரியங்களில் வெற்றியும் கிடைக்கும் உத்தியோகத்தில் சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் சிலருக்கு வீடு வாகன யோகங்கள் உண்டு இல்லத்தில் திருமணம் மருத்துவம் குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்வுகள் நடந்து ஒற்றுமை அதிகரித்து மகிழ்ச்சி பெருகும் அதேநேரம் உடல் உபாதைகள் மற்றும் தாய் தந்தையர் வழியில் மருத்துவச் செலவுகள் இருந்து கொண்டிருக்கும் மேலும் சிலருக்கு தேவையில்லாத வழக்கு பிரச்சனைகள் இருக்கும் காரணம் வார்த்தைகளில் கவனமின்மை கோபம் இவை ஆகும் இதை கட்டுப்படுத்தினால் மகிழ்ச்சியான மாதமாக இந்த மாதம் அமையும்

சந்திராஷ்டமம் : 03.11.2021 காலை 09.57  மணி முதல் 04.11.2021 காலை 07.42  மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் :  யோக ஹயக்ரீவர் மற்றும் தேவநாத பெருமாளை வணங்குவது, அருகில் உள்ள  கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றுவது பாசுரங்கள் பாடுவது நன்மை தரும் எளியோருக்கு தானம் செய்வது அன்னம் அளிப்பது பசு பறவை போன்ற உயிரினங்களுக்கு உணவளிப்பது குறிப்பாக தாகத்துக்கு தண்ணீர் கொடுப்பது மிகுந்த நன்மையை தரும்.

மீனம் : (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய):

மேலோட்டமாக பார்த்தால் சில கிரகங்கள் நன்மை தருவது போல் இல்லை என்ற அமைப்பு ஆனால் உங்கள் ராசிநாதன் குரு மற்றும் ராகு சனி சுக்கிரன் இவர்கள் அதிக நன்மையையும் செவ்வாய் சூரியன் புதன் இவர்கள் கலந்த பலனையும் தருவதால் ஓரளவுக்கு நன்றாக இருக்கும் கேது பகவான் மற்றும் அதேபோல் சந்திரன் சில சமயங்களிலும் சில கெடுதல்களை தருகிறார்கள் ஆனால் ராகு வலுவாக இருப்பதால் பொருளாதாரம் நன்றாக இருக்கும் அது மட்டுமல்ல சுக்கிரன் படத்திலிருந்து வருமானத்தை அதிகரிக்க செய்கிறார் உத்தியோக ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும் சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அதன் மூலம் கடந்த காலத்தில் அவர்கள் அடைந்த நஷ்டங்களை சரி செய்வார்கள் சனி மற்றும் குரு லாபத்தில் இருப்பதால் இழந்த பதவி அல்லது கடந்த காலத்தில் வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் இருந்த நிலை மாறி நல்ல சூழல் உருவாகி வருகிறது அதனால் இந்த மாதத்தில் ஜீவன ஸ்தானம் மிக நன்றாக இருக்கிறது பணவரவு தாராளம் கல்வியில் நல்ல வளர்ச்சி இருக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும் சுக்கிரனும் குருவும் திருமணம் குழந்தை பாக்கியம் புது வீடு குடி போகுதல் மற்றும் சேமிப்பு இவற்றை செய்கிறார்கள் அதனால் பண கஷ்டம் இருக்காது அதே நேரம் கேட்டு பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் இவர்களில் ஆரோக்கியத்தை பாதிக்கும் செவ்வாயும் வாழ்க்கைத் துணைவரை உடல் ஆரோக்கியம் பாதிப்படையச் செய்கிறார் இதனால் மருத்துவ செலவுகள் உண்டாகும் அதேபோல் 6க்குடையவருக்கு கெடு பார்வை இருப்பதால், கடன், எதிரிகள் தொல்லை அவ்வப்போது இருந்து அவை தானாக தீரும் பொதுவில் இந்த மாதம் நன்மை அதிகம் இருக்கும் மாதம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் தேவைகள் பூர்த்தி ஆகும்

பூரட்டாதி 4ம் பாதம் : உங்கள் நட்சத்திர அதிபதி மற்றும் ராசி அதிபதி குரு பகவான் லாபஸ்தானத்தில் சனியுடன் இருப்பதால் வருமானம் பெருகும் மேலும் ராகு வலுவாக இருப்பதால் உத்தியோகத்தில் நல்ல நிலை இருக்கும் அதே போல் சுக்கிரன் மற்றும் புதன் சஞ்சாரம் இல்லத்தில் மகிழ்ச்சியும் சுப நிகழ்வுகளும் கொண்டுவரும். ஆடை ஆபரண சேர்க்கை விருந்து கேளிக்கைகள் என்று மகிழ்ச்சி அதிகரிக்கும் உத்தியோகம் சொந்தத் தொழில் இவற்றில் நல்ல முன்னேற்றம் இருக்கும் இந்த மாதம் சிறப்பான மாதமாக உங்களுக்கு அமையும் தாய் தந்தை வழியிலும் குழந்தை வழியிலோ மருத்துவ செலவுகள் ஒரு பக்கம் இருக்கும் வாழ்க்கை துணைவர் உடல் ஆரோக்கியமும் பாதிக்கலாம் இருந்தாலும் பண வரத்து அதிகமாக இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள் பொதுவில் நல்ல மாதம்

சந்திராஷ்டமம் : 03.11.2021 காலை 09.57  மணி முதல் 04.11.2021 காலை 07.42  மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் :  யோக ஹயக்ரீவர் மற்றும் தேவநாத பெருமாளை வணங்குவது, அருகில் உள்ள  கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றுவது பாசுரங்கள் பாடுவது நன்மை தரும் எளியோருக்கு தானம் செய்வது அன்னம் அளிப்பது பசு பறவை போன்ற உயிரினங்களுக்கு உணவளிப்பது குறிப்பாக தாகத்துக்கு தண்ணீர் கொடுப்பது மிகுந்த நன்மையை தரும்.

