அமேசான் நிறுவனம் இந்தியாவில் தன் தயாரிப்பை துவங்கவுள்ளது. இந்தியாவில் அதன் முதல் தயாரிப்பு சென்னையில் இருந்து துவங்கவுள்ளது. இந்த அறிவிப்பை இன்று வெளியுட்டுள்ளது.
அமேசான் firestick இனி சென்னையில் இருந்து தயாரிக்க படவுள்ளது. Foxconn நிறுவனத்தின் துணை நிறுவனமான Cloud Network Technology இந்த தயாரிப்பை மேற்கொள்ளவுள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று அமைச்சர் திரு. ரவி ஷங்கர் ப்ரசாத்துடன் நடந்த மீட்டிங்கிற்கு பிறகு வெளியுட்டுள்ளது அமேசான் நிறுவனம்.
வீடியோ ஸ்ட்ரீமிங்கிற்கு உதவும் Fire stick அமேசானின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்று. இந்திய மார்க்கெட்டிற்கான இங்கு தயாரிக்கபப்டும் என தெரிகிறது. வருடத்திற்கு எவ்வளவு தயாரிக்கப்படும் மற்றும் எவ்வளவு முதலீடு செய்யப்படும் என சொல்லவில்லை.
இது தமிழகத்தில்வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. பொதுவாய் சென்னை ஆட்டோ மொபைல் ஹப் என்றாலும் சமீபத்தில் ஹார்ட்வேர் ஹப்பாக மாறிவருகிறது.