ஏற்கனவே பல்கி பெருகி வரும் UPI செயலிகள் வரிசையில் இப்பொழுது புதிதாய் பெரு இந்திய செயலி Dakpay. இந்திய தபால்துறையின் செயலி இது. தனியாரை செயலிகள் பலவற்றிலும் சீன முதலீடு இருக்க அரசு துறை நிறுவனங்கள் இந்த மாதிரி முயற்சியில் ஈடுபடுவதே மிக பெரிய விஷயம். அதனால் முதலில் தபால் துறைக்கு எனது வாழ்த்துகள்.
இதில் உங்கள் வங்கி கணக்கை சேர்ப்பது மிக எளிது . முதலில் நீங்கள் மொபைல் டேட்டாவை உபயோகம் செய்கிறீர்களா என உறுதி செய்து கொள்ளவும். வைபை மூலம் வெரிபை செய்ய இயலாது.
- எந்த எண்ணில் வங்கி கணக்கு இருக்கிறதோ அந்த சிம்மை தேர்ந்தெடுக்கவும்.
- அதிலிருந்து குறுஞ்செய்தி மூலம் உறுதி செய்வார்கள்
- பின் அந்த எண்ணில் இணைக்க பட்ட வங்கி கணக்கை காட்டுவார்கள். எந்த வங்கி கணக்கை சேர்க்கவேண்டுமோ சேர்த்து கொள்ளலாம். அதற்கு மேல் வழக்கமான upi பரிமாற்றம் செய்வது போலவே செய்யலாம்.
சிறப்புகள்
- இந்திய அரசு நிறுவனத்தின் செயலி
- செயலியின் UI நன்றாகவே உள்ளது.
- பாதுகாப்பும் சிறப்பாகவே உள்ளது
குறைகள்
இதுவரையில் நான் பார்த்தது ஒன்றுதான். கொஞ்சம் வேகம் குறைவு. பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில் சிரமம் ஏற்படலாம். ஆரம்பகட்டத்தில் ஏற்படும் சர்வர் பிரச்சனையாக இருக்கலாம். விரைவில் சரிசெய்வார்கள் என நம்புகிறேன்.