நீங்கள் உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைலில் வித விதமான கேமிரா செயலிகளை பயன்படுத்துபவரா ? வேறு வேறு வித பில்டர்களுக்காக தேடி தேடி வேறு செயலிகள் இன்ஸ்டால் செய்து அதன் மூலம் படமெடுப்பவரா ? இனி இதையெல்லாம் நீங்கள் செய்ய இயலாது. ஏனென்றால் இனி Camera Restrictions வர இருக்கிறது.
ஆன்ட்ராய்ட் என்பது ஒரு ஓபன் சோர்ஸ் இயங்குதளம் என்று இருந்தாலும் அதிகரித்து வரும் மால்வேர் ஸ்கேம் , கேமிரா செயலி என்று உங்கள் தகவல்களை திருடும் செயலிகள் அதிகரித்து வருவதால் ஆன்ட்ராய்ட் 11ல் இருந்து இந்த Camera Restrictions வர இருக்கிறது.
ஆன்ட்ராய்ட் 11 பதிப்பில் இருந்து உங்கள் மொபைலில் வரும் கேமிரா செயலியை மட்டுமே நீங்கள் பயன்படுத்த இயலும். வேறு ஏதாவது செயலிகள் நீங்கள் இன்ஸ்டால் செய்திருந்தாலும் அவற்றை பைபாஸ் செய்து டிபால்ட் செயலியை ஓபன் செய்யும். எனவே இனி நீங்கள் போட்டோவில் பில்டர்கள் சேர்க்க வேண்டுமென்று எண்ணினால் போட்டோ எடுத்தபிறகு எடிட்டிங் செயலி வைத்து செய்யலாம்.