நீங்கள் ஒரு ஜிமெயில் ஐடி துவங்கும் பொழுது கூகிள் நிறுவனம் உங்களுக்கு மொத்தம் 15 ஜி பி இடத்தை இலவசமாக அளிக்கிறது. இது உங்கள் ஜி மெயில் , கூகிள் ட்ரைவ் மற்றும் கூகிள் போட்டோ அனைத்திற்கும் சேர்த்து கொடுக்கப்படும் கிளவுட் ஸ்டோரேஜ். காலப்போக்கில் பலரும் இப்பொழுது மெயில் அதிகம் உபயோகப்படுத்துவதில்லை. கிட்டத்தட்ட நிறைய பேர் ஜிமெயில் ஓபன் கூட செய்வதில்லை. இது ஒரு பக்கம் இருக்க 15 ஜிபி பத்தாதவர்களும் உண்டு. அப்படி 15 ஜிபி க்கு அதிகம் போகும் பொழுது தேவைப்படும் கிளவுட் ஸ்டோரேஜ் காசு கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.
இப்பொழுது கூகிள் நிறுவனம் இந்த இலவச ஸ்டோரேஜ் வசதியில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஜூன் 1, 2021 க்கு பிறகு இரண்டு வருடங்களாக நீங்கள் லாகின் செய்யாமல் இருந்தாலோ அல்லது ஸ்டோரேஜ் ஸ்பேஸ் (15 ஜிபி ) உபயோகித்திருந்தாலோ உங்களுக்கு மெயில் மூலம் அலர்ட் அனுப்புவார்கள். அதன் பின்னும் நீங்கள் உங்கள் ஸ்டோரேஜ் லிமிட் பார்த்து சரி செய்யாமல் இருந்தால் உங்கள் பைல்கள் அழிக்கப்படும்.
இது அடுத்த வருடம் ஜூன் முதல் நடைமுறைக்கு வந்தாலும் ஜூன் 1, 2023 முதலே பைல்கள் டெலிட் செய்வது துவங்கும் என கூகிள் நிறுவனம் கூறியுள்ளது. இந்த மெயில், நீங்கள் ஜிமெயில் உபயோகிப்பாளர்கள் என்றால் சென்ற வாரம் வந்திருக்கக் கூடும்.
உங்கள் ஸ்டோரேஜ் லிமிட் பார்க்க.
மொபைலில் இருந்து செக் செய்ய கூகிள் ஒன் செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ளவும்