பிரதான கதாபாத்திரங்களின் பெயர்கள்
*கற்பனை கதாபாத்திரம்
பரூக் மாலிக் – பெர்ஷிய இளவரசன்
ஔரங்கசீப் – இந்தியப் பேரரசர்
நவாப் பாய் – அவுரங்கசீப்பின் மனைவி & சுல்தான் , முவாஸம் மற்றும் பத்ருன்னிஷாவின் தாயார்
திலாரஸ் – அவுரங்கசீப்பின் மனைவி & ஜெபுனிஷாவின் தாயார்
சுல்தான் – அவுரங்கசீப்பின் முதல் மகன்
முவாஸம் – அவுரங்கசீப்பின் இரண்டாம் மகன்
ஆஸம் – அவுரங்கசீப்பின் மூன்றாம் மகன்
அக்பர் : அவுரங்கசீப்பின் நான்காம் மகன்
ஜெபுனிஷா – அவுரங்கசீப்பின் முதல் மகள்
ஜீனத் – அவுரங்கசீப்பின் இரண்டாம் மகள்
பத்ருன்னிஷா – அவுரங்கசீப்பின் மூன்றாம் மகள்
ஜுப்தாத் – அவுரங்கசீப்பின் நான்காம் மகள்
மெஹருன்னிஷா – அவுரங்கசீப்பின் ஐந்தாம் மகள்
தாரா : அவுரங்கசீப்பின் மூத்த சகோதரன்
ஜகனாரா : அவுரங்கசீப்பின் மூத்த சகோதரி
ரவுசனாரா : அவுரங்கசீப்பின் இளைய சகோதரி
சுலைமான் : இளவரசன் தாராவின் மகன்
ஜானி : இளவரசன் தாராவின் மகள்
ஜாபர் கான்* – இந்தியாவின் பிரதம மந்திரி
அகில் கான் – அவுரங்கசீப்பின் ஆலோசகர்
தீதர் – ஜெபுனிஷாவின் அலி
பாகம் – 1
- தந்தையின் மகள்
வசந்தகாலத்தில் தோட்டத்தை காணும் சமயத்தில்
நைட்டிங்கேல் போல பாடுகிறேன் நான்..
4 பிப்ரவரி 1659
உறுதியான சங்கிலிகள் கைதி 721 ன் உடலை சுற்றி அவர் கைகளை நெஞ்சோடு சேர்த்து அவர் பிரார்த்திப்பது போல பிணைத்திருந்தது. அவர் காணுக்கால்கள் இரண்டும் மிக நெருக்கமாக இணைத்துக் கட்டப்பட்டதால் முன்னே நடப்பதும் சிரமமாக இருந்தது. உடனிருந்த இரு சிறைக் காவலர்களும் அவரை வேகமாக நடக்க வற்புத்தியதில் தடுமாறினார். அகன்ற மார்பும் வலிமையான தசைகளும் கொண்ட அந்த சிறைக்கைதிக்கு வேர்வை சிந்துவதும் ரத்தம் சிந்துவதும் புதிதல்ல; வாழ்நாள் முழுவதும் படைவீரனாய் இருந்ததால் அவன் கடினமானவனாய் மாறி இருந்தான். சிறைச்சாலைக்குள் அவன் நுழைந்ததும், அருகில் இருந்த சிறை அறைகளில் இருந்த கைதிகள் , அவர்களின் அழுக்கான கைகளால் தொட்டு, அவனைப் பார்த்து கூக்குரல் எழுப்பினர். அமைதியாக அவர்களை பார்த்தவன் , தானும் இங்கிருக்கும் மற்றவர்களைப் போல் மாறிவிடுவோமா என பீதியில் நினைத்தான்.
“ ஏன் இங்கே என்னை கொண்டுவந்தீர்கள் ? இது வீரர்களுக்கான சிறை அல்ல . இங்கு பைத்தியங்கள்தான் வாழ்கின்றனர் ?” அந்த கைதியின் குரல் , காவலர்கள் இருவரும் அவனுக்கு வேலை செய்பவர்கள் போல் அதிகாரமாய் இருந்தது.
“ நீ பேரரசரின் கைதி. அவர் எங்கு அடைக்க சொல்கிறாரோ அங்குதான் இருக்க வேண்டும் “: என சொல்லியவாறே அவனது சங்கிலியை இழுத்து அவனை முன்னே செல்ல சொன்னான் ஒரு காவலன்.
சிறையின் உள்ளே அவனைக் கூட்டி செல்ல செல்ல, பாதையின் அகலமும் , வெளிச்சமும் குறைந்துக் கொண்டே சென்றதுடன் போகும் வழியும் ஈரமாய் இருந்தது. காவலர்களின் கையில் இருந்த தீவட்டியின் ஒளி படும் இடங்களில் இருந்து எலிகளும் சிலந்திகளும் இருளை தேடி ஓடின. ஆனால் கைதி 721 இவற்றைக் கண்டு பயப்படவில்லை. குறைவான காற்றும், தரை ஈரத்தின் காரணமாய் எழுந்த துர்நாற்றமும் அவனை அழுத்தத் துவாங்கினாலும் அதை அவன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அந்த நரகத்தின் உள்ளே செல்ல செல்ல, அவன் மனதின் துயர் அதிகரித்தாலும் அவன் முகம் அதை வெளிக்காட்டாமல் நீர்மலமாய் இருந்தது.
“ இங்கேயே இரு “ என்று அவனுக்கு உத்தரவிட்ட காவலன் அந்த நீண்ட பாதையில் சென்றான். தன் விதியை எதிர்நோக்கி கைதி அங்கே நின்றிருந்தான். நிமிடங்கள் கழிய, அவன் கால்களை ஏதோ ஊர்வது போல் இருந்தாலும், அது அவனை பாதித்ததாக காட்டிக்கொள்ளவில்லை. அவனுடன் இருந்த காவலனுக்கு அந்த அற்ப சந்தோஷத்தை தர அவன் விரும்பவில்லை.
உள்ளே சென்ற காவலன் திரும்பி வந்து “ செல்லலாம் வா “ என்று கூறி கைதியின் இரு தோள்களையும் பக்கத்திற்கு ஒருவராய் பற்றி அந்த இருண்ட பாதையில் உள்ளே இழுத்து சென்றனர். இருவரில் ஒரு காவலன் சிறை அறையின் கதவை உதைத்து திறக்க பெரும் சப்தத்துடன் அந்தக் கதவு திறந்தது. அந்த அறை தனக்கானது என புரிந்து கொண்டான் கைதி. காவலர்கள் அவனை உள்ளே தள்ள, ஈரமான, சமமற்ற
தரையில் கீழே விழுந்தான். அவனை பின்புறம் திருப்பி அவனை பிணைத்திருந்த சங்கிலிகளில் இருந்து அவனை விடுவித்தனர். அங்கிருந்து தப்ப இயலாது என்ற பொழுது அந்த சங்கிலி எதற்கு ?
அவர்கள் சென்றவுடன் தன் இருப்பிடத்தை கவனமாக ஆராய்ந்தான். கல்லால் ஆன மேற்கூரையில் அந்த அறையில் முன்பு தங்கி இருந்தவர்கள் செய்த சில கீறல்கள் காணப்பட்டன. சிறை அறையின் பக்க சுவர்கள் கரடுமுரடாக இருந்தது. ஒரு மூலையில் இரண்டடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்ட கம்பிகலால் தடுக்கப்பட்ட ஜன்னல் ஒன்று இருந்தது. அதைப் பார்த்த கைதி, அந்த ஜன்னல் வழியாய் தப்பிக்க முயல்வது என்பது இயலாத ஒன்று என்ற முடிவுக்கு வந்தான். அந்த துளை, நேரத்தைக் கணக்கிடவும், வெளியே இருக்கும் தட்பவெப்ப நிலை தெரிந்து கொள்ளவும் சிறிது காற்று வரவும் மட்டுமே உபயோகம் ஆகும் என்று எண்ணிக்கொண்டான். அவனுக்கு உதவி வரும் வரை அவற்றின் உதவியுடன் உயிருடன் இருப்பது என்ற முடிவெடுத்தான் அவன். கண்களை மூடிக்கொண்டு தனக்கு தானே முணுமுணுக்கத் துவங்கினான். “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அல்லாஹ் என்பது அவனது பெயர். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அல்லாஹ் என்பது அவனது பெயர். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அல்லாஹ் என்பது அவனது பெயர்.”
சனிக்கிழமையில் இருந்து வியாழன் வரை, தங்கள் சலிப்பை போக்கும் விதமாக அவர்கள் பாடினார். வெள்ளிக்கிழமைகளில் பிரார்த்தனைக்காய் இடைவெளி விட்டனர். அவள் சகோதரியின் ஸ்ருதி விலகிய குரலைக் கேட்டு ஜெபுனிஷாவின் கண்கள் கலங்கின. “ இல்லை இல்லை நிறுத்து “ என்று தன் சகோதரியை நோக்கிக் கூறினாள்.
அவள் சகோதரி பத்ருன்னிஷா, தன் புருவங்களை குழப்பத்தில் உயர்த்தினாள். “ இது நீதானே எனக்கு சொல்லித் தந்தது. “
ஜெபுனிஷா மறுப்பாய் தன் தலையை ஆட்டினாள்.
இல்லை. கண்டிப்பாக இதை நான் சொல்லிதரவில்லை. மீண்டும் ஒரு முறை முயற்சி செய். இம்முறை இறுதியில் ஆழமான தொனியில் முயற்சி செய் “
அந்த சகோதரிகள் தங்கள் பாடலைப் பாடத் துவங்க, ஜெபுனிஷா அந்த .இசையில் குறுக்கிட்டாள். தன் மற்றொரு சகோதரியான ஜுபிதாதை நோக்கி “ உன் குரல் என் குரலை விட உயர்ந்த தொனியில் வருகிறது. என் குரலுடன் இணைந்துப் பாடவேண்டும் “ என சொன்னாள்.
ஜெபுனிஷாவின் கட்டளைகளை அவளின் இளைய சகோதரிகள் நால்வரும் என்றும் புறக்கணித்ததில்லை. அந்த அந்தப்புரத்தில்இருந்த அனைவரையும் விட அவர்களின் தாய்மார்களை விட அவளை அதிகம் மதித்தனர். அங்கே அந்தப்புரத்தில் ஜுபிதாத், வெகுளியான மிஹிர், தூண்டிவிடும் பத்ர் மற்றும் முதுகன்னியான ஜீனத் இருந்தனர். ஜெபுனிஷா, அறிவுரை வேண்டும் ஜுபிதாத்திடமும், ஆறுதல் தேவைப்பட்டால் மிஹிரிடமும், பொழுதுபோக்கிற்கு பத்ர் மற்றும் அந்தப்புரத்தின் வம்புகளை பேச ஜீனத்திடமும் செல்வாள். ஆனால், அன்று சகோதரிகளின் பாடல் ஏனோ அவளை எரிச்சலூட்டியது. ஜெபுனிஷா எல்லா விஷயங்களிலும் சரியாக நடப்பவள். தன் சகோதரிகள் அதே போன்று இல்லாது இருப்பது அவளுக்கு கவலை தருவதாக இருந்தது. அந்தப் பெண்கள் நீண்ட அடர் வண்ண புர்கா அணிந்து பாடிக்கொண்டிருந்தனர். அவர்களின் முகத்தை மறைத்த மெல்லிய திரை மற்றவரின் முக ஓட்டத்தை காண முடியாமல் மறைத்தது.
அவர்கள் தந்தையான முகலாய பேரரசர் அவுரங்கசீப் இசை மற்றும் அனைத்துக் கலைகளையும் தடை செய்திருந்தாலும், ஜெபுனிஷா ஒரு பாடலை முணுமுனுப்பது இசைக்கருவிகள் வாசிப்பதில் இருந்து மாறுப்பட்டது என சொல்லி பாட வைப்பதில் வெற்றிப் பெற்றிருந்தாள்.
“ ஜெபோ, இப்பொழுது நாம் அமைதியாக இருக்க வேண்டும். இல்லையேல், ஷம்ஷேர் கான் நம் பாடுவதைக் கேட்கக் கூடும்.” ஷம்ஷேர்கான் அவர்கள் அன்னை நவாப் பாயின் பிரதான சேடி. நாவப் பாய்யின் வெளி உலக குரலாக அறியப்பட்டாலும், ஷம்ஷேர் அவர்களின் தந்தை அவுரங்கசீப்பின் அந்தப்புர ஒற்றனாக மாறிவிட்டான். ஆனால் , அதைப் பற்றி ஜெபுனிஷா கவலைப்படவில்லை. “ஷம்ஷேர்கான் பற்றி பயப்படவேண்டாம் . இங்கு நான்தான் உங்கள் ராஜா மற்றும் ராணி. இது எனது அந்தப்புரம் . இங்கு நான் சொல்வதை மட்டும் நீங்கள் கேளுங்கள் “ என கூறினாள் ஜெபுனிஷா.
ஜுபிதாத் தன் அருகில் இருந்த சேடிப்பெண்ணிடம் “அவள் அம்மா மகளாக இருந்தாலும் கோபத்தில் தந்தையை போன்றவள் “எண்டு முணுமுணுத்தாள். ஜெபுனிஷா துணிவுடன் செயல்பட காரணம் இருந்தது.இந்தியாவில் இருந்த முகலாயப் பேரரசின் வாரிசுப் போட்டியில் அவளது தந்தை , தனது மூன்று சகோதரர்களை அப்பொழுதுதான் தோற்கடித்து இருந்தார். போர் முடிவுக்கு வந்ததால், தான் தனக்கு நிச்சயக்கப்பட்ட சுலைமானை விரைவில் திருமணம் செய்துகொள்வோம் என தெரியும் அவளுக்கு. பேரரசரின் திருமணமானப் பெண்ணுக்கு மிக அதிகமான அதிகாரங்கள் இருந்தன. ஏற்கனவே தனது அதிகாரங்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என முடிவு செய்திருந்தாள் அவள்.
“ அருமை ! இசை அருமையாக வந்துள்ளது. நாளை நாம் இதை நிறுத்திவிட்டு நமது வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளை செய்வோம்.ஆனால், உங்களின் தனி அறையில் இசை பயிற்சியை நீங்கள் செய்யவேண்டும். கண்டிப்பாக மசூதியில் நீங்கள் பாடலை முணுமுணுக்கக்கூடாது. அந்த பிற்போக்கு முல்லாக்கள் நமக்கு தொல்லைக் குடுக்காமல் ஓயமாட்டார்கள். “
ஜுபிதாத் தன் சேடிப் பெண்ணிடம் “ நம்மைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். முதலில் அப்பாவிற்கு பயந்தோம், பின் முல்லாக்களுக்கு இப்பொழுது இவளுக்கு. நமக்கு பிரச்சனை வரும் என்பது விஷயம் அல்ல, யார் மூலம் பிரச்சனை வரும் என்பதே விஷயமாகும் “ என முணுமுணுப்பதைக் கேட்டு ஜெபுனிஷா புன்னகைத்தாள்.
சில நிமிடங்கள் கழித்து மெலிந்த ஒல்லியான ஒரு உருவம் அந்த அறைக்குள் நுழைந்து “ பெண்களே ஏன் இங்கே இருக்கிறீர்கள் அனைவரும் ?” என்று வினவியது. அந்த உடைந்த சோகமான குரலைக் கேட்டவுடன் அங்கிருந்த பெண்கள் அனைவரும் அந்த குரலுக்கு சொந்தகாரியான நவாப் பாயை அடையாளம் கண்டுகொண்டனர்.
ஜெபுனிஷா நிமிர்ந்து அமர்ந்தாள். “ அம்மி , நாங்கள் குரான் குரான்தான் ஓதிக் கொண்டிருந்தோம்” என்று சொல்லியவாறே தன் சகோதரிகள் ஆமோதிப்பதற்காய் அவர்களை நோக்கினாள். அவர்கள் யாரும் பதில் ஏதும் சொல்லாமல் போகவே “ அதைதானே பெண்கள் செய்து கொண்டிருந்தோம் ? : என மீண்டும் அழுத்தமாய் கூற மற்றப் பெண்களும் வேறு வழியின்றி அவளை ஆமோதித்தனர். அவர்களின் தயக்கத்தினால் சிறிது எரிச்சல் அடைந்தாலும், தன் சிற்றன்னையை நம்ப வைக்க மீண்டும் அழுத்தமாய் “ நாளைய பிரார்த்தனைக்காக தயாராகிக் கொண்டிருந்தோம் “ என கூறினாள்.
“ பெண்களே ! உங்கள் தந்தை உங்களைக் கண்டு மிகப் பெருமை அடைவார் . நாம் அடுத்த வாரம் உங்கள் தந்தையின் பட்டம் சூட்டும் விழாவிற்காக தில்லி செல்ல வேண்டியுள்ளது. எனவே உங்கள் உடமைகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் “ என புன்னகையுடன் கூறி விட்டு அங்கிருந்து கிளம்பினார் நவாப் பாய். அங்கே அந்தப்புரத்தில் அவளுக்குத் தெரியாமல் அவர்கள் கையில் வைத்திருந்த பாட்டு காகிதங்களைப் பற்றி அவள் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை .
மெலிந்த உடலுடன் தன் சிற்றன்னை அங்கிருந்து தள்ளாடியப் படி போவதையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெபுனிஷா. அங்கிருந்த அனைவருக்கும் நவாப் பாய்யின் தள்ளாட்டத்திற்கு என்ன காரணம் என தெரியும். பிரசவத்தில் மகனுக்கு பதில் மகன் பிறந்ததில் கோவம் கொண்ட அவர்களது தந்தை , நவாப் பாய்யை தடியால் அடித்து விட அதில் இருந்து உடல் சரியாகி வர வெகு காலம் பிடித்தது அவளுக்கு. ஆனாலுமே கால் நொண்டியதை மாற்ற இயலவில்லை.
அதை கண்ட மிஹிருன்னிஷா “ ஒரு காலத்தில் என்னைப் போன்று அழகாய் இருந்தார்களாம் அவர்கள். நம் தந்தையின் செயலால் இப்படி ஆகிவிட்டார்கள். எதிர்காலத்தில் ஒரு வேளை நானும் இப்படி நொண்டி ஆக நேரிடலாம் “ என வருத்ததுடன் கூற அவளை இடைமறித்து ஜெபுனிஷா “ ஒரு காலும் நான் அதை அனுமதிக்க மாட்டேன். “ என கூறினாள்.
“ என் சகோதரிகளை யாரேனும் துன்புறுத்தினால் அவர்களின் விதைப் பையை அறுத்து அவர்களின் கழுத்தில் அதை அணிவிப்பேன் “ என அவள் கூறியதும் அந்தப்புரம் சிரிப்பலையில் மூழ்கியது. ஜெபுனிஷா, ஒரு வேகத்தில் அப்படி கூறவில்லை, உண்மையான அக்கறையுடன்தான் அவ்வாறு கூறினாள். அன்பு செலுத்துவதில் எப்படியோ அப்படியேதான் கோபத்திலும் அவள் என்பது அங்கிருந்த பெண்களுக்கு நன்கு தெரியும். அவளின் உணர்வுகளைக் கண்டு அங்கிருந்த பெண்கள் சிரிப்புக்கும் அவள் மேலான மதிப்புக்கும் இடையில் ஊசலாடினார்கள்.
பன்னிரண்டே வயதான மிஹிர் “ சுலைமானுக்காக நான் மிகவும் வருந்துகிறேன் “ எனக் கூற அதைக் கேட்ட ஜெபுனிஷா நாணத்துடன் “ சுலைமானுக்கு என் வழியில் குறுக்கிடக்கூடாது என்று நான்கு தெரியும். மேலும் , சுலைமானுக்கு என்னை எப்படி திருப்தி அடைய செய்யவேண்டும் என தெரியும் “ என்றாள்.
“ நீ அதிர்ஷ்டசாலி . அப்பா பேரரசர் ஆகும் முன் உனக்கு நிச்சயம் செய்து விட்டனர். இல்லையேல், நீயும் ஜகனாரா அத்தையை போன்றுதான் உன் காலம் முழுவதும் தனியாக இருந்திருக்க வேண்டும் “ என ஜுபிதாத் கூறியதை கேட்ட ஜெபுனிஷாவின் இதயம் சோகத்தில் ஆழ்ந்தது. பேரரசரின் மகள் என்றக் காரணத்தினால் அவளது அத்தை ஜகனாராவின் திருமணத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஜெபுனிஷாவின் நிச்சயத்தின் பொழுது அவுரங்கசீப் இளவரசனாக இருந்ததால் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை.
“ ஜெபோ ! இப்பொழுது அப்பா பேரரசர் ஆகிவிட்டதால் , உன் திருமணத்தை ரத்து செய்து உன்னை தனியே வாழ செய்துவிட மாட்டார்கள் தானே “ என மனதில் உண்மையான கவலையுடன் மிஹிர் வினவினாள்.
“ அப்பாவிற்கு என்னை மிகவும் பிடிக்கும். தில்லி செல்வதற்கு முன்பு கண்டிப்பாய் திருமணம் செய்து வைப்பதாய் எனக்கு வாக்குறுதி தந்திருக்கிறார் அவர் “ என தந்தை மீது மிகுந்த நம்பிக்கையுடன் பதில் கூறினாள் ஜெபுனிஷா.
மறுநாள் காலையில் , நீண்ட வரிசையில் அவளின் அரண்மனை சேவகர்கள் நீண்ட வரிசையில் அந்தப்புர பொருட்களை வண்டிகளும் யானையும் கொள்ளும் அளவிற்கு ஏற்றிக் கொண்டிருப்பதை ஜெபுனிஷா கண்டாள் . காலை சூரியனின் ஒளி pattஉ அவர்களின் நீண்ட சிகப்பு அங்கி ஒளிர்ந்துக் கொண்டிருந்தது . அவள் அரண்மனையில் நின்றிருந்த இடத்தில் இருந்து சிறு சிகப்பு எறும்புகள் வரிசையாக ஊர்ந்து செல்வதை போல் இருந்தது. அந்த எறும்புகளைப் போல் வரிசையில் சென்று அந்த பெரிய உருவத்தின் மேல் எவ்வளவு பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியுமோ அத்தனைப் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
இந்தியாவில் முகலாயப் பேரரசின் சிம்மாசனதைப் பிடிப்பதற்கான போட்டியில் அவுரங்கசீப் தனது சகோதரர்களை வீழ்த்தி சில மாதம் ஆகி இருந்தது. ஏற்கனவே அவசரமாக அவனது தளபதிகளால் நடப்பட்ட விழாவில் அவுரங்கசீப் முகலாய பேரரசனாக பதவி ஏற்று இருந்தாலும், முறைப்படி பெரிய விழா நடத்தவில்லை. அந்த விழாவை காணத்தான், அனைவரும் அவர்களின் இடத்தில் இருந்து செங்கோட்டையை நோக்கி வடக்கில் சென்று கொண்டிருந்தனர். அதுதான் அவர்கள் புதிய இருப்பிடமாக இருக்கப் போகிறது.
அவர்களின் அந்தப்புரம் வரிசைப்படி பல காவலாளிகளால் பாதுகாக்கப்பட்டது. முதலில் பெண் அடிமைகள், அதன் பின் அலிகள் , இவர்கள் அந்தப்புரத்திற்கும் வெளி உலகத்திற்குமான தூதுவார்களாகவும் இருந்தனர். அதன் பின், டாதர் காவலாளிகள் என அழைக்கப்பட்ட வலிமையான பெண்கள். தோற்றதில் படையில் இருந்த பாதுகாவலர்கள் கூட அவர்களுடன் ஒப்பிடும் பொழுது சிறு எறும்பாய் தோற்றமளித்தனர். அந்தப்புரத்தினுள் நுழைய எந்த ஆணுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை . பேரரசர் அனுமதித்தால் ஒழிய வேறு யாரும் நுழைய இயலாத ஒன்று. அப்படி முகலாலய பேரரசர் அனுமதித்த ஒரு ஆண் அகில் கான்.
“ அகில் கான் எப்படி நம்முடன் வார இயலும் “ என்று வெறுப்புடன் கேட்டாள் ஜெபுனிஷா. ஒரு ஆண் அந்தப்புர பெண்களுடன் வருகிறான் என்ற எண்ணமே அவளுக்கு வெறுப்பை வரவழைத்தது. “
“ உங்கள் தந்தை ஆக்ரா செல்லும் இந்த பயணத்தில் உங்கள் பாதுகாப்பிற்காக அகில் கானை நியமித்துள்ளார் “ என்ற ஷம்ஷேர் கானின் பதிலில் எரிச்சல் கொண்ட ஜெபுனிஷா “ நாங்கள் என்ன சிறு குழந்தைகளா? எங்களை பாதுகாக்க ஒரு ஆண் அதற்கு ?” என்று கோபத்துடன் கேட்டாள்.
“ ஓ ஜெபோ ! ஒரு ஆண் இந்தப் பயணத்தில் நம் துணையாக வருவதில் என்ன தவறு இருக்கிறது ? இந்த அலிகளையும் , பெண் காவலாளிகளையும் பார்த்து எனக்கு போராடித்து விட்டது. “ என்று அந்த வெய்யிலில் காற்றிற்காய் கைகளை ஆட்டிக் கொண்டே கேட்டால் முதிர் கன்னியான ஜீனத்.
“ அந்த ஒருவனும் யாரோ ஒரு ஆண் அல்ல “ என்று பத்ருன்னிஷா தனது துணி மூடிய கரங்களை உயர்த்திக் கூறவும், அக்குள் வேர்வையால் நனைந்து அதனுடன் ஒட்டிக் கொண்ட மஸ்லீன் துணி மற்றவர் பார்வைக்குப்பட்டது. அந்தபுர பெண்களிலியே மிகவும் துணிச்சல் ஆனவள் என பேர்பெற்றவள் பத்ருன்னிஷா. அவளது செக்ஸ் வேட்கையானது ஒரு ஆணுக்குறியதை விட மிக அதிகம் என்றும் பல காவலாளிகள் உடன் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டவள் என்பதும் அந்தப்புரத்தில் உலவும் பல வதந்திகளில் ஒன்று.
இதைக் கேட்ட ஜெபுனிஷா வெறுப்பில் பார்த்தாலும் அதைக் கண்டுகொள்ளாத பத்ருன்னிஷா “ அகில் கான் ! இது வரை நான் பார்த்ததிலேயே மிக சிறந்த பெர்ஷிய ஆண்மகன். அவன் குதிரையில் வருவதை கற்பனை செய்து பார். இந்த கொளுத்தும் வெயிலால் அவனது இரும்பை போன்ற உறுதியான உடல் தசைகள் வியர்வையில் மின்ன, அவனது மமுகத்தில் வியர்வை வடிய நினைத்துப் பார் “ என தன் முகத்திரையை இழுத்தவாறே கூறினாள்.
அந்ததப்புர விதிகள் மீறப்படுவதை கண்டு கோபமுற்றாள் ஜெபுனிஷா. வெறுப்புடன் பத்ருன்னிஷாவைப் பார்த்தாள். அவளது சகோதரியின் கீழத்தரமான செய்கைகளும், அவர்களது பாதுகாவலனைப் பற்றிய இச்சையை தூண்டும் பேச்சும் அவளை எரிச்சல் அடைய வைத்தது.
அவளைக் கண்டுகொள்ளாத பத்ருன்னிஷாவோ “ சமீபகாலமாய் இந்த வெய்யில் மிக அதிகமாக இருப்பதன் காரணத்தினால் இந்த டாடர் காவலாளிகள் கூட என் கண்ணுக்கு மிக அழகாய் தோன்றுகிறார்கள் “ என தொடர்ந்து கூறவதைக் கேட்ட மற்ற அந்தப்புர பெண்கள் சிரித்தனர்.
அவளைத் தொடர்ந்து ஜீனத்தும் தன் கைகளை தட்டியவாறே “ புதிதாய் உஸ்பெகிஸ்தானில் இருந்து வந்துள்ள ஹீராவைக் காணும் பொழுதெல்லாம் நான் உணர்ச்சிவசப்படுகிறேன் . உன் சங்கிலிகளை உடைத்து வா “ எனப் பாடினாள் . இதைக் கேட்ட பெண்களின் சிரிப்பு மேலும் அதிகரித்தது. கீழே வேலை செய்துகொண்டிருந்த பணியாளர்களோ இவர்களின் சம்பாஷணை எதையும் கேக்காமல் பொருட்களை ஏற்றுவதிலேயே குறியாய் இருந்தனர். இவர்களின் பேச்சை கேட்ட நவாப் பாய் சங்கடத்தில் வேறுபுறம் முகத்தை திருப்பிக்கொண்டதை ஜெபுனிஷா பார்த்தாள்.
“ ஓ ஹீரா ! உன் சங்கிலிகளை உடைத்தெறி / என் வலிகளுக்கு ஓய்வுக் கொடு / இரவில் என்னை பார்க்க வா / நான் உன்னைக் கூறி வைத்துவிட்டேன் / உன்னிடம் இருக்கும் இறுக்கமான குர்தா அணிந்து வா / உன்னைப் பற்றிய எண்ணமே என்னை உணர்ச்சிப்பெருக்கில் ஆழ்த்துகிறது” என பத்ருன்னிஷா தொடர்ந்து பாடினாள்.
மற்ற பெண்கள் அவளை மேலும் பாட ஊக்குவிக்க, ஜெபுனிஷாவோ கோபத்துடன் , பத்ருன்னிஷாவின் கன்னத்தில் கோபத்துடன் ஓங்கி அறைந்தாள் . அந்த அறையில் , அந்தப்புரம் முழுவதும் மயான அமைதி குடி கொண்டது. பத்ருன்னிஷா அழத் துவங்க மற்றப் பெண்களோ அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
அவளைத் தடுத்த அவளது அன்னை நவாப் பாய் “ அவள் உனது சகோதரி. அவளை அடிக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை “ என ஜெபுனிஷாவைக் கண்டித்தாள்.
“நீங்கள்தான் பார்த்தீர்களே ! நான் அவளுக்கு கற்றுத் தந்த பாடல் வரிகளை அவள் எப்படி தவறாக பயன்படுத்துகிறாள் என ?” ஜெபுனிஷா அவளிடம் முறையிட்டாள் .
“ நீ அவளுக்கு சொல்லித் தரவில்லை. அகில்கான்தான் அவளுக்கு பாடல்களை போதித்தவன். மேலும் , மறந்துவிடாதே , உனக்கு பாடல்களை படிக்க சொல்லித் தந்ததும் அவன்தான். மற்ற எந்த ஆண்களை விடவும் அகில் கானை தான் உன் தந்தை நம்புகிறார். “ என அவளை சமாதானப்படுத்தினாள் நவாப் பாய். இருந்தும் சமாதானம் ஆகாத ஜெபுனிஷா “ அப்பொழுது அவள் அகில் கானிடம் மன்னிப்பு கேக்க வேண்டும்” என அழுது கொண்டிருந்த தன் சகோதரியை பார்த்துக் கூறினாள் .
சில மணி நேரம் கழித்து அப்பெண்கள் யானையில் ஏறி தங்கள் பிரயாணத்தை துவங்க தயாரான பொழுது ஜெபுனிஷா பத்ருன்னிஷாவைத் தேடினாள் . சிறிது தூரத்தில் , அந்தப்புர பெண்களின் இதய நாயகனான அகில் கான் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். ஆசைக் கொண்ட கண்கள் பல அவனது ஒவ்வொரு நடவடிக்கையையும் பின் தொடர்ந்து கொண்டிருந்தன. எப்பொழுதும் போல மிக அழகாக இருந்தான். நீண்ட அலைபாயும் அவன் முடி எண்ணை தடவி அந்த காலை வெய்யிலில் ஒளிர்ந்தது. அழகாய் கத்தரிக்கப்பட்ட தாடியுடன் சிறு மீசையும், அவனது சிவந்த தோலும் அவனை இன்னும் அழகனாய் காட்டியது. அப்பொழுது, முகத்திரை அணிந்த பத்ருன்னிஷா நவாப் பாயின் அலியுடன் அவனிருந்த இடத்திற்கு சென்றதை அவள் கவனித்தாள். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை அவளால் கேக்க இயலாவிடினும், அகில் கான் புன்னகைத்ததையும் அதன் பின் திரை மூடிய பத்ருன்னிஷாவின் முகத்தை கையில் ஏந்தி அவள் நெற்றியில் முத்தமிட்டதையும் அவள் பார்க்க நேர்ந்தது.
“ அவளைத் திட்டவாது செய்திருக்கலாம் “ என ஜெபுனிஷா மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டே நினைத்தாள் . ஆனால் அதற்குள் அவன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவளை சந்திக்க அவளது அலியான தீதரிடம் அனுமதி வேண்டி நின்றான். இந்த பொது இடத்தில் தன்னை இவன் ஏன் சந்திக்க வேண்டும் . இந்த சந்திப்பின் நோக்கம் என்ன என ஜெபுனிஷா குழம்பினாள்.
மிக சப்தமாகவும் தெளிவாகவும் “ உனக்கு அவளை அடிக்க எந்த உரிமையும் இல்லை “ என அவன் கூற பொதுவில் தன்னை அவன் கண்டித்ததால் அதிர்ச்சியுற்ற ஜெபுனிஷா “ நீங்கள் சொல்லித் தந்த பாடலை அவள் எப்படி மாற்றிப் பாடினாள் “ என கோபத்துடன் பதில் சொன்னாள்.
“ யாரையும் அடிக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை. இந்தப் பயணத்தில் இது போன்று மீண்டும் எந்த ஒரு விஷயமும் என் காதிற்கு வரக் கூடாது. இங்கே உங்கள் தந்தையின் இடத்தில் நான் இருக்கிறேன் என மறவாதே !” எனக் கட்டளையிட்டு அங்கிருந்த அகன்றான்.
அங்கிருந்து அவன் குதிரையை நோக்கிச் சென்றவனைப் பார்த்து “ நீ ஒரு போதும் என் தந்தை ஆக இயலாது “ என ஜெபுனிஷா கூறியதைக் கேட்டவன் பதில் கூற விரும்பினாலும் பேசாமல் சென்றான். அவளிடம் பேசி எந்த உபயோகமும் இல்லை என்பதை அவன் நன்கு அறிவான்.
தலைநகரத்தை நோக்கிய அந்த ராஜ ஊர்வலம், ஒரு ஏரிக்கரையில் நின்றது. ஜெபுனிஷா அந்த நீண்ட நிலப்பரப்பை நோக்கினாள். விரைவில் இந்த காலியான இடங்கள் மறைந்து அழகிய நகருக்குள் நுழைவோம் என்பது அவளுக்குத் தெரியும். முகலாய வீரர்கள் விரைந்து அங்கே பெரிய துணிகளை விரிக்கத் துவங்கினார்கள். அந்தப் பணியாளர்களின் தலைவர்கள் இடும் கட்டளைகள் அந்த இடத்தை நிரப்பின. அங்கே நடப்பதை மிகுந்த ஆர்வத்துடன் ஜெபுனிஷா பார்த்துக்கொண்டிருந்தாள். விரைவில் அங்கே மிகப்பெரிய கூடாரம் ஒன்றை அமைத்தனர் பணியாட்கள். அதுதான் அவர்கள் தாற்காலிக அந்தப்புரம் என ஜெபுனிஷாவிற்கு தெரியும்.
விரைவில் அங்கே, சில சிறிய மற்றும் மத்திய அளவிலான கூடாரங்கள் பல எழுப்பபட்டன. சிறிய கூடாரங்கள் வீரர்களுக்கானது மற்றும் மத்திய அளவிலான கூடாரங்கள் சமையற்காரர்கள் மற்றும் அவர்களின் பொருட்கள் வைப்பதாற்கானது என்பதையும் அவள் அறிவாள் . பல கூடாரங்கள் எழுப்பபட்டதால் அவற்றிற்கு இடையே சில இடங்களில் குறுகிய சந்துக்களும், சில இடங்களில் பெரிய வழிகளும் ஒரு வரிசையில் உருவானது. சிறிது நேரத்தில் வீரர்கள் மற்றும் பணியாளர்களின் குழந்தைகள் அங்கே ஓடி விளையாட துவங்க அவர்களின் கலகலப்பான ஒலியால் நிரம்பியது அந்த அந்தப்புர பகுதி. அந்தப் பகுதியில் செல்வோர் அது முகலாய நகரம் என அறிவதற்காக கூடாரத்தின் மேல் முகலாயர்களின் சிங்கக் கொடி ஏற்றப்பட்டது.
அவளின் சகோதரிகளின் உடமையுடன் அவள் உடமையும் இறக்கப்பட்டு அவரவர் கூடாரத்திற்கு எடுத்து செல்லப்படுவதை பார்த்தாள் ஜெபுனிஷா. அவளுடைய தாற்காலிக இருப்பிடமான கூடாரதிற்குள் நுழைந்தவுடன் அது பகல் என்றும் பாராமல் உறங்கத் துவங்கினாள் . அன்றைய இரவில் அவள் ஏற்ப்பாடு செய்திருந்த அவளின் ரகசிய பாடல் குழுவின் கூட்டத்திற்காக அவள் இப்பொழுது ஓய்வெடுப்பது அவசியமாக இருந்தது. படுத்தவுடன் உறங்கத் துவங்கிய அவள் உறக்கம் கனவுகள் நிறைந்ததாய் இருந்தது. அவளின் கூடாரத்தின் திறப்புகள் நறுமணம் மிக்க புற்கள் கொண்டும் மூங்கில் குச்சிகள் கொண்டும் வெளியே இருந்து சூரிய ஒளி அதிகம் வாராதவாறு உருவாக்கப்பட்டிருந்தன. கூடாரத்தின் உள்ளே நறுமணம் கமழவும், அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து சாணத்தின் நாற்றம் உள்ளே வாராதவாறு தடுக்கவும் கூடாரத்தின் திரைமறைப்புகளுக்கு வாசனைத் திரவியங்கள் கலந்த நீரைத் தெளித்திருந்தனர் சேடிப் பெண்கள். சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஜெபுனிஷா தான் கூடாரத்தின் உள்ளே படுக்கையில் இருப்பதை உணர்ந்துகொண்டாள் . உடல் வலியால் அவளால் படுக்கையில் இருந்து எழ இயலவில்லை. அவள் எழுந்துக் கொள்ள விரும்பினாலும், கட்டிலுடன் பிணைத்துக் கட்டப்பட்டது போல் அவள் உடல் எழ மறுத்தது.
சிறிது நேரம் கழித்து வெளியே வீரர்களும் பணியாட்களும் அவர்களின் உடமைகளையும் மற்ற பொருட்களையும் இறக்கும் சப்தம் கேட்டு அதிர்வுடன் எழுந்து அமர்ந்தாள். கூடாரத்தின் ஜன்னல்கள் வழியே வெளியே சூரிய ஒளியை பார்த்து அப்பொழுதைய நேரத்தை முடிவு செய்தவள் , தன்னுடய அலியான தீதரை அழைத்தாள். அவளிடம், தனது சகோதரிகளுக்கு அன்றைய இரவு கூட்டத்தை பற்றிய செய்தி அனுப்பியாகிவிட்டதா என கேட்டாள். தானே நேரடியாக அனைவருக்கும் அழைப்பு விடுத்ததாக அவள் கூறியதை கேட்டு திருப்தி அடைந்தவள் “ பிரார்த்தனை பொருட்கள் : கவனமுடன் கையாளவும் “ என எழுதப்பட்டிருந்த பெட்டியை திறந்தாள். நேர்த்தியாக எம்பராய்டர் செய்யப்பட்டு பெர்ஷிய மொழியில் எழுதப்பத்திருந்த குரானை வெளியே எடுத்தாள். அது அவளது தந்தை அவளுக்கு அன்பளிப்பாக கொடுத்தது.
அதன் பின் பிரார்த்தனையின் பொழுது அவள் உபயோகப்படுத்தும் விரிப்பை எடுத்து வெளியே வைத்தாள். அதன் பின் ஒரு சிறிய பெட்டியை திறந்தவள் தன்னுடைய உள்ளாடையை கழற்றி வைத்தாள். பின்பு, அதனுள் இருந்த சிகப்பு வைன் பாட்டிலை கையில் எடுத்தவள் புன்னகையுடன் “ இன்று இரவு உனக்கு வேலை உள்ளது “ என்று புன்னகையுடன் முணுமுணுத்தாள் .
அன்றைய இரவுக் கொண்டாட்டடங்களுக்கு தயாராக மற்ற சகோதரிகள் அனைவரும் ஜுபிதாத்தின் கூடாரத்தில் குழுமி இருந்தனர். பாதர், ஜுபிதாத்தின் படுக்கையில் மிக குறைந்த அளவு ஆடையுடன் படுத்திருக்க , அவளின் அடிமைப் பெண் அவளுடைய சற்றே சதைப் பிடிப்பான உடலில் வாசனை திரவியங்களை தடவி உடலை அவளின் உடலை பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் படுத்திருந்த நிலையை பார்த்து வெறுப்படைந்த ஜுபிதாத் “ எங்கள் முன் இப்படி படுப்பது அவசியமா ?” என்றாள்.
“ இதில் என்ன இருக்கிறது ? நாம் அனைவரும் சகோதரிகள்தானே ? நம்முடைய நிர்வாண உடலை எத்தனையோ முறை நாம் பார்த்துள்ளோம் தானே “ என அலட்சியமாக பதில் கூறினாள் பாதர்.
“அது நாம் சிறுமிகளாய் இருந்த பொழுது ! இப்பொழுது இப்படி படுத்திருப்பது உனக்கு வெட்கமாய் இல்லை “ என்று அவளை ஜீனத் கடிந்துக் கொண்டாள்.
“ நீங்கள் உங்கள் நாணம் வெட்கம் போன்றவற்றை விட வேண்டும். உங்களிடைய பாலியல் விருப்பங்களில் நீங்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் “ என்று மற்றவர்களுக்கு அறிவுரைக் கூறினாள் பாதர்.
“ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். ஆனால் ஜெபுனிஷா முன் இப்படி செய்து விடாதே.. இதெல்லாம் அவளுக்குப் பிடிக்காது “ என்று இளையவளான மிஹிர் அறிவுறுத்துவது போல் கூறினாள்.
“ உனக்குத் தெரியாது என சொல் . ஜெபுனிஷா என்னை விட இந்த விஷயத்தில் துணிச்சலானவள். அவள் அகில் கானை பார்க்கும் விதத்திலேயே அது நன்கு தெரியும்.”
“ உனக்கு ஜெபுனிஷா மற்றும் அகில் கானை பற்றி என்னத் தெரியும் ? அவள் அந்த மாதிரி பார்க்க மாட்டாள் “ பணிப்பெண் அவள் கண்களுக்கு மையிட்டுக் கொண்டிருக்க பாதருக்கு மறுமொழி தந்தாள் ஜுபிதாத்.
குறும்பாக சிறிதுக் கொண்டே “ நமக்கு அகில் கான் பாடல் சொல்லி கொடுத்த சமயங்களில் ஜெபுனிஷா அவனுடன் அதிக நேரம் தனிமையில் செலவழிக்க விரும்பினாள் என்று ஒரு வதந்தி “ என பாதர் பதில் கூறினாள்.
ஆனால் அதை ஜுபிதாத் சிறிதும் நம்பவில்லை .தன் உதடுகளில் இருந்த வண்ண பூச்சை கொஞ்சம் துடைத்து விட்டு சரி செய்து கொண்டே பாதரின் வதந்தியை மறுத்தாள் .
பாதர் சொல்வதை நம்பியும் நம்ப முடியாமலும் “ அவள் சொல்வதில் உண்மை இருக்கலாம் ஜுபிதாத். அகில் கானிடம் இருந்து விலக விரும்பியே சுலைமானை திருமணம் செய்ய அவள் ஒத்துக்கொண்டதாய் ஒரு பேச்சு உண்டு” என ஜீனத்தும் அவர்களின் உரையாடலில் இணைந்துக் கொண்டாள்.
இவர்களின் பேச்சுகளால் எரிச்சல் அடைந்த ஜுபிதாத் “ பெண்களே உங்கள் பேச்சுகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் நீங்கள் நேரடியாக ஜெபுனிஷாவிடம் இந்த வதந்திகளைப் பற்றி கேட்பதே நல்லது “ என அந்தப் பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தாள் . அத்துடன் பாதரை எழுந்திருக்க சொல்லி விட்டு தனது உடலை பிடித்து விட சொல்லி பணிப்பெண்ணிடம் உத்தரவிட்டாள் .
அன்றிரவு தங்களின் அலிகளுடன் , ரகசியமாக ஜெபுனிஷாவின் கூடாரத்தை நோக்கி சென்றனர். மற்றப் பெண்கள் மகிழச்சியுடன் அந்த கூட்டதிற்கு சென்றாலும், பத்ருன்னிஷா கொஞ்சம் தயக்கத்துடனேயே சென்றாள் . அன்று காலை நடந்த விஷயத்தினால் அவள் கோபத்துடனும் பயத்துடனேயே அந்த கூட்டத்திற்கு சென்றாள்.
ஜெபுனிஷா இவர்களுக்கு என்று விஷேசமாய் தனியாக குரான் ஒன்றை தயாரித்திருந்தாள். அந்த குரானின் அட்டையும் முதல் சில பக்கங்களும் குரானின் வரிகளை கொண்டிருந்தாலும், அதன் பின் இருந்த பக்கங்கள் எல்லாம், புகழ் பெற்ற முகலாய, பெர்ஷிய, அரேபிய கவிஞர்களின் கவிதைகளை கொண்டிருந்தது. கூடாரத்தில் நுழைந்து அவர்களின் பர்காவை அகற்றியவுடன் அவர்களின் வண்ணமயமான மற்றும் அவர்களின் உடல் அழகை வெளிப்படுத்திய உடைகள் வெளிப்பட்டன.
வெள்ளி நிற கமீஜும் , அவள் கால்களின் வனப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இருந்த பைஜாமும் அணிந்திருந்த பாதரை நோக்கி கூறினாள் ஜெபுனிஷா.
அவளுக்கு நன்றி கூறிய பாதர் தன் கால்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்த உடையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
மீண்டும் அவளிடம் “ இன்று நீ மிகவும் அழகாய் இருக்கிறாய். அழகான உன் உடலை சாக்கடையில் குளிப்பாட்டியிருக்கிறாய என ஜெபுனிஷா கூறவும் பாதர் அவமானத்துடன் அவள் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
“ பெண்களே ! நாம் துவங்குவோமா ? “ என மற்றவர்களை பார்த்து அவள் கேட்டவுடன் அனைவரும் ஆமோதித்தனர்.
ஆனால் ஜீனத் மட்டும் ஜெபுனிஷாவின் மடியில் அமர்ந்திருந்த அகபாறை பார்த்து “ இவனுக்கு இங்கே என்ன வேலை ?” என வினவினாள்.
“ குழந்தை அக்பர் , இந்தக் கூட்டத்திற்கு புதிய உறுப்பினர்” எனக் கூறியவள், தனது கடைக்குட்டி தம்பியான அக்பரை பாசத்துடன் பார்த்தாள். அவளது சொந்தத் தாயான திலராஸிற்கு கடைசியாக பிறந்த குழந்தை அவன். அவனை வளர்க்கும் பொறுப்பை ஜெபுனிஷா ஏற்றுக் கொண்டிருந்தாள்.
“ அவன் குழந்தை. இன்னும் முழுதாய் பேசக் கூட துவங்கவில்லை “ என்ற ஜீனத்தின் மறுப்பை அவள் மறுதலித்தாள்.
“ இவனைப் போன்றே நான்கு வயதாக இருந்த சமயத்திலேதான் அத்தை ஜகனாரா அவள் மடியில் என்னை இருத்தி எனக்கு பாடல்கள் சொல்லித் தரத் துவங்கினாள் . ஒருவர் கற்க துவங்க இது தகுந்த வயதாகும் “ எனக் கூறி அவன் நெற்றியிலே முத்தமிட்டவள் அன்றைய நிகழச்சியை துவங்கினாள். மற்றப் பெண்கள் வழக்கம் போல் அவளது விருப்பதிற்கு இசைந்தனர்.
முதலில், வழக்கம்போல் பாடல்களை அவர்கள் பாட, பணிப்பெண்கள் சிதாரை இசைத்தனர். மாலை செல்ல செல்ல, அவர்கள் அவர்களின் கவிதைகளை படிக்கத் துவங்கினார்கள். ஒவ்வொருவரும், அவர்களின் கவிதைகளை வரிசையாகப் படிக்க, வழக்கம்போல் ஜெபுனிஷாவின் வரிகள் சிறப்பாக அமைந்திருந்தன. அவர்கள் கவிதைப் படித்த நேரம் முழுவதும் அவர்களை எந்த வித தொந்தரவும் செய்யாமல் அமைதியாக இருந்தான் அக்பர். பல மணி நேரம் கழித்து ஜெபுனிஷா யாருக்கும் தெரியாமல் கொண்டுவந்திருந்த ஒயின் குடிக்க இடைவெளி விட்டனர்.
“ நம் மூத்த சகோதரர் சுல்தானை தந்தை என்ன செய்வார் என நினைக்கிறாய் ஜெபோ ? “ என வெகுளித்தனமாய் கேட்டாள் மிஹிர்.
சகோதரர்களுடன் அவுரங்கசீப் நடத்திய அரியணைக்கான யுத்தத்தில் , அவரது தம்பியான இளவரசன் ஷூஜாவை எதிர்த்து போர் புரிய , சுல்தானை அனுப்பி இருந்தார் அவுரங்கசீப். ஆனால் அவனோ, தந்தையை ஏமாற்றி, தனது சித்தப்பாவுடன் இணைந்து கொண்டான்.
“ அவர் என்ன செய்வார் என எனக்குத் தெரியாது . ஆனால் அவன் கொல்லப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன் “ என ஒயினை குடித்துக் கொண்டே கூறினாள் ஜெபுனிஷா. அவளின் பதிலில் மற்றப் பெண்கள் அனைவரும் பீதியில் உறைந்தனர்.
“ ஏன் அதிர்ச்சி அடைகிறீர்கள் ? அரியணைக்கான யுத்தத்தில் பேரரசரான தனது தந்தையை ஏமாற்றி இருக்கிறான் அவன் ?”
“ ஆனால், அவன் நமது மூத்த சகோதரன் மட்டுமல்ல, அடுத்த வாரிசும் கூட “ என அவளை இடைமறித்துக் கூறினாள் ஜீனத். ஜெபுனிஷா கூறியதில் அதிர்ச்சி அடைந்த அவளின் கோப்பையில் இருந்த ஒயின் அவள் மேல் சிந்தியது.
“ முகலயர்களிடையே வாரிசு என்ற பழக்கமே இல்லை. அரியணை அல்லது சவப்பெட்டி என்பதே தாரக கூற்றாகும். யார் போர் புரிந்து வெல்கிறானோ அவனே ஆட்சி அமைக்க முடியும். நமது தந்தை, அவரது மூன்று சகோதரர்களை யுத்தத்தில் முறியடித்து அரியணையை கைப்பற்றி உள்ளார். அவருக்கு பின்பு வருபவரும் அப்படியே செய்ய வேண்டும். சுல்தான் போன்ற துரோகி அரியணைக்கு உரியவன் அல்ல “ என்று அவர்களுக்கு நீண்ட விளக்கம் தந்தாள் ஜெபுனிஷா.
அவளின் குணத்தையும் கோபத்தையும் பற்றி அறிந்த அவர்கள் அதற்கு அவளிடம் விவாதிக்க விரும்பவில்லை. தன் மடியில் அக்பரை வைத்துக் கொண்டு ஒயினை குடித்தவள் , “ நான் இந்த நாட்டு ஒயினை வெறுக்கிறேன் . அப்பா ஒயினை தடை செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் ஷிராசி ஒயினை பருகிக் கொண்டிருப்பேன் “ என்று கண்ணில் கசப்புடன் கூறினாள் ஜெபோ.
தடை செய்யப்பட்டிருந்தாலும் , ஷிராசி மற்றும் கேனரி ஒயின்களுக்கு அங்கே அதிக தேவை இருந்தது. சூரத்தில் இருந்து அந்த இரண்டு மது வகைகளுக்கும் நாற்பத்தி ஆறு நாட்கள் தேவைப்பட்டன. அவற்றை கொண்டு வர ஆகும் செலவினால் பொது சந்தையில் அவை விற்கப்படவில்லை. சுத்திகரிக்கப்படாத சர்க்கரை மற்றும் இந்திய திராட்சை கொண்டு தயாரிக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான நாட்டு ஒயின்களையே பலரும் வாங்கிப் பருகினார்கள்.
“ சுல்தான் , ஷூஜாவின் மகளை காதலித்தான் எனவும் அவளை மணம் செய்துகொள்வதற்காகவே தந்தையை ஏமாற்றி ஷூஜாவுடன் இணைந்ததாகவும் பலரும் பேசுகின்றனர் “ என பத்ருன்னிஷா கூற
“ யார் அந்த பரத்தையாய காதலிக்கிறான் அவன் ? அவளுக்காகவா அப்பாவை ஏமாற்றினான் ? என ஜெபோ ஆச்சரியத்துடன் வினாவினாள்.
அவளின் அடிமைப் பெண்களில் ஒருவளான மீரா அவளை இடைமறித்து “ இளவரசி ஜெபுனிஷா ! நீங்கள் யாரையாவது காதலித்தது உண்டா ?” என்று அமைதியாக கூறினாள்.
“ நான் காதலிக்கிறேனோ இல்லையோ அதைப் பற்றி உனக்கு என்ன அக்கறை “ என அவள் மேல் எரிந்து விழுந்தாள் .
“ அப்படி இல்லை இளவரசியே ! காதலிப்பவர்களை எதையும் செய்யத் தூண்டும் காதல். அதுவும் குறிப்பாய் காதலிப்பவர்களை நாம் இழந்து விடுவோமோ என எண்ணும் பொழுது “ என அமைதியாய் அவளுக்கு விளக்கினாள் .
ஜெபுனிஷா தன் வருங்காலக் கணவன் சுல்தானைப் பற்றி எண்ணினாள் .தான் அவனை விரும்புகிறமோ உண்மையில் ? அவனைக் காதலிப்பதாய் அவள் எண்ணினாள் . ஆனால் உண்மையில் சிந்தித்துப் பார்த்தால் அவளுடைய நுண் உணர்வுகள் அது பொய்யென்று சொன்னது.
“பாதரைக் கேள். அவள் தன் வாழ்வில் நிறைய ஆண்களைக் காதலித்துள்ளாள்” என்று சொல்லி நிறுத்தி ” நிறையப் பெண்களையும் தான் ” என சொன்னவுடன் அங்கே சிரிப்பலை எழுந்தது. பாதரும் சிரிக்கத்தான் முடிந்தது. ஏனென்றால் ஜூபைதாத் சொன்னதில் எதுவும் பொய் இல்லை.
ஜெபுனிஷா அக்பரையே சில நொடிகள் பார்த்தப் பின் அவனை தன் கையில் தூக்கிக் கொண்டு “நான் என்னுடைய அக்பரையே இப்பொழுது மிகவும் நேசிக்கிறேன்” என சொல்லி அங்கிருந்து கிளம்பினாள். அவளுடைய அடிமைப்பெண் சொன்னது அவள் மனதில் இருந்து மறைந்து போயிருந்தது அப்பொழுது.
மெல்ல இரவு கவிழ கவிழ, கூடாரங்கள் நிலவொளியில் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தது போல் பிரகாசிக்கத் துவங்கின. காவலர்களின் நீண்ட அங்கிகள் பிரகாசமான வண்ணத்தில் இருந்து பழுப்பு நிறத்திற்கு மாறி இருந்தன. அவர்களின் இருப்பும் மற்றவர்களின் பார்வைக்குத் தெரியாத வகையில் அந்த கூடாரங்களை சுற்றி இருந்தது.
2. அபகரிப்பவரும் – பேரரசரும்
13 ஜூன் 1659
ராஜ ஊர்வலம் , தலைநகரமாகிய தில்லியை அடைந்தவுடன், அவளுடைய புதிய இருப்பிடமான தில்லியை ஜெபுனிஷா ஆச்சரியத்துடன் பார்த்தாள். அவளுடைய தாத்தா ஜஹாங்கீர் கான் பேரரசராக இருந்தபொழுது அவள் பலமுறை தில்லிக்கு வந்திருக்கிறாள். ஆனால் இன்றோ அவளது தந்தை பேரரசரானப் பின், தில்லியே அவளுக்கு சொந்தமானது போல் உணர்ந்தாள்.
அவள் அதுவரை வாழ்ந்த எந்த ஒரு நகரத்தைவிடவும் தில்லி பிரம்மாண்டமாய் இருந்தது. 1500 ஏக்கரில், ஒரு அரைவட்டமாய் கட்டப்பட்ட சுவர்களுக்கு நடுவே இருந்தது தில்லி. தில்லிக்கு மொத்தம் எட்டு நுழைவாயில்கள் இருந்தன. அந்த நுழைவாயில் எந்த நகரத்தை நோக்கி இருந்ததோ அந்த நகரத்தின் பெயர் அந்த நுழைவாயிலுக்கு வைக்கப்பட்டிருந்தது. உதாரணத்திற்கு லாகூர் வாயில் லாகூர் நகரத்தை நோக்கியும், காஷ்மீரி வாயில் வடக்கே காஷ்மீர் நகரத்தை நோக்கியும் அஜ்மீர் வாயில் ,மேற்கே ராஜபுதன நகரமான அஜ்மீரை நோக்கியும் இருந்தது. அந்த எட்டு வாயில்கள் வடிவமைப்பும் தனிப்பட்ட முறையில் சிறப்பு பெற்ற ஒன்றானதாகும். நான்கு வாயில்கள் திசைகளை குறிக்க, மீதம் இருந்த நான்கு வாயில்கள் சுவர்க்கத்தின் கதவுகளைக் குறித்தன.
நகருக்குள் , மேற்கு திசையில் மற்றொரு கட்டுமானம் இருந்தது. அது அவளது தாத்தா புதிதாய் காட்டிய செங்கோட்டை. கடவுளுக்கு பயந்த , கடவுள் நம்பிக்கை உள்ள ஒவ்வொரு முகமதியருக்கும் மேற்கு திசை ஒரு முக்கியமான திசையாக இருந்தது. அவர்களின் புனித நகரமான மெக்கா மேற்கு திசையில் இருந்ததே அதற்கு காரணம். மசூதியின் வாயில்கள் எப்பொழுதும் மேற்கு திசையை நோக்கியே இருந்தன. அவர்கள் தொழுவதும் அத்திசை நோக்கியே. ஃபதேபூர் சிக்ரி நகரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டக் கற்களை கொண்டு கட்டப்பட்ட அந்தக் கோட்டையானது ஒரு ஒழுங்கற்ற எண்கோண வடிவில் அமைந்திருந்தது. நான்கு பிரதான வாயில்கள், இரண்டு சிறிய நுழைவெளிகள் மற்றும் சுவற்றில் இருபத்தியோரு கோபுரங்களைக் கொண்டு அமைந்திருந்தது அந்தக் கோட்டை.
கோட்டையை சுற்றி இருந்த அகழியில் நீரும் அதில் மீன்களும் நிறைந்திருந்தன. கோட்டைக்குள்ளே ஒரு அழகிய தோட்டத்தில் பல வகையான செடிகளும், நறுமணம் தரும் பூக்களும் கோட்டைக்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தன. அங்கே இருந்த மாமரம், ஆப்பிள் மற்றும் ஆல மரங்கள் தங்கள் கிளைகளின் மூலம் கோட்டையினுள் நிழல் பரப்பிக் கொண்டிருந்தன.
ஜெபுனிஷா காற்றில் ஏதோ கனம் கூடியது போன்று உணர்ந்தாள். இதற்கு முந்தைய வருகைகளின் பொழுது மனதில் இருந்த சுமை இப்பொழுது காணாமல் சென்றதை அவளால் உணர முடிந்தது. தான் அமர்ந்திருந்த யானையின் மீதிருந்து வெளியே எட்டி அங்கிருந்த மனிதர்களைப் பார்க்க முற்பட்டாள். வெளியே அவளுக்குக் கிட்டிய காட்சிகள் ஏமாற்றம் அளிப்பவையாக இருந்தது. அவள் பார்த்த திசை எங்கும் பெண்களைக் காணவில்லை. இருந்த ஆண்களும் பயத்துடன் வேக வேகமாக சென்றுக் கொண்டிருந்தனர். அந்த ஊர்வலத்தைப் பார்த்தவர்கள் புன்னகைக்கூட பயந்து அங்கிருந்து விலகி சென்றனர். இதைப் பார்த்தவளுக்கு “ஏன் அனைத்து ஆண்களும் தாடி வளர்க்கின்றனர் திடீர் என?” என சந்தேகம் வந்தது.
அந்த நகரத்தின் மணமே மாறியது போல் இருந்தது. முன்பெல்லாம், இந்து வியாபாரிகளின் கடைகளில் இருந்து வரும் ஊதுவத்தி வாசனையுடன் முஸ்லீம் இறைச்சி கடைகளில் இருந்து வரும் இறைச்சி மணமும் கலந்து வரும். ஆனால், இப்பொழுது, இந்து வியாபரிகளுடன் ஊதுவத்தி மணமும் காணாமல் சென்றிருந்தது. இதையெல்லாம் கண்ட ஜெபுனிஷா தன் தலையை உள் இழுத்துக் கொண்டு கண் மூடி பிரார்த்திக்க துவங்கினாள். “இறைவா! தன் மக்களிடம் சகிப்புதன்மையை வளர்க்க என் தந்தைக்கு அறிவை தருவாயாக. ஹிந்து மற்றும் முஸ்லீம்கள் இடையே அன்பை அவர் வளர்த்தட்டும். எல்லாம் வல்ல இறைவனே , அவரிடம் இருந்தே அவரைக் காப்பாயாக” என இறைவனிடம் மன்றாடினாள்.
யானையில் இருந்து இறங்கிய ஜெபுனிஷா தன் சகோதரிகளுடன் அவர்களின் அன்னை நவாப் பாயை பின் தொடர்ந்து அவர்களின் புதிய அந்தப்புரத்திற்கு செல்ல அவர்களின் அடிமைப்பெண்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
அவர்கள் அந்தப்புரத்தை நெருங்கியவுடனேயே “உங்கள் புதிய இருப்பிடத்திற்கு உங்களை வரவேற்கிறேன்” என வரவேற்ற குரலுக்குரிய கொஞ்சம் பருமனான உடல் கொண்ட அந்தப் பெண்மணியை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டாள் ஜெபுனிஷா. “இந்தியப் பேரரசின் மகாராணியாக உங்கள் அனைவரையும் தில்லிக்கும் செங்கோட்டைக்கும் வரவேற்கிறேன்” எனக் கூறியது அவளின் அத்தையான ரௌஷனரா, அவுரங்கஹசீப்பின் இளைய சகோதரி. ஜெபனிஷாவிற்கு பிடித்த அத்தையான ஜஹானாராவின் விரோதியாவாள். எனவே இயற்கையாகவே ரௌஷனராவை ஜெபுனிஷாவிற்கு பிடிக்காது.
அந்தப்புரத்தில் நுழைவதற்கு நிபந்தனை விதிக்கப்பட்டதை போல் ஒவ்வொருப் பெண்ணும் ரௌஷனராவை அணைத்தப் பின்னேதான் உள்ளே நுழைந்தனர். பொதுவாய் அனைவரிடமும் சகஜமாகப் பழகும் பாதரின் முகம் ஏனோ வெளுத்துப்போய் காணப்பட்டது. ரௌஷனராவின் அருகே செல்லவும் ஏனோ தயங்கினாள் அவள். மற்றவர்களை விட பாதரை வெகு நேரம் ரௌஷனரா கட்டி அணைத்ததைபி பார்த்தாள் ஜெபுனிஷா. அதே போல் அந்த அணைப்பை விரும்பாதவளாகவும் பயந்தது போன்றும் தோன்றினாள் பாதர். ஒருவழியாய் ரௌஷனரா விட்டதும், அங்கிருந்து மற்றப் பெண்கள் இருந்த இடத்திற்கு ஓடினாள் பாதர்.
“என்ன பிரச்சனை பாதர்?” என ஜெபுனிஷா வினவியதற்கு மறுப்பாய் தலையசைத்தவள் அடுத்த நொடி அங்கே வாந்தி எடுத்தாள். இதைக் கண்டு பயந்த ஜெபுனிஷா “பாதர்!” என உரக்க கூவினாள்.
அந்தப்புரத்தில் நுழைய காத்திருந்த மற்றப் பெண்களை பார்த்து புன்னகைத்துக் கொண்டே ” பிரயாணம் அவளுக்கு ஒத்துக்கொள்ளாமல் போயிருக்கலாம். இதைக் கண்டு யாரும் கவலை அடைய வேண்டாம்” என கூறினாள் ரௌஷனரா.
ஜெபுனிஷா பேரரசியை நெருங்கும் பொழுது அவர்களின் கண்கள் ஒன்றோடு ஒன்று கலந்தன. ரௌஷனரா அந்தக் கண்களில் நட்பை எதிர்பார்க்கவில்லை. இருந்தும், தன் இரு கரங்களை நீட்டி ஜெபுனிஷாவை வரவேற்றாள் ரௌஷனரா. தயக்கத்துடன் அவளது வரவேற்பை ஏற்று அவளை தழுவினாள் ஜெபுனிஷாவும்.
“எவ்வளவு வளர்ந்து விட்டாய் நீ? உயரமாகவும் ஆரோக்கியமாகவும் தெரிகிறாய்” என ஜெபுனிஷாவை பார்த்துக் கூறினாள் ரௌஷனரா .
அவள் ஆரோக்கியம் எனக் குறிப்பிட்டது தான் உடல் பருமனாக இருப்பதைத்தான் என புரிந்து கொண்டாள் ஜெபுனிஷா. அந்த ஒரு சொல் ஆண்களால் பாராட்டாகவும், பெண்களால் சந்தேகத்துடன் பார்க்க வைத்தது. “தில்லி வெய்யிலில் என் தோல் கருத்து விடுமோ என்றுதான் நான் அச்சப்படுகிறேன்” என அவளுக்கு மறுமொழி தந்தாள் ஜெபுனிஷா.
ரௌஷனரா தன் மருமகளின் கண்களை உற்று நோக்கிப் பின் புன்னகைத்தாள். ஜெபுனிஷா மற்றும் ஜெகனாரா போன்று சிவந்த நிறத்தையோ அல்லது அழகிய வடிவத்தையோ பெற்றவள் இல்லை. பழுப்பு நிறத் தோலும், வட்ட முகமும் , கொஞ்சம் பருமனான உடலும் கொண்டவள் அவள். அவளுக்கு உடல் அழகு பாரசீக வம்சாவழியில் இருந்து சிறிதும் வரவில்லை. மிக இளம் வயதில் இருந்தே அவளது சித்தப்பா டாராவும் , அத்தை ஜெகனாராவுமே அவர்களது பெற்றோருக்கு விருப்பமான குழந்தைகளாக இருந்தனர். ரௌஷனராவும், அவளது தந்தை அவுரங்கசீப்பும் அவர்களது பெற்றோரால் பெரிதும் விரும்பப்படவில்லை. இதனாலேயே இளம் வயதிலேயே அவர்கள் இருவரும் ஒரு கூட்டணி அமைத்தனர். அவுரங்கசீப் வேண்டாவெறுப்பாய் இந்தக் கூட்டணி அமைத்தாலும், அதுவே அவரது தந்தை காலத்திற்குப் பின் அவர் சிம்மாசனத்தை கைப்பற்ற காரணமாய் அமைந்தது. டாராவை தோற்கடித்ததில், ரௌஷனரா முக்கியப் பங்காற்றினாள். அதனால்தான் , பேரரசி பட்டமும், அவுரங்கசீப்பின் நம்பிக்கைக்கு உரியவள் என்ற இடமும் அவளுக்கு கிடைத்தது.
ஜெபுனிஷாவைப் பார்த்து வரவழைக்கப்பட்ட ஒரு புன்னகையுடன் ” நீ அதைப் பற்றிக் கவலைக் கொள்ளாதே! உன்னை நான் நன்கு கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறி அவர்களின் உரையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி இட்டாள் ரௌஷனரா.
மறுநாள் வானத்தில் சூரியன் உதயம் ஆகிக்கொண்டிருந்த வேளையில் களைப்பில் உறங்கிக் கொண்டிருந்த ஜெபுனிஷாவை எழுப்பினார்கள். அன்றைய கொண்டாட்டங்களுக்கு தயாராவதற்காக மற்ற இளவரசிகளுடன் அவளும் குளிக்க வைக்கப்பட்டு, பகட்டான உடை அணிவிக்கப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட அழைத்து செல்லப்பட்டாள். அங்கு நடப்பவைகளை ஜெபுனிஷாவால் கட்டுப்படுத்த இயலவில்லை. பெண் காவலாளிகளும் மற்ற அலிகளும் அவர்களை எப்படி குனிய சொன்னார்களோ அப்படி குனிந்தனர். ஒருவர் அவர்களை அலங்கரிக்க மற்றொருவர் நகைகளை அணிவித்தனர். அவர்களுக்கு எது பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என்று யாரும் அங்கே வினவவில்லை. நடக்கவேண்டிய அனைத்தும் ஏற்கனவே பேரரசி ரௌஷனராவினால் தீர்மானிக்கப்பட்டு கட்டளையிடப்பட்டிருந்தது. முத்துக்களால் ஆன சரம் கழுத்தினில் தொங்க, மதிப்புமிக்க கற்களால் ஆன தோடு அவர்கள் காதுகளை அலங்கரித்தது. வைரமும், நீலமணிக் கற்களும் பொருத்தப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி மோதிரங்கள் அவர்கள் விரல்களில் மின்னியது. தங்கம் மற்றும் மாணிக்க இழைகளால் நெய்யப்பட்ட அவர்களின் லெஹெங்காவை அணிந்திருந்தனர். அனைவரும் தயாரானவுடன் ஆடுகள் போல், அங்கிருந்த ஜன்னல்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்துதான் அவர்கள் பேரரசர் பதவி ஏற்கும் வைபவத்தை பார்க்க வேண்டி இருந்தது.
சகோதரிகள் அனைவருமே தங்கள் இல்லாமலேயே தாங்கள் தயாராக்கப்பட்டதை நினைத்து அதிர்ந்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் விலக்கிக் கொண்டு ஜெபுனிஷா முன்னால் சென்றாள்.
பேரரசரின் வருகைக்காக அரச சபையில் காத்திருந்தவர்களின் “பேரரசர் வாழ்க” என்ற கோஷம் அந்த இடத்தை நிரப்பிக் கொண்டிருந்தது. ஜெபுனிஷாவும் தனக்குத் தானே உச்சரித்து கொண்டாள் . இளவரசியான அவள் மற்றவர்கள் போல் உரக்க கோஷம் இடுவது மரபுக்கு உகந்ததல்ல. கண்களை மூடி “இறைவா ! என் தந்தைக்கு நீண்ட ஆயுளைக் கொடு” என பிரார்த்தித்துக் கொண்டாள். அவளுடைய தந்தையின் பல்வேறு கட்டளைகளில் அவளுக்கு சம்மதம் இல்லாவிடினும் அவருடைய அனைத்துக் கட்டளைகளையும் பின்பற்றினாள் . அவரை ஆராதித்தாள். அதற்கு பிரதிபலனாக அவுரங்கசீப் மிகவும் விரும்பிய மகளாக இருந்தாள் ஜெபுனிஷா. சிறு வயதிலேயே அவள் குரான் கற்று முடித்தபொழுது அதற்காக பெரிய விருந்து வைத்தார் அவுரங்கசீப். அதே போல்,அவள் பெர்சிய மொழியை கற்றுத் தேர்ந்த பொழுது அவளுக்கு நகைகளை பரிசளித்தார். அவுரங்கசீப்பை பிடிக்காதவர்கள் அவனை இரக்கமற்ற வெறியன் என சித்தரித்த பொழுதும் , தன் தந்தை குரானில் கூறப்பட்டிருக்கும் மன்னிப்பு, கொடைத்தன்மை, நற்பண்புகளில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது என ஜெபுனிஷா எண்ணினாள்.”குரானிற்கு பல முகங்கள் உள்ளன” தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் அவள். ஒரு பெரிய அரசின் அரசனாக அவன் ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான முகத்தை காட்ட வேண்டி இருக்கும். தன்னுடன் அரியணைக்காக போரிட்டிருந்தாலும் தன் சகோதரர்களை அவன் மன்னிப்பான். மேலும், பலவீனமான மக்களை அவர்கள் முஸ்லீமாக இல்லாவிடினும் காப்பாற்றி நியாயத்தின் படி அரசாளுவான் என நம்பினாள் ஜெபுனிஷா.
