மார்ச் 24 ராசி பலன்

மார்ச் 24, 2021
பங்குனி 11 – புதன்

பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பார்கள். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அஸ்வினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பரணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
கிருத்திகை : லாபம் மேம்படும்.


🕉️ரிஷபம்
மார்ச் 24, 2021
பங்குனி 11 – புதன்

குடும்ப நபர்களால் வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் இணைவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : மதிப்புகள் அதிகரிக்கும்.
ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.


🕉️மிதுனம்
மார்ச் 24, 2021
பங்குனி 11 – புதன்

எதிர்காலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வீர்கள். தடைபட்ட தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் நேரிடும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : தடைகள் அகலும்.
திருவாதிரை : மனம் மகிழ்வீர்கள்.
புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


🕉️கடகம்
மார்ச் 24, 2021
பங்குனி 11 – புதன்

பணி தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான மாற்றங்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். போட்டித்தேர்வுகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கோபத்தை விடுத்து நிதானமாக சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : மாற்றமான நாள்.
பூசம் : முடிவுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.


🕉️சிம்மம்
மார்ச் 24, 2021
பங்குனி 11 – புதன்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். கணவன், மனைவிக்கிடையே மனக்கசப்புகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : மனக்கசப்புகள் நீங்கும்.
உத்திரம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


🕉️கன்னி
மார்ச் 24, 2021
பங்குனி 11 – புதன்

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் மற்றும் வரன்கள் சிலருக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திரம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
அஸ்தம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.


🕉️துலாம்
மார்ச் 24, 2021
பங்குனி 11 – புதன்

எழுத்து பணியில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். ஆன்மிக பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
சுவாதி : மாற்றமான நாள்.
விசாகம் : முயற்சிகள் மேம்படும்.


🕉️விருச்சிகம்
மார்ச் 24, 2021

பங்குனி 11 – புதன்
புதிய முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தனவரவுகள் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். செய்யும் பணிகளில் திருப்தியான சூழல் உண்டாகும். இளைய சகோதரர்களால் சாதகமான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.
அனுஷம் : திருப்தி உண்டாகும்.
கேட்டை : சாதகமான நாள்.


🕉️தனுசு
மார்ச் 24, 2021
பங்குனி 11 – புதன்

குடும்ப நபர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். பணப்புழக்கங்களில் கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் யாவும் காலதாமதமாகும். புதிய நபர்களுடன் பேசும்போது கவனத்துடன் பேசவும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : காலதாமதம் உண்டாகும்.
உத்திராடம் : புரிதல் ஏற்படும்.


🕉️மகரம்
மார்ச் 24, 2021
பங்குனி 11 – புதன்

புதுவிதமான மாற்றங்களால் லாபகரமான சூழல் உண்டாகும். வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் மாறுபடும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் முதலீடுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவருடன் விட்டுக்கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : லாபகரமான நாள்.
திருவோணம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அவிட்டம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


🕉️கும்பம்
மார்ச் 24, 2021
பங்குனி 11 – புதன்

சக ஊழியர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய வேலை தொடர்பான செயல்பாடுகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்ப நபர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வீண் செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
பூரட்டாதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.


🕉️மீனம்
மார்ச் 24, 2021
பங்குனி 11 – புதன்

பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் ஆதரவு கிடைக்கும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளில் லாபம் அதிகரிக்கும். அணிகலன் சேர்க்கை உண்டாகும். உறவுகளின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
ரேவதி : லாபம் அதிகரிக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.