- ஶ்ராத்தம் – 1
- ஶ்ராத்தம் – 2
- ஶ்ராத்தம் – 3
- ஶ்ராத்தம் – 4
- ஶ்ராத்தம் – 5
- ஶ்ராத்தம் – 6
- ஶ்ராத்தம் – 7
- ஶ்ராத்தம் – 8
- ஶ்ராத்தம் – 9
- ஶ்ராத்தம் – 10
- ஶ்ராத்தம் – 11
- ஶ்ராத்தம் – 12
- ஶ்ராத்தம் – 13
- ஶ்ராத்தம் – 14
- ஶ்ராத்தம் – 16
- ஶ்ராத்தம் – 15
- ஶ்ராத்தம் – 19
- ஶ்ராத்தம் – 18
- ஶ்ராத்தம் – 17
- ஶ்ராத்தம் – 20
- ஶ்ராத்தம் – 21
- ஶ்ராத்தம் – 22
- ஶ்ராத்தம் – 23
- ஶ்ராத்தம் – 24
- ஶ்ராத்தம் – 25
- ஶ்ராத்தம் – 26
- ஶ்ராத்தம் – 27
- ஶ்ராத்தம் – 28
- ஶ்ராத்தம் – 29 – உணவிடும் முன்
- ஶ்ராத்தம் – 30
- ஶ்ராத்தம் – 31- உண்ணும் முன்.
- ஶ்ராத்தம் – 32
- ஶ்ராத்தம் – 33
- ஶ்ராத்தம் – 34
- ஶ்ராத்தம் – 35
- ஶ்ராத்தம் – 36
- ஶ்ராத்தம் – 37
- ஶ்ராத்தம் – 38
- ஶ்ராத்தம் – 39
- ஶ்ராத்தம் – 40
- ஶ்ராத்தம் – 41
- ஶ்ராத்தம் – 43 ரிக் வேதீய ஶ்ராத்தம்
- ஶ்ராத்தம் – 44 ரிக் வேதீய ஶ்ராத்தம் – ஸாம வேதிகள்: 2 தந்திரங்கள்
- ஶ்ராத்தம் – 45 – ஸங்கல்ப விதான ஶ்ராத்தம்
ஶ்ராத்தம் – மந்த்ர படனம்
அடுத்ததாக ‘ரக்ஷாகும்ஸி’ என்று ஒரு மந்திரம் ஜெபிக்க வேண்டும். அதன் பொருள்: முன்னே ராக்ஷஸர்கள் உக்கிரமாக தவம் செய்தனர். அதனால் மகிழ்ந்த பிரஜாபதி உங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்றார். அந்த ராக்ஷஸர்கள் தினசரி சூரியன் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். பிரம்மாவும் அப்படியே ஆகட்டும் என்று சொன்னார். அதனால் இவர்கள் உதயமாகும் சூரியனுடன் சண்டையிட ஆரம்பிக்கின்றனர். அதே போல அஸ்தமனம் ஆகும் போதும் சண்டை போடுகின்றனர். இந்த ராக்ஷஸர்கள் காயத்ரியால் மந்திரித்த நீரால் அடங்குகிறார்கள். அதனால் வேதம் ஓதுவோர் காலையில் கிழக்கு முகமாக நின்று காயத்ரியால் மந்திரித்த நீரை மேலே விட்டு எறிகிறார்கள். அந்த நீரானது வஜ்ராயுதமாக ஆகி அந்த ராக்ஷஸர்களை ‘மந்தேஹர்’ என்னும் ராக்ஷஸர்களுக்கு இருப்பிடமான அருண த்வீபத்தில் (தீவில்) கொண்டு எறிகின்றது. இதனால் அந்தணர்களுக்கு பாவம் ஏற்படுகிறது.
இதை போக்குவதற்காக இவர்கள் தம்மைத் தாமே பிரதட்சிணமாக சுற்றிக் கொள்ளுகிறார்கள். அதனால் ஏற்படும் பாவத்தை நீக்கி கொள்ளுகிறார்கள். (இந்த ஒரு இடம் தவிர மற்றபடி தன்னைத்தானே சுற்றிக் கொள்ளக் கூடாது) ‘எதிரில் தெரிகின்ற சூரியன் பிரம்மம்’ என்று உதயம் ஆகும் போதும் அஸ்தமனம் ஆகும் போதும் தியானம் செய்து பிரதக்ஷணம் செய்கிறவர்கள் சகலவிதமான க்ஷேமத்தையும் அடைகிறார்கள். ஆதித்யன் பிரம்மம் என்று அறிபவன் பிரம்மமாகவே ஆகி பிரம்மத்தை அடைகிறான்.
இந்த இரண்டு மந்திரங்களை ஜபம் செய்த பிறகு போக்தாக்கள் ‘ஆ பிரம்மன் பிரம்மனோ’, ‘கிக்குஸ்விதாஸீத்’ என்ற மந்திர ப்ராம்மணங்கள் ஆன இரண்டு அனுவாகங்களையும் ‘நமஸஹமானாய’ என்ற ருத்ர அனுவாகத்தையும் ஜபம் செய்ய வேண்டும். அனேகமாக இது நடப்பதில்லை. எஜமானனுக்கு ஆத்து வாத்தியார் சொல்லி வைத்து விடுகிறார். ஆனால் போக்தாக்களுக்கு யாரும் சொல்லி வைப்பதில்லை இவை கொஞ்சம் நீளமானவை. ஆகையால் சொல்லி வைத்து திருப்பி சொல்லுவது சிரம சாத்தியம்.