ஊர்வலத்தின் முன்னணி வரிசை நெருங்கிவிட்டதை பார்த்த அவள் தன் தந்தை விரைவில் வந்து விடுவார் என உணர்ந்துக் கொண்டாள் .அடிமைகள் ரோஜாப் பூவின் இதழ்களை வாரி இறைத்துக் கொண்டு வர, சங்க நாதமும் முரசின் ஒலிகளும் காற்றில் அவற்றின் ஒலியை நிரப்பின. பல பிரபுக்கள் அந்த அவையில் காத்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் முன்னே அரியணையின் அருகே தனியாக ஒதுக்கப்பட்ட சிறப்பு இடத்தில் முல்லாக்கள் வீற்றிருந்தனர். அந்த இடத்தை அடைய அவர்கள் வெகுகாலம் விரும்பினர். அரியணையை தாங்கி இருந்த பளிங்கு படிக்களின் அருகே நீண்ட அங்கிகளை அணிந்து காத்திருந்த அவர்களை பார்த்த ஜெபுனிஷா “என் தந்தை உங்களில் ஒருவரல்ல”. உங்களை அவர் இங்கே வரவழைத்தது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக” என்றுத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
முரசுகள் சப்தம் அதிகரிக்க, தங்கம் மற்றும் மதிப்புமிக்க கற்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக் குதிரை வருவதை பார்த்தாள் ஜெபுனிஷா. அதன் சேணம், கடிவாளம் போன்றவை பளபளக்கும் வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த குதிரையின் மேலே , வெளுத்த நிறத்தில் ,வலிமையான தேகத்துடனும் நன்கு திருத்தப்பட்ட தாடி மீசையுடன் ஒரு மிருகத்தைப் போல் வீற்றிருந்தான் அவுரங்கசீப். அவள் நின்றிருந்த இடத்தில் இருந்து, அவர் புன்னகைக்கிறாரா இல்லை கோபத்துடன் இருக்கிறாரா என ஜெபுனிஷாவால் சொல்ல இயலவில்லை. இந்த நாளுக்காகத்தான் அவர் இத்தனை நாள் காத்திருந்தார் என அவளுக்குத் தெரியும். அவளது சொந்த எண்ணங்களில் மூழ்கி இருந்த அவள் அவருக்காக மகிழ்ந்தாள். அங்கிருந்த மற்றப் பெண்களுடன் இணைந்து அன்றைய கொண்டாட்டங்களை அனுபவித்தாள்.
அவுரங்கசீப் குதிரையில் இருந்து இறங்கி அரியணை நோக்கி நடந்த பொழுது, இந்த நாளுக்காகவே உருவானவன் போல் இருந்ததை கவனித்து அவரை பெரு மதிப்புடன் பார்த்தாள் ஜெபுனிஷா. அவளை விட வெளுத்த நிறத்துடனும், அகன்ற வலிமையான தோள்களுடனும் இருந்த அவுரங்கசீப், வைரம், மரகதம், மாணிக்கம் போன்ற பல கற்களை அணிந்திருந்தார். இருப்பதிலேயே பெரிய கல் அவனது தலைப்பாகையில் அவனுக்கு மூன்றாவது கல் போல் பொருந்தி இருந்தது. தங்க கவசம் பூட்டப்பட்டு பல்வேறு விலைமதிப்பு மிக்க கற்களால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் கனமாக இருந்த வாளை ஏதோ மயிலிறகை அணிவது போல் தன் இடையில் அவன் அணிந்திருந்ததைக் கண்டு வியந்தாள் அவள்.”இந்த மனிதனிடம் ஏதோ ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. இத்தனை வலிமை கொண்டிருந்தாலும், தார்மீக நம்பிக்கை கொண்டவனாய் இருக்கிறான்” என உற்சாகத்தில் எண்ணிக்கொண்டாள்.”அவர்கள் யாரைக் கண்டும் பயப்படுவதில்லை. அவர்களே அவர்களுக்குண்டான விதிகளை வகுத்துக் கொள்கின்றனர். அவர்களின் வலிமை சாதாரண மக்களை கட்டுப்படுத்தும் சட்டதிட்டங்களுக்கு மேலே கொண்டு சொல்கின்றன’. இருந்தும் தன் தந்தை அவர்களிடம் இருந்து வேறுபட்டவர் என எண்ணிக் கொண்டாள் அவள்.”பத்து வீரர்களின் பலம் கொண்டிருந்தாலும், குரானுக்கு பயப்பட்டார் அவர்,எங்கெல்லாம் அதன் நீதிப்படி நடக்க வேண்டுமோ அதைப் பின்பற்றினார்”.
அவுரங்கசீப் அந்த அரியணையில் அமர்ந்ததும் அது சிறப்பு மிக்க ஒன்றாக மாறியது அவள் பார்வையில். அவன் அமர்ந்திருந்த அரியணை ஆறடி நீளமும், ஒன்றையடி அகலமும்,ஐந்தடி உயரமும் கொண்டதாய் இருந்தது. அதன் ஆறு கால்களும் தங்கத்தால் உருவாக்கப்பட்டு, பல்வேறுவித கற்களால் அலங்கரிப்பட்டிருந்தது. சிம்மாசனத்தின் வெளிப்புற விதானமானது ரத்தினங்களினால் ஆன வேலைப்பாட்டைக் கொண்டிருந்தது. அதன் உட்புற விதானமோ மானிக்கமும் மற்ற கற்களும் பொறிக்கப்பட்ட வேலைப்பாட்டை கொண்டிருந்தது. விதானத்தை பன்னிரண்டு மரகத நிறத்திலான தூண்கள் தாங்கி இருந்தன. சிம்மாசனத்தை அலங்கரித்த பல்வேறு கற்களில் ஒரு லக்ஷம் ருபையாக்கள் பெறுமானமுள்ள மாணிக்கத்தில் , அவர்களின் மூதாதையரான தைமூரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. நாற்கர வடிவம் கொண்ட குவிமாடத்தின் மேலே ஒரு அழகிய மயில் வடிவம் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் விரிந்த தொகையில் நீலமணிகளும் மேலும் பல நிறத்தினாலான கற்களும் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் உடல் பகுதி தங்கத்தினால் செய்யப்பட்டு பற்பல கற்கள் பதிக்கப்பட்டதாகவும் அதன் மார்பகப் பகுதியில் பெரிய மாணிக்கம் பதிக்கப்பட்டும் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த மாணிக்கத்தில் இருந்து 60 கேரட் மதிப்புக் கொண்ட முத்து ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அந்த சிம்மாசனத்தில் அமர உதவும் படிகள் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அங்கிருந்த நீதிபதி ஒருவர் , அவுரங்கசீப்பின் பெயரிலான அறிக்கையை படிக்க துவங்க, ஜெபுனிஷாவின் பார்வை அவனுக்கு மயில் தோகையினால் ஆன விசிறியைக் கொண்டு விசிறி விட்டுக்கொண்டிருந்த உஸ்பெக் காவலாளிகள் மேல் விழுந்தது. அதன்பின், வந்திருந்த பிரபுக்களும் செல்வந்தர்களும் ஒவ்வொருவர் பின் ஒவ்வொருவராக தங்கள் பரிசாக முத்துகள், மாணிக்கங்கள், பல வித கற்கள், சிலர் அடிமைகள், யானைகள், அரிய வகை பறவைகள் மற்றும் குதிரைகள் என வரிசையாக கொடுக்கத் துவங்கினர். இது இன்னும் பல நாள் தொடர்ந்து நடக்கக்கூடிய ஒன்று என்று ஜெபுனிஷாவும் அவளின் சகோதரிகளும் நன்கு அறிவர். இதுமட்டுமில்லாது நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெறும் என்றும் அவர்களுக்குத் தெரியும்.
பரிசுகள் கொடுக்கப்பட்டு முடிந்ததற்கு அறிகுறியாக சங்க நாதம் எழுந்தது. தன் இருக்கையில் இருந்து எழுந்த பிரதம அமைச்சர் “பேரரசே ! நீங்கள் முடிசூடும் இந்நாளில், உங்கள் மகன் ,மகள் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனாலும், இந்த நாளில்,இளவரசர் சுல்தான், இங்கு சிறைக்கைதியாக இருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது” எனக் கூறி முடித்தார்.
தன் அரியணையில் எந்த வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாது அமர்ந்திருந்த தன் தந்தையை நோக்கினாள் ஜெபுனிஷா. நாட்டின் மேற்கு எல்லை வாயிலாக, ஷூஜா மற்றும் அவரது மகளுடன் தப்பிக்க முயன்ற சுல்தான் பிடிப்பட்டது அவளது சிந்தையில் அலைமோதியது. சுல்தான் சிக்கியபொழுதும், ஷூஜாவும் அவரது மகளும் தப்பியோடிவிட்டனர்.
“இந்த நாளானது மகிழ்ச்சிக்கும் கொண்டாத்திற்கும் உரியது. எனவே இன்று சுல்தானை சபையில் கொண்டுவர வேண்டாம் என நான் விரும்புகிறேன். விரும்பத்தகாத விஷயத்தை இன்று பார்த்து நம் மகிழ்ச்சியை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணம்” என தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார் பிரதம அமைச்சர்.
ஜெபுனிஷாவின் வருத்தத்தை அதிகரிப்பது போல் , அவுரங்கசீப்பின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. தன் ஆலோசகரின் சொற்களைக் கேட்டும், முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் “இளவரசன் சுல்தானை என் முன் நிறுத்துங்கள். எனக்கு துரோகியாக மாறிய என் மகனை பார்க்க விரும்புகிறேன் நான்” என ஆணையிட்டான் ஆலம்கீர்.
அங்கிருந்தோரின் பெருமூச்சு சலசலப்பை உண்டாக்கியது. அவையெங்கும் முணுமுணுப்புகள் எழுந்தன.பேரரசரின் ஆணையை நிறைவேற்றியே ஆக வேண்டுமே. நொடிகள் நிமிடங்களாக அங்கிருந்தோரின் காத்திருப்பு அதிகரித்தது. அவர்களே குற்றம் இழைத்தவர்கள் போல் அவர்களுக்கு வியர்த்து ஒழுகியது. பல நிமிடக் காத்திருப்பிற்குப் பின் சங்கிலியால் பிணைக்கப்பட்ட அழகிய இளம் வாலிபனை காவலர்கள் அவைக்கு கொண்டு வந்தனர். சிறைக்கைதியாக இருந்தாலும், இளவரசன் என்பதால், அரசவை நாவிதர்கள், அவன் சிகையை திருத்தி, தாடியை அழகாய் கத்தரித்திருந்தனர். சுல்தான் அரசவையில் நுழைந்தவுடன் அந்தப்புரத்து பெண்கள் அழுகத் துவங்கினர். துணிச்சலான, அழகிய உயரமான சுல்தான் அவர்களால் மிகவும் விரும்பப்பட்ட இளவரசனாவான். ஆனாலும் ஜெபுனிஷா அவனை வெறுத்தாள். அவளைப் பொறுத்தவரை அவன் எப்பொழுது அரசனுக்கு எதிராக மாறினானோ அப்பொழுதே அவன் விதியை அவனே எழுதி விட்டான்.
இளவரசன் சுல்தான், அவன் தந்தை முன் குனிந்து வணங்கி விட்டு நிமிர்ந்து நின்றான். தனக்கு விருப்பமான மகனான சுல்தானை ஆராய்ந்த அவுரங்கசீப்பின் கண்கள் எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அமைதியாய் உறைந்து நின்றது. சில நிமிட ஆராய்ச்சிக்கு பின் தன் மகனை நோக்கி “இந்த மகிழ்வான நாளில் உன்னை இந்த நிலையில் பார்க்க வேண்டியிருப்பதை எண்ணி என் இதயம் வலிக்கிறது” என்று உணர்ச்சியற்ற குரலில் கூறினான்.
“நீங்கள் முடிசூட்டிக்கொள்ளும் இந்த நாளில் உங்களுக்கு என்னால் எந்தவித பரிசையும் அளிக்க இயலவில்லை. அதற்காக என்னை மன்னியுங்கள் அரசே!” என்று முரண் நகையுடன் பதில் கூறினான் சுல்தான்.
” நீதான் எனக்கு ஏற்கனவே பரிசளித்துவிட்டாயே மகனே! புரியவில்லையா ? உன்னைப் பிடிப்பதற்காக நான் அனுப்பிய இரண்டு தளபதிகளை நீ என்னுடைய தம்பி ஷூஜா கொன்று அவர்களின் பிணங்களை அனுப்பினாயே! அதை விடவா சிறந்த பரிசு அளிக்கப்போகிறாய் நீ?”
இதைக்கேட்ட சுல்தானின் தலை கீழே கவிழ, தரையை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“நீ எதை விரும்பினாலும் அதை அடைந்திருக்கலாம் சுல்தான்! இந்த பரந்து விரிந்த பேரரசும் உன்னுடையதாகி இருக்கும்! நீதானே எனது வாரிசாக இருந்திருப்பாய். எனக்கு விருப்பமான என்னுடைய மூத்த மகன் நீ”. இதை சொல்லும் பொழுது அவுரங்கசீப்பின் மனதில் வேதனையை அவன் வார்த்தைகளில் வெளிப்பட்டது. அவனால் தன் மனதின் வேதனையை மறக்க இயலவில்லை.
“மன்னியுங்கள் அரசே! தனக்கு அடுத்து பட்டத்திற்குரிய வாரிசை நியமிப்பது என்பது நமது முகலாயர்கள் பரம்பரையில் என்றும் இல்லாத ஒன்றாகும். இதே அரச அவையில் உங்களுடைய தந்தை பேரரசர் ஷாஜகான் தன்னுடைய வாரிசாக உங்கள் சகோதரர் இளவரசர் டாராவை நியமித்தார். அதற்கு என்ன பயன் இருந்தது? அவரை பட்டத்துக்குரியவரை நியமித்தும், அதே அரியணைக்காக சண்டை நடந்தது. ஷாஜகான் விரும்பாத மகனான நீங்கள் இன்று அந்த மயிலாசனத்தில் அமர்ந்து இருக்கிறீர்கள்!” என்று சிறிதும் பயமின்றி துணிச்சலாக பதில் அளித்தான் சுல்தான்.
“என் தந்தை மன நோயால் பாதிக்கப்பட்டார்! பெண்கள், பணம் மற்றும் மது அவரது மனதை கெடுத்துவிட்டது. அதனால்தான் துரோகிகளை விரும்பிய டாராவை அவர் நியமித்தார். ஆனால் என் மனம் திடமாக ஆரோக்கியமாக உள்ளது”
“நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள் அரசே ! ஆனால் ஒரு நாள் உங்கள் பிள்ளைகளும் உங்களை பற்றி இவ்விதமே கூற நேரலாம்”
இதைக் கேட்டதும் கோபம் அவுரங்கசீப்பின் தலைக்கு ஏற “சுல்தான்!!!” என கத்தியது அவையில் இருந்தோரை நடுங்க செய்தது. சில நிமிடங்கள் அங்கே மயான அமைதி நிலவியது. அங்கிருந்தோர் சுல்தானின் அந்த அசட்டு துணிச்சலை எண்ணி வியந்தனர்.அது முட்டாள்தனமான செயல் என்றே அங்கிருந்தோர் அனைவரும் நினைத்தனர்.
அவுரங்கசீப்பின் குணத்தை பற்றி ஜெபுனிஷாவிற்கு நன்கு தெரியும். கோவம் கொண்டால், அவனுடைய வழியில் குறுக்கே வருபவர்களின் நிலை மிக மோசமாக இருக்கும் என்று அறிவாள் அவள்.
அந்தப்புர பெண்கள் நின்றிருந்த திசையில் இருந்த திரையை நோக்கி கை காட்டி “இளவரசி ஜெபுனிஷா” என அழைத்தான் அவுரங்கசீப்.
அவுரங்கசீப் அழைத்து ஜெபுனிஷாவிற்கு வியப்பைத் தந்தாலும், பதவியேற்றதும் தன்னை முதலில் அழைத்தது அவளுக்கு ஆனந்தத்தையும் அதிகாரம் கிடைத்தது போன்ற உணர்வையும் அளித்தது.
“நீ எனக்கு மகள் மட்டுமில்ல சுல்தானின் கூடப் பிறந்த சகோதரியும் ஆவாய். எனவே நீ யாருக்கும் பாரபட்சம் இன்றி நடந்து கொள்வாய். எனக்கு மிக அத்தியாவசியமான நேரத்தில் எனக்கு துரோகியாய் மாறிய சுல்தானுக்கு என்ன தண்டனை அளிக்கலாம். நீயே ஒரு தீர்ப்பை சொல் இதற்கு” என அவுரங்கசீப் தண்டனையை கூறும் அதிகாரத்தை அவளுக்குத் தந்தான்.
தன்னிடம் இந்த பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்தவள் போல் ஒரு கணமேனும் தாமதிக்காமல் “பேரரசரே !துரோகத்திற்கு ஒரே ஒரு பதில்தான் கூற இயலும். அது அவனுடைய மரணமே!” எனக் கூறினாள்.
அடுத்த கணம் அந்தப்புர பெண்களிடம் இருந்து “என்ன செய்து விட்டாய் ஜெபோ! அவன் உன்னுடைய சகோதரன்! மரண தண்டனை மிக கொடியது!” என பல்வேறு கூக்குரல்கள் எழுந்தன.
இதை ஒருவாறு எதிர்பார்த்திருந்த அவுரங்கசீப் தன் மகளின் முடிவில் சந்தோசம் கொண்டான். “இளவரசன் சுல்தான்! உனக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தருகிறேன். என் முன் மண்டியிட்டு தரையை முத்தமிட்டு நீ செய்ததற்கு மன்னிப்புக் கேள். நான் உன்னை மன்னிக்கிறேன். நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன்.” என சுல்தானுக்கு மன்னிப்பு வாய்ப்பு கொடுத்தான்.
“அரசே! உங்கள் ஆட்சி சட்ட விரோதமானது என நம்புகிறேன் நான். நீங்கள் கைது செய்து அடைத்து வைத்திருக்கும் பேரரசர் ஷாஜகான், பேரரசி அத்தை ஜஹனாரா அதன் பின் உங்கள் சகோதரர் டாரா இவர்களே இந்த வரிசையில் ஆள வேண்டும். நான் வாழும் வரை இதைத்தான் நம்புவேன். உங்களை இந்த மயில் சிம்மாசனத்தில் இருந்து அகற்றி உங்களுடைய அநீதியான செயல்களுக்கு தண்டனை வாங்கித் தர என்னால் ஆனதை நான் கட்டாயம் செய்வேன்” என உணர்ச்சிகள் அற்ற குரலில் கூறினான் சுல்தான்.
இதைக் கேட்டதும் கோபம் பொங்கியது ஜெபுனிஷாவிற்கு. என்ன மகன் இவன்? தந்தையின் பட்டமேற்பு விழா அன்று பேரரசரை இப்படியா நிந்திப்பது? அவளால் முடிந்திருந்தால் அந்த கணம் அந்த அவையிலேயே அவன் தலையை துண்டிக்க உத்தரவிட்டிருப்பாள்.
கோபத்தால் நடுங்கிய குரலில் உத்தரவிட்டான் அவுரங்கசீப்.”துரோகியே! இனி நீ என் மகன் அல்ல.அமைச்சரே! இவனை சலீம்கர்கிற்கு அனுப்பவும். அங்கிருந்து செங்கோட்டையை தினமும் காணட்டும். வெளிச்சம் இல்லாத இருண்ட தனிமையில் இருந்து கொண்டு என் பேரரசு நாளுக்கு நாள் வளர்வதை காணட்டும்”.
சுல்தானை காவலர்கள் இழுத்து செல்ல அவுரங்கசீப்பின் உறுதியான வார்த்தைகள் ஜெபுனிஷாவின் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன. அவனை இழுத்துச் சென்றபொழுதும் “நீதான் துரோகி ! துரோகி வீழட்டும்!” என்று கோஷித்தாவாறே சென்றான்.
அங்கு நடந்ததைக் கண்ட அனைவரும் ,ஜெபுனிஷாவைத் தவிர அதை எண்ணி நடுங்கினர். ஜெபுனிஷாவிற்கு கோபமே அதிகமாய் இருந்தது. அந்த நாள் வரை பேரரசரின் நேரெதிரே நின்று அவரைத் தவறாக பேசியவர் எவரும் இல்லை. சுல்தானிற்கு இது தேவைதான் என எண்ணி புன்னகைத்தாள் அவள். ஆனால் மற்ற அந்தப்புர பெண்களோ சுல்தானின் விதியை எண்ணி அவன் குரலைக் கேட்டு கலங்கி நின்றனர். கனத்த மௌனம் நிலவியது அங்கே.
3. நிலவை முத்தமிடு
அது மெக்காவின் புனிதமான ஆலயமாக இருந்தாலும் சரி
அல்லது யாத்ரீகர்களின் கால் பட்ட ஆலயமாக இருந்தாலும் சரி
நீ என்னுடையவன்
எங்கு வணங்கப்பட்டாலும் நீ என்னுடைய கடவுள்
20 ஜூன் 1659
கைதி 721 , காய்ந்த உலர்ந்த விரல்களால் தான் தாடியை தடவிக் கொண்டிருந்தான். இப்பொழுது நன்கு அடர்ந்து வளர்ந்திருந்த அவன் தாடி கன்னங்களில் துவங்கி கீழே கழுத்து வரைக்கும் பரவி இருந்தது. ஒரு காலத்தில் எண்ணெய் தடவி பளபளப்பாக வாரப்பட்டிருந்த அவனது தலை முடி இப்பொழுது பேன்கள் நிறைந்து சிக்குகளுடன் காணப்பட்டது. அதை அவனது நீண்ட நகங்கள் கொண்ட விரல்களால் சொறிந்து சொறிந்து அவன் தலையிலும் பல காயங்கள் உண்டாகின. அந்த அறையில் அடைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை மூன்று மாதமாக அவன் குளிக்கக் கூட இல்லை. அறையின் ஒரு ஓரத்தில் இருந்த வைக்கப்பட்டிருந்த தண்ணீரை அவன் கழிப்பறை உபயோகங்களுக்கு மட்டும் உபயோகப்படுத்திக் கொண்டான். தனக்கு சுவாசிக்க காற்றும் ஒளியும் வரும் என்று அவன் எண்ணிய சாளரம் கூட அவனை மயக்கம் அடைவதில் இருந்து காப்பாற்றவே வைக்கப்பட்டிருந்தது என்பதை உணர்வதற்கு வெகுநாட்கள் ஆகவில்லை. அந்த சாளரத்தின் வழியே ஒவ்வொரு முறை காற்று வீசும் பொழுதும் அந்த அறையில் இருந்தது துர்நாற்றத்தை அதிகரிக்கவே செய்தது.
தினமும் அவனது அறைக்கு வந்த காவலர்கள் அவனை அவர்கள் கொண்டுவந்த பானத்தை”அரசர் குடுத்த பானம்” என்று சொல்லி குடிக்க சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருந்தனர்.
“என்னவென்று தெரியாத ஒரு திரவத்தை நான் குடிக்க இயலாது”
“நீ பேரரசரின் கைதி. அவர் குடிக்க சொன்னதை குடி இல்லையேல் பட்டினி கிட” என சொல்லி சென்றனர்.
பிடிவாதமாக இருந்த கைதி 721ஓ பட்டினி கிடப்பதே மேல் என இருந்தான். நாட்கள் செல்ல செல்ல அவன் உடல் மெலியத் துவங்கியது. ஒரு காலத்தில் வலிமையான தசைகளுடன் இருந்த அவனது கைகள் மெலிந்து பலவீனம் அடைந்து வாடி வதங்கிய பழம் போல் மாறி விட்டிருந்தது. அவனது தொடைகளை அவனது கைகளை சுற்றி பிடிக்கலாம் என்ற அளவிற்கு சுருங்கி போய் இருந்தது. அவனது வயிறோ பசியால் ஓங்காரமிட்டுக் கொண்டிருந்தது.
நாட்கள் செல்ல செல்ல அவனது பிடிவாதத்தைக் கண்டு காவலர்களுக்கு அவன் மேல் வெறுப்பு அதிகமாகியது. அவன் அதைக் குடிக்காவிடில் அவர்களது தலைக்கு ஆபத்து என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.அவனை அந்த பானத்தைக் குடிக்க வைக்க வேறு ஒரு உபாயம் தீட்டினர். சிறப்பான முகலாய உணவுகளான ஆட்டிறைச்சி, எலுமிச்சை சாறில் வறுக்கப்பட்ட மீன்,சிக்கன் பிரியாணி, கம்பியில் வாட்டப்பட்ட ஆட்டிறைச்சி அவன் அறைக்கு முன்பு பரப்பி அவர்கள் உண்ணத் துவங்கினர். ஆனால் அந்தக் கைதியோ இதை எதையும் கண்டுக்கொள்ளாமல் தலை குனிந்து இறைவனை சிந்தித்துக் கொண்டிருந்தான்.
“என் கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை ! அல்லாஹ் என்பது அவன் பெயர்”
“என் கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை ! அல்லாஹ் என்பது அவன் பெயர்”
“என் கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை ! அல்லாஹ் என்பது அவன் பெயர்”
அந்தக் காவலர்கள் தாங்கள் சாப்பிட்ட உணவின் மிச்சத்தில் எலும்புகளையும் சில சதைத் துண்டுகளையும் அவன் சிறை அறையில் இருந்த மூலையில் எறிந்தனர். அந்த வாசத்திற்கு அந்த அறையில் இருந்த எலிகள் ஓடி வந்தன அதை உண்ண. அந்த கைதி சில நொடிகள் உணவிற்காக எலிகளுடன் போட்டி போடலாமா என யோசித்தான். அந்த உணவு சில நாட்களுக்கான சக்தியை அவனுக்குத் தந்திருக்க கூடும். ஆனால், தான் உணவிற்காக எலிகளுடன் போட்டியிடுவது அந்த காவலர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். அவர்களுக்கு அந்த சந்தோஷத்தை தர விரும்பவில்லை அவன். எனவே அதைக் கண்டுகொள்ளாமல் தன் பிரார்த்தனையை தொடர்ந்தான் அவன்.”இறைவா! நான் செய்த தவறுகளை மன்னிப்பாயாக. நீ எனக்கு அளித்துள்ள இந்த சோதனையை நான் வெற்றிகரமாக கடக்க எனக்கு உதவி செய்வாயாக! நான் உன்னிடத்தில் மன்றாடுகிறேன் இறைவனே!”.
அவனுடைய உறுதியைக் குலைக்க இயலாத கோபத்தில் மீண்டும் அவனது சிறை அறைக்குள் நுழைந்தனர் காவலர்கள். மௌனமாய் இருந்த கைதியைப் பார்த்து “இந்த பானத்தை நீ குடித்தாக வேண்டும்”என்று கூவினான் அவர்களின் தலைவன்.இரண்டு காவலர்கள் அந்தக் கைதியை அழுத்திப் பிடித்துக் கொள்ள அவனது வாயை திறக்க முயன்று தோல்வியுற்றான் அந்த காவலர் தலைவன். அவனது வாயை தன் கையால் திறந்து அவன் தொண்டையில் அழுத்த, மூச்சு விட திணறி வேறுவழியின்றி அவன் வாயை திறந்தான்.
உடனேயே ஒரு காவலன், ஒரு மரத் துண்டை எடுத்து அவன் வாயில் விட்டு வாயை மூட இயலாமல் செய்ய, மற்றொரு காவலன், சிறு புட்டியில் இருந்த அந்த பானத்தை அவன் வாயில் ஊத்தினான். தனக்கு விருப்பம் இல்லையென்றாலும் வேறு வழியின்றி என்னவென்றே தெரியாத அந்த பானத்தை தொண்டை எரிய எரிய குடித்தான் அவன். அந்த புட்டியில் இருந்த பானம் முழுவதையும் அவன் வாயில் ஊற்ற அதில் பாதி வெளியே சிந்தியது. பானம் முழுவதும் ஊற்றி முடிந்தவுடன் அவனை கீழே வீசிவிட்டு அறையை பூட்டி சென்றனர்.
அவர்கள் சென்றவுடன் அந்த கைதி பரவச நிலையில் அரை மயக்கத்தில் ஆழ்ந்தான். முழுவதும் நினைவிழக்கும் முன் தனக்கு போதைப் பொருளை அவர்கள் அந்த பானத்தில் கலந்து தந்துள்ளதை உணர்ந்துக் கொண்டான். அந்த போதைப் பொருள் அவன் மூளையை முழுக்க ஆக்கிரமிக்கும் முன் மேற்கு நோக்கி மண்டியிட்டு பிரார்த்தனை செய்யத் துவங்கினான். “அல்லாவே!உன் கட்டளைக்கு எதிராக இந்த தீய பானத்தை பருகியதற்காகஎன்னை மன்னிப்பாயாக.என் பாவங்களை கரைத்து இந்த பாவச் சிறையில் இருந்து என்னைக் காப்பாற்றி மன்னிப்பு அளிப்பாயாக!”
அதற்குப் பின் அவன் முழு சுயநினைவை பெறவே இல்லை.
“கண்டிப்பாய் அரச தரிசனம் கிடையாது. நான் இறைவன் அல்ல. அவனின் வேலைக்காரன் மட்டுமே” என்று அவுரங்கசீப் கூறியது அவனுடைய ஆலோசகர்களை வியப்பாக இருந்தது. எந்த ஒரு அரசரும் தன் மக்கள் தன்னை தினமும் பார்ப்பதை மறுத்தது கிடையாது அதுவரை. ஆடம்பரமான நிகழ்வாக இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக நடைப்பெற்று வரும் அந்த நிகழ்வு, அரசரின் உடல்நிலையை மக்களுக்கு தெரியப்படுத்துவதுடன் பேரரசு வேறு யாருக்கும் கட்டுப்பட்டதல்ல என்பதை உறுதி செய்யும் ஒரு நிகழ்வாகவும் பார்க்கப்பட்டது.
“என்னை மன்னியுங்கள் அரசே! ஆனால் இதற்கான காரணம் என்ன என்று நான் அறிந்துக் கொள்ளலாமா?” என்று பணிவுடனும் அதே சமயம் உறுதியான குரலுடனும் கேட்டார் அவனின் பிரதான அமைச்சர் ஜபார் கான்.
“ஒரு உண்மையான முஸ்லீம் எப்படி இருப்பான் என்று மக்களுக்கு ஒரு உதாரணமாய் இருக்க விரும்புகிறேன் நான்.இனி எனக்கென்று ஆடம்பர உடைகளோ நவரத்தினங்களோ வாங்கப்படக் கூடாது . அதே போல் இனி அரசாங்க பணம் தேவையும் உபயோகமும் இல்லாத தாஜ்மகால் போன்ற கட்டிடங்கள் கட்டவோ அல்லது மயில் சிம்மாசனம் போன்றவற்றை செய்யவோ செலவழிக்கப்படக் கூடாது. பணிவும் எளிமையும் நம்மை அல்லாஹ்வின் அருகில் இட்டு செல்லும்.”
“கடவுளிடம் உங்களுக்கு இருக்கும் பக்தி பாராட்டத்தக்க ஒன்றுதான் அரசே! இருந்தாலும் உங்கள் மக்களுக்கு நீங்கள் தரிசனம் தருவதை நிறுத்தவேண்டுமா? அதுவும் தில்லி நீதிபதி உங்கள் பெயரிலான பேரறிக்கையை படிக்க மறுத்த இந்த சமயத்தில் இது சரிப்பட்டு வருமா? முன்னாள் பேரரசர் உயிருடன் இருக்கும் சமயத்தில் இது சரியா?” என்று ஒரு அமைச்சருக்கு உரிய விவேகத்துடன் வினவினார் ஜபார் கான்.
“நீதிபதியை பற்றி பெரிதாய் கவலை கொள்ள வேண்டாம். அவரை மனதில் இருக்கும் குழப்பத்தையே அவரது செயல் காட்டுகிறது. என் தந்தை உயிருடன் இருக்கும் பொழுது எனது பெயரில் சாசனம் படிப்பது புனிதமான செயலாகாது என அவர் எண்ணியிருக்கலாம். ஆனால் எனது தந்தை மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதோ அரியணையில் தொடர்ந்திருந்தால் தேவையற்ற கட்டிடங்களிலும் ஆடம்பரங்களிலும் பணத்தை செலவழித்து ராஜ்யத்தையே அளித்திருப்பார்.விரைவில் நீதிபதி தனது மனதை மாற்றிக் கொள்வார். எனது தந்தையைப் பற்றியும் அச்சம் கொள்ள தேவையில்லை. தன் வாழ்நாளின் இறுதிப் பகுதியில் இருக்கிறார் அவர். என் வார்த்தையை நம்பு , நாம் யாருக்காகவும் எதற்காகவும் பயப்படத் தேவை இல்லை. நான் ஓய்வெடுக்க அந்தப்புரம் செல்கிறேன்” என்று ஒரு பெருமூச்சுடன் சொன்னான் அவுரங்கசீப்.
“பேரரசர் ஆனவுடன் இப்பொழுதுதான் முதன்முறையாக அந்தப்புரம் செல்கிறீர்கள். உங்கள் தனிப்பட்ட விருப்பம் பற்றி எதாவது அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமா?” என்று ஜாபர் கான் வினவினான்.
“அவசியமில்லை. நான் என்ன எதிர்பார்ப்பேன் என்று பெண்களுக்குத் தெரியும்.”
அந்தப்புரத்தின் கதவுகள் புதிய பேரரசருக்காக திறந்தன. அந்தப்புரத்தை அலங்கரித்த ஆடம்பர துணிகளும் அங்கிருந்த ஓவியங்களும் அகற்றப்பட்டு அதற்கு பதில் கருப்பு மையால் எழுதப்பட்ட குரானின் வாசகங்கள் இருந்த திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. ஒரு நகை கூட யார் கண்களிலும் படவில்லை. முன்பு அங்கிருந்த ஆடம்பரங்கள் அனைத்தும் ஏதோ ஒரு மாயக்கை அழித்ததைப் போல் மறைந்து போயிருந்தன. பெண்கள் அனைவரும் உடல் முழுவதையும் மறைத்த உடை அணிந்திருந்தனர். அவர்கள் முகமும் முழுவதும் மறைக்கப்பட்டிருக்க பார்ப்பதற்கு மட்டுமே விடப்பட்டிருந்த இடைவெளியில் பயத்தால் நிரம்பிய அவர்களின் விழிகள் தெரிந்தன.
யாரும் பேரரசரிடம் பேசவோ அருகே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. அவர் மட்டுமே பேச்சை துவக்க இயலும். அந்தப்புரத்தை சுற்றி தன் விழிகளை படரவிட்ட அவுரங்கசீப் ஜெபுனிஷாவாக இருக்கும் என அவன் நம்பிய பெண்ணைப் பார்த்து “உங்கள் பிரயாணம் நன்றாக இருந்திருக்கும் என நம்புகிறேன்” என்று பாதி கேள்வியாகவும் பாதி பதிலாகவும் பேசினான்.
எப்பொழுதும் விலாவரியாக பேசும் ஜெபுனிஷா சுருக்கமாய் “ஆமாம் அப்பா” என்று முடித்துக் கொண்டாள்.
“அகில் கான் உங்களை நன்றாக நடத்தினானா?” என்றுக் கேட்டவாறே அந்தப்புரம் முழுவதையும் நோக்கினான்.
மற்றவர்களின் சார்பாய் ஒரு பெண் மட்டும் “ஆமாம் அரசே!” என்று பதிலளித்தாள். அங்கே விவரிக்க இயலாத பயம் ஒன்று அனைவரையும் சூழ்ந்திருந்தது. அரசருக்கு அவர் விருப்பத்திற்கு எதிராக பதிலளிக்க யாரும் விரும்பவில்லை.
அவர்களின் இந்த பதிலால் திருப்தி அடைந்தான் அவுரங்கசீப். அவர்களிடம் இருந்து வெரி எந்த பதிலையும் அவன் விரும்பவில்லை. அவர்களை நோக்கி “முந்தைய பேரரசர் மற்றும் பேரரசியை சிறைப்படுத்துதல் அவசியமான ஒன்றாகும். நீங்கள் அனைவரும் அதை உணர்ந்து கொள்ளவேண்டும்” என்று தன் செயலுக்கு ஒரு விளக்கம் அளித்தான் அவர்கள் யாரும் கேட்க துணியவில்லை என்ற பொழுதும்.
“எங்களுக்கு அது தெரியும் அப்பா. நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அது எங்களுக்கு சம்மதமே” என்று ஜெபுனிஷா பதில் கூறினாலும் அவள் மனதில் ஏதோ ஒரு இனம் புரியா கவலை சூழ்ந்திருந்தது.
இதைக் கேட்டவுடன் எப்பொழுதும் உணர்ச்சிகள் அற்ற முகத்தை கொண்டிருக்கும் அவுரங்கசீப் அரிதாய் புன்னகைத்து “ஜெபுனிஷா சற்று நேரத்திற்குப் பின் நான் என்னுடைய அறையில் தனிமையில் சந்திக்க விரும்புகிறேன்” என்று கூறினான்.
“உங்கள் விருப்பப்படியே ஆகட்டும் அப்பா”
மீண்டும் அவனின் முகம் புன்னகையை விடுத்து கல்லாய் உறைய “ஜெபுனிஷா! நீ என்னை அரசன் என்று அழைக்க வேண்டும் ” என உத்தரவிட்டான்.
இதைக் கேட்ட ஜெபுனிஷாவின் கண்கள் வியப்பினால் உயர்ந்தாலும் அதைத் தன் குரலில் வெளிப்படுத்தாமல் “அப்படியே ஆகட்டும் அரசே” என்று எந்தவித எதிர்ப்பும் இன்றி பதில் கூறினாள்.
அதன்பின் அங்கே கனத்த மௌனம் நிலவியது. இந்த புதிய விதிகளைப் பார்த்து அங்கிருந்த பெண்களுக்கு பயம் வந்தது. ஆனால் அதை எதிர்த்து பேசவும் யாரும் தைரியமில்லை.
அங்கிருந்து கிளம்பிய அவுரங்கசீப் செங்கோட்டையினுள் இருந்த தன்னுடைய வீட்டிற்கு சென்றான். ஷாஜகான் இருந்த அதே வீட்டையே தனக்கு தேர்ந்தெடுத்திருந்தான். முதன்முதலில் அந்த வீட்டைப் பார்த்து திகைத்து போய் நின்றான். தங்கம் மற்றும் சிகப்பு நிறத்தில் இருந்த சுவர்களும் அதன் பளபளப்பும் அவனை சங்கடப்படுத்தியது. தன் பேரரசில் பல விஷயங்களை மாற்றவேண்டுமானால் அது முதலில் தனது வீட்டில் இருந்துதான் துவங்க வேண்டும் என முடிவு செய்தான். கடந்த காலத்தின் நினைவு சின்னங்களாக அங்கிருந்த கண்ணாடிகள், பல நூற்றாண்டுகளாக புராதன ஓவியங்கள்,துணி அலங்காரங்கள் என அனைத்தும் அகற்றப்பட்டன. அதற்கு பதில், குரானின் வாசகங்கள் பதிக்கப்பட்ட திரைசீலைகள் தொங்கவிடப்பட்டன. அதேபோல் சுவர்களும் எளிமையை பிரதிபலிக்க வசதியாக வெள்ளை நிறத்தில் பூசப்பட்டன. தரையில் இருந்த அலங்கார பெர்ஷிய விரிப்புகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாய் எளிய விரிப்புகள் போடப்பட்டிருந்தன.
“அரசே! இளவரசி ஜெபுனிஷா உங்களை சந்திக்க விரும்புகிறார்” என அவனது வேலைக்காரன் சொல்ல கை அசைப்பால் அனுமதிக்க சொன்னான்.
தலையை குனிந்தவாறே உள்ளே வந்த ஜெபுனிஷா அந்த அறையை கண்டதும் வியப்பில் ஆழ்ந்தாள்.”ஏன் பேரரசரான தன் தந்தை ஒரு ஏழையை போல வாழ வேண்டும்?” என்று யோசனையில் ஆழ்ந்தாள். அவளிடம் எதுவும் பேசாமல், அங்கிருந்த பிரார்த்தனை விரிப்பிற்கு இட்டு சென்றான். அங்கிருந்த மற்ற பொருட்களை போலவே அவனது குரானும் எளிமையான புத்தகமாய் காட்சி அளித்தது. மேற்கை நோக்கி மண்டியிட்ட இருவரும், தங்கள் கைகளை மேலே உயர்த்தினர். தங்களின் பண்டைய பிரார்த்தனையை உச்சரித்தவாறே முதலில் வலது பக்கம் பார்த்து பின் இடது பக்கம் பார்த்தனர். மற்ற அந்தப்புர பெண்களை விட தான் பிரார்த்தனை சடங்குகளை தான் சரியாக கற்றுத் தேர்ந்திருப்பதை தன் தந்தை அறிய வேண்டும் என விரும்பினாள் அவள். மற்றப் பெண்களை தவிர்த்து தன்னை அவளர்தான் இணைந்து பிரார்த்திக்க அழைத்தது சரி என்று நிரூபிக்க விரும்பினாள். அந்த அழைப்பு அவளை பெருமைப்படுத்துவதாய் இருந்தது.
பிரார்த்தனைகளை முடித்தப் பின், அந்த அறையில் தரையில் போடப்பட்டிருந்த மெத்தையில் அமர்ந்தனர் இருவரும். “ஜெபுனிஷா! எதிரி படையின் வீரன் ஒருவன் கைப்பற்றப்பட்டான் என்ற தகவல் எனக்கு வந்துள்ளது. அது பற்றி உன்னுடைய ஆலோசனை தேவை” என்றான்.
அவளுடைய அந்தப்புரத்திற்கு திரும்பிய பின் “மன்னர் உன்னிடம் என்ன பேச விரும்பினார்? இளவரசர் சுல்தானை பற்றியா? என அலியான தீதர் கான் கேட்டான்.
அவனிடம் அந்த விஷயத்தை பற்றி விவாதிக்க விரும்பாத ஜெபோ வேறு பக்கம் பார்த்துக் கொண்டே “நாட்டை பற்றிய ஒரு விஷயத்தை விவாதிக்க விரும்பினார்” என பதில் கூறினாள்.
“பேரரசர் உங்களை நம்புகிறார். நீங்கள் உங்கள் காய்களை சரியாக நகர்த்தினால் அந்த சூனியக்காரி ரவுஷனாராவை அகற்றி விட்டு உங்களைக் கூட பேரரசி ஆக்கலாம்”.
இதைக் கேட்ட ஜெபுனிஷா புன்னகதைத்தவாறே “நடக்கும் பொழுது பார்த்துக் கொள்ளலாம்” என்று அமைதியாகக் கூறினாள்.
ஆனால் அவன் அந்த பதிலால் திருப்தி அடையவில்லை. அதைப் பற்றி மென்மேலும் கேள்விகள் கேட்டாலும் ஜெபுனிஷா அவனுக்கு எந்த விவரத்தையும் கூறவில்லை. இறுதியில் தன் தோல்வியை ஒப்புக் கொள்பவனை போல் “குறைந்தபட்சம் மீண்டும் யாருக்கும் மரணதண்டனை அளிக்க சொல்லி இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்று பெருமூச்சு விட்டுகொண்டேக் கூறினான்.
“அப்படி நான் சொல்லி இருந்தால் என்ன சொல்வாய் நீ?”
“இம்முறை யார் ?” என்று வேதனையுடன் வினவினான் தீதர்.
அவனுடைய குரலில் அவள் முடிவை மறுக்கும் தொனி ஒலித்தாலும், தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு “கைதி எண் 721ஐ என்ன செய்வது என பேரரசர் என்னிடம் கேட்டார். அவன் நம்மை எதிர்த்த புரட்சி படைகளின் ஒரு பிரிவின் தலைவன். அரசரை எதிர்த்து துரோகம் செய்யும் மற்ற வீரர்களுக்கு எப்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறதோ அவ்வாறே இவனுக்கும் மரண தண்டனை வழங்குமாறு கூறினேன்” எனக் கூறினாள்.
இதைக் கேட்ட தீதர் ” உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?” என்று பீதியுடன் கேட்டான்.
அதைக் கேட்டு கோபமுற்ற ஜெபுனிஷா “தீதர் ! நீ யார் என்பதையும் உன் இடம் எது என்பதையும் மறந்துவிடாதே” என இளவரசியாக அவனிடம் கூறினாள்.
தீதர் அவளிடம் இருந்து பார்வையை அகற்றிக் கொண்டான். சிறுவயதில் இருந்து அவன் வளர்த்தப் பெண்ணிடம் முதன்முறையாக அவனுக்கு பயம் வந்தது. தன் முகத்தில் இருந்தது முக்காடைக் கொண்டு கண்ணிலிருந்து வழிந்துக் கொண்டிருந்த கண்ணீரை மறைத்துக் கொண்டான்.
“என்னுடைய இடம் எனக்குத் தெரியும் இளவரசியே! இந்த அரசில் பேரரசரை எதிர்ப்பவர்கள் எல்லாம் கைகால் ஊனம் அடைகின்றனர் இல்லையேல் ஆண்மை நீக்கம் செய்யப்படுகின்றனர் இல்லையேல் கொல்லப்படுகின்றனர். என்னைப் போன்ற அலிக்கு இங்கே ஏது பாதுகாப்பு?”
அவன் கண்களில் வெளிப்பட்ட உண்மையை காண சக்தி இல்லாமல் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் ஜெபுனிஷா.
“தீதர்! நீ இங்கு எப்படி வந்து சேர்ந்தாய் என்பதை மறந்துவிடாதே!” என்று தாழ்ந்தக் குரலில் அவனுக்கு அவனுடைய கடந்த காலத்தை நினைவூட்டினாள் அவள்.
தீதர், முகலாய பேரரசின் கிழக்கில் இருந்த வங்காளத்தை சேர்ந்த ஒரு அநாதை. அவனை அவனது மாமா ஆண்மையிழக்க செய்து வங்காளத்தை நிர்வகித்து வந்தவர்களிடம் விற்று விட்டார். அவர்களின் உடல் வலிமைக் காரணமாய் முகலாய பேரரசு முழுவதுமே அவர்களுக்கு தேவை அதிகமாய் இருந்தது. இந்த முறையில் தான் தீதரும் முகலாய அந்தப்புரம் வந்து சேர்ந்தான்.
“சிறுவர்களை ஆண்மை இழக்க செய்து அவர்களை அந்தப்புரத்தில் பணி அமர்த்துவதை எனது தாத்தாவும் அவரது முன்னோர்களும் ஆதரித்ததால்தான் நீ இந்த நிலைக்கு ஆளானாய். இந்தப் பழக்கத்தை தடை செய்தது எனது தந்தைதான் என்பது மறந்து விடாதே” என்று தாழ்ந்த குரலில் அவனுக்கு நினைவூட்டினாள் ஜெபோ.
அவன் கண்களில் கண்ணீர் பளபளக்க “இல்லை இளவரசி! உங்கள் தந்தை அந்தப் பழக்கத்தை தடை செய்து வெறும் ஆணை மட்டும் வெளியிட்டார். அதற்கு எந்த தண்டனையும் குறிப்பிடப்படவில்லை. சென்ற மாதம்தான் ஹைதராபாத்தில் இருந்து 20,000 அலிகளை அனுப்பினார்கள். உங்கள் தந்தை இந்தப் பழக்கத்தை தடை செய்திருந்தால் அவர்களை ஏன் ஏற்றுக் கொண்டார்?” என்று அவன் கேட்ட கேள்வியில் நியாயம் தொக்கி நின்றது.
அவன் கூறியதை ஏற்க விரும்பாமல் “நீ சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. இந்த பேச்சிற்கு எனக்கு நேரமில்லை” என்று அங்கிருந்து செல்லுமாறு அவனுக்கு சைகை செய்தாள்.
அவளின் செய்கையினால் கோபம் கொண்ட தீதர் அவள் கையை பற்றி திருப்பி பல்லை கடித்துக் கொண்டே “சாளரத்தின் வெளியே பாருங்கள் இளவரசியே! நீங்களும் உங்கள் தந்தையும் எத்தகைய நாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் என பாருங்கள்.” என கெஞ்சினான்.
“உங்களை மறைத்துக் கொண்டு மாறுவேஷத்தில் நகரத்தினுள் சுற்றி வாருங்கள் இளவரசியே! உங்கள் ஏமாற்றும் திறமையை கவிதைக்கு மட்டும் உபயோகிக்காமல் இதற்கும் உபயோகிக்கவும்”
ஜெபுனிஷாவின் கண்கள் வியப்பில் மேலே உயர்ந்தன. எப்பொழுதும் பணிவாய் பேசும் தீதர் இப்படி பேசுவது அவளுக்கு பயத்தை தந்தது. அவள் கண்களில் பயத்தைக் கண்ட தீதர் அவள் கைகளை மேலும் இறுக பற்றிக்கொண்டு “உங்கள் சகோதரர்கள் அனைவரும் ஆண்மையற்றவர்கள். சுல்தானிற்கு மட்டுமே இவரை தடுக்கும் சக்தி இருக்கிறது. அவரும் இப்பொழுது சிறையில். குழந்தையே ! நீதான் இவரை தடுக்க வேண்டும். இல்லையேல் நம் அனைவரையுமே இவன் அழித்து விடுவான்” என கோரிக்கை வைத்தான்.
குறுகியப் பாதையில் சென்றுகொண்டிருந்த அகதிகளின் நீண்ட வரிசையின் இறுதியில் நடந்துக் கொண்டிருந்தாள் ஜெபுனிஷா. அந்த உச்சி வேளையில் கொஞ்சம் கருணையின்றி அந்த பாவப்பட்ட மக்களின் மேல் தனது கதிர்களின் மூலம் உஷ்ணத்தை பாய்ச்சிக் கொண்டிருந்தான் கதிரவன். அவள் அணிந்திருந்த கருப்பு நிற புர்கா அவளுக்கு மேலும் உஷ்ணத்தையே அளித்தது. அளவுக்கு அதிகமாய் வியர்த்து ஊற்ற, அங்கிருந்த ஒரு சிறு சந்துக்குள் நுழைந்து தனது புர்காவின் மேல் திரையை திறந்து வெளியே வீசும் காற்றை கொஞ்சம் அனுபவித்தாள். அந்த உடை ஒரு சூடான அடுப்பை போல் அவளை வேக வைத்துக் கொண்டிருந்தது. சில நிமிடங்கள் நின்று வெளிக் காற்றை அனுபவித்துக் கொண்டவள், மீண்டும் தன் முகத்தை திரையிட்டு மறைத்துக் கொண்டு தில்லியின் குறுகிய சந்துக்களில் நடக்கத் துவங்கினாள். அவள் பார்ப்பதற்கென முகத்திரையில் இருந்த சிறிய இடைவெளிக்கு நடுவில் அந்த நகரத்தை பார்த்துக் கொண்டே நடந்தாள். மக்களின் மகிழ்விற்காக கூண்டில் அடைத்து இட்டு செல்லப்படும் மிருகத்தை போல் தன்னை உணர்ந்தாள் அவள். அவளை சுற்றியுள்ள உலகம் முன்னே சென்று கொண்டிருக்க அவளோ அந்த கருப்பு நிற உடையில் சிறைப்பட்டிருந்தாள் .
அவள் பார்த்த இடத்தில் எல்லாம் தாடியுடன் இருந்த ஆண்கள் தென்பட்டனர். வெகு சில பெண்களே அவள் கண்ணில் தென்பட்டனர். அவர்களும் தெருக்களின் மூலையில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர்.”தில்லியில் பிச்சைக்காரர்களா?” என்றெண்ணி வியந்தாள் அவள். ஆனால் அவள் அறியாத விஷயங்கள் பல இருந்தன. அவுரங்கசீப்பின் படைகள் தில்லியை தாக்கிய பொழுது, அவளது சகோதரனுக்கு ஆதரவாய் இருந்த படை வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டதும் அதனால் விதவையானவர்களுக்கு ஏதும் செய்யப்படாததும் அவளுக்கு தெரியாது. ஒரு வீட்டில் சம்பாதிக்க கூடிய ஆண்மகன் இல்லாவிடில் அந்தப் பெண்கள் பிச்சைதான் எடுக்க வேண்டும் என்பது அவுரங்கசீப்பின் ஆணை என்பதும் அவளுக்கு தெரியாது.
ஜெபுனிஷா தில்லியின் உட்பகுதியை நோக்கி சென்றாள். அங்கே அந்த ராஜ்யத்தில் இருந்த இந்துக்கள் அவர்களின் மாலை உணவை சமைத்துக் கொண்டிருக்க அவர்களின் குழந்தைகளோ சாணமும், சாக்கடை கழிவும் கலந்து சுத்தப்படுத்தப்படாத தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்தன. குழந்தையை மடியில் வைத்திருந்த ஒரு பெண்ணிடம் தன் குரலை மாற்றிக் கொண்டு “நீங்கள் ஏன் உங்கள் வீட்டில் வசிக்காமல் இங்கே தெருக்களில் இருக்கிறீர்கள்?” என்றுக் கேட்டாள்.
ஒல்லியாய் உடம்பில் சத்துக் குறைந்துக் காணப்பட்ட அந்த பெண் மிக மெல்லமாய் “எங்களுக்கு வீடு ஏது? முஸ்லீமாக மதம் மாற மறுத்து விட்டதால் ,அரசர் எங்கள் வீட்டை இடிக்க சொல்லிவிட்டார்” என்று சோகத்துடன் கூறினாள்.
“கட்டாய மதமாற்றமா?” வியந்தாள் ஜெபுனிஷா.
“இதுதான் எங்கள் நிலை. நாங்கள் அவரின் குடிமக்கள் அல்ல, அவருக்கு ஒரு சுமை. இங்கே இந்த வெய்யிலில் பட்டினி கிடந்தது சாக வேண்டும் என்பதே அவரது விருப்பமாகும்”. உடைந்து போன குரலில் அவள் கூறினாள். அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர் காய்ந்து போய் விட்டது. வற்றிய உடலில் அழுவதற்கு கூட கண்ணீர் பாக்கியில்லை.
ஜெபோவின் பார்வை அவள் மடியில் இருந்த குழந்தையை நோக்கியது. அவன் தலைமுடி அழுக்கினால் பழுப்பு நிறத்தில் இருந்தது. அவன் நா வறண்டு மூக்கில் இருந்து ஒழுகிய சளியை தீண்டியது. அவளால் அவர்களைப் பார்த்து பரிதாபபட மட்டுமே முடிந்தது. அவன் தலையை தடவிக் கொடுத்துவிட்டு அவள் தன் பாதையில் தொடர்ந்தாள் .
திடீரென சற்றுத் தொலைவில் மக்களின் ஓலம் கேட்டது. முகலாய வீரர்கள் அங்கே இருந்த மக்களை பார்த்து சப்தமிட அவர்களும் அவ்வீரர்களிடம் சண்டை இட்டுக் கொண்டிருந்தனர். அவள் சப்தம் வந்த இடத்தை நோக்கி செல்ல, அங்கிருந்த மக்களோ அதற்கு நேரெதிர் திசையில் ஓடிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரையும் பயந்து ஓட வைத்தது எதுவாக இருக்கும் என யோசித்துக் கொண்டே அந்த இடத்திற்கு விரைந்தாள். அங்கே இருந்த திறந்த வெளிக்கு வந்து சேர்ந்தாள். அங்கே இருந்த கட்டிடம் ஒன்று தரைமட்டமாக கிடந்தது. அது இரு இந்துக் கோவில் என அறிந்து கொள்ள அவளுக்கு நேரம் பிடிக்கவில்லை. வேஷ்டி அணிந்திருந்த அந்தக் கோவிலின் தலைமை பூசாரியை காவலர்கள் சாட்டையால் அடித்துக் கொண்டிருக்க மற்ற பூசாரிகளை வலுக்கட்டாயமாக மாட்டுக் கறி சாப்பிட வைத்துக் கொண்டிருந்தனர். மாட்டுக்கறி இந்து மதத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று. அருகிலேயே ஒரு பெரியவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் கண்கள் திறந்திருக்க உயிர் எப்பொழுதோ அவரை விட்டுப் பிரிந்திருந்தது. அவர் கைகள் ஒரு குழந்தையை இறுக பற்றி இருந்தது. அந்தக் குழந்தை இவர் இறந்தது புரியாமல் அவரை எழுப்ப முயன்று அழுதுக் கொண்டிருந்தது.
அங்கிருந்து தன் குழந்தையுடன் தப்ப முயன்றவரை காவலர்கள் கொன்று விட்டனர் என்பது ஜெபுனிஷாவிற்கு புரிய வெகுநேரம் ஆகவில்லை. அவள் மூச்சு விட திணறி தனது புர்காவிற்குள் அழுதுக் கொண்டிருந்தாள். அவளால் அங்கே நிற்க இயலவில்லை. அவளை அந்த சூழலின் கணம் அழுத்த, அங்கிருந்து ஓடி அருகிலிருந்த சந்திற்குள் நின்று தனது முகத் திரையை நீக்கி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சில நிமிடங்களுக்கு அவளுக்கு எதுவும் புரியவில்லை. மெல்லத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள் ஒரு குழப்பமான நிலையிலேயே அரண்மனையை நோக்கி நடக்கத் துவங்கினாள். அவள் தன்னை ஒரு மத்திம வயது பெண்மணியாய் உருமாற்றிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் தில்லி நகரத்தை வலம் வந்தாள் . தில்லியின் உஷ்ணமா இல்லை அவள் கண்ட காட்சிகளின் தாக்கமே என அவளால் சொல்ல இயலவில்லை. ஆனால் அவள் அப்பொழுது சுயநினைவின்றி நடப்பவள் போல் நடந்துக் கொண்டிருந்தாள். அவள் பார்த்த இடத்தில எல்லாம் வறுமையே கண்ணில் தென்பட்டது. அவள் சென்ற இடங்களில் எல்லாம் புயலில் இருந்து காப்பாற்றிக் கொள்ள அடைக்கப்பட்டதை போல் வீடுகளின் சாளரங்களும், கதவுகளும் மூடியே இருந்தன. சந்தோஷத்தின் அறிகுறியை கூட அவள் எங்கும் காணவில்லை.
ஒவ்வொரு நாளும் கைதி எண் 721ன் அறைக்கு வந்த காவலர்கள் அவனுக்கு வலுக்கட்டாயமாக போதைப் பொருள் கலந்த பானத்தை புகட்டினார்கள். நாட்கள் செல்ல செல்ல, அவனின் எதிர்ப்பு குறைந்துக் கொண்டே வந்தது. தினமும் அபினை உட்கொண்டதால் அவனது உடல் வலு இழந்து கொண்டே வந்தது. போதையின் பிடியிலே எப்பொழுதும் இருந்ததால் கற்பனைக் காட்சிகள் தோன்ற துவங்கியது. சுயநினைவுடன் இருந்த சில சமயங்களில் அபினுடன் வேறு ஏதாவது போதைப் பொருளும் கலந்து தரப்படுகிறதோ என எண்ணத் துவங்கினான். நாட்கள் கடக்க அவனின் புத்தி பேதலிக்கத் துவங்கியது. பெரும்பாலான நேரங்களில் உளறத் துவங்கினான்.
“குரங்கிற்கு வால் உள்ளது. குரங்கு வாலைப் பிடித்துவிட்டது. குரங்கு வாலில் இருக்கிறது” என்று தொடர்ச்சியாக உளறிக் கொண்டே அவனது முடியை பிய்த்து அதையே உண்ண துவங்கினான். கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடைந்துக் கொண்டே செல்வதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர் காவலர்கள். சில சமயம் அவனிடம் பேச்சுக் கொடுத்து அவனைக் கிண்டல் செய்தனர்.
அவனிடம் கிண்டலாக “யாருக்கு வால் இருக்கிறது?” என்று ஒருவன் கேட்க
விழிகளை நன்கு திறந்து தரையை வெறித்து நோக்கியவாறே “குரங்கிற்கு வால் இருக்கிறது” என கைதி பதில் கூறினான்.
இன்னொரு காவலாளி “யார் குரங்கு ?” என கேட்க
“குரங்கிற்கு வால் உள்ளது” என மீண்டும் கூறினான்.
காவலர்கள் அனைவரும் அவனை பார்த்து நகைத்தவாறே ” நீதான் அந்த குரங்கா?” என கேட்க அதற்கும் அதையே பதிலாக கூறினான்.
“தவழ்ந்து வந்து இந்த பானத்தை பருகு” என ஒருவன் ஆணையிட
தான் என்ன செய்கிறோம் என உணரும் நிலையில் இல்லாத அந்தக் கைதி ஒரு வாய் போல் சென்று போதைப் பொருள் கலந்த அந்த பானத்தை குடித்தான்.
மாலை கவிழ்ந்துக் கொண்டிருந்த வேளையில் தன் அறையில் இருந்த மெத்தையில் அமர்ந்திருந்து கவிதை எழுதிக் கொண்டிருந்தாள் ஜெபுனிஷா. அன்று அவள் கண்ட பயங்கர காட்சிகளில் இருந்து விடுபெற அவளுக்கு அது ஒன்றே வழியாக இருந்தது.
” வாழ்க்கையின் மண்டபத்தில் உணர்ச்சிகள் அற்ற சிலையாக நிற்கிறேன்
என் மக்களின் அன்பே எனது வீடாகும்
சிறுவர்களின் மெல்லிசை கேட்ட இடங்களில்
இப்பொழுது கூக்குரல்களை மட்டுமே கேட்கிறேன்
எனது எஜமானரை புறக்கணிக்க விரும்பவில்லை
இப்பொழுதும் அவரின் நற்குணங்களை நம்புகிறேன்
அவரின் கண்ணை மூடியிருக்கும் திரையை விலக்குவாயாக இறைவா
எப்பொழுதும் சரியான முடிவுகளையே அவர் மனது முடிவு செய்யட்டும்
இந்த உணர்ச்சிகளற்ற சிலைக்கு மீண்டும் உயிர் கொடு
இன்னும் தாமதம் ஆகவில்லை ஆனால் விரைவில் தந்துவிடு
இல்லையேல் என்னை இங்கிருந்து வெகு தொலைவு கொண்டு சென்றுவிடு
நிலவை முத்தமிடும் தூரத்திற்கு என்னை கொண்டு செல் “
4. இறுதி விடை
“நான் என் திரையை அகற்ற மாட்டேன்
அகற்றினால் என்ன நடக்குமோ?”
“இளவரசியே! தீதர் உங்களைக் காண விரும்புகிறான்”
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அழகாய் உடை அணிந்திருந்த தீதர் ஜெபுனிஷாவின் அறைக்குள் நுழைந்தான்.
“இன்று நீ மிக நேர்த்தியாய் உடை அணிந்துள்ளாய் தீதர்! காலையில் இருந்து எங்கு சென்றாய்? நாங்கள் அனைவரும் உன்னைத் தேடிக் கொண்டிருந்தோம்?”
அவளின் பாராட்டை ஏற்றுக் கொள்ளும் விதமாய் அவள் முன் தலைகுனிந்த தீதர் , அவனுடன் வந்தவரை உள்ளே வர சைகை செய்தான். “இளவரசி ! இது மான்ஸா. இளவரசி ஜூபைதாதின் சலவைக்காரி. இவளுடைய கணவன் பேரரசரின் சிறைகாவலாளியாக இருக்கிறான். இவளுக்கு கைதி எண் 721 யார் என்று தெரியும்” என்றுக் கூறினான்.
மான்ஸாவை கண்களால் எடைப் போட்ட ஜெபுனிஷா “என் தந்தையால் விரைவில் மரண தண்டனை அடையப் போகும் அந்த துர்பாக்யசாலி யார்?” என கேட்டாள்.
“இளவரசியே கைதி எண் 721 இளவரசர் சுலைமான் என்று என் கணவர் கூறுகிறார்” என ஜெபுனிஷாவின் இதயத்தைக் கிழிக்கக் கூடிய அந்த வார்த்தைகளை கூறினாள்.
அதைக் கேட்டதும் ஜெபுனிஷாவின் இரத்தம் உறைந்து கல் சிலை போல் நின்றாள். அங்கே சில நிமிடங்கள் பயங்கர அமைதி நிலவியது. அவளின் இதயத் துடிப்பை அவள் காதுகளில் ஒலித்தது. தீதரின் கரம் அவள் தோளை மெதுவாய் பற்றி ” உங்களை மாறுவேடத்தில் சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல மான்ஸா ஒத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் நீங்கள் இன்றிரவே செல்ல வேண்டும். ஏனெனில் அவருக்கு நாளை காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது” என அவள் காதுகளில் கூறினான்.
ஜெபுனிஷா அவனுக்கு எந்த பதிலும் தரவில்லை. அங்கிருந்த உயிரற்ற மற்ற பொருட்களை போலே அவளும் உறைந்து போயிருந்தாள். அவள் மெல்ல விசும்ப துவங்க அவள் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. அவள் காதுகளால் கேட்டதை நம்ப முடியாதவள் போலே அவள் தலை இருபுறமும் அசைந்தது.
“செல்ல விரும்புகிறாயா ?” கேட்டான் தீதர்.
அவளுக்கு தெரியும் அவன் முழு உண்மையை சொல்ல விரும்பவில்லை என்று. அவளின் தந்தை அவளுக்கு நிச்சயிக்கப்பட்டவனை கொல்ல முடிவு செய்தது மட்டுமின்றி அதையும் அவளையே உறுதி செய்ய வைத்ததை அவன் வாயால் அவன் சொல்லிக் காட்ட விரும்பவில்லை. அந்த தண்டனை கொடுக்கப்படுவதை ஜெபுனிஷாவே உறுதி செய்ய வைத்தான் அவுரங்கசீப். பிற்காலத்தில் அவன் மேல் பழி வரக் கூடாதென்று இத்தகைய குரூர வழியை தேர்வு செய்தான் அவன் .
“இளவரசியே! இளவரசரை காண விரும்புகிறீர்களா?” மீண்டும் கேட்டான் தீதர்.
மெல்ல அவன் பக்கம் திரும்பினாள் ஜெபுனிஷா. அவள் கண்களில் ஆறாய் பெருகிய கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்துக் கொண்டிருந்தது. அவளது மனதின் துயரம் கண்ணீர் மூலம் வெளிப்பட்டது. அந்த பயங்கர துயரத்தில் அவள் உடல் நடுங்கியது. அவளின் நிலை கண்டு ஏதும் பேசாமல் மௌனித்தான் தீதர். அவனுக்கு மறுமொழியை அவளால் சம்மதம் என தலையை அசைக்க மட்டுமே முடிந்தது. வார்த்தைகள் ஏதும் வெளி வரவில்லை.
அன்றைய இரவின் இருளில், இரு உருவங்கள் நிழல் போல் அந்தப்புரத்தில் இருந்து வெளிவந்தன. யாரும் கண்டுபிடிக்க இயலாத அளவு முக்காடிட்டு தங்களை மறைத்துக் கொண்டு வந்த மான்ஸாவும், ஜெபுனிஷாவும் செங்கோட்டையின் தோட்டங்களும், நீச்சல் குளங்களும் நிறைந்த விஸ்தாரமான வெளிப்புறத்தை வேகமாய் கடக்க முற்பட்டனர். கோட்டையின் சிறிய வாயில் வழியாக கோட்டைக்கு வெளியே வந்தனர். தீதர் அங்கிருந்த காவலாளிக்கு ஏற்கனவே லஞ்சமாக அதிகமான காசுகளை கொடுத்திருந்தான். வெளியே வந்த இருவரும் ஆற்றங்கரைக்கு சென்று அங்கு காத்திருந்த படகில் ஏறிக் கொண்டனர். படகில் ஆற்றைக் கடந்து மறுகரையில் இருந்த சாலிமர் சிறைச்சாலையை அடைந்தனர். அங்கு தன் கணவன் பீமா தான் காவலுக்கு இருப்பான் என மான்ஸாவிற்கு தெரியும். அவன் உதவியுடன் கொலைக்களத்திற்கு இட்டு செல்லப்படும் முன் சுலைமானை பார்த்து விடலாம் என்பதே மான்ஸாவின் திட்டமாகும்.
முன்பு கைதி எண் 721 நடந்து சென்ற அதே நீண்ட குறுகிய தாழ்வாரத்தின் வழியே மூவரும் நடக்கத் துவங்கினர். உள்ளே செல்ல செல்ல , ஒளி மங்கத் துவங்க ஜெபினிஷா பதட்டம் அடையத் துவங்கினாள். அவளின் இதயத் துடிப்பு அதிகரித்தது. “
“இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? எனக்கு மூச்சு விடுதல் சிரமமாக உள்ளது” என ஜெபுனிஷா கூறியது சிறையின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது.
“அருகில் வந்துவிட்டோம் இளவரசி. இன்னும் சிறிது தூரம்தான். மெதுவாய் ஆழமாய் மூச்சை இழுத்து சுவாசியுங்கள். அது உதவும்” என அவளுக்கு பீமா பதில் கூறினான்.
உள்ளே நடக்க நடக்க தரையில் ஈரப்பதம் அதிகமாகியது. எங்கே தான் மயங்கி விழுந்துவிடுவோமோ என அவள் பயந்தாள். எங்கெல்லாம் தரை மேடு பள்ளமாக இருந்ததோ அதை கடக்கும் பொழுது அவர்களுக்கு உதவுவது போல் அவர்களிடையே மெழுகுவர்த்தி மூலம் வெளிச்சத்தை காட்டினான் அவன். தரையில் எலிகளும் மற்ற பூச்சிகளும் வெளிச்சத்தை கண்டு அவள் கால்களில் ஏறி ஓட அதை கண்டு பயத்தில் அலறினாள்.
அதைக் கேட்ட பீமா அவள் புறம் திரும்பி “இளவரசி! அமைதியாக வாருங்கள். நீங்கள் சப்தம் எழுப்பினால் மற்றவர்களுக்கு கேட்கக்கூடும்” என்று அவளை எச்சரித்தான்.
“எங்கும் எலிகள் ஓடுகின்றன” என அவள் கூற
“இது அரண்மனை இல்ல இளவரசி, சிறைக்கூடம் இது. இங்கு எலிகளுடன் தான் நாள் முழுவதும் பொழுதைக் கழிக்கிறோம் நாங்கள்.மேலே நடக்கலாமா?” என்று கேட்டவனுக்கு மெல்ல தலையசைப்பை பதிலாய் அளித்து மேலே நடக்கத் துவங்கினாள்.
தங்கள் முன் இருந்த பல சிறை அறைகளைக் கடந்து வலதுபுறம் இருந்த தாழ்வாரத்தில் திரும்பினார்கள். அந்த பகுதி மற்ற பகுதிகளை விட இருள் சூழ்ந்து இருந்தது. அது தனிமை சிறையில் அடைக்கப்பட வேண்டிய கைதிகளுக்கான பகுதியாகும்.
அவனின் வலது புறம் இருந்த அறையை காட்டி “நீங்கள் தயாரா இளவரசி?” என கேட்டான்.
ஜெபுனிஷா இனம் புரியாத தயக்கத்துடன் தலையை அசைத்தாள். மெதுவாய் அந்த அறையின் கதவருகே நெருங்கியவள் மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தாள் . கைதி எண் 721, இளவரசன் சுலைமான் ஷேக் ஒரு மூலையில் கவிழ்ந்து படுத்திருந்தான். அவளால் அவனை அடையாளமே கண்டுகொள்ள இயலவில்லை. ஒரு காலத்தில் வலிமையான தசைகளுடன் கூடிய உடலைப் பெற்றிருந்தவன் இன்று தேகம் மெலிந்து வெறும் எலும்புக் கூடாய் காட்சி அளித்தான். கருமையாய் பளபளவென இருந்த அவன் சிகை இன்று சிக்கு போட்டு பரிதாபமாய் இருந்தது. உடலில் ஆடையின்றி தரையில் இருந்த அவன் முகத்தை அவனது உடல் கழிவுகள் மூடி இருந்தன.
அவளால் நம்ப முடியாத குரலில் “சுலைமான்” என அவள் அழைத்தும் அவனிடம் இருந்து எந்த ஒரு அசைவும் இல்லை. அவனால் அவனது காதலியையே அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை என்பது அவளுக்குப் புரிந்தது. இங்கு வருவதற்கு முன்பு இவை அனைத்தையும் எதிர்பார்த்து உறுதியுடன் இருக்க வேண்டும் என்ற முடிவுடன் தான் வந்தாள். ஆனால் அவனது நிலை அவள் எதிர்பார்த்தவற்றை விட மோசமாக இருக்க அவள் உடைந்து போனாள் . மெல்ல அழுகையுடன் “சுலைமான் ! உன் ஜெபுனிஷா” என்று மீண்டும் கூறினாள்.
தரையை பார்த்தவாறே ஒரு பைத்தியம் போல் “ஜெபோ ஜெபோ ஜெபுனிஷா” என்று குளறலாக உளறினான்.
