பல மாதங்களாக இந்தியாவில் பலரும் சொல்லிவருவது உண்மை என்று நிரூபணம் ஆகியுள்ளது. Tecno W2 என்ற சீன மொபைலில் இரண்டு malware இன்ஸ்டால் ஆகியே வருவதை மொபைல் பாதுகாப்பு நிறுவனமான Secure – D கண்டுபிடித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் மொபைல்கள் இந்தியாவை விட ஆப்ரிக்காவில் மிகவும் புகழ்பெற்றது. இந்த மொபைலில் இன்ஸ்டால் ஆகி வந்த இரண்டு malware ப்ரோக்ராம்கள் xHelper & Triada. இந்த இரண்டும் தானாக மொபைல் டேட்டாவை ஆன் செய்து அதன் மூலம், காசு கொடுத்து உபயோகப்படுத்தப்படக்கூடிய செயலிகளுக்கு தானாக சப்ஸ்க்ரைப் பண்ண துவங்கிவிட்டன. இதன் மூலம் நடைபெற்ற 844,000 பரிவர்த்தனைகளை Secure – D தடுத்து நிறுத்தியுள்ளது. ஆனால் கணக்கில் வராமல் எத்தனை நடந்ததோ தெரியவில்லை.
இந்த மொபைலை தயாரித்த Transsion நிறுவனம் இந்த இரண்டு malware மொபைலில் இருப்பதை ஒத்துக்கொண்டாலும் அதை தாங்கள் செய்யவில்லை எனவும்,தங்களுடைய மொபைலை தயாரித்த நிறுவனம் செய்தது எனக் கூறியுள்ளது.
எனவே நண்பர்களே சீன மொபைலை வாங்கும் முன் பலமுறை யோசித்து வாங்கவும்.