மார்ச் 09 ராசி பலன்

🕉️மேஷம்
மார்ச் 09, 2021
மாசி 25 – செவ்வாய்

கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் மற்றும் தொழில் கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். வாரிசுகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.
பரணி : காரியசித்தி ஏற்படும்.
கிருத்திகை : சுபச்செய்திகள் கிடைக்கும்.


🕉️ரிஷபம்
மார்ச் 09, 2021
மாசி 25 – செவ்வாய்

தொழில் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதில் அஞ்ஞான
சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
மார்ச் 09, 2021
மாசி 25 – செவ்வாய்

பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் இருக்க வேண்டும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான வதந்திகள் ஏற்பட்டு மறையும். தனிப்பட்ட சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் குழப்பமும், காலதாமதமும் ஏற்படும். மக்கள் தொடர்புத்துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் மூலம் சிறு சிறு கருத்து வேறுபாடுகளும், மனவருத்தங்களும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
திருவாதிரை : காலதாமதம் ஏற்படும்.
புனர்பூசம் : மனவருத்தங்கள் உண்டாகும்.


🕉️கடகம்
மார்ச் 09, 2021
மாசி 25 – செவ்வாய்

உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். விதண்டாவாத சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் ஒற்றுமை மேம்படும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உங்களின் பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வாகனம் தொடர்பான பயணங்களில் கவனம் வேண்டும். காப்பீடு தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு புதிய அறிமுகம் கிடைக்கும். புதிய முயற்சிகள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். நெருப்பு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : அறிமுகம் கிடைக்கும்.


🕉️சிம்மம்
மார்ச் 09, 2021
மாசி 25 – செவ்வாய்

மனதில் இருந்துவந்த ஆசைகள் மற்றும் தேவைகள் நிறைவேறும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். தவறிய சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல்கள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மகம் : ஆசைகள் நிறைவேறும்.
பூரம் : அனுகூலமான நாள்.
உத்திரம் : தேடல்கள் பிறக்கும்.


🕉️கன்னி
மார்ச் 09, 2021
மாசி 25 – செவ்வாய்

புதிய வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விருந்து மற்றும் கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.
அஸ்தம் : பொறுமை வேண்டும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.


🕉️துலாம்
மார்ச் 09, 2021
மாசி 25 – செவ்வாய்

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உயர்வும், பாராட்டுகளும் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். வாகனப் பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பூர்வீகம் தொடர்பான செயல்பாடுகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.
சுவாதி : ஒற்றுமை மேம்படும்.
விசாகம் : மேன்மையான நாள்.


🕉️விருச்சிகம்
மார்ச் 09, 2021
மாசி 25 – செவ்வாய்

மனதில் தன்னம்பிக்கையுடனும், தெளிவுடனும் செயல்படுவீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் அனுபவமும், லாபமும் உண்டாகும். காரியங்களில் இருந்துவந்த மறைமுக தடைகள் அகலும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தொழில் தொடர்பான பயணங்கள் மற்றும் வேலையாட்களின் ஆதரவு சாதகமாக அமையும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அனுஷம் : அனுபவம் கிடைக்கும்.
கேட்டை : இழுபறிகள் குறையும்.


🕉️தனுசு
மார்ச் 09, 2021
மாசி 25 – செவ்வாய்

திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உபரி வருமானம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவின் மூலம் படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். தந்தைவழி உறவினர்களிடம் ஆதரவான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : முன்னேற்றமான நாள்.
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.


🕉️மகரம்
மார்ச் 09, 2021
மாசி 25 – செவ்வாய்

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். சுயதொழில் தொடர்பான முதலீடுகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திராடம் : வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.
திருவோணம் : தெளிவான நாள்.
அவிட்டம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


🕉️கும்பம்
மார்ச் 09, 2021
மாசி 25 – செவ்வாய்

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் அவ்வப்போது குழப்பமான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். செயல்பாடுகளில் நிதானமும், காலதாமதம் ஏற்படும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு உண்டாகும். புதிய முடிவுகளை எடுக்கும் பொழுது ஒருமுறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : குழப்பங்கள் நீங்கும்.
சதயம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.


🕉️மீனம்
மார்ச் 09, 2021
மாசி 25 – செவ்வாய்

மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். எண்ணிய இலக்கை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உயர்நிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : இன்னல்கள் குறையும்.
ரேவதி : மாற்றமான நாள்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.