தன் இதயமே உடைந்து சுக்கு நூறாக ஆனது போல் அவனைப் பார்த்து அழுகையுடன் “என்னிடம் வா சுலைமான்” என்று அவர்களைப் பிரித்த இரும்பு கம்பிகளை பற்றிக் கொண்டு கதறினாள்.
இவளின் நிலையைப் பார்த்த பீமா பரிதாபம் கொண்டான். என்ன சொல்லி அவளைத் தேற்ற என அவனுக்கு புரியவில்லை. ஒருவழியாய் தன்னை திடப்படுத்திக் கொண்டு “இளவரசி ! ஒரு சில கட்டளைகளுக்கு மட்டுமே அவரால் செயல் பட முடியும்.அவரை நான் இங்கே வரவழைக்கிறேன்.” என்று அவனின் நிலையை புரிய வைப்பது போல் கூறி கதவை திறந்து உள்ளே சென்றான். உள்ளே இருந்த அசுத்தமான வாளியில் தன் கையில் இருந்த குடுவையில் இருந்த தண்ணீரை ஊற்றினான். பின் சுலைமானை பார்த்து “வா இங்கே! வந்து இதைக் குடி” என கூறினான்.
சிறிது தயக்கத்துடன் அவன் கட்டளைக்கு கட்டுப்பட்ட சுலைமான், தவழ்ந்து அந்த வாளி அருகே சென்று அதில் இருந்த தண்ணீரை வேக வேகமாய் பருகினான். அது சுலைமானாக இருக்க கூடாது. பேரரசரை ஏமாற்ற தன்னைப் போல் இருக்கும் ஒருவனை அனுப்பி சுலைமான் ஏமாற்றி இருக்கக் கூடாதா என எண்ணிக் கொண்டாள் ஜெபுனிஷா.
அவன் வாளியில் இருந்த தண்ணீரை ஒரு நாய் போல் அவசர அவசரமாக நக்கி குடிப்பதை பார்த்துக் கொண்டே “நாங்கள் கடந்த சில வாரமாக அவனுக்குத் தரும் பானம் அவனுக்கு மிகுந்த தாகத்தை உண்டாக்கும்” என்று ஜெபுனிஷாவிற்கு அவனின் நிலையை விளக்கினான்.”அவனுக்கு தண்ணீர் தரவேக் கூடாது என்பது பேரரசரின் தனிப்பட்ட கட்டளை. எனவே காவலர்கள் அந்த வாலியை அவர்களின் சிறுநீர் மற்றும் மற்ற கழிவுகளால் நிரப்பி அவனுக்கு குடிக்கக் கொடுத்து அதை அவன் பருகுவதைக் கண்டு மகிழ்கின்றனர்” என்று சுலைமான் அனுபவிக்கும் கேவலமான நிலையை அவளுக்கு விவரித்தான்.
கண்ணீர் தோய்ந்த முகத்துடன் “என்ன பானத்தை அவனுக்குத் தருகிறீர்கள்?” என்று அவள் கோபத்துடன் கேட்டாள்.
“ஓபியம் விதைகளும் மன குழப்பத்தை உண்டு செய்து மாய தோற்றங்களை உண்டு பண்ணும் மருந்தும் கலந்து தருகிறோம். அவன் இறப்பதற்கு முன்பு அறிவு மங்கிய நிலையை அடைய வேண்டும் என்பது அவரின் எண்ணம்”.
அவர்களின் பின்னே நின்றுக் கொண்டிருந்த மான்ஸா தன் கண் முன்னே நடப்பவற்றை கண்டு அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்திருந்தாள். தன்னிச்சையாக அவளிடம் இருந்து “ஆனால் ஏன்?” என்ற கேள்வி வந்தது.
“ஏன் என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. ஏன் பேரரசர் தந்தையையே சிறையில் அடைத்தார்? ஏன் தொடர்ச்சியாக ஹிந்து கோவில்களை இடித்து கட்டாயமாக இஸ்லாமிற்கு மதம் மாற வற்புறுத்துகிறார் ?ஏன் ஆண்களை நான்கு விரல் அகலத்திற்கு தாடி வைக்க கட்டாயப்படுத்துகிறார்? பேரரசரை விசித்திரமான பைத்தியம் பிடித்துள்ளது. இந்தியா முழுவதுமே அதில் சிக்கி சிதைந்து போய் விடும் ஒரு நாள்”
பீமா பேசுவதை கவனித்துக் கொண்டே சுலைமானை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் ஜெபுனிஷா. அவனது நெற்றியின் வலதுபுறம் அவனது பிறப்பின் பொழுதே இருந்த தழும்பு அது சுலைமான்தான் என்பதை உறுதி செய்தது. அவர்களை தடுத்திருந்த இரும்பு கம்பிகளின் வழியே கை விட்டு அவனது அழுக்கான கைகளை பற்றினாள். அந்த தொடுகையில் அவன் ஒரு நொடி உறைந்து நின்றதை உணர்ந்து தன்னை அறிந்து கொண்டானோ என எண்ணினாள்.
வியப்பால் விரிந்த விழிகளுடன் அவளை பார்த்து “ஜெபுனிஷா…” என்று மீண்டும் முனகத் துவங்கினான். அவன் புருவங்கள் சுருங்கி உதடுகள் நடுங்கத் துவங்கின. இத்தனை காலம் சிறையில் இருந்ததால் உண்டான அழுத்தம் எல்லாம் உடைந்து கண்ணீராய் வெளிப்பட்டது அவன் கண்களில். இத்தனை காலம் ஜெபுனிஷா வந்து தன்னை விடுதலை செய்து அழைத்து செல்வாள் என்று அவனை மனதில் நம்பிக் கொண்டிருந்தான் போல.
அவள் தொடர்ந்து அவன் கரங்களை விடாமல் இறுகப் பற்றிக் கொண்டே இருப்பதை கவனித்த பீமா “இளவரசியே ! நாம் விரைவில் திரும்பி செல்லவேண்டும். பேரரசர் இந்த பகுதிக்கு மிக அதிகமான காவலை வைத்திருக்கிறார். யார் கண்ணிலும் படும் முன் இங்கிருந்து செல்வது நமக்கு நல்லது” என சூழ்நிலையை உணர்த்த முயற்சித்தான்.
மனதில் உண்டான வேதனையுடன் “இல்லை. நான் இவரை விட்டு விலகி செல்லமாட்டேன்” என மறுக்கத் துவங்கினாள்.
பீமா, மான்ஸாவிற்கு சைகை செய்ய, இருவரும் அவள் தோள்களை பற்றி அங்கிருந்து கிட்டத்தட்ட இழுத்து செல்ல துவங்கினார்கள். அவர்கள் இழுக்க, சுலைமானோ அவள் கைகளை பற்றி அவளை அங்கேயே இருக்க வைக்க முயன்று தோற்றான்.
அவர்களிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடினாள் ஜெபுனிஷா. அவளின் கத்தலுக்கு அவர்கள் மசியவில்லை.
“இளவரசி! நீங்கள் தொடர்ந்து இவ்வாறு கத்தினீர்கள் என்றால், அவருடன் சேர்ந்து நாமும் இறக்க நேரிடும்” என்று பீமா மீண்டும் எச்சரிக்க அதைத் தொடர்ந்து தனது போராட்டத்தை கைவிட்டாள் அவள்.
“என்னை மன்னித்து விடு என் காதலனே” என்று கண்ணீருடன் கூறிவிட்டு அவர்களுடன் சென்றாள். அவளின் மன்னிப்பு சுலைமானிடம் கேட்கப்படவில்லை. தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். அவனை காப்பாற்ற இயலாத தன் நிலை கண்டு அவளுக்கு மீண்டும் அழுகையே வந்தது.
அவர்கள் கிட்டத்தட்ட அவளை இழுத்து செல்ல, அவளையே பார்த்துக் கொண்டிருந்த சுலைமானின் எலும்புக்கூடான உருவம் மெல்ல அவள் கண்களில் இருந்து மறையத் துவங்கியது. இதற்கு பின் அவனை காணப்போவதில்லை என்றாலும் அவளின் நினைவுகளில் அவன் நிரந்தரமாய் வாழ்ந்துக் கொண்டிருப்பான்.
தன் அந்தப்புரத்திற்கு திரும்பிய ஜெபுனிஷா அறையின் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் இருந்த சோகம் மெல்ல மெல்ல வெறுப்பாய் மாறி கோபமாய் அவளை பீடிக்கத் துவங்கியது. சுலைமானிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருந்தாலும் அவனை அவள் மிகவும் நேசித்தாள். அவளுக்கான அவளின் உலகத்தில் அவள் ஏற்கனவே அவனை மணந்து அவனின் பிரதான மனைவி ஆகி இருந்தாள். சுலைமானின் முதல் மனைவி இந்துக் குடும்பத்தை சேர்ந்தவள். இவளைப் போன்று பெர்ஷிய முஸ்லீம் இல்லை. எனவே சுலைமானிடம் அதிகம் அன்பு செலுத்தி அவனது இதயத்தில் இடம் பிடித்தால் அந்தப்புரத்தில் அவளது செல்வாக்கு உயரும் என நம்பி இருந்தாள். அவளது சித்தப்பா டாராவிற்கும் அவளது தந்தை அவுரங்கசீப்பிற்கும் இடையே அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட ஒப்பந்தம் என்றாலும் அவள் தனது மனதை சுலைமானிடம் பறிகொடுத்து இருந்தாள். அரியணைக்கான யுத்தம் துவங்கும் முன் அவர்களின் திருமணம் நடைபெறும் என எண்ணி மகிழ்ந்திருந்தாள்.
அவளுக்காக அவன் இயற்றிய பாடல்களின் இனிமை பற்றியும் அவனது தொடுகை எத்தகைய உணர்வை அவளுக்கு அளித்தது என்றும் அவனின் தாடியின் மிருது தன்மையை பற்றியும் எண்ணலானாள். சுலைமான் அவளின் முதல் காதல் அல்ல. அது பற்றி அவனும் அறிவான். ஆனால், அவளே அறியாத உணர்வுகளை தூண்டிவிட்டது அவன் மட்டுமே. அவனின் இறப்பை குறித்த செய்தி அவளுக்கு அறிவிக்கப்பட்டதும் வேதனையில் அவள் கண்கள் மூடிக்கொண்டன. அவளை அறியாமல் அவளிடம் இருந்து ஓலம் வெளிப்பட்டது. அணை உடைந்து கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் போல அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி ஓடியது. அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவள் கன்னங்கள் வழியாய் தாடையில் இருந்து சொட்டி அவள் அணிந்திருந்த உடையை நனைக்கத் துவங்கியது.
அங்கிருந்த அந்தப்புரப் பணிப்பெண்கள் அவளிடம் நெருங்கவும் அச்சம் கொண்டு விலகி நின்றனர். இத்தனை காலத்தில் அழுதே பார்க்காத ஒருவள் இன்று கண்ணீர் விட்டுக் கதரும் பொழுது அவளை எப்படி சமாதானம் செய்வது என அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. “தண்ணீர் எடுத்து வாருங்கள்!” என ஒருவள் கூற இன்னொரு பெண் வேகமாய் சென்று தண்ணீரை எடுத்து அதில் சில எலுமிச்சைத் துண்டங்களை சேர்த்து கொண்டு வந்தாள். ஆனால் அதை ஜெபுனிஷாவிடம் கொண்டு சென்று கொடுக்கத்தான் அவளுக்கு தைரியம் வரவில்லை. ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தண்ணீர் நிறைந்த அந்த கோப்பையை ஜெபுனிஷாவின் முன்னே வைத்தாள்.
முன்னும் பின்னுமாய் நடந்துக் கொண்டிருந்த ஜெபுனிஷாவின் முகம் சோகமும் கோபமும் ஒருங்கே கலந்து உருமாறி இருந்தது. அந்த நொடியில் யாரை என்ன செய்வாள் என்று அவளே உணராத அளவிற்கு கோபம் அவளை ஆட்கொண்டிருந்தது. கோபத்தில் கத்தியவாறே அவள் முன் இருந்த அந்த பீங்கான் தண்ணீர் கோப்பையை தூக்கி சுவற்றை எறிந்தாள். அவளின் கோபம் அவளது அறிவை முழுமையாய் மறைக்க அவள் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வீசத் துவங்கினாள். அவள் வீசி உடைந்து சிதறிய பீங்கான் துண்டுகள் அந்த அறை முழுவதும் பறக்கத் துவங்க அங்கிருந்த பணிப்பெண்கள் பீதியில் கத்தினர். ஆனால் அது எதுவுமே அவளை பாதிக்கவில்லை. அவள் கையில் கிடைத்தது பித்தளை தட்டை எடுத்து கற்களால் அலங்கரிக்கப்பட்ட கண்ணாடியை நோக்கி ஏறிய உடைந்து சிதறிய கண்ணாடி துண்டு அங்கிருந்த பணிப்பெண்ணின் கண்களில் பட்டு அந்த காயத்தில் அவள் அலறினாள்.
தன் பாதுகாப்பிற்காக வைத்திருந்த சிறு கத்தியை கையில் எடுத்த ஜெபுனிஷா அங்கிருந்த மெத்தையை குத்தி கிழிக்கத் துவங்கினாள். பேயால் ஆட்கொள்ளப்பட்டவள் போல் அவள் அங்கிருந்த மெத்தைகளை தன் தங்க முலாம் பூசப்பட்ட கத்தியினால் குத்திக் கிழிக்க அங்கிருந்த பணிப்பெண்கள் பயத்தில் அலறினர். கண்களில் வெறியுடன் அவர்கள் நோக்கிய ஜெபுனிஷாவை கண்டு நடுங்கினர். அடுத்து அவர்களை நோக்கி அவள் வருமுன் விரைவாக அந்த அறையை விட்டு வெளியேறி அறைக்கதவையும் வெளிப்புறம் தாளிட்டனர். அறையின் உள்ளே கையில் கிடைத்தது அனைத்தையும் உடைத்துக் கொண்டிருந்தாள். அறையை வெளியே தாளிட்டவர்கள், அவளது சிற்றன்னைகள் வசித்த பகுதிக்கு சென்று நடந்ததை விவரிக்கத் துவங்கினார்கள்.
பல மணி நேரம் கழிந்தப் பின், ஜெபுனிஷாவின் அழுகைக் குரல் மெல்ல தேய்ந்து ஓய்ந்தது. அவளின் அழுகை நின்ற பிறகே ஜீனத்தும் ஜூபைதாதும் அறைக் கதவை திறந்து உள்ளே வந்தனர். ஒளி குறைந்து இருள் சூழ்ந்திருந்த அறையின் மூலையில் தலைக் கவிழ்ந்து அமர்ந்திருந்த ஜெபுனிஷா அவர்கள் கண்ணில் பட்டாள். எல்லாமே முடிந்தது போன்று தென்பட்ட அவள் முகத்தை இதுவரை அவர்கள் கண்டதில்லை. இப்பொழுது அவள் அழவில்லை முகத்தில் எந்தவித உணர்வும் இல்லாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கையில் வைத்திருந்த கண்ணாடித் துண்டினால் உண்டான காயத்தில் இருந்து இரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. அவள் அருகே சென்று அமர்ந்த சகோதரிகள் இருவரும் அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்ற முயன்றனர்.
“அதைக் கொடு ஜெபோ!” என அவளிடம் இருந்து கண்ணாடித் துண்டை வாங்கிய ஜூபைதாத் அதை தூக்கி ஒரு மூலையில் எறிந்தாள். அவள் முகத்தை முகத்தைப் பற்றி தன் தோளில் சாய்த்துக் கொண்டு அவளை மெதுவாய் தட்டிக்கொடுத்து ஆசுவாசப்படுத்திய ஜூபைதாத் “இறைவன் பெரியவன் ஜெபோ. கட்டாயம் அவன் சுலைமானுக்கு சுவர்க்கத்தில் இடம் தருவான்” என சொன்னாள்.
“என் இனிய ஜெபோ!பார் நீ உன்னை என்ன செய்துகொண்டிருக்கிறாய் ?” என்று அவளிடம் கேட்டாள். ஆனால் எதற்கும் ஜெபுனிஷாவிடம் இருந்து பதில் வரவில்லை. அவளிடம் இருந்து கோவம் எப்பொழுதோ விடைப் பெற்றிருக்க இப்பொழுது அவள் சோகத்தில் மூழ்கி இருந்தாள்.
சிறையின் துர்நாற்றம் இன்னும் அவளது நாசியில் உறுத்திக் கொண்டிருக்க சோகத்தின் பிடியில் இருந்த ஜெபுனிஷா மெல்ல உறங்கத் துவங்கினாள். ஜெபோ அதிகமாய் அவள் அம்மாவை பற்றி நினைத்ததில்லை. ஆனால் அன்று இரவு அவள் கனவில் அவளது தாய் தில்ராஸ் அவள் முன் நின்று கொண்டிருந்தாள். அவளுடைய அழகிய புன்னகையுடன் , பெர்ஷிய பெண்களுக்கே உரித்தான களையுடைன் நின்றிருந்தாள். ஜெபோவை நோக்கி நடந்து வந்தால் , நிஜ வாழ்வை போலவே கொஞ்சம் நொண்டி நடந்து வந்தாள். பலமுறை அவுரங்கசீப்பின் கோபத்திற்கு ஆளாகி அவனின் வன்முறைக்கு ஆளானதால் அவள் கால் நொண்டியது. அதில் இருந்து இறுதி வரை அவளால் மீண்டு வர இயலவில்லை. தில்ராஸ், தான் இயற்றிய பெர்ஷிய கவிதைகளை தன் கணவனுக்கு பயந்து சப்தமாக படிக்க இயலாமல் மெல்ல முணுமுணுப்பதை பல முறை கேட்டிருக்கிறாள் ஜெபுனிஷா. பயமுறுத்தி அடக்கப்பட்ட தில்ராஸ் தன்னுடைய கலைத் திறனை ஒரு நாளும் வெளிப்படுத்த இயன்றதில்லை. தண்ணீர் ஊற்றப்படாத ஒரு பூவைப் போல் அவளும் விரைவில் வாடி கருகி போனாள். ஜெபுனிஷா தன்னுடைய கவிதை இயற்றும் திறன் தன் அம்மாவிடம் இருந்துதான் வந்தது என அறிந்திருந்தாள்.
இப்பொழுது அவளின் கனவில் “நீ என்னை மறந்துவிட்டாய் அல்லவா ஜெபுனிஷா?” என தில்ராஸ் கேட்டாள்.
“இல்லை அம்மா. நான் எப்படி உங்களை மறக்க இயலும்? இந்த வாழ்வும் அதில் மிகப் பெரிய பரிசான கவிதை எழுதும் திறமையும் நீங்கள் எனக்கு கொடுத்துள்ள பொழுது எப்படி நான் உங்களை மறப்பேன்?”
“ஆனாலும், நீ பலவற்றை மறந்துவிட்டாய் குழந்தாய்! உன் அப்பாவிற்கு எதிராக நிற்க நான் கற்றுத் தந்ததை மறந்தாய். என்னை ஒரு ஆண் அடக்கி ஆண்டதை போல் மற்றொரு ஆண் உன்னை அடக்க விடக்கூடாது என்று சொல்லித் தந்ததை மறந்து விட்டாய்”
இதைக் கேட்ட ஜெபுனிஷா அழத் துவங்கினாள். மூடியிருந்த அவள் இமைகளின் நடுவிலே கண்ணீர் பெருகத் துவங்கியது. “நான் என்ன செய்ய இயலும்? எல்லாமே முடிந்து விட்டது. அத்தை ஜஹானாராவும் தாத்தாவும் சிறையிலே அடைக்கப்பட்டுவிட்டனர். சுலைமானை கொன்று விட்டனர். நான் எங்கே செல்லமுடியும் இல்லை என்னதான் செய்ய இயலும் என்னால்?”
“அவரைத் திணறடி!”
“யாரை திணற அடிக்க சொல்கிறீர்கள்?”
“உன் தந்தையை”
தன்னால் நம்ப இயலா பார்வையுடன் தன் தாயை பார்த்தால் ஜெபுனிஷா. இது மென்மையே உருவான தன் அன்னையா? அவள் சொல்வது உண்மையா?
“அவர் மற்றவரை திணற அடித்து அடக்கியது போல் நீயும் அவரை அடக்கு. கலைகளை முற்றிலும் அழிக்கத் துடிக்கிறார் அவர். நீ அதற்கு புத்துயிர் அளிக்க வேண்டும். நம்மை அடக்க இயலாது என இதன் மூலம் அவர் உணர வேண்டும். கலைகளை தடை செய்து பல ஆணைகளை பிறப்பிக்கலாம் ஆனால் கலை என்றும் அழியாமல் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும் என்று அவர் உணரவேண்டும். நாம் குடிப்போம், பாடல் இயற்றுவோம், ஆடுவோம் நம் முகத்தை மறைத்து அவர் போட்டிருக்கும் கறுப்புத் திரையின் வழியே நாம் பிரகாசிப்போம்.”
இத்தனை உறுதியுடன் தன் அன்னையை என்றுமே பார்த்தது இல்லை அவள்.
“சுலைமானின் மரணத்திற்கு பிறகு அவுரங்கசீப் போன்ற கல் நெஞ்சக்காரர்கள் கூட உன் வலியை உணர்வார்கள். இதுதான் நம் திட்டத்தை துவங்க சரியான நேரம். ஆண்களும் பெண்களும் இணைந்து குரானின் வரிகளை பிரார்த்தித்து ஓதும் ஒரு அமைப்பை உருவாக்க சொல். இந்த அமைப்பு, அறிவார்ந்த ஆண் பெண்களை குரானில் கூறப்பட்டுள்ள விஷயங்களை ஆழமாக படிக்க வசதியாக இருக்கும் என்று சொல். ஆனால் அந்த அமைப்பு கூடும் சமயத்தில் கலைகளை ஆராதி! உன் கவிதைகளை படி. அவர் எதைக் கொல்ல எண்ணுகிறாரோ அதற்கு நீ உயிர் கொடு. மிக முக்கியமாக, அவரை அழிக்க அந்த அமைப்பை உபயோகப்படுத்தி திட்டமிடு. அவர் எதிரே நின்று அவரை எப்பொழுதும் வெல்ல இயலாது உன்னால். அவர் பின் மறைந்து நின்றுதான் அவரை அழிக்க இயலும்.
“பின்னிருந்து மறைந்து?” தன் அன்னைக் கூறிய வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முயன்றாள் ஜெபுனிஷா.
“ஆம். பின்னிருந்து மறைந்துதான்” பதில் தந்தாள் தில்ராஸ்.
5. மனசோர்வடைந்த இளவரசன்
என் ஆன்மா பெருமையானது
என் தலை எதற்காகவும்
யார் முன்னும் குனிந்ததில்லை
9 ஆகஸ்ட் 1659
அன்று வானம் நீல நிறத்தில் மிக அழகாய் இருந்தது. வெண்மேகங்கள் பலவித உருவங்களில் அந்த வானத்தில் உலா சென்றுக் கொண்டிருந்தன. ஒரு அழகிய நாளாக இருக்கவேண்டிய அன்றைய தினம் வீழ்த்தப்பட்ட இளவரசனின் பிம்பம் மறைத்தது. அந்த இளவரசனை தங்கியிருந்த யானை அந்தப்புரத்தின் சாளரத்தின் அருகே வந்தபொழுது, ஒரு காலத்தில் பெருமையுடன் வளம் வந்த தன் சித்தப்பா இன்று தலைகுனிந்து அமர்ந்திருப்பதை பார்த்தாள் ஜெபுனிஷா. அவன் சிறைப்படிக்கப்பட்டதை பற்றி அவள் கேள்விப்பட்டிருந்தாலும், அவன் வீழ்ந்தவிதம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி இருந்தது. சுலைமான் கொல்லப்பட்டதைப் பற்றி அறிந்த தாரா, மிகுந்த மனசோர்விலும், சோகத்திலும் அதன் பின் எங்கும் தப்பி செல்ல முற்படவில்லை. அவனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு காவலாளியே அரசாங்கத்திடம் இருந்து கிடைத்த விலைமதிப்பற்ற கற்களுக்கு பதிலாய் அவனைக் காட்டிக் கொடுத்திருந்தான்.
தாராவை சிறைபிடித்தது அவளது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று அவளுக்குத் தெரியும். அத்துடன் அரியணைக்கான போட்டியும் முற்றுப் பெற்றுவிட்டது. அவளுடைய மற்றொரு சித்தப்பாவான ஷா ஷுஜா பலவீனமானவன் மேலும் அவனிடம் அவுரங்கசீப்பை தோற்கடிக்கும் அளவிற்கு படைப்பலமும் இல்லை. தாராவை அவமானப்படுத்த இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொண்டான் அவுரங்கசீப். கரடுமுரடான கந்தலான உடையை அணிவித்து தில்லியின் முக்கிய வீதிகளின் வழியே அவனை கொண்டு சென்றனர். வயதான யானை ஒன்றின் மேல் அமரவைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டதை கண்ட நகர மக்கள் பீதியில் உறைந்திருந்தனர். அந்தக் காட்சியை கண்டு ஜெபுனிஷாவிற்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. தாரா, அவளுக்கு மிகவும் பிடித்த சித்தப்பா அவர். அவரிடம் இருந்துதான் அவள் கவிதை எழுத கற்றுக்கொண்டாள். தனது சகோதரனை அவுரங்கசீப் கொல்லவோ அவமானப்படுத்தவோ மாட்டான் என எண்ணினாள். ஆனால் அங்கு நடந்தது என்னவோ அதற்கு நேர் எதிரான விஷயங்களே.
அவளது சிறுவயதில் அவளை தூக்கிப் போட்டு பின் அவள் கீழே வரும் பொழுது அவளை பிடித்து விளையாடுவார் தாரா. “மேலும் பறந்து செல் ஜெபுனிஷா! பறந்து வானை தொடு” என்று அவளை நோக்கி சொல்வார். ஒவ்வொருமுறை அவளை தாரா மேலே எறியும் பொழுதெல்லாம் அவள் குலுங்க குலுங்க சிரித்த சிரிப்பு இப்பொழுதும் அவள் காதுகளில் எதிரொலித்தது. “இன்னும் மேலே வீசுங்கள் சித்தப்பா! நான் இன்னும் மேலே மேலே சென்று விண்ணைத் தொட விரும்புகிறேன்” என அவள் கூறியதற்கு “வேண்டாம் ஜெபோ! நீ மற்ற மனிதர்களை போல் இந்த பூவுலகில் வசிக்க வேண்டும். அதிக உயரத்திற்கு என்றும் போகக் கூடாது” என கூறினார் அன்று அவர் கூறியதை எண்ணிப்பார்த்தாள் இன்று.
தாரா, மற்றவர்களை விட மிக வேகமாய் முன்னுக்கு வந்தவர். மற்ற மனிதர்களிடம் இருந்த நல்ல குணங்களை மட்டும் நம்பினார் அவர். தன் சகோதரர்கள் இரக்கமற்ற போர் வெறியர்கள் என்பதை எண்ணிப் பார்க்க மறந்துவிட்டார் அவர்.
இன்று தாரா களைப்படைந்து தோல்வியை ஒப்புக் கொண்டு தன் விதியை எதிர்பார்த்துக் காத்திருந்தார். பல மாதங்களாய் அவுரங்கசீப்பிடம் இருந்து தப்பி ஓடி ஓடி அவன் முகம் கறுத்துவிட்டது. அவன் தோள்கள் தளர்ந்து விட்டன. கம்பீரமாய் வசீகர புன்னகையுடன் இருந்தவன் இன்று ஒரு எலும்புக்கூடு போல் இருந்தான். அவனை ஊர்வலமாய் கொண்டு சென்றதன் நோக்கத்தை அவள் அறிந்தே இருந்தாள். அரச கைதியான அவனைப் பார்த்து மக்கள் கேலியும் கிண்டலும் செய்வார்கள் என இருண்ட உள்ளம் கொண்ட அவுரங்கசீப் எண்ணினான். சில சமயம் இவனைப் போன்ற கைதியின் மேல் அழுகிய பழங்களைக் கூட எறிவார்கள். வடக்கிலிருந்து படை எடுத்து வந்த பகைவர்களாகட்டும் அல்லது தெற்கில் இவர்களை எதிர்த்து சண்டையிட்டு தோற்ற அரசர்களாகட்டும் இவ்வாறே ஊர்வலமாய் இட்டு செல்லப்பட்டனர். அப்பொழுதெல்லாம் மக்கள் வீதியின் இருபுறமும் நின்று கேலியும் கிண்டலும் செய்து, கையில் கிடைத்த பொருட்களை அவர்கள் மேல் வீசி மகிழ்ந்ததை அவள் அறிவாள். ஆனால் இன்றோ அங்கு கூடியிருந்தவர்கள் திகைக்கும் வண்ணம், அந்த யானை சென்ற இடமெல்லாம் அவர்களின் அரசனே கைது செய்யப்பட்டு கொண்டுவரப்படுவது போல் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். அந்த யானை சென்ற பின்னே, தங்கள் கணவனே இறந்தது போல் பெண்கள் தங்கள் வளையலை சாலையில் உடைத்ததை கண்ட ஜெபுனிஷா திகைத்தாள். ஆண்களும் தங்கள் தலைப்பாகையை கழற்றி அவனுக்கு மரியாதை செய்தனர்.
“ஹிந்து மதமும், இஸ்லாமும் ஒன்றுதான்” என்று பல வருடங்கள் முன்பு ஷாஜஹான் பேரரசனாக இருந்த சமயத்தில் தாரா கூறி இருந்தான். அப்பொழுது அவுரங்கசீப் அவ்வளவு முக்கியத்துவம் பெறவில்லை. ஆனால் இதைக் கேட்ட முல்லாக்களோ தாரா அடுத்து அரசனனால் தங்களுடைய இடம் பறிபோகும் என ரகசியமாக அடுத்த வாரிசாக அவுரங்கசீப்பை வளர்க்க முற்பட்டனர்.
அந்த வீதியின் இறுதியில் நின்றுக் கொண்டிருந்த ஹிந்துக்கள் கூட தங்கள் கடவுளை வணங்குவது போல் இரு கை கூப்பி, தலை குனிந்து வணங்குவதை பார்த்தாள் ஜெபுனிஷா. பொதுவாய் பொது வெளியில் மற்றவர் முன் கண்ணீர் சிந்தாத முஸ்லீம் ஆண்கள் கூட அங்கே கண்ணீர் சிந்திக்கொண்டிருப்பதை அவளால் பார்க்க முடிந்தது. இது அரசனுக்கு எதிரான ஒரு செய்கையாகவே அவள் பார்த்தாள். அதே சமயம், அரண்மனையின் முக்கிய முற்றத்தில் அவளது தந்தை அருகே ரவுஸனாரா நின்று கொண்டிருப்பதை பார்த்தாள் .
“இவள் ஏன் இங்கு நிற்கிறாள்?” என தன் சகோதரிகளைக் கேட்டாள்.
“நம் தந்தையை விட சித்தப்பா தாராவை அவள் மிகவும் வெறுக்கிறாள். அவன் அவமானப்படுத்தபடுவதை காணவும் அவளுக்கு மிகுந்த ஆசை” என்று ஜீனத் பதில் கூறினாள்.
நகைகள் அணிந்து அரசரின் பின் நின்றிருந்த ரவுஸனாராவையே ஆழ்ந்து நோக்கி அவள் முகத்திரை அணியாமல் நின்றிருப்பதை ஆச்சர்யத்துடன் கவனித்தாள். எப்படி முகத்திரை அணியாமல் தன்னுடன் நிற்க அனுமதித்தார் அரசர் என அவள் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவுரங்கசீப் சைகையால் அந்த ஊர்வலத்தை நிறுத்த சைகை காட்டினான். “என்ன செய்கிறார் அப்பா?” மீண்டும் கேட்டாள் அவள்.
“எனக்கும் தெரியவில்லை. ஆனால் ஊர்வலத்தை நிறுத்த சைகை செய்கிறார் என்றே எண்ணுகிறேன். அவர் நினைத்த எதுவுமே நடக்கவில்லை. எனவே அநேகமாய் சித்தப்பாவை ஷாலிமார் சிறைக்கு கொண்டு செல்ல சொல்கிறார். விரைவிலேயே அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டாலும் வியப்படத் தேவையில்லை” என ஜீனத் தன் அனுமானத்தை கூறினாள்.
அவள் கூறியது சரிதான் என்பது போல் செங்கோட்டையில் அருகே சென்ற யானை, பின் மேற்கில் திரும்பி ஷாலிமார் சிறை நோக்கி செல்வதை கண்டாள் ஜெபுனிஷா. யானையை ஊர்ந்து நோக்கி தன் சித்தப்பாவை நெருக்கத்தில் பார்க்க முயன்றாள் அவள். ஆச்சரியப்படும் வகையில் அவளுக்கு மிக அருகில் தெரிந்தார் அவர். அவள் கண்களை உற்று நோக்கி “நீ இதை எப்படி ஆதரிக்கிறாய்?” எனக் கேட்பது போல் இருந்தது. அந்த பார்வையில் இருந்து தப்பிக்க தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். மீண்டும் அவள் கண்களை திறந்தபொழுது யானை அங்கிருந்து தொலைவில் சென்றுக் கொண்டிருந்தது. அவளது சித்தப்பாவின் முதுகையே அவளால் பார்க்க முடிந்தது. அதுதான் அவள் அவரை கடைசியாக உயிருடன் பார்த்தது.
“அவருக்காக நான் அரசரிடம் வாதாட வேண்டும்”
“ஜெபோ, உன்னால் இயலாது. அவரது குணத்தை பற்றி நீ நன்கு அறிவாய்”
“நான் கண்டிப்பாக முயற்சி செய்யவேண்டும். இப்படி நடந்து கொண்டே இருப்பதை என்னால் அனுமதிக்க முடியாது.”
“ஆனால் நீ …”
“நான் அவரின் மகள். அவரிடம் எனக்கு கொஞ்சமாவது செல்வாக்கு இருக்கவேண்டும்.”
“கடவுள் கூட அவரை மாற்ற இயலாது ஜெபோ”.
மறுநாள் காலையில், அவுரங்கசீப் தனது நெருக்கமானவர்களை சந்திக்கும் அறையில் அமர்ந்திருந்தான் தாராவை என்ன செய்வது என முடிவு செய்ய. அந்த அறையின் ஒருபுறம் முல்லாக்களுடன் ரவுஸனாரா நின்றிருந்தாள். மறுபுறம் திரைக்கு பின்பு ஜெபுனிஷா நின்றுக்கொண்டிருந்தாள். அந்த அறை ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட ஒன்றாகும். தாஜ்மஹாலில் இருப்பது போல் வெள்ளை பளிங்கு கற்களும் மற்ற அலங்காரங்களும் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. அறையின் கூரையானது தங்கதகடுகளால் வேயப்பட்டிருந்தது. அதில் ஆங்காங்கே இருந்த கண்ணாடி துண்டுகள் ஒளியை அந்த அறை முழுவதும் பரப்பிக் கொண்டிருந்தது.
அரசனுக்கு முன்னால் வந்த ஜாபர் கான் கடுமையான குரலில் “அரசே! உங்களிடம் கருணையை வேண்டி இளவரசர் தாரா கடிதம் அனுப்பியுள்ளார்” என்று கூறினார்.
அதைக் கேட்டவுடன் அவுரங்கசீப் சிரித்தான். “மரணத்தை ஆண்மகனாய் வரவேற்க இயலாதவன் , பேரரசன் ஆக விரும்பினான்”.
முல்லாக்களும் , ரவுஸனாராவும் அவனுடன் சேர்ந்து தாராவை கிண்டலடித்து சிரித்தார்கள் .
“நாட்டை கைப்பற்ற முயன்ற துரோகியின் கடித்த்தைப் படி” என ஆணையிட்டான் அவுரங்கசீப்.
என் சகோதரனே ! என் பேரரசே !
இதற்கும் மேல் அரசைக் கைப்பற்ற போராடும் எண்ணம் எனக்கும் சிறிதும் இல்லை.எனக்கு மரண தண்டனை விதிப்பது குறித்தான எண்ணம் உங்கள் மனதில் இருப்பது தேவையற்ற ஒன்று. எனக்கு ஒரு வீடும், என் தேவைகளை நிறைவேற்ற ஒரு பணிப்பெண்ணும் மட்டும் தரவும். என் எஞ்சிய வாழ்வை குரானை ஓதிக் கொண்டு கழித்துவிடுவேன்.
உங்கள் வேலைக்காரனும் சகோதரனுமனான
தாரா
இதைக் கேட்டவுடன் அவுரங்கசீப்பின் முகம் மாறியது. இதுவரை தன் சகோதரனை அவன் செய்து கொண்டிருந்த ஏளனம் அவன் முகத்தை விட்டு விலகியது. ரவுஸனாராவை நோக்கி ” சகோதரி ! நீங்கள் என்ன கூறுகிறார்கள்” என வினவினான்.
“துரோகி இறக்க வேண்டும்” என அவள் கூறியவுடன் அவள் அருகில் இருந்த முல்லாக்களும் “துரோகி இறக்க வேண்டும் !துரோகி இறக்க வேண்டும்! துரோகி இறக்க வேண்டும்!” என்று உரக்கக் கூவினார்கள்.
அவுரங்கசீப்பின் உதடுகளில் புன்சிரிப்பு பூத்தது. தாராவிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற அவனது எண்ணத்திற்கு அங்கே ஒப்புதல் கிட்டிவிட்டது.
“அரசே! உங்கள் பணிவான வேலைக்காரி பேச அனுமதி கோருகிறேன்” என திரைக்குப் பின்னிருந்து ஜெபுனிஷா பேசினாள். தன் கையை உயர்த்தி அதற்கு அவுரங்கசீப் அனுமதி கொடுத்தவுடன் “அரசே! இளவரசர் தாரா ஷேக்…”
அவளை இடைமறித்த ரவுஸனாரா ” துரோகி தாரா எனக் கூறு!” என்று கூறியவுடன் அங்கே அமைதி குடிகொண்டது. அதை கண்டா அவுரங்கசீப் புன்னகைத்தான்.
“மன்னிக்க வேண்டும் அரசே! துரோகி தாரா உங்களின் சகோதரன். இந்த நாட்டில் நீங்கள் எப்பொழுதும் அறநெறியை நிலைநாட்டி வந்துள்ளீர்கள். சொந்த சகோதரனை கொள்வதில் என்ன அறநெறி உள்ளது? யுத்தம் முடிந்து நீங்கள் அதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். அவருக்கு மன்னிப்பு அளிப்பதன் மூலம் அவரது குழந்தைகள் தங்கள் தந்தையை இழந்த அநாதை ஆகமாட்டார்கள்” என தனது நியாயத்தை அவள் எடுத்துரைத்தாள்.
இதைக் கேட்ட ரௌஷனாரா உள்ளுக்குள் கொதித்தாள்.” அரசே ! அரசரின் மூத்த சகோதரன் உயிருடன் இருக்கும் வரை யுத்தம் என்றும் முடிவடையாது. உங்கள் தீமையை விரும்புவர்களுக்கு புரட்சியாளர்களும் சட்டங்களின் படி மூத்த சகோதரரே ஆட்சி புரியவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்” என்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினாள்.
அங்கே ஒரு ஓரத்தில் முகத்தில் கவலையுடன் நின்று அவளைக் கவனித்துக் கொண்டிருந்த அகில் கானை பார்த்தாள் ஜெபுனிஷா. அவன் மெல்ல தலையை இருபுறம் ஆட்டி அரசரிடம் வாக்குவாதம் செய்யவேண்டாம் என்று தெரிவித்தான். ஆனால் அவனது மறுப்பை அவள் சட்டை செய்யவில்லை. அவுரங்கசீப்பின் முடிவை மாற்ற தொடர்ந்து போராடினாள் அவள். “அது உண்மையெனில் தாராவை கொல்வது அவர்களது முடிவை மாற்றாது ஏனெனில், அவரது மூத்த சகோதரர் துரோகி ஷூஜா இன்னும் உயிருடன் தலைமறைவாகத்தான் உள்ளார்”
தன்னுடைய உணர்வுபூர்வமான வாதங்கள் மூலம் அரசரின் மனதை அவள் மாற்றிவிடுவாளோ எனக் கோபத்துடன் அவளை முறைத்தாள் ரௌஷனாரா.
“இணையற்ற பேரரசே! நீங்கள் இருவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இளம் வயதில் உங்கள் தந்தை தலைமறைவாய் இருந்த காலத்தில் உங்கள் பாட்டி உங்களையும் துரோகி தாராவையும் கைது செய்து வைத்துக் கொண்டு பணயமாக பயன்படுத்தினார். அந்த நேரத்தில் உங்களை பாதுகாத்து கவனித்துக் கொண்டது இதே துரோகி தாராதான்.
அந்த கதை அங்கிருந்த அனைவரையும் மௌனத்தில் ஆழ்த்தியது. சிறைப்படுத்தப்பட்ட சமயத்தில் நடந்த பயங்கர சம்பவங்கள் அவுரங்கசீப்பின் மனதில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் போல் இப்பொழுது ஓடியது. அவர்களை இருவரையும் அவனுடைய பாட்டி திட்டியதும் அதனால் அவன் அடைத்த அதிர்ச்சியும் இப்பொழுதும் அவன் மனதில் மறையாத வடுவாய் இருந்தது. பயத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்ததும், அவன் ஆண்மகன் அல்ல என கிண்டல் செய்யப்பட்டதும் , பெண்ணைப் போல் ஆடை அணிவிக்கப்பட்டு அந்தப்புரத்தில் கேலி செய்யப்பட்டதும் அவன் மறக்கவில்லை. இப்பொழுதும் அதை நினைக்கையில் அவனது இதயம் வேகமாய் துடித்தது. அந்த சமயத்தில் அவனுக்கு இதில் இருந்து விடுபெற குரான் ஓதுவதே ஒரே வழியாக இருந்தது.
அவுரங்கசீப் சிறுவனாக தன்னைத் தானே காத்துக்கொள்ளும் வலிமையற்றவனாக இருந்த அந்த வருடங்களில் அவனை காத்து நின்றவன் தாரா. தாராவிற்கு தனது இளைய சகோதரனான அவுரங்கசீப் மேல் அத்தனை பாசம் இல்லை என அனைவருக்கும் தெரிந்தாலும், அண்ணனாக தனது கடமையை செய்ய அவன் மறக்கவில்லை.
ஜாபர் கானை நோக்கி “தான் வெற்றிப் பெற்றிருந்தால் என்னை என்ன செய்திருப்பேன் அந்த துரோகி தாரா சொன்னானா ?” என வினவினான்.
“அரசே! உங்களை கண்டம்துண்டமாக வெட்டி ஒவ்வொரு உறுப்பையும் இந்த பேரரசின் ஒவ்வொரு இடத்திற்கு அனுப்பி விடுவேன் என அந்த துரோகி கூறினான்”.
அதைக் கேட்டதும் ஆத்திரம் அவனது இதயத்தை நிரப்பியது. அவனுள்ளே இருந்த மற்ற உணர்வுகளை அது சுத்தமாக அழித்துவிட “இது அவன் என்னுடைய கருணைக்கு உரியவன் அல்ல என்பதை நிரூபிக்கிறது. அவனது தலையை வெட்டி தட்டில் வைத்து கொண்டு வாருங்கள்!” என கோபம் நிறைந்த குரலில் ஆணையிட்டான்.
ஜெபுனிஷாவின் இதயம் சோகத்தில் ஆழ்ந்தது. இனி தாராவின் விதி முடிந்தது என முடிவு செய்தாள்.
இரகசியமாய் அவர்கள் கூடும் அறையில் ஆங்காங்கே சிறிய குடுவைகளில் வைக்கப்பட்டிருந்த ரோஜாவில் இருந்து செய்யப்பட்ட பன்னீரின் நறுமணம் அறை முழுவதும் நிறைத்திருந்தது. மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டதும் அந்த அறையில் மெழுகுவர்திகளின் மணமும் பூக்களின் வாசமும் சேர்ந்து ஒரு நல்ல சூழலை ஏற்படுத்தி இருந்தது. அவளது தனிப்பட்ட கவிதை குழுவின் அங்கத்தினர்களை ஜெபுனிஷா மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுத்து இருந்தாள். அவளது நான்கு சகோதரிகளுடன் அக்பரும் அந்த குழுவில் இருந்தான். பேரரசரால் கவிதை எழுத தடைவிதிக்கப்பட்ட அரசவை கவிஞர்களான மௌலானா அப்துல் காதர் பேதில், கலிம் கஷானி, சாப் தப்ரிஸி, கானி காஷ்மீரி ஆகியோரும் அந்த குழுவில் அடக்கம். ஆனால் இந்த நால்வரும் அனைத்து கூட்டங்களுக்கும் அழைக்கப்படவில்லை.
அந்த அறை முழுவதும் துக்கம் வியாபித்து இருந்தது. தாரா ஷேக் கொல்லப்பட்ட செய்தியை சிறிது நேரம் முன்புதான் அந்தப்புரத்து பெண்கள் அறிந்திருந்தனர். மிக ரகசியமாக வந்த செய்தி, அந்தப்புரத்தில் பெண்களுக்கிடையே கிசுகிசுக்கப்பட்டது. அவனது சகோதரனின் துண்டிக்கப்பட்ட தலை அவன் முன் வைக்கப்பட்டபொழுது, தனது கத்தியைக் கொண்டு அந்த தலையை மீண்டும் மீண்டும் குத்தி சிதைத்தான். பின் அதை அன்பு பரிசாய் சிறையில் இருந்த தனது தந்தைக்கு அனுப்பினான். தனது மகனிடம் இருந்து பரிசு வந்திருக்கிறது என்று கேட்ட ஷாஜகான் மிகவும் மகிழ்வுடன் தட்டை மூடியிருந்த துணியை அகற்றினான். ஆனால் அதிலே துண்டிக்கப்பட்டு சிதைக்கப்பட்ட தாராவின் தலையைக் கண்டு சொல்லவொண்ணா துயரத்தில் ஆழ்ந்தான். தனது தந்தையும் , சகோதரி ஜெகனாராவும் தாராவின் தலையை கண்டு அதிர்ச்சி அடைந்து தரையில் விழுந்து அழுதனர் என்ற செய்தி கேட்டு குரூர புன்னகைப் புரிந்தான் அவுரங்கசீப்.
வெல்வெட் மெத்தையில் அமர்ந்திருந்த ஜெபுனிஷா “நாம் துவங்கலாமா பெண்களே ? யார் முதலில் கவிதை வாசிக்கப் போகிறீர்கள்? என மர்மமானப் புன்னகையுடன் கேட்டாள். அன்று நடந்த சோகமான நிகழ்வு அவளை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்பது போல் நடந்துக் கொண்டாள் .
அங்கிருந்த மற்ற பெண்களும், சேடிகளும் இன்னும் அந்த செய்தியின் தாக்கத்தில் இருந்து வெளி வராததால் பதில் கூறாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தனர். அந்த நிகழ்வு இவளை மட்டும் எப்படி எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என வினவுவது போல் ஒருவரை ஒருவர் ரகசியமாய் பார்த்துக் கொண்டனர்.
தன் அருகே இருந்த திராட்சை ரசத்தை பருகியவள் ,”நீங்கள் யாரும் முன்வராததால் நானே முதலில் கவிதை வாசிக்கிறேன்” என கூறி கவிதையை படிக்கத் துவங்கினாள்.
என் அன்பு உள்ளங்களே விருந்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்
மெழுகுவர்த்திகளை ஏற்றுங்கள்
இறந்தவரின் நினைவாய் ஒன்றிரண்டு கோப்பை
மதுபானம் பருகுங்கள் ..
ஜெபுனிஷா அவர்களது தந்தையால் கொல்லப்பட்டவர்களின் நினைவாய் கவிதை பாடியது அங்கிருந்த மற்றப் பெண்களுக்கு வியப்பளித்தது. அதே சமயத்தில் அவளது முகத்தில் இருந்த புன்னகையின் காரணமும் அவர்களுக்கு புரியவில்லை. தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்த ஜெபோ தன் கவிதையின் வரிகளை அவளே நடித்துக் காட்டத் துவங்கினாள்.
புல்புல் பறவையின் தூக்கம் ரோஜாவின் உயிரை பறிக்கும் பொழுது
கடந்து செல்லும் ஒவ்வொரு மணித்துளியையும் கொண்டாடுங்கள்
வாழ்வின் அனைத்து செல்வங்களையும் கொள்ளையடித்து பாருங்கள்
அங்கிருந்த பன்னீர் நிறைந்த குடுவையிலிருந்து பல ரோஜா இதழ்களை எடுத்து அதை ஜீனத்தின் முன் வைத்தாள் ஜெபுனிஷா. அங்கிருந்த பெண்கள் ஜெபுனிஷா அவர்களுக்குத் தெரியாமல் ஒயினை அருந்தி அதனால் வந்த போதையில் இவ்வாறு நடந்துகொள்கிறாளோ என்ற சந்தேகம் எழுந்தது. திட அறிவுடன் இருப்பவர் இந்த மாதிரி ஒரு வேதனையான நேரத்தில் வாழ்வை கொண்டாட சொல்வார்களா? இவை எதையும் கண்டுக்கொள்ளாத ஜெபுனிஷா , கண்ணீரின் சுவடுகள் பதிந்திருந்த ஜீனத்தின் முகத்தை பார்த்தவாறே கவிதையின் அடுத்த வரிகளை படிக்கத் துவங்கினாள்.
கைது செய்யபட்ட கோழையைப் போல் இருக்காதே
தானியக் குவியல் பஞ்சத்தில் உதவவுது போல்
உன் வலி என்ற நெருப்பில் இருந்து வலிமை பெறு
அவளை சோகத்தை மறந்து வாழ்க்கையை அதன் போக்கில் பார்க்க சொல்பவள் போல் ஜீனத்தின் முகத்தை கையில் ஏந்தி
எந்த மாயமும் உன்னை பயமுறுத்த அனுமதிக்காதே
இவை எல்லாம் கடந்து செல்லக்கூடியவவையே
வாழ்வின் கடுமையான சோதனைகள் எல்லாம்
நீரோட்டத்தில் தோன்றும் சிறு அலைகளே
அங்கே ஒரு திரைசீலையில் வரைந்து தொங்கவிடப்பட்டிருந்த சிங்கத்தின் ஒவ்வியத்தின் அருகே சென்று ஆலம்கீரை பார்த்து சொல்வதை போல்
அதிர்ஷ்டம் என்பது மாறிக்கொண்டே இருக்கும்
அதிர்ஷ்டத்தின் வரம் அல்லது சாபத்தை பற்றிக்
கவலைக் கொள்ளாதே..
கையில் இப்பொழுது இருக்கும்
அதிகாரம் ஒரு கானல் நீரே
அந்த கவிதை வரிகளின் மூலம் வேறு ஏதோ செய்தி சொல்ல வருகிறாளோ ஜெபுனிஷா என அங்கிருந்த பெண்கள் யோசிக்கத் துவங்கினார்கள். அந்தக் குழுவில் இருக்கும் முக்கிய உறுப்பினர்களுக்கு மட்டுமே அந்த செய்தி.
ஒரு நாள் உன் சொந்தங்களே
உன்னை வீழ்த்த திட்டமிடுவதை
ஒரு ஆயுத சந்தையில் நீ காண்பாய்…
அங்கிருந்த பெண்கள் , தங்கள் தலைவியை உற்று நோக்கினார்கள். ஜெபுனிஷாவிடம் ஒரு நீண்ட கால திட்டம் இருந்தது. அவளது சகோதரிகளே அவளது படை என அவளுக்குத் தெரியும். நீண்ட கால திட்டத்திற்கும் பல கூடுதல்களுக்கும் பல்வேறு கவிதைகளுக்கும் இது ஒரு தொடக்கமே. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திட்டமிட்டு அவர்களுக்கு துணையாய் பலரை சேர்த்துக் கொண்டு அரக்கனின் மறு உருவான அவர்களது தந்தையை வீழ்த்துவார்கள். அவளது தந்தையை வீழ்த்தி அவரது பிடியில் இருந்து சாம்ராஜ்யத்தை மிக்க தனது சகோதரிகளின் விசுவாசத்தை அவள் உபயோகித்துக் கொள்வாள். அவர்களின் சகோதரர்களால் முடியாத ஒன்றான அரியணையை கைப்பற்றுவதென்பதை இந்த சகோதரிகள் முடித்துக் காட்டுவார்கள்.
அந்த குழுவை அமைப்பதை பற்றி அவள் சொன்ன அந்த தருணத்தில் அவளது முன்னோர்கள் அங்கே அரூபமாக இருப்பதை உணர்ந்தாள் ஜெபுனிஷா. பாபர், ஹுமாயுன், அக்பர், ஜகாங்கீர் அனைவரும் அவர்களது மனைவி மற்றும் சகோதரிகளுடன் அங்கே இருப்பதை அவளால் பார்க்க முடிந்தது. அந்த தருணத்தில், ஜெபுனிஷா தேசத்தை இருளில் இருந்து மீட்டு மீண்டும் முந்தைய பெருமையை அடைய செய்வேன் என அமைதியாய் சபதம் ஏற்றாள்.
6. முன்மொழிவு
உங்கள் கண்ணீரை என் மேல் மழையாக பெய்ய
செய்யுங்கள் நண்பர்களே.. எரியும் என் இதயத்தை
அணைக்கும் நீரோடையாகட்டும்..
ஒவ்வொரு பெருமூச்சிலும் தீப்பிழம்புகளை
சுவாசிப்பது போல் அந்த வலியின் சூட்டை
உணர்கிறேன் நான்
5 டிசம்பர் 1660
முகத்திரை அணிந்து அவளது அறையின் மாடத்தில் நின்றுகொண்டிருந்த ஜெபுனிஷா அவளது தந்தை பட்டமேற்றதில் இருந்து வெகுவாய் மாறி போயிருந்த தில்லியை பார்த்துக் கொண்டிருந்தாள். தில்லியில் இருந்த இந்து கோவில்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டு அதில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள் கொண்டு அவ்விடத்தில் வெற்றியின் நினைவாய் மசூதிகள் கட்டப்பட்டன. பெண்கள் தலை முதல் கால் வரை மூடப்பட்ட உடை அணிந்து ஆண்கள் துணையுடன் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இசையை வாசிப்பவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்பட்டனர். பாடல்களை பாடுபவர்கள் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். எந்த மதத்து ஆணாக இருந்தாலும் நீண்ட தாடி வைக்க வலியுறுத்தப்பட்டனர். இந்த விதி ஜெபுனிஷாவிற்கு மிகுந்த வேதனை தந்த ஒன்றாக இருந்தது. அளவான தாடி , மீசையுடனும் தசைகளுடனும் ஆண்களின் முகம் இருக்க வேண்டும் என்று நினைத்தாள் அவள். இதை அவளின் பேச்சை கேட்போரிடம் பலமுறை சொல்லி அலுத்துக்கொண்டாள். அவளைப் பொறுத்தவரை இந்த புதிய விதியினால் பெண்களின் கூந்தலை விட ஆண்களின் தாடி நீண்டு இருந்தது.
அவளது தந்தை, பெர்ஷிய இளவரசன் பரூக் மாலிக்குடன் அவளுக்கு திருமணத்தை நிச்சயித்த பொழுது இதுவே அவளுக்கு ஒரு பெரிய பீதியாக இருந்தது. அனைத்து பெர்ஷிய ஆண்களைப் போலவே பரூக் மாலிக்கும் மொட்டையடித்த தலையுடனும், தடித்த மீசையுடனும் இருந்தான்.
“நீ பெர்ஷிய அரசி ஆகி விடுவாய்! அங்கே இவ்வளவு கடுமையான சட்டதிட்டங்கள் கிடையாது” என மகிழ்வுடன் ஜூபைதாத் கூறினாள்.
அதைக் கேட்ட தனது முகத்தில் தோன்றிய புன்னகையுடன் “என் ராஜ்யமும் சபையும் இந்தியாவில் இருக்க நான் எதற்கு பெர்ஷியா செல்ல வேண்டும்?” என கேட்டாள்.
திருமணமான பெண்கள் தந்தை வீட்டை விட்டு கணவனின் வீட்டிற்கு சென்றுதான் ஆக வேண்டும் என்ற வழக்கத்தை அவளுக்கு ஜூபைதாத் நினைவுப்படுத்த விரும்பினாள். ஆனால் அவளது முகத்தில் தெரிந்த உறுதியை கண்டவுடன் அதைப் பற்றி ஏதும் கூறாமல் அமைதியாகி விட்டாள். ஜெபுனிஷாவிடம் வாதம் செய்து வெல்ல இயலாது என்பது அவளுக்குத் தெரிந்த ஒன்று.
ஆனால் பாதர் அதைப் பற்றி எல்லாம் கவலைபடாமல் “இது நமது ராஜ்ஜியம் அல்லவே..அவர் கூறியபடி செயல்படவேண்டிய அவரின் அடிமைகள் அல்லவா?” என அனைவருக்கும் தெரிந்த உண்மையை புதிதாய் கூறுவது போல் பேசினாள்.
அவள் முகத்தை கையில் பிடித்து அவளை கொஞ்சுவது போல் ஆடிய ஜெபுனிஷா “என் அன்பு தங்கையே! நாம் யுத்தத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் புதிய சண்டை நமக்கு காத்திருக்கிறது. பெர்ஷிய அரசிடம் இருந்து கந்தகார் நகரை வாங்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே தந்தை இந்த திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.
முகலாயர்களுக்கும் பெர்ஷியர்களுக்கும் இடையே நடந்த பல யுத்தங்களில் கந்தகார் ஒரு முக்கிய புள்ளியாக இருந்தது. அது அமைந்துள்ள புவியியல் அமைப்பு அதை ஒரு முக்கிய நகரமாக்கி இருந்தது. சீனா, பெர்ஷியா ,மத்திய ஆசியா மற்றும் இந்தியாவில் இருந்து சென்ற வியாபாரிகள் அனைவரும் அந்த நகரத்தின் மூலமாகவே பட்டுப் பாதையை அடைந்தனர். அந்த நகரம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் கையிலேதான் அந்த வர்த்தகமும் இருக்கும். பல தலைமுறைகளாக அந்த நகரம் இருவரிடமும் மாறி மாறி இருந்து வந்தது. பாபரிடம் இருந்து பெர்ஷியர்கள் முதலில் இதைக் கைப்பற்றினர். பின் அக்பர் இந்நகரை வெல்ல , அவர் பின் வந்த ஜஹாங்கீரிடம் இருந்து பெர்ஷியர்கள் வென்றனர். ஷாஜகான் 1638ல் மீண்டும் கைப்பற்றிய அந்நகரை பதினோரு ஆண்டுகள் கழித்து பறிகொடுத்தார். இளவரசனாக அவுரங்கசீப் அந்நகரை மீட்க எடுத்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தது.
குரானின் விதிகளின் படி திருமணம் செய்ய விரும்பும் ஆண் , பெண் வீட்டாருக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும். அவுரங்கசீப் வரதட்சணையாக அந்த புராதன நகர் உட்பட எதை வேண்டுமானாலும் கேட்கலாம்.
“நான் என் தந்தை அவரது குறிக்கோளை அடைய உதவுவேன்”
“அப்படியானால் நீ பரூக் மாலிக்கை திருமணம் செய்து கொள்ளப்போகிறாயா ?” ஜெபுனிஷாவின் திடீர் மனமாற்றம் பற்றி புரியாமல் வினவினாள் பாதர்.
“நான் ஒருவரைப் பற்றி அறியாமல் அவரை மணம் செய்துகொள்ள முடியாது . திருமணத்திற்கு முன்பு அவரை சந்திக்கவேண்டும் என்பதை என் நிபந்தனையாக கூறுவேன்” எனக் கூறி மர்மமாக சிரித்தாள் ஜெபுனிஷா.
“இதற்கு நம் தந்தை ஒத்துக்கொள்வார் என்று எண்ணுகிறாயா ஜெபோ?” சந்தேகத்துடன் கேட்டாள் ஜீனத்.
அவர்களிடம் இருந்து விலகி மாடத்திற்கு சென்று அங்கிருந்து நகரத்தை பார்த்துக் கொண்டே “பெரும்பாலான விஷயங்களுக்கு அவர் அனுமதி தருவதில்லை.ஆனால் காந்தஹாரை தன் வசமாக்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேற இதற்கு அவர் ஒத்துக்கொள்வார்.”
“காந்தஹாரை பெர்ஷியர்களிடம் இருந்து திரும்ப பெறுவதை நினைத்து அப்பா மிகவும் சந்தோஷப்படுவார்” என்றாள் வெகுளியான ஜீனத்.
மனதிற்குள் பல்வேறு கணக்குகளையும் திட்டங்களையும் போட்டுக் கொண்டிருந்த ஜெபுனிஷா அதை ஆமோதித்தாள்.
பல வருடங்களாக பராமரிக்கப்படாமல் பாழடைந்து கிடந்த தோட்டத்தை அரண்மனை தோட்டக்காரர்களும் அவர்களது கீழ் வேலை செய்தோரும் சீரமைக்கத் தொடங்கி இருந்தனர். தலைமை தோட்டக்காரர், தோட்டத்தின் வெளிப்புறத்தை குறிக்கும் விதத்தில் அதற்கு உண்டான கோடுகளை வரைய, மற்றவர்கள் செடிகளையும் புற்களையும் சீராக வெட்டினர். பூக்கும் செடிகளும் மரங்களும் கிராமப்புறத்தில் இருந்து தில்லி கோட்டையின் தோட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன. தோட்டத்திற்கு பல வண்ணங்கள் சேர்க்கும் விதமாய் அவை அமைக்கப்பட்டிருந்தன. பல வண்ண ரோஜா செடிகளும் செறிவூட்டும் விதமாக அமைக்கப்பட்டிருந்தன. மத்தியில் சிகப்பு ரோஜாக்களும் அதன் பின் இளம் சிவப்பு வண்ண ரோஜாக்களும் அதை சுற்றி அழகாய் வெட்டப்பட்ட புதர்களும் அமைக்கப்பட்டன. அங்கே இருந்த புற்களையும் புதர்களையும் தூக்கிய தந்தத்துடன் நிற்கும் யானைகள் போல் தோற்றமளிக்குமாறு வெட்டி இருந்தனர் தோட்டக்காரர்கள். அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாய், பல வண்ணப் பறவைகளும் ,மயில்களும் புறாக்களும் தோட்டத்தில் பறக்க விடப்பட்டன.
கொத்தனார்கள் நடைபாதையில் உடைந்திருந்த பளிங்கு கற்களை மாற்றி அமைத்தனர். வேலை செய்யாமல் இருந்த நீரூற்றுகளை புனரமைத்தனர். மாலை நேரத்தில் தோட்டம் முழுவதும் தீவட்டிகள் ஏற்றப்பட்டன. அவற்றின் ஒளி நீரூற்றுகளின் தண்ணீரில் பட்டு ஒளிர்ந்தன. பல மாதங்களாக நடந்த புனரமைப்பு வேலையின் முடிவில் தில்லி செங்கோட்டை அதன் பழைய அழகை மீண்டும் பெற்று பெர்ஷிய விருந்தினர்களை வரவேற்க தயாராக இருந்தது. பெர்ஷிய விருந்தினர்களின் வருகையை முன்னிட்டு இசையை ஒலிக்க விட போட்டிருந்த தடையை பேரரசர் நீக்கி இருந்ததால் ஆங்காங்கே வாசிக்கப்பட்ட சித்தாரில் இருந்து எழும்பிய இன்னிசை கோட்டையின் அறைகள் முழுவதும் நிரம்பி இருந்தது.
வரும் விருந்தர்களுக்கு விருந்தாக, கோழி, ஆடு மற்றும் ஆட்டுகுட்டி கொண்டு செய்யப்பட்ட விதவிதமான அறுசுவை உணவுகள் தயாரிக்கப்பட்டு தயாராக இருந்தது.
முகத்தை மெல்லிய திரைக் கொண்டு மூடி தனது தந்தையின் அருகே அமர்ந்திருந்தாள் ஜெபுனிஷா. திரை கொண்டு மறைந்திருந்தாலும், பாதம் போன்ற அவளது விழிகள் திரையின் ஊடே மின்னிக்கொண்டிருந்தது. பச்சை மற்றும் நீலம் கலந்த அவளது ஆடை முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிகப்பு நிற மாணிக்க கல் நெக்லஸ் அவள் கழுத்தை அலங்கரித்தது.
“என் பிரியத்துக்குரிய மகளே! இன்று நீ மிக அழகாய் இருக்கிறாய். கடவுள் படைத்த பெண்களிலேயே நீ மிக தான் அழகானவள்”
தன் நோக்கம் நிறைவேற அவள் சம்மதிக்க வேண்டும் என்ற காரணத்தால் எப்பொழுதும் இல்லாத வகையில் மிக அதிகமாக புகழும் தன் தந்தையை எண்ணி புன்னகைத்தாள் ஜெபுனிஷா. அவள் அருகே குனிந்த அவுரங்கசீப் ” பரூக்கிடம் ஏதேனும் குற்றம் இருக்கிறதா?” என அவளுக்கு மட்டும் கேக்கும் வண்ணம் மிக மெதுவாக கேட்டான்.
தன் தலையை குனிந்துக் கொண்டு ” நீங்களே அவரிடம் ஏதும் குற்றம் கண்டுபிடிக்க இயலாத பொழுது நான் எங்ஙனம் கண்டுபிடிக்க இயலும்?” என பதில் கூறினாள்.
அவள் பதிலால் திருப்தி அடைந்த அவுரங்கசீப் அவளை மெல்ல தட்டிக் கொடுத்தான்.
அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு நேரெதிரில் கொஞ்சம் தொலைவில் இளவரசன் பரூக் அமர்ந்திருந்தான். அந்த விருந்திற்கு வருவதற்கு சிறிதும் விருப்பம் இல்லாதவன் போல் காணப்பட்டான் அவன். அவனது தேவைகளை கவனிக்க அகில் கான் நியமிக்கப்பட்டிருந்தான்.
“இளவரசே! இந்த விருந்தும் உணவு வகைகளும் உங்களுக்கு பிடித்திருக்கும் என எண்ணுகிறேன்” என மிக பணிவாக அவனிடம் கேட்டான் அகில் கான்.
சபை நாகரீகம் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவன் முன்பே பெரிதாய் ஏப்பம் விட்டு, ஒரு ரொட்டித்துண்டை எடுத்து அங்கிருந்த மதுவில் நனைத்து தன் வாயில் போட்டுக் கொண்டே ” இது போதுமானதாய் இருக்கிறது” என்று சொன்ன பரூக்கை அசூயையுடன் பார்த்தான் அகில்.
“பெண்கள் எங்கே?” என்று அடுத்து அவன் வினவியது அகில் கானை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
“இந்திய பெண்கள் பெர்ஷிய பெண்களை விட மிக அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்கள் என கேள்விப்பட்டுள்ளேன்”
“மன்னிக்கவும் இளவரசே! இந்தியாவில் விபச்சாரத்தை பேரரசர் தடை செய்து வெகுகாலம் ஆகிறது. திருமணத்தை தாண்டிய உறவு கொள்ள இங்கே பெண்கள் கிடைக்கமாட்டார்கள்” என பொறுமையாக பதில் கூறினான் அகில்.
அவனைத் திகைப்புடன் பார்த்தவாறே எதோ கூற முயன்றவனை அருகில் இருந்த முதியவர் அவன் காதோடு சமாதானம் கூறி அமைதியாக அமரவைத்தார். அதை ஏற்றவன் போல் “விருந்து நன்றாக இருந்தது என்று உங்கள் பேரரசரிடம் கூறு” என்று கூறி அவனை அங்கிருந்து அனுப்புபவன் போல் கைகளால் சைகை காட்டினான்.
மீண்டும் பேரரசர் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்த அகில் கான் , ஜெபுனிஷாவை நோக்கி ஏமாற்றம் கலந்த பார்வையை வீசிட்டு பேரரசரைப் பார்த்து “பேரரசே!தாங்கள் அளித்த விருந்து மிக அருமையாக இருந்ததாக இளவரசர் கூற சொன்னார்” என்று தன் உணர்ச்சிகளை மிக சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு கூறினான்.
“மிக நல்லது. எனக்கு மிக்க மகிழ்ச்சி” எனக் கூறிய அவுரங்கசீப் ஒரு வேலைக்காரனை அழைத்து ஒரு கூடை மாம்பழங்களை இளவரசன் பரூக்கின் இருப்பிடத்திற்கு அனுப்ப உத்தரவிட்டான்.
அகில் கான் அங்கிருந்து கிளம்ப யத்தனித்த தருணத்தில் குறுக்கிட்ட ஜெபுனிஷா “அகில் கான்! பேரரசரின் அனுமதியுடன் எங்களது பிரார்த்தனை குழுவின் அடுத்த கூட்டத்திற்கு இளவரசரை அழைக்க விரும்புகிறேன்” என கேட்டாள்.
அவளது வேண்டுகோளால் ஆச்சரியமடைந்த அவுரங்கசீப் “எதற்காக குழந்தாய்?” என வினவினான்.
அவன் ஒப்புக்கொள்ளும் விதமான பதிலை மனதிற்கு யோசித்த ஜெபுனிஷா “திருமணத்திற்கு இது அவசியம் இல்லை என்றாலும், குரானின் போதனைகளை அவர் எந்த அளவிற்கு அறிந்து புரிந்து வைத்துள்ளார் என்று நான் அறிய விரும்புகிறேன்” என அவன் ஏற்கும் விதத்தில் பதில் கூறினாள்.
சிறிது நேரம் அவளது கோரிக்கையை பற்றி யோசித்த அவுரங்கசீப் இறுதியில் அதற்கு சம்மதம் கூறினாலும், அகில் கான் அங்கே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதிக்க தவறவில்லை.
அதன் பின் அகில் கானை நோக்கி அவனும் இதற்கு சம்மதிக்க வேண்டும் என்ற விதத்தில் பார்த்தாள். முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் இல்லாமல் அவளை பார்த்த அகில் , அரசரை நோக்கி ” உங்கள் விருப்பம் எப்படியோ அதை நிறைவேற்றுவது எனது கடமை” என அரைமனதுடன் சம்மதித்தான்.
கவிஞர்களும், எழுத்தாளர்களும் அதிகமாக கூட்டத்திற்கு வந்திருப்பார்கள் என எண்ணிக் கொண்டு தோட்டத்தில் அமைந்து இருந்த அறைக்கு வந்தான் பரூக். ஆனால் அவனை வரவேற்றது என்னவோ சீராக கத்தரிக்கப்பட்ட புதர்களும், வண்ணமயமான பூக்களுமே. தவறான இடத்திற்கு வந்துவிட்டோம் என்ற ஐயத்தில் திரும்பி செல்ல யத்தனித்தான் பரூக்.
“என்னுடைய பிரார்த்தனை கூட்டத்திற்கு உங்களை வரவேற்கிறேன் இளவரசே!” என அவனை வரவேற்ற வண்ணம் அங்கே வந்தாள் ஜெபுனிஷா. முழு நீள கருப்பு உடையை அணிந்திருந்தாள் ஜெபுனிஷா. உடலை ஒட்டியவாறு இருந்த அந்த உடையில் அவளது உடலின் வளைவுகள் தெளிவாய் தெரிந்தன. அன்று முகத்தை மூடும் திரையையும் அணியவில்லை அவள். அவளது சிவந்த முகத்தை கண்டு வியப்படைந்தான் பரூக். அதைக் கண்டா ஜெபோ புன்னகைத்துக் கொண்டே ” ஏதாவது பிரச்சனையா இளவரசே?” எனக் கேட்டாள்.
அவள் அழகை ஆராதிப்பவன் போல் கீழே உள்ள வரிகளை சொல்லிக்கொண்டே அவள் முன் மண்டியிட்டான்.
நான் மண்டியிட்டு வணங்கும்
கோவிலை விட்டு எங்கும் செல்ல மாட்டேன்
அங்கே தான் நான் பணிபுரிவேன் அதுதான்
என்னுடைய மகிழ்வாகும்
அவனின் பெரிய மீசை அவனின் பாதி முகத்தை மறைக்க தன் முன்னே மண்டியிட்டு தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவனை பார்த்தாள் ஜெபுனிஷா. அவள் மனதினுள் ‘இவ்வளவு பெரிய மீசை வைத்திருப்பவனை முத்தமிடுவது எவ்வளவு அருவருப்பாக இருக்கும்’ என எண்ணி சிரித்துக் கொண்டாள்.
