தொழில் நுட்பமும் உபாஸனையும்

இன்றைய ஆன்மீக உலக நவீன தொழில்நுட்பத்தால் சிலரிடம் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது.

நிறைய உபன்யாஸங்கள், பஜனைகள், சொற்பொழிவுகள், ஸ்தோத்திர வகுப்புகள், பல லைவ் புரோகிராம்கள் இவையெல்லாம் லாக்டவுனால் கிடைத்த நன்மைகள்னு சொல்லிக்கலாம்.

இவையெல்லாம் சில நாட்களே. இலவச லைவ் என்பதால் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை வேண்டுமானால் அதிகரிக்குமே தவிர ஸ்ரத்தை யாரிடமும் இருக்க மாட்டேங்கிறது. அதனால உடனே அடுத்த படிக்கு செல்ல ஆரம்பிக்கிறார்கள் இந்த நவீன தொழில்நுட்ப உபன்யாஸகர்கள்.

அவர்களின் பிரம்மாஸ்திரம் இது தான். ஆன்லைனில் மந்த்ர உபதேசம், தீக்ஷை பண்ணி வைக்கிறேன். இவ்வளவு பணம் இந்த அக்கவுண்ட்டில் போட்டு விட்டு reference number அனுப்புங்க. (இன்னும் விரிவா சொன்னா குஸ்தியே வரும்)
குருவிடம் பக்தி என்பது தானாகவே வரணும். உபாஸனை என்பதும் அது போலத் தான். நமக்கு பக்குவம் வரணும். பக்குவம் வந்தால் நல்ல குருவே நமக்கு கிடைப்பார். நமக்கு ப்ராப்தம் இருந்தால் அந்த குரு யார் என்பது கனவிலும் வரலாம். நேரிலும் வரலாம்.

இன்னும் சிலர் எதாவது நல்ல விழாக்களில் சந்தித்தால் எனக்கு அந்த மந்த்ர உபதேசம் ஆகியிருக்கிறது. நீ ஏதாவது உபதேசம் வாங்கியிருக்கிறியா? வாங்கலைனா சொல்லு நான் ஏற்பாடு பண்ணி வைக்கிறேன் என்று வியாபாரம் பேசும் அளவிற்கு தரம் தாழ்ந்து போய் கொண்டிருக்கிறது.

எந்த ஒரு மந்த்ர உபதேசமும் முறையாக வாங்கியவர் முறையாக ஜபம் பண்ணினால் முக தேஜஸே காட்டி கொடுத்து விடும் என்பதை பலர் மறந்து(ம்) விடுகின்றனர்.

வேதத்தை ரிகார்ட் பண்ண பெரியவா அனுமதிக்கவில்லை என்பது பலரும் அறிந்த செய்தி.

அது போல சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த ஸ்வாமிகளும் “எலக்ட்ரானிக் உபகரணங்களான டேப் ரிக்காடர் கேசட்டில் சொன்னால், ஸ்ரீருத்ர பாராயணம் செய்த பலனைத் தருமா? இதற்கு தாரையாக அபிஷேகம் செய்வதற்கு பதிலாக தண்ணீர்க் குழாய்க்குக் கீழே சிவலிங்கத்தை வைத்து விடலாமே?” என்று ஒரு முறை கூறியிருக்கிறார்.

அவன் ஸ்ரீவித்யா உபாஸனை பண்றான். இவன் நரஸிம்ம உபாஸனை எடுத்திருக்கிறான் என்றெல்லாம் பேசுவதை விட்டுவிட்டு உங்கள் குலதெய்வ நாமத்தையோ இஷ்ட தெய்வ நாமத்தையோ முடிந்த போதெல்லாம் ஆத்மார்த்தமாக சொல்லிக் கொண்டு இருந்தாலே போதும். தெய்வம் நம் அருகில் வரத் தொடங்கும். நமக்கு பிராப்தம் என்று ஒன்று இருந்தால் உபாஸனை எடுத்துக்க நேரம் வரும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.