சென்னை பெருநகர மாநகராட்சி புதிய முயற்சியாய் மக்கள் நேரடியாக மாநகராட்சிக்கு புகாரளிக்க Whatsapp Helpline எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று வாட்ஸ் அப் உபயோகப்படுத்தாத மக்களே இல்லை என சொல்லலாம். அதே போல் நேரடியாக மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்வதும் பலரால் பல காரணங்களால் முடியாத ஒன்று. இணையத்தை உபயோகப்படுத்த தெரியாதவர்கள் கூட வாட்ஸ் அப் செயலியை எளிதாக உபயோகப்படுத்துகிறார்கள். எனவே மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்க இந்த செயல் வழிவகுக்கும்
Whatsapp helpline Number
+91-94999 33644 என்ற இந்த நம்பர்தான் சென்னை பெருநகர மாநகராட்சியின் அதிகாரபூர்வ whatsapp helpline நம்பர். இந்த எண்ணை உங்கள் மொபைலில் சேமித்துவிட்டு அதற்கு “hi” என்று ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும். எப்படி உதவி பெறவேண்டும் என்ற வழிமுறை மெசேஜில் வருகிறது. இந்த புதிய வசதி உண்மையில் பலருக்கும் வசதியாக இருக்கும். இது போன்றவைதான் “Digital India”வின் சாதனைகள். இந்த வழிமுறை கடைக்கோடியில் இருக்கும் நபருக்கும் பல உதவிகள் சென்று சேர வழிவகுக்கும்.
இந்த வசதியை கொண்டுவந்த பெருநகர மாநகராட்சிக்கு , இதன் பின்னால் இருந்த அதிகாரிகளுக்கும் நன்றிகளும் வாழ்த்தும்.