காதல் ஆட்டத்தை எவ்வளவு எளிதாக எண்ணிவிட்டாய் நீ
சொல்லப்படாத ஏக்கங்களைப் பற்றி
உனக்கு என்ன தெரியும் ? – நொறுங்கிய இதயத்தையும் காதல்
காய்ச்சலை பற்றியும் உனக்கு என்ன தெரியும்
ஏனோ அவளுக்கு சுலைமானின் அழகிய முகம் அப்பொழுது நினைவுக்கு வந்தது. அதனுடன், தோட்டத்தில் அவனுடன் நிகழ்ந்த ரகசிய சந்திப்புகளும் மனதில் வெள்ளம் போல் பாய்ந்தது. நறுமணம் கமழும் அந்த தோட்டம் மல்லிகை மரங்களின் கீழே நடந்த அவர்களின் விளையாட்டை நினைவுக்கு கொண்டு வந்தது. ஆனால் இப்பொழுதோ சுலைமானின் இடத்தில் அருவருக்க வைக்கவும் பரூக் இருக்கிறான்.
அவன் தோளை தொட்டு “எழுந்திருங்கள் இளவரசே ! உங்களை போன்று உயரிய பொறுப்பில் இருப்பவர் ஒரு பெண்ணின் முன் மண்டியிட்டுருப்பது அழகல்ல” என்று அவனை எழுப்பினாள்.
அவளுடைய முகத்தில் இருந்து கண்களை விலக்க இயலாமல் மெதுவாய் எழுந்து நின்றான் பரூக். அவளுடைய மெல்லிய ஆடை அசையும் பொழுதெல்லாம் மெல்ல மயங்கினான் அவன்.
“நீங்கள் உண்மையிலேயே என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா இளவரசே?”
உணர்வுகளின் எழுச்சியில் கட்டுண்டிருந்த பரூக்கின் வாயில் இருந்து எந்த வார்த்தைகளும் வெளிவரவில்லை. ஆனாலும் சம்மதத்திற்கு அறிகுறியாய் அவன் தலையை மட்டும் அசைத்தான்.
“நீங்கள் எனக்கு உண்மையாக இருப்பீர்களா?”. உண்மையில் அவன் அப்படி இருக்கப்போவதில்லை எனத் தெரிந்தும் கேள்வியின் அவசியம் கருதி கேட்டாள். மீண்டும் அவன் ஏதும் சொல்லாமல் ஆமோதிப்பாய் தலையை மட்டும் அசைத்தான். அவனை மயக்கும்விதமாய் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே, அவன் விரல்களை தன விரல்களுடன் கோர்த்து, அவன் உள்ளங்கையில் தன் கட்டைவிரலால் வட்டமிடத் துவங்கினாள். அவன் உடலில் பொங்கி பெருகிய உணர்வுகளை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருந்த பரூக் , பெருமூச்சுகளால் உடலின் நிலையை வெளிப்படுத்தினான்.
“நீங்கள் என்னை நேசித்து போற்றுவதாய் சத்தியம் செய்தால், உங்களை திருமணம் செய்ய சம்மதித்து உங்களுடன் மட்டும் என் உடலை பகிர்ந்து கொள்வேன்”
சொல்லவொண்ணா உணர்வுகள் உடலில் பெருக்கெடுக்க பரூக்கின் உடல் மெல்ல நடுங்கியது.
“சத்தியம் செய்வீர்களா?”
இம்முறையும் அவனிடம் இருந்து வேறெந்த வார்த்தையும் வரவில்லை. வார்த்தைகளால் தன்னை வெளிப்படுத்தும் நிலையில் அவன் இல்லை. எனவே மெல்லிய தலை அசைப்பே மறுபடியும் அவனது பதிலாய் வந்தது.
“என் தந்தையிடம் இந்த திருமணத்திற்கு சம்மதிப்பதாக நான் கூறுகிறேன்”
அவனை நெருங்கிய ஜெபுனிஷா அவனது கன்னத்தில் முத்தமிட்டாள் . அவளால் அவனது உதட்டில் முத்தமிடுவதைப் பற்றி எண்ணிக் கூட பார்க்க இயலவில்லை.
அவனை முழுவதும் தன் வசப்படுத்திய ஜெபுனிஷா “வேறு யாரும் பார்க்கும் முன் இங்கிருந்து சென்று விடுங்கள்” என்று அவனை வழியனுப்பினாள்.
மெல்லிய தடுமாற்றத்துடன் கிளம்பினான் பரூக். அவன் செல்வதையே பார்த்திருந்த ஜெபுனிஷாவிற்கு அந்த நடையின் அர்த்தம் புரிந்தது. ஆண்களிடம் அவள் ஏற்படுத்தும் விளைவின் வெளிப்பாடு அது. பல ஆண்கள் தங்களை தளர வைக்கும் உச்சகட்டத்தை அவளால் எட்டியிருந்தனர். புன்னகைத்தவாறே அங்கிருந்து கிளம்பினாள் ஜெபுனிஷா. போகும் பொழுது அருகில் இருந்த புதரில் மறைந்திருந்த அகில் கானிற்கு கைகளால் சைகை காட்டி சென்றாள். அவனுடைய உதவி இல்லாமல் அவளது இந்த திட்டம் நிறைவேறி இருக்காது என்பது அவளுக்கு நன்கு தெரியும்.
பெர்ஷியர்கள் தில்லி வந்தபொழுதே காந்தஹாருக்கு செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்யத் துவங்கிவிட்டான் அவுரங்கசீப். மற்றவர்களை தன் வயமாக்கும் தன் திறமை மேல் அவன் கொண்டிருந்த அபார நம்பிக்கையால் ஜெபுனிஷா திருமணத்திற்கு ஒத்துக்கொள்வாள் என்று அவன் திடமாக நம்பினான். தன் முன் விரிக்கப்பட்டிருந்த பேரரசின் வரைபடத்தை பார்த்தவாறே காந்தஹாரும் இணைந்துவிட்டால் தன் அரசு எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்துக் கொண்டிருந்தான். ‘இப்பொழுது பேரரசு தலையில்லா பறவையை போல் இருக்கிறது. காந்தஹார் தன் பேரரசின் தலை’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். ‘பரூக் திருமணத்திற்கு சம்மதிக்காவிடில் அல்லது பெர்ஷிய பேரரசர் காந்தஹாரை தர மறுத்தால் ?’ அவன் மனதில் திடீரென தோன்றிய இந்த சந்தேகமே அவன் இதயத்தை பிளந்துவிடும் போல் இருந்தது. ‘இல்லை. அவ்வாறு நடக்காது. காந்தஹார் என்னுடையது. இறைவன் அவன் பெயரால் அதை நான் ஆள வேண்டும் என்று எழுதிவிட்டான்’ என தனக்குத்தானே சமாதானமும் சொல்லிக் கொண்டான்.
“பேரரசே ! மஹாராணி ரவுஸனாரா உங்களை சந்திக்க வருகிறார்” என காவலன் அறிவித்தான்.
அவுரங்கசீப் தலையசைத்தவாறே இருக்கையில் இருந்து எழுந்து தன் சகோதரியை வரவேற்றான்.
“அல்லாஹ் தன் கருணையை காட்டி நம்மை உயர்த்தி உள்ளான். நம் எதிரிகள் சிறையில் உள்ளனர். நாடு பாதுகாப்பாய் உள்ளது. மிக விரைவில் தில்லி, ஜெபுனிஷா பரூக் திருமணத்தை கொண்டாட இதுவரை யாரும் கண்டிராத அளவு வாணவேடிக்கையால் ஒளிரும்.”
“ஜெபுனிஷா திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாளா?” பணியாள் கொடுத்த சர்பத்தை பருகியவாறே சந்தேகத்துடன் அவனை வினவினாள் ரவுஸனாரா.
“இன்னும் இல்லை. ஆனால் , என்னுடைய எண்ணமே அவளது எண்ணம் என எனக்கு அவள் உறுதி கூறி இருக்கிறாள்”
“உன்னுடைய எண்ணம் என்ன?”
தன் முன்னே இருந்த மேஜையில் தன் முஷ்டியால் குத்திய அவுரங்கசீப் “எது எனக்கு சொந்தமானதோ அதை திரும்பப் பெறுவது” என ஆக்ரோஷத்துடன் கூறினான்.
அவனுடைய மூதாதையர்கள் காந்தஹாரை ஆண்டனர். அதனால் அது அவனையும் சொந்தமானது என பல ஆண்டுகளாய் அவன் எண்ணினான். இளம் வயதில் இளவரசனாக காந்தஹாரை கைப்பற்ற இயலாமல் போனது அவனது உள்ளத்தை இன்றும் அலைக்கழித்துக் கொண்டிருந்தது. ஆனால், அப்போதைய பேரரசர், அவன் கேட்ட அளவு படைகளையும், தளவாடங்களையும் அவனக்குத் தரவில்லை. ஆனால், தோல்விக்கு அவனையே பொறுப்பாக்கி அரசவையில் இருந்து வெளியேற்றினார். அன்றிலிருந்து, யானை மேல் அமர்ந்து காந்தஹாரில் நுழைவது மட்டுமின்றி எப்படி தான் முகலாயர்களுக்கு சொந்தமானதை மீண்டும் கைப்பற்றினேன் என தந்தைக்கு காட்டவேண்டுமென்பது அவனது கனவாய் இருந்தது.
“மிகவும் அவசரப்படாதே. வரதட்சணையை உறுதி செய்வதற்கு பல நாட்கள் ஆகும். முதலில், திருமணம் உறுதி செய்யப்படவேண்டும். அதுவே இன்னும் நடக்கவில்லை. அதன்பின், திருமண செலவுகள் மற்றும் வரதட்சணை பற்றிய ஒப்பந்தம் ஏற்படவேண்டும். அதன்பின்தான், நீ கந்தஹாரை வரதட்சணையாக கேட்க இயலும்.”
தன்னையும் தன் புத்திசாலித்தனத்தையும் மிகவும் குறைவாக எடைபோடும் தன் சகோதரியை முட்டாளைப் பார்ப்பது போல் பார்த்தான் அவுரங்கசீப். ” தவறு. ஏற்கனவே ஏற்பாடுகள் துவங்கிவிட்டன. நான் ஏற்கனவே திருமண தேதியை உறுதி செய்து வரதட்சணைக்கு உண்டான நிபந்தனைகளை குறிப்பிட்டு பெர்ஷிய பேரரசருக்கு தூதுவரை அனுப்பிவிட்டேன்.”
“என்னை மன்னியுங்கள் பேரரசே! ஆனால், ஜெபுனிஷா திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கும் முன் இந்த ஏற்பாடுகளை செய்வது நம்மை மிகப் பெரிய பிரச்சனையில் விடக்கூடும். அவள் வஞ்சகமும் தந்திரமும் நிறைந்தவள். அவள் ஒத்துகொள்ளாவிடில் இந்த திருமணம் நடைபெறாது.”
கண்ணில் கோபம் மின்ன ” என் சொந்த மகளை கண்டே நான் பயப்பட வேண்டும் என சொல்கிறாயா நீ ?” என ஆத்திரத்துடன் வினவினான் அவுரங்கசீப்.
இந்த விஷயத்தை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என எண்ணிக்கொண்டாள் ரவுஸனாரா. தன் சகோதரனின் கோபம் தன் மீதே திரும்புவது என்பது அவளால் நினைத்துக்கூட பார்க்க இயலாத ஒன்றாகும். “நான் அவ்வாறு சொல்லவில்லை அரசே! ஆனால் எச்சரிக்கையுடன் இருப்பது நமக்கு நல்லதவல்லவா? ஜஹானாராவும் இவளும் ஒரே மாதிரியானவர்கள்தான்.”
அவுரங்கசீப் நீண்ட பெருமூச்சொன்றை விட்டான். ரவுஸனாராவை தனது சொந்த தாய் போல் நேசித்தான். ஆனால் அவளோ அடுத்து பட்டத்திற்கு வரவேண்டியது தாராதான் என உறுதியாக இருந்தாள் . அதனாலேயே அவளையும் தனது தந்தையும் சிறையில் அடைத்தான். கண்டிப்பாக அவள், இவனது கொள்கைகளையும் ஆட்சியையும் அங்கீகரிக்கப்போவதில்லை என்பது அவனுக்கு தெரிந்த ஒன்று. பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்தவனை ரவுஸனாராவின் குரல் நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.
“சுல்தானை நீங்கள் எப்பொழுது விடுதலை செய்யப்போகிறாய் என அறிந்து போகவே நான் வந்தேன்”
அவளது கேள்வியால் ஆத்திரம் அடைந்த அவுரங்கசீப் “ஒரு பொழுதும் அது நடக்காது. மீண்டும் என் முன்னிலையில் அந்த துரோகியின் பெயரை சொல்லாதே” எனக் கூறி அவள் போகலாம் என்பதற்கு அடையாளமாய் சைகை செய்தான்.
அங்கிருந்து செல்வதற்கு பதில் அவனருகே வந்து அவன் தோள் மேல் தன் கரங்களை வைத்த ரவுஸனாரா ” அவன் துரோகி என்பது எனக்குத் தெரியும். ஆனால் உனக்கு வாரிசு தேவை. உனக்கு இரு மகன்கள் தான். அதில் முவாசம் ஒரு கோழை” என அவனை சாந்தப்படுத்தும் விதமாய் பேசினாள்.
“எனக்கு நான்கு மகன்கள் உள்ளனர் என்பது நீ மறந்துவிட்டாய்”
“எனக்குத் தெரியும். ஆனால் அதில் ஆஸமிற்கு ஒன்பது வயதுதான் ஆகிறது. அக்பரோ ஆறு வயது சிறுவன். இருவருமே உன் வாரிசாக முடியாது இப்பொழுது”
“நான் வாரிசை நியமிக்க வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் என்னை அவரது சொர்க்கத்திற்கு அழைத்து கொள்ளும் காலத்தில் வாரிசிற்கான போட்டி நடக்கும். யார் பலசாலியோ அவர்கள் வெற்றி பெறுவார்கள். கிட்டினால் அரியணை இல்லையேல் சவப்பெட்டி”
“சுல்தான் சிறையிலேயே தன் காலத்தை கழிக்கப்போகிறான் என்றான் ஆஸம் அடுத்த வாரிசாக நியமிக்கப்பட வேண்டும் என மஹாராணியாக நான் எண்ணுகிறேன். முவாசம் ஒரு கோழை மேலும் பலகீனமானவன். அவன் அரசனானால் இந்த சாம்ராஜ்யம் துண்டு துண்டாக சிதறிவிடும். மேலும், அவன் நம் முகலாய ரத்தத்தில் பிறந்தவன்”
சுல்தானும், முவாசமும் அவுங்கரங்கசீப்பின் ஹிந்து மனைவியான நவாப் பாய்க்கு பிறந்தவர்கள். அதனாலேயே முஸ்லீம்களுக்கு அவர்கள் மேல் வெறுப்பு இருந்தது. ஆஸம் மற்றும் அக்பர் , அவனது பெர்ஷிய மனைவியான தில்ராஸிற்கு பிறந்தவர்கள். அதனால் அவர்களுக்கு அதிக மதிப்பு கிடைத்தது.
சிறிது நேரம் அதை பற்றி சிந்தித்த அவுரங்கசீப் , அவளது யோசனையை ஏற்கும் விதமாய் தலையசைத்து ” அதற்கான நேரம் வரும்பொழுது கண்டிப்பாக ஆஸம் அடுத்த வாரிசாக அறிவிக்கப்படுவான். ஆனால் இது அதற்கு உகந்த நேரம் அல்ல. இப்பொழுது நான் கந்தஹாருக்கு செல்வதை பற்றி திட்டம் தீட்ட வேண்டும்.”
“அரசே! ஜெபுனிஷாவிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவள் நம்பிக்கைக்கு உரியவள் அல்ல. நீங்கள் சுலைமானை கொலை செய்ததில் இருந்தே கண்ணில் ரத்த வெறியுடன் சுற்றுகிறாள். அவள் உங்களுக்கு தீங்கு இழைக்கும் முன் அவளை கைது செய்து சிறையில் தள்ளுவது உத்தமம்.”
“முட்டாள்தனமாக பேசாதே! அவள் என் மகள். அவளை நான் பரிபூர்ணமாக நம்புகிறேன். என்னுடைய சொல்லை பின்பற்றுவதாக எனக்கு வாக்கு தந்திருக்கிறாள் அவள்.”
அதே நேரத்தில் காவலன் வந்து “அரசே! இளவரசி ஜெபுனிஷா தங்களை காண வந்துகொண்டிருக்கிறார்கள்” என அறிவித்தான்.
நான் உன்னிடம் சொன்னேனே என்பதை போல் ரவுஸனாராவை பார்த்த அவுரங்கசீப் , காவலனைப் பார்த்து அவளை உள்ளே அனுமதிக்க கூறினான்.
மிக மொத்தமான ஆடை அணிந்து முகத்தை கருப்பு துணியால் மூடியிருந்த ஜெபுனிஷா , உள்ளே நுழைந்தவுடன் அவுரங்கசீப் முன் குனிந்து கைகளை முகத்திற்கு நேராய் உயர்த்தி அவர்களின் முறைப்படி வணக்கம் தெரிவித்தாள்.
“என்ன விஷயம் குழந்தாய்?” என அவளை விசாரித்தான்.
தன் முகத்திரையை இருந்த சிறு இடைவெளி வழியாக ரவுஸனாராவை முதலில் பார்த்த ஜெபுனிஷா பின் அவுரங்கசீப்பை நோக்கி “நீங்கள் சொன்ன விஷயத்தை பற்றி சிந்தித்தேன். பின் எனது அரசருக்காகவும் நாட்டிற்காகவும் இளவரசர் பரூக்கை திருமணம் செய்ய சம்மதிக்கிறேன்” என தனது முடிவைக் கூறினாள்.
“இறைவன் மிகப் பெரியவன்!” எனக் கூறிய அவுரங்கசீப் தனது கைகளை உயர்த்தி இறைவனுக்கு தனது நன்றியைக் கூறினான். பின் தனது மகளை ஆரத் தழுவினான். பின் அவளுக்கு பின்னிருந்த தனது சகோதரியை பார்த்து “பார்த்தாயா என் மகளை? அவள் என் தலையை உயர்த்த செய்தாள், நீ நினைத்தது போல் தலையை துண்டிக்கவில்லை” என தந்தைக்கே உரிய கர்வத்துடன் கூறி மீண்டும் ஒரு முறை தன் மகளை அணைத்துக் கொண்டான்.
“பேரரசே! நான் ஒருபொழுதும் உங்கள் தலை கவிழ காரணமாக இருக்க மாட்டேன். யார் அவ்வாறு சொன்னது?” என கேள்விக் கேட்டுக் கொண்டே தனது அத்தையான ரவுஸனாராவை உற்று நோக்கினாள். அவளது ஒளிரும் சாம்பல் நிற வண்ணம் கொண்ட கண்கள், ரவுஸனாராவின் பழுப்பு கண்களை சந்தித்த பொழுது இரு கூரிய வாள்கள் சந்தித்துக் கொண்டன. ஒருவருக்கொருவர் விரோதி என்பதை இருவருமே அறிவர்.
பரூக், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை பெர்ஷிய பாலைவனத்தில் கழித்தவன். அங்கே ஒரு நாள் முழுவதும் பிரயாணித்தால் மட்டுமே பசுஞ்சோலைகளும் தண்ணீரும் அவன் கண்களில் தட்டுப்படும். அதனால், அவுரங்கசீப் அவனை தங்கவைத்த இடம் சொர்க்கம் போல் தோன்றியது. அரசனின் இருப்பிடத்திற்கு எதிரே இருந்த ஒரு மாளிகையில் தங்கியிருந்தான் அவன். அவனிருந்த இடத்தை சுற்றி இருந்த நறுமணம் வீசும் மல்லிகை மற்றும் ரோஜா செடிகளும், நீரூற்றுகளும் அவனது மனதை கவர்ந்து விட்டது. பெர்ஷியாவில் இருந்த அவன் அரண்மனையை விட இது சிறப்பானது என அவன் எண்ணிக் கொண்டான்.
தனிமை அவனுக்கு கசக்க, அவனது தேவைகளை நிறைவேற்ற நியமிக்கப்பட்டிருந்த பணியாளை அழைத்தான். ஆனால், அவனுக்கு பதில் பதினான்கு வயது சிறுவன் ஒருவன் வந்து நின்றபொழுது வியப்படைந்தான்.
“யார் நீ ? வழக்கமாய் பணிபுரிபவன் எங்கே?”
“அவருக்கு காய்ச்சல். நான் அவருடைய மருமகன். எனது பெயர் கரீம்.”
தன் முன் நின்றிருந்த கரீமை பரூக்கின் கண்கள் ஆராய்ந்தன. மேல் உடை ஏதும் அணியாமல், இடுப்பில் ஒரு துணியும், கால் சராயும் மட்டும் அணிந்திருந்த கரீம், ஒல்லியாக இருந்தான்.
“மாளிகையில் வேறு யாரேனும் உள்ளனரா?”
வேறு இல்லை என்பதாய் தலையை மறுப்பாக ஆட்டியவன் “வயதான சமையல்காரி மட்டுமே இருக்கிறார். அவரும் உறங்க சென்றுவிட்டார். நீங்கள் இந்த நேரத்தில் குளிப்பீர்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். குளியலுக்கு தயார் செய்யவா?” என பணிவாய் குனிந்து தரையை பார்த்தவாறே கேட்டான் கரீம்.
“நான் இரவில் குளிப்பேன் என்று உனக்கு யார் சொன்னது ? நான் காலையில் மட்டுமே குளிப்பேன்” அவனை கேள்வியுடன் பார்த்துக்கொண்டே பதில் கூறினான்.
“தில்லியின் உஷ்ணமானது மிக கடுமையானது. அது தோலை உலர்ந்து போக செய்துவிடும். இரவில் உறங்குவதற்கு முன்பு ஒருமுறை குளித்தால் உடலின் உஷ்ணம் குறைந்து குளுமை பெறும். மேலும், என்னிடம் விசேஷமான எண்ணெய் உள்ளது. அதைத் தடவி உங்கள் உடலை பிடித்துவிட்டால் தோல் அதன் மிருதுத்தன்மையை இழக்காது” என்று விளக்கினான் கரீம்.
அவன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்த பரூக் அவனிடம் மெல்ல மயங்கினான். அந்த சிறுவன் அவனைத் தனிமையில் விட்டுவிட்டு விலகி சென்றால் நன்றாக இருக்கும் என எண்ணினான். முன்பு ஜெபுனிஷாவை தனிமையில் சந்தித்தபொழுது ஏற்பட்ட கிறக்கத்தை இப்பொழுது மீண்டும் உணர்ந்தான் பரூக். கரீமின் உடலை அவன் கண்கள் ஆராய அவன் இதயமோ தாறுமாறாய் துடிக்கத் துவங்கியது. அவன் வணங்கும் அல்லாஹ் குறுக்கிட்டு அவனை காப்பாற்ற மாட்டாரா என தவித்தான். அவனை அவனிடமிருந்தே காப்பாற்ற எந்த சக்தியும் வரவில்லை. கரீம் , பரூக்கின் ஆடைகளை அகற்றி அவன் உடலை பிடித்துவிட தயாரானான். பரூக்கின் உடலை கரீமின் மென்மையான கைகள் பிசையத் துவங்க , பரூக்கின் உடல் நடுங்கத் துவங்கியது.
இளவரசனின் பின்புறம் நின்றிருந்த கரீம் மெல்ல புன்னகைத்தான். இளவரசனின் பலவீனம் என்ன என்று அவன் கண்டுகொண்டிருந்தான்.
மறுநாள் காலையில் பரூக் முழித்தபொழுது கரீம் அங்கில்லை. பரூக்கின் மனதை மனச்சோர்வு வெள்ளமென ஆட்கொள்ள, படுக்கையில் இருந்து எழக் கூட எத்தனிக்கவில்லை. தனது பெற்றோருக்கு அவன் செய்து கொடுத்திருந்த வாக்குறுதியை மீறி மீண்டும் ஒரு இளம் சிறுவனை அவன் தொட்டுவிட்டான். தனது செயலை யாரும் பார்க்காது இருக்க வேண்டும் என்பதே அப்பொழுது அவனது வேண்டுகோளாய் இருந்தது.
7. தோல்வியுடனான ஒரு சந்திப்பு
துன்பப்படும் ஆத்மாக்களே உங்களுக்கான ஆறுதல்
உங்கள் காயங்களை கிழித்து இனி ரத்தம் சிந்தாதீர்கள்
10 ஆகஸ்ட் 1661
வானத்தை இருண்ட கரும் மேகங்கள் ஆக்ரமித்து எப்பொழுதுவேண்டுமானாலும் மழை பொழியலாம் என்பது போல் இருந்தது. தன் அறையில் படுத்துக்கொண்டு விட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஜெபுனிஷா. அவள் தூங்கி பல நாட்கள் ஆகி இருந்தன. தூக்கம் தன்னை தீண்டாதற்கு என்ன காரணம் என்றும் அவளுக்குப் புரியவில்லை. பெர்ஷிய இளவரசனுடனான திருமணப் பேச்சு துவங்கி ஒரு மாதம் ஆகி இருந்தது. அவனுடைய கீழ்த்தரமான செய்கையை பற்றிய செய்தி வெளியே பரவத் துவங்கியவுடன் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருந்தது. அந்த செய்தி மற்றவர் அனைவருக்கும் ஏமாற்றத்தையும் துக்கத்தையும் தர, ஜெபுனிஷாவிற்கோ அது மகிழ்ச்சையை தந்தது. பேரரசர் மிகவும் விரும்பிய பரிசை அவர் கை அருகே கொன்று சென்று தட்டிவிட்டதில் ஒவ்வொரு நாளும் அவள் வெற்றிப் பெற்றது போல் உணர்ந்தாள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் தனது கவிதை குழுவின் கூட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தாள். அதன் உண்மையான நோக்கம் வெளிவராமல் கவிதைக் குழுவாய் தொடர்ந்தது. அவளுக்கு பருக்கை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் என்றும் இருந்ததில்லை. ஒரு பெர்ஷிய இளவரசன் எதற்கு இவ்வளவு தூரம் தள்ளி வந்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது அவளின் முதல் கேள்வியாய் இருந்தது. பெர்ஷியாவில் அழகிகளுக்கு பஞ்சமில்லை. அதே போல், கந்தஹார் மற்றும் பல புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் அவர்கள் வசம் இருக்கையில் இந்த திருமணத்தின் மூலம் அவர்களுக்கு என்ன இலாபம் என்பதே அவளது முக்கிய சந்தேகமாய் இருந்தது. பேரரசர் அளித்த விருந்தின் பொழுது, பரூக் பெண்களைப் பற்றி விசாரித்ததை அகில் கான் அவளிடம் கூறி இருந்தான். அதைக் கேட்டவுடன் புத்திசாலியான ஜெபுனிஷா அவனை வீழ்த்த தன் திட்டத்தை வகுத்தாள். அவள் இரகசியமாக சேர்த்து வைத்திருந்த மது மற்றும் பெண்களை அகில் கான் அனுப்பியதாக கூறி பரூக்கிற்கு அனுப்பினாள். பேரரசரின் நடவடிக்கைகள் பிடிக்காத அகில் கானும் அவளின் திட்டத்திற்கு ஒத்துழைத்தான்.
சில நாட்கள் கழித்து பெண்களுடன், மதுவும் , போதைப் பொருட்களும் பரூக்கின் மாளிகைக்கு சென்றன. மாலையில் துவங்கிய அந்த ஒழுக்கக்கேடான விருந்து இரவில் வெகு நேரம் கழிந்து முற்றுப் பெற்றது. ஆனால் , மதுவுடன் போதைப் பொருட்களையும் எடுத்துக் கொண்டதால் தன்னிலை தவறிய பரூக் , தன் முன் அரை நிர்வாணமாய் இருந்த பல நாட்டு அழகிகள் ஒருவரையும் தொடவில்லை. அவன் குழுவில் இருந்த மற்ற நபர்களே அந்த சுகத்தை அனுபவித்தனர். அவன் குழுவில் இருந்த ஒருவன் பரூக்கின் ரகசியத்தை அந்த பெண்களிடம் பகிர்ந்து கொண்டான். பரூக் பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும், அவனுக்கு சிறுவர்கள் மீதுதான் அதிக ஆசை என்று.
இந்த செய்தியை கேட்டவுடன், தன்னுடன் அவன் இருந்த தருணங்களில் அவன் நடந்துகொண்ட விதத்தை ஒப்பிட்டுப் பார்த்து வியப்படைந்தாள் ஜெபுனிஷா. இருந்தும், அவனது ஆசைக்கு ஏற்ப ஒரு சிறுவனை ஏற்பாடு செய்து அவனிடம் அனுப்பி வைத்தாள். அதற்கு அடுத்த நாள், முத்து மசூதிக்கு சென்று அங்கிருந்த முல்லாக்களிடம் தான் செய்த தவற்றை அவன் சொல்ல வேண்டும் என கற்பிக்கப்பட்டிருந்தான். அதே போல், மசூதிக்கு சென்று அங்கிருந்த முல்லாக்களின் காலில் விழுந்து தனக்கும் இளவரசனுக்கு இடையே நடந்த விஷயத்தை ஒப்புவித்தான் கரீம்.
இந்த விஷயம் வெளிய கசிந்த பிறகு வந்த நாட்கள் ஜெபுனிஷாவிற்கு மிகவும் இன்பகரமான நாட்களாய் இருந்தன. அவள் வகுத்த திட்டம் இம்மி பிசகாது நடந்தேறியது. கரீம் வெற்றிகரமாய் பரூக்கை தன் வசம் இழுத்தான். பரூக் அவமானப்படுத்தப்பட்டான். பின், முல்லாக்களிடம் சென்று நடந்ததைக் கூறினான். குரானிலாழ்ந்த நம்பிக்கை கொண்ட முல்லாக்கள், திருமண ஒப்பந்தத்தை எதிர்க்க அவர்களை மீறி அவுரங்கசீப்பால் ஏதும் செய்ய இயலவில்லை. உடனடியாக பரூக் மற்றும் அவனுடன் வந்தவர்களை நாட்டை விட்டு வெளியேற சொல்லி திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்தான்.
துவக்கத்தில் இருந்து இறுதி வரை, சதுரங்க ஆட்டத்தின் காய்களை போல ஒவ்வொருவரையும் தனது திட்டத்திற்கு ஏற்ப கட்டுப்படுத்தினாள் ஜெபுனிஷா. இயற்கையின் விதிகளுக்கு ஏற்ப நகரும் மனிதர்களை மனதில் வைத்தே இந்த ஆட்டத்தை கண்டுபிடித்தவர்கள் காய் நகர்த்தும் முறைகளை வகுத்தனரோ என வியந்தாள். ஒவ்வொரு காயும் ஒவ்வொரு ஒழுங்கிலே மட்டுமே நகரும். குறுக்குவாட்டில் நகரும் காய்கள் நேராக செல்ல இயலாது அதே போல் நேரே செல்லும் காய்கள் குறுக்குவாட்டில் நகர இயலாது. குதிரையானது இந்த இரண்டு போலும் இல்லாமல் நகரும். மனிதர்களும் இதிலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான எண்ணங்களும் நடத்தையும் கொண்டவர்கள். அவர்களின் எண்ணங்களை அறிந்து அவர்களை தமக்கு ஏற்ப நடக்கவைப்பதில்தான் ஒருவரது உயர்வும் திறமையும் அடங்கி இருக்கிறது.
தனக்கு நெருங்கிய ஒருவர் இறந்தது போல் அவளது தந்தை விரக்தியில் வீழ்வதை அனுதினமும் கண்டு ரசித்தாள். ஒரு காலத்தில் மிருகத்தை போல் இருந்தவன் சரியாக உணவு உண்ணாமல் பலவீனம் அடைந்து கொண்டு வருவதை கண்டாள். அவன் உடல் பலவீனம் அடைய அடிக்கடி காய்ச்சலும் வரத் துவங்கியது. அரச சபை நடத்துவதை நிறுத்திவிட்டு தனது அறைக்குள்ளேயே முடங்கினான் அவுரங்கசீப். அவன் பலவீனம் அடைய அடைய , சுலைமானின் இறப்பினால் தான் இழந்த சக்தி மீளுவதை போல் உணர்ந்தாள். வெளியே அனைவரின் பார்வைக்கு அதிர்ச்சி அடைந்து சோகத்தில் இருப்பது போல் நடித்தாலும் உள்ளுக்குள் அவள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நிதனாமாக தனது அடுத்த திட்டங்களைத் தீட்ட துவங்கினாள். “இறந்து போ கொடியவனே! உன் இறப்பிற்காய் காத்திருப்பது என்னை சாக அடிக்கிறது” என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.
தனது தம்பிக்கு கடிதம் எழுத தீர்மானித்தாள்.
சகோதரா முவாசம்,
கவிதைக் குழுவில் இருப்பதைக் குறித்து நீ பெருமைப்படுகிறாய் என நான் அறிவேன். நீ இல்லாதபொழுது நடந்த கூட்டத்தில் நான் வாசித்த கவிதையை உனக்கு அனுப்ப விரும்புகிறேன். நீ இல்லாமல் அந்தக் கூட்டம் முழுமை அடையவில்லை.
நம்பிக்கை குறையும் பொழுது அனைத்து இன்பங்களும் நின்று போகின்றன
அந்த நேரத்தில் பலமும் செல்வமும் உபயோகமற்றவை
அந்த நேரம் வரும்பொழுது யாரை நான் நம்புகிறேனோ
அவன் என்னை புறக்கணித்தால் என் கோவில் எறிந்துவிடும்
சிங்கம் அதன் வாழ்வின் இறுதியில் தூங்கிக்
கொண்டிருக்கும் நேரத்தில்
நீ நதியை போல் பாய வேண்டும்
அதன் உற்பத்தியாகும் இடத்தில் இருந்து பலத்தை பெற்று..
இந்தஇடத்தில் எழுதுவதை நிறுத்தி யோசித்தாள். அவன் இந்தக் கவிதையின் அர்த்தத்தை புரிந்து கொள்வானா ? அவளை யோசனையைப் புறக்கணித்தால் அவளின் கோபத்தை சந்திக்க வேண்டிவரும் என்பதை அறிந்து கொள்வானா ?அதே போல் தூங்கும் சிங்கம் என்பது இறப்பை நோக்கி பயணிக்கும் அவர்களது தந்தையை குறிக்கிறது என்பது அவனுக்கு புரியுமா ? அது புரிந்தால் உடனடியாக தில்லியை நோக்கி வருவானா ? அவளுள் பல சந்தேகங்கள் எழுந்தாலும் அவள் எழுதிய கடிதத்தில் முத்திரை இட்டு , பத்திரப்படுத்தி அவளின் அடிமைப் பெண்ணை அழைத்து அதை முவாசமிடம் சேர்ப்பிக்க ஆணையிட்டாள். ரவுஸனாராவும் அவுரங்கசீப்பின் இறப்பை எதிர்நோக்கி காத்திருப்பதை அவள் அறிவாள். அவளின் நோக்கம் ஒன்பது வயதான ஆஸமை அரியணையில் அமரவைக்க வேண்டும் என்பதே. ஆனால் உண்மையில் அரசாள்வது ரவுஸனாராவாகத்தான் இருக்கும். அதனால் கோழையாக இருந்தாலும் பாக்கி இருக்கும் ஒரே மகனான முவாசமை ஆதரிக்க முடிவு செய்தாள் ஜெபுனிஷா.
தன் கையை தட்டி பணிப்பெண்ணை அழைத்தாள். “ஒரு கோப்பை இஞ்சி தேனீரை எடுத்து வா. மிகவும் சோம்பலாகாவும் தூக்கம் வருவது போலவும் உள்ளது” என ஆணையிட்டாள்.
சிறிது நேரத்தில் அந்தப் பெண் சூடான தேனீரை அவள் முன் வைத்தாள் . அவளின் நடுங்கும் கைகளை கவனித்த ஜெபுனிஷா , அந்தப்புரத்தில் பணிபுரியும் பெண்களின் நிலையை எண்ணி தன்னுள் வெதும்பினாள். சூடான அந்த தேனீரை பருக பருக அவளுள் சோம்பல் நீங்கி புது உற்சாகம் பிறந்தது. தூக்கமற்ற இரவிற்கு பின், இந்த தேனீர் அவளுக்கு மிகத் தேவையான ஒன்றாய் இருந்தது.
திடீரென அருகில் இருந்த அறையில் இருந்து பெண்கள் உரத்த குரலில் அழுகின்ற ஓசை எழுந்தது. அந்த ஓசையினால் திடுக்கிட்ட ஜெபுனிஷாவின் கைகளில் இருந்த கோப்பையில் இருந்த தேனீர் அவள் மேல் சிந்தி அவளது தோலை சுட்டது. இதனால் எரிச்சல் அடைந்தவள் எதற்கு இந்த அழுகை என்று கண்டுபிடிக்க பக்கத்துக்கு அறைக்கு விரைந்தாள். அங்கே சில பெண்கள் தங்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழ, இன்னும் சில பெண்களோ தங்கள் கை வளையல்களை தரையில் நொறுக்கிக் கொண்டிருந்தனர். அந்த துக்ககரமான செய்கை ஜெபுனிஷாவிற்கு வேறெதையோ உணர்த்த “என்ன நடந்தது?” என்று கேட்டாள்.
“இளவரசியே! பேரரசர் மயக்கமடைந்து விட்டார். அவரின் மயக்கத்தை தெளிவிக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை” என அங்கிருந்த பணிப்பெண் நடந்ததை விவரித்தாள்.
அந்த செய்தியை கேட்டவுடன் உடனடியாக பேரரசரின் அறையை நோக்கி ஓடினாள் ஜெபுனிஷா. அவர்கள் அணிந்திருந்த கருப்பு அங்கி படபடக்க மற்றப்பெண்களும் அவள் பின்னே ஓடினர். ஆனால் அங்கிருந்த தலைமை அலி அவர்களை அறைக்குள் அனுமதிக்கவில்லை. சென்ற அனைவருமே அறைக்கு வெளியேயே நிறுத்தப்பட்டனர்.
“என் தந்தைக்கு என்ன ஆயிற்று? உடனே எனக்கு சொல்ல வேண்டும்.” அழுகையின் நடுவே கேட்டாள் ஜெபுனிஷா. அரண்மனை ஹக்கீம் அசைவற்று பிரேதம் போல் இருந்த அவளது தந்தையின் மணிக்கட்டைப் பிடித்து நாடியை பார்ப்பதை அவள் கவனித்தாள். அவள் தந்தை இறந்து விட்டதாக அவர் அறிவிக்க வேண்டும் என மனதிற்குள் எண்ணினாள். தன் தம்பிக்கு ஒரு வாரம் முன்பே கடிதம் அனுப்பாத தன் முட்டாள்தனத்தை எண்ணி தன்னைத்தானே நொந்து கொண்டாள். இப்பொழுது அவளது கடிதம் கிடைக்கும் முன் பேரரசரின் இறப்பு செய்தி அவனை சென்றடையும். அவன் வரும் முன் ஆஸமை அடுத்த சக்ரவர்த்தியாக அறிவித்துவிடுவார்கள் என பயந்தாள். இந்த நினைவே அவளுக்கு அழுகையை உண்டுபண்ணியது. “அவர் என் தந்தை. நான் அவர் அருகில் இருந்தாக வேண்டும். என்னை உள்ளே அனுமதியுங்கள்” மீண்டும் தலைமை அலியிடம் சண்டை போட்டாள்.
“இளவரசியே! மருத்துவரை நீங்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். இப்பொழுது நாம் அவரை தொந்தரவு செய்யக் கூடாது”
அதே நேரத்தில் அகில் கான் வேகமாய் வந்தான். அவனை மட்டும் அரசரின் அறைக்குள் அனுமதித்தனர். அதைக் கண்ட ஜெபுனிஷா “அவரின் சொந்த பெண்களாலான எங்களையே அனுமதிக்கவில்லை . அகில் கானை மட்டும் எப்படி உள்ளே அனுமதிக்கிறீர்கள்” என மீண்டும் சண்டையிடத் துவங்கினாள்.
“இளவரசியே! அவர் பேரரசரின் நம்பிக்கைக்குரிய அந்தரங்க ஆலோசகர். ஆனால் நீங்கள் அவ்வாறு இல்லை” அவளுக்கு பதில் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் அந்த தலைமை சேடி.
அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்த அகில் கான், அவர்களை ஆறுதல் படுத்தும் குரலில் “பெண்களே, அமைதியாக பிரார்த்தனை செய்யுங்கள். நான் உள்ளே சென்று பேரரசரின் உடல்நிலையை அறிந்து வந்து சொல்கிறேன்” எனக் கூறி சென்றான்.
ஒரு வில்லாளியின் பார்வை நகரும் இலக்கை விட்டு விலகாமல் தொடர்வதைப் போல , ஜெபுனிஷாவின் பார்வை அகிலை பின்தொடர்ந்தது. அகில், மருத்துவர் அருகில் குனிந்து அவரிடம் எதையோ கேட்டதையும் , அதற்கு மருத்துவர் பதில் அளித்ததையும் கூர்ந்து கவனித்தாள். பின், அகில் கான், தன் கையை பேரரசரின் நெற்றியில் வைத்துப் பார்த்த பின், ஜெபுனிஷாவை அவன் பார்வை சந்தித்தது. அவளுடைய உள்ளம் எழுப்பியக் கேள்வி அறிந்தவனாய் எதிர்மறையாக தலை அசைத்தான். தந்தை இன்னும் இறக்கவில்லை என்று கூறுகிறான் என ஜெபுனிஷா புரிந்து கொண்டாள். ஆனால் மற்றவர்களுக்கோ அது நிலைமை மோசமாக இருப்பதாக அவன் கூறுவது போல் இருந்தது. பேரரசர் பிழைத்து விடுவாரோ என ஒரு கணம் யோசித்தாள் ஜெபுனிஷா.
அகில் மீண்டும் பெண்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்தான். வந்தவனின் தலை நிமிராமல் நிலத்தை பார்த்துக் கொண்டிருக்க அங்கே ஒரு சோகமான அமைதி குடியேறி இருந்தது. “பேரரசர் பக்கவாதத்தால் தாக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் மற்ற எந்த புலன்களும் வேலை செய்யவில்லை . மற்ற யாரையும் அவரால் அடையாளம் கூட காண இயலுமா என்பதே சந்தேகம்தான்”.
இதை அவன் கூறியவுடன் “அப்பா!!” என ஜெபுனிஷா கதற துவங்கினாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகி கன்னங்களை நனைக்க, தரையில் வீழ்ந்து மார்பை அடித்துக் கொண்டு அழுகத் துவங்கினாள்.” எனக்கு மட்டும் ஏன் இப்படி தொடர்ந்து நடக்கிறது? முதலில் என் திருமணம் நின்றது. இப்பொழுது எனது தந்தை நோய் படுக்கையில். கடவுளே! என் குடும்பத்தை காப்பாயாக!”.
துக்கத்தில் பீடிக்கப்பட்டவள் போல ஜெபுனிஷா தொடர்ந்து நடிக்க மற்றப் பெண்கள் அவளை அடக்க முயன்றனர். “அகில் கான் ! என் தந்தையை காப்பாற்ற இயலுமா ? இவ்வாறு நோய்வாய்ப்பட்டவர்கள் மீண்டு வந்துள்ளளனரா? மருத்துவர் என்ன கூறுகிறார் ?. என்னிடம் மறைக்காமல் கூறு” என்று அவன் கண்ணை நேருக்கு நேர் பார்த்து கேட்டாள்.
தன்னிடம் என்ன பதிலை அவள் எதிர்பார்க்கிறாள் என புரிந்து கொண்டவனாய் “இளவரசியே ! இப்பொழுது கூறுவது கடினம். பேரரசரின் வயதிற்கு இத்தகைய பக்கவாதத்தில் இருந்து மீண்டு வருவது கடினம் என்பதே மருத்துவரின் கருத்து” என பதில் அளித்தான் அகில்.
மனதிற்குள் மகிழ்ச்சி தாண்டவமாடினாலும் வெளியே துக்கத்தால் பீடிக்கப்பட்டவள் போலவே நடந்து கொண்டாள். அவள் தொடர்ந்து கதறி அழ அவளது சகோதரிகள் அவளை அங்கிருந்து அவள் அறைக்கு இழுத்து செல்லத் துவங்கினர். அவள் அங்கே இருப்பது மருத்துவருக்கு இடையூறாய் இருக்கும் என அவர்கள் எண்ணினர். அவளோ தன் நாடகத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தாள். மற்றவர்களுக்கு கேக்குமாறு “கடவுளே! தந்தையைக் காப்பாற்று!” என கதறினாலும் மனதிற்குள் மகிழ்வாய் “கடவுள் பெரியவர்” என சொல்லிக் கொண்டாள்.
அங்கிருந்து ஜெபோவை அவளது அறைக்கு கட்டாயமாய் இழுத்து சென்றனர் அவளது சகோதரிகள். “அபினை கொண்டு வா. ஜெபுனிஷா தூங்க வேண்டும். அவளால் இந்த செய்தியை கட்டாயம் தாங்க இயலாது. இப்படியே இருந்தால் அவளுக்கு பைத்தியம் பிடித்துவிடும்” என பணிப்பெண்ணுக்கு ஆணையிட்டாள் ஜூபைதாத்.
ஆடைகள் சலசலக்க யாரோ வரும் ஓசை கேட்டது. ரவுஸனாரா இவளது அறை நோக்கி வந்துகொண்டிருப்பதை ஜெபுனிஷா பார்த்தாள். உடனே ஜூபைதாதின் கைகளை இறுக்கிப் பிடித்தவள் “நீ கூறியதை மீண்டும் உரக்க கூறு. அந்த பேயின் காதுகளில் அவை விழ வேண்டும்” என்றாள்.
“அபினை கொண்டு வாருங்கள். ஜெபுனிஷா கட்டாயம் உறங்க வேண்டும். அவள் தந்தையின் உடல் நிலை கண்டு பித்துபிடித்தவள் போல் இருக்கிறாள்” என மீண்டும் உரக்கக் கூறினாள்.
அருகில் கூட இருந்தவர்கள் நம்பவேண்டும் என்பதற்காக தொடர்ந்து அழுது கொண்டிருந்தாள் ஜெபுனிஷா. ஜூபைதாதும் மிஹிருனிஷாவும் அவளது முகத்தை துடைத்து ஆறுதலாய் தட்டிக் கொடுத்தனர். பணிப்பெண்கள் அவசரமாய் கதவை சாற்றி தாளிட்டனர். மெதுவாய் அழுகை சப்தம் தேய்ந்து மெல்லிய சிரிப்பொலி எழும்பியது அங்கே.
“நாம் ஜெயித்து விட்டோம்! கொடுங்கோலனிடம் இருந்து நாட்டை மீட்டுவிட்டோம்!” என மிஹிருனிஷாவும் மற்ற சகோதரிகளும் சந்தோஷப்பட்டனர்.
ஆனால் ஜெபுனிஷா அவர்களை எச்சரிக்கும் குரலில் “இன்னும் நாம் வெல்லவில்லை! நாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. இன்று காலைதான் தில்லிக்கு விரைந்து வருமாறு முவாசமிற்கு கடிதம் அனுப்பினேன். ஆனால் அந்த கடிதம் அவனிடம் சென்று சேரும் முன் சக்ரவர்த்தியின் உடல்நிலை பற்றிய செய்து சென்று சேர்ந்துவிடும். ஜூபைதாத்! உன்னிடம் இருக்கும் அலிகளில் ஒருவரிடம் செய்தி கொடுத்து அனுப்பு. அவனுக்கு சொல் . அவன்தான் இப்பொழுது நாட்டின் சக்ரவர்த்தி என்றும், மிகவும் தாமதிக்காமல் அவன் தில்லி வரவேண்டியது அவசியம் என்றும் சொல்லி அனுப்பு”
“ஆக்ரா சிறையில் இருக்கும் நம் தாத்தாவிற்கு சக்ரவர்த்தி மரணப்படுக்கையில் இருக்கிறார் எனவும் உண்மையான சக்ரவர்த்தியாக அவர் மீண்டும் பொறுப்பேற்க இதுவே தருணம் என்றும் செய்தி அனுப்பு. அவர் மீண்டும் சக்ரவர்த்தி ஆகிவிட்டால், முவாசமை தனது வாரிசாக முறைப்படி அறிவித்துவிடுவார்” என மிஹிருனிஷாவிற்கு அடுத்த வேலையை கொடுத்தாள்.
இவ்வாறு வேலைகள் மற்றவர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டபின் ஜூபைதாத் , வரும் நாட்களில் ஜெபுனிஷா என்ன செய்யப்போகிறாள் என கேட்டாள்.
“நான் போதை மருந்தின் வீரியத்தில் உறங்கிக் கொண்டிருப்பேன். மறந்துவிட்டீர்களா ?”
ஜெபுனிஷாவும் இந்த கேள்வி மற்ற சகோதரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியது.
“நீங்கள் எனக்கு தந்த அபினின் மயக்கத்தில் நான் தூங்கிக் கொண்டிருப்பேன் என அவர்கள் நம்புவார்கள். அப்பொழுதுதான் என்னை யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். அனைவரும் அப்பாவின் உடல்நிலையிலே தங்கள் கவனத்தை செலுத்தும் பொழுது, நாம் ஒருபுறம் ஷாஜஹான் இருக்கு மற்றொருபுறம் முவாசம் இருக்க தில்லி செங்கோட்டையை கைப்பற்றுவோம்.”
ரவுஸனாராவிற்கு என்ன திட்டம் வைத்துள்ளாய் என மிஹிருனிஷா கேட்டாள்.
“நம் திட்டங்களை தோற்கடிக்கக் கூடிய ஆள் ஒருவர் உண்டு என்றால் அது ரவுஸனாராதான். அவள் நடவடிக்கைகளை நாம் கூர்ந்து கவனித்து வரவேண்டும்”
“அதை என்னிடம் விட்டுவிடுங்கள். அவளிடம் தீர்க்க வேண்டிய பழங்கணக்கு ஒன்று இருக்கிறது. அவள் தினமும் யாருடன் படுக்கிறாள் என்று எனக்குத் தெரியும். அவள் தினமும் என்ன செய்கிறாள் என்று நான் அறிந்து சொல்கிறேன்” என அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள் பத்ருனிஷா.
தோல்வியுடனான உங்கள் சந்திப்பிற்காக
உங்கள் சொந்த இரத்தங்களே திட்டமிடுகிறார்கள்
மிக துணிச்சலான வில் சண்டையை
நீங்களும் ஒரு நாள் சந்திப்பீர்கள்
அவர்களின் கவிதைக் குழுவின் முதல் சந்திப்பில் அவர்கள் வாசித்த கவிதையை மீண்டும் படித்தபடி அன்றைய கூட்டம் முடிந்தது.
8. கடிதம்
அன்பின் பாதை நீண்டு இருண்டு உள்ளது….
அதில்தான் எத்தனை அபாயங்கள்
30 செப்டம்பர் 1661
தனிப்பட்ட சந்திப்பிற்கான அந்த பெரிய அறையின் இடது புறம் முல்லாக்களும், வலதுபுறம் அவரவர் அதிகாரத்திற்கேற்ப வரிசையில் அமைச்சர்களும் நின்றுகொண்டிருந்தனர். வழக்கமான அவர்களின் பழக்கத்திற்கேற்ப ஜெபுனிஷாவும் அவளது சகோதரிகளும் திரைக்குப் பின் நின்றனர். ரவுஸனாரா அவுரங்கசீப்பிற்கு பதிலாய் அவனது சிம்மாசனத்தில் அமர அனுமதிக்கப்பட்டதை கண்டு குமுறிக்கொண்டிருந்தாள் . கோபத்தில் அவள் உதடுகள் துடிக்க, அவள் மனமோ அவளது அத்தையின் மீதான வெறுப்பில் எரிந்துக் கொண்டிருந்தது.
“பேரரசர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு அவரது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அல்லாஹ் அவர் மேல் கருணை செலுத்தி இன்னும் பல வருடம் அவரை உயிரோடு வைத்திருக்கட்டும். அவர் மீண்டு வரும்வரை, அவருடைய பிரதிநிதியாக , சாம்ராஜ்யத்தின் அனைத்து விவகாரங்களிலும் அவர் விரும்பியவாறு நான் முடிவெடுப்பேன்” என்று ரவுஸனாரா அறிவித்தாள்.
“அரசியே! உங்கள் ஆட்சியை நாங்கள் ஏற்றுக் கொள்ள இயலாது. ஒரு பெண் பேரரசரின் இடத்தில் இருந்து ஆட்சி புரிய இயலாது.” என முல்லாக்களின் தலைவனான பைராம் கான் முதல் எதிர்ப்பை தெரிவித்தான்.
” என் சகோதரன் என்னை அரசியாக அறிவித்துள்ளபொழுது நான் ஏன் ஆட்சி புரிய இயலாது ?” என கண்களில் கோபம் மின்ன தன்னை எதிர்த்தவனை கேட்டாள்.
“உங்களை அரசியாக மட்டுமே அறிவித்தார். அவரது பிரநிதிநிதியாக அல்ல”
“அரசு ஆணைகளில் முத்திரை போதிப்பதும், பிரபுக்களுக்கு மானியம் வழங்குவது மட்டுமே உங்கள் வேலை. நீங்கள் அவரது பிரதிநிதி அல்ல”
முதல் முறையாக முல்லாக்களின் மதவெறியை கண்டு மகிழ்ச்சி கொண்டாள் ஜெபுனிஷா.
“வாரிசை அழைத்து வாருங்கள்” என தங்கள் தலைவனுக்கு ஆதரவாய் மற்ற முல்லாக்களும் அங்கே குரல் எழுப்ப துவங்கினர்.
“அமைதியாக இருங்கள்! சக்ரவர்த்தி வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை!”
“அரசியே ! நீங்கள் அனுமதித்தால் நான் இதற்கு ஒரு தீர்வு சொல்கிறேன். பேரரசருக்கு நான்கு மகன்கள் இருக்கிறார்கள். முகலாயர்களின் வழக்கப்படி அந்த நால்வரில் ஒருவரே வாரிசாக இயலும். நாம் அனைவரும் கலந்து பேசி அவர்களில் ஒருவரை வாரிசாக தீர்மானிப்போம்” என பிரதம அமைச்சரான ஜாபர் கான் ஒரு தீர்வைக் கூறினார்.
ஜாபர்கான் மேல் ஜெபுனிஷாவிற்கு மரியாதை இருந்தது. பிரதம அமைச்சராக நீண்ட நெடிய அனுபவம் கொண்டிருந்த ஜாபர்கான், அவள் அறிந்த மற்ற எவரையும் விட புத்திசாலி என்றே அவள் கணித்தாள். அதே நேரத்தில், இப்பொழுது சபையில் நடப்பது ஆஸமை பதவியில் அமர்த்த ரவுஸனாரா நடத்தும் நாடகமே என்பதையும் அவள் அறிவாள்.
“அப்படியானால் அடுத்து யார் வாரிசாக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மொஹமத் சுல்தான் ஒரு துரோகி. எனவே அவன் அரசாள இயலாது. இளவரசன் முவாசம் ஒரு கோழை. அவனைப் போன்ற ஒரு நபரை அரியணையில் அமர்த்துவது தவறாக முடியும். மீதி இருக்கும் இருவரில், அக்பர் மிக சிறியவன். எனவே இளவரசன் ஆஸம் தான் அடுத்த வாரிசாக இயலும். அவனை வாரிசாக நியமித்தப் பின் அமைச்சர்களும், முல்லாக்களும் அவனுக்கு பயிற்சி அளித்து அவனது தந்தைக்கு இணையாய் மாற்றலாம்” என தன் மனதில் போட்டு வைத்த திட்டத்தை கிடைத்த சந்தர்ப்பத்தில் அழகாய் விவரித்தாள் ரவுஸனாரா.
ஜெபுனிஷா கோபத்தின் உச்சியில் இருந்தாள். ஆனால் தனது அத்தையின் தந்திரத்தை பாராட்டாமல் இருக்க இயலவில்லை. பிறரை ஈர்க்கக்கூடிய மற்றும் திறமை உள்ளவனாக ஆஸமை காட்டி மற்றவர்களின் எதிர்ப்பை மழுங்கடித்து விட்டாள். முல்லாக்கள் மற்றும் அமைச்சர்களை அவனது ஆலோசகராக இருக்க சொன்னதின் மூலம் அவர்களின் எதிர்ப்பையும் நீர்த்து போக செய்துவிட்டாள். இந்த இடத்தில் தான் பேசாவிட்டால் தோல்வியையே சந்திக்க வேண்டிவரும் என உணர்ந்த ஜெபுனிஷா “ஆஸமை நியமிப்பது மிகப் பெரிய அழிவையே நமக்குத் தரும். அவன் அரசவை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளும் வயதை இன்னும் எட்டவில்லை. மேலும், அவனது இளம் வயதின் காரணமாய் அவனை யார் வேண்டுமானாலும் தங்கள் பக்கம் ஈர்க்க இயலும்” என திரைக்குப் பின்னிருந்து தன் எதிர்ப்பை கூறினாள்.
ரவுஸனாராவிற்கு பேசியது யார் எனத் தெரிந்தாலும் குரல் வந்த திசை நோக்கி தன் தலையை திருப்பினாள்.
தான் பேசியது அங்கிருப்பவர்களின் மனதில் பதிய வேண்டுமென்பதற்காக தனது பேச்சை சில நிமிடங்கள் நிறுத்திய ஜெபுனிஷா மீண்டும் தொடர்ந்தாள்.” நமக்கு உடனடியாக பேரரசர் வேண்டும். அரியணை காலியாக இருந்தால், பெர்ஷியர்கள் நம் மீது தாக்குதல் தொடுக்கலாம். மேலும், தெற்கே உள்ள அரசுகள் மீண்டும் நமக்கு எதிராக புரட்சிகளை துவங்கலாம். நாம் இன்னும் வலிமையாகத்தான் இருக்கிறோம் என்பதை உலகிற்கு காட்டுவது அவசியம்.”
“உங்கள் யோசனைதான் என்ன இளவரசியே?” ஜாபர் கான் வினவினார்.
“நாம் உடனடியாக பேரரசர் ஷாஜஹானை அரியணையில் அமர்த்த வேண்டும். நமது அணியில் இருக்கும் அனைவருக்கும் அது நம்பிக்கையை தரும். குறிப்பாக, எனது தந்தையின் கொள்கை காரணமாய் விலகி நிற்கும் முஸ்லீம் அல்லாத அரசர்கள் மீண்டும் நம்முடன் இணைவார்கள். எல்லாவற்றிலும் மேலாக, நம் அண்டை நாடுகளுக்கு நாம் சொல்லும் வலிமையான செய்தியாக இது இருக்கும். எனது தாத்தா ஒரு சிறந்த போர் வீரர் என்பதை யாரும் மறக்கவில்லை.”
“ஒரு பொழுதும் அதை அனுமதிக்க இயலாது” என வேகமாய் பதிலடி தந்தாள் ரவுஸனாரா. ” பேரரசை ஒழுக்கக்கேடு மற்றும் பாவத்தின் நரகமாய் மாற்றியவர் அவர். முகலாயர்களின் பெயருக்கு இழுக்கு இழைத்தவர்”
முல்லாக்களும் அவள் கூறியதை ஆமோதித்தனர். இதை முன்பே எதிர்பார்த்திருந்த ஜெபுனிஷா, அவளின் மற்றொரு யோசனையை அங்கே முன்வைத்தாள்.”மற்றுமொரு வழி இருக்கிறது. முவாசத்தை இடைக்கால அரசராக நியமிக்கலாம். அரசனாக ஏற்ற வயது அவனுக்கு. தகுந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் என் தந்தை திரும்பி வரும்வரை அவன் அரசாளட்டும்.”
“முவாசம் கோழை மற்றும் பலவீனமானவன்” என இதற்கும் எதிர்ப்பை தெரிவித்தாள் ரவுஸனாரா.
” ஆம். அதனால்தான் அவன் பேரரசரை விட பலம் பெற்றுவிடுவான் என நாம் பயப்படத் தேவையில்லை. பேரரசர் உடல்நலம் சீரடைந்து வந்தவுடன் அவர் அரச பொறுப்பேற்றுக் கொள்வார். முவாசம் அவனது வழக்கமான பணிகளைத் தொடரலாம்.”
“இந்த யோசனை செயல்படுத்தக் கூடிய ஒன்றல்ல” என்று அதை நிராகரிக்க முயன்றாள் ரவுஸனாரா.
பிரதம அமைச்சரான ஜாபர் கான் மீண்டும் இடையில் புகுந்தார்.
“அரசி ! இளவரசி ! நம்மிடையே விவாதிக்க இது நேரமில்லை. இவ்விடத்தில் அரசர் தேர்வு செய்வதாக இருந்தால் அவர் என்ன செய்திருப்பார் அல்லது என்ன சொல்லி இருப்பார் என யோசியுங்கள்” என்று சமாதானம் செய்வதாக பேசினார்.
“அவர் ஆஸம் தான் அடுத்து பொறுப்பேற்க வேண்டும் என எண்ணினார். என்னிடம் அதற்கான அத்தாட்சி உள்ளது ” என்று ரவுஸனாரா சொன்னதைக் கேட்ட ஜெபுனிஷா அதிர்ந்து போனாள். இதுவும் அவளது சூழ்ச்சிகளில் ஒன்றாக இருக்குமோ என சிந்திக்கத் துவங்கினாள்.
“தனக்கு ஏதேனும் ஆகும் பட்சத்தில் தனது மகன்களில் தனக்கு அடுத்தப்படியாக பொறுப்பேற்க ஆஸம்தான் தகுதி பெற்றவன் என அவர் எழுதி தனது கை ரேகையை ஒப்பமாக பதித்த சான்றிதழ் என்னிடம் உள்ளது. இதை பொதுவில் சொன்னால், மற்ற மகன்களால் ஆஸமிற்கு கெடுதல் நேருமோ என்றெண்ணி வெளிப்படுத்தவில்லை.”
“அப்படியானால், இப்பொழுதைய பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது. அந்த சான்றிதழை அரசவையில் காட்டுங்கள் அரசி. அப்பொழுது ஆஸம் அடுத்த வாரிசாக இருக்க எங்களது சம்மதம் கிட்டும். இல்லையேல், நாங்கள் முவாசத்தை இங்கே வரவழைக்க வேண்டி இருக்கும்” என முல்லாக்களின் தலைவன் பைரோன் கூறினான்.
அங்கே அதுவரை நடந்த நிகழ்வுகள் ஜெபுனிஷாவிற்கு குழப்பத்தையே தந்தது. ஆனால் இப்பொழுது அவளுக்கு அனைத்தும் தெளிவாக புரிந்தது. இளவரசன் ஆஸமை , ஒரு பொம்மையாய் அரியணையில் அமர்த்தி , தானே அரசாள முயல்கிறாள் ரவுஸனாரா என்பது வெளிப்படையாக தெரிந்தது. ஆனால், ஜெபுனிஷாவினால் முல்லாக்களை தனது யோசனைக்கு சம்மதம் தெரிவிக்க வைக்க இயலவில்லை. முவாசம் அரசவையில் நேரடியாய் வந்து தான் தனது தந்தையின் இடத்தில் இருந்து அரசாள இயலும் என நிரூபிக்கவேண்டும். அதே சமயம், ரவுஸனாரா கூறிய அந்த போலி சான்று அரசவைக்கு வந்து சேராமல் தடுக்க வேண்டிய கடமையும் அவளுக்கு இருந்தது.
“அந்த கடிதம் கண்டிப்பாகபோலியாகத்தான் இருக்க வேண்டும். கண்டிப்பாய் , ஒரு சிறுவனை தன்னுடைய இடத்திற்கு வாரிசாக நம் தந்தை நியமிக்க வாய்ப்பே இல்லை” தனது சகோதரிகளுடன் அமர்ந்திருந்த ஜூபைதாத் கூறினாள்.
அவளும் மற்றவர்களும் கூறியதை பொறுமையாக கேட்டுக்கொண்டே தனது அடுத்த நகர்வை திட்டமிட்டுக் கொண்டிருந்தாள் ஜெபுனிஷா. “அவனை தன் வாரிசாக நியமிக்க அப்பா எப்பொழுதுமே நினைத்ததில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. தான் தோல்வியே சந்திக்காதவன் என்றே அப்பா நினைத்துக் கொண்டிருந்தார்.” கையில் இருந்த பழரசத்தை அருந்திக் கொண்டே கூறினாள் ஜெபுனிஷா. “கண்டிப்பாக அப்படி ஒன்று சான்று இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இருந்தால் ? பத்ருனிஷா , ரவுஸனாராவை கண்காணிக்கும் பொறுப்பை நீதான் ஏற்றுக் கொண்டாய். உண்மையில் அப்படி ஒரு கடிதம் இருக்கிறதா என உறுதி செய். அப்படி இருந்தால், அவள் அதை அரச சபையில் காட்டும் முன் நாம் அபகரிக்க வேண்டும். அப்படி ஒன்று இல்லையெனில், அவள் அவ்வாறு அதை உருவாக்க திட்டமிட்டுள்ளாள் என்பதை நாம் அறிய வேண்டும்.”
“கவலைப்படாதே சகோதரி! உண்மை என்னவென்பதை நான் கண்டறிவேன். எனக்கும் அத்தைக்கும் தீர்க்கப்படாத ஒரு பழைய கணக்கு ஒன்றுள்ளது” .அமைதியாக அதே சமயத்தில் கண்களில் உறுதியுடன் பத்ருனிஷா கூறினாள்.
அவள் அறையில் ஒரு தீபம் மட்டும் எரிந்து கொண்டிருக்க , தனிமையில் அமர்ந்திருந்தாள் பத்ருனிஷா. மெல்லிய இரவு ஆடையில் இருந்தவள், அதன் மேல் பல சால்வைகளை போட்டுக் கொண்டிருந்தாள். சுடர் விட்டு எரிந்துக் கொண்டிருந்த தீபத்தில் தன் உள்ளங்கையைக் காட்டிக் கொண்டிருந்தாள் . ஏனோ அன்று அவள் மனம் ஒரு நிலையில் இல்லை. அவள் கண்களில், இளம் வயது ரவுஸனாரா , தன் காதலர்களுடன் படுக்கையில் இருக்கும் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போனது. அதில் இருந்து தப்பிப்பது போல், தன் கண்களை சிமிட்டிக் கொண்டாள். கருத்த மீசையும் தாடியும் கொண்ட ஒருவன் பத்ருனிஷா அருகில் குனிந்து “வாயைத் திற” என சொல்லும் காட்சி ஒன்று கண்ணில் வந்து சென்றது. மீண்டும் கண்களை சிமிட்டி அந்த காட்சி மறைந்து போகாதா என நினைத்தாள்.
“ரவுஸனாரா! பத்ருனிஷாவை பார்த்துக் கொள். தில்ராஸ் உடல் நிலை சரி இல்லாதவள். நான் மீண்டும் தக்கணாத்தின் மீது படையெடுத்து செல்கிறேன்.” தந்தியின் குறை காதில் எதிரொலிக்க, கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது அவளுக்கு.
“கவலைப்பட வேண்டாம் சகோதரரே! அவள் என்னிடம் பாதுகாப்பாய் இருப்பாள்” என்று பத்ருனிஷா அவளை அழைத்துச் சென்றாள்.
மனதில் கோபம் கொந்தளிக்க, ஒளிர்ந்து கொண்டிருந்த சுடரைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் காதுகளில் மீண்டும் அந்த குரல் எதிரொலித்தது.
“வாயைத் திற”
“நான் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். இதை பார்க்க எனக்கு விருப்பமில்லை”
“பார்க்காவிடில் எப்படி நீ கற்றுக்கொள்வாய்?”
“வேண்டாம்… வேண்டாம்..”
“வாயைத் திற”
பத்ருனிஷா அழத் துவங்க அங்கிருந்த மற்றவர்கள் சிரிக்கும் சப்தம் அறையை நிறைத்தது.
“இதுதான் ஆண்களின் உலகில் நாம் ஆட்சி செலுத்தும் முறை. இப்பொழுது நான் சொல்லியவாறு செய்”
“முடியாது”
அவளின் நீட்டப்பட்ட கைகள் அருகிலிருந்த கிண்ணங்களை தட்டிவிட அதில் இருந்த பாதாம்,முந்திரி போன்றவை தரையில் சிதறின. அவளுக்கு மூச்சிரைக்க துவங்க, கண்களிலோ கண்ணீர் பெருக்கெடுத்து ஓட நிதானத்திற்கு வர முயற்சித்தாள். தான் காயப்பட்ட பெண் என்பதை அவள் அறிந்தே இருந்தாள். ரவுஸனாராவுடன் இருந்த காலம், அவளை மாற்றி இருந்தது. முதலில், தான் ரவுஸனாராவின் மோசமான வாழ்க்கை முறை மேல் காட்டிய விருப்பமே இதற்கு காரணம் என தன்னையே நொந்து கொண்டாள். அவுரங்கசீப் அவளை ரவுஸனாராவின் பாதுகாப்பின் கீழ் விட்டு செல்லும் முன்பே, அவளின் நகைகள், அவளது மை அணிந்த கண்கள் மற்றும் அவளின் ஆளுமை இவளை ஈர்த்திருந்தது. மற்றவர்களை விட, இவள் மேல் அன்பை பொழிந்தாள் ரவுஸனாரா. இதனால்தான் ரவுஸனாரா தன் மேல் அன்பை பொழிந்தாரா ? இது என்னுடைய தவறுதானா? நான் இதை எதையும் விரும்பவில்லையே ? மற்ற ஆண்கள் என்னை தொடுவதையோ இல்லை அவள் அந்த ஆண்களுடன் செய்த லீலைகளையோ நான் விரும்பவில்லையே. அதை அவள் புரிந்து கொள்ளவில்லையோ ?. அவுரங்கசீப் மீண்டும் வந்து, அவள் தன் சகோதரிகளுடன் இணைந்த சமயத்தில், பத்ருனிஷா வெகுவாக மாறியிருந்தாள். அவளுடைய வியக்கத்தக்க நடவடிக்கை மற்றும் அவள் காட்டிய அதீத தைரியத்தினால் அவளுடைய அன்னையும் , மூத்த சகோதரிகளும் அவளை சரிப்படுத்த பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருந்தது. அவர்கள் அறிந்த பத்ருனிஷாவாக இல்லாமல் அதிகம் பேசுபவளாக குறிப்பாய் அவர்கள் விரும்பாத காதல் மொழிகள் பேசுபவளாக மாறி இருந்தாள்.
அவளிடம் இருந்த ஏதோ ஒன்றை கவனித்து அதனால் இத்தகையதொரு வாழ்வை அவளுக்கு காட்டினாளா ரவுஸனாரா இல்லை ரவுஸனாரா அவளை நடத்திய விதத்தில் இவ்விதம் மாறினாளா ? இந்த கேள்வியை அவள் பலமுறை தன்னையே கேட்டும் அவளுக்கு விடை கிடைக்கவில்லை. பத்ருனிஷாவிற்கு காதலர்கள் மட்டுமே தேவைப்பட்டனர். அவளுக்குத் தெரியும், தான் ஒருநல்ல மனைவியாக இருக்க முடியாது என்று. அவளுக்கு மென்மையாய் தன் காதலைக் காட்டத் தெரியாது. அவளுக்கு தெரிந்தது ஒரே ஒரு வழி மட்டுமே. இப்படியான ஒரு முரண்பட்ட தன் அடையாளத்தை சபித்தாலும் அதை அவள் ஏற்றுக் கொண்டாள். பத்ருனிஷா இவ்வுலகில் இருந்தாள், ஆனால் வாழவில்லை. “நீ என்னை இப்படி மாற்றிவிட்டாய். இருக்கட்டும், எனது நேரம் வரும், அப்பொழுது நான் இதற்கு பழி வாங்குவேன்” இருட்டில் தனக்குத் தானே சபதம் எடுத்துக் கொண்டாள்.
ஒரு நிழல் போல் ரவுஸனாராவின் அறைக்குள் நுழைந்தாள் பத்ருனிஷா. பல வருடங்களுக்கு முன்பு , ரவுஸனாராவின் லீலைகளில் இருந்து தப்பிக்க தான் ஒளிந்து கொண்ட அதே இடத்தில் தன்னை மறைத்துக் கொண்டு அவளின் வருகைக்கு காத்திருந்தாள். அவள் காத்திருப்பு வீணாகாமல் சிறிது நேரத்திலேயே ரவுஸனாராவின் வருகைக்கு அடையாளமாய் அவளது சிரிப்பொலி கேட்டது. தான் இருந்த இடத்தில் சிறிதும் அசைவின்றி இருந்தாள் பத்ருனிஷா.
உயரமான ஒல்லியான ஒரு ஆண் , அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டே அவளது அறையில் நுழைந்தான். அவனது செய்கைகளை ரசித்துக் கொண்டே அவனை மயக்குவது போல் சிரித்தாள் ரவுஸனாரா. பின், அவனை படுக்கையில் தள்ளினாள்.
