SIlently Exit whatsapp groups

How to message to people not in your contacts – Whatsapp

இன்றைய தேதியில் உலகின் மிக பிரபலமான அதிக நபர்கள் உபயோகிக்கும் ஒரு மெஸேஜிங் செயலி வாட்ஸ் அப் தான். அதில் பல பிரைவசி பிரச்சனைகள் சில சமயம் வந்தாலும், அதன் பிரபலம் குறையவில்லை. காரணம் ஆரம்பத்தில் வந்தது. பலரும் அதற்கு பழகி விட்டனர். அதனால் இப்பொழுது அவர்கள் உபயோகப்படுத்த விரும்பவில்லை எனினும் மற்றவர்கள் அவர்களை தொடர்பு கொள்ளவாவது வாட்ஸ் அப்பில் இருந்தாகவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அதே போன்றுதான் பிஸ்னஸில் இருப்பவர்களுக்கும். இந்த வாட்ஸ் அப் செயலியில் ஒரு பிரச்சனை என்னவென்றால், நீங்கள் மெசேஜ் செய்ய விரும்பும் நபரின் மொபைல் நம்பர் உங்கள் மொபைலில் சேமிக்கப் பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு மெசேஜ் செய்வது எளிது. அப்படி இல்லையென்றால் எப்படி மெசேஜ் செய்வது ? இதைத்தான் இன்றைய message to people not in your contacts பதிவாக பார்க்கலாம்.

மொபைல் / கணிணி இரண்டிலுமே இந்த வழியை பின்பற்றலாம். கணிணி என்றால் ஒன்று வாட்ஸ் அப் பீட்டா இன்ஸ்டால் செய்திருக்கணும் அல்லது வாட்ஸ் அப் UWP செயலி இருக்கணும். உங்கள் கணிணி லினக்ஸ் என்றால் வாட்ஸ் அப் வெப் மட்டுமே உபயோகிக்க முடியும். அதற்கான அதிகாரபூர்வ செயலி இதுவரையில் இல்லை.

மு.கு : இந்த முறை ஏற்கனவே பலருக்கு தெரிந்திருக்கலாம். இது தெரியாத நபர்களுக்காக.

  1. பிரவுசரில் https://wa.me/phonenumber . இங்கு “phonenumber ” என்பது யாருக்கு மெசேஜ் செய்ய விரும்புகிறீர்களோ அவர்களின் எண் . அந்த நாட்டின் கோட் நம்பருடன். இந்தியா என்றால் 91 xxxxxxxxxx . + சேர்க்க தேவையில்லை.
  2. இப்பொழுது என்டர் அழுத்தவும். பிரவுசரில் உங்கள் வாட்ஸ் அப் செயலியை ஓபன் செய்ய அனுமதி கேக்கும்,
  3. அதற்கு அனுமதி அழைத்தவுடன் உங்கள் வாட்ஸ் அப் செயலி ஓபன் ஆகி சாட் விண்டோ வரும்.

இது பொதுவாக எதோ ஒரு பொருள் தொடர்பாய் ஒருவரை தொடர்புகொள்ள உதவும். இல்லை ஒருவரை உங்களுக்கு உங்கள் கான்டெக்ட்டில் சேர்க்க விருப்பம் இல்லை என்றால் இம்முறையில் சாட் செய்துவிட்டு நீக்கி விடலாம்.

About Author