அனைவருக்கும் தெரிந்த கணிணி நிறுவனமான compaq இப்பொழுது ஸ்மார்ட் டிவி தயாரிக்க போகிறது. Compaq Smart TV கள் செப்டம்பர் 1ல் இருந்து பிளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கும் என்று இன்று அறிவிப்பு வந்துள்ளது.
ஏற்கனவே Ossify நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்மார்ட் டிவி பிஸினஸில் ஈடுபடப்போவதாக ஜனவரியில் அறிவித்திருந்தது. இப்பொழுது பிளிப்கார்ட் நிறுவனத்தை தன் சேல்ஸ் பார்ட்னராக அறிவித்துள்ளது.
ஆனால் இப்பொழுதுவரை டிவி பற்றிய எந்த தகவலும் வரவில்லை. ஆனால் Mimi Hearing Technologies and Dolby Audio with True surround sound போன்றவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் ஸ்ட்ரீமிங் செயலிகளான நெட் பிளிக்ஸ் . அமேசான் ப்ரைம், யூடியூப் போன்றவை சப்போர்ட் ஆகும் என தெரிகிறது.
இன்னும் சில நாட்களில் டீவியை பற்றிய முழு விவரமும் தெரியும் வரை காத்திருப்போம்.