“ஒரு ராணியை பொது மகளிரை நடத்துவது போல் நடத்துகிறாயே ? நான் அரச குடும்பத்தை சேர்ந்தவள் என்பது மறந்துவிட்டதா?” காமமும் , அரச குடும்பத்தை சேர்ந்தவள் என்ற கர்வமும் தொனிக்க அவனைக் கேட்டாள்.
அவள் வார்த்தைகளை சிறிதும் சட்டை செய்யாமல் சிரித்தான் அவன். தான் அணிந்திருந்த மேல் துணியை கழற்றி அவள் கழுத்தில் போட்டு, அவளை தன் அருகே இழுத்தவாறே “நான்தான் உன் அரசன்” என்றான்.
அவன் மேல் கொண்ட மயக்கத்துடன் “ரவுஸனாரா யார் கட்டளைக்கு பணியமாட்டாள் ” என்று கிறக்கமாக பதிலளித்தாள்.
“ஆனால், எனக்கு கீழ் படியவாய் ” என்றான்.
இதைக் கண்டு தன் கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள் பத்ருனிஷா. அவளுக்கு மீண்டும் பழைய நினைவுகள் மனதில் ஓட அதை கட்டுப்படுத்த முயன்றாள். ரவுஸனாராவை ஒற்றறிய ஒத்துக்கொண்டது தவறோ என ஒரு கணம் சிந்தித்தாள். இதற்கு தான் தயாராக இல்லையோ என சந்தேகமும் எழுந்தது.
“உன்னைப் போல் காதல் வேட்கை கொண்ட பெண்கள் இந்த அந்தப்புரத்தில் வேறு யாரும் உண்டா, ராணி?” கேட்டுக் கொண்டே அவளை இறுக்கி அணைத்து அவள் கழுத்தினில் முத்தங்கள் கொடுக்கத் துவங்கினான்.
அவன் தந்த பரவசத்தில் ரவுஸனாராவின் மார்பகங்கள் துடித்தன. “வேறு யாரும் இல்லை. சில இளவரசிகளுக்கு நான் சொல்லிக் கொடுக்க முயன்றேன். ஆனால் அவர்கள் முட்டாள்கள். என் பேச்சைக் கேட்கவில்லை”
ரவுஸனாராவின் பாதுகாப்பில் இருந்த ஒரு இளவரசியின் நினைவு வந்தது பத்ருனிஷாவிற்கு. பலகீனமாய் எப்பொழுதும் அழுது கொண்டிருந்த அந்த இளம் பெண் என்ன ஆனாள் என்று யாருக்கும் தெரியவில்லை. அவுரங்கசீப்பின் பல மனைவிகளில் ஒருவருக்கு பிறந்த பெண் அவள்.
இங்கே ரவுஸனாரா மற்றும் அவளது காதலின் இன்ப ஒலிகள் நாராசமாக ஒலித்தன பத்ருனிஷாவிற்கு. எப்பொழுது இவர்களின் ஆட்டம் முடியும் எனக் காத்திருந்தாள்.
“இங்கே என்னை விட வயது குறைந்த இளவரசிகள் பலர் இருக்கலாம். ஆனால், அவர்களை விட நான் சிறந்தவள்” முனகலாய் தன் காதலனிடம் கூறினாள் ரவுஸனாரா.
இந்த உயரமான வாளிப்பான ஆணுக்கு அத்தை போன்ற வயதான , பருமனான பெண்களைத்தான் பிடிக்குமோ? அவளையே இப்படி இன்பத்தில் ஆழ்த்துகிறான் என்றால், தன்னைப் போன்ற இளம் பெண் கிடைத்தால்? அந்த கணம் அவளுக்குள் வழி பிறந்தது. இவனைத்தான் தான் மயக்கி தன் அத்தைக்கு எதிராய் பயன்படுத்த வேண்டும். ரவுஸனாராவின் வீழ்த்த உதவக்கூடியவன் இவன்தான் என உறுதி செய்தாள் அவள்.
அடுத்த சில மணி நேரங்களை, தான் இருந்த இடத்தில ஒளிந்து கொண்டு அவர்களின் காமக்களியாட்டங்களையும் அவர்களின் முனகல்களையும் பொறுத்துக்கொண்டு செலவிட்டாள். தன் எதிரியை வீழ்த்த அவள் கொடுக்கும் விலை அது.
“உன் பெயர் பாகத் தானே ? ஆனால் ரவுஸனாரா ஏன் உன்னை அஜீஜ் என்று அழைக்கிறாள்?”
ரவுஸனாராவின் ரகசியத்தை அறிந்துகொள்ள தன்னையே பகடைக்காயாய் பயன்படுத்திக் கொண்டாள் அவள். அவனுடன் அன்று படுக்கையை பகிர்ந்தப்பின் ரவுஸனாராவின் காதலன் அருகே முழு நிர்வாணமாய் படுத்துக்கொண்டு அவனை கேட்டாள் பத்ருனிஷா.
“அது என் பெயரின் ஒரு பகுதி. அவளுக்கு அப்படி கூப்பிடுவதுதான் பிடித்துள்ளது. ஆனால் எனக்கு அது பிடிக்காத ஒன்று.”
அவன் தோளில் தன் தலையை சாய்த்துக் கொண்டு புன்னகைத்தவாறே “உனக்கு பிடிக்காதது அது மட்டுமல்ல என்று எனக்குத் தெரியும். சில தினங்களுக்கு முன்பு ஆவலுடன் படுக்கையில் விருப்பப்பட்டு செயல்பட்டது மாதிரி எனக்கு தோன்றவில்லை” என சிரித்துக் கொண்டே கூறினாள்.
“என்ன நீ அங்கிருந்தாயா?” அவன் குரல் கொஞ்சம் எரிச்சலும் ஆச்சர்யமும் கலந்து ஒலித்தது.
“ஆம். அங்கே மறைந்து நின்றுக் கொண்டிருந்தேன்”
“ஆனால் எதற்காக?”
“ரவுஸனாராவின் ரகசியத்தை அறிந்து கொள்ள”
“எந்த ரகசியம்?”
“அவள் ஆஸமை அடுத்த அரசனாக்கி அவன் மூலம் ஆட்சி புரிய முயல்கிறாள். அவளிடம் பேரரசர் எழுதி முத்திரை வைத்து கையொப்பமிட்ட சான்று இருப்பதாய் கூறுகிறாள்”
“அதனால் உனக்கோ எனக்கோ என்ன வந்தது?”
“அவளிடம் என்ன சான்று இருக்கிறது என தெரியவேண்டும். அப்படி ஏதும் இல்லையெனில் அவள் எவ்வாறு அந்த சான்றை உருவாக்க முயல்கிறாள் என நான் அறியவேண்டும். இந்த இடத்தில் நீதான் எனக்கு உதவி செய்யவேண்டும்.”
தன்னிடம் அவள் கேக்கும் உதவி வெளியே தெரிந்தால் தன்னுடைய தலை தப்பாது என உணர்ந்தவன் ” இல்லை. என்னால் இதை செய்ய இயலாது. நான் ஒரு சாதாரண காவலாளி. உனக்கு இந்த உதவியை செய்தது நான்தான் என அவளுக்கு தெரியவந்தால், யானை கால்களில் என் தலையை நசுக்க செய்வாள்” எனக் கூறியவாறே தன் உடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றான்.
“நீ எனக்கு இந்த உதவியை செய்யாவிடில், என்னுடன் படுக்கையை பகிர்ந்ததை நான் ரவுஸனாராவிடம் சொல்லிவிடுவேன். எப்படி பார்த்தாலும், உன் தலை தப்பாது” தன் திறந்த மார்பை, ஒரு சால்வையால் மறைத்துக் கொண்டு சொன்னாள்.
இதைக் கேட்டதும், அவளை கொல்ல வேண்டும் என்று ஆத்திரத்துடன் அவள் மேல் பாய முயன்றான். ஆனால் எல்லாவற்றிற்கும் தயாராக இருந்த பத்ருனிஷா , படுக்கையில் மறைத்துவைத்திருந்த குறுவாளை எடுத்து அவன் கழுத்தினில் வைத்து ” உன் அடுத்த அடியை எச்சரிக்கையுடன் வை” என புன்னகையுடன் எச்சரித்தாள்.
“எனக்கு உதவுவதை தவிர வேறு வழியில்லை உனக்கு. ரவுஸனாரா வீழ்த்தப்பட்டவுடன் உனக்கு அவளிடமிருந்து விடுதலை கிடைத்துவிடும். அவளுக்கு அடிமையாய் இருக்க வேண்டிய அவசியமில்லை”
அவளுடைய திட்டத்திற்கு இணங்குவதை தவிர வேறு வழியில்லாமல் போனது அவனுக்கு. பத்ருனிஷாவிடம் தான் சிக்கிக் கொண்டதை உணர்ந்தவன் “நான் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டான்.
“உனக்கு தகவல் அளித்தவர் சொன்னபடி, அந்த சான்று உண்மை ஆனால் அதில் முத்திரை மட்டுமே இருக்கிறது. ஆனால் அதில் கை ரேகை எதுவும் இல்லை. சரிதானே.” தன் அத்தை இந்த அளவுக்கு மோசமாக நடந்துகொள்ளுவாள் என்பதை எதிர்பார்க்காததனால் ஏற்பட்ட அதிர்ச்சியுடன் பத்ருனிஷாவிடம் கேட்டாள் ஜெபுனிஷா.
“உண்மை. ஆஸம் தனக்கு மிகவும் பிடித்த மகன் என அந்த சான்று கூறுகிறது,முத்திரையும் உள்ளது. ஆனால் அதில் அப்பாவின் கை ரேகை எதுவும் இல்லை ” முன்பு கூறியதை மீண்டும் உறுதி செய்தாள் பாதர்.
“அப்படியானால் அவள் அப்பா இருக்கும் அறைக்கு சென்று கை ரேகையை சான்றில் பெற முயற்சிப்பாள்” என்று அவளது அடுத்த நகர்வை யோசித்தாள்.
“நாம், ஒருவர் மாற்றி ஒருவர் அப்பாவின் படுக்கை அருகே இருக்க வேண்டும். நாம் அங்கே இருந்தால் ரவுஸனாரா எதுவும் செய்ய முயற்சிக்க மாட்டாள்.” என ஜெபு முதலில் தனது யோசனையை கூறினாள்.
தன் அருகே சுற்றி அமர்ந்திருந்த தன் சகோதரிகளை பார்த்து “இதைப் பற்றி யாரிடமும் நீங்கள் பேசக்கூடாது. உங்களின் ஆண் நண்பர்களிடமோ இல்லை உங்கள் அடிமைப்பெண் அல்லது உங்களிடம் பணிபுரியும் நபுகும்சர்களிடமோ இதைப் பற்றி சிறு தகவலும் பகிர வேண்டாம்” என ஆணையிட்டாள்.
“அம்மாவிடம் நாம் உதவி கேட்கலாம்” பாதர் தன்னுடைய யோசனையை முன்வைத்தாள்.
ஆனால் ஜெபுனிஷாவிற்கு அதில் சிறிது தயக்கம் இருந்தது. அப்பாவியான நவாப் பாயை சிக்கலான ஒரு விஷயத்தில் உள்ளே இழுக்க வேண்டுமா என்று யோசித்தாள்.
“அம்மா, எப்பொழுதும் அப்பாவின் அருகே இருக்க இயலும். அவளை மீறி யாரும் அப்பாவை நெருங்க இயலாது. நாம் ஐந்து பேரும் ஓரளவிற்குத்தான் இதில் ஈடுபட முடியும்” என பாதரின் யோசனையை ஜுபீதாதும் ஆமோதித்தாள்.
“நீ சொல்வது சரிதான். நாம் அப்பாவின் அருகில் இருந்தால், முவாசத்திற்கு உதவி செய்வது என்பது கடினமான விஷயம் ஆகி விடும். ஆனால் , நம் குழுவை பற்றியோ அல்லது நம் நோக்கத்தை பற்றியோ இப்பொழுது எதுவும் கூற வேண்டாம். ரவுஸனாராவை அப்பாவின் அருகே தனியே விட வேண்டாம் என்று மட்டும் கூறு” என இறுதியாய் அந்த யோசனைக்கு சம்மதம் தெரிவித்தாள் ஜெபோ.
தில்லியில் இடி மின்னலுடன் பெய்த மழை பல நாள் நீடித்தது. யமுனை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. சீறும் நாகத்தை போல் அதன் பொங்கி எஎழுவதும் பின் அடங்குவதுமாய் அதன் வெள்ளப் பெருக்கு இருந்தது. ஜெபுனிஷாவால் முவாசத்தை தொடர்புக் கொள்ள இயலவில்லை. பேரரசர் உடல்நிலை சரியில்லை என்ற செய்தி கிடைத்தவுடன், வாரிசு சண்டையில் எங்கே தான் கொல்லப்பட்டுவிடுவோமோ என எண்ணிய முவாசம், ஜெபுனிஷாவின் கடிதம் கிடைக்கும் முன்பே தப்பி ஓடிவிட்டான். பேரரசர் இறந்துவிட்டார் என்று சாம்ராஜ்யம் முழுவதும் வதந்தி பரவிக் கொண்டிருந்த போதிலும் தில்லிக்கு வர அவன் துணியவில்லை. தில்லிக்கு சென்றால் கொல்லப்படுவோம் அல்லது சிறைப்படுத்தப்படுவோம் என்று அவன் அஞ்சினான். அவனது பயத்தை எண்ணி ஜெபுனிஷா ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால் அவனை அழைத்துவர தனது தனிப்பட்ட படையினரை ரவுஸனாரா அனுப்பி இருந்தாள்.
பிரயாணங்களில் விபத்து ஏற்படுவதும் உயிரிழப்பதும் சகஜமான ஒன்றாகும். அதனால், வரு வழியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து அதனால் முவாசம் உயிரிழந்தார் என்று செய்தி வந்தாலும் வியக்க எதுவும் இல்லை என்றே சொல்லலாம் என அவனுக்குத் தெரியும். அதனால் அவர்கள் சாம்ராஜ்யத்தில் இருந்து தொலைவில் இருந்த ராஜா ஜெய் சிங்கிடம் அவன் சரண் புகுந்திருந்தான். முகலாய பேரரசருக்கு அவர் விசுவாசியாக இருந்த பொழுதும், ஷாஜகானே உண்மையான பேரரசர் என அவர் நம்பினார். அதனால் அவருக்கு கடிதம் எழுத முடிவெடுத்தாள் ஜெபுனிஷா.
“அரசே! பேரரசர் உடல்நிலையை பற்றியும் அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதைப் பற்றியும் தாங்கள் அறிவீர்கள். அவரை மீட்க செய்யப்பட்ட சிகிச்சைகள் அவரது உடல்நிலையை மேலும் மோசமாக்கி விட்டது. விருந்தினராக வந்த முவாசம் , உங்களிடம் தஞ்சம் கேட்டிருப்பதை நான் அறிவேன். முவாசம் வலிமையான முகலாய வீரன் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் , ஒரு பேரரசனாக கடமையாற்ற அவனுக்கு அனுபவம் போதாது. அதனால், தங்கள் படையுடன் முவாசத்தை அழைத்துக் கொண்டு ஆக்ரா சென்று அங்கே சிறைப்பட்டிருக்கும் ஷாஜகானை விடுவிக்க வேண்டும். பின், அவர்களுடன் தில்லி வர வேண்டும். ஷாஜகானின் மேற்பார்வையில் முவாசம் ஒரு அரசனாக தன் கடமைகளை சரியாக நிறைவேற்றுவான். மேலும், அவனுக்கு சிறந்த அனுபவமும் கிட்டும். என் தந்தை உடல்நிலை சீராகும் வரை அவன் தன் கடமையை செய்வான்.”
மிக தெளிவாக திட்டமிட்டு இந்த கடிதத்தை எழுதினாள் அவள். எங்கும் முவாசத்தை அடுத்த அரசனாக நியமிப்பதை பற்றியோ அரியணையை கைப்பற்றப் போவதை பற்றியோ குறிப்பிடவில்லை. தன் தந்தை மீண்டு வரும் வரை இடைக்கால அரசனாகத்தான் முவாசத்தை நிறுத்தப்போவதாக எழுதினாள். அதேபோல், கடிதம் எதிரிகளின் கையில் சிக்கி ஷாஜகானின் விடுதலை பற்றி அவர்கள் கேட்டாலும், முவாசத்தை வழி நடத்தவே ஷாஜகானை விடுதலை செய்யக் கோரியதாய் கூறலாம். பின், தீதரை அழைத்து ” இதை ராஜா ஜெய் சிங்கிடம் சேர்த்துவிடு” என கூறினாள்.
ரவுஸனாரா, தனது நகைப்பெட்டியை திறந்து அதில் இருந்த முஹர் உசாக்கை கையில் எடுத்தாள். அரச முத்திரையான முஹர் உசாக், அவளது கைகளுக்கு பெரிதாய் இருந்தது. அது பெண்கள் உபயோகிக்க செய்யப்பட்டதல்ல. தங்கத்தால் ஆன அந்த அரச முத்திரையின் மேல் பக்கம் வைரங்கள் பொறிக்கப்பட்டு பக்கங்களில் பெர்ஷிய மொழியில் வரிகள் எழுதப்பட்டிருந்தது. அரச முத்திரையான முஹர் உசாக் மிக முக்கியமான ஒன்றாகும். அரச முத்திரை பொறிக்கப்பட்டுவிட்டால் அந்த உத்தரவை பேரரசர் கூட மாற்ற இயலாது.
தன் சகோதரன் மயங்கி விழுந்தான் என்ற செய்தி கிடைத்தவுடனேயே அவனுடைய அறைக்கு விரைந்தாள் ரவுஸனாரா. பேரரசி என்ற காரணத்தினால் அரசரின் அருகே இருக்கும் உரிமை அவளுக்கு இருந்தது. மற்றவர்களை தடுத்து நிறுத்திய சேடிப்பெண்கள் இவளை தடுக்கவில்லை. விரைந்து அவுரங்கசீப்பின் அருகே சென்றவள், துக்கத்தில் அவன் மேல் புரண்டு அழுபவள் போல் அவனுடைய உடைகளில் அரச முத்திரையை தேடினாள். அது எப்பொழுதும் அரசன் கூடவே இருந்த ஒன்று. எனவே அவனது உடையினுள்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். அங்கே கிடைக்கவில்லை என்றவுடன், தன் தலையை நிமிர்த்தி , அரச வைத்தியரை பார்த்து என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என கேட்டாள். அவர் பதிலளிக்கும் சமயத்தில் அவளது பார்வையும் கவனமும் அவர் மேல் இல்லை. அந்த அறையில் அவுரங்கசீப்பின் உடைகள் எங்கே இருக்கின்றன என துழாவிக்கொண்டிருந்தது அவளது கண்கள்.
வைத்தியர் அவளை கொஞ்சம் நகர்ந்து இருக்க சொல்லியபொழுது, தயக்கத்துடன் நகர்வது போல், அவுரங்கசீப்பின் உடைகள் கிடந்த இடத்திற்கு அருகே சென்று நின்று கொண்டாள். அறையில் இருந்த வைத்தியர், அகில் கான் என அனைவருமே அவளுக்கு முதுகுகாட்டி நின்றதால் அவளது வேலை எளிதானது. முத்திரை மோதிரம் மிகவும் எடை உடையது என்பதால் , அது உள்ளிருந்தால் அந்த உடையும் கணக்கும் என உடை முழுவதும் தேடாமல், முதலில் அவனது மேல் உடையை தூக்கிப் பார்த்தாள் . அது எப்பொழுதும் போல் இருந்ததால், அடுத்ததாக அவனின் பைஜாமாவை கையில் எடுத்தாள் . அதை எடுக்கும் பொழுதே மிகவும் கனமாக இருக்க , மற்றவர்களின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டே உடையை துலாவி அதனுள் இருந்தா முத்திரை மோதிரத்தை எடுத்து மறைத்துக் கொண்டாள். அறையில் இருந்த அனைவருமே சக்ரவர்த்தியின் மேலேயே கவனமாய் இருக்க, மற்றவர்கள் அறியாமல் அந்த அறையில் இருந்து மெல்ல நழுவினாள்.
ராஜ முத்திரை தொலைந்தது விரைவில் மற்றவர்களுக்கு தெரிய வரும் என்றாலும் அதைப்பற்றி அவள் பெரிதாய் கவலைக்கொள்ளவில்லை. அந்த முத்திரை தொலைந்ததும் அவளுக்கு சாதகமே. அவள் உருவாக்கப்போகும் சான்று ராஜ முத்திரை தொலைவதற்கு முன்பு அரசரே அவர் கைப்பட எழுதி முத்திரை இட்டது என அவள் வாதாட வசதியாக இருக்கும் என எண்ணினாள் ரவுஸனாரா. முத்திரை கிடைத்தவுடன், அழகிய எழுத்துக்களில் எழுத துவங்கினாள்.
“என்னுடைய மகன்களில், இளவரசன் ஆஸம் போல் திறமையான மற்றும் அரச பதவிக்கு வர தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை என்றே நம்புகிறேன். அதனால் நான் இறக்க நேர்ந்தால், அவனை எனக்கு மிகவும் பிடித்தவனாக அறிவிக்கிறேன்.”
அதில் பேரரசரின் கையெழுத்து இல்லை என்றாலும், ராஜ முத்திரையும், கை ரேகையும், பிரதம மந்திரியையும், முல்லாக்களை நம்பவைக்க போதுமானது. முஹ்ர் உசாக்கை கையில் எடுத்தவள், தன் முன் இருந்த சிவப்பு நிற மையினில் அதை முக்கி எடுத்து தான் தயாரித்த சான்றினில் வைத்து அழுத்தினாள். அந்த மை காய்ந்து மாற்றமுடியாத அடையாளமாய் மாறும் வரை பொறுமையாய் இருந்தவள் பின் அந்த சான்றை பத்திரமாக எடுத்து வைத்தாள். அவளை திட்டத்தின் முதல் படி எளிதாய் முடிந்தது. ஆனால் அடுத்தகட்டமான அரசரின் கை ரேகையை அதில் பெறுவது என்பது சிறிது கடினமான ஒன்று எண்ணினாள். மற்றவர்களுக்கு தெரியாமல் அரசரின் அறைக்குள் சென்று அவரின் கை ரேகையை சான்றினில் ஒற்றி மீண்டும் வெளியே வருவது என்பது எளிதான ஒன்றல்ல என்பது அவளுக்கு நன்கு தெரிந்த ஒன்று. அந்த கட்டத்தை வெற்றிகரமாய் தாண்ட வேண்டுமானால், மற்றவர்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்று அதற்கான திட்டத்தை தீட்டினாள்.
தன் படுக்கையில் படுத்திருந்த ரவுஸனாரா , பல்வேறு வழிகளை யோசித்தாள். தீ மூட்டி கவனத்தை திசை திருப்புதல், முக்கிய விருந்தினர்களை வரவழைப்பது என பல்வேறு வழிமுறைகளை சிந்தித்தாலும் எதுவும் அவளுக்கு திருப்தியை தரவில்லை. தனக்கு ஒரு வாய்ப்பு தான் கிட்டும் என்றும் அதில் தான் வேலையை முடிக்காவிடில் தனது எதிரிகள் எச்சரிக்கை அடைந்துவிடுவர் என்றும் அவள் உணர்ந்திருந்தாள். இப்படி போல யோசனைகளால் அன்றைய இரவு உறக்கமற்ற ஒன்றாய் கழிந்தது. ஆனால் விடியலுக்கு சில மணி நேரம் முன்பு பல வகையிலும் அவளுக்கு சரியாய் தோன்றிய யோசனை ஒன்று உதித்தது அவள் மனதில். அதன் பின்பே அவள் நித்திரையை தழுவினாள்.
9. விஷம் அளித்தல்
5 டிசம்பர் 1661
தன் தந்தையின் படுக்கை அருகே அமர்ந்து துணியை பின்னிக் கொண்டிருந்தாள் ஜெபுனிஷா. அவுரங்கசீப் சில சமயம் கண் முழித்து பார்த்து பேச முயன்று முடியாமல் மீண்டும் மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தான். கண்முழித்தாலும் அருகில் யார் இருக்கிறார்கள் என உணரும் நிலையில் அவன் இல்லை. ரவுஸனாராவிடம் இருந்து தந்தையை பாதுகாக்கும் விஷயத்தில் ஜெபுனிஷா யாரையுமே நம்பவில்லை. தானே நாளின் பெரும்பகுதியை அவர் அருகே செலவிட்டாள். அவுரங்கசீப் கண்முழிக்கும் சமயங்களில் எல்லாம் அவனுக்கு நீரை புகட்டி, தலையை தடவி பின் அவன் வாயை துடைத்து அங்கிருந்த சேடிப்பெண்களை நம்பவைத்தாள். யார் யாருக்கு ஒற்று பார்க்கிறார்கள் என்பதை கண்டறிவது கடினமான ஒன்றாக இருந்தது அந்த சூழ்நிலையில்.
படுக்கையில் எந்த வித அசைவும் இன்றி படுத்திருந்த அவுரங்கசீப்பை பார்த்து பலவித எண்ணங்கள் ஓடின அவள் மனதிற்குள். தன் சொந்த உறவினர்களையே கொன்று அவர்களது துண்டிக்கப்பட்ட தலையை தன் தந்தைக்கு பரிசாக அனுப்பிவைப்பது சரி என நினைத்த மனது இதுதான். அருகில் இருக்கும் நாடுகள் மேல் படையெடுத்தது இதே முகம்தான். ஹிந்துக்களை பாவிகள் என்று சொல்லி , அவருடைய மாற்றப்பட்ட முஸ்லீம் கோட்பாடுகளையே ஒவ்வொரு முஸ்லீமும் பின்பற்ற வேண்டும் என கூறியது இந்த வாய்தான். இன்று எந்த வித வேலையும் செய்ய முடியாமல் அமைதியாய் கிடைக்கிறான். அவனது கழுத்தை தடவிக் கொடுத்த ஜெபுனிஷா, தன் தந்தையின் வழிகளை பின்பற்றி அவனது கழுத்தை நெறித்து விடலாமா என யோசித்தாள். அப்படி செய்தால், ஷாஜஹான் மீண்டும் பேரரசன் ஆவான், ஜஹானாரா மீண்டும் அரசியாக பதவியேற்பாள். நாட்டில் அனைவரும் மத சுதந்திரம் பெற்று அவரவர் விருப்பத்திற்கேற்ப வழிபடுவர். அண்டை நாடுகளுடனான உறவு மீண்டும் மேம்படும். இறுதியாய், வங்காளத்து காடுகளில் ஒளிந்திருக்கும் ஷா ஷுஜா, மீண்டும் வங்காளத்து ஆளுநராக பொறுப்பேற்க கூடும். இந்த ஒரே ஒரு அதிர்ச்சி, மொத்த நாட்டையும் மீண்டும் மாற்றி அமைந்துவிடும். அங்கிருந்த அடிமைகளை மீண்டும் பார்த்தாள் ஜெபுனிஷா. சிலர் தூங்கி இருந்தனர். விழித்திருந்த சிலரோ அவள் மேல் கவனம் செலுத்தவில்லை. நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டு மெல்ல அவனின் கழுத்தை அழுத்த துவங்கிய நேரத்தில் “தண்ணீர் ” என்று அவனது குரல் மெல்ல ஒலித்தது.
அவனது குரலை கேட்ட அடிமைப்பெண்கள், தண்ணீரை கொண்டு வந்து அவள் கையில் கொடுக்க, மெல்ல தண்ணீரை அவனுக்கு புகட்டினாள். சிறிதளவு நீரை பருகிய அவுரங்கசீப் மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தான். சிறிது நேரம் கழிந்த பின், மீண்டும் அவன் கழுத்தில் தன் விரல்களை வைத்து அவனது நாடித் துடிப்பை சரி பார்த்தாள். எப்படி கழுத்தை நெரித்து கொல்லுவது எப்படி என அவள் அறிந்திருந்தாலும் இது வரை அதை செய்ய வேண்டிய கட்டாயம் வரவில்லை. ஒரு விலங்கை கொண்டு எப்படி கழுத்தை நெரித்து கொள்ளுவது என்று சுலைமான் அவளுக்கு செய்து காட்டி இருக்கிறான். அப்பொழுது யாராவது எதிரி தாக்க முயன்றால் தான் அவனை கொள்ளுவேன் என சொல்லி இருந்தாள் ஜெபோ. ஆனால் அந்த எதிரி தன் தந்தையாகவே இருப்பார் என அவள் ஒரு கணமும் யோசித்தது இல்லை. மீண்டும் அவனது கழுத்தை நெறிக்க போன ஜெபுனிஷா ஒரு கணம் தானும் தன் தந்தை போல் ஆகின்றோமோ என சிந்தித்தாள். அடுத்த நொடியே தனது செயலுக்கு காரணமும் நியாயங்களும் உள்ளனவே என்று தன் செயலுக்கு நியாயம் கற்பித்தாள். ஆனால் எல்லா கொலைகாரகளுமே தங்கள் செயல்களை நியாயப்படுத்துபவர்கள் அல்லவா? மீண்டும் அங்கிருந்த அடிமைப் பெண்களை நோட்டம் விட்டாள். அனைவரும் அசதியில் கண்ணயர்ந்து கொண்டிருந்தனர். தான் செய்யப்போகும் செயலுக்கு தனக்குத் தானே தைரியம் வரவழைத்துக் கொண்டு, தனது கைகளை அவனது கழுத்தை நோக்கி கொண்டு சென்றாள்.
அதே நேரத்தில், அறைக்கு வெளியே பல குரல்கள் ஒலிக்கத் துவங்கின. அந்தப்புரத்தில் இருந்து வேகமாய் வந்த பெண் ஒருவள் “இளவரசி! இளவரசர் அக்பர் இறந்துவிட்டார்!அல்லாஹ் நம்மை காப்பாற்றட்டும்” என அழுகையின் ஊடே சொன்னாள். பயம் அவளை தாக்க, அவுரங்கசீப் மேல் இருந்த தனது கைகளை எடுத்துவிட்டு, அந்த அறையில் இருந்து வெளியேறி அந்தபுரத்தை நோக்கி வேகமாய் சென்றாள். அக்பரது அறையில், தரையில் ரத்தம் சிந்தி இருக்க, தீதர் குனிந்து அக்பரை பரிசோதித்துக் கொண்டிருந்தான்.
அக்பரின் அருகே உக்கார்ந்து ஜெபுனிஷா, தனது இதயம் நொறுங்குவதை போல் உணர்ந்தாள். அக்பரின் சிறிய உடலை தன் மேல் இழுத்து அவனை கட்டி அணைத்து அழத் துவங்கினாள். இதற்கு முன் சுலைமான் இறந்த தருணத்தில்தான் அவ்வாறு அழுதாள்.
“இளவரசி! இன்னும் நாடித் துடிப்பு இருக்கிறது. இளவரசர் இறக்கவில்லை”
அவன் சொல்வதை கேட்டதும், அவளது இதயத் துடிப்பு அதிகரித்தது. தனது இரண்டு விரல்களை அவனது கழுத்தினில் வைத்து பரிசோதிக்க முயன்றாள். கண்களை மூடி, துடிப்பு இருக்க வேண்டும் என பிரார்தித்துக் கொண்டே இருந்தாள். மெல்லிய துடிப்பு இருப்பது போன்றும் இல்லாதது போன்றும் தோன்றியது அவளுக்கு. ஏமாற்றமான குரலில் “எனக்கு எதுவும் தோன்றவில்லை” எனக் கூறினாள்.
“இல்லை இளவரசி. இன்னும் நாடி துடிக்கிறது. வைத்தியர் வந்து கொண்டிருக்கிறார்.”
அவர்கள் பேசி கொண்டிருக்கையிலேயே அங்கே வந்த அரச வைத்தியர் அக்பரை பரிசோதிக்கத் துவங்கினார்.
“இறுதியாய் என்ன உணவு உண்டார்?”
“இரவு உணவும் கொஞ்சம் பாலும். அதை உண்ட சில நிமிடங்களில் ரத்த வாந்தி எடுக்க துவங்கிவிட்டார்” என தீதர் நடந்ததை விளக்கினான்.
ஜெபுனிஷா தன் கண்களை மூடிக்கொண்டு அக்பரை காப்பாற்றுமாறு இறைவனிடம் மன்றாடத் துவங்கினாள்.
“அக்பர் பிழைத்துவிடுவான் அல்லவா ?”
“இப்பொழுது என்னால் எதுவும் சொல்ல இயலாது. அவர் உண்ட உணவை நான் சோதிக்க வேண்டும். அதன்பின் தான் என்னால் கூற இயலும்.”
உணர்வற்று பிணம் போல் இருந்த அக்பரின் அருகே அமர்ந்த ஜெபுனிஷா அவனது தலையை கோதி விட துவங்கினாள்.
அக்பருக்கு நடந்த அந்த சம்பவத்தில் இருந்தே ரவுஸனரா தன் அறையை விட்டு வெளியே வரவேயில்லை. அடுத்தடுத்து நடந்த துயர சம்பவங்களால், அரண்மனையில் ஒரு இறுகிய நிலையே தொடர்ந்து நிலவியது. அந்த சமயத்தில் அரசியல் பேசவோ வேறு விஷயங்களை பேசவோ அங்கே யாருக்கும் விருப்பமில்லை. அக்பருக்கு விஷம் அளித்தது தான்தான் என விரைவில் யாரேனும் கண்டுபிடிக்க கூடும் என அவள் அறிந்தே இருந்தாள். இருந்தும் அதை பற்றி அந்த நிமிடத்தில் அவளுக்கு அக்கறையில்லை. இன்னும் மயக்கத்தில் இருந்து எழாத அவுரங்கசீப்பின் அறைக்கு தினமும் செல்வதை தன் வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தாள். ஜெபுனிஷாவோ இல்லை அவளது சகோதரிகளோ இப்பொழுது அங்கே வருவதில்லை என்பதை அவள் அறிந்து கொண்டாள். இப்பொழுது நவாப் பாய் மட்டுமே அங்கே இருந்தாள். அவள் தனது நோக்கத்திற்கு இடையூறு விளைவிப்பாள் என்றோ அவளை சமாளிப்பது கடினம் என்றோ ரவுஸனாரா நினைக்கவில்லை.
தன் அறையில் அமர்ந்திருந்த ரவுஸனரா அங்கே இருந்த தனது சேடியை அருகே அழைத்தாள்.
“அனைத்து இளவரசிகளும் சரியாய் உணவு உண்ணவில்லை. இந்த பழச்சாற்றை எடுத்து சென்று அவர்களுக்கு கொடு”
“அப்படியே ராணி! தாங்கள் அனுப்பியதாக கூறி கொடுத்துவிடுகிறேன்”
“நான் அனுப்பினேன் எனத் தெரிந்தால் அவர்கள் இதை பருக மாட்டார்கள். நவாப் பாய் அனுப்பியதாக கூறு. நவாப் பாய் அரசரின் அறையில் இருக்கிறாள். அவளுக்கு இதை பற்றி தெரிய போவதில்லை.”
“நவாப் பாய்க்கு எதாவது தரவேண்டுமா?”
“அவர்களுக்கு இதே பழச்சாற்றை குடு. ஆனால், ஜெபுனிஷா அனுப்பியதாக கூறு”
விருப்பம் இல்லை என்ற பொழுதும், இதை செய்யாவிடில் அவளது கோபத்திற்கு ஆளாக வேண்டி நேரிடும் என்பதால் அரை மனதுடன் அங்கிருந்து சென்றாள்.
அந்த பழசாற்றில் கலக்கப்பட்ட தூக்க மருந்து, அக்பரின் அறையில் இருந்த இளவரசிகளை தூங்க வைத்துவிடும் என ரவுஸனாராவிற்கு தெரியும். நள்ளிரவு வரை பொறுத்திருந்து ரவுஸனாரா, மெதுவாய் ஜெபுனிஷாவின் அறைக்கு சென்றாள். அறையின் வெளியே நின்று அறையில் இருந்து ஏதேனும் சப்தம் வருகிறதா என உன்னிப்பாக கேட்டாள். இளவரசிகளின் மெல்லிய குறட்டை ஒலியை தவிர்த்து வேறெந்த ஒலியும் அங்கே கேட்கவில்லை. இருப்பினும், ரவுஸனரா மிக எச்சரிக்கையாய் நடந்து கொண்டாள். அந்த நள்ளிரவில், அங்கே அவளை யாரேனும் பார்த்தால் நடந்த சம்பவங்களுக்கு அவள்தான் காரணம் என கண்டுபிடிப்பது மிக எளிது. ஏனென்றால் அக்பர் இறந்தால் அதனால் பலன் பெற போவது ஆஸம் தான். அவள் மட்டுமே ஆஸமை ஆதரித்து வந்தாள். எனவே நுனிக் காலில் நடந்து அவுரங்கசீப்பின் அறையை நெருங்கினாள்.
அறையின் வாயிலில் இருந்து உள்ளே எட்டிப் பார்த்தாள். இவள் அனுப்பிய பழச்சாறை அருந்திய நவாப் பாய் , அவுரங்கசீப்பின் காலடியில் தலை வைத்து மயங்கி இருந்தாள். அவள் பாதிக் குடித்து மீதம் வைத்திருந்த கோப்பை அவள் அருகே இருந்தது. அதைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்ட ரவுஸனாரா பூனைப் போல நுனிக்காலில் நடந்து அவுரங்கசீப்பின் அருகே வந்தாள். அவனது கையை பிடித்து அவனுடைய நாடித்துடிப்பை சரி பார்த்தாள். அவன் கைகள் சூடு குறைந்து குளிரத் துவங்கி இருந்தது. நாடியும் குறைந்து கொண்டு வருவது நன்கு தெரிந்தது. அவனது வாழ்நாள் அதிகம் இல்லை என உணர்ந்தாள்.
தன் மார்புக் கச்சையில் மறைத்து வைத்திருந்த சான்றை முதலில் எடுத்தவள், பின் தனது இடையினில் ஆடையில் வைத்திருந்த கருப்பு மை புட்டியை எடுத்தாள். அவன் கட்டை விரலை மையில் அழுத்தியவள், பின் சான்றை எடுத்து அதில் அவனது கட்டை விரலை நன்கு அழுத்தினாள். அதில் கை ரேகை அங்கு பதிந்தவுடன், முன்பு போலவே அவனது கையை கீழே விட்டவள் அந்த சான்றை மீண்டும் தன் மார் கச்சையில் ஒளித்துக் கொண்டாள். தான் நினைத்தது நிறைவேற போகிறது என்று புன்னைகையுடன் அங்கிருந்து அகல முயன்றவளின் வலது மணிக்கட்டை ஒரு கை இறுக்கிப் பிடித்தது.
தான் செய்த சதிவேலையை நவாப் பாய் பார்த்து விட்டாள் எனத் தெரிந்ததும், அவளை தள்ளிவிட்டு ஓட முயன்றாள் ரவுஸனாரா. மிக அப்பாவியாய் ஒரு பலவீனமான பெண்மணியாய் அறியப்பட்ட நவாப் பாய் அவளை விடுவதாக இல்லை. ரவுஸனாராவின் கரத்தை வேகமாய் இழுக்க அதில் தடுமாறியவள் கீழே விழுந்தாள். அவள் சுதாரிக்கும் முன் , அவளது ஆடைக்குள் கையை விட்டு அவள் தயாரித்த சான்றை எடுக்க முயன்றாள் நவாப் பாய். ஆனால் , ரவுஸனாரா அதைத் தடுத்து அவளின் மார்பில் அடித்தாள். அதனால் நவாப் பாய் தடுமாறி கீழே விழ அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கிருந்த தப்ப முயன்றாள் ரவுஸனாரா. ஆனால் கீழே விழுந்த நவாப் பாய் அவளை விடுவதாக இல்லை. ரவுஸனாராவின் ஆடையை தன் கைகளால் இழுக்க, ரவுஸனாராவோ அவளின் தலை முடியை பிடித்து இழுத்தாள். அதனால் ஏற்படும் வலியில் தன்னை விட்டுவிடுவாள் என எண்ணினாள்.
தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என போராடிய நவாப் பாயின் முகத்தில் வலி எதிரொளித்தாலும் தன் பிடியை விடாமல் போராடினாள் .
“உன் சகோதரன் நோய் வாய்ப்பட்டு உயிருக்கு போராடும் இந்த நேரத்தில் தான் உன் சதிவேலைகளை செய்வாயா ? அங்கே படுத்திருப்பது வேறு யாருமல்ல உன் சகோதரன்தானே ?” என ரவுஸனாராவை கேட்டுக் கொண்டே தன் இறுதி முயற்சியாய் அவளின் கீழ் ஆடையை பிடித்து இழுக்க, மெல்லியதாய் இருந்த அது கிழிந்து , அவளின் அந்தரங்க உறுப்புகள் வெளியே தெரியத் துவங்கின.
ஒரு நிமிடம் அவமானத்தில் குறுகி நின்ற ரவுஸனாரா விரைந்து யோசிக்கத் துவங்கினாள். தனது கீழ் ஆடை அகன்றதும், அவளால் வேகமாய் நடக்க முடிந்தது. அதை பயன்படுத்தி , நவாப் பாயின் வயிற்றில் உதைத்தாள். வலியால் சுருண்டவளின் தலை முடியை கொத்தாய் பிடித்து இழுக்க, இம்முறை நவாப் பாயால் சமாளிக்க முடியாமல் வலியில் அலறினாள்.
நவாப் பாயை கீழே தள்ளி அவள் மேல் அமர்ந்தவள், அவளது வாயை இறுக மூடினாள். “உபயோகமில்லாத கிழட்டு எலியே! உன்னால் என்னை தோற்கடிக்க முடியாது. ஆஸமை என் சார்பாய் பொம்மை அரசனாக்கி , நான் இந்த சாம்ராஜ்யத்தை ஆளப் போகிறேன். அப்பொழுது நீ என் அடிமையாய் இருப்பாய். உன்னை, துப்புரவு வேலை செய்பவர்களுக்கு விற்றுவிடுவேன். நீ என்னை ஒரு பொழுதும் தடுக்க இயலாது.”
நவாப் பாயின் தலையை தன் பலம் கொண்ட மட்டும் தரையில் மோதினாள். ரவுஸனாராவின் கண்களில் தெரிந்த பேராசைதான் நவாப் பாய் இறுதியாக பார்த்தது. பின் மெல்ல அவள் மயங்கினாள்.
கிழிந்த தன் ஆடையை வாரி சுருட்டிக் கொண்டு அங்கிருந்து வேகமாய் தனது அறைக்கு ஓடிச் சென்றாள் ரவுஸனாரா.
10. முடிசூட்டு விழா
இந்த உலகமெனும் துன்பக் காட்டினுள்
ஆசையென்ற சிங்கம் பேராசையை துரத்துகிறது
6 ஜனவரி 1661
முவாசம் தனது தாடியை தன் முன்னோர்கள் போலவே அழகுபடுத்தியிருந்தான். மீசையின் இருப்பக்கமும் இருந்து மெல்லிய வரியாக சென்று தாடியுடன் இணைந்திருந்தது. அவன், அவுரங்கசீப் போல் சிகப்பான தோற்றம் கொண்டவன் அல்ல. தனது அலங்காரம் செய்து கொண்டு, இடையில் தங்கத்தால் அலங்கரிப்பட்ட வாள் தொங்க, முகலாயர்களின் உடையணிந்து ராஜா ஜெய் அரசவைக்கு அவன் சென்றபொழுது, அவனது தாத்தா ஷாஜஹானை பார்த்தது போலவே இருந்தது அவருக்கு. அதை வாய் விட்டு சொல்லவும் செய்தார்.
அதைக் கேட்ட முவாசம் புன்னகைத்தான். தான்தான் முகலாயப் பேரரசின் அடுத்த அரசனாக போகிறவன் என்ற எண்ணம் அவனை மாற்றி இருந்தது. ஜெபுனிஷாவின் ஆதரவும் திட்டங்களும், ராஜ் ஜெய் சிங் தரும் படை பலமும் அவனுக்கு அளவற்ற நம்பிக்கையை அளித்திருந்தது.
“அரசே ! நீங்கள் நான் இங்கு வந்ததில் இருந்து என்னை மிக சிறப்பாக நடத்தி வருகிறீர்கள். ஆனால், நாம் உடனடியாக படையெடுத்து சென்று ஆக்ராவிற்கு சென்று எனது தாத்தாவையும், அத்தையையும் விடுவிக்க வேண்டும் என்று ஜெபுனிஷா விரும்புகிறாள். அவர்களை விடுவித்து, ஷாஜகானை மீண்டும் அரியணையில் அமர்த்தி எனது தந்தையின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுகட்ட இதுதான் சரியான தருணம் என்பது அவளின் எண்ணம்.”
“கவலை வேண்டாம் இளவரசே! படைகளை அணிவகுத்து கிளம்ப தேவையான உத்தரவுகளை எனது தளபதிகளுக்கு ஏற்கனவே கொடுத்துவிட்டேன். அடுத்த வாரம் நாம் ஆக்ராவில் இருப்போம். இப்பொழுது என்னுடன் வாருங்கள்” என்று கூறிய ஜெய் சிங்க் , முவாசத்தை அழைத்துக் கொண்டு அங்கே இருந்த ஒரு சிறிய அறையை நோக்கி சென்றார்.
காற்றில் கலந்து வந்த ஊதுவத்தி மற்றும் நெய்யின் மணத்தை முவாசத்தால் நுகர முடிந்தது. அந்த அறையை நெருங்க நெருங்க அந்த வாசனை இன்னும் அதிகரித்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அந்த அறையின் மேற்கூரையில் இருந்து விளக்குகள் தொங்கிக் கொண்டிருக்க, அறையின் நடுவே புல்லாங்குழல் ஊதும் நீல வர்ண கிருஷ்ணனின் சிலை இருந்தது. அவர்கள் போற்றி வணங்கும் தெய்வத்தின் முன் தான் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தான் முவாசம்.
கிருஷ்ணன் சிலை முன்பு மண்டியிட்டு கை கூப்பி வணங்கிய ராஜா ஜெய் சிங்க் , தங்க தாம்பாளத்தில் இருந்த குங்குமத்தை கையில் எடுத்து, முவாசத்தின் நெற்றியில் திலகமிட்டார். “வெற்றி உங்களுக்கு கிட்டட்டும் இளவரசே!” என்று அவனை ஆசிர்வதித்த பின் மீண்டும் கடவுளின் முன் மண்டியிட்டு வணங்கினார்.
கூப்பிய அவரது கரங்களை தன் கைகளால் பற்றிய முவாசம் ” உங்களது ஆதரவையும் விசுவாசத்தையும் நான் ஒரு பொழுதும் மறக்கமாட்டேன் அரசே. நான் பேரரசன் ஆனவுடன், இந்துக்களும் முகலாயர்களும் முன்பு போல் ஒற்றுமையாக வாழ வழி செய்வேன்” என உறுதி அளித்தான்.
சூரியனின் ஒளி பட்டு மயில் சிம்மாசனத்தில் இருந்த பல்வேறு கற்களும் ஒளிர்ந்தன. சூரியனின் ஒளி படும்போதெல்லாம் மயில் சிம்மாசனம் ஒளிர வேண்டும் என்பதற்காகவே அதில் கற்களை இடம் பார்த்து பதிக்க சொல்லி இருந்தான் ஷாஜகான். அதே போன்ற வேலைப்பாடுகள் தாஜ்மகாலிலும் வருவோரை வரவேற்றது. பேரதிசயமான அந்த கட்டிடத்தின் நுழைவாயில் கண்ணாடி மற்றும் நவரத்தின கற்களின் வேலைப்பாடுகளால் நிறைந்திருந்தது. அந்த இரண்டு அதிசயங்களின் அழகோ வேலைப்பாடோ அந்த தருணத்தில் சிறையில் இருந்த ஷாஜகானிற்கும் , இறப்பின் நுழைவாயிலில் இருந்த அவுரங்கசீப்பிற்கும் முக்கியமானதில்லை. அடுத்து யாரை வாரிசாக நியமிப்பது என்பதே அனைவரின் முன்பிருந்த முக்கிய பிரச்சனை. அடுத்து யாரை வாரிசாக நியமிப்பது என்பதை பற்றி விவாதிக்க அன்றும் அவை கூடியது. இந்த முறை ரவுஸனாரா , சிம்மாசனத்தில் அமர்வதை தவிர்த்து அதன் அருகே இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தாள். அவளுக்கு எதிரே திரையின் பின் ஜெபுனிஷாவும் நவாப் பாயும் இருந்தார்கள். முல்லாக்கள் ரவுஸனாராவிற்கு பின்பக்கம் நிற்க, அவர்களின் எதிர் வரிசையில் பிரபுக்களும், ராஜ்புத்களும் நின்றனர்.
காலியாக இருந்த சிம்மாசனத்திற்கு அருகே இருந்த பிரதம அமைச்சர் அவையோரை அமைதிப்படுத்தி ” பேரரசின் எதிர்காலத்தை பற்றி விவாதிக்க நாம் இன்று கூடி இருக்கிறோம். பேரரசர் ஆலம்கீர் , நோயில் இருந்து குணமாகி வரும்வரை நாட்டை ஆள தாற்காலிக அரசரை தேர்வு செய்யவேண்டியது மிக அவசியம். அரசன் இல்லையெனில், நம் விரோதிகள் நம் மேல் படையெடுக்க தயங்கமாட்டார்கள்” என்று அன்றைய கூட்டத்தின் நோக்கத்தை விவரித்தார்.
அவர் பேசி முடித்தப்பின் அங்கே பலத்த நிசப்தம் நிலவியது. ஜெபுனிஷாவும், ரவுஸனாராவும் தங்கள் தேர்வு அவர்களது சொந்த எண்ணங்களை நிறைவேற்ற என்பதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
ரவுஸனாராவை பார்த்த பிரதம அமைச்சர் “அரசியே! ஆஸமை தனக்கு பின் வாரிசாக நியமிக்க வேண்டும் என்பது பேரரசரின் ஆணை என்பதற்கான சான்று தருவதாக கூறினீர்கள். இப்பொழுது அதை இந்த அவையில் காட்ட இயலுமா?” என வினவினார்.
கடந்த முறை போலில்லாமல் இந்த முறை ரவுஸனாரா பொறுமையாகவும் நிதானமாகவும் இருப்பதை கவனித்தாள் ஜெபுனிஷா. மேலும், அவள் முகத்தில் இருந்த புன்னைகைக்கு அர்த்தம் புரியவில்லை அவளுக்கு,
“பிரபுக்களே , அமைச்சர்களே மற்றும் இந்த அரசின் சேவகர்களே! மிக மோசமான கஷ்டமான காலகட்டத்தில் கூட நான்தான் அவுரங்கசீப்பிற்கு நம்பிக்கையான துணையாகவும் ஆலோசனை வழங்குபவளாகவும் இருக்கிறேன் என்பதை சொல்வதில் எனக்கு பெருமைதான். முன்பு பேரரசராக இருந்த காஃபிர் ஷாஜகான் நோய்வாய்ப்பட்டு அடுத்த வாரிசுக்கான சண்டை நடந்த நேரத்தில், துரோகி தாராவின் வீட்டினுள் நுழைந்து அவனை ஏமாற்றி, அவுரங்கசீப் அரியணையை கைப்பற்ற வழிவகை செய்தது நான்தான்” என்று பெருமிதம் பொங்க கூறினாள் ரவுஸனாரா.
சில வருடங்கள் முன்பு ஷாஜகான் நோய்வாய்ப்பட்ட தருணத்தில் அவன் இறந்து விடுவான் என்றே அனைவரும் எண்ணினர். அந்த நேரத்தில், அவுரங்கசீப் தனது மற்ற சகோதரர்களுடன் இணைந்து தாராவிற்கு எதிராய் சண்டையைத் துவக்கினான். ஆனால் ஒன்றிணைந்த அவர்களின் படைபலம் தாராவின் படையின் முன் நிற்க இயலவில்லை. அந்த நேரத்தில் தான் தந்திரமாக ரவுஸனாராவை அடைக்கலம் கேட்பது போல் தாராவிடம் அனுப்பினான் அவுரங்கசீப். அவுரங்கசீப் அவளை துரத்திவிட்டதாகக் கூறி அடைக்கலம் கேட்டு வந்ததாக கூறி தாராவை நம்ப வைத்தாள் . மிகவும் அப்பாவியான தாரா அவள் பேச்சை நம்பி அவளுக்கு அடைக்கலம் கொடுத்தான். அவளை நம்பி அவுரங்கசீப்பை தோற்கடிக்க அவளிடம் யோசனைகளும் கேட்டான். அவளோ தந்திரமாக அவுரங்கசீப்பின் படைகளை பற்றியும் அவை இருக்கும் இடங்களை பற்றியும் தவறான தகவல்களை கூறி அவனை தோல்வியின் பாதையில் அழைத்து சென்றாள். அவளை நம்பி படை நகர்த்திய தாரா விரைவில் அந்த யுத்தத்தில் தோல்வியை சந்தித்தான்.
மாபெரும் வீரன் என்று தான் நம்பிய தனது தந்தை, துரோகத்தால்தான் அரியணையை பிடித்தார் என்பது ஜெபுனிஷாவிற்கு மிகவும் வருத்தத்தை அளித்தது. இப்பொழுது அதனை மீண்டும் தன் அத்தை சொல்வதை கேட்டவுடன், இதை மாற்ற ஏதும் செய்ய இயலா கையறு நிலையில் இருப்பது சோகம் அவள் மனதை நிறைக்க காரணமானது. எப்பொழுதும் தன் வம்சா வழியை நினைத்து பெருமைப்படும் ஜெபுனிஷா இன்று அதை எண்ணி வெட்கப்பட்டாள். தான் செய்ததை , தன் வாயாலேயே பேசி பெருமைப்பட்டுக்கொண்டிருந்த ரவுஸனாராவின் உறவினராக இருப்பதை எண்ணி மிகவும் சிறுமை அடைந்தாள்.
“என் சகோதரன், தனது வாரிசை பற்றி பலமுறை பேசியுள்ளான். சுல்தானின் துரோகம் அவனை மிகவும் பாதித்தது. முவாசம் ஒரு கோழையாய் போனதால், இளவரசன் ஆஸம் தான் தன் வாரிசு என அவன் முடிவு செய்தான்” கூறிக் கொண்டே, தன்னிடம் இருந்த சான்றை அவையில் காட்டினாள்.
“பேரரசரின் கை ரேகையும், முத்திரையும் பதித்த சான்று”
அவள் அதை சொன்ன மறுநொடி ஜெபுனிஷாவின் குரல் அங்கே ஓங்கி ஒலித்தது.” இது போலியான ஆவணம். இதை ஏற்க இயலாது. இதை ராணி போலியாக உருவாக்கி, பேரரசர் சுய நினைவில்லாத தருணத்தில், கை ரேகையை இதில் பதித்திருக்கிறார். இதை தடுக்க முயன்ற என் தாய் நவாப் பாயை அடித்து மயக்கப்படுத்தி பின் இதை செய்திருக்கிறார்.”
“இது அப்பட்டமான பொய். நான் யாரையும் கட்டாயப்படுத்தி இந்த ரேகையை பெறவில்லை”
ரவுஸனாராவின் மிக நெருங்கிய கூட்டாளியான தலைமை முல்லா காய் உயர்த்தி அனைவரையும் அமைதி படுத்தினார். பின் ஜெபுனிஷாவை நோக்கி “இளவரசி! நீங்கள் சொல்வதற்கு வேறு ஏதேனும் சாட்சி உள்ளார்களா?” என்று கேட்டார்.
முல்லாவை ஏற்கனவே என்ன பேச வேண்டும் என சொல்லித்தான் அழைத்து வந்திருப்பாள் ரவுஸனாரா என ஜெபுனிஷாவிற்கு நன்கு தெரியும். “இது நள்ளிரவில் நடந்த ஒன்று. அந்த சமயத்தில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். “
“உங்கள் வார்த்தையை ஏற்பதா அல்லது ராணியின் வார்த்தையை ஏற்பதா என்ற இந்த விஷயத்தில் நாங்கள் ராணியின் வார்த்தையை தான் ஏற்க வேண்டி உள்ளது. எனவே இந்த சான்று உண்மைதான் என நாங்கள் நம்புகிறோம்”
“சென்ற முறை அவை கூடிய சமயத்தில் இல்லாத சான்று இன்று எப்படி ராஜ முத்திரை மற்றும் அரசரின் ரேகையுடன் எப்படி வந்தது? எல்லாமே மிக சரியாக இருப்பதை கண்டு உங்களில் யாருக்குமே சந்தேகம் வரவில்லையா?” தன் போராட்டத்தை கைவிடாத ஜெபுனிஷா மீண்டும் கேட்டாள்.
“நான் பேரரசரின் கை ரேகையை கட்டாயமாக பதிந்திருந்தாலும், ராஜ முத்திரையை எப்படி நான் எப்படி அதில் பதிந்திருக்க முடியும்? இதற்கு இளவரசியே பதில் கூறட்டும்” தனது இறுதி அம்பை எய்தாள் ரவுஸனாரா.
அவையில் மெல்லிய முணுமுணுப்பு எழுந்தது. இந்த கேள்வி எழும் என அவள் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தாலும், ஜெபுனிஷா அதிர்ச்சியில் இருந்தாள்.
“இளவரசி! சான்றில் இருக்கும் ராஜ முத்திரை இருக்கிறது. நாம் நம்பித்தான் ஆகவேண்டும்” என அவளை சமாதானப்படுத்த முயன்றார் பிரதம அமைச்சர்.
சிறிது தயக்கத்திற்கு பிறகு “முத்திரையை அவர்கள் திருடி இருக்கிறார்கள் ?” என உறுதியுடன் கூறினாள் ஜெபோ.
“இந்த விவாதம் நம்மை எங்கும் கொண்டு செல்ல போவதில்லை. பேரரசர் பதவிக்கு வருவதற்கு முன்பிருந்தே அவருக்கு விசுவாசமாய் இருக்கும் ராணியை இந்த அவையில் பொய் கூறுகிறார்கள் என குற்றம் சாடுகிறோம்,அதுவும் எந்த வித சாட்சியும் இல்லாமல். நாம் இப்பொழுது விவாதிக்க வேண்டியது பேரரசரின் விருப்பப்படி ஏன் ஆஸமை அவரின் வாரிசாக ஆக்கக்கூடாது என்பதை பற்றி என இந்த அவைக்கு தெளியப்படுத்துகிறேன்” என முல்லா மீண்டும் விவாதத்தின் போக்கை மாற்றினார்.
தன் போராட்டத்தை நிறுத்தாத ஜெபுனிஷா இறுதி முயற்சியாக “”ஏனென்றால் அவன் சிறுவன்” என கூறினாள்.
“நாம் அவனை பயிற்றுவிப்போம். இதற்கு முன் இருந்த பேரரசர் அக்பரும் பட்டத்திற்கு வந்த பொழுது சிறுவன் தான். ஆனால் அவர் முகலாய பேரரசர்களில் தலை சிறந்த ஒருவராக திகழ்ந்தார்!”
தன் பக்கம் பலவீனம் அடைந்து கொண்டுவருவதை உணர்ந்தாள் ஜெபுனிஷா. நவாப் பாய் சொன்னதை தவிர அவளிடம் வேறு சாட்சிகள் இல்லை அவர்களிடம். ஆனால் ரவுஸனாராவோ , அந்த அவையின் முக்கிய நபர்களின் ஆதரவை பெற்றிருந்தாள்.
“அரசரின் கை ரேகையும், அரச முத்திரையும் கொண்டுள்ள சான்று படி, இளவரசர் ஆஸமை வாரிசாக அறிவிக்க வேண்டும். ஆனால், பேரரசர் இன்னும் உயிருடன் இருப்பதால், அவர் உடல் நலம் பெற்று திரும்பும் வரை தாற்காலிக அரசராக ஆஸம் இருப்பார்” எனக் கூறி அன்றைய அவைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் அமைச்சர்.
அவர் கூறியதை கேட்டதும் அதுவரை ரவுஸனாராவின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது. பிரதம அமைச்சரின் அறிவிப்பில் இருந்த திருப்பத்தை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. அந்த அறிவிப்பை கேட்டதும், தனது உள்ளத்தில் ஆத்திரம் பொங்குவதை உணர்ந்தாள் ஜெபுனிஷா. ரவுஸனாராவை அவள் முறைத்துப் பார்க்க, அவளோ இவளை பார்த்து கேலியாக சிரித்தாள். தன் சகோதரிகள் சூழ அவையில் இருந்து வெளியேறினாள் ஜெபுனிஷா.
ஆஸமை அவர்கள் அதிகாரபூர்வமாக தற்காலிக அரசனாக அவர்கள் நியமிப்பதற்கு முன்பு முவாசம் தில்லி வரவேண்டும் என ஜெபுனிஷா எண்ணினாள். நேரடியான பொருள் கொண்டு எழுதினால் அது அரசுக்கு எதிரான புரட்சியாக முல்லாக்களும், ரவுஸனாராவும் சித்தரிப்பார்கள் என நினைத்த ஜெபுனிஷா, மறைமுக அர்த்தம் கொண்ட கவிதையை எழுதினாள்.
அன்பு தம்பிக்கு,
நீ இல்லாமல், நம் கவிதை குழு முன்பு போல் இல்லை. அன்றொரு நாள், உன்னை நினைத்து நான் எழுதிய கவிதையை உனக்காக அனுப்புகிறேன்.
வந்துவிடு என் அன்பே, நான் தேய்ந்து நொந்து போயுள்ளேன்..
இதற்கு மேலும் போராட சக்தியும் இல்லை என் மனதில் உறுதியும் இல்லை
என் இதயம் கணக்கில்லா வடுக்களை சுமக்கிறது… விதியின் மோசமான
பக்கங்களையே பார்க்கிறேன் நான்.
காலை நேர தென்றலே, வந்து இங்குள்ள குழப்பத்தை பார்
அஸ்தமிக்கும் சூரியன் என் கணைகளை பறித்துவிட்டது
தோட்டத்தில் வண்ணமயமாய் இருந்த பூக்கள் இப்பொழுது
என் இதயத்தில் இருந்து வழியும் ரத்தத்தை மட்டுமே பூசிக்கொண்டுள்ளன
என் இதயம் வெடித்து அதன் வலியையும் ரத்தத்தையும் தவிர
வேறு எந்த தடயமும் இல்லை
காலத்தின் மாற்றதில் அவை நியாயம் ஆகிவிட்டது.
தந்தை மறைந்துவிட்டார் இப்பொழுது ஜெபுனிஷாவும் இல்லை
உன் அன்பு சகோதரி ஜெபுனிஷா.
கவிதையின் உள் அர்த்தத்தை முவாசம் புரிந்து கொள்வான் என ஜெபுனிஷா நம்பினாள். அப்படி அவன் அதை புரிந்துகொள்ளாவிடில் அரச பீடம் ஆஸமிடம் சென்றுவிடும் என்பது அவளுக்குத் தெரியும்.
ராஜ ஜெய் சிங் பரிசளித்த பல முத்து மாலைகள் அவன் மார்பினில் தொங்கிக் கொண்டிருக்க, ஆயிரக்கணக்கான ராஜபுதன வீரர்கள் அவன் பின்னே அணிவகுத்து வர, ஆக்ராவை நோக்கி சென்று கொண்டிருந்தான் முவாசம். குதிரையில் அமர்ந்து அவன் படை நடத்தி சென்றதை காணும்பொழுது ஒரு கம்பீரமான முகலாய இளவரசனே கண்ணுக்குத் தெரிந்தான். ஒரு காலத்தில் கோழையாக இருந்தவனை காலம் மாற்றியிருந்தது. அவனை தொடர்ந்து வந்த ராஜபுதன வீரர்கள் அவர்களின் வீரத்திற்கு பெயர்போனவர்கள். கடைசி வீரன் இருக்கும்வரை தொடர்ந்து போராடுவார்கள் ஒழிய எதிரியிடம் ஒருபொழுதும் சரணடைய மாட்டார்கள். ராஜபுதன அரசர்கள், முகலாயர்களின் முக்கிய துணைவர்கள் ஆவார்கள். முகலாய பேரரசுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதால், எப்பொழுதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் முகலாய பேரரசு நடத்திய போர்களில் பங்கெடுத்து பெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள் அவர்கள். பல ராஜபுதன இளவரசிகள், முகலாய அரச குடும்பங்களின் வாரிசுகளை திருமணம் செய்துகொண்டிருந்தனர்.
அவுரங்கசீப்பின் வெறுப்பு கொள்கைள், ஹிந்து கோவில்களை இடித்தது, ஹிந்துகளுக்கு விதிக்கப்பட்ட அதிகப்படியான வரி போன்றவை ராஜபுதன அரசர்கள் அவனை வெறுப்பதற்கு காரணமாய் அமைந்தன. அதுவே, ஜெபுனிஷா மற்றும் முவாசத்திற்கு அவர்களின் ஆதரவைப் பெற்று தந்தது. தோல் கொண்டு செய்யப்பட்ட பறை ஒலி , படை புறப்பட தயாரானதை அறிவித்தது. முவாசமும், ராஜா ஜெய் சிங்கும் கோட்டையின் வாயிலை நோக்கி செல்ல எக்காளங்கள் முழக்கமிட்டன. அவர்கள் சென்ற வழியில் இருந்த சந்தைகள், பிரபுக்களின் இருப்பிடங்கள் என எல்லா இடங்களிலும் இருபுறமும் இருந்த மக்கள், அவர்களுக்கு வெற்றி திலகமிட்டு வாழ்த்தி வழி அனுப்பினர்.
வழியில் பாதையோரம் நின்றுகொண்டிருந்த வயதான மூதாட்டி ஒருவர், அவன் அந்த இடத்தைக் கடக்கும் பொழுது தனது இரு கரங்களையும் உயர்த்தி “கிருஷ்ணா ! உனது இந்த பிள்ளைகளை காப்பாற்றுவாயாக!” என அவனுக்காக பிரார்த்தனை செய்தது அவன் மனதை உருக்கியது. யாரை வெறுக்க அவனுக்கு போதிக்கப்பட்டதோ அதே மனிதர்கள் அவனது வெற்றிக்காக பிரார்த்திப்பதும் அவர்களில் ஒருவனாக அவனை நடத்துவதும் அவனை இனம் புரியா உணர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த ராஜ்யத்தின் எதிர்ப்பார்ப்பு, நம்பிக்கை அனைத்தும் அவன் தோள் சுமத்தப்பட்டிருப்பதை உணர்ந்தான். ஆனால் , பழைய முவாசம் போல் இல்லாமல், இம்முறை தப்பித்து செல்வதோ அல்லது ஒளிந்து கொள்வதோ ஒரு வழியாக அவன் மனதில் தோன்றவே இல்லை. அந்த நகரத்தின் மக்களின் போர் முழக்கமான அவர்கள் கூறிய “ஹர் ஹர் மஹாதேவ்” அவனது காதுகளில் எதிரொளித்துக் கொண்டே இருந்தது. முகலாயர்களின் போர் முழக்கமான “அல்லாஹ் ஹோ அக்பர்” என்பதை மறந்து அவர்களுடன் இணைந்து அவர்களின் முழக்கத்தை தானும் கூற வேண்டும் என ஒரு நொடி எண்ணினான். தான் தஞ்சம் கேட்டு வந்தபொழுது , தன்னைக் காப்பாற்றி அவர்களில் ஒருவனாக நடத்தி, இப்பொழுது அவனது வெற்றிக்கு பிரார்த்திக்கும் அவர்களை அவனால் வேறுபடுத்தி பார்க்க இயலவில்லை. அவர்களுக்காக அவன் செய்யக்கூடியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆக்ராவிற்கு விரைந்து சென்று தனது தாத்தாவை விடுதலை செய்வதே அது.
ஆக்ராவை அவர்கள் நெருங்கிய பொழுதே, அங்கே ஒரு பெரிய முகலாய படை தடைகளை ஏற்படுத்தி நகரத்தின் காவலில் இருந்தது தெரிந்தது. சாலைகளை எதற்கு தடுக்க வேண்டும் என புரியாததால், அங்கே இருந்த படைத்தலைவனை நோக்கி சென்றான் முவாசம்.
“வணக்கம் இளவரசே! உங்களை நாங்கள் இங்கே எதிர்பார்க்கவில்லை ” என்று முவாசத்தை வணங்கிய படைத்தலைவன் மத்திம வயதினனாய் பல வருடங்கள் முகலாய படையில் பணியாற்றியவனாய் தெரிந்தான்.
“என்னுடைய தாத்தாவும் பேரரசருமான ஷாஜஹானின் உடல்நிலையை பற்றி விசாரிக்க வந்துள்ளேன். அவர் உடல் நிலை சரியில்லை என செய்திகள் வந்தவண்ணம் உள்ளது”
“அல்லாஹ் கருணை உள்ளவர் இளவரசே! நாங்கள் இப்பொழுதான் கோட்டையில் இருந்து வருகிறோம். பழைய அரசர் நன்றாகவே உள்ளார்.”
“எனக்கு வந்த கட்டளையை நான் நிறைவேற்ற வேண்டும். அதற்கு நான் அவரை நேரில் சந்திக்க வேண்டும் ! எனவே நீ நகர்ந்து எனக்கு வழியை விடு!” மிகவும் அமைதியாக அதே சமயத்தில் உறுதியாகக் கூறினான் முவாசம்.
“கண்டிப்பாக இளவரசே ! அதே சமயத்தில் எனக்கு விதிக்கப்பட்ட கட்டளைகளை நானும் மீற இயலாது! உங்களுக்கு யார் கட்டளை இட்டார்கள் என கூறவும்.”
“நீ உன் எல்லைகளை மீறி பேசுகிறாய் ! நான் இளவரசன். கோட்டைக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் சென்று எவரையும் பார்க்க எனக்கு அதிகாரம் உள்ளது.”
“மன்னிக்கவும் இளவரசே ! எனக்கு விதிக்கப்பட்ட கட்டளையின் படி ஆக்ராவினுள் யாரும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு செல்ல அனுமதிக்க இயலாது.”
“இப்படி ஒரு கட்டளை விதிக்க யாருக்கு தைரியம் உள்ளது?”
“பேரரசரின் ஆணை இது.”
“பேரரசர் மரணப்படுக்கையில் உள்ளார்.”
“இக்கட்டளையை விதித்தது பேரரசர் ஆலம்கீர் அல்ல,அவரது மகன் பேரரசர் ஆஸம்.”
அந்த பதிலை கேட்டவுடன் முவாசம் எச்சரிக்கை அடைந்தான். அதுவரை ஷாஜகானின் ஆதரவாளர் என நினைத்த படைத்தலைவன் அவனது அத்தையின் ஆள் போல் தோன்றியது. இன்னும் ஆஸம் தாற்காலிக அரசராக அறிவிக்கப்படவில்லை. அதற்குள் அவனை பேரரசர் என அழைப்பது தேச விரோத காரியத்திற்கு சமம். ஆனால் , அந்த சிறு படையின் தலைவன் அவ்வாறு அழைப்பதே அவன் யாருடைய கட்டளையின் பேரில் அங்கே அனுப்பப்பட்டிருப்பான் என்பதைக் காட்டியது. அந்த கணத்தில், ஜெபுனிஷாவின் கவிதை வரிகள் முவாசத்தின் மனதில் தோன்றியது.
வந்துவிடு என் அன்பே, நான் தேய்ந்து நொந்து போயுள்ளேன்..
இதற்கு மேலும் போராட சக்தியும் இல்லை என் மனதில் உறுதியும் இல்லை
தில்லிக்கு வருவதை இதற்கு மேலும் தாமதம் ஆகக் கூடாது என்பது அவனது சகோதரியின் விருப்பம் என்பதை புரிந்து கொண்டான். தில்லி அரண்மனையில் அதிகாரத்தைக் கைப்பற்றும் வரை ஷாஜகானின் விடுதலை தாமதிக்கலாம், அதில் ஏதும் தவறில்லை. இந்த எண்ணம் தோன்றிய பின், மேலும் விவாதிக்காமல் தன் குதிரையை திருப்பினான். அதைக் கண்ட படைத்தலைவனின் முகத்தில் சிரிப்பு படர்ந்தது. தான் அந்த சமயத்தில் சண்டை போட்டால், அந்த சண்டையில் தன்னை கொல்லவோ அல்லது சிறைப்பிடிக்க செய்யவோ அவனுக்கு ஆணை வந்திருக்கும் என்பது முவாஸத்திற்கு நன்கு புரிந்தது. மெல்ல, ராஜா ஜெய் சிங் இருந்த இடத்திற்கு திரும்பினான் அவன்.
“இது ஒரு சூழ்ச்சி!” ஜெய் சிங்கிடம் மெதுவாய் கூறினான். ” ஜெபுனிஷா , என்னை தில்லிக்கு வரவே கூறியுள்ளாள், ஆக்ராவிற்கு அல்ல. ரவுஸனரா தனது நிலையை வலுப்படுத்திக்கொள்ளும் முன் நாம் அவளை வீழ்த்தியாக வேண்டும்” என ஜெபுனிஷாவின் திட்டத்தைக் கூறினான்.
