Google pay கூகிள் நிறுவனத்தின் செயலியான இது இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாகும். இந்த செயலி பொதுவாய் UPI ID உபயோகித்து செயல்படுகிறது. UPI ID செட் செய்தவுடன் உங்கள் மொபைல் நம்பரை உபயோகித்து பணம் அனுப்பவும் பெறவும் முடியும். இப்பொழுது இது மற்றுமொரு வசதியை சேர்த்துள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம் Google pay செயலியில் உங்கள் கார்ட் உபயோகித்தும் பணம் அனுப்பும் வசதி வந்துள்ளது. முதலில் உங்களது கார்டை சேர்க்க வேண்டும்.கார்ட் சேர்க்கும் பொழுது OTP வரும். அந்த OTPஐயை செயலியில் டைப் செய்ய வேண்டும். பின் அந்த கார்ட் செயலியில் சேர்க்கப்பட்டுவிடும். அதன் பின் UPI ID / கார்ட் என இரண்டை உபயோகித்தும் பணம் அனுப்பலாம்.
இப்பொழுதைக்கு ஆக்சிஸ் மற்றும் எஸ் பி ஐ வங்கிகளின் க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை மட்டுமே இணைக்க இயலும். கூடிய விரைவில் மற்ற வங்கி கார்டுகளுக்கும் இந்த வசதி நீட்டிக்கப்படும் என தெரிகிறது. இந்த வசதி இன்னும் அனைவருக்கும் வரவில்லை.கூடிய விரைவில் அனைவருக்கும் இந்த அப்டேட் வரும்.