Alert : Banking Malware Apps in Play stor

ஏற்கனவே பலமுறை நாம் சொன்னதுபோல் தினம் தினம் புதிய வடிவில் மால்வேர் / வைரஸ்கள் வந்துகொண்டுள்ளன. மொபைல் உபயோகம் செய்வோர் குறிப்பாய் ஆண்ட்ராய்ட் மொபைல் உபயோகம் செய்பவர்கள் கவனமாய் இருத்தல் மிக அவசியம். இங்கே நாம் குறிப்பிடும் Banking Malware பத்துக்கும் மேற்பட்ட செயலிகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை அனைத்தும் கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன.

இந்தவகை மால்வேர்கள் சாதாரணமாய் இருக்கும் விபின் , கோட் ஸ்கேனர் செயலிகளில் ஒளிந்திருந்தன. நீங்கள் அவற்றை மொபைலில் இன்ஸ்டால் செய்தவுடன் முதலில் அவைகள் செய்வது உங்கள் வாங்கி செயலிகளில் உள்ள பாதுகாப்புகளை செயலிழக்க செய்வது குறிப்பாய் 2-factor authentication. அடுத்ததாக இந்த banking malware கள் செய்வது GitHub எனப்படும் தளத்தில் இருந்து payloadகளை உங்கள் மொபைலில் தானாக தரவிறக்கம் செய்யும். அடுத்து உங்க மொபைலில் தானாக அந்த payload மூலம் செயலிகளை இன்ஸ்டால் செய்யும் அதற்கு தனித்தனி கூகிள் ப்ளே ஸ்டோர் அக்கவுண்டும் ஓபன் செய்யும். இவ்வாறு செயல்பட்ட பத்து செயலிகளும் கண்டறியப்பட்டு கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன.

இத்தகைய செயலிகளை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் பொழுது கூகிள் ப்ளே ப்ரொடெக்ட் ஸ்கேனில் கண்டறியாதவண்ணம் தனது செயல்களை மறைத்து கொள்ளும். அதன் பின்பே தனது வேலையை காட்டும். அனைவருமே தங்களது மொபைலில் எதாவது ஒரு பாதுகாப்பு செயலியை இன்ஸ்டால் செய்து வாரம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்துகொள்வது நல்லது.

About Author