அவள் முன்னே நடந்துக்கொண்டிருந்த மாற்றங்களை கேலி செய்தாலும், அந்த மாற்றங்களால், ஜெபுனிஷாவின் இதயம் கலங்கத்தான் செய்தது. ஆசை வார்த்தைகள், மிரட்டல்கள் மற்றும் தன்னிடம் இருந்த வலுவினால் தனது ஆதரவாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போனாள் ரவுஸனாரா. முல்லாக்களின் ஆதரவு முழுவதும் அவள் பக்கம் என்றானது. அதற்கு அடுத்து இருந்த பிரபுக்களின் ஆதரவு இரண்டாய் பிரிந்து பாதி பேர் அவளை ஆதரிக்க, மீதம் இருந்தவர்களோ இளவரசன் முவாசம் ஆட்சி புரிய வேண்டும் என விரும்பி அதனால் ஜெபுனிஷாவை ஆதரித்தனர்.
ஒரு பொம்மை அரசனாக ஆஸம் நியமிக்கப்பட்ட சில நாட்களிலேயே , தன்னை பேரரசியாக அறிவிக்க செய்து, அரச முத்திரையை உபயோகம் செய்யும் உரிமையும் பெற்றாள். அவுரங்கசீப்பின் மூத்த மனைவிகளுக்கான அரணமனையை அவன் மூலம் பறித்து தனதாக்கிக் கொண்டாள். அரசவைக் கூட்டங்களில், அவன் அருகேயே அமர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவனுக்கு கூறிக் கொண்டிருந்தாள். மொத்தத்தில் அதிகாரம் ஆஸமிடம் இருப்பது போல் தோன்றினாலும் அங்கே அவளின் ஆட்சியே நடந்துக் கொண்டிருந்தது.
இளவரசன் அக்பரின் உடல்நிலைத் தெரியதும் ஜெபுனிஷாவிற்கு வசதியாக இருந்தது. தன் நேரத்தி திட்டமிடலில் செலவளித்தாள். கவிதை குழுவின் கூட்டங்களை இரவு நேரத்தில் நடத்தினாள். ரவுஸனரா இந்தக் கூட்டங்களை தடை செய்யாவிடினும், அவுரங்கசீப்பின் ஒற்றர்கள் இப்பொழுது அவளுக்காக வேலை செய்கிறார்கள் என்பதை ஜெபோ அறிந்திருந்தாள். எனவே இந்தக் கூட்டங்களில் யார் கலந்துகொள்ளவேண்டும் என்பதை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்தாள். அவளது சகோதரிகள், மௌலானா அப்துல் காதர் பேடில், கலீம் கஷானி, சாப் தப்ரிஸி, கானி காஷ்மீரி மற்றும் அவர்களின் தற்காலிக வழிகாட்டியான அகீல் கான் அந்த கூட்டங்களில் கலந்து கொண்டனர். மிக ஆடம்பரமான உடை உடுத்தி , கூட்டத்தில் தரப்பட்ட எலுமிச்சை பானத்தையும் , ஒயினையும் பருகினார். இசைக்கு எதிரான அரசன் இல்லையென்பதால் சித்தார் ஒலி இசைக்க, பாடல்கள் பாடினார். முன்பு போல் முணுமுணுக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது.
ஜூபைதாத் தனது வரிகளை படிக்கத் துவங்கினாள்.
வீழ்ந்த உலகை நான் கேட்கிறேன்..
எனது ரட்சகன் எப்பொழுது வருவான்..
அவன் இல்லாத நேரத்தில் என் தலையும் சாய்ந்தது..
வலியினால் என் இதயம் மரத்து போய்விட்டது
முவாசம் எப்பொழுது வருவான் என ஜூபைதாத் வினவுகிறாள். ஜெபுனிஷா இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருந்தாள். அனைவருக்கும் பதிலை இறுதியில் தர தயாராக இருந்தாள். அடுத்ததாய் மிஹிருனிஷா படிக்கத் துவங்கினாள்.
நான் சொர்க்கத்தில் இருந்தேனோ
இல்லை இனிய கனவோ அது..
ஏனெனில் நான் கண்முழித்தது வேதனையில்
என் கூக்குரலை யாரும் கேட்கவில்லை..
ஒரு சிங்கத்தின் இடத்தில்
பாம்பு கர்ஜிக்க நினைக்கும் தருணத்தில்
என் அரண்மனையின் பாதை வழியாக
அது செல்லும் வழியெங்கும் விஷம் பரவும்
நான் செய்த ஆயிரக்கணக்கான பாவத்திற்கு
இறைவனிடம் மன்னிப்பை யாசித்தேன்
அவன் கருணையை நான் எங்கே கண்டுபிடிக்க
நான் எங்கே செல்ல வேண்டும்
மிஹிருன்னிஷாவின் வேதனையை ஜெபுனிஷா புரிந்து கொண்டாள். அவுரங்கசீப்பை விட கூடியவள் ரவுஸனாரா. எந்த வழியில் வேண்டுமானாலும் அவள் தோற்கடிக்கப்படவேண்டும். அந்த அறையில் இருந்த சில பிரபுக்களின் முகத்தை பார்த்து அவர்களின் மனநிலையை அறிய முயன்றாள். அவர்களுக்கும் கவிதைக்கும் எந்த சம்பந்தம் இல்லை. அங்கே அவர்களின் கண்ணெதிரிலேயே அவர்களின் தலைவரை பற்றி என்ன சொல்லப்படுகிறென்று அவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.
வயதான சிங்கம் அதன் வாரிசுகளால்
புறக்கணிக்கப்பட்டு குகையில் உறங்குகிறது
அதை அதன் பழைய
பெருமை அடைய செய்யுங்கள்..
இந்த காட்டை அது மீண்டும் முன்பு போல்
சொர்க்கமாக மாற்றட்டும்
தன் இறுதி நாட்களை தன்
தகுதியான மகனை தனக்கான
வாரிசாக மாற்றுவதில் செலவழிக்கட்டும்
ஜீனத்தின் இந்த கவிதை மற்றவர்களுடையது போல் இல்லாமல் வெளிப்படையாய் இருந்ததை கண்டு ஜெபுனிஷாவிற்கே கொஞ்சம் பயம் வந்தது. ரவுஸனாராவின் ஒற்றர்களாய் உள்ளே வந்திருந்தவர்கள் இதை புரிந்துகொண்டிருப்பார்களோ என்று யோசித்தாள். ஆனால் அவர்களின் கவனமெல்லாம் அங்கே தரப்பட்ட மதுவின் மேல் தான் இருந்தது.
முதலில் அவர்களில் ஒருவன் கவிதையை பாராட்டினான். பல ஆண்களின் பாராட்டு குரல்கள் அதை தொடர்ந்தது. எங்கே தான் பாராட்டாவிடில் தனக்கு கவிதை தெரியாது என நினைத்துவிடுவார்களோ என்றெண்ணியே அவ்வாறு நடித்தனர். இதைக் கண்டா ஜெபுனிஷா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
அதே சமயத்தில் அங்கே இருந்த பெண்களில் ஒருவள் “ஜெபோ ! நீ எதாவது புதிய கவிதை எழுதி இருக்கிறாயா?” எனக் கேட்டாள் .
ஜெபுனிஷா, தன் கவிதை அங்கே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்ற நம்பிக்கையில் கவிதையை படிக்கத் துவங்கினாள்.
கொலைகாரன் அன்பை தனது சேணத்தில் பூட்டி
தனது எதிரிகளை வீழ்த்தினான்
மனிதர்களின் ரத்தம் கொண்டு
பூமியின் நெற்றியை சிவந்த நிறமாக்கினான்
சொர்க்கம் காடாய் மாறியது
காடு மீண்டும் சொர்க்கமாகும்
காப்பாளனுக்காக காத்திருங்கள்
இவ்வுலகின் பாவங்களை அகற்ற வருவான்
தனது கவிதையை இதனுடன் நிறுத்திக் கொண்டாள். அவுரங்கசீப் பற்றியோ அல்லது ரவுஸனாரா பற்றியோ மறைமுகமாகக் கூட சொல்வது அபாயத்தை வரவழைக்கும் என எண்ணினாள். தான் சொல்ல வேண்டிய விஷயத்தை தனது வரிகள் தெளிவாய் விளக்கியதாக நினைத்தாள். முவாசமின் வருகை ரவுஸனாராவின் பயங்கரங்களுக்கு ஒரு முடிவை கொண்டுவரும்.
ஆயிரக்கணக்கான ராஜபுதன வீரர்கள் பின்னே அணிவகுத்து வர, தில்லியின் எல்லையை எட்டியிருந்தான் முவாசம். அவன் முன்னே பனிக்காலத்து வெயில் பட்டு பழுத்த ஆப்பிள் பழம் போல செங்கோட்டை கண்ணில் பட்டது. தில்லியின் எட்டு வாயில்களில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் வியாபாரத்திற்காக உபயோகிக்கும் பிரதான வாயில்கள் அடைக்கப்பட்டிருந்தாலும் , பிரயாணிகள் உபயோகிக்கும் சிறிய வாயில் திறந்தே இருக்கும் என முவாசம் எண்ணினான்.
தில்லி கோட்டைவாயிலில் நுழைவதற்கு முன் தன் படையை நிறுத்தினான். அவனது செய்கையில் அவன் பின்னே வந்த வீரர்கள் ஆச்சரியம் அடைந்தனர். “அதிகப்படியான படையுடன் உள்ளே நுழைவது அவர்களை எச்சரிக்கை அடைய செய்யும். நீங்கள் உங்கள் படையுடன் இங்கேயே காத்திருங்கள். நான் உங்கள் படையின் சிறந்த பத்து வீரர்களுடன் நகருக்குள் செல்கிறேன்” என தன் அருகில் இருந்த ராஜா ஜெய் சிங்கிடம் கூறினான்.
அவனது கூற்றில் இருந்த உண்மையை புரிந்து கொண்ட அவர், “தன் படைத்தலைவனை அழைத்து “ஆனால் அவசரப்படாமல் , நிதானமாக நகருக்குள் செல்லுங்கள் இளவரசே! சமீப நிகழ்வுகள் பற்றி ஏதும் அறியாதவர் போல் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவசரப்படுவது ஆபத்தை வரவழைக்கும்” என்று அவனை எச்சரித்தவர் தன் படைத்தலைவனை அழைத்து ” உங்களுக்கு உதவித் தேவைப்படும் என்றால், மஞ்சள் நிற கொடியை பறக்கவிடவும். அது எங்களுக்கு நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள் என புரியவைக்கும்” என அவனுக்கு கட்டளை இட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து வீரர்களுடன் தன் குதிரையில் நிதானமாக நகரத்தை நோக்கி சென்றான் இளவரசன். நகரின் நுழைவாயிலை நெருங்கியவன், அதன் பிரதான வாயில்கள் திறந்திருப்பதை கண்டு வியப்புற்றான். ஒரு வேளை, தன்னை உள்ளே வர அனுமதித்து, பின் தன்னை கைது செய்ய திட்டமிட்டுள்ளார்களோ என யோசித்தான். அதே சமயம், தன்னை அவர்கள் ஒரு ஆபத்தாய் நினைக்கவில்லை என்பது கூட காரணமாக இருக்கலாம். அப்படி அவர்கள் நினைத்தால் அரியணையை பிடிப்பது தனக்கு சுலபமாக இருக்கும் என எண்ணினான்.
ராஜபுதனத்தின் சிறந்த வீரர்கள் பத்து பேர் நெருக்கமாய் தொடர, நகரத்தினுள் நுழைந்தான் முவாசம். அவனது இடையில் குறு வாளும், நீண்ட கத்தியும் தொங்கிக்கொண்டிருந்தன. ஒரு கை, குதிரையின் கடிவாளத்தைப் பற்றி இருக்க, மறு கை இடையில் இருந்த கத்தியை எப்பொழுதும் வேண்டுமானாலும் உருவ வசதியாக அதைப் பற்றி இருந்தது. நகரத்தினுள் நுழைந்த பின் அங்கு எதுவும் மாறாதது கண்டு ஆச்சரியமடைந்தான். அவுரங்கசீப் நோயுற்று படுக்கையில் வீழ்வதற்கு முன்பிருந்த நிலை நீடித்தது. பெண்கள், தலையை துணியால் மறைத்தே நடந்தனர். அனைத்து ஆண்களும் நீண்ட தாடி வளர்த்திருந்தனர். இசையும் கலையும் இன்னுமும் தடை செய்யப்பட்டிருந்தது. அவுரங்கசீப்பின் உயிரற்ற உடலை கண்டால் மட்டுமே தங்களை பிடித்த கஷ்டங்கள் நீங்கியது என மக்கள் நம்புவார்கள் என எண்ணிக்கொண்டே சாந்தினி சவுக் பகுதியில் நுழைந்தான். அந்தப் பகுதியில் நடுவே ஓடிய வாய்க்காலில் இரவு நேரத்தில் நிலவின் ஒளி பட்டு மின்னும். எனவே அதற்கு அந்த பெயர் வைத்தனர்.
செங்கோட்டையின் அருகே வந்தவன், அதன் பிரதான வாயில் அடைக்கப்பட்டிருந்ததை கவனித்தான். தேவைப்பட்டால் ராஜா ஜெய் சிங்கை வரவழைக்க தயாராக அங்கிருந்த காவலர் அருகே சென்றான். அங்கிருந்த காவலர்கள் அவன் அருகே வந்தவுடன் கம்பீரமாக “கதவை திறவுங்கள்” என ஆணையிட்டான்.
“என்னை மன்னியுங்கள் இளவரசே! ஆனால், அரசரின் பிரதிநிதியான மகாராணியின் உத்தரவின் பேரில் மட்டுமே கோட்டை கதவுகளைத் திறக்க இயலும்.”
அதைக் கேட்டு கோபமுற்ற முவாசம், தன் வாளை உருவி அவன் கழுத்தினில் அதன் கூர் முனையை வைத்து ” இப்பொழுது பேரரசரின் பெரிய மகன் நான்தான். இப்பொழுது கதவை திறக்கிறாயா அல்லது உன் தலையை சீவட்டுமா?” என கர்ஜித்தான்.
“மீண்டும் என்னை மன்னியுங்கள் இளவரசே! நான் கோட்டையின் கதவுகளை திறந்தால் எனக்கு மரண தண்டனைதான் விதிக்கப்படும். இப்பொழுதும் அரச சபை கூடியுள்ளது. அவர்களுக்கு செய்தி அனுப்புகிறேன். இதற்கு சிறிது நேரம் தான் ஆகும். ஆனால் இங்கு யாரும் உயிர் சிந்த தேவை இருக்காது” என நடுக்கத்துடன் தனது கடினமான நிலையை விவரித்தான்.
இளவரசன் ஆஸம், தன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் பொறுப்புகள், கடமைகள் பற்றி ஏதும் அறியாதவனாய் மயில் சிம்மாசனத்தில் வீற்றிருப்பதை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ஜெபுனிஷா. அவன் அருகில், முகத்தை திரையிட்டு மறைத்துக் கொண்டு ரவுஸனாரா நின்றுக் கொண்டிருந்தாள். ஜெபுனிஷாவின் கவிதை குழுவின் கவலைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவர்களை அமைதியாக வைத்திருக்க ஜெபுனிஷா செய்த செயல்கள் பலனளிக்கவில்லை. அவையிலும் இதே நிலை இருப்பதை ஜெபுனிஷாவினால் உணர முடிந்தது. முல்லாக்கள் மற்றும் பிரபுக்களின் உணர்ச்சியற்ற முகங்கள் அவர்களின் மனநிலையை வெளிப்படுத்தியது. அங்கு நடந்த தேர்வு யாருக்குமே விருப்பமில்லை ஆனால் அவர்களுக்கு வேறு வழியுமில்லை. பேரரசர் ஆலம்கீர் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருக்க, அவனது தந்தை ஷாஜகானோ சிறையில் மனச்சோர்வுடன் இருந்தார். இளவரசன் சுல்தானோ தேச துரோக குற்றச்சாட்டில் சிறப்படுத்தப்பட, இளவரசன் முவாசத்தின் இருப்பிடம் யாருக்கும் தெரியாத நிலை. அத்தகைய ஒரு கடினமான சூழ்நிலையிலும் கூட, ரவுஸனாராவை ஆட்சி செய்ய அனுமதிப்பது என்பது முல்லாக்களுக்கு கூட ஏற்புடையதாக இல்லை. ஆண்களை ஆட்சி செய்ய பெண்கள் படைக்கப்படவில்லை என்பதில் அவர்கள் ஒரே மனதாக இருந்தனர். நன்கு படித்தவளாய், ஒரு பேரரசரின் பேத்தியாக, மற்றொரு பேரரசரின் மகளாய் இருந்த பொழுதும் இந்த காரணத்தினால் அரச பதவியை கைப்பற்றி நாட்டை காப்பாற்றக் கூடிய நிலையில் ஜெபுனிஷாவும் இல்லை.
நீதிபதி , அவுரங்கசீப்பின் பெயரிலான பிரகடனத்தை அவையில் படிக்கத் துவங்கினார். அவையில் இருந்த யாருமே அந்தப் பிரகடனம் ஆஸமின் பெயரில் இருக்க வேண்டும் என ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. காரணம், அவன் தாற்காலிக அரசனாக நியமிக்கமட்டுமே பட்டான். இன்னும் அரசனாக மகுடம் சூடவில்லை.
“அவை நடவடிக்கைகள் துவங்கட்டும்” என ஆஸம் சிறுவனுக்கே உரிய குரலில் கூறியபொழுது, அது அவையை அவமானப்படுத்தும் ஒன்றாக இருந்ததாக ஜெபுனிஷா உணர்ந்தாள். அவளது தந்தையின் அந்த அவை ஒரு சிறுவனின் குரலுக்கு பதில் கூறுவதை எண்ணி அவளது மனம் கூனி குறுகியது.
“அரசே! முதல் வழக்கு , ஒரு விதவையிடம் இருந்து ரொட்டியை திருடியவனை பற்றியது” என பிரதம அமைச்சர் அன்றைய நடவடிக்கையை துவக்கினார்.
“அந்த அயோக்கியனுக்கு மரண தண்டனை வழங்குங்கள்”
இந்த உத்தரவை தொடர்ந்து அவையில் மெல்லிய முணுமுணுப்பு எழத் துவங்கியது. ரவுஸனாரா எதோ சொல்ல முன்வர அவளை சைகையினால் நிறுத்திய தலைமை முல்லா பைரம் கான், “அரசே! அனைத்து தவறுகளுக்கும் மரண தண்டனை வழங்கக்கூடாது. எந்த எந்த தவறுகளுக்கு என்ன என்ன தண்டனைகள் என சட்டம் உள்ளது.” என எடுத்துரைத்தான். ஒரு சிறுவனுக்கு போதிக்கும் ஆசிரியர் போல எப்படி தண்டனை வழங்க வேண்டும் என்று விவரித்தான்.
ஈடு இணையில்லா முகலாய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனம் , வெறிபிடித்த முல்லாக்களால் வழிநடத்தப்படும் ஒரு சிறுவனின் கையில் வீழ்ந்துவிட்டதை எண்ணி சோகமடைந்தாள் ஜெபுனிஷா. அதே நேரத்தில் , அவையின் வாயிலில் ஏற்பட்ட சலசலப்பு அனைவரின் கவனைத்தையும் அங்கே திருப்பியது. என்ன நடந்தது என தெரிந்து கொள்ள ஆர்வமாய் அங்கே கவனித்தனர். பெண்களின் நடுவே உருந்த ஜெபுனிஷாவும் நுனிக்காலில் நின்று எட்டி என்ன நடக்கிறது எனப் பார்த்தாள். கூட்டத்தின் நடுவே வழி ஏற்படுத்திக் கொண்டு ஒரு படைவீரன் வந்து கொண்டிருப்பதை அனைவரும் பார்த்தனர். அரச சபை உடனடி கவனம் செலுத்த வேண்டிய அளவையும் பெரிய குற்றம் ஏதேனும் நிகழ்ந்ததா இல்லை எதிரிகள் யாரேனும் படையெடுத்து வருகிறார்களா ? ஒரு சாதாரண படைவீரன் அரச சபையின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய காரணம் என்ன என ஜெபுனிஷா குழம்பினாள். வேகமாய் வந்த படை வீரன்,அரச சபை பாதுகாப்பு படை தலைவனிடம் தான் வந்த காரணத்தை விளக்கினான் .
அவனை சொல்வதை கவனமாய் உள்வாங்கிய தலைவன் அவையின் முன் வந்து “அரசே! இளவரசன் முவாசம் கோட்டையின் வாயிலில் காத்திருக்கிறார். அவர் கோட்டையில் நுழைய உங்கள் அனுமதி வேண்டி ஆள் அனுப்பி உள்ளார் ” என நிலைமையை விளக்கினான்.
அதைக் கேட்டதும் சபையில் பலத்த கரகோஷம் எழுந்தது. ஜெபுனிஷாவின் மனதில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. ரவுஸனாராவையும் , முல்லாக்களையும் தவிர்த்து அனைவருமே முவாசத்தை வரவேற்று ஒலி எழுப்பினர்.
புலியை கண்ட மான் போல் சிம்மாசனத்தில் இருந்து இறங்கிய ஆஸம் பயத்தில் ரவுஸனாராவை இறுக கட்டிபிடித்துக் கொண்டு “அவனை உள்ளே அனுமதிக்காதீர்கள் அத்தை. அவன் என்னை கொன்றுவிடுவான்” என உளறத் துவங்கினான்.
பயத்தில் உளறிக் கொண்டிருந்த அந்த சிறுவனை தன்னுடன் இறுக்கி அணைத்து சமாதானப்படுத்த முயன்றால் ரவுஸனாரா. ஆனால் , தாற்காலிக அரசனாய் நியமிக்கப்பட்ட அந்த சிறுவனின் பயமும் உளறலும், சபையில் இருந்தவர்களை ஆச்சரியமடைய செய்தது. ஆனால், ஜெபுனிஷா இதை எதிர்பார்த்திருந்தாள். மனதில் தைரியமும் , நம்பிக்கையும் இல்லாத ஆஸம் , ஒரு பொழுதும் சக்கரவர்த்தி அக்பருக்கு ஈடாக மாட்டான் என்பது அவளுக்கு நன்கு தெரியும். தன் சகோதரனின் பெயரைக் கேட்டவுடன் பயந்து ஒளிந்து கொள்ளும் இவனையா அடுத்த அரசனாக நியமிப்பது ? இவன் அரசனானால் ராஜ்ஜியம் சிதறுண்டுவிடும் என எண்ணினால் ஜெபுனிஷா. அவளது மனதில் சந்தோஷமும் துக்கமும் ஒரே நேரத்தில் அலைமோதியது.
” ரவுஸனாராவையும் அவளது ஆதரவு பெற்ற தற்காலிக அரசனையும் முவாஸம் வீழ்த்துவானா ?” ஜூபைதாத் ஜெபுனிஷாவிடம் மெல்ல வினவினாள்.
“அதற்கு அவசியமே இல்லை என்று எண்ணுகிறேன். முவாஸம் என்ற பெயரை சொன்னவுடனேயே இவர்களின் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது என எண்ணுகிறேன். சந்தேகம் இருந்தால் அங்கே பார்” என சொல்லிய ஜெபுனிஷா காட்டிய திசையில் பார்த்த ஜூபைதாத்திற்கு தனது சிரிப்பை அடக்க முடியவில்லை. அங்கே ஆஸம் பயத்தில் சிறுநீர் கழித்திருந்தான். விரைவில் அவளது சிரிப்பு அவை முழுவதும் பரவியது.
அவையில் பரவிய சிரிப்பிற்கு முதலில் காரணம் புரியாமல், பின் அங்கே கீழே இருந்த சிறுநீரை பார்த்தவுடன், அவனை அணைத்தவாறே பின்னே சென்றாள் ரவுஸனாரா. ஆனால் ஏற்கனவே பயந்திருந்த ஆஸம் அவளின் இழுப்பிற்கு செல்லாமல் அடம்பிடிக்க , அவனை மீண்டும் ரவுஸனாரா இழுக்க , ஈரமாய் இருந்த மார்பிள் தரையில் கால் வழுக்கி அவனுடைய சிறுநீரின் மேலேயே விழுந்தான் ஆஸம். இது அவையோரின் சிரிப்பை இன்னும் அதிகரித்தது. ஜெபுனிஷாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. முவாஸத்தை பற்றி எந்த செய்தியும் இல்லாமல் துவங்கிய தினம், முவாஸம் சிம்மாசனத்தில் அமர, ரவுஸனாராவின் தோல்வியுடன் முடியும் போல் இருந்தது.
“எழுந்திரு” என ஆஸமிடம் கோபமாக சொன்ன ரவுஸனாரா,” முவாஸத்தை கைது செய்ய ஒரே ஒரு கட்டளைதான் நீ இட வேண்டி இருந்தது. அதை செய்யாமல்… ” அவமானத்தில் வார்த்தைகள் வராமல் தவித்தாள். அனைவரும் இருந்த சபையில் அவமானப்பட்டதை தாங்க அவளால் இயலவில்லை. இன்னும் சிரிப்பு அடங்காத அவையை நோக்கி அவள் பார்த்த ஒரு பார்வையில் அங்கே நிசப்தம் குடியேறியது. மறுகணம், ஆஸமை இழுத்துக்கொண்டு அவையில் இருந்து மறைந்தாள்.
“அரச கட்டளை ஏதும் இல்லாத நிலையில், கோட்டையின் கதவுகளை திறந்து, இளவரசர் முவாஸத்தை உள்ளே அனுமதிக்க கட்டளையிடுகிறேன்” என காவலாளிக்கு உத்தரவிட்டார் பிரதம அமைச்சர்.
ஜெபுனிஷா தனது புன்னகையை அடக்க மிகவும் சிரமப்பட்டாள். குதிரையின் குளம்புகளின் ஓசைக் கேட்டு எட்டிப்பார்த்த அவளின் பார்வையை அங்கே இருந்த தூண்கள் மறைத்தது.
குதிரையில் இருந்து முவாஸம் இறங்கியவுடன் அங்கே ” இளவரசர் முவாஸம் வாழ்க” என்ற கோஷம் அந்த அவையை நிரப்பியது. தன்னுடன் வந்த வீரர்களுடன் அவையின் மத்திய பகுதியை நோக்கி முவாஸம் செல்வதை பார்த்தாள் ஜெபுனிஷா. அவன் மயில் சிம்மாசனத்தை நோக்கி நடக்க, கோஷமும் அதிகரித்தது. ஜெபுனிஷாவும் அவர்களுடன் சேர்ந்து கோஷமிட்டாலும், தனது உற்சாகத்தை கட்டுப்படுத்திக் கொண்டாள். முவாஸம் , வேலைப்பாடுகள் கொண்ட தலைப்பாகை அணிந்து சீர்படுத்தப்பட்ட தாடியுடன் கம்பீரமாய் நடப்பதை பார்த்து, முதல் முறையாக அவன் ஒரு ராஜாவாக தகுதியுள்ளவனாக உணர்ந்தாள் ஜெபுனிஷா.
அவன் அவையில் தன் வீரர்களுடன் முன்னேறி செல்ல செல்ல, அங்கே இருந்த கூட்டம் பிரிந்து வழிவிட்டது. வலிமையால் கிழிக்கப்படும் துணி போல் அங்கே இருந்தவர்கள் இருபுறமும் ஒதுங்கினர். மயில் சிம்மாசனத்தின் அருகே வந்தவன், அதில் அமராமல் அவையை பார்த்து நின்றான். இந்த செய்கை அவையினரிடையே அவனது மதிப்பை அதிகப்படுத்தியது.
“உங்கள் வரவு நல் வரவாகட்டும் இளவரசே!” அவன் முன் குனிந்து அவனை வரவேற்றார் பிரதம அமைச்சர்.
“எப்படி தலை இல்லாதவன் உயிர் வாழ இயலாதோ , அதே போல் தலைவன் இல்லாத தைமூரின் அரசும் நீண்ட நாள் நீடிக்காது”
அமைச்சரின் இந்த பேச்சு ஜெபுனிஷாவிற்கு புன்னகையை வரவழைத்தது. முவாஸத்தின் வருகை சூழ்நிலையை முற்றிலுமாக மாற்றி விட்டது. முன்பு எதிர்த்தவர்கள் கூட இப்பொழுது முவாஸத்தை ஆதரிப்பது போல் தோன்றியது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முகலாய அரசனான தைமூர் இந்தியாவின் மீதி படையெடுத்து வந்து இந்தியாவின் செல்வங்களை கொள்ளையடித்து தனது நகரமான சாமர்கண்டிற்கு எடுத்து சென்றான். அவனுக்கு பல தலைமுறைகளுக்குப் பின் , அவனது வழித்தோன்றலான பாபரும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தான். இம்முறை, தனது மூதாதையர் போல் இல்லாமல், இந்தியாவில் முகலாய அரசை நிறுவினார் பாபர். தைமூரின் முதல் படையெடுப்பே இந்தியாவில் முகலாய பேரரசை நிறுவ அடிப்படைக் காரணம் என நம்பிய முகலாயர்கள் தங்கள் அவையை ” தைமூரின் அவை” என பெருமையாக கூறிக் கொண்டனர்.
“அமைச்சரே! என்னுடைய வீட்டையும், நாட்டையும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றவே நான் வந்துள்ளேன். இங்கே அவையில் இருப்பவர்களின் சம்மதத்துடன், இந்த அரியணையில் அமர்ந்து பேரரசராக என் பெயரில் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என தன் நோக்கத்தை மறைக்காமல் வெளிப்படுத்தினான்.
தலைமை முல்லா முன்னே வந்து குனிந்து வணங்கி “இந்த அவை அனுமதித்தால் சில விஷயங்களை கூற விரும்புகிறேன்” என சொல்லி நிறுத்த, அமைச்சர் அவனை தொடர சைகை காட்டியவுடன் “சக்ரவர்த்தியாக பிரகடனம் செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல. இஸ்லாமின் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையான வழிப்பாடுகள் மற்றும் சரியான சடங்குகளுடன் செய்யப்படாவிடில், அல்லாஹ் அரசை ஆசிர்வதிக்கமாட்டார். நீங்கள் இத்தருணத்தில் பொறுமை காப்பது அவசியமாகும்” என வழிமுறைகளை விவரித்தார்.
இதைக் கேட்டவுடன் முவாஸத்தின் கண்களை மின்ன முகம் இறுகியது. மெல்ல ஜெபுனிஷா இருந்த பக்கம் பார்த்தான். ஆனால் அங்கிருந்து அவளால் எந்த யோசனைகளும் தெரிவிக்க இயலவில்லை. இது அவனே சிந்தித்து செயல்பட வேண்டிய தருணமாகும்.
” அவர் சரியாக சொல்லி உள்ளார். முறையான சடங்குகளும், வழிப்பாடுகளும் மிக அவசியமாகும். அதுவரை இளவரசர் முவாஸம் சிறிது ஓய்வெடுக்கலாம்” என முல்லாவின் கூற்றை பிரதம அமைச்சரும் ஆதரித்தார்.
“நான் ஓய்வெடுக்க இங்கே வரவில்லை. நான் பல நாட்களாக பிரயாணித்துதான் இங்கே வந்துள்ளேன். இது நாட்டை காக்கவேண்டிய தருணமாகும். இந்த சடங்குகளை ஒதுக்கி வையுங்கள். நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன” தன் கருத்தில் பிடிவாதமாய் இருந்தான் முவாஸம்.
“ஒவ்வொரு முகலாய பேரரசரும் இதை பின்பற்றியுள்ளனர். இளவரசே! உங்கள் தந்தையின் சிம்மாசனத்தை காப்பாற்ற சபதம் எடுத்துள்ளீர்கள். ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்? சில நாட்கள் கொண்டாட்டங்கள் நடக்கட்டும். அதற்குள், ஒரு பேரரசருக்கு உரிய வகையில் உங்கள் பதவி ஏற்ப்பிற்கு நாங்கள் திட்டமிடுகிறோம்” இம்முறை முல்லாவின் வார்த்தைகள் சமாதானப்படுத்தும் விதத்தில் ஒலித்தன.
முல்லாவின் வார்த்தைகள் முவாஸத்தின் கோபத்தை கொஞ்சம் தணித்திருந்தது. ” உங்கள் வார்த்தைகளை நான் ஏற்கிறேன். ஆனால் அதற்கு முன் சிறையில் இருக்கும் என் தாத்தா ஷாஜகானையும், என் அத்தை ஜெகன்னாரவையும் முதலில் விடுவியுங்கள். அவர்கள் என் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளட்டும்.”
ஷாஜகானின் மத சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரியான முல்லாவோ ” அரச கட்டளை இல்லாமல் அதை செய்ய இயலாது” என எதிர்த்தார்.
“நான் பதவி ஏற்பதை எந்தவித சந்தேகமும் இல்லாமல் நீங்கள் ஏற்றுக்கொள்வதாக நான் நம்ப வேண்டுமானால் , அவர்கள் இருவரையும் சிறையில் இருந்து விடுவிப்பதில் உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது என நான் எண்ணுகிறேன்”.
தங்கள் கட்டளைகளும், பேச்சும் வெகு நாட்களுக்கு எதிர்க்கப்படுவதை கண்டு செய்வதறியாமல் நின்றனர் முல்லாக்கள்.
” உங்களுக்கு இருப்பது இரண்டுவிதமான வழிகளே. ஒன்று, என்னை இப்பொழுதே பேரரசராக பிரகடனம் செய்யுங்கள், இல்லையேல் சடங்குகளும், வழிப்பாடுகளும் நடக்கட்டும். அதன் பின் நான் பதவி ஏற்கிறேன். நீங்கள் இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்தால் , அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற உங்கள் வருங்கால அரசரின் ஆசையை நிறைவேற்றுங்கள்.”
இதைக் கேட்டு ஜெபுனிஷா ஆச்சரியம் அடைந்தாள். அவர்களின் வார்த்தைகளை கொண்டே அவர்களை மடக்கிய முவாஸம் அவளுக்கு புதிதாய் இருந்தான். அதுவரை அவன் செயல்பட்டது எல்லாம் அவளுடைய திட்டத்தின் படியே. ஆனால் கடைசியாக முல்லாக்களை மடக்கியது அவளது திட்டம் அல்ல. இது அவனது நகர்வு.
முவாஸத்தின் வார்த்தைகளுக்கு எதிராய் ஏதும் பேச இயலாத முல்லா ” உங்கள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் விடுதலை செய்து கொள்ளுங்கள். ஆனால், பேரரசர் ஆலம்கீர் உடல் நலம் பெற்று மீண்டும் அரியணை ஏறும் சமயத்தில் இந்த செயல் அவருக்கு மகிழ்ச்சியை தராது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று அவனின் விருப்பத்திற்கு இணங்கினார்.
“அவுரங்கசீப் உடல் நலம் சரியானால்… ” ஜெபுனிஷா மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.
11. பேரரசர் முவாஸம்
சொல்வீர் குழுவினரே நான்தான் பாவம் செய்தேனோ
இந்த பாவத்தை நான்தான் சுமக்க வேண்டுமோ
ஆலம்கீரின் மகன்களில் பலவீனமாக கருதப்பட்ட முவாஸம் “தைமூர் சபையின் ஏழாவது முகலாய பேரரசராக” பதவியேற்க போகிறான். அவன் எப்படி பட்ட அரசனாக இருப்பான் என்று ஜெபுனிஷா எண்ணிக்கொண்டிருந்தாள். அனைவரையும் அனுசரித்து அனைத்து மதங்களையும் அனுசரித்து செல்வானோ அல்லது அவனது தந்தையை போல் மதவெறி பிடித்தவனாக இருப்பானோ என்ற ஆராய்ச்சிக்கு விடையேதும் கிட்டவில்லை. அவளது நம்பிக்கைக்குரியவளும் தங்கையுமான ஜூபைதாத் அவளை அமைதிப்படுத்த முயன்றாள்.
“யார் சிறந்த அரசன் ஆவார் அல்லது மோசமானவராக இருப்பார் என நம்மால் கணிக்க இயலாது. எதிர்பாரா தருணங்களில் மிக சிறந்த சம்பவங்கள் நடந்தேறும்” என ஜெபுனிஷாவின் கேள்விகளுக்கு பதில் அளித்தாள்.
ஜெபுனிஷா முகலாயர்களின் வரலாற்றை சொல்ல துவங்கினாள். ஒரு நூற்றாண்டுக்கு முன்பாய் பாபர் மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்ததில் இருந்து இந்தியாவில் முகலாய வம்சத்தின் வரலாறு துவங்கியது. பாபருக்கு பின் ஹுமாயுன் அரியணை ஏறினான். ஆனால் இளம் வயதிலேயே அவன் மரணிக்க, சிறுவனாக இருந்த அக்பர் ஆட்சி பீடத்தில் அமர்ந்தான். அக்பரின் பெயரை சொன்னவுடன், ரவுஸனாராவின் அர்த்தமற்ற ஒப்பீடு அவளுக்கு நினைவிற்கு வர அவளது முகம் இறுகியது. சிறுவனாக இருந்தாலும், அக்பர் அரசவை விஷயங்களை சரியாக புரிந்துகொண்டு நடந்தான். ஆனால் ஆஸமோ சகோதாரனின் பெயரைக் கேட்டவுடன் பயந்து நடுங்கினான். அவனையா அக்பருடன் ஒப்பிடுவது ?
“அமைதியாகு ஜெபோ. ரவுஸனாரா அவளால் முடிந்தது அனைத்தையும் செய்தாள். ஆனால் இறுதியில் நாம்தான் வெற்றிப் பெற்றோம்.” என மீண்டும் அவளை சாந்தப்படுத்தினாள் ஜூபைதாத்.
கண்ணை மூடி தன்னை அமைதிப்படுத்திக் கொண்டாள் ஜெபோ. பேரரசர் அக்பரின் கீழ், முகலாய அரசு பல உன்னதங்களை அடைந்தது. பல வருட மரபை மீறி, ஹிந்து குடும்பத்துப் பெண்ணை திருமணம் செய்து இரு மதங்களுக்கு இடையே இருந்த இடைவெளியை குறைக்க முயன்றார் அக்பர். அவருடைய மதசார்பற்றகொள்கைளின் காரணமாய் முகலாய பேரரசு பரப்பளவில் விரிந்து பரவியது.
தான் மடித்துக் கொண்டிருந்த போர்வைகளை அங்கிருந்த சந்தன மரத்தால் செய்த பெட்டியில் வைத்துக் கொண்டே ” தனக்கு பின் வருபவர்கள் தன்னை போலவே சிறந்தவர்களாக இருப்பார்கள் என அக்பர் நினைத்தார். ஆனால், அவருடைய மகனான ஜஹாங்கீரே போதைக்கு அடிமையாவான் என யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.” என வரலாற்றை தொடர்ந்தாள்.
தேநீரை பருகிக் கொண்டிருந்த ஜெபுனிஷா குறும்பாய் புன்னகைத்துக் கொண்டே ” பல நாட்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவிற்கு போதை பொருள் பழக்கம் இருந்ததாம்” என்றாள்.
இதைக் கேட்டதும் அவளருகே வந்து அவளைக் கட்டியணைத்துக் கொண்டே ” அந்நாட்களில் யார் அரசாண்டார்கள் ஜெபுனிஷா?” என வினவினாள் ஜூபைதாத்.
சிரித்துக் கொண்டே தன் கைகளால் அவள் கைகளை பற்றிய ஜெபுனிஷா ” அவருடைய பலமான ராணி நூர்ஜஹான்” என்றாள்.
இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
“என்னைப் போன்ற இளவரசிகளுக்கு நூர்ஜஹான் ஒரு பெரும் புதிர். தீய எண்ணங்கள், மற்றவர்களை அடக்கி ஆளும் தன்மை, சட்டென்று கோவப்படும் தன்மை இவை அனைத்தின் மொத்த உருவமாய் இருந்தாள் அவள். அவளுக்கென்று பிடிவாதமான எண்ணங்கள் இருந்தன. தன்னை ஆண்களை விட சிறந்தவள் என்றே எண்ணினாள் அவள். முவாஸம், ஆளத் தகுதியற்றவனாய் இருந்தால் நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது?” என நூர்ஜஹானில் துவங்கி முவாஸத்திடம் முடித்தாள் ஜூபைதாத்.
விளையாட்டாய் அவள் கையில் குத்திய ஜெபுனிஷா “கேலி பேச்சுகள் போதும்”. அந்த உரையாடல் அவளது மனநிலையை மாற்றி இருந்தது. முன்பை விட உற்சாகமாய் இருந்தாள். “ஆனால் நீ முக்கியமானதொரு விஷயத்தை கூறினாய். எப்படி பட்ட அரசனாய் முவாஸம் இருப்பான்? அக்பரை போல் இருப்பானா இல்லை தாத்தாவின் வழியில் மிகப் பெரிய கட்டிடங்களை காட்டுவானா?. ஷாஜகானின் காலத்தில்தான் செங்கோட்டை புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் தாஜ்மஹால் போன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டன. முவாஸம் அவரது வழி நடப்பான் என்றே தோன்றுகிறது.”
“அப்பாவை போல் இல்லாமல் இருக்கும் வரை எனக்கு எந்த பிரச்னையும் இல்லை” என்று கூறிய ஜூபைதாத் தன் பதக்கத்தை தூக்கிப் போட்டு பிடித்தாள்.
அவுரங்கசீப் முகலாய பேரரசின் ஆறாவது மன்னன் ஆவான். தன் முன்னோர்கள் பின்பற்றிய வழிமுறைகளை பொதுவிலேயே பலமுறை தூற்றி இருக்கிறான்.முஸ்லீமை தவிர்த்து மற்ற மதத்தவரை காஃபிர்களாய் நினைத்தான். அவனுடைய இளம் வயதில் இருந்தே இந்து கோவில்களையும், சிலைகளையும் இடிப்பதில் மகிழ்ச்சி கொண்டான். அவன் தற்பெருமையை வெறுத்தான். மேலும், பிரம்மாண்ட கட்டிடங்கள் கட்டுவது அல்லாஹ்விற்கு செய்யப்படும் அவமானமாகக் கருதினான். அவன் ஆட்சியை பிடித்தப்பின் தாஜ்மகாலை பராமரிக்க எந்தவித செயலும் செய்யவில்லை அதற்கு நிதியும் ஒதுக்கவில்லை. காலத்தின் போக்கில் அது சிதிலமடையட்டும் என விட்டுவிட்டான். அவனது ஆட்சி எல்லையற்ற அதிகாரங்களை கொண்டிருந்த முல்லாக்களை தவிர்த்து ஏனைய இந்தியர்களுக்கு ஒரு கொடிய கனவாகத்தான் இருந்தது.
முல்லாக்கள் ஏதேதோ காரணங்களை சொல்லி, முவாஸம் சக்ரவர்த்தியாக பிரகடனப்படுத்தப்படும் நாளை ஒத்தி வைத்துக் கொண்டே இருந்தனர். இது ஜெபுனிஷாவிற்கு கவலை அளித்தது. அவள் எந்த நிலையிலும் முல்லாக்களை நம்ப தயாராக இல்லை. பிரதம அமைச்சர் பலமுறை அவர்களை கட்டாயப்படுத்தியப் பின் வெள்ளிக்கிழமை காலை பிரார்த்தனைகள் முடிந்த பின் விழாவை வைத்துக் கொள்ள ஒத்துக்கொண்டனர். அன்றிலிருந்து விழா நடக்கும் நாளான வெள்ளிக்கிழமை வரை உள்ள ஒரு வாரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஜெபுனிஷா அறிந்தே இருந்தாள். முவாஸத்தை கௌவரவப்படுத்தும் விதமாய், கவிதை குழுவின் கூட்டத்தை நடத்த முடிவெடுத்தாள் ஜெபுனிஷா. அந்த கூட்டத்தில் சிகப்பு ஒயினும் , ஹூக்காவும் அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தில் எண்ணற்ற முகலாய சிறப்பு உணவுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. உணவுகள் மட்டுமன்றி வருவோர் சுவைத்து மகிழ நாட்டில் கிடைக்கும் அனைத்து வகை பழங்களும் வைக்கப்பட்டிருந்தன. சிகப்பு ஒயின் தவிர்த்து, பழரசங்களும் மற்ற ஒயின்களும் கூட இருந்தன.
ஜெபுனிஷா தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் சிறிய தலையணையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அந்த அவையின் எதிர் பக்கத்தில், கண்களில் போதை தெரிய முவாஸம் அமர்ந்திருந்தாள். அவன் தன்னருகே அமர்வான் என அவள் எதிர்பார்க்க, அவனோ தனது நண்பர்களுடன் அறையின் எதிர்பக்கம் சென்று அமர்ந்தான். அவளை அவன் முழுவதும் ஒதுக்கியது கண்டு முகம் சுளித்தாள். இருந்தும், பெரிதாய் தன் அதிருப்தியை வெளியில் காட்டிக்கொள்ளாமல் அன்றைய நிகழ்வை துவக்குமாறு கண்ணசைத்தாள். ஜூபைதாத் முதலில் தன் கவிதை வரிகளை படிக்கத் துவங்கினாள்.
நம் இதயத்தில் நுழைந்து அங்கே
குடியிருந்த சோகத்தை அகற்றிய
தென்றலை வரவேற்போம்
நம் வாழ்வின் கதவுகளை திறக்க
நமக்கு சுதந்திரம் கிட்டியது இப்பொழுது
வாழ்வின் புதிய நாள் துவங்கப் போகிறது இனி
முவாஸத்தை வரவேற்று படிக்கப்பட்ட கவிதையை அவையில் இருந்தோர் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். ஆனால் முவாஸத்திடம் இருந்து எந்த ஒரு பாராட்டும் வரவில்லை. அங்கிருந்த தலையணையில் சாய்ந்து கொண்டு கண்களில் காமமும்,போதையும் மின்ன அங்கே ஒயின் ஊற்றிக் கொண்டிருந்த பணிப்பெண்களையே பார்த்துக்கொண்டிருந்தான். இவை எல்லாவற்றையும் ஜெபுனிஷா நோட்டம் விட்டுக்கொண்டுதான் இருந்தாள். ஜூபைதாதை தொடர்ந்து மிஹிர் தன் கவிதையை படிக்கலானாள்.
பயணத்தில் நான் கண் விழித்த
சமயத்தில் நான் சென்று கொண்டிருந்த வண்டி
பாவத்தின் திசையில் செல்வதை பார்த்தேன்
அதற்காய் குதிரையை மாற்றவில்லை நான்
செல்லும் திசையை மாற்றினேன்
அங்கே நடப்பதை மிஹிரும் பார்த்திருக்க வேண்டும். பதவி கிடைத்தவுடன் முவாஸம் மாறிவிட்டது போல் தோன்றியது. மாற்றம் வேண்டும் என்பதற்காக அவர்கள் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் அவன். ஆனால் அவனோ மிருகமாய் மாறிவிடுவானோ என தோன்றியது.
அப்பொழுது இறுக்கமான மேலுடையும் , அதற்கு பொருத்தமான பாவாடையும் அணிந்த பணிப்பெண் ஒரு கோப்பையில் ஒயினை ஊற்றி முவாஸத்திற்கு வழங்கினாள். அந்த கோப்பையை அவனிடம் வழங்க அவள் குனிந்த பொழுது, அவளின் மேலாடையின் இடைவெளியில் தெரிந்த அவளின் மார்பகங்களுக்கு இடையேயான பள்ளத்தாக்கை முவாஸம் வெறித்துப் பார்ப்பது அவளும் பார்த்தாள், ஜெபுனிஷாவும் கவனித்தாள். அவன் பார்ப்பது தெரிந்த நொடியில் நிமிர்ந்தவள் அங்கிருந்த யத்தனித்தாள். ஆனால் முவாஸமோ அவளது கைகளை பிடித்து இழுக்க, அவனது மடியில் விழுந்தாள் அந்த அடிமைப் பெண். ஒரு அடிமையாய் அவள் இளவரசனின் செய்கையை எதிர்க்க இயலாது. அவள் எந்த ஒரு நபருக்கும் சொந்தமானவள் அல்ல. அரச குடும்பத்தினரால் அவள் அவர்களின் சொத்தாய் நினைக்கப்பட்டவள். அடுத்து அரியணை ஏற இருப்பவரின் ஆசைக்கு எதிராய் செயல்படுவது இறப்பை வரவேற்பதற்கு சமமானது. எனவே, அவளை முவாஸம் தன் மடியில் அமரவைத்த சமயத்தில் அங்கிருந்த மற்ற அந்தப்புர பெண்கள் இரக்கத்துடன் பார்த்தனரே தவிர அவனை எதிர்க்க யாரும் துணியவில்லை.
அவன் செய்கையை கண்டிக்கும் விதமாய் அவனை ஜெபுனிஷா பார்க்க, அவனோ அவளை சட்டை செய்யாமல் ஒயினை பருகியவன், அவளை பார்த்து “கவிதைகள் தொடரட்டும்” என்பது போல் சைகை செய்தான். அவன் பருகிய ஒயின் அவனது வாய் ஓரத்தில் வழிய, அவன் கரங்களோ, மடியில் இருந்த அடிமைப் பெண்ணின் கால்களை தடவிக் கொண்டிருந்தது. தன்னால் அவர்களை எதிர்க்க முடியாது என்று உணர்ந்தவள், மெல்லிய குரலில் எதிர்ப்பை காட்டிக் கொண்டே வெட்கத்தில் அங்கிருந்த நகர்பவளை போல் நகர முயன்றாள். வெளிப்படையாக தன் எதிர்ப்பை காட்ட அவளுக்கு தைரியம் இல்லை.
இதே போலும் ஒரு முகலாய அமைச்சருக்கு எதிராய் தன் எதிர்ப்பை காட்டிய அடிமைப் பெண்ணின் கதை மிக பிரசித்தமானது. பல வருடங்களுக்கு முன்பு நடந்த விருந்து ஒன்றில் ஒரு அடிமைப்பெண், தன்னிடம் தவறாக நடக்க முயன்ற அவுரங்கசீப்பின் ஆலோசகர் ஒருவனை அறைந்து விட்டாள். விபச்சாரம், கற்பழிப்பு போன்றவற்றை அவுரங்கசீப் எதிர்த்தாலும், ஒரு பெண் ஆணை அறைவது என்பது அவனால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதுவும் அடிமைப் பெண் ஒருவள் , பிரபுக்களில் ஒருவரை அறைவது அவர்களால் கற்பனை கூட பண்ணிப்பார்க்க இயலாத ஒன்று. எனவே அவளின் இந்த செய்கைக்கு ஏற்ற தண்டனை வழங்க சொல்லி முல்லாக்களிடம் கூறினான். முல்லாக்கள் வழங்கிய தண்டனை ஈவு இரக்கமில்லாத ஒன்று. அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி எண்ணையால் குளிப்பாட்டி சிறிய அரங்கில் காட்டு நாய்களின் மத்தியில் நிறுத்தப்பட்டாள். அந்த நாய்கள் அவளை கண்டந்துண்டமாக வேட்டையாடி தின்றன. அந்த தண்டனை பலர் பார்க்க பொதுவில் நிறைவேற்றப்பட்டது. இதை பார்த்த எவரும் முகலாயர்களின் ஆட்சியில் ஆண்களை அவமதிக்க துணியக் கூடாது என்பதற்காகவே பொது மக்களின் முன்னிலையில் அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.
முவாஸத்தை பொதுவில் கண்டிக்க முடியாத சூழ்நிலை கைதியாய் இருந்தாள் ஜெபுனிஷா. அவள் அனைவர் முன்னிலையில் முவாஸத்தை கண்டித்தால் அவர்களின் ஆதரவை அவன் இழப்பான். அதனால், அவளுடைய பார்வையை அவன் மேல் இருந்து அகற்றி மறுபுறம் பார்க்கத் துவங்கினாள். ஆனால், அந்த அடிமைப்பெண் மீண்டும் கத்த, அவளின் பார்வை அவன் புறம் மீண்டும் சென்றது. முவாஸத்தின் கரங்கள், அந்தப் பெண்ணின் மேலாடையில் நுழைந்து அவளின் மார்பை அழுத்திக் கொண்டிருக்க, வழியிலும் அவமானத்திலும் அவள் கண்களில் கண்ணீர் பெருகத் துவங்கியது. ஆனால் , அவனின் நண்பர்கள் குழுவோ இதைப் பார்த்து ஆரவாரம் செய்யத் துவங்கியது. தன் கண்களை மூடிக்கொண்டு ஜெபோ மறுபுறம் பார்க்க துவங்கினாள். அந்த அடிமைப்பெண்ணின் மேலாடையில் இருந்து கையை எடுத்த முவாஸம், அவளின் கால்களுக்கு இடையே தன் விரல்களை செலுத்த, அந்த பெண் வலியில் கதறத் துவங்கினாள்.
அதற்கு மேலும் பொறுக்க இயலாத ஜெபுனிஷா கண்டனம் தொனிக்கும் குரலுடன் “முவாஸம்!!!” என கத்தினாள்.
“இதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் சகோதரி.தன்னை பேரரசர் தொடுவதை அவள் விரும்புகிறாள். நீங்களே பாருங்கள்” என அவள் கால் இடுக்கில் இருந்து தன் கையை விலக்கியவன் ஈரமான தன் விரலை அனைவரும் பார்க்கும் வண்ணம் காட்டினான். இதைக் கேட்டவுடன் அவனது நண்பர்கள் மீண்டும் கேலியாய் சிரிக்கத் துவங்க, அவனது பிடியில் இருந்து விடுபட முயன்ற அந்தப் பெண்ணோ அவமானத்தில் தன்னை குறுக்கிக் கொண்டாள்.
அவன் செயல்களால் கோபம் கொண்ட ஜெபுனிஷா அவனை கண்டிக்கும் விதமாய் “நீ இன்னும் இளவசரன்தான். அதை மறந்து விடாதே. இப்படி ஒழுக்கம் கெட்ட செயல்களில் நீ தொடர்ந்து ஈடுபட்டால் , உன்னை இளவரசனாகவே இருக்க செய்யமுடியும் என்னால்.” என கோபத்துடன் கூறினாள்.
தன் மடியில் இருந்த அந்த அடிமைப்பெண்ணை தன் காவலன் வசம் தள்ளிவிட்ட முவாஸம் அந்த அறையின் மத்திக்கு சென்று ” இங்கு யாரும் என்னைத் தடுக்க இயலாது. நான் மட்டுமே பேரரசன். அனைவரும் எனக்கு கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும்.” என கோவம் பொங்கும் குரலில் கூறினான்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் முவாஸத்தை நம்ப இயலாமல் பார்த்தார்கள். அவர்களுக்கு நிழல் தரும் மரமாய் வளரும் என எண்ணி அவர்கள் விதைத்த சிறு விதை இன்று அவர்களையே அடக்க எண்ணுகிறது.
“நான் என்ன நினைக்கிறேனோ அதை செய்வேன்.” என அழுது கொண்டிருந்த அடிமைப் பெண்ணை பார்த்த சொன்னவன், மீண்டும் ஜெபுனிஷாவை பார்த்து “இவளிடம் இருந்து துவங்குகிறேன்.” என கூறி அவளை தன் தோள் மேல் போட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவனிடம் இருந்து தப்ப முயன்றவளுக்கு பரிசாய் அடி விழ , அந்த வலியில் துடித்தாள் அவள்.
அங்கிருந்த மற்ற பெண்கள் அதை பார்த்து பெருமூச்சு விட்டு பேசவும் மறந்து நின்றார்கள். அந்த பெண்ணின் நிலை கண்டு ஜெபுனிஷா மனதில் கண்ணீர் வடித்தாள். ஒரு மிருகத்தை உருவாக்கி விட்டோமோ என வேதனையில் நின்றாள்.
அன்றைய இரவின் பெரும்பகுதி தூக்கமில்லா இரவாக இருந்தது ஜெபுனிஷாவிற்கு. தன் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தவளை அவள் எவ்வாறு அந்த அடிமைப் பெண்ணை புறக்கணித்தாலோ அவ்வாறே தூக்கமும் புறக்கணித்தது. முவாஸமும் அவன் நண்பர்களும் அந்தப் பெண்ணை தூக்கி சென்றபின் அவளது வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அவள் நன்கு அறிந்திருந்தாள். அவள் அதிர்ஷ்டம் செய்தவளாய் இருந்தால் வாழ்நாள் முழுவதும் அவமானப்படாமால் உடனே இறந்து விடுவாள். ஆனால் துரதிர்ஷ்டசாலியாய் இருந்தால், குழந்தைப் பெற இயலாமல், சிறுநீரை அடக்க இயலாமல் , நடக்கக்கூட இயலாமல் உடல் முழுவதும் காயங்களுடன் இருக்க வேண்டி இருக்கும். உடலில் ஏற்படும் காயங்களை விட அவள் அடையும் அவமானமும், மன வேதனைகளும் அவளை நடைப்பிணமாக மாற்றிவிடும். அதைவிட குடும்பத்தால் கைவிடப்பட்டு சாப்பாட்டிற்கும் பிறரிடம் கையேந்தி வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவாள் அந்த பெண். அந்நிலையில் அவளுக்கு இரண்டே வழிகள்தான் அவமானத்தை தாங்கிக் கொண்டு ஏதோ ஒரு சிறு செல்வந்தருக்கு ஆசை நாயகியாய் இருப்பது அல்லது தற்கொலை செய்துகொள்வது. அவளின் இந்த நிலைக்கு தானே காரணம் என தன்னையே குற்றம் சொல்லிக் கொண்டாள் ஜெபுனிஷா.
சக்ரவர்த்தியாக பதவி ஏற்கும் முன்பே முவாஸத்தை அடக்க இயலவில்லை எனில் அவன் பதவி ஏற்ற பிறகு எப்படி இருப்பான் என்றெண்ணி தன்னையே நொந்துக்கொண்டாள் ஜெபுனிஷா. அவனிடம் அவுரங்கசீப்பின் அறிவும், வெகு அரிதாக அவுரங்கசீப் வெளிப்படுத்திய இறை உணர்வும் இல்லை. அவுரங்கசீப்பை விட மோசமான மிருகமாய் இருப்பானோ அதற்கு தானே காரணமாகி விட்டாமோ என அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவள் அறையின் கதவு தட்டப்பட்டது.
“ஜெபுனிஷா! தூங்க இயலாத மக்ஃபி குழுவினார்தான்!”
“உள்ளே வாருங்கள்! முவாஸத்தை அடுத்த சக்ரவர்த்தியாக தேர்வு செய்ததற்கு தண்டனையாக நமக்கு தூக்கம் வரவில்லை என எண்ணுகிறேன்!”
“முவாஸத்தை தேர்வு செய்து நாம் தவறு இழைத்துவிட்டோமோ?” என சோகத்துடன் கேட்டாள் ஜூபைதாத்.
“இல்லை. பல வருட சகிப்புத்தன்மையற்ற , மதவெறி ஆட்சிக்குப் பின் கற்பழிக்கக் கூடிய ஒருவன் ஆட்சி செய்வதுதானே நியாயம். தன் இன்பத்திற்காக இளம்பெண்களை கற்பழிக்கும் ஒரு மிருகத்தை ஆட்சிபீடத்திற்கு கொண்டுவந்துவிட்டோம் நாம்” என்ற ஜெபுனிஷாவின் குரலில் எள்ளல் நிறைந்திருந்தது.
அவள் கூறியதில் இருந்த நியாயம் புரிய அவமானத்தில் அவளைப் பார்க்க இயலாமல் தங்கள் முகங்களை திருப்பிக் கொண்டனர். எந்த வேகத்தில் வந்ததோ அதே வேகத்தில் அவளது கோபம் தணிய “என்னை மன்னியுங்கள். இன்று நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் பாதித்துவிட்டது” என அவர்களிடம் மன்னிப்பு கேட்டாள்.
“நாங்களும்தான். ஆனால் இவன் சக்ரவர்த்தியாக தொடர கூடாது” என அழுதுகொண்டே கூறினாள் ஜீனத்.
“முவாசத்தை சரியாக வழிநடத்த யாருமில்லை. நம் முதல் திட்டத்தின் படி, நம் தாத்தா ஷாஜஹானை சிறையில் இருந்து விடுவித்தால் அவர் இவனை வழிநடத்துவார்” என முவாஸத்தை திருத்தும் முயற்சியில் அவனது விருப்பத்திற்கு உரிய சகோதரியான மிஹிருனிஷா கூறினாள்.
” நாம் அந்த கட்டத்தை தாண்டிவிட்டோம். இனி அவனிடம் எதுவும் கேக்க தயாராக இல்லை நான்”
“அப்பொழுது நம்மிடம் ஒரே ஒரு வழிதான் எஞ்சியுள்ளது. முல்லாக்களிடம் சென்று , நாம் முவாஸத்திற்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறுவதாக கூறுவோம்” என குரலில் விரக்தி தொனிக்க தன்னுடைய யோசனையை கூறினாள் ஜூபைதாத்.
மற்ற அனைவரும் அதை ஆமோதிக்க, ஜெபுநிஷாவோ எந்தவித பதிலும் சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
“இன்னும் ஒரு வழி இருக்கிறது” என தன் மௌனத்தை கலைத்தாள் ஜெபுனிஷா. எல்லா சந்தர்ப்பங்களுக்கும் அவளிடம் தீர்வு இருக்கும் என மக்ஃபிக்கு தெரியும். எனவே அவர்கள் ஆச்சரியப்படவில்லை. அவள் சொல்லப்போகும் தீர்விற்காய் காத்திருந்தனர்.
“மிஹிர்! மற்றவர்களை விட முவாஸத்திற்கு நெருக்கமானவள் நீதான். நான் அவனுக்கு தரும் ஆதரவை திரும்பப் பெற போகிறேன் என முல்லாக்களிடம் கூறப் போகிறேன் என நாளை காலை அவனிடம் கூறு. அவனுக்கு சிறிய அளவிலாவது அறிவு இருந்தால் என்னை வந்து சந்திப்பான்” என இறுதி வழியை கூறினாள்.
*******
மறுநாள் மாலை தன் அறையில் அமர்ந்து ஹூக்காவில் புகை பிடித்துக்கொண்டிருந்த ஜெபுனிஷாவின் காலடியில் மண்டியிட்டு கிடந்தான் முவாஸம்.
“என்னை மன்னியுங்கள் சகோதரி! மிஹிருனிஷா நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறுவதாகவும் என்னை முல்லாக்களிடம் ஒப்படைக்கப்போவதாகவும் கூறினாள். நேற்று குடிபோதையில் என்ன செய்கிறேன் எனத் தெரியாமல் நான் தவறிழைத்துவிட்டேன்” என உடல் நடுங்க மன்னிப்புக் கேட்டான் முவாஸம்.
புகைப்பிடித்துக் கொண்டிருந்த ஜெபுனிஷா, புகையை அவன் முகத்தில் ஊதிக் கொண்டே “என் செருப்பை எடுத்துக் கொடு மூர்க்கனே!” என கட்டளையிட்டாள்.
அவள் காலடியில் இருந்து எழுந்து அறையின் மூலையில் இருந்த அவளது செருப்புகளை நோக்கி செல்ல முயன்றவனை அவள் குரல் தடுத்து நிறுத்தியது.
“நில்! உன்னை எழுந்து நிற்க நான் அனுமதிக்கவில்லை. நாயை போல் செல்!”
முவாஸத்திற்கு அதை செய்யத் தயக்கம் இருந்தாலும் அந்நிலையில் அவனால் ஏதும் செய்ய இயலவில்லை. அவளுடைய ஆணைக்கிணங்க அறையின் மூலைக்கு சென்று அவளுடைய செருப்பை எடுத்தவன்
மீண்டும் அவனை தடுத்த ஜெபுனிஷா “எப்படி சென்றாயோ அப்படியே தவழ்ந்து வா” என்றாள்.
“ஆனால் அப்படி வந்தால் என்னால் செருப்பை எப்படி எடுத்துவர இயலும்?”
“கைகளால் எடுத்து வர இயலாது என்றால், நாயைப் போல வாயில் செருப்பை கவ்வி கொண்டு வா. நாயை விட மேலானவன் இல்லை நீ!”
அந்த வார்த்தைகளில் அவளுடைய கோபமும் அவன் மேல் இருக்கும் வெறுப்பும் தெளிவாய் அவனுக்கு புரிய அதிர்ச்சியில் இருந்து வெளிவர சில நொடிகள் ஆனது முவாஸத்திற்கு. அவமானத்தில் தலை குனிந்து, அவள் கட்டளைப்படி அவள் செருப்பை வாயில் கவ்வினான்.
“உன் தலையை தூக்கி என்னை பார்க்க உனக்கு உரிமையில்லை. தலை குனிந்தே வா.”
இது அவனை மேலும் அவமானப்படுத்தியது. அவன் மனதில் உண்டான கோபம் அவன் கண்களில் தெளிவாய் தெரிந்தது. கோபம் மனதில் இருந்தாலும் எதுவும் செய்ய இயலாது என்பதை நன்கு உணர்ந்திருந்தான். எனவே அவள் சொல்படி , வாயில் கவ்விய செருப்புடனும் குனிந்த தலையுடனும் அவளை நோக்கி தவழ்ந்து சென்றான்.
அவன் வாயில் இருந்து வெறுப்புடன் செருப்பை பிடுங்கியவள் அதை கீழே வீசிவிட்டு , மீண்டும் ஹூக்காவில் புகைப்பிடிக்க துவங்கினாள். அவனை மண்டியிட சொன்னவள் வெறுப்புடன் அவனை நோக்கினாள். அவளுடைய பார்வையிலேயே நடுங்கத் துவங்கினான் முவாஸம்.
“நேற்று என்னுடைய அறையில் நீ அத்துமீறி அணைத்தாயே அந்தப் பெண் என்ன ஆனாள்? அவளுடைய கேள்விக்கு பதில் கூறாமல் தலைகுனிந்தே இருந்தான் முவாஸம். அவனுடைய இந்த அமைதிக்கு பின்னால் எதோ ஒரு பயங்கரம் இருக்கிறது என உணர்ந்துகொண்டாள் ஜெபுனிஷா.” நேற்று பிரபுக்களும், கற்றறிந்த அறிஞர்களும் நிறைந்த அந்த அவையில் உன் சகோதரிகளின் முன்னிலையில் அந்தப் பெண்ணின் உள்ளே உன் விரல்களை செலுத்தினாயே என்ன ஆயிற்று அந்தப் பெண்ணுக்கு? ஏழாம் முகலாயப் பேரரசனாக அமர போகிற மிக சிறந்த இளவரசனே எனக்கு பதில் சொல்.”
அதற்கும் பதில் சொல்லாமல் மெலிதாய் உளறினான்.
அவளுடைய முகம் சுழிய “பதில் சொல் நாயே!” என அவள் கூறிய விதத்தில் அவள் மனதில் அவன் மேல் இருந்த கசப்பு வெளிப்பட்டது.
மெலிதான அழுகையுடன் “அவள் இறந்து விட்டாள்!” என்றான்.
அந்தப் பெண் அதற்கு மேல் எந்தவித அவமானமும் அடையத் தேவையில்லை என்ற எண்ணத்தினால் அந்த பதிலைக் கேட்டு ஒருவிதத்தில் அவள் மனம் நிம்மதி அடைந்தது.
“என்னை மன்னியுங்கள் சகோதரி! நான் குடித்திருந்தேன். போதையில் என்ன செய்கிறேன் என்றே நான் அறிந்திருக்கவில்லை” என்று கூறிய முவாஸம் பயத்தில் அழுகத் துவங்கி இருந்தான்.
“மன்னிப்பா ? அதுவும் நீ செய்த செயலுக்கா? ஒரு அப்பாவி பெண்ணை மானபங்கப்படுத்தி அவளை கொலை செய்துவிட்டு மன்னிப்பு கேக்க எப்படி மனம் வந்தது உனக்கு?” அவனுடைய வார்த்தைகளில் கோவத்தின் உச்சிக்கு சென்ற ஜெபுனிஷா தன் செருப்பை எடுத்து அவனை அடிக்கத் துவங்கினாள். கைகளை குறுக்கே வைத்து அவள் அடிகளில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முயன்றான். சில நிமிடங்களுக்குப் பிறகு தன் செருப்பை கீழே எறிந்தவள் தன் கை முஷ்டிகளால் அவனை அடிக்கத் துவங்கினாள்.”இதுதான் அன்னை உனக்கு கற்றுத் தந்தாரா? இதைத்தான் சகோதரிகளிடம் இருந்து நீ கற்றாயா?” என கேட்டுக் கொண்டே அடித்தாள். கை வலிக்கத் துவங்கிய தருணத்தில், அறையின் ஓரத்தில் வைத்திருந்த குச்சியை எடுத்து அவனை விளாசத் துவங்கினாள்.
“அவளை என்ன செய்தீர்கள் என சொல். எனக்கு அது தெரிந்தாக வேண்டும் .” ஆனால் அவள் கேள்விக்கு அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. தன் கையில் இருந்த குச்சியால் அவனைக் குத்தியவள், “சொல்! எனக்கு தெரிந்தாக வேண்டும்” என கோபம் நிறைந்த குரலில் மீண்டும் கேட்டாள்.
அவள் அடித்ததால் காயம் அடைந்து ரத்தம் ஒழுகிய தன் தலையை நிமிர்த்தியவன் “சொல்கிறேன். ஆனால் என்னை அடிக்காதீர்கள். என்னால் தாங்க இயலவில்லை. அவளை எனது அறைக்கு தூக்கி சென்றப் பின் அவள் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கி, முதலில் நானும் பின் என் நண்பர்களும் அவளை கற்பழித்தோம். அவள் நிறுத்த சொல்லி கதறினாள். ஆனால் எங்களால் நிறுத்த இயலவில்லை. சிறிது நேரம் கழித்து அவள் மயங்கி விட்டாள். இருந்தும் நாங்கள் நிறுத்தவில்லை. எங்கள் ஆசை அடங்கியப் பின் அவளை எங்கள் அறையில் இருந்து சாலையில் வீசிவிட்டோம். சிறிது நேரத்தில் தெருவோரத்தில் அவள் இறந்து கிடந்தாள்.
இதைக் கேட்ட ஜெபுனிஷா மனதில் கனன்று எழுந்த கோபத்தில் அவளால் மூச்சுக்கூட விட இயலவில்லை. தன் கையில் வைத்திருந்த குச்சியினால் அவன் முகத்தில் அடித்தாள்.” நீ சிறுவனாக இருந்த பொழுது மிகவும் பலவீனமானாய் தைரியம் இல்லாதவனாய் இருந்தாய். ஒரு நாயுடன் கூட ஒப்பிட முடியாத நிலையில் இருந்த உன்னை எலி என்றே அனைவரும் அழைப்போம். அப்படி இருந்த உனக்கு இன்று நான் கௌரவத்தையும் அதிகாரத்தையும் கொடுத்தேன். ஆனால் நீயோ என் அடிமைப் பெண்களில் ஒருத்தியை கொலை செய்து என் முகத்திலேயே உமிழ்ந்து விட்டாய்.”
“அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு மாதம் இரண்டு தங்க காசுகள் வழங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தினர் எப்பொழுது வேண்டுமானாலும் அரண்மனை சமையல் அறைக்கு வந்து அவர்களுக்கு வேண்டியதை சாப்பிட அனுமதிக்க வேண்டும். அவர்களின் உடல்நல பிரச்சனைகளுக்கு அரச மருத்துவர்கள் மருந்துகள் வழங்க வேண்டும்!” அவளின் அனைத்து கட்டளைகளையும் ஏற்கும் விதமாக தலையசைத்தான் முவாஸம்.
“நீ அரசனாகும் தகுதி இல்லாதவன்!”
இதைக் கேட்டவுடன் பீதியில் உறைந்த முகத்துடன் அவளை பார்த்தான்.
“நீ உடனடியாக பேரரசர் ஷாஜகானை விடுவிக்க கட்டளை பிறப்பிக்க வேண்டும். இதை நீ செய்தால் மட்டுமே உன்னை நான் ஆதரிக்க இயலும். ஷாஜகான் தான் உண்மையான பேரரசர். அவருக்கு மட்டுமே அரசை எவ்விதம் நடத்துவது எனத் தெரியும்.”
அவன் இருந்த நிலையில் எதையும் மறுக்க இயலாமல் எல்லாவற்றிற்கும் ஆமோதிப்பாய் தலை அசைத்தான்.
