சமீப காலமாய் இந்த Dark Mode மொபைல் உபயோகிப்பாளர்களிடம் பிரபலம் ஆகி வருகிறது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற பிரபல செயலிகளில் ஏற்கனவே இத வசதி உள்ளது. க்ரோம் ஓ எஸ் இந்த வசதியை அடுத்த அப்டேட்டில் தர உள்ளது. அதே போல் பேஸ்புக் மெஸெஞ்சரில் ஏற்கனவே இந்த வசதி உள்ளது. ஆனால் பேஸ்புக் செயலியில் இந்த வசதி இல்லாமல் இருந்தது. இப்பொழுது ஒரு சிலருக்கு இந்த அப்டேட் வந்துள்ளது. மற்றவர்களுக்கு விரைவில் வரும்.
Dark Mode in Mobile app



பேஸ்புக் செயலியில் வலது பக்கம் மேலே இருக்கும் மூன்று கோடுகளை க்ளிக் செய்யவும். அதன் கீழே “settings & privacy ” க்கு கீழே இந்த “Dark mode ” இருக்கும். அங்கு அந்த ஆப்ஷன் இல்லையெனில் பொறுமையாக இருக்கவும். விரைவில் உங்களுக்கு அப்டேட் வரும். எனக்கும் இன்னும் இந்த அப்டேட் வரவில்லை. Facebook Lite செயலியில் இந்த ஸ்க்ரீன்ஷாட் எடுத்துள்ளேன்.
Dark Mode in Desktop



கணிணியில் வலது மேல்பக்கம் கடைசியில் இருக்கும் “Down Arrow “வை க்ளிக் செய்யவும். பின் அங்கு வரும் “Display Preferences ” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அதன் பின் “Dark Mode ” தேர்வு செய்யவும்.