ஏப்ரல் 4 ராசி பலன்

*️04-04-2021*

*☀️ஞாயிற்றுக்கிழமை☀️*

*️மேஷம்*

ஏப்ரல் 04, 2021

கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தொழில் தொடர்பான பயணங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மாறுபடும். முக்கியமான பேச்சுவார்த்தைகளின்போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : முன்னேற்றமான நாள்.

பரணி : இன்னல்கள் குறையும்.

கிருத்திகை : பொறுமை வேண்டும்.
—————————————
*️ரிஷபம்*

ஏப்ரல் 04, 2021

உடன்பிறப்புகளிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது சற்று விழிப்புணர்வு வேண்டும். கவனக்குறைவினால் சில அவப்பெயர்கள் ஏற்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடும். நெருக்கமானவர்களிடம் கருத்துக்களை பகிரும்போது சிந்தித்து செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : அமைதி வேண்டும்.

ரோகிணி : அவப்பெயர்கள் ஏற்படும்.

மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
—————————————
*️மிதுனம்*

ஏப்ரல் 04, 2021

குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் நினைத்த எண்ணங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பும், புரிதலும் மேம்படும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

திருவாதிரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் : புரிதல் மேம்படும்.
—————————————
*️கடகம்*

ஏப்ரல் 04, 2021

பூர்வீக சொத்துக்களின் மூலம் நன்மை ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் பொருளாதார மேம்பாட்டிற்கான சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்களுக்கு பின்பே அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : நன்மை ஏற்படும்.

பூசம் : அனுகூலம் உண்டாகும்.

ஆயில்யம் : தடைகள் அகலும்.
—————————————
*️சிம்மம்*

ஏப்ரல் 04, 2021

முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செய்யும் செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகளின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நிலுவையில் இருந்துவந்த காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். சட்டம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மகம் : முன்னேற்றம் உண்டாகும்.

பூரம் : தனவரவுகள் கிடைக்கும்.

உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
—————————————
*️கன்னி*

ஏப்ரல் 04, 2021

உபரி வருமானத்தின் மூலம் பொருளாதாரம் மேம்படும். புதிய ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். தம்பதியர்களின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கும், மரியாதையும் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : பொருளாதாரம் மேம்படும்.

அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.

சித்திரை : மரியாதைகள் அதிகரிக்கும்.
—————————————
*️துலாம்*

ஏப்ரல் 04, 2021

மறைமுகமாக இருந்துவந்த சில தடைகளை தகர்த்தெறிந்து எண்ணிய இலக்கை அடைவீர்கள். மனதில் இருந்துவந்த ஆசைகள் நிறைவேறும். விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். வாகனப் பயணங்களில் வேகத்தைவிட விவேகம் அவசியமாகும். உறவுகள் பற்றிய புரிதலும், உதவிகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

சித்திரை : ஆசைகள் நிறைவேறும்.

சுவாதி : வெற்றி கிடைக்கும்.

விசாகம் : விவேகம் வேண்டும்.
—————————————
*️விருச்சகம்*

ஏப்ரல் 04, 2021

சுபகாரியங்களை முன்னின்று செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சார்ந்த சிந்தனைகளும், செயல்பாடுகளும் மேம்படும். மனை சார்ந்த செயல்பாடுகளின் மூலம் தொழிலில் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதிற்கு பிடித்த ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

விசாகம் : பயணங்கள் சாதகமாகும்.

அனுஷம் : ஆதாயம் உண்டாகும்.

கேட்டை : பொருட்சேர்க்கை ஏற்படும்.
—————————————
*️தனுசு*

ஏப்ரல் 04, 2021

புதியதை பற்றி கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மனதில் தெளிவும், நம்பிக்கையும் அதிகரிக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த மனவருத்தங்கள் அகலும். பயணங்களின்போது உடைமைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : ஆர்வம் அதிகரிக்கும்.

பூராடம் : கவனம் வேண்டும்.

உத்திராடம் : மனவருத்தங்கள் அகலும்.
—————————————
*️மகரம்*

ஏப்ரல் 04, 2021

சமூகப்பணிகள் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிகள் மேம்படும். தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்கு உதவிகளை செய்வதன் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : முயற்சிகள் மேம்படும்.

திருவோணம் : நிதானம் வேண்டும்.

அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————
*️கும்பம்*

ஏப்ரல் 04, 2021

சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நீர்நிலைகள் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விவசாயப் பணிகளில் அரசு தொடர்பான உதவிகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். அரசியல் துறையில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.

சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.

பூரட்டாதி : அறிமுகம் உண்டாகும்.
—————————————
*️மீனம்*

ஏப்ரல் 04, 2021

வாழ்க்கைத்துணையிடம் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். பத்திரிக்கை சார்ந்த துறையில் புதிய மாற்றங்கள் நேரிடும். மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் ஏற்பட்டு மறையும். வேலையாட்களுடன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : மாற்றங்கள் நேரிடும்.

உத்திரட்டாதி : பதற்றமான நாள்.

ரேவதி : அனுகூலம் உண்டாகும்.
—————————————


About Author