இன்னும் மண்டியிட்டிருந்த முவாஸத்தை நோக்கிக் குனிந்த ஜெபுனிஷா “மீண்டும் ஒரு முறை என் உத்தரவை மீறி நடந்தால், உன்னால் கற்பனை பண்ணிக் கூட பார்க்க இயலாத அளவிற்கு உனக்கு வேதனையையும் வலியையும் உண்டு செய்வேன். உனக்கும் உன் நண்பர்களுக்கும் ஆண்மையை நீக்கி வாழ்நாள் எல்லாம் அலிகளாய் வாழவைத்துவிடுவேன், நினைவில் வைத்துக் கொள்” என்று தன்னால் எந்த அளவிற்கும் செல்ல இயலும் என்பதைக் கூறினாள்.
அலி என அழைக்கப்படுவது எந்த ஒரு ஆண்மகனுக்கும் இழைக்கப்படும் மிகப் பெரிய அவமானம் என்று அவள் நன்கு உணர்ந்திருந்தாள். தன்னுடைய பேச்சு வெற்று மிரட்டல் இல்லை என அவன் உணர்ந்திருப்பான் என ஜெபுனிஷா நம்பினாள். அவள் பேச்சை உணர்ந்ததிற்கு அடையாளமாய் வியர்வையும் ரத்தமும் கலந்து சொட்டிக்கொண்டிருந்த தன் தலையை அசைத்தான்.
“இப்பொழுது நீ செல்லலாம்” என அவன் செல்ல ஆணையிட்டாள்.
அங்கிருந்து கிளம்ப முயன்றவனை “அப்படியே நின்று கீழே குனி!” என்ற அவளது குரல் தடுத்து நிறுத்தியது. அவளது கட்டளையை கேட்டு பீதியுற்ற முவாஸம் அவள் சொல்லியபடியே குனிந்தான்.
அவன் அணிந்திருந்த பைஜாமாவை உருவிய ஜெபுனிஷா, தன் கையில் இருந்த குச்சியை அவன் பின்புறத்தில் வேகமாய் சொருகினாள். அவளின் அந்த செய்கை முவாஸத்தை வலியிலும் வேதனையிலும் கத்த வைத்தது. இரத்தமும், அழுக்கும் கலந்த குச்சியை உருவியவள் அவன் முகத்தில் உமிழ்ந்து ” நீ இப்பொழுது பேரரசரினால் தொடப்பட்டவன்” என கூறினாள்.
*****
செவ்வாய், செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற நாள். இரத்தத்துடன் தொடர்புடையது. அந்த நாள் நீதி வழங்கும் நாளாய் அமைந்தது. சிகப்பு நிற ஆடை அணிந்து தனது ஆலோசனை குழுவினருடன் அரச அவைக்கு வந்தான் முவாஸம். முதல் முறையாக அவன் வழங்கப்போகும் தண்டனை எத்தகையது என்பதை அறிய அந்த பெரிய சபையில் மக்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். வழக்கம்போல், அவையின் ஒரு புறம் முல்லாக்களும், மறுபுறம் ஹிந்து ராஜ்புத்களும் இருக்க, அவர்களின் இடையே பிரபுக்கள் இருந்தனர். பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி திரையின் பின்னே இருந்து அவை நடவடிக்கைகளை அந்தப்புரத்து பெண்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தன் இருக்கையில் இருந்து எழுந்து அவன் முன் குனிந்து வணங்கிய பிரதம அமைச்சர் “அரசே! விதவையிடம் இருந்து ரொட்டியை பறித்த வழக்கு ஒன்று நீதி வழங்கப்படாமல் காத்திருப்பில் உள்ளது. இளவரசர் ஆஸமால் இதற்கு நீதி வழங்க இயலவில்லை. இதற்கு மேலும் காத்திருக்காமல் தனக்கு நீதி வழங்கப்படவேண்டும் என அந்த விதவைப் பெண் விரும்புகிறாள்” என வழக்கின் விவரத்தை எடுத்துரைத்தார்.
இந்த நாளுக்காக முவாஸம் தயாராக இருந்தான். இது அவனுக்கு ஒரு சோதனை என ஜெபுனிஷா அறிந்தே அவனை தயார் செய்திருந்தாள். வழக்கின் விவரங்களைக் கேட்டவன், என்ன தண்டனை வழங்கலாம் என யோசிப்பவன் போல் சிறிது நேரம் காலம் தாழ்த்தினான். உண்மையில் அவன் என்ன செய்ய வேண்டும் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. சிறிது நேரம் நடித்தவன், பின் கைதியை கொண்டு வர சொன்னான்.
அரசவைக்கு இழுத்துவரப்பட்ட கைதியை அவன் முன் மண்டியிட செய்தனர். எங்கே தனக்கு மரண தண்டனை வழங்கப்படுமோ என்ற உயிர் பயத்தில் மண்டியிட்ட கைதி அரசனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்தக் கைதியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த முவாஸத்தின் முகம் சிந்தனையில் மூழ்கி இருந்தது. எங்கே இந்த சிறிய குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கப்படுமோ என்ற பயத்தில் ஏதோ சொல்ல வந்த பிரதம அமைச்சரை சைகையால் தடுத்து நிறுத்தினான்.
“ஒரு விதவையின் வாழ்வானது முழுமையானது அல்ல. அவள் பாதி நபர். அவளுக்கு உணவு அளித்து அவளை பாதுகாக்க வேண்டிய அவளுடைய கணவன் உயிருடன் இல்லை. உன்னைப் போன்ற திருடர்களிடம் இருந்து அவளை காப்பாற்றவும் யாரும் இல்லை.”
“அரசே!”
“நான் உன்னை பேச அனுமதிக்கவில்லை!” அவனுடைய குரல் அமைதியாய் இருந்த அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. சிறிது நேரம் அங்கே மௌனமே ஆட்சி செய்தது. முல்லாக்களும், பிரபுக்களும் ஏதும் பேச இயலாமல் அமைதியாய் தலை குனிந்திருந்தனர்.
“விதவையானவள் முழுமையான நபர் அல்ல. அவளை காப்பாற்ற யாரும் இல்லை!”
அங்கே குழுமியிருந்தவர்கள் அவன் கூறியவற்றை கேட்டு ஆச்சரியப்பட்டு அதில் மயங்கி இருந்தனர். அவன் கூறியது முழுக்க முழுக்க ஜெபுனிஷாவின் வார்த்தைகளே.
“ஆனால் யார் ஆணை காப்பாற்றுவது? ஒரு பெண்ணை அவள் கணவன் காப்பாற்றுவான். அந்த கணவனைக் காப்பாற்றுவது யார் ? அந்தப் பெண்ணா?” எனக் கேட்டு சிறிது இடைவெளி கொடுத்தவன் முல்லாக்களை பார்த்து மர்மமான புன்னகை செய்தவன் “இல்லை வேறு ஆணா?” என தன் கேள்வியை முடித்தான்.
ஓரின சேர்க்கைப் பற்றி மறைமுகமாய் அவன் கூறியது முல்லாக்களை கொஞ்சம் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஓரின சேர்க்கை இறை நிந்தனையாய் கருதப்பட்டதே அதற்கு காரணம்.
தன் பார்வையை மீண்டும் கூட்டத்தினரை நோக்கித் திருப்பிய முவாஸம் ” உண்மையில் ஆணை யாரும் காப்பாற்றுவதில்லை. அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டு தன்னை சார்ந்திருக்கும் தன் குடுமபத்தினரையும் காப்பாற்றவேண்டும் என்பது இறைவன் விதித்த விதி” என முடித்தான்.
அந்த அவையில் மீண்டும் அமைதி குடிகொண்டது. அவன் எதற்காக இதை கூறினான் என புரியாமல் அங்கிருந்தோர் முழித்தனர். அந்த கைதியோ உயிர் பயத்தில் அழத் துவங்கினான். அந்த அவையில் இருந்து சிறிது தூரத்தில் முகமூடி அணிந்து அவனது மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டி காவலர்கள் தயாராக இருந்தனர்.
“இந்த மனிதன் செய்த குற்றம் மிக தவறான ஒன்றாக இருந்தாலும் கூட மரண தண்டனை வழங்கும் அளவிற்கு கொடூரமான குற்றம் அல்ல. ஆனால், அந்த விதவையின் நிலை எப்படி இருக்கும் என அவன் உணர வேண்டும். அதற்காக இவனது குடும்பத்தை தண்டிக்கப் போவதில்லை. ஏனென்றால், இவனை காக்க வேண்டியது அவர்களது கடமையல்ல. அதற்கு பதிலாக, அந்த பெண்ணிடம் இருந்து திருட உபயோகம் செய்த இவனது வலது கரம் துண்டிக்கப்பட வேண்டும். இன்றிலிருந்து இவன் பாதி மனிதன். இவனுடைய வாழ்வு பாதியான ஒன்றாகும். இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாய் அமையும். அதே நேரத்தில் இவனிடம் இருந்து யாரேனும் திருட முயன்றால் அவர்களுக்கும் இதே தண்டனை வழங்கப்படும்” என உணர்ச்சி மிகுந்த குரலில் உரக்க உத்தரவிட்டான்.
இதைக் கேட்ட கைதி , தனக்கு கருணை கட்ட வேண்டி அழுது புலம்பினான். ஆனால் அதை யாரும் லட்சியம் செய்யவில்லை. தண்டனை வழங்கப்பட்ட மறுநிமிடம், காவலர்கள் அவனை தண்டனை வழங்கும் மேடைக்கு இழுத்து சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அவன் எவ்வளவு முயன்றும் இயலவில்லை.
இரண்டடி உயரம் இருந்த சலவைக் கல்லால் ஆன மேடையில் அவன் வலது கையை மட்டும் துண்டிக்கும் வண்ணம் அவனை அழுத்திப் பிடித்தனர். தூரத்தில் இருந்து முகத்தில் எந்த வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் முவாஸம் பார்த்துக் கொண்டிருந்தான். காவலர்கள் கைதியை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்க , தண்டனையை நிறைவேற்ற வேண்டியவன் தன் கோடாரியை உயர்த்தினான். அங்கிருந்த அனைவரும் முவாஸத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். முகத்தில் குழப்பமும், கொஞ்சம் பயமும் கலந்து அவையோரை பார்த்தான் அவன். அந்த நிமிடம், திரையை பார்க்க துணியவில்லை. காரணம், அது மக்கள் முன்னிலையில் பலவீனமானவனாய் காட்டும் என எண்ணினான்.
அவனின் குழப்பமான நிலையை கண்ட பிரதம அமைச்சர் “அரசே! நீங்கள் இருந்து உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என அவனுக்கு எடுத்துக் கூறினார்.
இதைக் கேட்ட அவனது முகம் தெளிவடைந்து. ஆனால், மீண்டும் தான் கூறியதையே கூற வேண்டுமா என எண்ணினான் அவன். இதற்கு முன் அவை நடவடிக்கைகளில் என்றும் அவன் கலந்து கொண்டதே இல்லை. அவனை அவன் தந்தை அவைக்கு அழைத்ததும் இல்லை. உறுதியில்லாத குரலில் “என் உத்தரவு இறுதியானது!” எனக் கூறினான்.
இதைக் கேட்ட முல்லாக்களும் பிரபுக்களும் ஆச்சரியத்தில் மூழ்கினர். ஏனென்றால் “நீதி வழங்கப்படட்டும்” என்பதே வழக்கமாய் சொல்லப்படும் ஒன்றாகும். ஆனால் இந்தக் குழப்பம் வெகு நேரம் நீடிக்கவில்லை. அனைவரின் கவனமும் மீண்டும் தண்டனை மேடை பக்கம் திரும்ப, உயர்ந்திருந்த கோடாலி அந்தக் கைதியின் தோளில் இறங்க அவனது கை துண்டுபட்டு வீழ்ந்தது. அவனின் உடலில் இருந்து வெளியேறிய இரத்தத்தினாலும் வலியினாலும் அந்தக் கைதி மயக்கம் அடைந்தான்.
“பேரரசர் முவாஸம் நீடுழி வாழ்க” என்ற கோஷம் அரங்கை நிறைக்கத் துவங்கியது. அங்கே கூடியிருந்த மக்கள், முவாஸம் இன்னும் பேரரசராக பதவி ஏற்கவில்லை என்பதையும் அவன் பிரகடனம் இன்னும் வெளியிடவில்லை என்பதையும் தங்கள் நினைவில் கொள்ளவில்லை. மாறாக, பல மாதங்களுக்குப் பிறகு நீதியை சரியாக வழங்கக்கூடிய ஒரு அரசன் தங்களுக்கு கிடைத்துள்ளான் என்றே நினைத்தனர். அந்த நிகழ்வு, முகலாய அரியணைக்கு சரியான தேர்வாய் முவாஸத்தை உறுதிப்படுத்தியது. சந்தேகப்படும் காலங்கள் கடந்துவிட்டன என்றே சொல்லலாம்.
அந்த கோஷங்களைக் கேட்ட முவாஸத்தின் மனது வெற்றியில் திளைத்தது. அரியணையில் தான் அமரும் நாள் தொலைவில் இல்லை என்றே எண்ணினான்.
****
மராத்தியர்களின் படை தங்கள் முன் இருந்த அனைத்தையும் அழித்துக் கொண்டு முன்னேறி வந்தது. தக்காணத்தின் தெற்கு முனையில் இருந்து கிளம்பிய மராத்திய படை வழியில் இருந்த நூற்றுக்கணக்கான மசூதிகளை இடித்தும், தாக்க வந்த ஆயிரக்கணக்கான முகலாயர்களை கொன்றும் தக்காணத்தை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். அவுரங்கசீப்பின் ஹிந்து வெறுப்பினால் மராத்தியர்களின் பலம் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆனால், அவர்கள் ஹிந்துக்களான ராஜபுதனத்து மன்னர்களுடன் எந்தக் கூட்டும் வைத்துக் கொள்ளவில்லை. அவுரங்கசீப்பிற்கு பின் , அனைவரையும் அரவணைத்து செல்லும் ஒருவர், முகலாய அரியணையேறுவான் என்ற நம்பிக்கையில் , ராஜபுதனத்து மன்னர்கள் தொடர்ந்து முகலாயர்களை ஆதரித்து வந்தனர்.
தொடர் வெற்றிகளால் மேலும் பலம் பெற்ற சிவாஜி மஹராஜ், மேன்மேலும் மராத்தியர்களின் ஆதிக்கத்தை தெற்கிலும், மேற்கிலும் வளர்த்துக் கொண்டே சென்றார். ஆனால், மராத்தியர்களின் தொடர் வெற்றியை கேள்விப்பட்ட முவாஸமோ அதற்கு நேர் எதிரான மனநிலையில், அடுத்து என்ன நிகழுமோ என்று பயணத்துக்கு கொண்டிருந்தான். தனது படைத் தளபதிகளின் கூட்டத்தை கூட்டிய முவாஸம், முகலாயர்களின் தோல்விக்கான பழியை தனது படைத்தளபதிகள் மேலே சுமத்தினான்.
தன் தந்தையின் அரியணை அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த முவாஸம் , கோபமும் வெறுப்பும் கலந்த பார்வையில் தன் முன்னே இருந்த தளபதிகளை பார்த்து “நம் கோட்டைகளை எப்படி அவர்கள் கைப்பற்றினர் ? நீங்கள் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தீர்களா?” என்றான்.
கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் அவன் வாயில் இருந்து வந்த வார்த்தைகளை கேட்டபின்பும் பொறுமை காட்டிய தலைமை தளபதி, முவாஸத்தின் தவறை அவனுக்கு எடுத்து சொல்லத் துவங்கினான். பலமுறை அவர்கள் செய்தி அனுப்பியும், தில்லியில் அவனது நிலையை காப்பாற்றிக் கொள்ள படைகளை அனுப்ப மறுத்ததை முவாஸத்திற்கு புரியும் வண்ணம் கூறினான்.
“ஒவ்வொரு நூறு முகலாய வீரர்களும் ஆயிரம் மராத்தியர்களுக்கு சமம்” என கோபத்தில் கத்தினான் முவாஸம். அவனது வார்த்தைகளை கேட்ட படைத்தலைவர்கள் கோபத்துடன் , மராத்தியர்களின் வாளுக்கு இரையான ஆயிரக்கணக்கான முகலாய வீரர்களை நினைத்துப் பார்த்துக் கொண்டனர்.
அதற்கு மேல் முவாஸம் ஏதும் சொல்லும் முன் திரைக்கு பின்னிருந்து வந்த குரல் அவனைத் தடுத்தது. “படைத்தலைவரே! நாமும் அவர்களுக்கு இணையான படைகளுடன் அவர்களை தாக்குவோம். தக்காணத்தை வென்றால், நம் சாம்ராஜ்யத்தின் மற்ற பகுதிகளுக்கு வழி கிடைத்தது போல் ஆகும். நாம் அந்த வழியை உடனடியாக அடைக்க வேண்டும்.”
அந்த உத்தரவை எதிர்த்து முவாஸம் எதுவும் பேசவில்லை. ஏனென்றால், உண்மையில் அதிகாரம் ஜெபுனிஷாவிடமே உள்ளது என அவன் நன்கு உணர்ந்திருந்தான்.
முவாஸத்தை நோக்கிய ஜெபுனிஷா ” இடைக்கால அரசராக இருக்கும் இளவரசர் முவாஸம் தில்லியில் இருந்து செல்லும் முகலாயப் படைகளுக்கு தலைமையேற்று நடத்தி செல்வார். இது நம் எதிரிகளுக்கு யார் அதிகாரப்பீடத்தில் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக எடுத்து சொல்லும்” என கண்டிப்பும் உறுதியும் கலந்த குரலில் கூறினாள். இது ஒருவகையில் முவாஸத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் இருந்தது.
*****
இரவில் வீசிய குளிர்ந்த காற்று , அவனது உடலை ஊடுருவி எலும்பு வரைத் தாக்கியது. தனது அறையில் தனிமையில் தனது வாழ்க்கையை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான் முவாஸம். அவனது அறைக்குள் யாரையும் அனுமதிக்கவேண்டாம் என தனது காவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தான். அவுரங்கசீப் நோயுற்று மரணப்படுக்கையில் வீழும் வரையிலான அவனது வாழ்வை பற்றி எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தான். அவனது தந்தை நோய்வாய்ப்படும் வரை அவனது வாழ்வெல்லாம் போதைப்பொருள்களும் ரகசிய விருந்துகளும் நிறைந்த ஒன்றாக இருந்தது.அரியணை பற்றியோ அடுத்து யார் ஆட்சி பீடம் ஏறுவார்கள் என்றோ அவன் அதுவரை யோசித்ததே இல்லை. ஏனென்றால் அவனது சகோதரன் சுல்தானை தோற்கடிப்பது என்பது அவனால் நினைத்துக் கூட பார்க்க இயலாத ஒன்று. அரச பதவியேற்பது என்பது அவன் தனது கனவில் கூட நினைத்துப் பார்க்காத ஒன்று. இப்பொழுது இவன் இருக்கும் நிலை முழுவதும் ஜெபுனிஷாவின் திட்டமே. தனது கூட்டத்தை பின்பற்றி செல்லும் பறவைப் போல இவனும் மக்ஃபியை பின்பற்றினான். அவர்கள் விருப்பப்படி இயக்கப்படும் ஒரு கருவியாய் பொம்மை போல் ஆகினான் முவாஸம். அதற்கு பரிசாக அவனுக்கு கிடைத்தது என்னவோ முல்லாக்கள் மற்றும் ரவுஸனாராவின் விரோதமே. அவர்கள் இவனையே குறிவைத்து தங்கள் திட்டங்களை தீட்டினர். மக்ஃபி வகுத்து குடுக்கும் திட்டங்களில் இருந்து அவன் கொஞ்சம் கூட பிறழ இயலாது. இவன் சிறிது மாறி நடந்தாலும் என்ன நடக்கும் என்பதை ஏற்கனவே அனுபவித்திருந்தான். மக்ஃபி சொல்லும் வழியில் சென்றால், முல்லாக்கள் இவனை கொள்வார்கள். ஆனால், அவர்களின் திட்டத்திற்கு மாறாக நடந்தால், ஜெபுனிஷா இவனை கொன்று விடுவாள். பகலுக்கு பிறகு இரவு வருவது போல் இது கண்டிப்பாக நடக்கக்கூடிய ஒன்றாகும். இரண்டில் எதை பின்பற்றினாலும் அவன் இறப்பது என்பது உறுதியான ஒன்றாக இருந்தது.
தெற்கில் இருந்து மராத்தியர்கள் படையெடுத்து வருவது அவனது நிலைக்கு ஒரு உதாரணமாக இருந்தது. இந்தப் போரில் அவன் தோற்றால், முல்லாக்கள் ஆட்சி செய்ய அவனுக்கு தகுதியில்லை என கூறுவார்கள். மக்ஃபியும் அவனை தோல்விக்கு காரணமாக்குவார்கள். மாறாக, அவன் போரில் வென்றாலோ மக்ஃபியின் கை மேலும் வலு பெறும். அவர்களின் கையில் முவாஸம் ஒரு பொம்மை அரசனாக இருப்பான். காலம் முழுவதும் தன்னை யார் எப்பொழுது கொல்லக் கூடும் என்ற பயத்திலேயே வாழ வேண்டி இருக்கும். ஆனால், மக்ஃபியின் திட்டங்களுக்கு அவனால் மறுப்பு சொல்ல இயலவில்லை. அவனிடம் அதற்கு மனோதிடம் இல்லை. அவனால் செய்ய இயன்றதெல்லாம் தன் அறையின் தனிமையில் அழுவதே.
பெருமூச்சுடன் , அந்த இரவு வானத்தை பார்த்தான் முவாஸம். வைரக் கற்கள் பதித்த ஒரு பெரிய நீல நிற துணி போல் விரிந்து பரந்த வானத்தை பார்த்துக் கொண்டே அவனது அன்னை சொன்னதை நினைத்துப் பார்த்தேன். “முற்காலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் அறிய விரும்பினால் வானத்தைப் பார்த்தால் போதும். ஆனால் அதை சரியாக புரிந்து கொள்ளக் கூடியவராக இருப்பது அவசியம்” என்று அவர் சொன்னது இப்பொழுது அவனுக்கு நினைவிற்கு வந்தது. நாம் வருங்காலத்தில் எப்படி நினைவுக் கொள்ளப்படப்போகிறோம்? வீரத்திற்காகவும், சரியான நீதி வழங்கிய அரசனாகவும் நினைவுக் கொள்ளப்படுவோமோ அல்லது மக்ஃபியின் கைப்பாவையாக இருந்ததாக நினைவுக் கொள்ளப்படுவோமோஎன்று அவன் யோசித்த சமயத்தில், வானில் இருந்த நட்சத்திரம் ஒன்று கீழே விழுந்து மறைந்தது.
அதைக் கண்டா முவாஸம் திடுக்கிட்டு எழுந்து நின்றான். நம் நிலையம் இந்த நட்சத்திரம் போன்றதோ ? யார் நினைவிலும் இல்லாமல் வாழ்ந்து மறைந்து விடுவோமா ? அரசனாக நாம் இருக்கும் நாட்கள் யாரின் மனதிலும் தங்காமல் போய் விடுமோ என எதிர்மறை எண்ணங்கள் என பல எதிர்மறை எண்ணங்கள் அவன் மனதை சூழ்ந்தது. இந்த எண்ணங்கள் தோன்றியவுடன் தன் படுக்கையில் இருந்து எழுந்து மேற்கு நோக்கி மண்டியிட்டவன் “ஓ அல்லாஹ்! நான் இறக்க விரும்பவில்லை. என்னைக் காப்பாயாக. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து என்னை விடுவிப்பாயாக. சிவாஜி மஹராஜ் போர் இன்றி முகலாய சாம்ராஜ்ஜியத்தில் இருந்து தன் படைகளை திரும்பப் பெற செய்வாயாக. இதன் பின் என் வாழ்வில் போதை பொருட்களையும், பெண்களையும் தொடாமல் வாழ்கிறேன். உனக்கு காணிக்கை செலுத்தும் விதமாக வெறும் வெள்ளை ஆடை மட்டும் இனி அணிவேன்.”
தான் சொல்லும் வாக்குகளை தான் பின்பற்றப்போவதில்லை என அவனுக்கு தெரிந்திருந்தாலும், அந்த நேரத்தில் பயத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல், தன் வாயில் வந்த வாக்குகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான் முவாசம்.
****
“முழு கவசம் அணிந்து உன்னுடைய கூடாரத்தில் இருப்பது மட்டுமே உன் வேலை. அதற்கே ஏன் இப்படி நடுங்குகிறாய் ஆந்தைக்குப் பிறந்தவனே!”. முவாஸத்தின் பயத்தை அறிந்த ஜெபுனிஷாவிற்கு அவன் மேல் மேல் அளவுக் கடந்த வெறுப்பும் கோபமும் வந்தது. போரில் வெற்றிப் பெற்று மக்களின் மனதை கவர வேண்டியவன் போர் என்ற சொல்லைக் கேட்டவுடன் தொடைநடுங்குகிறான். இவனா அரியணைக்கு தகுந்தவன்?
“படைத்தலைவர்களை போருக்கான திட்டத்தையும் , சமாதான திட்டத்தையும் வகுக்க சொல்லி இருக்கிறேன். நாம் போரில் சில வெற்றிகளைப் பெற்றப் பின், மராத்தியர்களுடன் சமாதானமாக போக வேண்டியது அவசியம். இல்லையெனில், இந்தப் போர் வெகுகாலம் நீடித்து அரசு கஜானாவை காலி செய்துவிடும். ஏற்கனவே , நடைபெற்ற போர்களினால் நமது கஜானாவில் இருப்பு குறைந்து வருகிறது. இந்த நேரத்தில் நீண்ட நெடிய போர் அவசியமற்றது” என தனது திட்டத்தை அவனுக்கு விவரித்தாள். தன் இருக்கையில் நடுக்கத்துடன் அமர்ந்திருந்த முவாஸத்தை வெறுப்புடன் பார்த்தவள், பின் சாளரத்திற்கு வெளியே தெரிந்த வானத்தைப் பார்த்துக் கொண்டே ” நான் அகில் கானை உன்னுடன் வர சொல்லி இருக்கிறேன். அவன் எனது உத்தரவுகள் சரியாக பின்பற்றுவதை உறுதி செய்வதுடன் படையில் ஏதேனும் துரோகிகள் இருந்தால் அவர்களிடம் இருந்து உன்னை பாதுகாக்கவும் செய்வான்” எனக் கூறி முடித்தாள்.
****
முவாஸம் படையுடன் தக்காணத்தை நோக்கி கிளம்பி ஒரு மாதம் ஆகி இருந்தது. ஜெபுனிஷா ஏற்பாடு செய்திருந்த ஒற்றர்கள், அவளது கட்டளைகள் சரியாக பின்பற்றப்படுவதை அவளுக்கு தெரிவித்த வண்ணம் இருந்தனர். மராத்தியர்களுக்கு எதிரான அந்த யுத்தத்தில் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தனர். முகலாயப்படை மராத்தியர்களை மேலும் தெற்கு நோக்கி துரத்திய வண்ணம் இருந்தனர். அவள் எதிர்பார்த்த சமாதானத்திற்கான நேரம் நெருங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் அகில் கானிடம் இருந்து அவள் எதிர்பார்த்திருந்த செய்தி வந்து சேர்ந்தது. ஒற்றர்கள் மூலம் செய்தி வந்து கொண்டிருந்தாலும், அவள் மிகவும் நம்பியது அகில் கானை மட்டுமே.
இளவரசி!
இந்தக் கடிதம் கிடைக்கும் பொழுது நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நான் பிரார்த்திக்கிறேன். மராத்தியர்கள் நம் சமாதான திட்டத்தை ஏற்றுக் கொண்டுவிட்டனர். நாம் இழந்த பெரும்பாலான கோட்டைகளையும், தக்காணத்தின் பெரும்பான்மையான இடங்களையும் மீண்டும் கைப்பற்றி விட்டோம். இனி மராத்தியர்கள் அவர்களின் பிரதேசத்திற்கு திரும்ப ஒத்துக்கொண்டுவிட்டனர். உங்களுடைய திட்டப்படி, போரின் பொழுது முவாஸம் பாதுகாப்பான இடத்திலேயே இருந்தார். தக்காணத்திற்கு அவர் வந்தவுடன் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டு வயது முதிர்ந்த பணிப்பெண்ணின் கவனிப்பிலேயே இருந்தார். ஆனால், இதனால் படையினரின் கேலிக்கும், கோபத்திற்கும் அவர் ஆளாகி உள்ளார் என்பதை சொல்லவேண்டியது என் கடமை. தங்கள் உயிரை வைத்து போர் புரியும் நேரத்தில் அவர் மட்டும் கூடாரத்திலேயே பாதுகாப்பாக இருப்பதா என்பதே வீரர்களின் கேள்வி.
ஒரு நாள், நமது வீரன் ஒருவன் மராத்திய வீரன் போல் வேடமிட்டு இளவரசரின் கூடாரத்தில் நுழைந்தவுடன், தனது பணிப்பெண்ணை தனித்து விட்டுவிட்டு பயத்தில் அங்கிருந்து ஓடி விட்டார். இதனால் படையினரின் மதிப்பை அவர் இழந்துவிட்டார் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை. அவர் தலைநகரம் திரும்பியவுடன், அவரது கௌரவத்தை நிலைநாட்ட நாம் எதாவது செய்தே ஆக வேண்டும். இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் படையினர் புரட்சியில் ஈடுபட்டாலும் ஆச்சரியப்படவேண்டியதில்லை.
உங்களை நேரில் சந்திக்கக் காத்திருக்கிறேன்
அகில் கான்
படையை தலைமைத் தாங்கி நடத்தி செல்லும் திறமையோ வீரமோ முவாஸத்திற்கு இல்லை என்பதை ஜெபுனிஷா அறிந்திருந்தாள். ஆனால் அவன் இவ்வளவு கோழையாக இருப்பான் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை. அவன் என்றும் ஒரு பொம்மை மட்டுமே என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். வீரமும், திறமையும் கொண்ட ஒருவன் வரும் வரை தானே ஆள வேண்டும் என சொல்லிக் கொண்டாள். அப்போதைய நிலைமையில் முவாஸத்தை காக்கவேண்டியது அவளது கடமையாகி போனது.
****
தில்லி செங்கோட்டையின் மீது உச்சி நேர சூரியனின் கதிர்கள் பட்டு மாடங்களும் கோபுரங்களும் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அரச சபைக்கு வெளியே கூடியிருந்த மக்களின் ஆரவாரத்தை மீறி எக்காளங்கள் முழங்கிக் கொண்டிருக்க, தில்லி மக்கள் முவாஸம் முகலாய சக்ரவர்த்தியாக பதவி ஏற்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அரச சபையின் விதானத்தில் இருந்து அழகிய துணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. அந்த அழகிய அரச சபை அன்று மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. முக்கிய பிரதானிகள் அவரவர் தகுதிக்கேற்ப வரிசையில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பின்னல் வியாபாரிகளும், சிறு பணக்காரர்களும் அவர்களுக்கு இன்னும் பின்னே பொது மக்களும் வீற்றிருந்தனர். அவர்களுக்கு பின் , குதிரைப்படை வீரர்கள் நின்றிருக்க , இறுதியாக தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட போர் யானைகள் நின்றுக் கொண்டிருந்தன.
முவாஸம் பதவி ஏற்கும் அந்த நேரத்தில், தனது தாத்தாவும், அத்தையும் அங்கிருக்க வேண்டும் என ஜெபுனிஷா விரும்பினாள். ஆனால் அதற்காக காத்திருக்க அவளுக்கு நேரமில்லை. ரவுஸனாராவும் அவர்களது கூட்டாளிகளும் மீண்டும் ஒரு சதி திட்டம் தீட்டும் முன் முவாஸம் அரியணையில் அமர்வது அவசியமாக இருந்தது. ஏற்கனவே முவாஸத்தின் மூலம் ஷாஜகானையும், ஜெகன்னாராவையும் விடுவிக்க ஆணை பிறப்பிக்க செய்திருந்தாள். இருந்தும், ஷாஜகானின் மோசமான உடல்நிலையினால் அவர்கள் ஆக்ராவிலிருந்து தில்லி வந்து சேர பல நாள் ஆகும். முவாஸம் ஆளப்போகும் முகலாய சாம்ராஜயமானது மேற்கே பெர்ஷிய எல்லையில் இருந்து கிழக்கே வங்காளம் வரையிலும், வடக்கில் இமயமலையில் இருந்து தெற்கே தக்காணம் வரையிலும் பறந்து விரிந்திருந்தது. இவை அனைத்தும் இப்பொழுது மக்ஃபியின் கைகளில்.
அழகையே மயில் சிம்மாசனத்தின் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான் முவாஸம். ஒவ்வொரு முறை தாரைகள் கொட்டப்படும் பொழுதும் அவனது இதயமும் சேர்ந்தே துடித்தது. எங்கே ஏதேனும் ஒரு மெய்க்காவலன் தன் குறுவாள் கொண்டு தன்னைக் கொன்றுவிடுவானோ என அப்பொழுதும் பயத்தில் வியர்த்து வழிந்தான் முவாஸம்.
பிரகடனத்தை படிக்கும் முன், குரானை வாசிக்க தயாராக நீதிபதி நின்றிருந்தார். மேடையின் ஒருபுறம், ரவுஸனாரா அமைதியாக அமர்ந்திருந்தாள். ஆஸம் அவள் அருகே நின்று கொண்டிருந்தான். நீண்ட தாடி வைத்திருந்த முல்லாக்கள் அவள் பின்னே கண்களில் பொறாமையும் கோபமும் தெறிக்க நடப்பவைகளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
” முல்லா ஓமர் எங்கே?” என திரைக்குப் பின்னால் இருந்து ஜெபுனிஷா கேட்டாள். தலைமை முல்லாவும், ரவுஸனாராவின் நம்பிக்கைக்கு உரியவனுமான ஓமர் முவாஸத்திற்கோ மக்ஃபிக்கோ ஆதரவு தெரிவிக்காவிடினும் முக்கிய அரசு நிகழ்வுகளில் அவனுடைய இருப்பு முக்கியமான ஒன்றாகும்.
“எனக்கு அவர் எங்கே உள்ளார் என்ற விவரம் தெரியவில்லை இளவரசி” என்று பிரதம அமைச்சர் பதில் அளித்தார்.
ஓமர் இல்லாமல் அந்த விழா நடைபெறாது என உணர்ந்த ஜெபுனிஷா தீதரை அழைத்து ஓமரை தேட சொன்னாள்.
அவளருகே அமர்ந்திருந்த அந்தப்புரத்து பெண்கள் அங்கே நடப்பவற்றை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். “இன்னும் அரைமணி நேரத்தில் ஓமர் வரவில்லையென்றால் நாம் விழாவை துவங்குவோம்” என உறுதியான குரலில் கூறினாள் ஜெபுனிஷா.
மூவாஸத்தை சக்ரவர்த்தியாக அறிவிக்கும் பிரகடனத்தை தில்லி நீதிபதி படிக்கத் துவங்கினார். “எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் அவருக்கு சாந்தி உண்டாகட்டும். இப்பொழுது அனைவரும் உங்கள் தலையை குனியுங்கள்.” சரிக்கப்பட்ட சீட்டுகட்டுப்போல் அங்கிருந்த அனைவரும் வரிசையாக தலை குனிந்தனர். “அல்லாஹ் ஹோ அக்பர்! பேரரசருக்கு….”
“பேரரசர் உயிருடன் இருக்கிறார்!”
பிரகடனத்தை படித்துக் கொண்டிருந்த நீதிபதியும், அங்கே தலைகுனிந்திருந்த அனைவரும் குரல் வந்த திசையை பார்க்கத் துவங்கினர். வேகமாய் ஓடி வந்ததால் மூச்சிரைத்துக் கொண்டிருந்த இளம் முல்லா ஒருவன் நீதிபதியின் அருகே வந்து “பேரரசர் அவுரங்கசீப்பிற்கு நினைவு திரும்பி விட்டது. அவர் உயிருடன் இருக்கிறார். தனது மகனை உடனடியாக பார்க்க விரும்புகிறார்” என முகத்தில் உற்சாகம் பொங்கக் கூறினான்.
இதற்கு முன் சக்ரவர்த்தி மரணப்படுக்கையில் இருக்கிறார் என கேள்விப்பட்ட மக்கள் இப்பொழுது அவர் மீண்டு விட்டார் என்ற செய்தி கேட்டு தங்களுக்குள் பேசிக் கொள்ளாத துவங்கினர். ஜெபுனிஷா அதிர்ச்சியில் உறைந்துப் போனாள். முவாஸத்தின் முகமோ பயத்தில் வெளிறியது. அவுரங்கசீப் கண்டிப்பாக உயிர் பிழைக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருவருமே பல நாட்களாய் அவனை சென்று பார்க்கவில்லை. தாங்கள் செய்தது மிகப் பெரும் பிழையோ என்று யோசிக்கக் கூட இயலாத நிலையில் இருந்தனர் இருவரும்.
“முல்லா ஓமர் சக்ரவர்த்தியுடன் இருக்கிறார். பிரகடனத்தை தடுத்து நிறுத்த என்னை அனுப்பினார். சக்ரவர்த்தி ஆலம்கீர் தன் இடத்தில் மீண்டும் அமர்வார்” என அந்த இளம் முல்லா சொல்லி முடித்தவுடன் “அல்லாஹ் ஹோ அக்பர்! பேரரசர் நீண்ட நாள் வாழட்டும்” என மற்ற முல்லாக்களும் அங்கே குழுமியிருந்த மற்றவர்கள் வாழ்த்து கோஷம் எழுப்ப துவங்கினர்.
ஒரு நிமிடத்தில் எப்படி அனைவரும் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டனர் என எண்ணிய ஜெபுனிஷாவின் மனதில் கோபம், துக்கம், ஏமாற்றம் என பல உணர்வுகள் கலவையாய் தோன்றின. கண்ணீர் வழியும் கண்களுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த மக்ஃபி குழுவை பார்த்தாள். அவர்களுக்கு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனதை எண்ணி அவள் மனம் குமைந்தது. ஆனால் அந்த நிலையில் அவளால் ஏதும் செய்ய இயலாது என்பதே நிதர்சனம். அவளையே உற்று பார்த்துக் கொண்டிருந்த ரவுஸனாராவை முறைக்க, ரவுஸனாராவின் முகத்தில் ஏளனப் புன்னகை தோன்றியது.
****
12. இறுதி முறிவு
உன் வாள் எத்தனை இதயங்களை கொன்றுள்ளது..
இன்னும் எத்தனை இதயங்களை கொல்லும்
4 ஜனவரி 1663
வடக்கிலிருந்து வீசிய குளிர்ந்த காற்றின் பிடியில் சிக்கி இருந்தது தில்லி. அந்தப்புரத்தில் இருந்த பெண்கள் தங்கள் உடைகளின் மேலே காஷ்மீரத்து சால்வைகளை எப்பொழுதும் போர்த்தி இருந்தனர். கோடைகாலத்திற்கான மெல்லிய துணிகள் அவர்களது பெட்டிகளில் தூங்கத் துவங்கி இருந்தது. இளவரசன் முவாஸத்தை சக்கரவர்த்தியாக பிரகடனப்படுத்த முடிவெடுத்த நாளில் இருந்து பல மாதங்கள் கடந்து விட்டது. வசந்த காலத்தில் முகலாய பேரரசின் ராணியாக அந்த சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருப்போம் என எண்ணி இருந்தால் ஜெபுனிஷா. ஆனால் நடந்தது என்னவோ அதற்கு நேரெதிரான நிகழ்வுகளே. சாம்ராஜய அரண்மனையில் அவுரங்கசீப் மீண்டும் அமர்ந்துவிட, ஜெபுனிஷா வழக்கம்போல் திரைக்குப் பின்னே இருந்தாள். அவளது சகோதரன் முவாஸமோ அரசருக்கு எதிராக கலகம் செய்ததாக குற்றம் சாற்றப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டான். அவுரங்கசீப்புக்கு எதிராக மீண்டும் ஒரு கலகம் ; மீண்டும் ஒரு இளவரசன் சிறையில்.
அவுரங்கசீப்பும் மாறியிருந்தான். நோய்வாய்ப்பட்டு மீண்டு வந்ததால் அவன் உடல் பலவீனம் அடைந்திருந்தது. அதிகம் பாதிக்கப்பட்டது அவனது பேசும் திறனே. முன்பு போல் இல்லாமல் இப்பொழுது அவன் பேச்சு மிக மெல்லமாகவும் நிதானித்தும் இருந்தது. அதே போல் அவைநல்ல நீண்ட நேரம் விவாதிக்க இயலவில்லை. நீண்ட விவாதத்திற்கு உரிய விஷயங்களை அவன் சொல்ல அதை அவன் உதவியாளன் கடிதமாய் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தினான். அவன் உடல் தளர்ந்து நரை விழுந்து ஊன்றுகோலின் உதவியுடன் நடந்தான்.
ஜெபுனிஷா இதை அவனது பலவீனமாக பார்க்கவில்லை. உடல் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவனது சிந்திக்கும் திறன் குறையவில்லை. முன்பு போலவே, மற்றவர்களால் தோற்கடிக்க முடியாதவனாகவே இருந்தான். அரச மருத்துவர்கள் அவன் பிழைப்பது கடினம் என்றும் அப்படியே பிழைத்து வந்தாலும் அரசாளுவது கடினம் என்றும் கூறியிருந்தனர். ஆனால் நடந்தது என்னவோ அதற்கு நேரெதிராக.
அவன் நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்தில் அவனுடைய குடும்பத்தினர் எப்படி அவனுக்கெதிராக புரட்சி செய்ய திட்டமிட்டனர் என்பதை அறிந்தவன் முதலில் அதை அடக்க முற்பட்டான். ஷாஜகானையும், ஜெகன்னாரவையும் விடுதலை செய்ய சொல்லி பிறப்பித்த உத்தரவு அது ஆக்ராவை அடையும் முன்னரே ரத்து செய்யப்பட்டது. ராஜபுதன மன்னரான ராஜா ஜெய் சிங்கின் கீழிருந்த சில பிரதேசங்கள் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டும் முகலாய பேரரசுடன் இணைக்கப்பட்டது. இத்தனை நடந்தும், ஜெபுனிஷாவோ அல்லது மக்ஃபி குழுவோ யாராலும் குற்றம் சாட்டப்படவில்லை. அவர்களுக்கு எதிராக எந்தவிதமான சாட்சியும் இல்லாததே இதற்கு முக்கிய காரணம். அவுரங்கசீப்பின் உடல்நிலை பாதிப்பு அவனின் கொள்கைகளிலும், செயல்பாடுகளிலும் மாற்றத்தை விதைத்திருந்தது. அரச மருத்துவர்களும் கைவிட்டப்பின் தான் மீண்டு வந்ததற்கு இறைவனே காரணம் என அவன் உறுதியாக நம்பினான். பொது மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி,இந்துக்கள் உட்பட அனைவருக்கும் பாதியாகக் குறைக்கப்பட்டது. மேலும், அரச ஊழியர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டது. அதிகப்படியான கடனில் சிக்கியிருந்தவர்களுக்கு உதவும் வகையில் வெள்ளி நாணயத்தின் மதிப்பு இரட்டிக்கபட்டது. இதை கடன் கொடுப்பவர்கள் எதிர்த்தபொழுதும் அமுலுக்கு வந்தது. ஹிந்து கோவில்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனாலும், இந்த மாற்றத்தை நம்ப ஜெபுனிஷா தயாராக இல்லை. தன் உடல்நிலை சீரடைந்தவுடன் இதையெல்லாம் மீண்டும் மாற்றி பழைய கொடுங்கோல் ஆட்சியே நடத்துவான் என அவள் உறுதியாக எண்ணினாள்.
அவனுடைய இளைய மகன் ஆஸமை அரியணையில் அமர்த்துவதற்காக போலியான சாசனத்தை அரச முத்திரையை திருடி தயாரித்ததை பற்றி அறிந்தவுடன் கடும் கோபம் கொண்டான் அவன். அவனுடைய அரச அவையில் இருந்த பிரபுக்கள் ரவுஸனாராவின் திட்டத்தை பற்றி அவனுக்கு விரிவாக எடுத்துக் கூறினர். பிரபுக்களிடம் அமைதியாக இருக்குமாறும், அவுரங்கசீப் இறந்தவுடன் அவர்களுக்கு ஏராளமான நிலம் தருவதாகவும் ரவுஸனாரா கூறிப் பார்த்தாள். ஆனால், இப்பொழுது அவளது வார்த்தைகளை நம்ப யாரும் தயாராக இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவுரங்கசீப்பிற்கு முன்பு அவள் இறந்துவிடுவாள் என்றே அனைவரும் எண்ணினர். அவளுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பதை முடிவு செய்ய தனது அரச சபையை கூட்டினான் அவுரங்கசீப்.
ரவுஸனாராவின் அடிமைப்பெண் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டாள். “பேகம் ரவுஸனாரா பெண்கள் உபயோகிக்கும் கருமையான மையை என்னிடம் கேட்டார். அரச கட்டளையில் உபயோகப்படுத்த அது தேவைப்படுகிறது எனக் கூறினார். அந்த மை விரைவில் காய்ந்து போகும் தன்மையுடனும் அழிக்க இயலாத ஒன்றாக இருக்கவேண்டும் என்றும் கூறினார். பேரரசர் நோய் வாய்ப்பட்டு படுத்திருக்கும் சமயத்தில் யார் அரச கட்டளை இடப் போகின்றனர் என நான் கேட்டதற்கு நான் உயிருடன் இருக்க வேண்டும் என்று விரும்பினால் இதைப் பற்றி யாரிடமும் நான் பேசக் கூடாது என என்னை மிரட்டினார்” என தனக்கும் ரவுஸனாராவிற்கும் இடையே நடந்த உரையாடலை சபையில் விரிவாய் எடுத்துரைத்தாள்.
கருப்பு நிற ஆடை உடுத்தி தன் முகத்தை திரையிட்டு மறைத்திருந்த அந்தப் பெண்ணிற்கு இருபது வயது கூட நிரம்பி இருக்காது. ஆனால் அவுரங்கசீப்பிற்கு அவளது வயதை பற்றி அதிகம் அக்கறை இல்லை. துருக்கிய அழகியான அவளை தன் இன்பத்திற்காக அந்தப்புரத்திற்கு கொண்டு செல்ல எண்ணினான்.
அவுரங்கசீப்பின் ஆலோசகனான ஷாயிஸ்தா கான் அந்தப் பெண்ணிடம் “உன்னை ரவுஸனாரா அடித்து துன்புறுத்தனாரா?” என கேட்டான்.
“என்னை அடிக்கவில்லை. ஆனால் நான் அந்த விஷயத்தை வெளியில் சொன்னால், சிறையில் தள்ளிக் கொன்றுவிடுவேன் என மிரட்டினார்.”
அவள் இதை சொன்னவுடன் அந்த சபையில் இருந்த அனைவரின் பார்வையும், அங்கே அமர்ந்திருந்த ரவுஸனாராவின் மீது படிந்தது. தனக்குள் இருந்த பயத்தை வெளியில் காட்டாமல் அமர்ந்திருந்தாலும், அடுத்து சாட்சி சொல்ல வந்த நாவப் பாயை பார்த்தவுடன் அவள் கண்களில் பயம் வெளிப்படத் துவங்கியது. முகத்தை திரையிட்டு மூடியிருந்தது அவளுக்கு வசதியாக இருந்தது அந்த நேரத்தில்.
தன் மனைவியரில் ஒருவரையே துன்புறுத்திய ரவுசனாராவின் துணிச்சலை எண்ணி பார்த்துக் கொண்டே “பேகம்! உனக்கும் ரவுஸனாராவிற்கும் இடையே அன்று இரவு என்ன நடந்தது. விரிவாக சொல்!” என்று நவாப் பாயிற்கு தைரியம் சொல்லும் விதத்தில் அவளை பேச தூண்டினான்.
“அரசே! அன்றிரவு, நான் உங்கள் படுக்கை அருகில் இருந்து உங்களை கவனித்துக் கொண்டிருந்தேன். மற்ற அந்தப்புர பெண்கள், விஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தது அக்பரின் அருகே இருந்தனர். எப்பொழுதும் போல் உங்கள் அறைக்கதவு சார்த்தப்பட்டு வெளியே காவலர்கள் இருந்தனர். இருந்தும், ஏதேனும் துரோகிகள் உங்களை கொள்ள முயல்வர் என நான் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு வந்த ரவுஸனாராவை அவள் கையைப் பற்றி தடுக்க முயன்றேன். அவளைத் தடுக்க முயன்று அவளது ஆடைகளையும் கிழித்தேன். ஆனால், அவளோ என் தலைமுடியைப் பற்றி இழுத்து என்னை உதைத்ததில் என்னால் அவளை தடுக்க இயலாமல் போனது. மேலும், ஆஸம் பதவி ஏற்றதும், என்னை அவளது அந்தப்புர சேடிப் பெண்ணாக்குவேன் என அவள் கூறினாள்” என அழுகையின் இடையே நடந்த உண்மைகளை எடுத்துக் கூறினாள் நவாப் பாய்.
“உங்கள் விரலைப் பற்றி அந்த ஆவணத்தில் உங்கள் கை ரேகையை பதிப்பதை என்னால் தடுக்க இயலாமல் போனது. அதற்காக என்னை நீங்கள் மன்னிப்பீர்களாக!”
அவுரங்கசீப்பின் இதயத்தில் அப்பொழுது தோன்றிய கோபத்தை அவனது முகத்தால் வெளிப்படுத்த இயலவில்லை. அவன் மனதினுள் ரவுஸனாராவின் மேலான கோபம் கொதிநிலையை எட்டிக்கொண்டிருந்தது.
தனது பிரதம அமைச்சரைப் பார்த்து ” நவாப் பாய் அந்த ஆவணம் போலி என்று சொல்லியும், நீங்கள் ரவுஸனாராவின் ஆவணத்தை எதற்காக ஏற்றுக் கொண்டீர்கள்?” என கோபத்துடன் வினவினான்.
“பேரரசே! அந்த தருணத்தில் யாரை நம்புவது என எங்களுக்குத் தெரியவில்லை. அதனால் உணர்ச்சிகளை விட என் முன் இருந்த ஆவணத்திற்கு முக்கியத்துவம் தந்தேன். நவாப் பாய் கூறியதற்கு அவரது வார்த்தைகளை தவிர வேறு எதுவும் சாட்சிகள் இல்லை. அதனால், உங்கள் கை ரேகையும், அரச முத்திரையும் இருந்த ஆவணத்தை நாங்கள் ஏற்க வேண்டியதாக ஆனது” என தான் எந்த நிலையில் அதை ஏற்றேன் என ஜாபர் கான் விளக்கமளித்தார்.
இந்த மாதிரி விஷயங்களில் தன் பிரதம அமைச்சர் யாருக்கு ஆதரவாகவும் பேச மாட்டார் என்பது அவுரங்கசீப் அறிந்த ஒன்று. அவரது பக்க சார்பற்ற நிலையும், நீதி வழுவாத தன்மையுமே அவர் அந்த பதவியில் அமர முக்கிய காரணங்கள்.
அடுத்தபடியாக ரவுஸனாராவிடம் வேலை செய்த அலியை வர சொன்னார்கள். “பேகம் ரவுஸனாராவிற்கும் , நவாப் பாய்க்கும் இடையே சண்டை நடந்த இரவு நீ அந்தப்புரத்தில் இருந்தாயா ? உயிர் மேல் ஆசை இருந்தால், நீ குடுத்த அந்த பானத்தில் ஏதேனும் மருந்து கலக்கப்பட்டிருந்ததா என இங்கே சொல்” என அவனுக்கு கட்டளையிட்டார் பிரதம அமைச்சர்.
அவர் சொன்னதிற்கு ஆமோதிப்பாய் தலை அசைத்த அந்த அலி முதலில் தன் எஜமானியையும் பின் அமைச்சரையும் பார்த்து ” நான் இளவரசிக்கும் , பேகம் நவாப் பாய்க்கும் கொடுத்த பழச்சாறில் அவர்களை தூங்க வியக்கும் தூக்க மருந்து கலக்கப்பட்டிருந்தது. ரவுஸனாரா உங்கள் அறைக்கும் செல்லும் நேரத்தில் அவர்கள் விழித்திருக்கக் கூடாது என ரவுஸனாரா தூக்க மருந்தை கலந்தார்” என சாட்சி கூறினான்.
அவள் போகலாம் என்பதற்கு அறிகுறியை அவுரங்கசீப் தனது கையை அசைத்தான். ஆனால் அவனோ ” மதிப்பிற்குரிய அரசே! நான் உங்களிடம் இன்னொரு விஷயத்தை கூற விரும்புகிறேன்.”
இதைக் கேட்டவுடன், அவன் மேலும் என்ன கூறப்போகிறானோ என பயமும் மிரட்சியும் கலந்த பார்வையில் அவனைப் பார்த்தாள் ரவுசனாரா. ஆனால் அந்த அலியோ அவளை சட்டை செய்யாமல், “இளவரசர் அக்பர் உடல்நலம் பாதிக்கும் முன், பேகம் ரவுஸனாரா விஷ மருந்துகளை தயாரிக்கும் மருத்துவர்களை சந்தித்தார். அந்த விஷத்தை அக்பர் சாப்பிடும் உணவில் அவர் கலப்பதை நான் பார்த்தேன்” என ரவுஸனாராவின் மற்றொரு குற்றத்தையும் பலர் அறிய அங்கே கூறினான்.
“இது அனைத்தும் பொய். நான் யாரையும் காயப்படுத்தவும் லில்லை கொள்ள முயலவும் இல்லை. என்னை இதில் சிக்க வைக்க சதி நடக்கிறது. ஜெபுனிஷா …” என ரவுஸனாரா கத்தினாள்.
“போதும் நிறுத்து!” அவுரங்கசீப்பின் கோபக்குரல் அந்த அவை முழுவதும் ஓங்கி ஒலித்தது. “நீ சொல்லி நான் கேட்டது போதும்! எனது சகோதரி எனக் கூறிக் கொண்டாய். எனக்கு விஸ்வாசமாக இருப்பேன் என்றாய். ஆனால் நான் நோய் படுக்கையில் இருந்த பொழுது என்னை அரியணையில் இருந்து அகற்ற முயன்றாய். என் மனைவி நவாப் பாய் உன்னை தடுக்க முயன்றபொழுது அவளை தாக்கி காயப்படுத்தினாய். நீ தேச துரோகம் குற்றம் செய்துள்ளாய். என் அரச முத்திரையை திருடி போலியான ஆவணத்தை உருவாக்கியுள்ளாய். நான் உறக்கத்தில் இருந்த பொழுது என் கை ரேகையை திருட்டுத்தனமாய் அந்த ஆவணத்தில் பதிந்துள்ளாய். எல்லாவற்றிற்கும் மேலாக என் மகனான இளவரசன் அக்பரை கொல்ல முயன்றாய்”. அவளது குற்றங்கள் ஒவ்வொன்றாய் அவன் பட்டியலிட அந்த அவையில் ஒரு அசாத்திய அமைதி நிலவியது. அதுவரையிலும், எந்த ஒரு முகலாய மன்னனும் தனது அரசின் முதல் பெண்மணியை அரசவையில் வைத்து விசாரித்ததில்லை. ரவுஸனாராவிற்கு என்ன தண்டனை விதிக்கப்படும் என்றே அவையில் இருந்தோர் எண்ணிக் கொண்டிருந்தனர்.
” நீ சாகும் வரை யானை மிதிக்க வேண்டும் என்று ஆணையிடுகிறேன்”.
தீர்ப்பை கூறியப் பின் ஷாயிஸ்தா கானின் உதவியுடன் அங்கிருந்து தனது அறைக்கு சென்றான் அவுரங்கசீப். அரச காவலர்கள் ரவுஸனாராவை சூழ்ந்து அவளை சிறைக்கு இழுத்துச் சென்றனர்.
திரைக்குப் பின் அமர்ந்திருந்த ஜெபுனிஷா அவனது உத்தரவைக் கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தாள். முகலாயப் பேரரசின் முதல் பெண்மணி கொடூரமான முறையில் இறக்கப் போகிறாள். தன்னுடைய ரகசியம் இனி வெளிப்படாமல் பாதுகாப்பாய் இருக்கும் என்பதை நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டாள். ஆனால் அந்த நிம்மதி விரைவிலேயே பயமாக மாறியது. ஆரோக்கியமாக முழு உடல் நலத்துடன் இருந்தபொழுது அவுரங்கசீப் எந்த அளவுக்கு மிருகமாய் இருந்தானோ அது உடல் நலம் குன்றிய இந்த நேரத்திலும் அந்த கொடூரம் சிறிதும் குறையவில்லை.
***********
13. முறைகேடான உறவில் பிறந்த குழந்தை
அன்பின் பாதையானது நீண்ட இருண்ட
பல அபாயமான வளைவுகளை கொண்டதாகும்
2 ஜனவரி 1664
வசந்த காலம் நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தன் அரச சபையை காஷ்மீருக்கு மாற்ற முடிவு செய்தான் அவுரங்கசீப். அதற்கு முந்தைய வருடத்தில் அவன் கருணையும் நற்குணமும் கொண்ட அரசனாக இருந்தான். ஆனால் அவனின் உடல்நலம் மீள மீள அவனது கருணையும் நற்குணங்களும் காணாமல் போனது. அவனது கருணைக்கு மாற்றாய் உடல் நலத்தைப் பெற்றானோ என சந்தேகிக்க வைத்தது அவனது நடவடிக்கைகள். டில்லியின் கோடைக்கால வெப்பம் அவனது உடல் நலத்தை பாதிக்கக் கூடும் என எண்ணி கொஞ்சம் குளுமையான இடமான காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு செல்ல முடிவெடுத்தான்.
ஒரு சாம்ராஜ்யத்தின் முக்கிய பகுதி அதன் பேரரசனே. எனவே அவன் எங்கு செல்கிறானோ அந்தப் பகுதி நாட்டின் இதயமாகி விடுகிறது. அவன் வடக்கில் செல்ல முடிவெடுத்தவுடன், நாட்டின் சுமைகளும் ஆடம்பரமும் அவனுடன் பயணித்தன. அரச குறிப்புகளும், பதிவுகளும் எண்பது ஒட்டகங்களிலும் , முப்பது யானைகளிலும் இருபது வண்டிகளிலும் கொண்டு செல்லப்பட்டன. அரசனது துணிமணிகள் கொண்ட நூறு பெட்டிகளை கொண்டு செல்ல நூறு ஒட்டகங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. அவர்கள் செல்லும் வழியிலும் இடத்திலும் தங்கள் செயலாலும், வார்த்தைகளாலும் சக்ரவர்த்தியை மகிழ்விப்போருக்கு கொடுப்பதற்காக ஐம்பது யானைகளில் சிறந்த நகைகள் கொண்டு செல்லப்பட்டன. நூறு ஒட்டகங்கள் வெள்ளி மற்றும் தங்க நாணயங்களை சுமந்து சென்றன. குடிப்பதற்கும், குளிப்பதற்கும் தேவையான நீரை நூறு ஒட்டகங்கள் சுமந்து சென்றன.
சக்ரவர்த்தியின் அந்த அணிவகுப்பிற்கு முன்னால் வெள்ளைத் துணியுடன் ஒரு குதிரை வீரன் சென்றான். வழியில் எங்கேனும் விலங்குகள் இறந்து கிடந்தால் அது மன்னரின் கண்ணில்படாமல் இருக்க துணிக்கொண்டு மூடி சென்றான். அதேபோல், மற்றுமொரு குழுவினர் கூடாரம் அமைக்க வசதியாய் அனைத்துப் பொருட்களையும் எடுத்து சென்றது. பசுமையாய் கண்ணனுக்கு குளிர்ச்சியாய் இருக்கும் இடங்களில் இரவு நேரத்தில் தங்க கூடாரங்கள் அமைத்து காத்திருந்தனர். அந்தக் கூடாரங்கள் பலவகையானா அலங்கார விரிப்புகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட ஒரு நகரத்தையே தங்கும் இடங்களில் உருவாக்கினார். அரச அவையும், அந்தபுரங்களும் இடம் பெற்றிருந்தன. ஒரு கூடாரத்தில் மாமிச உணவுகளும், பழங்களும், வெற்றிலையும், நீரும் இருந்தது. அரசு அதிகாரிகளுக்கும், சமையல் செய்பவர்களுக்கும், அலிகளுக்கும் தனித்தனி கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
ரவுஸனாராவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டப் பிறகு “நாட்டின் முதல் பெண்மணி” பட்டம் ஜெபுனிஷாவிற்கு தரப்பட்டது. கடந்து சென்ற மாதங்களில் நடந்த நிகழ்வுகளின் வலியும், சிந்தப்பட்ட இரத்தத்தின் நினைவுகளும் ஜெபுனிஷாவின் மனதை மிகவும் பாதித்திருந்தது. அதனால், அவுரங்கசீப்பிடம் லாகூர் செல்ல அனுமதி கேட்டாள். தன் பிரிய மகளின் கோரிக்கைக்கு அவுரங்கசீப்பும் அனுமதி அளித்திருந்தான்.
ரவுஸனாராவிற்கு நிறைவேற்றப்பட்ட தண்டனை அதைப் பார்த்தவர்கள் அனைவரின் மனதையும் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் ஒரு மாதம் மிக குறுகிய அறையில் அடைக்கப்பட்டிருந்தாள் அவள். அந்த ஒரு மாதம் முழுவதும் தாங்க இயலாத சித்திரவதைக்கு உள்ளானாள் ரவுஸனாரா. இரத்தத்திற்கு உரிய நாளான செவ்வாய் கிழமை அவளது தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய நாளாய் முடிவு செய்யப்பட்டிருந்தது. அவளுக்கு தண்டனை நிறைவேற்ற விலங்குகள் இடையே சண்டை நடக்கும் அரங்கத்தை தேர்வு செய்திருந்தனர். பொதுவாக அத்தகைய சண்டைகளை பொதுமக்களும், செல்வந்தர்களும் கண்டு களித்தனர். அந்த மரண அரங்கத்தில் தன் சொந்த சகோதரிக்கு தண்டனை நிறைவேற்ற முடிவு செய்த முதல் அரசன் அவுரங்கசீப்தான்.
தனது ஜென்ம விரோதியாய் ரவுஸனாராவை கருதிய ஜெபுனிஷா கூட அவள் மேல் இரக்கம் கண்டு அவளுக்கு இரக்கம் காட்டுமாறு தன் தந்தையிடம் முறையிட்டாள். துவக்கத்தில் இருந்தே தனக்கு எதிரியாக இருந்த தாராவை விட நம்பிக்கை மோசடி செய்த ரவுஸனாராவின் மேல் ஆலம்கீர்க்கு அளவு கடந்த கோபம் இருந்தது. ஜெபுனிஷாவின் கோரிக்கைக்கும் செவிமடுக்க மறுத்துவிட்டான். ஒரு மாதகாலம் சிறையில் சித்ரவதை அனுபவித்த ரவுஸனாரா, காயம்பட்டு இரத்தம் படிந்த உடலுடன் கூண்டில் அந்த அரங்கிற்கு இழுத்து வரப்பட்டாள். அவள் கொண்டுவரப்பட்டதும் அந்த அரங்கில் மயான அமைதி நிலவியது. இரண்டு நாட்கள் பட்டினி போடப்பட்டிருந்த சிறுத்தைகளும், புலிகளும் அந்த அரங்கிற்குள் கொண்டு வரப்பட்டன. அதைக் கண்டா ரவுஸனாராவின் முகம் பீதியில் உறைந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த அந்தப்புரத்து பெண்களோ அமைதியாய் கண்ணீர் விட்டனர்.
அந்த புலிகள் வந்து மோதியதில் கூண்டு அதிர்ந்தது. கூண்டின் அருகே வந்து அதற்குள் இருக்கும் இரையைப் பிடிக்க அவை முயற்சித்தன. பயத்தில் கருணை காட்ட வேண்டி ரவுஸனாரா கத்தியது கூட்டத்தினரின் ஆரவார கூக்குரலில் அமுங்கி போனது. அந்த கொடூர விலங்குகளைக் கண்டு அவள் அஞ்சியது அந்த கூட்டத்திற்கு சிறந்த பொழுதுபோக்காக இருந்தது. அந்த விலங்குகள் அவளை கொல்லும் வரை அவர்கள் அமைதியடைய மாட்டார்கள்.
பேரரசரை எதிர்பார்த்திருந்த கூட்டத்தினரின் எதிர்பார்ப்புக்கு மாறாக காவலர்கள் மீண்டும் அரங்கினுள் நுழைந்து அங்கிருந்த விலங்குகளை இழுத்து சென்றனர். அரசர் தன் முடிவை மாற்றி தன் சகோதரியை மன்னிக்க முடிவு செய்துவிட்டாரோ என அனைவரும் சந்தேகப்பட்டனர். ஏற்கனவே பயத்தினால் அதிர்ச்சியில் இருந்த ரவுஸனாராவை ஒரு காவலன் கூண்டிலிருந்து வெளியே இழுத்து வந்தான். சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்தவளை அரங்கத்தின் நடுவே காவலர்கள் நிறுத்த, அங்கிருந்த பொதுமக்கள் அழுகிய பொருட்களை அவள் மேல் வீசினர். திடீரென்று கூட்டத்தினர் உற்சாக குரல் எழுப்ப , அதற்கான காரணத்தை காண தலையை திரும்பியவள் மீண்டும் மிரண்டாள். மிகப்பெரிய யானை ஒன்று அரங்கத்தினுள் நுழைந்து கொண்டிருந்தது. சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த ரவுஸனாரா அதில் இருந்து தப்பிக்க திமிறினாள். சங்கிலிகளில் இருந்து விடுபட்டாலும் எங்கே செல்ல முடியும் அவளால்?. அவளது கூக்குரலை சிறிதும் சட்டை செய்யாத காவலர்கள் அவளை இழுத்து சென்று யானையின் முன் படுக்க வைத்தனர். அரங்கத்தின் சுவர்களில் இருந்து வந்த நீண்ட சங்கிலியால் கட்டப்பட்டிருந்தாள் அவள். உடலை சிறிதும் அசைக்க முடியாமல், கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அந்தப்புரத்து பெண்களால் இந்த காட்சியை கண்கொண்டு காண இயலவில்லை. சிலர் அழத் துவங்க மற்றும் சிலரோ கண்களை மூடிக்கொண்டு குரானை ஓதத் துவங்கினர். தனது தந்தையின் காட்டுமிராண்டித்தனமான செய்கையை கண்டு இதயமும் மூளையும் உறைந்து போன நிலையில் இருந்தாள் ஜெபுனிஷா.
தூக்கிய துதிக்கையுடன் பிளிறிக்கொண்டே அவளை நோக்கி முன்னேறியது யானை. பிரம்மாண்ட உருவத்துடன் அது வருவதை பார்ப்பதற்கே பயங்கரமாய் இருந்தது. அவுரங்கசீப் தண்டனையை நிறைவேற்றலாம் என்பதற்கு அறிகுறியாய் தன் தலையை அசைக்க, யானைப் பாகன் யானையை தன் கால்களை உயர்த்த கட்டளை இட்டான். அதைக் கண்ட ரவுஸனாராவின் கண்கள் பயத்தில் விரிந்தன. பீதியில் அவள் அலறியதை சிறிதும் சட்டை செய்யாத யானை, தன் கால்களை அவளது மார்பில் வைத்து மிதித்தது. அவள் உடலில் இருந்து இரத்தமும் சதையும் பீறிட்டு அந்த அரங்கமெங்கும் சிதறி விழுந்தது. அந்த பயங்கரம் நிகழ்ந்த மறு நொடி அந்த அரங்கில் மயான அமைதி குடிகொண்டது.
ஜெபுனிஷாவின் மனம் துக்கத்தால் கனத்து போனது. வெற்றியை கொண்டாட வேண்டிய தருணத்தில் அவளிடம் மகிழ்விற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஜெபுனிஷாவிற்கும் அவள் சகோதரிகளுக்கும் ரவுஸனாரா என்றுமே தொல்லையாகத்தான் இருந்தாள். அவளது இறப்பு அவளிடமிருந்து இவர்களை விடுத்திருந்தது. ஒருவகையில், ரவுஸனாரா அவனது சகோதரனை விட கொடியவளாக இருந்தாள். அவளிடம் அவுரங்கசீப்பிற்கு இருந்த தலைமை பண்புகளும் இல்லை. அதேபோல், தனக்கு கிடைத்த அதிகாரத்தைக் கொண்டு தன்னை சுற்றியிருந்தோர் முன்னேறவும் எதுவும் செய்யவும் இல்லை அவள். அவுரங்கசீப் கொடியவனை இருந்தாலும், அவன் நேருக்கு நேர் நின்றே எதிர்த்தான். ஆனால் ரவுஸனாராவோ எப்பொழுதுமே முதுகில் குத்துவதையே தன் வழக்கமாய் கொண்டிருந்தாள். முதலில், வாரிசு சண்டையில் தனது சகோதரன் தாராவின் முதுகில் குத்தியவள், பின் இளவரசன் அக்பரை விஷம் வைத்து கொள்ள முயன்றாள். அரச முத்திரையை திருடி போலியாய் ஆவணம் தயாரித்து அனைவரையும் ஏமாற்றினாள். தீமையின் மொத்த உருவமாய் இருந்தவள் தான் செய்த துரோகங்களுக்கு விலையாக கொடூர மரணத்தைப் பெற்றாள்.
அந்தப் போராட்டத்தின் இறுதி வெற்றி ஜெபுனிஷாவிற்கு கசப்பையே தந்தது. உச்சியில் இருந்து வீழ்ந்து மறைந்தவளை எண்ணிய சமயத்தில் அவள் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க அதை அவளின் விரல்கள் துடைத்தன.
****
ஜெபுனிஷா, தன் அன்புக்குரிய சகோதரன் அக்பருடனும், அவளை பாதுகாக்க அவுரங்கசீப் நியமித்திருந்த அகில் கானுடனும் லாகூரை சென்றடைந்தாள். அவளது அறை நிலவொளியில் வெள்ளிக் கதிர்களால் மின்ன புன்னகையுடன் உறங்கிக் கொண்டிருந்த தனது தம்பியை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அகில் கான் அமைதியாய் அந்த அறைக்குள் நுழைந்தான்.
அவன் சப்தம் எழுப்பவிடினும் அவன் உபயோகிக்கும் அத்தரின் மணம் அவனது வருகையை ஜெபுனிஷாவிற்கு உணர்த்தியது. அக்பரிடம் கண்களை அகற்றாமல் “அக்பரின் கண்கள் உன் கண்களை ஒத்திருக்கின்றன” என்றாள்.
அவள் தோளில் தன் கைகளை வைத்துக் கொண்டு முகத்தில் பெருமிதம் ஒளிர அவர்களின் மகனைப் பார்த்தான். “அவனது தாத்தாவிடம் இருந்து கோபத்தையும் கொண்டு பிறந்திருக்கிறான்” எனக் கிண்டலாக கூறினான். அக்பரின் பிடிவாதத்தை இருவராலும் எப்பொழுதும் சமாளிக்க முடிந்ததில்லை. அன்று மாலையும் விளையாட்டை நிறுத்திவிட்டு உணவு உண்ண அழைத்ததற்கு கோபம் கொண்டு பல மணி நேரம் போராட்டம் செய்து சாப்பிடமாலேயே உறங்கி விட்டான்.
“இந்த அரசாங்கத்தில் பல இரகசியங்கள் உள்ளன. ஆனால் இந்த இரகசியம் யாருக்கும் எப்பொழுதும் தெரியக் கூடாத ஒன்றாகும்” அகில் கானை பார்த்தவண்ணம் ஜெபுனிஷா கூறினாள்.
“அவனைப் பெற்றதற்காக எப்பொழுதேனும் வருந்தி இருக்காயா?”
“எப்பொழுதும் இல்லை.” ஒருகணம் அகிலை பார்த்து பேசியவள் மீண்டும் தன் மகனை பார்த்துக் கொண்டே “என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி இவன்தான். தனது இரண்டு மகன்கள் மட்டுமல்லாது தந்தையையும் சிறையில் அடைக்கக்கூடிய ஒருவனுக்கு இந்த இரகசியம் தெரிந்தால், உன்னையோ அல்லது முறைத் தவறி பிறந்த அக்பரையோ என்ன செய்வான் என என்னால் நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை” என தன் பயத்தை வெளிப்படுத்தினாள்.
இருவரும் தங்களது மகனையே பார்த்திருந்தனர். அந்த அறை முழுவதும் நிலவின் ஒளியில் வெள்ளியை போல் ஒளிர, அக்பரின் முகமோ அருகில் இருந்த விளக்கின் ஒளியினால் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஜெபுனிஷாவின் தலையினை மிருதுவாய் கோதிய அகில் கான், அவளை இழுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டான். அவனுடைய இருப்பு அளித்த நிம்மதியில் அவனின் மார்பில் தன் தலை சாய்த்து அவனை கட்டி அணைத்தாள் ஜெபுனிஷா.
