மொபைலாக இருந்தாலும் சரி கணிணியாக இருந்தாலும் சரி நீங்கள் பிரவுசர் உபயோகிக்கும் பொழுது ஏதாவது ஒரு தளத்தில் பாஸ்வேர்ட் உபயோகித்தால் , உங்கள் உபயோகிப்பாளர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் சேமிக்க சொல்லி அந்த பிரவுசர் கேக்கும். இது க்ரோம், எட்ஜ், பயர்பாக்ஸ் என்று அனைத்து ப்ரவுசர்களிலும் உள்ள வசதி. இது எந்த அளவு உபயோகம் என்றால், ஒன்று நீங்கள் பாஸ்வேர்ட் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு, நீங்கள் பிரவுசரில் ப்ரொபைல் க்ரியேட் செய்து உபயோகித்தால் , அதே பிரவுசரை நீங்கள் மற்ற கருவிகளில் உபயோகிக்கும் பொழுது அதே ப்ரோபைலை உபயோகிக்கும் பொழுது பாஸ்வேர்ட்கள் இங்கே தானாக வந்துவிடும். மீண்டும் நீங்கள் பாஸ்வேர்ட் இங்கே இட வேண்டிய அவசியம் இருக்காது. இதுவும் அனைத்து ப்ரவுசருக்கும் பொருந்தும். இப்பொழுது மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எட்ஜ் பிரவுசரில் புதிதாய் ” Add passwords manually “ என்ற வசதியை கொண்டுவந்துள்ளது. இந்த வசதி என்ன எப்படி உபயோகிக்க முடியும் என்று பார்ப்போம்.
How to use Add passwords manually option in Edge ?
முதலில் சொல்ல வேண்டிய விஷயம்
- இந்த வசதி எட்ஜ் பிரவுசரின் Canary பதிப்பில் மட்டுமே வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் அனைவரின் பயன்பாட்டிற்கு வரும்.
- அதுவும் விண்டோஸ் பதிப்புக்கு மட்டும் வருமா இல்லை லினெக்ஸ் பதிப்பிற்கும் வருமா எனத் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த வசதியை உபயோகிக்க
- எட்ஜ் பிரவுசரை திறக்கவும்
- அதில் வலது மேல் பக்க மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவும்
- பின் ” settings ” தேர்வு செய்யவும்
- அதில் வலது பக்கம் இருக்கும் ” Passwords ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
- அதில் ” Saved Passwords ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
- இப்பொழுது ” Add Password ” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
- இப்பொழுது வரும் விண்டோவில்
“Website link / User name / Password “ கொடுத்து சேமிக்கவும். இதற்குண்டான ஸ்க்ரீன் ஷாட் கீழே

Excellent article