Check the voice messages before sending

Check the voice messages before sending in Whatsapp

வாட்ஸ் அப் செயலியிலும் சரி மற்ற மெசஞ்சர் செயலிகளிலும் சரி, நாம் அனுப்பும் டெக்ஸ்ட் மெஸேஜ்களை சரி பார்த்து பிழை திருத்தம் செய்து அனுப்ப இயலும். ஆனால் குரல் மெஸேஜ்களாக ஒலி வடிவில் அனுப்பும் பொழுது அவ்விதம் செய்ய இயலுவதில்லை என்ற ஒரு குறை இருந்து வந்தது. இப்பொழுது வாட்ஸ் அப் அதை நிவர்த்தி செய்துள்ளது. இனி நீங்கள் அனுப்பும் ஒலி வடிவிலான மெசேஜ்களை நீங்கள் சரிபார்த்து பிறகு அனுப்பலாம். இந்த பதிவில் Check the voice messages before sending எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

How to Check the voice messages before sending

  1. நீங்கள் யாருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பவேண்டுமோ அந்த சாட் விண்டோவை ஓபன் செய்து கொள்ளவும்
  2. வலது கீழ்ப்பக்கம் இருக்கும் மைக் ஐக்கானை மேல் நோக்கி நகர்த்தவும்.
  3. இப்பொழுதும் நீங்கள் உங்கள் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் செய்யலாம்.
  4. ரெக்கார்ட் செய்யும் பொழுது அதற்க்கு கீழே மூன்று ஐக்கான் இருக்கும். இடது பக்கம் அழிக்கும் ஐக்கான் நடுவில் குரல் பதிவை நிறுத்தும் ஐக்கான் , வலது பக்கம் மெசேஜை அனுப்ப.
  5. நீங்கள் பதிவு செய்த மெசேஜை கேக்க விரும்பினால், நடுவில் இருக்கும் சிகப்பு ஐகானை அழுத்தவும். இப்பொழுது மேலே நீங்கள் பதிவு செய்ததை கேக்க பட்டன் இருக்கும் ( Play Button ). அதை அழுத்தினால் நீங்கள் ரெக்கார்ட் செய்ததை கேக்கலாம். விரும்பினால் send பட்டனை பிரஸ் செய்து அனுப்பலாம்.
  6. இல்லையெனில் இடது பக்கம் இருக்கும் அழிக்கும் ஐகானை அழுத்தினால் அந்த வாய்ஸ் மெசேஜ் அழிந்து விடும்.
  7. பதிவு செய்த மெசேஜை கேக்காமல் அனுப்ப வலது பக்கம் இருக்கும் அம்புக்குறி ( send ) ஐகானை அழுத்தவும்
  8. நீங்கள் பதிவு செய்ததை கேக்க மட்டுமே முடியும். அதை எடிட் செய்ய இயலாது.

இதன் விளக்கப் படங்கள் கீழே

About Author