கணிணி அல்லது மொபைலை ஹேக் செய்து அதன் மூலம் பணம் பறிக்கும் மென்பொருட்களை Ransomware என்று அழைப்பர். இது பலவிதத்தில் நம் கணிணியின் உட்புக இயலும் என்றாலும் பெரும்பாலும் உபயோகிப்பாளர்கள் தவறான லிங்கை க்ளிக் செய்வது அல்லது பாதிக்கப்பட்ட மெயில் அட்டாச்மெண்ட் டவுன்லோடு செய்வது போன்றவற்றின் மூலமாகவே பெரும்பாலும் பரவுகிறது. இப்பொழுது இதன் இன்னும் மேம்பட்டு ” Ransomware in the name of Edge Update “ தன்னை மறைத்துக் கொண்டு பரவுகிறது என malware bytes நிறுவனம் தனது ப்ளாக் போஸ்டில் கூறியுள்ளது.
எப்படி attack செய்கிறது ?
- நீங்கள் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும் பொழுது தவறான லிங்கை க்ளிக் செய்தால் அது அதிகமான விளம்பரங்கள் இருக்கும் தளத்திற்கு உங்களை இட்டு செல்லும். அங்கே இருந்து நீங்கள் “Magnigate” எனப்படும் தளத்திற்கு செல்வீர்கள்.
- இந்த இடத்தில் உங்கள் கணிணியின் IP எண் மூலம், உங்கள் கணிணியை attack செய்யலாமா எத்தகைய அட்டாக் என்பதை முடிவு செய்யும்.
- இந்த சமயத்தில் அது உங்களை Fake Microsoft Edge update தளத்திற்கு கொண்டு செல்லும்.
- அங்கு உங்கள் எட்ஜ் பிரவுசர் அப்டேட் செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கு நீங்கள் ஒரு பேட்ச் இன்ஸ்டால் செய்ய வேண்டுமென்றும் காட்டும். அதை டவுன்லோட் செய்தால் இந்த “Ransomware ” உங்கள் கணிணியில் உள்ளே புகுந்துவிடும்.

எப்படி தவிர்ப்பது ?
பொதுவாக பிரவுசர்கள் அது க்ரோம் ஆக இருக்கட்டும் அல்லது எட்ஜ் ப்ரவுசராக இருக்கட்டும், கணிணியைப் பொறுத்தவரை தானாக அப்டேட் ஆகி விடும். நாம் சென்று அதை அப்டேட் செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படியே தானாக அப்டேட் ஆகாவிட்டாலும், நீங்கள் அதற்கென்று எந்த வித மென்பொருளையும் தரவிறக்கம் செய்து அப்டேட் பண்ண வேண்டிய அவசியம் கிடையாது. உங்கள் பிரவுசரை துவக்கி அதில் settings னுள் சென்று “About ” ஆப்ஷனை தேர்வு செய்தால், அப்டேட் இருந்தால் அப்டேட் ஆகி விடும். எனவே தனியாக நீங்கள் எந்த அப்டேட்டும் செய்ய வேண்டாம்.
இதுவரை க்ரோம் பிரவுசரில் இது கண்டுபிடிக்கப்படவில்லை எனினும், அதிலும் இத்தகைய அட்டாக் நடக்க வாய்ப்புள்ளது. எனவே எந்த ஒரு அப்டேட் என நீங்கள் பிரவுசர் உபயோகிக்கும் பொழுது அறிவிப்பு வந்தாலும், கவனத்துடன் செயல்படவும்.