உத்திரட்டாதி : உங்கள் ராசிநாதன் மற்றும் நட்சத்திர நாதன் இருவரும் சேர்ந்து லாபஸ்தானத்தில் இருப்பதும் சுக்கிரன் ராகு இவர்களும் வலுவாக இருப்பதும் இந்த மாதத்தில் சிறந்த நற்பலன்களை அதிகம் தரும் பொருளாதாரம் ஏற்றமாகும் சிலருக்கு புதிய உத்தியோகம் கிடைக்கும் சொந்த தொழில் செய்வோர் விஸ்தரிப்பு வேலைகளை தொடங்கலாம் அது நன்மையை தரும் பண வரத்து அதிகம் இருக்கும் அதனால் மகிழ்ச்சி அதிகமாகும் மேலும் இந்த மாதம் கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்யும் படியாக அமையும் பெயர் புகழ் அதிகாரம் அந்தஸ்து இவை நல்ல ஏற்றம் அடையும் பொதுவாக மருத்துவ செலவுகளும் வீடு பழுது பார்க்கும் செலவுகளும் மற்றும் விவசாயிகள் வகையில் கால்நடை மருத்துவம் மற்றும் வயல் வேலைகளில் அதிகப்படியான செலவுகள் இருக்கும் மற்ற பிரிவினருக்கு வெறும் மருத்துவ செலவுகள் மட்டுமே இருந்துகொண்டிருக்கும் இருந்தாலும் பண வரவு ஜாஸ்தியாக இருப்பதால் அவற்றை சமாளித்து விடுவீர்கள் உங்கள் முயற்சிகள் இந்தமாதம் வெற்றியைத் தரும் சிறப்பான மாதமாக அமையும்

 சந்திராஷ்டமம்: 04.11.2021 காலை 0742 மணி முதல் 05.11.2021  அதிகாலை 05.07 மணி வரை

 வணங்க வேண்டிய தெய்வம் ஹனுமான் ராமர், ராம நாமம் சொல்வது ஹனுமான் சாலிசா படிப்பது அருகிலுள்ள கோயிலுக்கு சென்று விளக்கு ஏற்றுவது நன்மை தரும் மேலும் அன்னதானம் கல்வி தானம் இவற்றைச் செய்வதும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பதும் நன்மை தரும் 

ரேவதி : உங்கள் நட்சத்திர அதிபதி புதன் இந்த மாதம் ஏழிலும் எட்டிலும் ஆக சஞ்சரிக்கிறார் மேலும் குரு சனி சுக்கிரன் மற்றும் ராகு இவர்கள் அதிக நன்மையை தருகிறார்கள் பொருளாதாரத்தில் ஏற்றம் இருக்கும் சூரியன் எட்டில் இருப்பதால் சில சங்கடங்கள் வழக்குகள் விபத்துகள் இவற்றை தருகிறார் அதேநேரம் அவர் மன திடத்தையும் வெற்றி வாய்ப்பையும் சேர்த்தே தருகிறார் செவ்வாய் பெற்றோர்களும் பிள்ளைகளாலும் மன வருத்தங்களை தருகிறார்கள் கேது வைத்தியச் செலவை கொடுக்கிறார் பணப் பிரச்சினைகள் பெரும்பாலும் இருக்காது உத்தியோகத்தில் சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு இடமாற்றம் நன்றாகவே இருக்கும் சொந்த தொழிலில் விஸ்தரிப்பு வளர்ச்சி போன்றவை இருக்கும் அதனால் சங்கடங்கள் சமாளித்து வெற்றி பெறுவீர்கள் இருந்தாலும் உறவுகளோடும் தொழில் செய்கின்ற இடத்திலும் நிதானமாக கவனமாக பேசுவது நன்மை தரும் பொதுவில் இந்த மாதம் ஏற்றம் இருந்தாலும் மருத்துவ செலவுகளும் வீண் விரயங்களும் இருப்பதால் கவனமாக இருந்தால இந்த மாதத்தை நன்றாக அமைத்துக்கொள்ளலாம் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது

சந்திராஷ்டமம் : 05.11.2021 அதிகாலை 05.07  மணி முதல் 06.11.2021 இரவு 02.22 மணி வரை

வணங்கவேண்டிய தெய்வம் : அமிர்தவல்லி தாயார் மற்றும் செங்கமல வல்லி தாயார் மன்னார்குடி ராஜகோபாலன். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று பெருமாளை சேவித்து விளக்கேற்றி வழிபடுவது மற்றும் சுலோகங்கள் சொல்வது நன்மை தரும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வதும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பதும் மிகுந்த நன்மையை தரும்

உங்கள் அன்பன்,

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி, ஜோதிடர்,

ஸ்ரீஅக்ஷயா வேதிக் அஸ்ட்ரோ ரிசர்ச் பௌண்டேஷன்

D1-304, Block D, Dhakshin Appartment, Siddharth Foundation

Iyyencherri Main Road, Urappakkam -603210  Kancheepuram Dist.

Mob (W) : 8056207965 / Email: mannargudirs1960@hotmail.com

!! ஸுபம் !!

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.