Chat Lock என்ற புதிய ஒரு ஆப்ஷனை புதிதாய் அறிமுகப்படுத்தி உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம். ஒவ்வொருவருக்கும் சில தனிப்பட்ட உரையாடல்கள் இருக்கும். அது அவர்கள் தொழில் ரகசியங்கள் அல்லது மிக தனிப்பட்ட உரையாடல்கள் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த சாட் விஷயங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ளக்கூடாது என அவர்கள் நினைக்கலாம். அப்படிப்பட்ட அரட்டைகளை எப்படி லாக் செய்வது என பார்ப்போம்.
Chat Lock option
- எந்த உரையாடலை லாக் செய்ய விரும்பகிறீர்களோ அந்த உரையாடலை துவக்கவும்.
- மேலே உங்கள் நண்பரின் பெயரில் க்ளிக் செய்யவும். இப்பொழுது கீழே ஸ்க்ரோல் செய்தால் ” Chat Lock “ என்ற ஆப்ஷன் வரும்.
- அதனுள் செல்லவும். உங்கள் மொபைல் பிங்கர் லாக் வசதி இருந்தால் பிங்கர் லாக் உபயோகிக்க சொல்லும். இல்லையெனில் pattern / number லாக் உபயோகிக்க சொல்லும்.
- லாக் செய்த பின் வாட்ஸ் அப் ஸ்க்ரீனுக்கு சென்றால் மற்ற அரட்டைகளுக்கு மேலே ” Locked chats ” எனக் காட்டும்