ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் மிகப் பெரிய பிரச்சனையே மீண்டும் மீண்டும் உருவாகி ஊடுருவும் போலி செயலிகள்தான். எத்தனைதான் அவர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் மீண்டும் மீண்டும் மால்வேர் / ஸ்கேம்வேர் செயலிகள் வந்துக்கொண்டேதான் உள்ளன. இந்த வகையில் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ள malicious apps க்ரிப்டோ மைனிங் செயலிகள் என்ற பெயரில் ஊடுருபவை. இவை இப்பொழுது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.
இப்பொழுது உலகம் முழுவதுமே க்ரிப்டோ கரன்சி அனைவரையும் பேராசை கொள்ள வைத்துள்ளது. இந்த க்ரிப்டோ கரன்சிக்காக க்ரிப்டோ மைனிங் செய்ய உதவுவதாய் இந்த செயலிகள் ப்ளே ஸ்டோரில் நுழைந்துள்ளன. ஆனால் உண்மையில் இவை அந்த வேலையை செய்யவில்லை. மாறாக, உங்கள் மொபைலில் அதிகமான விளம்பரங்களை காட்டுவது , சப்ஸ்க்ரைப் செய்ய வைப்பது ( குறைந்தது மாதம் ஆயிரம் ரூபாய் ) போன்றவற்றை செய்கிறது. இதனால் உங்கள் மொபைல் வேகம் குறைவதுடன் உங்கள் பணமும் திருடப்படும். இந்த செயலிகள் இப்பொழுது நீக்கப்பட்டுவிட்டாலும், உங்கள் மொபைலில் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்கவும். இவை போக இன்னும் 120 போலி க்ரிப்டோ மைனிங் செயலிகள் இன்னும் இருப்பதாக ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் கூறியுள்ளது.
malicious apps List
— BitFunds – Crypto Cloud Mining
— Bitcoin Miner – Cloud Mining
— Bitcoin (BTC) – Pool Mining Cloud Wallet
— Crypto Holic – Bitcoin Cloud Mining
— Daily Bitcoin Rewards – Cloud Based Mining System
— Bitcoin 2021
— MineBit Pro – Crypto Cloud Mining & btc miner
— Ethereum (ETH) – Pool Mining Cloud