வாட்ஸ்அப் செயலியில் நாம் ஸ்டேட்டஸ் அப்டேட்களை பார்க்க “updates” சென்றுதான் பார்க்க வேண்டும். இப்பொழுது Whatsapp channel வந்தபிறகு அந்த ஸ்க்ரீன் இந்த இரண்டுமே இருப்பதால் அப்டேட் பார்ப்பது பலருக்கு சிரமமாக இருப்பதால் WA Status updates பார்ப்பதில் சிறிது மாற்றம் கொண்டு வர சோதித்து வருகிறது மெட்டா நிறுவனம்.
இன்ஸ்ட்டா ஸ்டோரி போல் WA Status updates
இன்ஸ்டாகிராம் உபயோகிப்பாளர்களுக்கு இந்த வசதி ஏற்கனவே தெரிந்திருக்கும். இன்ஸ்டா மெசெஞ்சரில் பேசும் பொழுது யாருடன் பேசுகிறீர்களோ அவர்களது ப்ரொபைல் படத்தை சுற்றி வட்டம் இருக்கும். அதை தொட்டால் அவர்களது இன்ஸ்டா ஸ்டோரி வரும். வாட்ஸ்அப் செயலியிலும் இனி நீங்கள் யாருடன் பேசுகிறீர்களோ அவர்களது ப்ரொபைல் படத்தை தொட்டால் இனி அவர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்க்க இயலும். இந்த வசதி இப்பொழுது சில பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே வந்துள்ளது.
பொதுவாய் ஸ்டேட்டஸ் டேப் பக்கம் அதிகம் போகாதவர்களுக்கு இது வசதியாக இருக்கும். அதே சமயம் ஒவ்வொருவர் ஸ்டேட்டஸ் தனித்தனியாக சென்று பார்க்க விரும்பாதவர்கள் ஏற்கனவே இருக்கும் update டேப் சென்று பார்த்துக் கொள்ளலாம்.