அக்டோபர் 14 புரட்டாசி 28 ராசி பலன்

அக்டோபர் 14 புரட்டாசி 28 ராசி பலன்

இன்றைய பஞ்சாங்கம்

பதிவுகளை உடனக்குடன் டெலிகிராம் சேனலில் பெற

🕉️மேஷம்
அக்டோபர் 14, 2021

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : ஆதாயம் ஏற்படும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.


🕉️ரிஷபம்
அக்டோபர் 14, 2021

விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.
ரோகிணி : அனுகூலமான நாள்.
மிருகசீரிஷம் : அங்கீகாரம் கிடைக்கும்.


🕉️மிதுனம்
அக்டோபர் 14, 2021

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. மனதில் பலவிதமான சிந்தனைகளின் மூலம் அமைதியின்மை ஏற்படும். மனதில் தோன்றக்கூடிய கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். விரயங்கள் ஏற்படக்கூடிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிஷம் : நெருக்கடிகள் உண்டாகும்.
திருவாதிரை : அமைதியின்மை ஏற்படும்.
புனர்பூசம் : சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும்.


🕉️கடகம்
அக்டோபர் 14, 2021

சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

புனர்பூசம் : தடைகள் நீங்கும்.
பூசம் : மாற்றமான நாள்.
ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.


🕉️சிம்மம்
அக்டோபர் 14, 2021

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முதலீடுகளை மேம்படுத்துவதற்கான உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : பொறுப்புகள் குறையும்.
உத்திரம் : புரிதல் உண்டாகும்.


🕉️கன்னி
அக்டோபர் 14, 2021

உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் மற்றும் சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். முன்னேற்றமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.


🕉️துலாம்
அக்டோபர் 14, 2021

தாய்வழி உறவினர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வாகனம் மற்றும் மனை சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் இழுபறிகள் குறையும். எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். ஆதாயம் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

சித்திரை : அனுகூலமான நாள்.
சுவாதி : ஆரோக்கியம் மேம்படும்.
விசாகம் : இழுபறிகள் குறையும்.


🕉️விருச்சிகம்
அக்டோபர் 14, 2021

வேலையாட்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். முயற்சிகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.


🕉️தனுசு
அக்டோபர் 14, 2021

வியாபாரத்தில் நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், எதையும் சமாளிக்கும் திறமையும் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். வெற்றிகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : தனவரவுகள் கிடைக்கும்.
பூராடம் : தன்னம்பிக்கையான நாள்.
உத்திராடம் : நம்பிக்கை மேம்படும்.


🕉️மகரம்
அக்டோபர் 14, 2021

சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். பெரியவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.


🕉️கும்பம்
அக்டோபர் 14, 2021

நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். மனதை உறுத்திக் கொண்டிருந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
சதயம் : தீர்வு கிடைக்கும்.
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.


🕉️மீனம்
அக்டோபர் 14, 2021

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். சபை தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புத்துணர்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : லாபம் உண்டாகும்.
ரேவதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

About Author