ஆகஸ்ட் மாதம் வாட்ஸ் அப் செயலி பீட்டா பதிப்பில் Whatsapp Advanced search வசதியை கொடுத்திருந்தது. இப்பொழுது சோதனை முடிந்து அனைத்து வாட்ஸ் அப் பயனாளர்களுக்கும் இந்த வசதி வந்துள்ளது. நீங்கள் உபயோகிக்கும் மாடல் / ஆன்ட்ராய்ட் பதிப்பை பொறுத்து இந்த வசதி அப்டேட் ஆகியிருக்கும் / இனிமேல் அப்டேட் ஆகலாம்.
வாட்ஸ் அப் செயலியின் முகப்பில் இருந்து அதன் வலது மூலையில் உள்ள சர்ச் ஐகானை க்ளிக் செய்தால் உங்களுக்கு புதிய தேடும் வசதி வரும்.
இதில் நீங்கள் எதை தேட வேண்டுமென்று செலெக்ட் செய்து கொள்ளலாம். எதை தேர்வு செய்கிறீர்களோ அந்த டைப் கோப்புகளோ லிங்க் மட்டுமோதான் தேடுதல் முடிவில் காட்டப்படும். அதிகமான வாட்ஸ் அப் மெசேஜ்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட கோப்பை தேடுவது இதன் மூலம் எளிதாக உள்ளது. அலுவலக பணிகளுக்கோ / வியாபர ரீதியாகவோ வாட்ஸ் அப் அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த Whatsapp Advanced search மிக அவசியமானதாக இருக்கும்.