ரிக் வேதீய ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் – 24

This entry is part 24 of 44 in the series ஶ்ராத்தம்

ஶ்ராத்தம் பார்வண ஹோமம் -6 – ஆபஸ்தம்ப ஶ்ராத்த பிரயோகம்.-2

பிதாவுக்கு, தாத்தாவுக்கு, அவரது தந்தைக்கு என 3 பேருக்கு தலா 2 ஹோமங்கள். யன்மே மாதா என்பது அடுத்தடுத்த தலைமுறைக்கான ஹோமங்களில் பொருத்தமாக யன்மே பிதாமஹி, யன்மே ப்ரபிதாமஹி என மாறி வரும். இரண்டாவது ஹோமம் உலகை தாங்கி நிற்கும் நீர் (1), மலைகள், முடிவேயில்லாத திக்குகள் (2), ருதுக்கள், பகலிரவு, ஸந்த்யா காலங்கள், பக்‌ஷம் மாசம் (3) ஆகியவை அன்னியரை தடுக்கட்டும்; குறிப்பிட்டவரையே ஹவிஸ் போய் சேரட்டும் என்ற பொருள் உள்ள மந்திரங்களால் செய்யப்படும்.

கடைசியாக க்ஞானாதாஞாத பித்ருக்கள். நமக்கு 7 மேல் தலைமுறை உள்ளவர்கள் பங்காளிகள் ஆவர். நமக்கோ 3 தலைமுறை மேல் தெரியவில்லை. முன்னே பல வீடுகளில் இப்படி தெரியாமல் போகக்கூடாது என்றோ என்னவோ தாத்தா பெயரையே வைப்பர். ஆக 2 பெயர்களே மாறி மாறி வந்து கொண்டு இருக்கும்.
போகட்டும். சில பித்ருக்கள் இந்த உலகில் மறு பிறப்பு எடுத்து இருப்பர். சிலர் பித்ரு லோகத்திலேயே இருப்பர், அல்லது வேறு லோகங்களில் இருப்பர். இப்படியாக தெரிந்த தெரியாத பித்ருக்களுக்கு 7 ஆவதாக ஹோமம் செய்யப்படுகிறது.

பின் ஸ்வாஹா பித்ரே என்பதை மாற்றி மாற்றி சொல்லி 4 நெய்யால் ஹோமங்கள். ஸ்வதா என ஒரு முறை. அக்னி கவ்யவாஹனன் என ஒரு முறை.

மீண்டும் பொதுவான முறைக்கு வந்து விட்டோம். எந்த ஹோமம் செய்தாலும் பிரதான ஹோமங்கள் முடிந்ததும் ‘அக்னயே ஸ்விஷ்டக்ருதே’ என்று ஒரு ஹோமம் உண்டு. பெரிய இலையில் ஒரு முறை அன்னம் எடுத்து வைக்க வேண்டும். ( 5 ப்ரவர ரிஷிகளுக்கு மேல் உள்ளவர்கள் 2 முறை) ஆனால் அளவில் இது முன்னே செய்த மொத்த அன்னத்தின் அளவை விட அதிகமாக இருக்க வேண்டும். மேலே இரு முறை நெய் விட்டு அக்னியின் வடகிழக்கு பகுதியில் ஹோமம் செய்ய வேண்டும். இது முன்னே செய்த ஹோமங்களுடன் கலக்கக்கூடாது. அதற்காக முன்னே ஹோமம் செய்த அன்னத்தை விராட்டி துண்டுகளால் மூடி விட வேண்டும். ஸ்விஷ்டக்ருத் ஆனதும் இது அளவில் அதிகம் ஆகையால் ஜீரணம் ஆகும் பொருட்டு இதை வராட்டி துண்டுகளால் மூட வேண்டும். ஸ்விஷ்டக்ருத் ஹோமம் அதன் முன் செய்த பிரதான ஹோமங்களின் குறைகளை நீக்கி நிறைவாக்குகிறது.

சிராத்தத்தில் அடுத்து பெரிய இலையில் உப்பு போடாத கறித்தானை எடுத்து வைத்து முன்னும் பின்னும் அபிகாரம் செய்து அதை வடக்கே சாம்பலில் ஸ்வாஹா: என்று சொல்லி இட்டு விட வேண்டும்.

Series Navigation<< ஶ்ராத்தம் – 23ஶ்ராத்தம் – 25 >>

About Author