Arattai – Web Access from PC

மொபைலில் நாம் உபயோகிக்கும் மெசெஞ்சர்களை கணிணியிலும் உபயோகப்படுத்த முடியும் என்பது மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்ட். வாட்ஸ் அப், சிக்னல் போன்ற செயலிகளை கணிணியில் உபயோகிக்க தனி அப்ளிகேஷனே உள்ளது. அது மட்டுமல்லாது web access from PCக்கு ப்ரௌசரில் இருந்து உபயோகிக்க வாட்ஸ் அப்பில் வசதி உள்ளது.

Web Access from PC

ஆனால் அரட்டை செயலிக்கு அது போல் எந்த தனி அப்ளிகேஷனும் இதுவரை இல்லை. அதனால் கணிணியில் ப்ரௌசரின் மூலமே உபயோகிக்க முடியும். அதற்காக நீங்கள் செல்லவேண்டிய இணையதளம் web.arattai.in

1. உங்கள் கணிணியில் இந்த லிங்கிற்கு சென்ற பிறகு இரண்டு ஆப்ஷன் உள்ளன

2. ஒன்று உங்கள் கைப்பேசியில் இருந்து QR கோட் ஸ்கேன் செய்யலாம் அல்லது உங்கள் மொபைல் எண் மூலம் ஓடிபி பெற்று அதன் மூலம் லாகின் செய்யலாம்.

கீழே உள்ள படங்கள் இதை விளக்கும்.

மற்ற செயலிகளில் QR கோட் ஸ்கேன் செய்வது மட்டுமே வழி என்றுள்ள பொழுது மொபைல் எண் மூலம் ஓடிபி பெற்று லாகின் செய்ய வழிவகுத்ததற்கு நன்றி சொல்லனும்.இந்த வசதி சில வாரங்களுக்கு முன்பேயே வந்தது. ஆனால் கணிணியில் லாகின் செய்ய இயலாமல் இருந்தது. இப்பொழுது அதை சரி செய்துள்ளனர்.

நன்றி அரட்டை டீம் !!!

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.