சீன அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் மற்ற நாடுகளின் மீது எப்பொழுதும் தனது உளவு தாக்குதலை நடத்திக் கொண்டேதான் இருக்கின்றன. அதில் இப்பொழுது வெளி வந்திருப்பது Alibaba Servers ல் ஹோஸ்ட் செய்யப்பட்டிருக்கும் வெப்சைட் / மென்பொருட்களில் இருந்து தகவல்களை திருடி சீனாவிற்கு அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது. விரைவில் இது குறித்து விசாரணை துவங்கலாம்.
சமீபத்தில் ஒரு ஆங்கில நாவல் படித்தேன். கிட்டத்தட்ட இப்பொழுது சீனா செய்துவரும் ஒற்றறியும் வேலைகளை அடிப்படையாகக் கொண்டே அந்த நாவல் இருக்கும். எப்படி மொபைல் நிறுவனங்கள் உபயோகிக்கும் பொருட்களின் ( Routers , CCTV camera etc) மூலம் தகவல்களை திருடுகிறது என கதை செல்லும். இப்பொழுது அதுதானே நடக்கிறது.
Alibaba விற்கு இந்தியாவில் 72 டேட்டா சென்டர்கள் உள்ளன. அப்பொழுது அதில் எத்தனை தகவல்கள் இருந்திருக்கும் ? இந்த நிறுவனத்தை பெரும்பாலானோர் நாடுவதற்கு காரணம் இவர்கள் அளிக்கும் குறைந்த கட்டணமும், இலவச உபயோகிப்பாளார் காலமும் ( Trial Period). உங்கள் நிறுவனத்தின் இணையதளங்கள் எந்த சர்வரில் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளன என விசாரியுங்கள் முடிந்தால் அவற்றை அமெரிக்க / இந்திய சர்வர்களுக்கு மாற்றுங்கள்.
என்னுடைய இணையதளங்கள் அனைத்தும் அமெரிக்க / இந்திய சர்வர்களில்தான் ஹோஸ்ட் செய்யப்பட்டுள்ளன.