விடியல்

வானத்தில் சூரியன் சோம்பல் முறித்து கொண்டு வரலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருந்தபுலர்ந்தும் புலராத காலை.

ரிர் ரிர் என்று கைபேசியில் அலாரம் அடித்தது, வசுமதி அலாரத்தை அணைத்து விட்டு எழுந்து கட கடவெனவேலைகளை ஆரம்பித்தாள்.

காபி ரெடியா வசு என்று கேட்டு கொண்டே வந்த ஶ்ரீகாந்த் ஒரு தனியார் நிருவனத்தில் பணிபுரிகிறான். இப்போது கொரோனாவால் வீட்டில் இருந்து பணிபுரிகிறான்.

இருங்க ஒரு இரண்டு நிமிஷம் தரேன் என்று காபியை கலந்து அவன் கையில் கொடுத்தாள்.

ஶ்ரீ ! இன்னிக்கு நான் அம்மாவ பாக்க போக போறேன் லன்ச் பண்ணி வெச்சிடறேன் நீங்க போட்டு சாப்ட்டு பசங்களுக்கும் எடுத்து குடுங்க செரியா என்றாள் வசுமதி.

விளயாடாத வசு !!! இன்னிக்கு எனக்கு எக்கசெக்க வேலை இருக்கு நிறைய கால்ஸ் இருக்கு நீ சன்டே போ இல்லேனா பசங்கள கூட்டிட்டு போ.

அதெல்லாம் முடியாது ஶ்ரீ. அம்மா ஷாப்பிங் பண்ண போகணும்னு சொன்னாங்க நான் பசங்கள கூட்டிட்டு போனா அங்க யார் பாத்துபாங்க அப்பாக்கு வயசாச்சு அவரால பாத்துக்க முடியாது. தினமும் நான் தானே பாத்துக்கறேன். இன்னிக்கு ஒரு நாள் பாத்துண்டா குறைஞ்சா போய்டுவீங்க.

என்னம்மா எல்லாம் தெரிஞ்சும் இப்படி பேசற வேலை நிறைய இருக்கு கால்ஸ் இருக்குனு சொல்றேன் ல.

ஓ அப்போ எனக்கு வேலையே இல்லையா? நான் என்ன இந்த வீட்டு வேலைக்காரியா?அவங்க எனக்கு மட்டும் தான் பசங்களா? நானும் வேலைக்கு போயிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? இந்த கொரோனா சனியன் வந்ததுல இருந்து தினமும் மெஷின் மாதிரி நானும் சமைக்கறது பசங்கள பாத்துகறது இதையேதான் பண்றேன். எனக்கு ஒரு ஆசை ஒய்வு இதெல்லாம் இருக்க கூடாதா? அப்பாக்கு இப்போலாம் முடியறது இல்லை அதனால அம்மா என் கூட வரியானு கேட்டாங்க.

முன்னெல்லாம் நீங்க ஆபீஸ் போவீங்க பசங்க ஸ்கூல் போவாங்க எனக்குனு கொஞ்சம் நேரம் கிடைக்கும் இப்ப அது எதுவும் முடியல எப்போதான் ஆபிஸ் ஸ்கூல் திறக்க போறாங்கன்னு இருக்கு. ஒரு ஷாப்பிங் போக முடியறதா.

யப்பா….இப்பே நான் என்ன சொல்லிடேன்னு இவ்வளோ பெரிய வார்த்தைலாம் பேசற? இப்போ என்ன நீ போகணும் அவ்ளோ தானே சரி போ நான் எப்படியோ பாத்து தொலைச்சிகறேன் என்று ஶ்ரீ வேலையை பார்க்க போய் விட்டான்.

வசுவிற்கு ஒருபுறம் கோவம் இருந்தாலும் எப்படியோ விட்டானே என்று பேசாமல் வேலையை முடித்து விட்டுக் கிளம்பினாள்.

ஆட்டோவில் அம்மா வீட்டிற்கு வந்து இறங்கினாள்.

அம்மா வசுவை பார்த்ததும் வாடி வா எவ்வளோ நாள் ஆச்சு வந்து என்றாள்.

நீ வேற மா இன்னிக்கு வரதுக்கே எத்தனை சண்டை தெரியுமா எப்படியோ வந்துட்டேன்.

ம்ம் சரி இரு காபி தரேன் கொஞ்சம் ரெஸ்ட் எடு.

உள்ளே சென்ற அம்மாவின் பின்னால் சென்ற வசு பக்கத்து வீட்ல என்ன? வந்தப்ப பாத்தேன் நிறைய பேர் இருந்தாங்க? ஏதாவது விஷேஷமா?

அதையேன் கேக்கற. விஷேஷம்லாம் இல்ல. கீதாவோட புருஷனுக்கு கொரோனா ஹாஸ்பிடல்ல இருந்தார். ரெண்டு நாள் முன்னாடி போய்ட்டார்.

என்னம்மா சொல்ற? நேத்து நான் பேசின அப்போ ஏன் சொல்லல? எப்படி அவருக்கு கொரோனா வந்துது?

உங்க அப்பாக்கு உடம்பு படுத்தறதுல எல்லாம் மறந்து போயிடறேன். அதான் சொல்லல. அவர் தான் டெய்லி ஆபீஸ் போனாரே, அவர் ஆபீஸ் ல வந்துதான் ஆகணும்னு சொல்லிடா பாவம். இப்போ அவாளா வந்து கீதாவையும் பசங்களையும் பாத்துக்க போறா. என்னமோ போ. கீதாவ பாத்தா ரொம்ப பாவமா இருக்கு.

அம்மா நான் கிளம்பறேன் மா என்றாள் வசு சட்டென்று.

ஏண்டி என்ன ஆச்சு? இபோ தானே வந்த அதுகுள்ள கிளம்பறேன்னு சொல்ற என்றாள் அம்மா.

இல்ல மா நான் கிளம்பறேன் அப்றமா போன் பண்ணி பேசறேன். வரேன் மா என்று கிளம்பிவிட்டாள் வசு.

வீட்டிற்கு வந்த வசுவை ஆச்சர்யமாக பார்த்த ஶ்ரீ என்ன ஆச்சு அம்மா இல்லையா என்று கேட்டான்.

இருக்காங்க. நான் சன்டேவே போய்க்கறேன். நீங்க நிம்மதியா வேலைய பாருங்க.

ஏன் இந்த திடீர் முடிவு? மார்னிங் அவ்வளோ சண்ட போட்ட? இபோ என்ன ஆச்சு?

அடுத்தவங்க துக்கத்துல தான் நாம எவ்ளோ சுகமா இருக்கோம்னு தெரியறது. அதான் வந்துட்டேன்.

ஶ்ரீ ஒன்றும் புரியாமல் உள்ளே சென்றான்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.