ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 15

This entry is part 16 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – முந்தைய பதிவுகளை படிக்க

வரணம் , அர்க்ய கிரஹணம்

விஸ்வேதேவர் ஆனேன் என்று பிராமணர் பதில் சொல்லவேண்டும்.
தற்சமயம் பொதுவாக அக்ஷதையை விஸ்வேதேவர் விஷ்ணு தலையிலும் எள்ளை பித்ருக்கள் தலையிலும் போடுகிறோம். இவர்களுக்கு வலது காலில் முழங்காலுக்கு மேல் ஆரம்பித்து பிரதட்சிணமாக தலை வரை போட வேண்டும். அதே போல பித்ருக்களிடம் சென்று பூணூலை இடம் செய்து கொண்டு, அவர்களை கோத்திரம் ரூபம் முதலியவற்றை சொல்லி ஆவாஹனம் செய்கிறேன் என்று அனுமதி கேட்க வேண்டும். அவர்கள் ஆவாஹய என்று அனுமதி கொடுத்ததும், இடது பக்கம் தலையிலிருந்து கால் வரை போட வேண்டும். இந்த சமயத்தில் அமாவாசை தர்ப்பணம் செய்யும் போது சொல்லும் அதே ‘ஆயாத பிதர’ என்ற மந்திரம் சொல்லப்படும். ‘பித்ருக்களே! சந்தோஷமாக வாருங்கள். நல் வழியாக முன் உள்ளவர்களையும் அழைத்து வாருங்கள். எங்களுக்கு நீங்கள் சந்ததி, செல்வம், தீர்க்க ஆயுசு, நூறாண்டு நல்வாழ்வு ஆகியவற்றை கொடுங்கள்.’ என்பதே அதன் பொருள்.

விஷ்ணு வரிக்க உபவீதியாக அக்ஷ்தையுடன் இதே போல அவரை ஆவாஹனம் செய்ய அனுமதி கேட்டு, ஆவாஹனம் செய் என்றதும் ‘ஸஹஸ்ர ஸீர்ஷா’ என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்ய வேண்டும். ‘கணக்கற்ற தலைகள் உடைய விஷ்ணு கணக்கற்ற கண்களும் கால்களும் உள்ளவர். அவர் உலகெங்கும் வியாபித்து அதேசமயம் 10 அங்குலம் அதிகமாக உலகத்தில் இருக்கிறார்’ என்பது அதன் பொருள்.

அடுத்த பிரயோகம் அர்க்ய கிரஹணம். அதாவது போக்தாக்களுக்கு நீர் அளிக்க அதை சேர்த்தல். ஔபாசன அக்னியை கொண்டுவந்து வைத்திருக்கிறோம் அல்லவா? சரி சரி, ஔபாசன அக்னி இல்லை என்றால் அதை உண்டாக்கி வைத்திருப்போம். அதன் நடைமுறையை இப்போது பார்க்கவில்லை. இந்த அக்னிக்கு தெற்குப்பக்கம் தர்பங்களை பரப்ப வேண்டும். அவற்றின் மீது இரண்டு பாத்திரங்களை கிழக்கு மேற்காக வைக்க வேண்டும். கிழக்கே இருக்கும் பாத்திரத்தில் யவை என்ற தானியத்தை போட வேண்டும். இது கொஞ்சம் முயற்சி செய்தால் கிடைத்துவிடும். கிடைக்கவில்லை என்றால் கோதுமை, நெல், அக்ஷதை ஆகியவற்றை பயன்படுத்தலாம். ஒரு பவித்ரத்தை இந்த பாத்திரத்தில் நடுவில் வைக்க வேண்டும். சந்தன ஜலத்தால் இதை நிரப்ப வேண்டும் ‘ஷன்னோ தேவி’ என்கிற மந்திரம் இங்கே பிரயோகம். இதன் பொருளை முன்னேயே பார்த்துவிட்டோம். இன்னார் சிராத்தத்தில் இன்ன தேவர்களுக்கு ஜலத்தை கிரஹிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். பிறகு யவை தானியம் மீண்டும் அதன் மேல் போடப்படும். அப்போது சொல்லப்படும் மந்திரம் ‘யவோஸி”. இதன் பொருள் ‘யவை தான்யமே, நீ தானியங்களில் சிறந்தவன். உனக்கு ராஜா வருணன். நீ தேனுடன் கூடியவன். எல்லா பாபங்களையும் போக்குபவன். புனிதமானவன் என ரிஷிகளால் கருதப்பட்டவன்’ .

Series Navigation<< ஶ்ராத்தம் – 16ஶ்ராத்தம் – 19 >>

About Author