‘ஹைக்கூ‘ கவிதைகள்

உடைந்த வளையல் துண்டுகள்
உருவாக்கும் கெலடாஸ்கோப்
வடிவமைக்க முயல்கிறது சித்திர முகத்தை

வெள்ளம் சூழ்ந்த பகுதியில்
சொட்டுச் சொட்டாக விழுகிறது
ஹெலிகாப்டரினின்றும் உணவுப் பொட்டலங்கள்

மனைவியாய் தாலி சூடியபின்
வெட்டுண்டது
பரிகார வாழை

தூளி குழந்தைக்கு
சாமரம் வீசியது காற்று
அசைகிறது தூக்கணாங்குருவிக் கூடு

சேற்று நீரில்
குதித்து விளையாடியது குழந்தை
இணைத்துக் கொள்கிறது சூரியன்

About Author