In the 1920s and 30s there was a Malayali bureaucrat in the British Indian civil services who faced an unusual problem. KPS Menon—in time to become a diplomatic legend—hailed from Travancore state in present-day Kerala. He had gone abroad to study, successfully passed the ICS exam, and upon his return, married. As his family and he moved from one posting to the next, they took along with them a helper—a Nair lady called Nani Amma. There was, however, one complication: like most Malayali women of her time, Nani Amma did not wear a blouse. ‘At first,’ wrote Menon, ‘she was stubborn’. It was only when they threatened to ‘refuse to take her with us to the [North-West] Frontier [Province]…that she gave in.’ After all, the Pathans of Peshawar would have been somewhat scandalised at the sight of a bare-breasted woman prancing about. For Nani Amma, though, defeat was not absolute—for ‘whenever we went on leave to Malabar, as soon as we crossed the Western Ghats into Palghat, she would throw off her blouse and be gloriously free.’[1]
1920 மற்றும் முப்பதுகளில் பிரிட்டிஷ் அரசின் இந்திய அரசுத்துறையில் வேலை செய்து வந்த ஒரு மலையாளி அதிகாரிக்கு புதியதொரு பிரச்சனை இருந்தது. கேபிஎஸ் மேனன் எனப்படும் அந்த அதிகாரி பிற்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற அதிகாரியாக இருந்தவர். அவர் கேரளத்தின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் பிறந்து வெளிநாட்டில் படித்து ஐசிஎஸ் பரிட்சையில் தேர்ச்சி பெற்று இந்தியா திரும்பினார். பணிநிமித்தம் இந்தியாவின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மாறியபொழுதெல்லாம் அவர்களின் குடும்பப் பணிப்பெண்ணான நாயர் குடும்பத்தை சேர்ந்த நானி அம்மா என்பவர் அவர்களுடனே சென்றார். அந்த காலத்தை சேர்ந்த பெரும்பாலான மலையாளப் பெண்களைப் போல நாணி அம்மாவும் ரவிக்கை அணிந்ததில்லை. ஆரம்பத்தில், நாணி அம்மா மிகவும் பிடிவாதமாக ரவிக்கை அணிய மறுத்தார். வடமேற்கு மாகாணத்திற்கு நான் மாறுதல் ஆகிய பொழுது அவர்கள் ரவிக்கை அனியாவிடில் அவர்களை கூட்டி செல்ல முடியாது என நான் மறுத்தப்பின்னரே அவர்கள் ரவிக்கை அணிய சம்மதித்தார். கட்டாயத்தின் பேரில் அவர் சம்மதித்தாலும், ஒவ்வொரு முறை மலபார் வரும்பொழுதெல்லாம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை தாண்டி பாலக்காடு பகுதிக்குள் வந்தவுடனேயே ரவிக்கையை கழற்றி விட்டு சுதந்திரமாக இருப்பதையே அவர் விரும்பினார்1.
கேரளத்தில் ரவிக்கை அணிவதும், அதே போல் பெண்களின் மேல்பாகம் திறந்திருப்பது தவறான பிரச்சனைக்குரிய ஒன்று என்ற கருத்தும் மிக சமீபத்திய ஒன்றாகும். அறுபதுகளில் கூட கேரளத்தின் பல பகுதிகளில் ரவிக்கை அணியாமல் திறந்த மார்பகத்துடன் இருந்த பெண்களை பார்க்க இயலும் என்பது பலருக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடும். ஆனால், இதை பற்றிய இன்றையக் கருத்துகள் மிக சிக்கலான ஒன்றாகும். மார்பகங்கள் மூடப்பட்டிருப்பதுதான் பெண்களுக்கு மதிப்பு தரும் ஒன்று என்ற உலகளாவிய பொது கருத்தும் , சமுதாயத்தின் பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்கள் மட்டும் மார்பகங்களை மூட தடைவிதிக்கப்பட்டிருந்தது என சொல்வதும் மிக பொதுவான குறிப்பாக படித்த வர்க்கத்தின் இடையே உலவும் கருத்தாகும். அது அன்றைய சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை பலரும் உணர மறுக்கின்றனர்.