இணையவெளியில் என்றுமே ஆபத்துகள் அதிகம். ஆனால் நாம் கவனமாக இருந்தால் அதில் 90 % ஆபத்துகளை தவிர்க்கலாம். ஏனென்றால் நம் மொபைலில் இருந்து தகவல்கள் திருடப்படவோ அல்லது நம் மொபைல் ஹேக் செய்யப்படவோ உபயோகிப்பாளர்களிடம் இருந்து எதோ ஒரு ட்ரிக்கர் இருக்கவேண்டும். தெரியாமல் ஏதாவது malware செயலிகளை இன்ஸ்டால் செய்திருக்கலாம் அல்லது அது போன்று ஏதோவொரு நிகழ்வு இருக்கவேண்டும். இதில் நமக்கு தெரியாமல் நம்மிடம் இருந்து கொள்ளையடிக்கும் செயலிகளை Fleeceware Apps என்று அழைப்பார்கள். சமீபத்தில் அத்தகைய சில செயலிகள் கூகிள் நிறுவனத்தால் தடை செய்யப்பட்டுள்ளன.
பல செயலிகளில் இலவச சேவைகள் இருக்கும் அதே சமயம் காசு கொடுத்து உபயோகிக்கும் சேவைகளும் இருக்கும். அதே போல் சில செயலிகள் ஒரு வார / சில நாட்கள் இலவசமாக உபயோகிக்கும் வசதியை கொடுக்கும். ஆனால் அதன் பின் காசு கொடுத்து உபயோகிக்க வேண்டி இருக்கும். ஆனால் நீங்கள் இலவச வசதியை உபயோகிக்கும் முன்பே உங்களை கார்ட் டீடெயில்ஸ் கொடுக்க சொல்லும்.
உங்கள் கார்ட் டீடெயில்ஸ் அவர்களிடம் சென்ற பிறகு அவர்கள் பில்லிங் செய்யும் தொகை அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தில் இருக்கும் Montage app எடுத்துக்கொள்ளலாம். அது செய்யும் வேலை , மொபைல் வால் பேப்பர் மாற்றுவது ஸ்க்ரீன்சேவர் மாற்றுவது போன்றவை. ஆனால் அதற்கு அது வசூலிக்கும் தொகை $89.99 ஒரு வாரத்திற்கு. ஆனால் படத்தினுள் பாருங்கள் அந்த தொகை கண்ணுக்குத் தெரியாதவண்ணம் கொடுத்திருப்பார்கள்.
எனவே நீங்கள் எத்தகைய செயலியை இன்ஸ்டால் செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள fleeceware apps லிஸ்ட் சமீபத்தில் கூகிளுக்கு ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளவை. இவற்றில் சில நீக்கப்பட்டுள்ளன. கூகிள் நிறுவனம் அதிகபட்சம் எவ்வளவு வசூலிக்கலாம் என்று கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் அது ஒரு நாளுக்கு, ஒரு வாரத்திற்க்கா அல்லது வருடத்திற்கானதா என சொல்லவில்லை. அந்த ஒரு வசதியை உபயோகப்படுத்தி இத்தகைய செயலிகள் மக்களை ஏமாற்றுகின்றன. நாம் உஷாராக இருந்தால் எந்த பிரச்சனையும் வராது.
Some of the fleeceware we found on the Play Store includes:
Package name | Subscription charge | Revenue* |
com.photoconverter.fileconverter.jpegconverter | $249.99/€224.99/year | $8k |
com.recoverydeleted.recoveryphoto.photobackup | $249.99/€224.99/year | $60k |
com.screenrecorder.gamerecorder.screenrecording | $249.99/€224.99/year | $10k |
com.photogridmixer.instagrid | $229.99/€219.99/year | $5k |
com.compressvideo.videoextractor | $229.99/€219.99/year | $10k |
com.smartsearch.imagessearch | $229.99/€219.99/year | $30k |
com.emmcs.wallpapper | $89.99/week | $20k |
com.wallpaper.work.application | $89.99/week | $30k |
com.gametris.wallpaper.application | $89.99/week | $30k |
com.tell.shortvideo | $89.99/week | $10k |
com.csxykk.fontmoji | $89.99/week | $40k |
com.video.magician | $89.99/week | $30k |
com.el2020xstar.xstar | $89.99/week | $10k |
com.dev.palmistryastrology | $69.99/week | $5k |
com.dev.furturescope | $69.99/week | $90k |
com.fortunemirror | $69.99/week | $20k |
com.itools.prankcallfreelite | $44.99/year | $5k |
com.isocial.fakechat | $45.99/year | $5k |
com.old.me | $94.99/year | $5k |
com.myreplica.celebritylikeme.pro | $12.99/€10.99/week | $5k |
com.nineteen.pokeradar | Pay per install | – |
com.pokemongo.ivgocalculator | Buggy app | – |
com.hy.gscanner | $79.99/year | $5k |