அவர்கள் இருவருக்கும் இடையேயேயான உறவு ஒரு குருவிற்கும் மாணவனுக்குமான உறவாகத்தான் துவங்கியது. அப்பொழுது பேரரசனாக இருந்தது ஷாஜஹானின் ஆணைப்படி அந்தப்புர பெண்களுக்கு கவிதை சொல்லிக் கொடுக்க வந்தவன்தான் அகில் கான். அவளுடைய பெர்ஷிய அன்னையிடம் இருந்து இயல்பாக வந்திருந்த கலைத்திறன் காரணமாக ஜெபுனிஷாவிற்கு கவிதைகளின் மேல் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. இதுவே அவர்கள் இருவரும் தனிமையில் அதிக நேரம் செலவிடக் காரணமாக அமைந்தது. அதே சமயத்தில், வாரிசுக்கான யுத்தம் நடந்து கொண்டிருந்ததால், அவுரங்கசீப் அவுரங்காபாத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. அதனால், அந்தப்புர பெண்களை காக்கும் பணி அகில் கானின் மேல் சுமத்தப்பட்டது.
ஒரு நாள் இரவில் கவிதை எழுதிக் கொண்டிருந்த தருணத்தில், அவளுடைய கண்களும் அகிலின் கண்களும் ஒன்றோடொன்று சந்தித்தன. பல மாத பயிற்சிக்குப் பின், யாரும் எந்த வித திருத்தமும் செய்யாமலேயே மிக அருமையான கவிதை ஒன்றை எழுதி இருந்தால் ஜெபுனிஷா. அந்த சந்தோஷத்தில் அவனுக்கு நன்றி சொல்லும்விதமாய் அவனை இறுக கட்டி அணைத்தாள். அவர்கள் இருவருக்கும் இடையிலே இருந்த வயது வேறுபாடு அகில் கானுக்கு நன்கு தெரியும். இருந்தும், தனது கைகளால் அவளை சுற்றி வளைத்து , அவளது கழுத்திற்கு கீழே தன் விரல்களால் வருடினான். அவளுடைய மிருதுவான தோலில் , ஒரு ஆணின் கைகள் பட்டதும், ஜெபுனிஷாவின் இதயம் வேகமாய் துடிக்க, அவளது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கத் துவங்கின. அவளிடம் இருந்து விலக முயன்ற அகில் கானை தடுத்து நிறுத்தியவள், தன் இளம் பச்சை நிற கண்களால், அவன் கண்ணை உற்று நோக்கினாள். அவளை நோக்கி குனிந்த அகில், அவளது உதடுகளில் முத்தமிட்டான். ஜெபுனிஷாவின் உதடுகள் விரிந்து அவனுக்கு இடம் அளிக்க அவனின் அவனுடைய நாக்கு அவளுடைய நாக்குடன் விளையாட துவங்கியது. அவனது கரங்களோ அவளது மார்பங்களை கசக்கின. அவள் முன் மண்டியிட்டவன் அவளுடைய உடைகளை கீழே இழுத்து அவள் தொடைகளுக்கு நடுவே முத்தமிட்டான். அந்த கணத்தில் கட்டுப்படுத்த இயலாத உணர்வுகள் அவள் உடலில் பொங்கி எழ, அவளிடமிருந்து மெல்லிய முனகல் வெளிப்பட்டது. அவளுடைய விரல்கள் தன் முன்னே மண்டியிட்டிருந்த அகில் கானின் தலைமுடியில் விளையாடிக் கொண்டிருந்தது. அவளைக் கீழே இழுத்து படுக்க வாய்த்த அகில், அவளுள் நுழைந்து இயங்கத் துவங்கினான். அந்த நிமிடத்தில் அவன் மட்டுமே அவள் மனதில் இருந்தான். அவனுடைய எந்த செய்கைக்கு அவள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
அன்றைய இரவு முழுவதும் அவர்களின் காதல் ஆட்டம் தொடர, அக்பர் பிறப்பதற்கான வித்து அவளுள் விதைக்கப்பட்டது. நாட்கள் வேகமாய் செல்ல, உண்மையை மற்றவர்களிடம் மறைக்க இயலாத சூழ்நிலை உருவாகியது. அகில் கானை தவிர வேறு யாரிடமும் இதை சொல்ல முடியாத நிலையில் இருந்தாள் ஜெபுனிஷா. அகில் கானின் அறிவுரைப் படி புத்திசாலியான தன் அன்னையிடம் நடந்த உண்மைகளை அவள் கூறினாள். சுலைமானுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் அகில் கானுடனான உறவு மிகப் பெரிய பிரச்சனையை கொண்டு வரும் என்று அவளுக்குத் தெரியும். தனது கணவனுக்கு தெரிந்தால், இருவரையுமே கொன்றுவிட்டுதான் மறுவேலை பார்ப்பான் என தில்ராஸிற்கு நன்கு தெரியும். ஆனால் எல்லா அம்மாக்களையும் போல தனது மகளை காப்பாற்ற ஒரு திட்டம் தீட்டினாள். தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அவுரங்காபாத்திலிருந்து தள்ளியிருக்கும் இடத்தில் குழந்தை பெற விரும்புவதாகவும் அனைவரிடமும் அறிவித்தாள். அப்பொழுது அடுத்த வாரிசிற்கான சண்டை சென்று கொண்டிருந்ததால் பாதுகாப்பிற்காக அதை சொல்லுகிறாள் என்றே அனைவரும் நினைத்தனர். இது ஒரு நல்ல யோசனையாக எண்ணி முல்லாக்களும் அதை அனுமதித்தனர். மற்றவர்களை விட்டு விலகி ஒரு சிறு நகரத்தில் ஜெபுனிஷாவிற்கு குழந்தை பிறந்தது. தில்ராஸிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவுரங்கசீப்பிற்கு செய்தி அனுப்பப்பட்டது. அக்பர் பிறந்து சில காலம் கழித்து இருவரும் அவுரங்காபாத் திரும்பினர்.
“உன் அம்மா ஒரு புனிதவதி” என கூறினான் அகில்.
ஜெபுனிஷா கர்ப்பமடைந்து குலைந்த பிறப்பிற்கு முன் ஒரு காலம் தில்ராஸ் பட்டினி இருந்து தன் உடலை மெலிய வைத்துக் கொண்டாள். அதன்பின், தன் மகள் மேல் அவளுக்கு எந்த கோபம் இல்லாவிடினும், அகில் கானுடன் தான் இறக்கும் வரை அவள் பேசவில்லை. அவள் மேல் இருந்த மரியாதையில் அது அவள் குடுத்த தண்டனையாக அகில் கான் ஏற்றுக்க்கொண்டான்.
தன் கண்களில் காதல் வழிய ஜெபுனிஷாவை பார்த்த அகில் “நான் இறக்கும் நாள் வரை உன்னையும், அக்பரையும் காப்பாற்றுவேன்” என சபதம் ஏற்றான்.
“நீங்கள் என்னை காப்பாற்றுவீர்கள் என எனக்குத் தெரியும். ஆனால் உங்களை யார் காப்பாற்றுவார்?”
“அல்லாஹ் என்னை காப்பாற்றுவார்.”
சாளரத்தின் வழியே தெரிந்த இரவு வானத்தை பார்த்துக் கொண்டே “அல்லாஹ அனைவரையும் காப்பாற்றட்டும்” என பிரார்த்தித்தாள் ஜெபுனிஷா.
****
14. ஒரு சகாப்தம் முடிந்தது
அவர்கள் அவமானப்படுத்தப்பட்ட நினைவுகள்
அவர்களின் முகத்தை அவமானத்தால்
கருக்க வைக்கிறது
31 ஜனவரி 1666
பல வருடங்களாக அவுரங்கசீப்பிற்கும் ஷாஜகானுக்கும் இடையேயென கடிதத் தொடர்பு மிக மோசமானா ஒன்றாக இருந்தது. தன் மகனை “சாத்தான்” “கொடிய விஷம் கொண்ட பாம்பு” என ஷாஜகான் சொல்ல, அவுரங்கசீப்போ அதனை அவரிடம் இருந்தே கற்றுக் கொண்டதாய் பதில் அளிப்பான். சில வாரங்களுக்கு முன்பு ஷாஜகானின் உடல்நிலை மிக மோசமடைந்ததாக செய்தி வந்த பொழுது கூட அவுரங்கசீப் அதை பொருட்படுத்தவில்லை. ஏனெனில் , இதற்கு முன்பு பலமுறை நோய்வாய்ப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்திருந்தான் ஷாஜகான்.
ஒரு முறை, ஷாஜகான் பல வருடங்களாக தன் அடிமைகளிடமும் , சேடிப் பெண்களிடமும் ஆடிய ஆட்டத்தினால் தனது ஆண் குறி பாதிக்கப்பட்டிருந்தான். சிறுநீர் கூட கழிக்க இயலாமல் அவதிப்பட்டான். அரச வைத்தியர்கள் அவன் உயிர் பிழைப்பான் என நம்பவில்லை. அப்படி அவன் இறந்தால், தனது சகோதரன் தாரா, சகோதரி ஜெகன்னாரவுடன் இணைந்து அரியணையை கைப்பற்றுவர் என நினைத்த அவுரங்கசீப் தன் படையுடன் ஆக்ராவிற்கு விரைந்தான். ஆனால் அவன் நினைத்ததற்கு மாறாக ஷாஜகான் பிழைத்துக் கொண்டான். தான் அரசருக்கு எதிரான துரோகத்திற்காக கைது செய்யப்படுவோம் என அவுரங்கசீப், தாராவிற்கு எதிரான போரை நிறுத்தவில்லை. முகலாய அரசப்படைகளை விட எண்ணிக்கையில் குறைவாய் இருந்தது அவுரங்கசீப்பின் படை. அவனிடம் நிதியும் வெகு குறைவாகவே இருந்தது. இருந்தும், தனது போர் தந்திரங்களினாலும், ரவுஸனாரா தாராவிற்கு இழைத்த துரோகத்தினாலும் அவுரங்கசீப் வெற்றிப் பெற்றான். அவன் வென்றதும், ஷாஜஹானை ஆக்ராவில் சிறைப்படுத்தினான். தன் தந்தை சிறையில் இருந்தால், தானும் அவருடனேயே இருப்பேன் என உறுதியாக கூறிய ஜெகன்னாரா , ஷாஜகானுடன் ஆக்ராவிலேயே தங்கி விட்டாள்.
ஷாஜகானின் இறப்பு குறித்த தகவலைக் கேட்டவுடன் அவுரங்கசீப் மகிழ்வான் என்றே அவனது அரச சபையில் இருந்தவர்கள் நினைத்தனர். அவனது இறப்பைனால் மகிழ்ந்து விருந்தும், ஏழைகளுக்கு தானமும் அளிக்கப்படும் என்பது அவர்கள் எண்ணமாய் இருந்தது. ஆனால் அவர்கள் ஆச்சரியப்படும் வகையில், இந்த செய்தியை கேட்ட அவுரங்கசீப் உடைந்து போயிருந்தான். எண்ணற்ற ஈட்டிகள் அவனது இதயத்தை பிளப்பதை போல் உணர்ந்தான். நாடு முழுவதும் , துக்கத்தின் அனுஷ்டிக்க உத்தரவிட்டு ,துக்கத்தின் பொழுது முகலாயர்கள் உடுத்தும் வெள்ளை உடையை அணிந்தான்.
தன்னை பாதித்த பக்கவாத நோயில் இருந்து முழுவதும் மீளாத நிலையில் , அவுரங்கசீப் தனது அவையை வாரத்திற்கு சில மணி கூட்டினான். அன்று, துக்கத்தை குறிக்கும் விதமாக வெள்ளை உடை அணிந்து அரச சபையில் கூடியிருந்த அனைவரும் வாய் திறந்து பேச பயந்து அமைதியாய் அமர்ந்திருந்தனர். துக்க நிகழ்வை பற்றி பேசுவது அரசருக்கு எதிரான ஒன்றாக பார்க்கப்படுமோ என்று பயந்தனர்.
” என் தந்தையின் இறுதி சடங்கை நடத்த யாரேனும் ஒருவர் ஆக்ரா செல்ல வேண்டும்” என அவுரங்கசீப் அங்கிருந்த மௌனத்தை கலைத்தான். அரியணை ஏறிய பிறகு ஷாஜஹானை தந்தை என அவன் அழைப்பது இதுவே முதல் முறை.
இறுகிய இதயத்தை கொண்ட தன் தந்தையின் உணர்வு பூர்வமான மறுபுறத்தை பார்த்த ஜெபுனிஷாவின் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு வழிந்தது. அதைத் துடைக்கவும் அவளுக்கு தோன்றவில்லை.
“யாரை அனுப்பலாம் என நினைக்கின்றீர்கள் அமைச்சரே?”
“அரசே! அவருடைய மகன்களில் உயிருடன் இருப்பது நீங்கள் மட்டுமே. எனவே நீங்கள்தான் செல்ல வேண்டும்.”
சில நிமிடங்கள் மௌனமாய் அமைச்சரின் யோசனை குறித்து ஆராய்ந்தான் அவுங்கரங்கசீப். இறுதியில், “இல்லை. என்னால் செல்ல இயலாது. இங்கே செய்ய வேண்டிய வேலைகள் அதிகம் உள்ளன. மேலும், என் சகோதரியின் துக்கத்தை என்னால் காண இயலாது.”
“உங்கள் மகன்களில் ஒருவரை அனுப்பலாமே” என தன் யோசனையை முல்லா ஓமர் சொன்னான்.
இந்த யோசனையை கேட்ட ஜெபுனிஷாவிற்கு அந்த சோகத்திலும் சிரிப்புதான் வந்தது. இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் இருந்து பெண்கள் தடை செய்யப்பட்டிருந்தனர். அவுரங்கசீப்பின் மகன்களோ சிறையில் இருந்தனர்.
“என் மகன்களில் யாருக்கும் அந்த தகுதி இல்லை. அங்கே அனுப்பக்கூடிய அளவிற்கு யாரும் இல்லை.” எதுவும் செய்ய இயலாத நிலையில் தன்னையே நொந்து கொண்டான் ஆலம்கீர்.
ஜெபுனிஷா பேசத் துவங்கினாள். “அரசே! நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்த காலம் மிக குழப்பமான ஒன்றாகும். இளவரசன் முவாஸம் துரோகத்திற்காக சிறையில் இருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இளவரசன் சுல்தானை போல் வேண்டுமென்றே உங்களை எதிர்த்து புரட்சி செய்யவில்லை. உங்கள் தந்தையின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்வதற்கு மட்டும் அவனை விடுவிக்கலாம். அவருடைய பல மகன்களும், பேரன்களும் கொல்லப்பட்ட நிலையில், தனது இறுதி சடங்கில் முவாஸம் கலந்து கொள்வது அவரது ஆத்மாவிற்கு நிம்மதி அளிக்கும்.”
அவள் கூறிய வார்த்தைகளின் விளைவுகளை ஆராய துவங்கினான் அவுரங்கசீப். தனது மூன்று சகோதரர்களையும், சகோதரியையும் கொலை செய்திருந்தான். தன் மகனை, அவனது தாத்தாவின் இறுதி சடங்கில் பங்கு கொள்ள சிறையில் இருந்து விடுவிப்பது, தான் இதுவரை செய்த பாவங்களுக்கு ஒரு ப்ராயச்சித்தமாய் அமையும் என எண்ணினான்.
“அப்படியே ஆகட்டும். முவாஸத்தை ஆக்ராவிற்கு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க அனுப்பவும்” என தன் சம்மதத்தை தெரிவித்தான்.
“அரசே! முன்னாள் அரசர் ஷாஜகான், தனது மனைவி பேகம் மும்தாஜின் உடல் அருகிலேயே புதைக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு நீங்கள் அனுமதி தருவீர்களா?” என அமைச்சர் கேட்டார்.
சில நிமிட மௌனத்திற்கு பின் தன் தந்தையின் இறுதி விருப்பத்திற்கு சம்மதம் கூறினான்.
****
இதன்பின் சில வாரங்கள் கழித்து அவுரங்கசீப் தனது தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு சென்றான். அங்கு அஞ்சலி செலுத்தியப் பின், ஒரு துறவி போல் உடையணிந்திருந்த அவுரங்கசீப், ஆக்ரா கோட்டையினுள் இருந்த தூசு படிந்த சாலையில் தனது சகோதரி ஜெகன்னாரவை சந்திக்க நடந்து சென்றுகொண்டிருந்தான். பல வருடங்களாக அவன் பார்த்து பேசியிராத அவன் சகோதரியை காண சென்ற வழியெல்லாம் மக்கள் அனுஷ்டிப்பதைக் கண்டு வியப்படைந்தான். அவன் வெறுத்த ஒருவரை மக்கள் கொண்டாடுவது கண்டு அவனுக்கு பலத்த ஆச்சரியம். ஷாஜகானின் ஆட்சி காலத்தை பலர் முகலாயர்களின் பொற்கால ஆட்சியாக கருதினர்.
ஆக்ரா கோட்டையில் இருந்த ஷாஜகானின் அரச சபையுயும் காலியாக இருந்த சிம்மாசனத்தையும் பார்த்துக் கொண்டே அதன் அருகே இருந்த சம்மன் புர்ஜ்ஜுக்கு சென்றான். அங்கேதான் அவனது சகோதரி ஜெகன்னாரா இருந்தார்.
“பேரரசர் ஆலம்கீருக்கு எனது வணக்கங்கள்” என அவள் அவனை வரவேற்ற பொழுது அவள் சொற்களில் ஒலித்தது கிண்டலா என அவனுக்குப் புரியவில்லை.
தனது தந்தையுடன் இருப்பதற்காக நாட்டின் முதல் பெண்மணி என்ற பதவியை தியாகம் செய்த ஜகன்னாரா இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவுரங்கசீப், தனது சகோதரர்களையும் அவர்களது மகன்களையும் கொன்ற பிறகு அவளை சந்திப்பது இதுதான் முதன்முறையாகும். வயது முதிர்ந்து நரைத்த தலையுடனும், நோய்வாய்ப்பட்டதால் தளர்ந்த நடையுடனும் அவள் முன்னே நின்றுக்கொண்டிருந்தான் அவுரங்கசீப்.
“எப்படி இருக்கிறாய் ஜகன்னாரா?” என மெதுவாய் வினவினான்.
“வாழ்க்கை எளிதாக இல்லை. இருந்தபொழுதும் ஜானியின் துணையுடன் வாழ்ந்து வருகிறேன். அப்பாவின் நினைவாக ஆயிரம் பொற்காசுகளை ஏழைகளுக்குக் கொடுக்க எண்ணினேன். ஆனால் , உன்னுடைய அலி அதை என்னிடம் இருந்து பறித்து கொண்டுவிட்டான். தானம் அளிப்பதற்கும் உன் ஒப்புதல் பெற வேண்டுமாம்.”
“அது கண்டிப்பாக நடக்கும். அதனுடன் நான் அளிக்கும் பன்னிரண்டாயிரம் பொற்காசுகளையும் சேர்த்து தானம் கொடு. அம்மாவிற்கு அருகிலேயே அப்பாவை புதைக்க நான் கட்டளையிட்டுள்ளேன். இது உனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என நான் நம்புகிறேன்.”
அடுத்து என்ன பேசுவது என புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். திடீர் என்று அவள் காலடியில் விழுந்த அவுரங்கசீப் சிறு குழந்தை போல் குலுங்கி அழத் துவங்கினான். ஒரு நாள் தன் தந்தை தன்னை விரும்புவார் என அவன் நம்பியிருந்தது வீணாய் போனதோ என எண்ணி அவன் அழுதான்.
தன் காலடியில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த அவுரங்கசீப்பை பார்க்காமல் வேறெங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜகன்னாரா. அவள் கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை அவள்.
“நானே தந்தையைக் கொன்று விட்டேன். என்னை அல்லா ஒரு பொழுதும் மன்னிக்க மாட்டார். அம்மா என் முகத்தை பார்க்கக் கூட மாட்டாள்.” தன் செய்கைகளுக்கு மன்னிப்பு கேட்பது போல் புலம்பினான் அவுரங்கசீப்.
ஜகன்னாரா, தனது சகோதரனின் தோள்களை பற்றி அவனுக்கு ஆறுதல் கூறினாள். அவளது செய்கையினால் கொஞ்சம் சாந்தமடைந்த அவுரங்கசீப் தனது கண்ணீரை நிறுத்திக் கொண்டான். ஆனால், அவள் காலடியில் இருந்தும் எழ எந்த முயற்சியும் செய்யவில்லை. அங்கே அமர்ந்திருப்பது அவன் மனதிற்கு நிம்மதி அளித்தது.
அத்தனை நேரம் அமைதியாய் இருந்த ஜகன்னாரா ” எழுந்திரு அவுரங்கசீப். நம் தந்தை இறப்பதற்கு முன் உன்னிடம் கொடுக்க சொல்லி இந்த கடிதத்தைக் கொடுத்தார்.” தன் மார்பு கச்சைக்குள் மடித்து வைத்திருந்த கடிதத்தை எடுத்து தன் சகோதரனிடம் கொடுத்தாள்.
அன்பு மகன் அவுரங்கசீப்பிற்கு,
நாம் இருவருமே அல்லாஹ்வின் குழந்தைகள்.நாம் எந்த பாதையில் செல்ல வேண்டுமென அவனே தீர்மானிக்கிறான். அப்படி இருக்கையில் உன்னை எடை போட நான் யார்? என் இளம் வயதில் மிகப் பெரிய பாவத்தை செய்தேன். என் தந்தைக்கு எதிராக புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்தேன். என் சகோதரர்களை கொன்றேன். இதனால்தான், அல்லாஹ் என்னிடம் இருந்து என் அன்பு மனைவியை பிரித்து கொண்டு சென்றார். என் வாழ்நாளிலேயே தந்தைக்கு எதிராக மகன் புரட்சி செய்வதால் அந்த தந்தை அடையும் வேதனையை நான் அனுபவிக்க வேண்டும் என்றே என்னை உயிருடன் விட்டுவிட்டார்.
உன்னிடம் நான் எந்த குற்றமும் காணவில்லை. நான் என்ன செய்தேனோ அதையேதான் நீ மீண்டும் செய்திருக்கிறாய். அதற்காக நான் வெட்கப்படுகிறேன். இதற்காக நான் இறந்தப்பின் அல்லாஹ்விற்கு பதில் கூற வேண்டும். ஆனால், நான் உன்னை எந்தவிதத்திலும் சபிக்கவில்லை. எனக்கெதிராக நீ செய்த அனைத்து குற்றங்களையும் நான் மன்னித்துவிட்டேன். உனக்காய் சொர்க்கத்தின் கதவுகளை திறந்து வைக்க அல்லாஹ்விடம் மன்றாடுகிறேன். என் குழந்தைகளுக்கு நான் இருந்ததைவிட உன் குழந்தைகளுக்கு நீ நல்ல தகப்பனாய் இருக்க நான் வேண்டுகிறேன்.
உன் தந்தை
தன் சகோதரியை பார்த்து “அப்பா உண்மையில் என்னை மன்னித்துவிட்டாரா?” என வினவினான்.
“உண்மைதான் தம்பி. நம்முடைய நீண்ட கொடிய கனவு முடிவிற்கு வந்துவிட்டது. நாம் புதிய அத்தியாயம் துவங்க வேண்டிய தருணம் இது.”
வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த சோகத்தை ஒரே நாளில் கரைப்பது போல் மௌனமாய் அழுதுக் கொண்டிருந்தான் அவுரங்கசீப். அவனது தந்தையின் கடிதம் அவனை வெட்கி தலைகுனிய வைத்தது. ஆனால், அந்த வார்த்தைகள் ஜகன்னாரவுடையது என்று அவன் அறியவில்லை. அவர்கள் இருவரும் இணைவதே அவர்களுக்கு நிம்மதியை அளிக்கும் என அவள் அறிந்திருந்தாள். நெடுநாள் பகை தீர்ந்தால் மட்டுமே அவர்களின் சாம்ராஜ்யம் நீடித்து இருக்கும் அறிவாள். அதே சமயம், அவர்களை இணைப்பது மற்றவர்களால் முடியாத ஒன்று என்பதையும் அவள் அறிந்திருந்தாள்.
தன் கண்களில் வழிந்துக் கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ஜகனாராவின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு “என் சகோதார்களின் குழந்தைகள் இனியாவது என்னுடன் வாழ வேண்டும் என விரும்புகிறேன். ஜானியை என் மகன் ஆஸமிற்கு திருமணம் செய்துவைக்க விரும்புகிறேன். இதற்கு நீ சம்மதிப்பாயா?” என கேட்டான்.
அவனுடைய இந்தக் கோரிக்கையினால் வியப்படைந்த ஜகன்னாரா “இதில் எனக்கு எந்த தடையும் இல்லை. ஆனால், நீ உன் மகள்கள் அனைவரும் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும். இளவரசிகள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்ற பழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்” என தன் நிபந்தனைகளை கூறினாள்.
இருள் சூழ்ந்ததால் ஆக்ரா கோட்டையில் ஏற்றப்பட்ட தீப்பந்தங்களின் ஒளியையே பார்த்துக் கொண்டிருந்தவன் ” கட்டாயம் அந்த பழக்கத்தை ஒழித்துவிடுகிறேன். என் மகள் ஜூபைதாத்திற்கு தாராவின் மகன் சிஃப்ர் பொருத்தமாய் இருப்பான். நீ ஆக்ராவை விட்டு என்னுடன் தலைநகரத்திற்கு வரவேண்டும் என்பதும், நாட்டின் முதல் பெண்மணியாக வேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம்” என தன் ஆசையை தெரிவித்தான்.
இவ்வளவு நாள் நடந்த போர்களும், அதனால் விளைந்த துன்பங்களும் எதற்காக? அந்த ராஜ்யத்தை ஆள வேண்டுமென்பதற்கு தானே? சில நிமிடங்கள் யோசித்தவள் தயக்கத்துடன் தனது சம்மதத்தை தெரிவித்தாள். பின் தன்னுடைய நிபந்தனைகளை கூறினாள்.
“எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், உன்னை கேள்வி கேட்கும் உரிமை வேண்டும்.மேலும், நம் குடும்பத்தை சேர்ந்த யாரையும் குறிப்பாய் உனது சகோதர்களின் பிள்ளைகளை நீ இனி துன்புறுத்தக் கூடாது.”
எந்தவித தயக்கமும் இன்றி குரானின் மீது ஆணையாக இனி குடும்பத்தை சேர்ந்த யாரையும் துன்புறுத்த மாட்டேன் என சபதம் செய்தான்.
****
15. மீண்டும் வந்தாள் ஜகன்னாரா
காதலின் திருவிழா நடக்கிறது
கோப்பை கை மாறிக்கொண்டே வருகிறது .. நீ உன்
கோப்பையில் உள்ள மதுரசத்தை குடித்துவிடு..
15 பிப்ரவரி 1666
தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட யானையின் மீதமர்ந்து தன் தந்தையும், அவரது சகோதரி ஜகன்னாரவும் தில்லி நகரத்து வீதிகளின் வழியாய் கோட்டைக்கு வந்துக்கொண்டிருப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெபுனிஷா. சில வருடங்களுக்கு முன் அவளது சித்தப்பாவான தாரா துரோகி எனக் குற்றம்சாட்டப்பட்டு அதே வீதிகளின் வழியே அழைத்து செல்லப்பட்டது அவளது நினைவிற்கு வந்தது. அவளுக்கு நினைவு தெரிந்த நாளாய் அவுரங்கசீப் தன் உடன்பிறந்தோர் மீது இத்துணை பாசம் காட்டியது இல்லை.
ஷாஜகானின் ஏழு குழந்தைகளில் ஜகன்னாராவே மூத்தவள். அவுரங்கசீப்பை விட நான்கு வயது பெரியவள். ஷாஜகானின் மனைவி மும்தாஜ் இறந்தப்பின் , அவனது அத்தனை குழந்தைகளுக்கும் ஜகன்னாரா வளர்ப்புத் தாயானாள். தனது சிற்றன்னைகளில் ஒருவளான மன்பாவதியை விஷம் கொடுத்து கொல்ல முயன்றதற்காக அவுரங்கசீப்பிற்கு ஐம்பது கசையடி தரப்பட்டது. அந்த நேரத்தில், அவனுடன் இருந்து அவன் உடல் மீள உதவியது ஜகன்னாராதான். அதன்பின் ஒருமுறை தீ விபத்தில் ஜகன்னாரா பலத்த காயமடைந்த பொழுது அவளைப் பார்த்துக் கொண்டது அவுரங்கசீப்தான். ஆனால், ஜகன்னாரா அவனது சகோதரன் தாரா மீதும் அதே அளவு அன்பு செலுத்தினாள். அடுத்த வாரிசு யார் என்ற பிரச்சனை எழுந்தபொழுது அவள் தாராவை ஆதரித்தாள். இதுவே அவுரங்கசீப் அவளை வெறுக்க காரணமாய் இருந்தது. அதே நேரத்தில், அவுரங்கசீப் மற்ற மதத்தினரை வெறுத்ததும், முல்லாக்களிடம் நெருக்கமாக இருந்ததும் ஜகன்னாரவிற்கு பிடிக்கவில்லை. முல்லாக்கள் இந்திய முகலாய சாம்ராஜ்யத்தின் விரோதிகள் என அவள் எண்ணினாள்.
அவர்கள் இருவரை சுமந்து கொண்டு யானை வந்த வழியெங்கும் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு பொதுமக்கள் சாலையின் இருபுறம் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் கட்டுப்படுத்த முயன்ற காவலர்களின் செயல் தோல்வியிலேயே முடிந்தது. போரில் வெற்றிப் பெற்று திரும்பும் ஒரு மன்னனை வரவேற்பது போல் ஜகன்னாராவை வரவேற்றனர் தில்லி மக்கள்.
யானையை சுற்றி இருந்த மக்கள் கூட்டத்தை கண்டு ஜெபுனிஷா வியப்பின் எல்லைக்கே சென்றாள். அவள் வாழ்நாளில் அவளது தந்தைக்கோ அவனது குழுவிற்கோ இத்தகைய வரவேற்பை அவள் கண்டதில்லை. தில்லி மக்களால் இப்படி அன்பு காட்டமுடியும் என்பதையே அவள் அன்றுதான் அறிந்தாள்.
அவள் அருகே வந்து நின்ற ஜூபைதாத் “நான் இதுவரை அத்தை ஜகன்னாரவை பார்த்ததே இல்லை. அவர்கள் எப்படி இருப்பார்கள்?” என ஜெபுனிஷாவிடம் கேட்டாள்.
“சிகப்பாய், உயரமாய், அழகிய கருங்கூந்தலுடன் , மெல்லிய உடலுடன் சுருக்கமாய் கூறினால் மிக அழகாய். அவர்களை பார்த்தால் தந்தையை விடப் பெரியவள் என உன்னால் கூற இயலாது” என ஜகன்னாரவை வர்ணித்தாள்.
“அவர்கள் மீண்டும் நாட்டின் முதல் பெண்மணியாகப் போகிறார்கள் என ஒரு வதந்தி உலவுகிறது” என தனக்கு வந்த தகவலைத் தெரிவித்தாள் ஜூபைதாத்.
“உண்மையாகவா ? மீண்டும் அவர்கள் அப்பொறுப்பை ஏற்கப் போகிறார்களா?” என கேட்டவள் சிறிது நிதானித்து “அவர்கள் மக்ஃபியிலும் இணையலாம்” என புன்னகையுடன் கூறினாள்.
“அவர்கள் மக்ஃபியிலா? அவர்கள் இணைந்தால் அவர்கள்தான் மக்ஃபி என ஆகிவிடும். நீ தலைமை ஏற்க இயலாது.”
“நான் தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும் என நான் என்றும் நினைத்ததில்லை. நான் வேண்டுவதெல்லாம் தந்தை அவரது தவறுகளை உணர்ந்து திருந்த வேண்டும் என்பது மட்டுமே. ஜகன்னாரா அவரை திருத்தினால் மக்ஃபிக்கு அவசியமே இல்லை. மற்றவர்கள் எண்ணுவது போல் அது ஒரு கவிதைக் குழுவாகவே இருந்துவிடும். இது நாம் புரட்சிகள் செய்வது பற்றி சிந்திக்க வேண்டிய காலமும் இல்லை. திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெறுவதைப் பற்றி சிந்திக்க வேண்டிய காலம் இது. நம் இளமையும், வெகுளித்தன்மையும் நம்மிடம் இருந்து பறித்து விட்டார்கள்.” இறுதி வாக்கியங்களை பேசும் பொழுது அவள் குரல் உடைந்து போனது.
இதைக் கேட்ட ஜூபைதாதின் கண்களில் கண்ணீர் சுரக்காத துவங்கியது. ” நம் புதிய பேரரசி நம் இளமையை நமக்குத் திரும்ப அளிக்கக்கூடும்.”
***
ஜகன்னாரா தலைநகருக்கு மீண்டும் வந்ததை கொண்டாடும் விதமாக மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரண்மனையை சார்ந்த சமையல் கலைஞர்கள் பல்வேறு விதமான அசைவ உணவுகளை தயாரித்திருந்தனர். சைவ உணவுகளை மட்டுமே உண்ணும் நவாப் பாய் போன்றோருக்காக தனியாக சைவ உணவுகளும் தயாரிக்கப்பட்டிருந்தன. அவள் வருகையை அந்தப்புரம் முழுவதும் மீண்டும் வர்ணம் அடிக்கப்பட்டிருந்தது. நவாப் பாயும், அவுரங்கசீப்பின் மற்ற மனைவிகளும் ஒருபுறம் அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிர்புறம் ஜெபுனிஷாவும் அவளது சகோதரிகளும் அமர்ந்திருந்தனர். அவர்களின் பணிப்பெண்கள் அவர்களுக்கு பின்னால் அமர்ந்து இருந்தனர். அங்கே ஏற்றப்பட்டிருந்த ஊதுவத்திகளில் இருந்து வந்த நறுமணம் அந்த அறையை சூழ, ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குகள் அந்த குளிர்ந்த மாலையில் வெதுவெதுப்பை தந்துக் கொண்டிருந்தன. தங்க நிற அங்கியும், கழுத்தில் முத்து மாலையும் அணிந்து இடையில் வைரக்கற்கள் பொறிக்கப்பட்ட குறுவாளை சொருகியிருந்த அவுரங்கசீப்பை பார்த்த ஜெபுனிஷா தன் பழைய கொள்கைகளை அவன் கைவிட்டுவிட்டானோ என சந்தேகித்தாள். அவுரங்கசீப் எப்பொழுதுமே படோடோபத்தை எதிர்த்து வந்தான்.
அவுரங்கசீப்பின் அருகே நரைத்த முடியுடனும், சுருக்கம் விழுந்தஒருகாலத்தில் இளமை போங்க முகத்துடனும் ஒரு பெண்மணி நின்றுக் கொண்டிருந்தாள். பலவீனமாய் இருந்தாலும் கம்பீரம் சிறிது கூட குறையவில்லை அவளின் தோற்றத்தில். அவுரங்கசீப்பின் அந்தப்புரத்தில் இருந்த மற்றப் பெண்களை போல் முகத்தை மறைக்காமல் தலையை மட்டும் மறைத்து முக்காடிட்டிருந்தாள். அவளுடைய உடை, அவளரங்கசீப்பின் உடையை விட ஆடம்பரமாய் இருந்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஜெபுனிஷாவிற்கு அவளை அடையாளம் தெரியவில்லை. அவுரங்கசீப்பின் அந்தப்புரத்தில் இருந்த கணக்கற்ற பெண்களில் அவள் ஒருத்தியோ என்றே சந்தேகித்தாள்.
“அபுல் முசாபர் முஹி-உத்-தின் முஹம்மது அவுரங்கசீப் அலம்கிர் வருகிறார்!” என அந்தப்புரத்து காவலாளி அறிவித்தான். சில வினாடிகள் இடைவெளி விட்டு நாட்டின் முதல் பெண்மணி பேகம் ஜகன்னாரா வருகிறார் என்ற அறிவிப்பு வந்தது.
அதைக் கேட்ட ஜெபுனிஷா அதிர்ச்சியில் தன் வாயை மூடிக் கொண்டாள். அந்த வயதான பெண்மணிதான் தன் அழகான அத்தையா என்ற அதிர்ச்சி அது. ஒன்பது வருட சிறைவாசம் அவளை முற்றிலும் மாற்றி இருந்தது. ஒரு காலத்தில் இளமையின் உச்சத்தில் ஆற்றலுடன் இருந்தவள் இன்று வயதாகி சோர்வுடன் இருந்தாள். காண்போரை எல்லாம் அவளது அடிமையாக்கக் கூடிய வசீகர புன்னகை இன்று தயக்கத்துடன் கூடிய புன்னகையாக மாறி இருந்தது. அவர்கள் அந்த பெரிய அறைக்குள் நடக்க துவங்க, ஜகன்னாராவின் நிலை கண்டு நவாப் பாய் மெலிதான சப்தத்துடன் விசும்பிக் கொண்டிருந்தாள்.
அங்கிருந்த அந்தப்புரத்து பெண்களின் நிலையை அவுரங்கசீப் உணர்ந்ததாக தெரியவில்லை. “நாம் மிகப் பெரிய ஒரு துயரை சந்தித்திருக்கிறோம். முகலாய சாம்ராஜ்யம் தனது சிறந்த அரசர்களில் ஒருவரை இழந்து விட்டது. நான் என் தந்தையை இழந்து விட்டேன்.
தன் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாமல் தன் தம்பியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஜகன்னாரா.
“ஆனால், புதிய சகாப்தம் ஒன்று துவங்க உள்ளது. பேகம் ஜகன்னாராவை நாட்டின் பேரரசியாக மீண்டும் நியமித்துள்ளேன்.”
“அல்லாஹ் தூய்மையானவன்” என்று அங்கு கூடியிருந்த அனைவரும் கோஷம் எழுப்பினர். வெகு நாள் கழித்து ஜகன்னாராவின் முகத்தில் அவளது இளமை கால குடி கொண்டது. அவளுக்கு வயதாகி இருந்தாலும் அவளின் புன்னகை மட்டும் இன்னும் மாறாமல் இருந்தது. இந்தப் புன்னகையைத்தான் நான் விரும்பினேன் என் தனக்குள் சொல்லிக்கொண்டாள் ஜெபுனிஷா.
தான் நின்ற இடத்தில் இருந்து ஜகன்னாராவை நோக்கித் திரும்பிய அவுரங்கசீப் “இன்றிலிருந்து என்னுடைய சாம்ராஜ்ஜியத்தின் முதல் பெண்மணியாக இந்த ராஜமுத்திரையை நீங்கள் உபயோகிக்கலாம்” என கூறினான்.
அவன் கூறிய என்னுடைய சாம்ராஜ்யத்தின் என்ற வார்த்தையை கேட்டவுடன் அதுவரை ஜகன்னாராவின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தது. ஒரு சாம்ராஜ்யம் அரசனுக்குத்தான் சொந்தம் என்றாலும் பொதுவில் நமது சாம்ராஜயம் எனக் கூறுவதே வழக்கமான ஒன்றாக இருந்தது. அப்படி கூறாமல் தன்னுடைய சாம்ராஜ்யம் எனக் குறிப்பிட்டதன் மூலம் அவன் குடும்பமும், அந்தப்புரத்து பெண்களும் அவனுடைய விருப்பங்களை நிறைவேற்ற மட்டுமே என்பதை மறைமுகமாக உணர்த்துவதாகத்தான் அவள் கருதினாள்.
இதைக் கூறிவிட்டு அவன் ராஜ முத்திரையை அவளிடம் ஒப்படைத்தான். அதை கையில் வாங்கிய ஜகன்னாரா , தன் பழைய காதலனின் முகத்தை வருடுவது போல் அதைத் தடவினாள். அந்த அதிகார மாற்றம் அனைவராலும் கையொலி எழுப்பி வரவேற்கப்பட்டது.
அவர்களின் கை தட்டலின் ஓசைகள் அடங்கியப்பின் ” இன்னுமொரு அறிவிப்பை நான் கூற இருக்கிறேன். என் அன்பிற்குரிய மகள் ஜூபைதாதை இறந்துவிட்ட என் தம்பி தாராவின் மகனான சிஃப்ர்க்கு திருமணம் செய்து வைப்பதாக முடிவு செய்திருக்கிறேன். இந்த வருடமே இந்த திருமணம் நடக்கும். ஜகன்னாரா அதற்குண்டான ஏற்பாடுகளை மேற்கொள்வார்.” என ஜூபைதாதின் திருமண அறிவிப்பை கூறினான்.
அங்கே குழுமியிருந்தவர்கள் இதை கேட்டு மீண்டும் ஆரவாரம் செய்தனர். இந்த அறிவிப்பால் மிகவும் மகிழ்ந்த ஜெபுனிஷா, ஜூபைதாதை கட்டி அணைத்துக் கொண்டாள். சகோதரிகள் இருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். தனக்கு கல்யாணம் நடக்குமா என்பதோ இல்லை யாரை திருமணம் செய்து கொள்ளப்போகிறோம் என முடிவெடுப்பதோ தன் கையில் இல்லை என்பது ஜூபைதாத் நன்கு அறிந்திருந்தாள். ஆனால், தனக்கு நன்கு பழக்கமான திருமணத்திற்கு பின்பும் தில்லியிலேயே இருக்கக் கூடிய ஒருவனுடன் திருமணம் என்பது அவளுக்கு மிகுதியான சந்தோஷத்தை தந்தது.
“இது மிக அருமையான செய்தி. உனக்கென்று ஒரு குடும்பம் அமையப் போகிறது என்றாகும் நீ என்னருகிலேயே இருப்பாய் ” என ஜூபைதாதிடம் மிக மெல்லிய குரலில் முணுமுணுத்தாள் ஜெபுனிஷா.
அந்த அறையில் இருந்த மற்ற அந்தப்புர பெண்கள் அனைவரும் ஜூபைதாதை பார்த்து புன்னகைத்து அவளை வாழ்த்தும் விதமாய் தலையசைத்தனர். அனைவரது பார்வையும் அவள் மேலேயே இருக்க அவள் மனது மகிழ்ச்சியில் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது.
“ஜெபோ, அத்தையின் அருகே அமர்ந்திருக்கும் அந்த அழகிய இளம் பெண் யார் ? அவள் என்னை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவள் யார் என எனக்குத் தெரியவில்லை.”
“அவள் பெயர் ஜானி. நம் சித்தப்பா தாராவின் பிரியத்துக்குரிய பெண். ஆக்ராவில் ஷாஜஹான் மற்றும் ஜகன்னாராவின் கவனிப்பில் வளர்ந்தவள். அவள் அழகிதான்.”
“நான் அவளுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்ளவேண்டும்.”
“நீ மட்டுமல்ல , நாம் அனைவருமே அவளுடன் நெருங்கிப் பழக வேண்டும்” எனக் கூறிய ஜெபுனிஷாவின் கண்களில் சிறு நீர்த்துளி எட்டிப் பார்த்தது. அன்றைய நிகழ்வுகள் பிரிந்த அவர்களின் குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைப்பதாக அமைந்தன. அதற்காக அல்லாஹாவிற்கு நன்றி கூறினாள்.
****
ஜெபுனிஷாவுடனும், மக்ஃபியுடனும் தன் நாட்களை கழிக்க துவங்கினாள் ஜானி. மக்ஃபியின் உண்மையான நோக்கத்தை அவளுக்கு யாரும் சொல்லவில்லை. அழகான இளவரசியான ஜானியை பெண் கேட்டு பலர் வந்தபொழுதும் தன் மகன் ஆஸம்மிற்கு அவளை மணமுடிக்க எண்ணி அவுரங்கசீப் அவர்களுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், அவனது விருப்பத்தை பற்றி இருபத்தி மூன்று வயதான ஜானிக்கு ஜகன்னாரா எதுவும் சொல்லாமலேயே இருந்தாள். ஏனெனில் அந்த சம்பந்தத்தில் அவளுக்கே விருப்பம் இல்லாமல் இருந்தது.
“ஆஸம் மற்றும் ஜானிக்கு இடையேயான திருமணத்திற்கு நான் சம்மதிக்க இயலாது” ஜகன்னாரா அவுரங்கசீப்பிடம் நேரிடையாக கூறினாள்.
இதைக் கேட்ட அவுரங்கசீப் ஆச்சர்யமடைந்தாலும் பதில் ஏதும் கூறாமல் தன் புருவங்களை உயர்த்தினான்.
“உன்னுடைய மகன்களில் யாருக்குமே அவளை திருமணம் செய்து கொள்ள தகுதி இல்லை. இருவர் சிறையில் இருக்கின்றனர். வெளியே இருக்கும் இருவரோ அவளை விட இளையவர்கள்.”
“ஆஸமிற்கு திருமணம் செய்ய வேண்டிய சரியான வயதுதான்.”
“ஆஸமிற்கு பதினாறு வயதுதான் ஆகிறது. ஆனால் ஜானிக்கோ இருபத்து மூன்று வயதாகி விட்டது.”
“ஆஸம் அதை ஒரு பிரச்சனையாக பார்க்கவில்லை. அவன் ஜானியை மிகவும் நேசிக்கிறான்” என ஜகன்னாரவிடம் கூறிய அவுரங்கசீப் “சகோதரி, ஆஸம் இன்று நல்ல பலசாலியான வீரனாகி விட்டான். அவன்தான் எனக்குப் பின் பட்டத்திற்கு வரப் போகிறான். அந்த தருணத்தில் ஜானி அவனருகே வீற்றிருப்பதை நீ விரும்பவில்லையா?” எனக் கேட்டான்.
அவன் கூறியதைப் பற்றி தன் மனதிற்குள் யோசித்துக் கொண்டிருந்தாள். ஒரு முகாலயப் பெண் வாழ வேண்டி ஒரு ஆணையே சார்ந்திருக்க வேண்டும் என்பது உண்மையோ என எண்ணிப் பார்த்தாள்.
“உன் மற்ற இரு மகன்களை கைது செய்தது போல் ஆஸமையும் கைது செய்யமாட்டாய் என்பது என்ன நிச்சயம்? ஆஸமின் இந்த வயதில்தான் பொதுவாய் முகலாய இளவரசர்கள் ஆட்சிக்கு எதிராய் குரல் கொடுக்கத் துவங்குவார்கள். ஆலம்கீருக்கு எதிராய் பேசினால் என்ன நடக்கும் என்பது இந்த நாடு முழுக்க அறிந்த ஒன்றாகும்.”
இதைக் கேட்டவுடன் அவன் முகம் சுண்டிப்போனது. “அவன் என்ன குற்றம் செய்தாலும் அவனை சிறைப்படுத்த மாட்டேன் என நான் சத்தியம் செய்தால் இந்த திருமணத்திற்கு நீ சம்மதம் தருவாயா?” என அவளிடம் கேட்டான்.
சில நிமிடங்கள் யோசித்த ஜகன்னாரா தன் சம்மதித்திற்கு அறிகுறியை தலையை அசைத்தாள்.
****
ஜகன்னாரவும் ஜானியும் தங்கும் அறையை தயார் செய்யும் பணி காலதாமதமாகிக் கொண்டிருந்தது. அதனால் அவர்கள் இருவரும் அறையிலேயே தங்கி இருந்தனர்.
ஒரு நாள், அந்த அறையில் அமர்ந்து கீழே இருந்த தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜானி. தோட்டத்தின் பசுமையும் அதிலிருந்த நீரூற்றுகளும் அவள் மனதிற்கு நிம்மதியை தந்தது. அப்பொழுது அறைக்கு வெளியே அகில் கானின் குரல் ஒலித்தது.
“சுவர்களுக்கு பச்சை வர்ணம் தீட்ட சொல்லி இருந்தேன். யார் நீல நிறம் உபயோகித்தது? கிழக்கைப் பார்த்து அலங்கார விரிப்புகளை தொங்கவிட சொன்னால் அதை ஏன் மேற்கைப் பார்த்து தொங்க விட்டிருக்கிறீர்கள்?”
அவன் குரலைக் கேட்டதும் வேகமாய் எழுந்த அறையின் வாயிலுக்கு சென்றவள், அறையை மறைத்திருந்த திரைச்சீலையை விலக்கி அவனைப் பார்த்தாள்.
முகத்தை மறைக்கும் திரை அணியாமல் அங்கே நின்றவளைப் பார்த்தவன் “இளவரசி..”என்று அவளை விளித்து தன் பார்வையை அவள் மேலிருந்து வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.
“நீ என்னைப் பார்க்கலாம் கான்” என்று குறும்பாய் புன்னகைத்துக் கொண்டேக் கூறினாள். “நான் இங்கே வந்ததில் இருந்து உன்னையும் உன் கருணையையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.”
“இளவரசி! முகத்திரை அணியாத உங்கள் முகத்தை நான் பார்ப்பது சக்கரவர்த்திக்கு பிடித்தமான ஒன்றாக இருக்காது!”
“ஆனால், நீங்கள் சக்ரவர்த்தியுடைய மகள்களின் முகத்தை பார்த்துள்ளீர்களே?”
“அதற்கு சக்கரவர்த்தி அனுமதி தந்துள்ளார். அவர் தலைநகரில் இல்லாத அந்தப் பெண்களின் பாதுகாப்பிற்கு நான்தான் பொறுப்பேற்றுள்ளேன்.”
“அப்படியானால் என் முகத்தை நீ பார்ப்பதற்கு நான் அனுமதிஅளிக்கிறேன்.”
அவள் முகத்தைப் பார்க்க சங்கடப்பட்ட அகில் கான், “உங்களுக்கு நான் ஏதேனும் உதவி செய்ய வேண்டுமா இளவரசி?” எனக் கேட்டான்.
“எங்கள் அறை எப்பொழுது தயாராகும்?”
“அதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகக் கூடும்.”
“இன்னும் சில வாரங்களா? நவாப் பாயின் அறையில் இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. இங்கே அனைவரும் உரக்க பேசுகின்றனர். மேலும் இங்கே கொசுவின் தொல்லை அதிகமாக உள்ளது.”
“இதை நான் அரசரிடம் தெரிவிக்கிறேன்.”
சில நொடிகள் தயங்கிய ஜானி பின் “நீ இரவில் எங்கே உறங்குகிறாய்?” எனக் கேட்டாள்.
இதைக் கேட்ட அகில் கானின் முதுகு தண்டு உறைந்தது. வாழ்நாள் முழுவதும் ஒரு தகுதியான பெண்களைக் கவரக்கூடிய ஆண்மகனாய் இருந்த அகில் கானுக்கு ஒரு பெண் ஆணின் மீது விருப்பம் கொள்ளக் கூடிய அறிகுறிகள் நன்கு தெரியும். அவளின் கேள்விக்கு பதில் கூற விரும்பாத அகில் தனக்கு வேலை இருப்பதாக் கூறி கிளம்ப முயன்றான்.
அந்த அறையின் வெளியே ஒரு ஓரத்தில் சிறு கட்டிலும், அதில் கம்பளம் இருப்பதை பார்த்தவள் “நீ அங்கேதான் உறங்குகிறாயா?” எனக் கேட்டாள்.
அவளுக்கு எந்த பதிலும் கூற விரும்பாத அகில் கானோ மௌனத்தையே பதிலாக தந்தான். அவன் தோளில் தன் கையை வைத்து மெல்ல கசக்கியவள் “உன் போன்ற இடத்தில இருக்கும் ஆண்கள் பொய் சொல்லக்கூடாது. இரவில் விளக்குகள் அணைக்கப்பட்டதும் என்னுடைய அறைக்கு வா. யாரும் இல்லை என்பதற்கு அடையாளமாய் மூண்டு விளக்குகளை ஏற்றி வைக்கிறேன் நான்” எனக் கூறியவள் புன்னகைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள். அகில் கானோ என்ன செய்வது என புரியாமல் அவள் செய்கையினால் வந்த கோபத்துடன் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தான்.
****
ஏற்கனவே பேரரசரின் மகள்களில் ஒருத்தியுடன் இணைந்து அவள் குழந்தைப் பெற காரணமாக இருந்தது அகில் கானின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. அவர்களை பாதுகாக்க நியமிக்கப்பட்டவன், தன் கடமையை விட காமத்தை பெரிதாக நினைத்ததால் துரோகம் செய்ததாக உணர்ந்தான். ஆனால், தான் மட்டுமே இதற்கு காரணம் அல்ல என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். இளம் வயதியிலேயே பெர்ஷிய படைத் தளபதி ஒருவனின் பெண்ணை அவன் மணந்தான். அவள் மூலமாக அவனுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்றாலும் அவளை அவன் வெறுக்கவில்லை. வருடங்கள் செல்ல செல்ல அவர்களிடையே தாம்பத்திய உறவு என்பது இல்லாமல் போனாலும் அவர்களிடையே காதலும், நம்பிக்கையும் மாறவே இல்லை. அத்தகைய நிலையில் அவள் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்ததும் தன் இதயமே வெடித்தது போல் உணர்ந்தான் அகில். அவனுக்கு உண்டான மனசோர்வில் அவைக்கு வருவதையும் நிறுத்தி முழுநேர குடிகாரனாக மாறினான்.
தன் நண்பனின் இந்த நிலைக் கண்டு கவலையுற்ற அவுரங்கசீப் தான் நகரத்தில் இல்லாத நேரங்களில் தன் மனைவிகளையும், பெண்களையும் பாதுகாக்கும் பொறுப்பை அவனுக்கு தந்தான். அவர்களுக்கு என்ன சொல்லித் தருவது என முதலில் யோசித்த அகில் கான், பின் அவர்களுக்கு கவிதை எழுதவும் வாசிக்கவும் கற்றுத் தர துவங்கினான். அவன் வாழ்வில் மாணவியாகத்தான் உள்நுழைந்தாள் ஜெபுனிஷா. ஆனால் அவளுடைய அழகும் ஆளுமையும் முதலில் இருந்தே அவனை ஈர்த்தது. மற்றவர்களுக்கு முன் ஜெபுனிஷா தான் பெற விரும்பிய மகள் என்று சொன்னாலும், அவன் விரும்பிய மனைவி என்பது அவன் மனம் உணர்ந்தே இருந்தது. அவன் தன்னுடைய தகுதி மற்றும் இடத்தை அறிந்தே இருந்தான். அதனால் ஜெபுனிஷா மீது அவனுக்கு இருந்த ஈர்ப்பையோ உணர்வுகளையோ அவன் வெளிப்படுத்தியதில்லை. ஜெபுனிஷாவிற்கு சுலைமானுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டபொழுது அவன் மனதில் பொறாமையும் நிம்மதியும் ஒருங்கே எழுந்தது. ஆனால், மற்ற பெண்களை விட கவிதை எழுதுவதில் ஜெபுனிஷா சிறந்தவளாக இருந்ததால் ஆவலுடன் அதிக நேரம் தனிமையில் செலவிட நேர்ந்தது. அந்த இரவில் ஜெபுனிஷா வாசித்த கவிதையை கேட்டிருந்தால் தேவதைகள் கூட கண்ணீர் விட்டிருப்பார்கள். அந்த கவிதை அகில் கானின் நெஞ்சை தொட்டிருக்க அதற்குப் பின் நடந்தவைகளை தடுக்க இயலாத நிலையில் இருந்தான் அவன். அவனை இறுக்கி அணைத்த ஜெபுனிஷாவின் செய்கைகளை அவனால் தடுக்க இயலவில்லை. இப்பொழுது கூட ஜெபுனிஷாவின் உடலின் வெதுவெதுப்பையும், அவள் கைகள் வருடியதையும், அவள் உதடுகளையும் அவனால் உணர முடிந்தது. அது மட்டுமே அவர்கள் உறவு கொண்ட ஒரே தருணம். ஆனால் அது இன்னும் அவனின் மனதில் இருந்து அகலவில்லை. ஜெபுனிஷாவை முத்தமிடுவதாக நினைத்தவன் தூங்க இயலாமல் புரண்டுக் கொண்டிருந்தான். அதே நேரத்தில், அவன் கட்டிலில் அவன் அருகே யாரோ படுப்பதை உணர்ந்தவன் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான்.
“ஜானி!!!” என கூறியவாறே தனது படுக்கையில் இருந்து எழுந்தான். தன் எதிரே கம்பளியை மட்டும் மேலே போர்த்தி தன் மார்பகங்களை மறைத்து அமர்ந்திருந்த ஜானியை பயத்துடன் பார்த்தான்.
“மிர்சா கான்! உங்கள் உடலை வெதுவெதுப்பாய் வைத்திருக்க நான் வந்தேன்.”
விரக்தியும் கோபமும் ஒன்று சேர என்ன செய்வது என புரியாமல் தன் தலைமுடியை தடவியவன் அவளைப் பார்த்து “முதலில் உன் அறைக்கு செல்!” என கட்டளையிட்டான்.
“ஏன் என்னைப் பிடிக்கவில்லை? நான் அழகாய் இல்லையா?”
அந்த இளம் பெண்ணை பார்க்கையில் அவன் மனது குற்ற உணர்ச்சியில் சிக்கித் தவித்தது. அவளது மிருதுவான, ரோமம் இல்லாத தோல், கருமையான நீண்ட கூந்தல், அழகிய கண்கள் என அனைத்துமே ஜெபுனிஷாவை நினைவூட்டியது அவனுக்கு. அதே நேரத்தில் அவன் மனதின் பலவீனத்தையும் சுட்டிக்காட்டியது. ஜெபுனிஷாவிற்கு அவன் செய்ததை எண்ணி அவன் மனம் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தது. அவளின் வெகுளித்தன்மையை பறித்துவிட்டதாக அவன் எண்ணினான். அவர்களின் உறவை ஜெபுனிஷாவே துவங்கினாலும் அகில் கான் தன்னையே அதற்கு குற்றம் சாட்டிக்கொண்டான். அதனால் பிறந்த அவனது மகன், இப்பொழுது முகலாய அரண்மனையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். ஒரு நாள், மற்றவர்களுக்கு உண்மைத் தெரியவரும் நேரத்தில், இவர்கள் செய்த தவறுக்கு அவன் விலை தர வேண்டிவரும். ஜானியின் திறந்த முதுகை பார்த்துக் கொண்டிருந்த அகில் கான் தன் பார்வையை மறுபுறம் திருப்பிக் கொண்டான். இளம்பெண்களை கற்பழித்து அவர்களை அலங்கோலம் செய்பவன் போல் உணர்ந்தான். அவனுடைய நிராகரிப்பால் அழுதுக் கொண்டிருந்த ஜானியை பார்த்து “இங்கிருந்து சென்று விடு! உன்னைப் போன்ற இளம்பெண்களை எனக்கு பிடிக்கவில்லை. முதலில் துணி கொண்டு உன்னை போர்த்திக் கொள். உனக்கு சுயகௌரவம் இருந்தால் இங்கிருந்து செல்!” என்று அவளை விரட்டினான்.
அவனுடைய நிராகரிப்பால் அவனை பயமும் துக்கமும் கலந்து பார்த்தாள் ஜானி. அதன் பின், கீழே இருந்த அவளின் உடையை வேகமாய் அணிந்து கொண்டு பாம்பின் பிடியில் இருந்து தப்பித்து ஓடுவது போல் ஓடினாள். அன்றிரவு நடந்த நிகழ்வுகளால் அதிர்ச்சி அடைந்திருந்த அகில் கான் என்ன செய்வது எனப் புரியாமல் அமைதியாய் நின்றுக் கொண்டிருந்தான். தன்னுடைய கோபத்தை ஜானி மேல் காட்டியிருந்தாலும் அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்கானது அல்ல, அவை அனைத்தும் தனக்குத்தானே அவன் சொல்லிக் கொண்டவை. சுயகௌரவம் இல்லாத பாவி அவன்.
****
கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட கண்ணாடியின் முன் நிர்வாணமாய் நின்றுக் கொண்டிருந்தாள் ஜானி. அவளை யாரும் எப்பொழுதும் நிராகரித்தது இல்லை. அதனாலேயே அகில் கான் நிராகரித்ததும் தான் அழகாய் இல்லையோ என சந்தேகிக்க துவங்கினாள். சிறைப்பட்டிருந்த காலத்தில் ஆண்களை எப்படி வசையப்படுத்துவது என்பதைக் கற்றுக் கொண்டிருந்தாள். அவளுடைய அத்தை ரவுஸனாராவின் உடலுறவுக் காட்சிகளை பார்க்க நேர்ந்தபொழுது அவளுக்கு பதினோரு வயதுதான். தான் அதை பார்க்கவிரும்பவில்லை என அவள் அழுது மன்றாடிய பொழுதும் ரவுஸனாரா கேட்கவில்லை. அதன் பின் தூக்கமின்மையால் அவதிப்பட துவங்கினாள் ஜானி. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்த இயலாமல் சிறு ஓசைக்கும் பயப்படத் துவங்கினாள். இருண்ட அறைகள் அவளுக்கு அச்சத்தை தந்தன. அதனால் நன்கு விளக்கேற்றிய அறைகளிலேயே உறங்கினாள். கோபம், பயம் மற்றும் குற்றம் என பல்வேறு உணர்ச்சிகளில் உணர்ச்சிகளில் சிக்கித் தவித்தாள்.
தான் கண்ட காட்சிகளை மறக்க பல மாதங்கள் முயன்றாள். ஆனால், விரைவிலேயே ஒரு காலத்தில் அவள் வெறுத்த செயல்களை தானும் செய்யவேண்டும் என ஆசைப்படத் துவங்கினாள். அவளுள் காமத்தீ கொழுந்து விட்டு எறியத் துவங்கியது. அவளுக்கு எந்த ஆண் கவர்ச்சிகரமாய் தோன்றுகிறானோ அவன் அவளுடைய இச்சைக்கு உணவாய் மாறினான். அவளுடைய அழகிற்கும், அவளுடைய உடல் தேவைக்கும் முன்னால் அவர்களால் எதுவும் செய்ய இயலாமல் அவளிடம் தோற்று போனார்கள். ஆக்ராவில் அவர்களை காவல் காத்த வீரர்கள் பலருடன் உறவு கொண்டாள். ஒவ்வொருமுறை அவள் இந்த தவறை செய்யும் பொழுதும் தன்னைப் பற்றி கீழ்த்தரமாக எண்ணினாள். இருந்தும், அவளால் தன் இச்சைகளை அடக்க இயலவில்லை. மனதிற்குள் தன் தாத்தா இறக்கப்போகும் நாளை எண்ணிக் காத்திருந்தாள். அவர் இல்லையெனில் மேலும் பலருடன் உறவு கொண்டு தன் காம இச்சையை அடக்கிக் கொள்ளலாம் என அவள் எண்ணினாள்.
அகில் கான் மற்றும் ஜெபுனிஷாவிடையேயான உறவை பற்றி வதந்திகளை அவள் கேள்விப்பட்டபொழுது அவளுக்கு சந்தோஷமே வந்தது. அவன் இளம் பெண்களை விரும்புவதாக அவள் எண்ணிக் கொண்டாள். அதனால் அவன் நிராகரித்தபொழுது வயதான ஆண்கள் கூட விரும்பாத மலிவான தகுதியில்லாத பெண்ணாக தன்னை எண்ணிக் கொண்டாள்.
“நான் அழகில்லையா? நான் அழகாய் இருக்கிறேன் என சொல்பவர்கள் பொய் சொல்கிறார்களா?” என தன்னைப் பற்றியே சந்தேகிக்க துவங்கினாள். அது விரைவில் பொறாமையாக உருவெடுக்கத் துவங்கியது.
***
“ஆனால் அவன் என்னை விட மிகவும் இளையவன். அவனை எப்படி எனக்கு நிச்சயம் செய்தீர்கள்?”. அவளின் திருமணம் பற்றி ஜானியிடம் ஜகன்னாரா கூறியவுடன் அவள் மிகவும் சோகமடைந்தாள். அழுகையின் நடுவே தன் அத்தையின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். இத்தனை வருடத்தில் அவள் முகத்தை பார்த்து பேசுவது இதுவே முதல் முறையாகும்.
“திருமணம் என்பது அன்பும், காதலும் அல்ல. அதிகாரமும் பாதுகாப்பும் சம்பந்தப்பட்டது.”
“பாதுகாப்பு என்பது என்ன? ஆஸம் அரச சபையில் பலர் முன்னிலையில் சிறுநீர் கழிந்து கேலிக்கு உள்ளானான். அவனை திருமணம் செய்துகொள்வதில் எனக்கென்ன பாதுகாப்பும் அதிகாரமும் கிடைக்கப் போகிறது?”
“ஜானி, நீ உன் வருங்கால கணவனைப் பற்றி பேசுகிறாய் என்பதை மனதில் வைத்துக் கொள்” என்று அவளை எச்சரித்தாள் ஜகன்னாரா.
“என் காலத்தில் முகலாய இளவரசிகள் திருமணம் செய்துக் கொள்ளக் கூட அனுமதி இல்லை. இப்பொழுது உனக்கு அந்த உரிமை கிட்டும் பொழுது ஏன் மற்றவற்றை எண்ணி கவலைப்படுகிறாய்?”
ஜகன்னாராவின் காலடியில் அமர்ந்திருந்த ஜானி அவள் மடியில் தலை புதைத்து அழுகத் துவங்கினாள்.
“நான் சொல்வதை கேள் ஜானி. உன்னைப் போல் இளம் பெண்ணாக இருந்த சமயத்தில், ஆங்கில மருத்துவர் மேல் வெறித்தனமான காதலுடன் இருந்தேன். பின், அவருடன் மிக நெருக்கமாய் பழகினேன். ஆனால், இந்த விஷயம் உன் தந்தைக்கும் எனக்கும் மட்டுமே தெரியும். வேறு யாரேனும் அறிந்தால், என்னைக் கைது செய்திருப்பார்கள் அல்லது இந்நேரம் கொன்றிருப்பார்கள். ஒரு கட்டத்தில், அவரைத் திருமணம் செய்வது என்பது என்பது நடக்காத ஒன்று என்பதை உணர்ந்த நான் அவருடனான உறவை முறித்துக் கொண்டேன்.” உணர்ச்சிகளால் அவள் குரல் உடைய சிறிது இடைவெளி விட்டாள்.
“என்னுடைய காலத்தில் முகலாய இளவரசிகள் திருமணம் செய்துகொள்வது என்பது நடக்காத ஒன்றாகும். எனவே எங்களுடன் இருக்கவே இயலாத ஆண்களை காதலித்து பின் காலம் முழுவதும் உடைந்த இதயங்களுடன் வாழ்ந்தோம். மற்றப் பெண்கள், அந்தப்புரத்திற்கு ஆண்களை ரகசியமாக வரவழைத்து அவர்களுடன் உறவு கொண்டு பரத்தையர்களாக மாறினார்கள். என்னுடைய நெருங்கிய உறவுப் பெண்கள் சிலர் கூட முகலாய வீரர்களுடன் உறவு வைத்திருந்தனர். திருமணம் செய்ய தடைவிதிக்கப்பட்டதாலேயே அவர்கள் இவ்விதம் நடந்து கொண்டனர்.”
அதுவரை தன்னிடம் சொல்லாத தனது வாழ்வின் ரகசிய பக்கங்களை இப்பொழுது கூறிய அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஜானி.
“ஆஸம் எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றவன் அல்ல. அவன் உன்னை விட இளையவன் என்பது எனக்கும் வருத்தத்தையே தருகிறது. ஆனால் அவன் உன்னை விரும்புகிறான். உங்களின் பொருத்தம் நன்றாக இருக்கும். மேலும், அவனது மூத்த மனைவி என்பதால், உனக்கு அவர்கள் தரும் நிதியும் அதிகமாக இருக்கும். அவன் அரசனாகும் தருணத்தில் நீதான் நாட்டின் பேரரசி ஆவாய். உன் தந்தை தாரா இதனை கண்டால் மிகவும் மகிழ்வான். ஆஸம் என்ன செய்தாலும் அவனை சிறைப்படுத்த மாட்டேன் என அவுரங்கசீப் எனக்கு உறுதி தந்துள்ளான். அவன் எனக்கு தரும் வாக்குறுதிகளை என்றும் மீறுவதில்லை. என்னை நீ நம்புகிறாய் அல்லவா ?”
அதை ஆமோதிப்பதாய் ஜானி தலை அசைத்தாள். அவள் நெற்றியில் முத்தமிட்ட ஜகன்னாரா “நீ என் மேல் அன்பு வைத்துள்ளாய் என்று எனக்குத் தெரியும். நான் பெறாத மகள் நீ!” என மகிழ்வுடன் கூறினாள்.
****
16. ஒப்பிட முடியாத அளவு செல்வம்
பேரரசர்கள் தங்கள் சிம்மாசனத்தை பாதுகாப்புடன் வைத்திருந்தனர்
அவர்கள் தோல்வியை அறிந்திருக்கவில்லை
இறைவனே நாங்கள் உன்னால் வழிநடப்படவில்லை என்றால்
வெற்றிகள் எங்களுக்கு குறைவே போராட்டங்களும் வீணே
3 ஜனவரி 1669
ஜானி ஆஸம் திருமணம், ஒரு அரசு குடும்ப திருமணம் நடக்குமோ அதற்கேற்ற வகையில் ஆடம்பரமான ஒன்றாக நடந்தது. இரத்த சிவப்பு வண்ண உடையணித்திருந்த ஜானி, ஆஸமின் மனைவியானாள். அவுரங்கசீப் கூறியவாறு திருமண ஏற்பாடுகளை ஜகன்னாரா முன்னிருந்து நடத்தினார். தாராவின் திருமணத்தை எப்படி சிறுபப்க செய்தாரோ அதே அளவு சிறப்புடன் இந்த திருமணத்தையும் நடத்தினார். ஆனால் திருமண விழாக்களில் மது, போதைப் பொருள், இசை மற்றும் பெண்களின் நடனத்தை அவுரங்கசீப் அனுமதிக்கவில்லை. ஆனாலும், அந்தப்புர மகளிர் ரகசியமாய் கொண்டு வரப்பட்ட மதுவை தங்களது அறைகளில் பருகினர்.
முந்தைய இரவின் கொண்டாட்டங்கள் ஓய்ந்தப்பின் மறுநாள் காலையில் அரண்மனை தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த ஜெபுனிஷாவின் கண்களில் தூரத்தே நின்றுகொண்டிருந்த ஜகன்னாரா தென்பட்டாள்.
“சீக்கிரமாய் எழுந்து விட்டாயா நீ?”
“நீங்களும்தான். உங்களுக்கு என்னை விட அதிக களைப்பு இருக்குமே?” என ஜகன்னாரவை கேட்டுக் கொண்டே அவளது இருக்கையின் அருகே இருந்த சலவைக் கல்லில் அமர்ந்தாள் ஜெபுனிஷா.
“நீ ஏன் தரையில் அமருகிறாய்? காவலர்களை இருக்கை கொண்டு வர சொல்லுகிறேன்” எனக் கூறி அவர்களிடம் இருந்து சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த பெண் காவலாளியை நோக்கி சைகை செய்தாள்.
தனக்கு இருக்கை கொண்டுவந்த காவலாளியை சைகையினாலேயே போக சொல்லிவிட்டு “என்னுடைய சிறுவயதில் நீங்கள் கவிதை படித்துக்காட்டும் பொழுது இப்படித்தானே அமர்ந்திருப்பேன். இப்பொழுதும் அப்படியே அமர்ந்து கொள்கிறேன்” என்றாள் ஜெபுனிஷா.
ஜகன்னாராவின் முகத்தில் சிறு புன்னகை எழுந்து மறைந்தது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வழிகளை மீண்டும் நினைவு கூற அவள் விரும்பவில்லை.
“நாங்கள் ஒரு கவிதை குழு நடத்தி வருகிறோம். மக்ஃபி…”
“கவிதைக் குழுவா ? அது பிரார்த்தனைக் குழு என்றுதானே நான் கேள்விபட்டேன்.”
“சுலைமான் இறந்த பிறகு என் நிலை கண்டு அப்பா கொஞ்சம் இரங்கினார். ஒரு நாள் கனவில் என் அம்மா வந்தார். இந்த நிலையில் அப்பாவிடம் உனக்கு சாதகமாக வரம் கேள். அதன் மூலம் உன் நிலையை பலப்படுத்திக் கொள் என்று கூறினாள்” என மக்ஃபி உருவான கதையை அவளுக்கு எடுத்துரைத்தாள் ஜெபுனிஷா.
“உன்னை பலப்படுத்திக் கொள்ள ?”
“உங்களிடம் இப்பொழுது ஒரு இரகசியம் கூறப் போகிறேன். வெளியில் இருந்து நீங்கள் பார்க்கும் மக்ஃபி உண்மையில் மாறுபட்ட ஒன்று. அது பிரார்த்தனைக் குழுவல்ல. அது கவிதைக் குழு. அரசருக்கு எதிராய் நடக்கும் புரட்சி.” அதன்பின் தன்