சென்ற வருடம் Huawei கம்பெனியை அமெரிக்கா தடை செய்தது நினைவிருக்கலாம். அதை தொடர்ந்து பல நாடுகளும் 5G நெட்ஒர்க் தயாரிப்பில் அந்த நிறுவனத்தை தடை செய்தன. முதலில் நிறுவனத்தை தடை செய்து பின் கூகிள் மற்றும் எந்த அமெரிக்க நிறுவனங்களும் தங்கள் தொழில்நுட்பத்தை கொடுப்பதற்கும் தடை விதித்தது. இதனால் புதிய Huawei மொபைல்களில் ஆன்ட்ராய்ட் உபயோகப்படுத்த இயலாத நிலை வந்தது.
இதற்கடுத்த கட்டமாக போன வாரம் அடுத்த தடையை கொண்டுவந்துள்ளது அமெரிக்கா. மொபைல் போன் தயாரிப்பில் முக்கிய இடம் பிடிப்பது சிப்செட்கள். முன்பு அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமிருந்த தடை இப்பொழுது கிட்டத்தட்ட அனைவருக்குமென ஆகிவிட்டது. புதிய தடை படி அமெரிக்க தொழில்நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட எந்த ஒரு சிப்செட்டை அந்த நிறுவனத்திற்கு விற்பதாக இருந்தாலும் அதற்கு முன்பு லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க நிறுவனங்கள் சிப்செட் கொடுக்க இயலாத நிலையில் இப்பொழுது சீன நிறுவனமான மீடியாடெக் நிறுவனமும் Huawei நிறுவனத்திற்கு சிப்செட் கொடுக்க இயலாத நிலை. அதனால் லைசென்ஸிற்காக அந்த நிறுவனமும் அப்ளை செய்துள்ளது. ஆனால் அனுமதி கிடைக்குமா எனத் தெரியவில்லை. தடை செய்துவிட்டு அனுமதியும் தருவார்களா என தெரியவில்லை. அப்படி அனுமதி கிடைக்காவிடில் அந்நிறுவனம் மொபைல் போன்களை தயாரிக்க இயலாது.
இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், சீன அரசு இதில் அமைதியாக இருப்பதுதான். என்ன விதமான பதிலடி தருவார்கள் என தெரியவில்லை. ஆனால் பதிலுக்கு அவர்கள் அமெரிக்க நிறுவனங்களை தடை செய்தால் பாதிக்கப்பட போவது சீன பொருளாதாரமே.
#Huawei #mediatek