மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஒரு வருடமாய் எட்ஜ் ப்ரௌஸரில் அறிமுகப்படுத்தி வருகிறது. “ Edge Bar” என்ற வசதி ஏற்கனவே எட்ஜ் ப்ரௌஸரில் இருக்கும் ஒன்றுதான். ஏற்கனவே கடந்த அக்டோபரில் அதைப் பற்றி நான் எழுதியிருந்தேன். இப்பொழுது இன்னும் இதை மேம்படுத்தி உள்ளனர்.
Edge Bar என்பது என்ன
எளிமையாக விளக்கம் சொல்வது என்றால் உங்களுக்கு தேவையான செய்திகள் , வெப்சைட் தேடுவது , மெயில் அனுப்புவது என அனைத்தையும் விண்டோஸ் டெஸ்க்டாபில் இருந்து செய்து கொள்ள உதவுவது இந்த Edge Bar.
பொதுவாக கணிணியில் உங்களது வலப்பக்கம் எட்ஜ் பார் இருக்கும். ஆனாலும் நீங்கள் அதை மாற்றியும் அமைத்துக் கொள்ளளலாம்.
இந்த எட்ஜ் பாரில் மேலே நான்கு ஐகான்கள் இருக்கும்.
1. நியூஸ் பீட் – நீங்கள் தேர்வு செய்த வெப்சைட் / தலைப்புகளில் சமீபத்திய செய்திகளை காட்டும்.
2. பிங்க் தேடு பொறி – இணையத்தில் தேடி முடிவுகளை எட்ஜ் பாரிலேயே காட்டும்
3. அவுட்லுக் மெயில் – உங்கள் மெயில் அக்கௌண்ட்
4. லிங்க்ட் இன் ( Linked in)
வேண்டுமென்றால் இந்த எட்ஜ் பாரை மறைத்து வைத்துக் கொள்ளலாம். வேண்டும் என்னும் பொழுது அதை வெளிப்படுத்திக் கொள்ளலாம்.
How to enable Edge Bar
எட்ஜ் ப்ரௌஸரை துவக்கவும். பின் மெனுவில் More Tools ஆப்ஷனுக்கு செல்லவும். இப்பொழுது Launch Edge Bar என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்



